துறவிகள் கன்னிப்பெண்கள்

துறவிகள் கன்னிப்பெண்கள்

இந்தப் பழக்கமும் பாபிலோனிலிருந்து வந்ததே. கி.பி.320ல் அந்தோணி என்பவர் உலக பற்றுகளி லிருந்து விடுபட்டு தனித்து வாழ ஆரம்பித்தார். இவர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார். இவரின் நல் வாழ்க்கை ஆயிரக்கணக்கானோரை கவர்ந்தது. இவர் எகிப்திலுள்ள ஒரு குகையில் வாழ்ந்துவந்தார். இவரைப் பின்பற்றி அநேகர் துறவறத்தை விரும்ப ஆரம்பித்தனர். ஏராளமானவர்கள் இவரின் சீடராய் மாறினர். இதன்மூலம் பல நன்மைகளும் ஏற்பட்டன, தீமைகளும் ஏற்பட்டன.

துறவறத்தை வலியுறுத்திய சரித்திரத்தை

இரண்டாகப் பிரிக்கலாம். கி.பி.385ல் சிரிகஸ் (Siricus) என்பவர் துறவறத்தை வலியுறுத்தி ஓர் கட்டளை பிறப்பித்தார். அது 7ம் கிரிகரி காலம் வரை ஓரளவு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கப்படவில்லை.

போப் 7ம் கிரிகரி கி.பி.1073ல் பதவிக்கு வந்தார். இவருக்கு ஹில்டபிராண்ட் என்ற பெயரும் உண்டு. இவர் ஆண்ட காலம் கி.பி.1073-1085. இவர் பதவிக்கு வந்தவுடன் குருக்கள் கண்டிப்பாய் சந்நியாச வாழ்க்கை வாழவேண்டும் என்று சட்டம் இயற்றினார். இதுவரை திருமணம்பண்ணி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பாதிரிமார்கள் கட்டாயமாக மனைவி. பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பாதிரிமார்களின் மனைவிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஏராளமான பேர் மனநிலையில் பாதிக்கப்பட்டு வியாதியுற்றனர்.

மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரியாத பாதிரி மார்களின் பூஜையில் சபையார் கலந்து கொள்ளக் கூடாது என்று போப் கட்டளையிட்டார். சபையாரும் இதை வரவேற்றனர். மனைவியைவிட்டுப் பிரியாத பாதிரிமார் நடத்திய திருமுழுக்கு ஆராதனைகள், கர்த்தருடைய பந்தியை ஏராளமான சபை மக்கள் புறக்கணித்தனர்.

கி.பி.1073க்கு பின்புதான் திருமணமான பாதிரிமாருக்கு குருப்பட்டம் (Ordination) மறுக்கப் பட்டது. இந்தப் பழக்கம் இன்றுவரை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.