கடைசி இராப்போஜனம்

கடைசி இராப்போஜனம்: காலவரிசை விவாதம் (Chronology)

இயேசுவின் கடைசி இராப்போஜனம் ஒரு பஸ்கா செடரா?

  • ஒத்த சுவிசேஷங்கள்
  • இயேசு பஸ்கா இரவில் (நிசான் 15)
  • சீஷர்களோடு அமர்ந்து பஸ்கா புசித்தார் (லூக்கா 22:15).
  • யோவான் சுவிசேஷம்:
  • யோவான் 18:28, 19:14 போன்றவை,
  • இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில்தான் யூதர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைப் பலியிட்டுக் கொண்டிருந்தார்கள் (நிசான் 14)

முரண்பாடுகள்

1. இறுதி இரவு உணவு மற்றும் சிலுவை மரணத்தின் நாள்

ஒத்தமை நற்செய்திகள்

  • இயேசுவின் இறுதி இரவு உணவு (லூக்கா 22:7-8).
  • பஸ்கா பண்டிகை நாளில் (நிசான் 15) நடைபெற்றதாகவும்,
  • அது ஒரு பஸ்கா விருந்து என்றும் கூறுகின்றன. (லூக்கா 22:15).

யோவான்: 

  • பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாளான "ஆயத்த நாளில்" (நிசான் 14) நடைபெற்றதாகவும்,
  • இயேசு பஸ்கா ஆட்டுக்குட்டிகள் பலியிடப்படும் நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டதாகவும் கூறுகிறது. யோவான் 18:28, 19:14

2. சிலுவையில் அறையப்பட்ட நேரம்

மாற்கு (15:25): 

  • இயேசு காலை 9 மணிக்கு (மூன்றாம் மணி) சிலுவையில் அறையப்பட்டார்.

யோவான் (19:14): 

  • நண்பகல் 12 மணி (ஆறாம் மணி) அளவில் இயேசு இன்னும் பிலாத்துவின் முன்னிலையில் விசாரணையில் இருந்தார்.

3. சிலுவையைச் சுமந்தது யார்?

ஒத்தமை நற்செய்திகள்: மத் 27:32; மாற் 15:21; லுக் 23:26

  • சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவர் இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தார்.

யோவான் (19:17): 

  • இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு சென்றார்.

4. சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களின் நடத்தை

மத்தேயு/மாற்கு: மத் 27:44; மாற் 15:32

  • இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களுமே அவரைப் பழித்துரைத்தனர்.

லூக்கா: லுக் 23:39-42

  • அவர்களில் ஒருவன் பழித்துரைத்தான்,
  • ஆனால் மற்றொருவன் மனந்திரும்பி இயேசுவிடம் தன்னை நினைவுகூருமாறு வேண்டினான்.

5. இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பானம்

மத்தேயு (27:34): 

  • கசப்பு கலந்த காடி (Wine mixed with gall).

மாற்கு (15:23): 

  • வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம் (Wine mixed with myrrh) - இதை இயேசு பருகவில்லை.

6. நூற்றுக்கு அதிபதியின் அறிக்கை

மத்தேயு/மாற்கு: மத் 27:54; மாற் 15:39

  • இயேசு இறந்தவுடன்,
  • "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்று கூறினார்.

லூக்கா (23:47): 

  • "மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்" (Righteous man) என்று கூறினார்.

7. தேவாலயத் திரைச்சீலை கிழிந்த நேரம்

மத்தேயு/மாற்கு: மத் 27:50-51; மாற் 15:38-39

  • இயேசு உயிர்விட்ட பிறகு திரைச்சீலை கிழிந்தது.

லூக்கா (23:44-45): 

  • இயேசு உயிர்விடுவதற்கு முன்பே திரைச்சீலை கிழிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 . சிலுவையில் இருந்த வாசகம் (Titulus)

மாற்கு: 15:26

  • "யூதருடைய ராஜா".

மத்தேயு: 27:37

  • "யூதருடைய ராஜாவாகிய இயேசு இவர்".

லூக்கா: 23:38

  • "இவன் யூதருடைய ராஜா".

யோவான்: 19:19

  • "நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா".

9. கல்லறையில் இருந்த தேவதூதர்கள்

மத்தேயு/மாற்கு: மத்தேயு: 28:2-3; மாற் 16:5

  • கல்லறையில் ஒரு தேவதூதனை (அல்லது வாலிபனை) பெண்கள் கண்டனர்.

லூக்கா/யோவான்: லுக் 24:3-5; யோவா 20:11-12

  • பிரகாசமான வஸ்திரந்தரித்த இரண்டு பேரை அவர்கள் கண்டனர்.

10. இயேசுவை அபிஷேகம் செய்த நிகழ்வு

மாற்கு/மத்தேயு: மத்தேயு: 26:2; மாற் 14:1

  • பஸ்கா பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்தது.

யோவான்: 12:1

  • பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு இது நடந்தது.

11. தேவாலயத்தைச் சுத்திகரித்தல்

யோவான்: 2:13-17

  • இயேசுவின் ஊழியத்தின் தொடக்கத்தில் இந்நிகழ்வு நடந்ததாகக் கூறுகிறது.

ஒத்தமை நற்செய்திகள்: மத் 21:12-17; மாற் 11:15-19; லுக் 19:45-48

  • இயேசுவின் ஊழியத்தின் இறுதியில் (கடைசி வாரத்தில்) நடந்ததாகக் கூறுகின்றன

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.