குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் ஈஸ்டருக்கு முந்தின ஞாயிறு 'குருத்தோலை ஞாயிறு (PALM SUNDAY) என்று அழைக்கப்படுகிறது.
இயேசுகிறிஸ்து கடைசியாக எருசலேமுக்குள் பவனியாக வந்தபோது திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் என்று மத்.21:9,10 வசனங்களில் பார்க்கிறோம். இதற்கு அடையாளமாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்து குருத்தோலை ஞாயிறு கொண்டாடும் பழக்கம் உண்டாயிற்று.
