இரட்சிப்பின் ரகசியங்கள்
கிறிஸ்தவ உலகத்தில் பொதுவாக இரட்சிப்பை குறித்து சொல்லுவது
- இயேசுவை ஏற்றுக் கொண்டு ஞானஸ்தானம் எடுப்பது
- இரட்சிக்கப்பட்ட ஒருவன் பாவம் செய்தாலும் பாவமல்ல
இரட்சிப்பு என்பது மூன்று விதங்களில் செயல்படுகிறது
1. கடந்த கால இரட்சிப்பு
2. நிகழ்கால இரட்சிப்பு
3. எதிர்கால இரட்சிப்பு
இன்றைய கிறிஸ்தவம் கடந்த கால இரட்சிப்பை குறித்து மட்டுமே பேசுகிறது நிகழ்கால மற்றும் எதிர்கால இரட்சிப்பை குறித்து பேசுவது இல்லை.
இரட்சிப்பைக் குறித்து வேகம் என்ன கூறுகிறது?
1 பேதுரு 4:17-18
- 1பேதுரு 4: 17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
- 1பேதுரு 4: 18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
நியாயத் தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும்
முந்தி நம்மிடத்தில் துவங்கும்
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிது
- இரட்சிக்கப்படாமல் நீதிமானாக மாற முடியாது
- இரட்சிக்கப்பட்டவனே நீதிமான்.
- நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிது
தேவனுடைய வீடு - சபை.
முந்தி நம்மிடத்தில் - கர்த்தருடைய ஜனங்கள் .
நீதிமான் என்பது - இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பாவங்களை அறிக்கை விட்டு ஞானஸ்நானம் பெற்று சபையில் இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளை
பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?
- முடியும் என்று வேதம் கூறுகிறது.
ஆதாரம் 1:- 2 பேதுரு 1:9-10
- 2பேதுரு 1: 9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
- 2பேதுரு 1: 10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
ஆதாரம் 2:- 2 பேதுரு 2:20-21
- 2பேதுரு 2: 20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
- 2பேதுரு 2: 21 அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
ஆதாரம் 3:- 2 பேதுரு 3:14
- 2பேதுரு 3: 14
- ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
ஒருமுறை ரட்சிக்கப்பட்டவன் பாவம் செய்தாலும் பாவி அல்ல எனக் கூறுவதற்கான காரணம் இரட்சிப்பு மூன்று விதங்களில் செயல்படுகிறதை அவர்கள் அறியாமல் இருப்பதினால் ஆகும்.
இரட்சிப்பை பெற்றதற்குப் பின்பு பாவம் செய்யக்கூடாது
ஆதாரம் :- எபி 10:26-29
- 26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
- 27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
- 28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே.
- 29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபி 6:4-6;
- 4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
- 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
- 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 12:15
- 15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
இரட்சிப்பு என்பது மூன்று விதங்களில் செயல்படுகிறது
1. கடந்த கால இரட்சிப்பு
2. நிகழ்கால இரட்சிப்பு
3. எதிர்கால இரட்சிப்பு
கடந்த கால இரட்சிப்பு (பொதுவான இரட்சிப்பு)
எபே 2:8
- 8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.
ரோம 3:24
- 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,
நிகழ்கால இரட்சிப்பு (பூரண இரட்சிப்பு)
1கொரி 1:18
- 18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
பிலி 2:12
- 12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
ரோம 13:11
- 11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
எதிர்கால இரட்சிப்பு ( நித்திய இரட்சிப்பு)
எபி 9:28
- கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
1 பேதுரு 1:5
- கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
எபேசியர் 1:14
- 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
நிகழ்கால இரட்சிப்பு இல்லாமல் கடந்த கால இரட்சிப்பு பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எதிர்கால ரட்சிப்பு (ரகசிய வருகையில் உயிர்த்தெழுதல்) கிடையாது.
நிகழ்கால ரட்சிப்பு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த கால இரட்சிப்பின் விளைவு
அதுவரை அவன் செய்த எல்லா பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறான்.
ரோமர் 5:9
- இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
கடந்த கால எந்த பாவத்தையும் தேவன் மன்னிக்கிறார் அதற்கு கணக்கு வைப்பதில்லை அதற்கான தண்டனையும் இல்லை
மீகா 7:19;
- 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
எபி 8:12;
- 12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 43:25.
- 25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
பழைய மனிதன் மரித்து புதிய மனிதன் உயிர் பெற்ற பிறகு நிகழ்காலத்தில் அவன் செய்யும் அனைத்தும் ஞாபக புத்தகத்தில் கணக்கு வைக்கப்படுகிறது.
நிகழ்கால இரட்சிப்பின் விளைவு
நிகழ்கால பாவ வல்லமையிலிருந்து விடுதலை ஆக்குகிறது.
எபி 12:1
- ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
கடந்த கால இரட்சிப்பைப் பெற்ற மனிதனை சுற்றி பாவம் வல்லமைகள் உள்ளன அவைகள் மேற்கொள்ளாத படிக்கு நம்மை பாதுகாப்பது நிகழ்கால ரட்சிப்பு.
நிகழ்கால பாவத்திற்கு மன்னிப்பு உண்டா?
- மனம் வருந்தி கண்ணீரோடு ஜெபித்தால் உண்டு. ஆனால் நிபந்தனை உண்டு
என்ன நிபந்தனை?
- இனி அந்தப் பாவத்தை நான் செய்வது இல்லை என்று உடன்படிக்கை செய்ய வேண்டும்.
- செய்த உடன்படிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.
- நிலைதிராவிட்டால் நிகழ்கால ரட்சிப்பு தொடராது.
எபி 12:4
- பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
நிகழ்காலத்தில் பாவத்தை அறிந்தும் அதற்கு எதிர்த்து நிற்பது இல்லை.
- பாவம் என்பது தேவனுடைய சித்தத்தை அறிந்தும் அதை செய்யாமல் இருப்பதே ஆகும்.
- பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை பாதுகாப்பது தேவனுடைய வசனமே ஆகும்.
- வசனங்களுக்கு கீழ்படியாத வரைக்கும் பாவ வல்லமையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியாது.
எதிர்கால இரட்சிப்பின் விளைவு
எதிர்கால இரட்சிப்பு நம்மை பாவ உலகத்திலிருந்தே விடுதலை செய்கிறது.
1 தெச 4:16-17
- 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
- 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்
கடந்த கால இரட்சிப்பு:
- பிறந்தநாள் முதல் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் வரை உள்ள பாவங்களை இயேசுவின் ரத்தம் பொது மன்னிப்பாக மன்னிக்கிறது
நிகழ்கால இரட்சிப்பு:
- இயேசுவை ஏற்றுக் கொண்டதிலிருந்து மரணம் வரைக்கும் அவனை இரட்சிப்பது வசனமே யோவான் 17:17
மூன்று இரட்சிப்பைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை
கடந்த கால இரட்சிப்பு:
- யூதா 3 இதற்குப் பெயர் பொதுவான இரட்சிப்பு
- இதைப் பெற இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும்
- இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் யாராயிருந்தாலும் சரி அவர்கள் இந்த இரட்சிப்பை பெற முடியும்
நிகழ்கால இரட்சிப்பு
- இதற்கு வேதம் கூறும் பெயர் பூரண இரட்சிப்பு
- ஏசா 33:6 - பூரண இரட்சிப்பு உன் காலங்களின் உறுதி (ஜீவகாலம் முழுவதும்)
- கடந்த கால இரட்சிப்பை பெற்ற ஒருவன் அதை நிகழ்காலத்தில் காத்துக் கொள்ள வேண்டும்.
- மரணம் வரைக்கும் காத்துக் கொள்ள வேண்டும் அல்லது கிறிஸ்துவின் வருகை வரைக்கும் காத்துக் கொள்ள வேண்டும்.
- மத் 24:13 முடிவுபரியந்தமும்
- எபி 6:2 - வேதத்தில் உள்ள மற்ற உபதேசங்கள் எல்லாவற்றை காட்டிலும் நிகழ்கால இரட்சிப்பை குறித்த உபதேசம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இதை காத்துக் கொண்டால் மட்டுமே எதிர்கால இரட்சிப்பு கிடைக்கும்.
எதிர்கால இரட்சிப்பு
- எதிர்கால இரட்சிப்பை குறித்து வேதம் கூறும் போது அதை நித்திய இரட்சிப்பு என்று விவரிக்கிறது.
- ஏசாயா 45:17- இது எதிர்காலத்தில் நடைபெறும் உயிர்த்தெழுதலை குறிக்கிறது.
- எபி 5:9- நிகழ்கால இரட்சிப்பில் பூரணம் அடைந்தால் மட்டுமே இந்த இரட்சிப்பு கிடைக்கும்.
