ஈஸ்டர்

ஈஸ்டர்

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடும் ஞாயிறு, மார்ச் மாதம் 22ம் தேதிக்கும் ஏப்ரல் 25ம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் வரும். அப்போஸ்தலர் 12:4ல் மட்டுமே ஈஸ்டர் என்ற வார்த்தை வருகிறது. இதுவும் KING JAMES மொழி பெயர்ப்பில் மட்டும் வருகிறது. மற்ற மொழி பெயர்ப்புகளில் பஸ்கா பண்டிகை என்றே வருகிறது. இந்த வார்த்தையின் பொருள் யாருக்கும் திட்டமாகத் தெரியவில்லை. 'இஸ்தார்', 'அஸ்டார்டே' என்ற பெயர்கள் பாபிலோனிய வானராக்கினிக்கு கொடுக்கப் பட்ட பெயர்கள். இதிலிருந்து ஈஸ்டர் என்ற வார்த்தை வருவதாக ஒருவர் குறிப்பிடுகிறார்.

பாபிலோனிய பண்டிகையில் ஒன்றாக இருந்த ஈஸ்டரையே பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் பண்டிகை யாக மாற்றிக்கொண்டனர். இந்தப் பண்டிகையை பாபிலோனியர் வசந்தகால பண்டிகையாக ஏப்ரல் மாதத்தை ஓட்டிக் கொண்டாடினர்.

கிரேக்கப் பாரம்பரியம் ஒரு கதையை கூறுகிறது: டெமெடர் (DEMETER) என்ற பூமியின் கடவுளின் மகள் பெர்ஸிபோன் (PERSEPHONE). அவள் பூமிக்கடி யிலிருந்து சூரிய வெளிச்சத்திற்கு வரும் நாளை ஈஸ்டர் என்று அழைத்தனர். கோழி முட்டைகளில் வர்ணம் பூசி விளையாடினர். அதாவது முட்டைக்குள் இருந்து உயிர் புறப்படுவதைப் போல அந்த தேவதை புறப்படுகிறாள். பிற்காலத்தில் இதையே கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந் ததற்கு அடையாளமாக ஈஸ்டர் நாளை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளாக மாற்றினர் என்று கூறப் படுகிறது.

வெளிநாடுகளில் ஈஸ்டர் முட்டைகள் என்று பிளாஸ்டிக் முட்டைகளைச் செய்து அதில் சாக்லேட் போன்ற இனிப்புப் பொருட்களை வைத்து மூடி. செடிகளுக்குள்ளும், மறைவான இடங்களிலும் ஒளித்துவைத்து சிறுபிள்ளைகளை கண்டுபிடிக்க வைக்கிறார்கள்.

யூதர்களின் பஸ்கா என்ற எபிரேய வார்த்தையின் மறுமொழி பெயர்ப்பு ஈஸ்டர். எனவே ஆதிக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் யூத மதத்தி லிருந்து வந்தனர். எனவே பஸ்கா நாளை ஈஸ்டர் நாளாக மாற்றினர் என்றும் ஓர் குறிப்பு கூறுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் தேதி

பஸ்கா பண்டிகை ஆரம்பமாகுமுன் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இந்த ஈஸ்டர் நாளை திட்டம் பண்ணுவதில் கிறிஸ்தவர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. யூதர்கள் நிசான் மாதம் 14ம்தேதி பஸ்காவை கொண்டாடினர். இது எப்போதும் பௌர்ணமி (பூரண நிலா) நாளில் வரும். எனவே வருடத்திற்கு வருடம் இது வேறுவேறு தேதிகளில் வரும் யூத காலண்டர்படி) நிசான் மாதமே வருடத்தின் முதல் மாதம்.

புறஜாதியில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளை ஞாயிற்றுக் கிழமையிலேயே கொண்டாட விரும்பினர். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் இது வித்தியாசமான ஞாயிறில் வரும்.

கி.பி.325ல் நைசியாவில் நடந்த சபைத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ரோமப் பேரரசனான கான்ஸ்டன்டைன் ஒரு சட்டம் கொண்டு வந்தார். வெர்னல் ஈகுய் நாக்ஸ் (VERNAL EQUI NOX) என்ற நாளுக்கு அடுத்தாற்போல் வரும் பௌர்ணமிக்கு பின்வரும் முதல் ஞாயிறு ஈஸ்டர். யூதர்களுடைய பஸ்காவும் இதே ஞாயிறில் வந்தால், அதற்கு அடுத்த ஞாயிறு ஈஸ்டர். இப்படி தேதியை குறிப்பிட்ட பின்பும் குழப்பம் ஏற்பட்டது.

கி.பி.387ல், ஈஸ்டர் பண்டிகையை பிரான்ஸ் கொண்டாடின நாளுக்கும், எகிப்து கொண்டாடின நாளுக்குமிடையே 35 நாள் இடைவெளி இருந்தது.

கி.பி.1582ல் 8ம் கிரிகரி என்ற போப் ஜீலியன் காலண்டரை திருத்தம் செய்து கிரிகரியின் காலண்டர் என்ற புதுக்கணக்கை அறிமுகம் செய்தார். கி.பி. 1752 முதல் இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் இந்த காலண்டரை பின்பற்றினார். ஆனால் கீழ் நாட்டு சபைகள் மேற்கத்திய நாடுகள் கொண்டாடின ஞாயிறுக்கு முந்திய அல்லது பிந்தின ஞாயிறை ஈஸ்டராகக் கொண்டாடினர்.

கி.பி.1928ல் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமைக்குப்பின் வரும் ஞாயிறை ஈஸ்டராக கொண்டாட தீர்மானித்து, இங்கிலாந்து சபைக்கு சிபாரிசு செய்தது. ஆனாலும் உலக அளவில் இன்னும் ஈஸ்டர் ஞாயிறு வருடத்தில் குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்படவில்லை.

யூதர்களின் பஸ்கா பண்டிகைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையே ஈஸ்டராக கொண்டாடப் படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.