குருத்தோலையும் - கேள்வி பதில்களும்
1. கேள்வி:
இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை எதன் அருகில் வந்தபோது அழைத்தார்?
பதில்: ஒலிவமலை, பெத்பகே (மத் 21:1)
2. கேள்வி:
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்-இயேசு கூறியது ஏன்?
பதில்:
ஒரு கழுதையையும் ஒரு குட்டியையும் அவிழ்த்துக்
கொண்டுவர (மத் 21:2)
3. கேள்வி:
கழுதைகள் யாருக்கு வேண்டுமென்று சொல்ல
இயேசு கூறினார்?
பதில்:
ஆண்டவருக்கு (மத் 21:3)
4. கேள்வி:
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறவர்
யார்?
பதில்:
சாந்தகுணமுள்ள உன் ராஜா (மத் 21:4)
5. கேள்வி:
கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருவதை யாரிடம் சொல்ல இயேசு
கூறினார்?
பதில்:
சீயோன் குமாரத்தி (மத் 21:4)
6.கேள்வி:
யாரால் உரைக்கபட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று இயேசு கூறினார்?
பதில்:
தீர்க்கதரிசி (மத் 21:5)
7. கேள்வி:
கழுதையையும், குட்டியையும் கொண்டுவந்து அவர்கள் என்ன செய்தார்கள்?
பதில்:
வஸ்திரங்களை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏற்றினார்கள் (மத் 21:7)
8. கேள்வி:
முன் நடப்பாரும், பின் நடப்பாருமாகிய திரளான
ஜனங்கள் இயேசுவைப்பார்த்து என்னவென்று சொன்னார்கள்?
பதில்:
தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா (மத் 21:9)
9. கேள்வி:
யாவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார்? என்று விசா ரித்த நகரத்தார் யார்?
பதில்:
எருசேலம் (மத் 21:10)
10. கேள்வி:
இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி-யார், யாரைப் பாரத்துக் கூறினார்கள்?
பதில்:
ஜனங்கள் இயேசு (மத் 21:11)
11. கேள்வி:
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத் -தில் ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளைக் கண்டு கோபமடைந்தவர்கள் யார்?
பதில்:
ஆசாரியர், வேதபாரகர் (மத் 21:15)
12. கேள்வி:
இயேசுவும் சீஷரும் ஒலிவுமலைக்கு அருகான
எந்த ஊரில் வந்தார்கள்?
பதில்:
பெத்பகே பெத்தானியா (மாற் 11:1)
13.கேள்வி:
இயேசு எங்கே போகும்படி இரண்டு சீஷரை அனுப்பினார்?
பதில்:
எதிரேயிருக்கிற கிராமம் [மாற் 11:2)
14.கேள்வி:
கட்டியிருக்கக் காண்கிற
கழுதைக்குட்டி எப்படிப்பட்டது?
பதில்:
ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராதது (மாற் 11:2)
15. கேள்வி:
கழுதைக்குட்ட்டியை என்ன செய்ய இயேசு கூறினார்?
பதில்:
அவிழ்த்துக் கொண்டுவர (மாற் 11:2)
16. கேள்வி:
ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள் என்று யாராகிலும் கேட்டால் சீஷர்கள் சொல்ல வேண்டி
வேண்டியது என்ன?
பதில்:
இது ஆண்டவருக்கு வேண்டும் (மாற்
11:3)
17.கேள்வி:
கழுதைக்குட்டி இருவழிச்சந்தியில் எங்கே கட்டப் பட்டிருந்தது?
பதில்:
ஒரு வாசலருகே (மாற் 11:4)
18. கேள்வி:
முன்நடப்பாரும் பின்நடப்பாரும் என்னசொல்லி ஆர்ப்பரித்தார்கள்?
பதில்:
ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக. உன்னதத்திலே ஓசன்னா
(மாற் 11:9,10)
19. கேள்வி:
பெத்பகே, பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன?
பதில்:
ஒலிவமலை (லூக் 19:29)
20. கேள்வி:
மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராதl எது?
பதில்:
கழுதைக்குட்டி (லூக் 19:30)
21. கேள்வி:
யாருடைய நாமத்தினால் வருகிற ராஜா ஸ்தோத்த -ரிக்கப்பட்டவர் என்று தேவனைப் புகழ்ந்தார்கள்?
பதில்:
கர்த்தருடைய (லூக் 19:38)
22. கேள்வி:
சீஷர்கள் பேசாவிட்டால் கூப்பிடுவது எது?
பதில்:
கல்லுகள் (லூக் 19:40)
23. கேள்வி:
இயேசு எதைப் பார்த்து கண்ணீர் விட்டழுதார்?
பதில்:
நகரம் (லூக் 19:41)
24. கேள்வி:
இந்த நாளிலாகிலும் எதற்கு ஏற்றவைகளை அறிந்திருந்தால் நலமாயிருக்கும் என்று இயேசு நகரத்தைப் பாரத்து கூறினார்?
பதில்:
சமாதானம் (லூக் 19:42)
25. கேள்வி:
நகரத்தை எப்பக்கத்திலும் நெருக்குகிறவர்கள் யார்?
பதில்:
சத்துருக்கள் (லூக் 19:43)
26. கேள்வி:
நகரத்தை எப்படியிராதப்படிக்குச் செய்யும் நாட்கள் வரும்?
பதில்:
ஒரு கல்லின்மேல் ஒரு கல் (லூக் 19:44)
27. கேள்வி:
விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் எங்கிருந்து இயேசு துரத்தினார்?
பதில்:
தேவாலயம் (லூக் 19:45)
28. கேள்வி: .
..., பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதப்பட்டிருகிறது?
பதில்:
சீயோன் குமாரத்தியே (யோவா 12:14)
29. கேள்வி: இதோ, உலகமே அவருக்குப் பின்சென்று போயிற்றே
கூறியவர்கள் யார்?
பதில்:
பரிசேயர் (யோவா 12:19)
30. கேள்வி:
பண்டிகையிலே ஆராதனை செய்யவந்தவர்களில்
சில .......... இருந்தார்கள்?
பதில :
கிரேக்கர் (யோவா 12:20)
