சிலை வணக்கம்
ரோமப் பேரரசனான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனான பின்பு கிறிஸ்தவர்களுக்கு அதுவரை இருந்த உபத்திரவம் நீங்கினது. கிறிஸ்தவர்கள் அரசாங்க சலுகைகளை ஏராளம் பெற்றனர். எல்லா நிலையிலுள்ளவர்களும் சபையில் அங்கமாயினர். நல்லவனும், கெட்டவனும், துன்மார்க்கனும் சபை அங்கத்தினராயினர். மனமாற்றமில்லை, மதமாற்ற மிருந்தது.
பாபிலோனிய, கிரேக்க சிலை வணக்கம் மெதுவாக சபைக்குள் நுழைய ஆரம்பித்தது. கான்ஸ்டன்டைன் காலம் முடிந்து இரண்டு தலைமுறைக்குப் பின்பு தான் சிலை வணக்கம் சபைக்குள் அறிமுகமானது. புறஜாதிய பண்டிகைகளெல்லாம் பெயர் மாற்றம டைந்து கிறிஸ்தவ பண்டிகைகளாக மாறின.
கி.பி.405ல் பரிசுத்தவான்கள், இரத்த சாட்சிகள் ஆகியோரின் சிலைகள் ஞாபக் சின்னங்களாக வைக்கப்பட்டன. பின்பு அவை கனப்படுத்தப் பட்டன, வணங்கப்பட்டன. வீனஸ், தீனாள் ஆகிய தேவதைகளின் இடத்தில் மரியாள் சிலைகள் வைக்கப் பட்டு வணங்கப்பட்டன. கர்த்தருடைய பந்தி தேவதைகளுக்குப் படைக்கும் பலிபோல கைக் கொள்ளப்பட்டது.
கி.பி.590-604ல் பதவியிலிருந்த முதலாம் கிரிகரி என்ற போப் சிலை வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம், (PURIGATORY), கர்த்தருடைய பந்தியில் அப்பம் இரசம், இயேசுவின் சரீரம் ரத்தமாக மாறுகிறது (TRANSUBSTANTIATION) என்ற கொள்கைகளை தீவிரமாக அமலாக்கினர்.
கி.பி.787ல் நீஸ் (NICE) பட்டணத்தில் நடந்த திருச்சபையின் இரண்டாம் ஆலோசனைக் கூட்டத்தில் சிலை வணக்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது. சிலை வணக்கத்தை புறக்கணிக்க சில அரசர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. கி.பி.869ல் கான்ஸ்டான்டி நோபிள் பட்டணத்தில் கூடிய திருச்சபை ஆலோசனைச் சங்கம் சிலை வணக்கத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினது.
'TIME' பத்திரிக்கை ஒன்றில் இப்படி ஒரு செய்தி வெளியானது. "இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய சரீரங்களிலும் எடுத்த சிறிய எலும்புகளும், வேறு ஆறு இரத்த சாட்சிகளின் சிறு எலும்புகளும். நியுயார்க் பட்டணத்திலுள்ள மேன்ஹேட்டன் திரு.பேட்ரிக் ஆலயத்தின் புது பலிபீடத்தில் சீல் வைக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன"
இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி இங்கே வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிலுள்ள ஒரு சபை அறிக்கை வெளியிட்டதாக 'TIME' பத்திரிக்கை எழுதியது. இந்த நினைவுச் சின்னங்களை (RELICS) மக்கள் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர்.
“உண்மையான சிலுவையின்
பாகங்கள் பாலஸ்தீனாவிலிருந்து இத்தாலி நாட்டிற்கும். ஸ்பெயி பினுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன" என்ற பத்திரிக்கை செய்தியைக் கேட்டு ஏராளமான மக்கள் அதை பயபக்தியுடன் பார்க்கச் சென்றனர். இதைப் பார்த்துவந்த ஒரு புராட்டஸ்டண்ட் நண்பர் "இங்கே வைக்கப்பட்டுள்ள சிலுவை சின்னங்களைக் கொண்டு ஒரு பெரிய ஆலயமே கட்டலாம்" என்று கூறினார். அந்த அளவிற்கு ஏராளமான மரப் பாகங்கள் இருந்தன. ஒரு சிலுவையிலிருந்து இத்தனை பாகங்கள் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரோமசபை சொன்ன பதில்:
இந்த சிலுவை நாளுக்குநாள் பெருக்கமடையக் கூடிய அற்புத வல்லமையுடையது. எனவே பெருகிக் கொண்டே இருக்கிறது என்று கூறியது. இங்கிலாந்தி லிருந்து சென்ற ஒருவர் அந்த சிலுவை சின்னங்களைப் பார்த்தபோது குறைந்தது நான்கு விதமான மரங்களை இதில் காண்கிறேன் என்று கூறினார்.
இயேசு அணிந்திருந்த முட்கிரீடம் என்று பல கிரீடங்களை பல் இடங்களில் வைத்துள்ளனர். இயேசுவின் கரங்களில் கால்களில் அறையப்பட்ட ஆணிகள் என்று ஏராளமான ஆணிகளை பாதுகாக்கின் றனர். இயேசுவின் கண்களிலிருந்து புறப்பட்ட கண்ணீர், அவர் விலாவிலிருந்த வடிந்த இரத்தம் என்று பல இடங்களில் சேகரித்து வைத்துள்ளனர்.
யோவான்ஸ்நானகனின் தலை என்று நான்கு இடங்களில் நான்கு தலைகள் உள்ளன. மத்தேயுவின் கைகள் என்று பல இடங்களில் எட்டு கைகள் உள்ளன. லூக்காவின் கைகள் என்று மூன்று கைகள் உள்ளன. இயேசுவை கமந்து சென்ற கழுதையின் கால்கள் என்று ஐந்து கால்கள் இருக்கின்றன. பவுல், பேதுருவின் தலைகள் என்று பல இடங்களில் உள்ளன. இப்படி நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் ஏராள மான ஏமாற்றுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட சிலையை முத்தமிட்டால் 100 நாள் பாவம் தீரும். இந்த ஆலயத்திற்குள் நுழைந்தால் உடனே உன் பாவம் மன்னிக்கப்படும் என்று வாசகமுள்ள பல சபைகள் இருக்கின்றன. இயேசுகிறிஸ்து சீடர்களின் கால்களைத் துடைக்க பயன்படுத்திய டவல், அவர் மேல்மாடியில் பஸ்கா ஆசரிக்கப் பயன்படுத்திய மேஜை என்று பல பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் மக்களால் வணங்கப்படுகின்றன. என்பதுதான் வேதனையிலும் வேதனை. சிலை வணக்கத்தைக் குறித்து வேதம் கூறுவதென்ன?
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்குக் கொடுத்த த்துக் கட்டளைகளில் ஒன்றாக இருப்பது விக்கிரக வணக்கம் கூடாது என்பது.
"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ
உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" (யாத்.20:4,5).
"நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங் களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்" (யாத்.20:23).
வேறு எந்தக் கடவுள்களுடைய உருவத்திலும் சிலை செய்து வணங்கக்கூடாது என்பது மட்டுமல்ல. யெகோவா தேவனைப் போலவும் சிலை செய்து வணங்கக்கூடாது என்று மிகத்தெளிவாக கட்டளை யிடப்பட்டுள்ளது. சாத்தான் இந்த பிரமாணத்தை முறியடிக்க உலகமெங்கும் சிலை வணக்கத்தை புகுத்திவிட்டான். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் மத்தியிலும் சிலை வணக்கத்தைக் கொண்டுவந்து விட்டான்.
பரிசுத்த வேதாகமத்தை கையில் வைத்துக் கொண்டு, இயேசுவின் உருவத்திலும், மரியாள் மற்றும் பரிசுத்தவான்கள் உருவத்திலும் சிலைகளை கிறிஸ்தவ ஆலயங்களிலே வைத்திருப்பதும் அதை வணங்குவதும் எவ்வளவு வேதனையானது. அதுமட்டுமல்ல, சிலுவை உருவத்தைச் செய்து அதை வணங்குவதும் விக்கிரக ஆராதனையே!
இதை வாசித்து கிறிஸ்தவர்கள் தயவுசெய்து நான் கொடுக்கும் வசனங்களை வேதத்தில் படித்து தெளிவடையுங்கள். இதை வாசிக்கும் நீங்கள் சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்தால் உங்களைப் புண்படுத்துகிறேன் என்று எண்ண வேண்டாம் சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் கையில் வைத்துள்ள வேதாகமத்தை திருப்பி வாசித்துப் பாருங்கள்.
தேவன் வெறுக்கின்ற முதல் பாவமே கிலை வணக்கம்தான். உயிருள்ள தேவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மனிதன் கையினால் செய்த உருவத்திற்கு, சிலைக்குக் கொடுப்பது தேவன் அருவருக்கும் பயங்கர பாவமாகும்.
'....உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டுவிலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக் காக உண்டாக்கினார்கள் என்றார்" (உபா.9:12).
"கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப் பட்டதும், வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன்..." (உபா.27:15).
'ஆசா என்ற அரசன் விக்கிரகத்தை உண்டு பண்ணின தன் தாயை ராஜாத்தி நிலையிலி ருந்து தள்ளிவிட்டான். அவளுடைய விக்கிரகத் தையும் அழித்துப் போட்டான்" (1 இரா.15:13).
"நரகலான விக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது" இரா.21:26), அதாவது மிகமிக அருவருப்பானது என்று பொருள்.
"விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எடுத்து அதை சுட்டெரித்து தூளாக்கி அந்தத் தூளை பிரேதக் குழிகளில் போட்டார்கள்” (2 இரா.23:6).
"சுரூபங்களின் நரகலான விக்கிரகங்களையும் நிர்மூலமாக்கினான்” (2 இரா.23:24).
"தங்கள் விக்கிரகங்களினால் தேவனுக்கு எரிச்சல் உண்டாக்கினார்கள்" (சங்.78:58).
'அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமா யிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவை களுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்" (சங்.115:4-8).
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப் பட்டவன்? மனுஷன் மரத்தை வளர்க்கிறான். மரத்தின் ஒரு பகுதியை எரித்து குளிர் காய்கிறான். மரத்தின் மற்றொரு பகுதியை விறகாக்கி அப்பம் சுடுகிறான். மீதியுள்ள மரத்தில் ஒரு கடவுளைச் செய்து அதற்கு முன் விழுந்து பணிந்து கொள்கிறான். அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள். இதைக்குறித்த அறிவும் சொரணையும் இல்லை (ஏசாயா 44:9-19).
விக்கிர வணக்கம் செய்கின்ற இஸ்ரவேலரை தேவன் இவ்விதமாக கடிந்து கொள்கிறார்:
"விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப் போவார்கள்” (ஏசாயா 45:16).
"மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் இல்லை" (எரே.10:14). ஆவி "அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை
உண்டுபண்ணினார்கள்” (எசே.7:20).
ஆதி சபையிலே விக்கிரகங்களுக்குப் படைத்த ஆகாரத்தைப் புசிக்கக்கூடாது என்று அப்போஸ் தலர்கள் புறஜாதியக் கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுத்தனர் (அப்.15:20,28; 21:25). சிலைக்குப் படைத்ததை புசிக்கக்கூடாது என்று கட்டளை வெளிப் பட்டது. பிந்திய நாட்களில் சிலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை சபைத் தலைவர்கள் நிறைவேற்றினார்கள் என்பதின்மூலம் திருச்சபை கிறிஸ்துவைவிட்டு புறஜாதிய மதத்திற்குள் புகுந்து விட்டது என்பது தெளிவாக விளங்குகிறதல்லவா?
பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது...
"நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப் பட்டபடியே,ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே என்கிறார்" (1 கொரி.12:2).
"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?" (2 கொரி.6:16).
அன்று பவுல் சம்பந்தமில்லை என்று எழுதினார். இன்று தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங் களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது எவ்வளவு பரிதாபமான நிலை.
ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ் "ஜீவ செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினீர்கள்” (1 தெச. 1:9).
"பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்" (1 யோ.5:21).
...விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்" (வெளி.21:8).
கீழ்க்காணும் வசனங்களையும் வாசித்துப் பாருங்கள்: லேவி. 26:1; உபா.5:8; 2 இரா.10:26; 11:18; சங்.78:58; 97:7; 106:19,36; ஏசா.2:8,18; எசே.7:20; 20:39; 30:13; 36:25; 37:23; ரோமர் 2:22; வெளி. 2:14,20; 9:20; 1 கொரி.5:11; 6:9; 10:14; கலா.5:20; எபே.5:5; கொலோ.3:5; 1 பேதுரு 4:3; வெளி.22:15.
மேற்கூறிய வசனங்களிலிருந்து எந்த ஒரு சிலையை செய்வதும் அதை வணங்குவதும் பாவம் என்று வேதம் சொல்கிறது. சிலை வணக்கம் செய்கின்றவர்கள் பரலோகம் செல்லமாட்டார்கள் என்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. பாரம்பரிய பழக்கங்களைவிட்டு வசனத்திற்கு கீழ்ப்படியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
1947 ஜுன்மாதம் கனடாவிலுள்ள ஒட்டாவா என்ற நகரில் சுமார் இரண்டு லட்சம் பேர் மரியாளின் மகாசபை என்ற பெயரில் கூடினர். கனடாவில் க்யூபெக் மாநிலத்திலுள்ள திரி ரிவர்ஸ் (THREE RIV ERS) என்ற ஊரில் ஒரு சிலையை வணங்க திரளான மக்கள் கூடினர். அங்கிருந்த ஆலயத்தில் ஒரு சிலை உயிர்பெற்று கண்களை திறந்த பார்த்தது என்று பறைசாற்றினர். அந்த சிலையை பெருங்கூட்டம் போய் வணங்கினது.
முதலாம் ஸ்டீபன், கி.பி.977-1038ல் ஹங்கேரியில் வாழ்ந்த அரசன். இவர் ஒரு பரிசுத்தவானாக அங்கீகரிக்கப்பட்டார். இவர் மரித்து பல ஆண்டுகள் சென்றபின்பு இவருடைய வலது கை உயிர் பெற்ற தாக கூறினர். இவருடைய கல்லறையை தோண்டி எடுத்தபோது இவருடைய வலது கை கெட்டுப் போகாமல் செயல்பட்டதாக கூறப்பட்டது. இதை வணங்க திரளான மக்கள் கூட்டம் சென்றனர். இப்படி பல பொருட்களையும், சரீர உறுப்புகளையும், சிலை களையும் மரியாதை செய்கின்றோம் என்ற பெயரில் வணங்க ஆரம்பித்தனர்.
சிலை வணக்கத்தைக் குறித்து பத்துக் கட்டளை சுளில் சொல்லப்பட்டிருப்பதை, அடிப்படை உபதேசத்தையே படிப்படியாக மாற்றிவிட்டனர். அமெரிக்காவில், பல்டிமோர் என்ற நகரில் நடந்த மூன்றாம் ஆலோசனைக் கூட்டத்தில் உபதேச வினா விடையிலேயே இதைப் புகுத்திவிட்டனர்.
உபதேச வினா-விடை
கேள்வி 313: பத்துக் கட்டளைகள் யாவை? இதில் இரண்டாம் கட்டளையை முதல் கட்டளையோடு சேர்த்துவிட்டு ஒன்பதாம் கட்டளையை இரண்டாகப் பிரித்துவிட்டனர்.
கேள்வி 340: முதல் கட்டளை ஞாபகச் சின்னங்களை கனப்படுத்துவதை தடை செய்கின்றதா?
முதல் கட்டளை ஞாபகச் சின்னங்களை கனப் படுத்துவதை தடை செய்யவில்லை. ஏனெனில் இவை பரிசுத்தவான்களின் சரீரத்துடன், கர்த்தருடன் தொடர்புள்ளவை.
கேள்வி 341: சிலைகளை செய்வதை முதல் கட்டளை தடை செய்கிறதா?
சிலைகளை கடவுள்களாக வணங்குவதற்காக செய்தால் முதல் கட்டளை அதை தடை செய்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை அவருடைய பரிசுத்த தாயை, பரிசுத்தவான்களை மனதில் கொள்வதற் காக சிலையாக செய்தால் அதை முதல் கட்டளை தடை செய்யவில்லை.
வசனம் சொல்வதென்ன?
"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக் கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையா கிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" (யாத்.20:4,5).
சிலைகளை ஆராதிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல. அவைகளை வணங்கவும் கூடாது என்பது தேவ கட்டளை.
