ஆதித் திருச்சபையின் முதல் தலைவர் பேதுருவா?
இயேசு பேதுருவைப் பார்த்து...
"நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்... பரலோ கத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப் பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும் என்றார்" (மத்.16:16-19).
இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்: பேதுரு என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை 'பெட்ரோஸ்'. இந்த கல்லின்மேல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 'பெட்ரா' 'பெட்ரோஸ்' என்றால் 'கல்' என்று பொருள். 'பெட்ரா' என்றால் 'பெரிய பாறை. நீ சிறு கல்லா யிருக்கிறாய். இந்த பெரிய பாறையின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு கூறினார். இந்தப் பெரிய பாறை யார்? இயேசுகிறிஸ்துவே.
"அந்தக் கன்மலை கிறிஸ்துவே" (1கொரி.10:4; ரோமர் 9:33).
"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்" (1 பேதுரு 2:4).
(இதை எழுதிய பேதுரு நானே அந்தக் கல் என்று சொல்லவில்லை)
"இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக் கிறார்" (எபே.2:20).
"அவர்மேல் (இயேசு) மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு... அவர்மேல் (இயேசு) நீங்களும்... கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்" (எபே.2:21,22).
எனவே திருச்சபை இயேசுகிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டு வருகிறது பேதுருவின்மேல் அல்ல.
பெந்தெகொஸ்தே நாளில் திருச்சபை ஆரம்ப மானபோது பேதுருவை தேவன் பயன்படுத்தினார். பேதுருவின் பிரசங்கத்தினால் 3000 பேர் மனந் திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர்.
"இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்ற பேதுருவின் அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது என்றும் வேத பண்டிதர் விளக்கம் கொடுக்கின்றனர்.
"அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர் களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர் களுமாயிருக்கிறீர்கள்" (எபே.2:20) என்று பவுல் குறிப்பிடுகிறார். அதாவது அப்போஸ்தலர், தீர்க்க தரிசிகள் இயேகவே தேவகுமாரன் என்று அறிக்கையிட்ட விசுவாச அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது.
பேதுருதான் முதல் போப் என்றும், அவர் ரோமில் 25 ஆண்டுகள் பதவியிலிருந்தார் என்றும் கூறப்படும் கருத்துக்கு வேத ஆதாரமுமில்லை. சரித்திர ஆதாரமுமில்லை.
பேதுருதான் முதல் போப் என்றால் இவர் திருமணமானவர் என்றும், அவர் தம் மனைவியை ழியத்திற்குப் போன இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றார் என்றும் வேதம் கூறுகிறது (மத்.8:14; 1கொரி.9:5).சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலைக் கேள்விப்பட்ட எருசலேம் சபையார் பேதுருவையும், யோவானையும் சமாரியாவிற்கு அனுப்பினர் (அப். 8:14).
பேதுரு சபைக்குக் கட்டுப்பட்டு நடந்தாரே யல்லாமல், சபைக்கு தலைவராக செயல்படவில்லை. சபையின் தூண்களாக யாக்கோபும், பேதுருவும், யோவானும் கருதப்பட்டனர் (கலா.2:9). அப்போஸ் தலரில் ஒருவர்தான் பேதுரு, சபைக்குத் தலை கிறிஸ்துவே (எபே.5:23).
"கண்காணியானவன் (பல சபைகளை மேற் பார்வை செய்பவர்) ஒரே மனைவியை உடைய புருஷனாக இருக்க வேண்டும்” (1 தீமோ.3:2). 'கண்காணி' என்பதற்கு ஆங்கிலத்தில் 'பிஷப்' என்று வருகிறது. திருமணம் செய்யக்கூடாது என்று பவுல் எழுதாமல், ஒரு மனைவியுடன் நல்வாழ்க்கை வாழ்ப வனாக இருக்க வேண்டும் என்று எழுதுகிறார். ஒன்றுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதற்கும். ஒன்றுமே வேண்டாம் என்பதற்கும் நிறைய வித்தியாச மிருக்கிறது.
பவுல் இதைத் தொடர்ந்து எழுதும்போது பிற்காலங்களிலே தவறான கொள்கைகளை அந்த பொய்யர் கட்டளையிடுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.
"விவாகம் பண்ணாதிருக்கவும்" (1 தீமோ.4:2) இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் ஒரு வசனமாக குறிக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.
"மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து, விகவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்.
விவாகம் பண்ணாதிருக்கவும்... அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்" (1 தீமோ.4:1-3).
