ஆதி கிறிஸ்துவத்தின் இரகசியங்கள்
கிறிஸ்தவம் என்பது மதமா?
- இல்லை அது ஒரு மார்க்கம் அதாவது வழி. தேவனை ஆராதிப்பதற்காக ஒரு சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நியமித்துக் கொள்வது.
எதற்கான வழி?
- பரலோகம் போவதற்கான வழி
நானே வழி என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். அதாவது ஒரு மனிதன் பரலோகம் போவதற்கு ஒரே வழி அவர் மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் மூலம் பரலோகம் போவதற்கான வழியை கிறிஸ்தவம் போதிக்கிறது.
- தேவன் மனிதனை உண்டாக்கினார்
- மனிதன் மதங்களை உண்டு பண்ணினான்
- மதங்கள் பிரிவினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தினது.
துன்மார்க்கம் 1 பேது 4:4,3 ; ஏசாயா 47:10
இதன் அடையாளங்கள்
வச.4 துன்மார்க உலை (சேறு)
வச.3 எது துன்மார்கம்?
- பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல்
- தீயவிருப்பங்கள்
- குடிப்பழக்கம்
- மது அருந்தும் விருந்துகள்
- உருவ வழிபாடு
இவை நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்கள் அவைகள் இன்று சபை கொள்ளும் வந்திருக்கிறது. சபை துன்மார்களால் நிறைந்திருக்கிறது.
ஆதி சபையின் நிலை மாற்றப்பட்டது
- சபை ஆதியில் சத்தியமாருகத்தால் நிறைந்திருந்தது பின் நாட்களில் மனுஷ மார்க்கமும் இன்றைய நாட்களில் துன்மார்க்கமும் உட்புகந்து காணப்படுகிறது.
- இவைகளுக்கு பின்புலத்தில் இலுமினாட்டிகள் உள்ளனர்
- இலுமினாட்டிகள் சாத்தான் சபையை சேர்ந்தவர்கள்
- இன்றைக்கு வெளிப்படையாக அறிக்கை செய்கிறார்கள்
- இன்னும் பத்து வருடங்களுக்குள் கிறிஸ்தவ முழுவதும் சபை முழுவதும் எங்கள் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும்
சாத்தான் சபையில் இணைய
- லூசிபரை சர்வ வல்ல தேவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்
- அவர்கள் போடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும்
- தங்கள் சொந்த ரத்தத்தினால் உடன்படிக்கை செய்ய வேண்டும்
- இப்படி உறுப்பினராக மாறின பிறகு இந்த உலகத்தில் எதை கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்படுகிறது
- சபைகளில் உள்ள திறமை உள்ளவர்கள் வாலிபர்களே அவர்களின் இலக்கு
சத்தியமார்க்கம்
சத்தியமார்க்கம் விளங்கவேண்டுமானால் சீஷத்துவம் விளங்கவேண்டும்
- சீஷன் பின்பற்றுகிறவன் (எண்ணங்களில், வார்த்தைகளில், கிரியைகளில்)
மத் 28:19
- சகல ஜாதிகளையும் சீஷர்களாக மாற்ற வேண்டும்
சீஷன் என்பவன்
- சுயசித்தம் மனுஷ சித்தம் இவைகளை முழுவதுமாக ஒழித்து விட்டு தேவ சித்தத்தை நிறைவேற்றுதல்
சீடனின் அடிப்படைத் தகுதிகள்
- 1. தன்னைச் தான் வெறுத்தல் -லூக் 9:23, 14:26
- 2. தனக்குண்டாமைகைனை வெறுத்தல் லூக் 14:33
- 3 பிதாவின் சித்தம் செய்தல் -மத் 12:50
சீசத்துவ வாழ்க்கை என்பது எல்லா ஜனங்களுக்கும் சொல்லப்பட்டுள்ளது மாற் 8:34 லூக் 9:23
சீடன் என்பவன் யார் என்பதை விளங்கிக் கொண்டால்
- இயேசு எதை உருவாக்கினார்
- அப்போஸ்தலர்கள் எதை வழிநடத்தினார்கள்
- நாம் பின்பற்ற வேண்டியவைகள் எவைகள்
- கிறிஸ்தவம் என்றால் அதில் அர்த்தம் என்ன
இவைகள் அனைத்தும் புரிந்துவிடும்.
கிறிஸ்தவ மார்க்கம்
சத்தியமார்க்கம்
இதற்கு ஏழு காரண பெயர்கள் உள்ளன.
- ஜீவ மார்க்கம்
- ஞானமார்க்கம்
- விசுவாசமார்கம்
- உத்தம மார்க்கம்
- செம்மையான மார்க்கம்
- நீதியின் மார்க்கம்
- சத்தியமார்கம்
ஜீவ மார்கம் எபி 10:19, 20 ; சங் 16:11, அப் 2:28, யோவா 17:3, 1யோவா 2:25
எபிரெயர் 10: 19,20
- பழைய ஏற்பாட்டில் தேவ சமூகத்திற்கு அனைவரும் பார்க்க முடியாது
- மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஒருவனும் போக முடியாது
- வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரதான ஆசாரியன் போவான்
இந்த நிலை மாற்றப்பட்டது
- இயேசுவின் மரணத்தினால் இந்த தடை நீக்கப்பட்டது
- மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகும் ஜீவ மார்கத்தை இயேசு உண்டாக்கினார்
- நமக்காகவோ நமக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்காகவோ (ஊழியர்கள், ஸ்தாபனங்கள்) ஊழியம் செய்ய அல்ல தேவனுக்கு ஊழியம் செய்யவே இந்த வழி திறக்கப்பட்டுள்ளது
- இதை நிறைவேற்றுகிறவர்களின் மார்க்கமே ஜீவ மார்க்கம்
இது ஜீவனை உண்டாக்கும் மார்க்கம்
யோவான் 17:1, 3
- நித்தியஜீவனை போதிக்கும் மார்க்கம்
எ.கா.1
- தேவனைக் குறித்த அனேக குழப்பங்கள் நிறைந்துள்ள இவ்வுலகில் அவரைக் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டும் (யெகோவா சாட்சிகள், இயேசுவின் நாமம் மட்டும்….)
எ.கா.2
- ஜெபிக்க வரும் ஒருவருக்கு ஜெபத்தை குறித்த தெளிவை போதிக்க வேண்டும்.
- எப்படி ஜெபிப்பது
- தேவன் எப்பொழுது பதிலை தருவார்
- யாருக்கு தருவார்
போன்றவற்றை குறித்த தெளிவை போதிக்க வேண்டும்.
ஞானமார்க்கம் நீதி 4:11;8:14; 2:7; 1 கொரி 2:7; 1:24
- மெய்ஞானத்தை போதிக்கும் மார்க்கம்
- ஞானம் ஆகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவை பெற்றிருக்கிற மார்க்கமே ஞானமார்க்கம்
- ஜனங்கள் சத்தியத்தை அறிகிற அறிவை உடையவர்களாக மாற்றுவது
விசுவாசமார்கம் கலா 3:9,6-8,14,16 ; ரோம 4:21-25
- ஆதி சபையாருக்கு விசுவாச மார்க்கத்தார் என்று பெயர்
இதன் பொருள் வச.6-8
- ஆபிரகாமின் விசுவாசம் அவனை நீதிமானாக மாற்றுகிறது
எதை விசுவாசித்தான் கலா 3:16-17
- உனக்குள் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்
இதன் பொருள் உலக ஆசீர்வாதம் அல்ல கலா 3:8,16
- ஆபிரகாமின் வம்சத்தில் வரப்போகும் இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று விசுவாசித்தான்
கிறிஸ்துவுக்குள் உள்ள ஆசீர்வாதங்கள்
- மனம் திரும்புதல்
- பாவ மன்னிப்பு
- இரட்சிப்பு
- மறுபடியும் பிறத்தல்
- மறுரூபம்
- உயிர்த்தெழுதல்
- நித்திய ஜீவன்
உத்தமம் மார்க்கம் சங் 119:1; நீதி 11:20; 13:6 எஸ்றா 7:10
யார் உத்தமன்
- வேதத்தின் படி நடக்கிறவர்களே உத்தம மார்க்கத்தை சேர்ந்தவர்கள்
- பழைய ஏற்பாடு காலத்தில் நியாயப்பிரமாணத்தின் படி நடக்கிறவர்களை உத்தமர்கள்
- புதிய ஏற்பாடு காலத்தில் வேத வசனத்தின் படி வாழ்கிறவர்களை உத்தமர்கள்
உத்தமும் என்றால் என்ன?
- சுத்தம் பரிசுத்தம் இவற்றின் உயர் நிலையை தான் உத்தமம்
- ஒரு மனிதன் தொடர்ந்து வேத வசனத்தை கை கொள்ளுவதன் மூலம் சுத்தத்தையும் பரிசுத்தத்தையும் அடைந்து அதன் உச்ச நிலையான உத்தமத்தையும் அடைகிறான்.
செம்மையான மார்க்கம் சங்கீதம் 37:14; பிர 7:29; தானி 11:17
- பிர 7:29 இந்த வசனத்தில் உபாய தந்திரம் என்ற வார்த்தை தனக்கு வேண்டியதை சூழ்ச்சிகள் மூலம் பெற்றுக் கொள்வதை குறிக்கிறது.
- சூழ்ச்சிகள் மூலமாக பெறாமல் நேர்வழிகளில் தனக்கானவைகளை பெற்றுக் கொள்கிறவர்களே செம்மையான மார்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நீதியின் மார்க்கம் 2 பேதுரு 2:21-22; ஏசாயா 26:2; ரோம 5:21 ; எபே 2:18
- நீதியை தேடும் மார்கத்திற்கு நீதியின் மார்க்கம் என்று பெயர்.
- நீதியை தேடுவது என்பது தேவனுடைய பிரமாணங்கள் சட்டங்கள் விதிகள் கட்டளைகள் ஆகியவற்றை கை கொள்ளுவதை குறிக்கிறது.
சத்தியமார்கம் 2 பேதுரு 2:1-2; யோவான் 18:37;8:47; 1
- யோவான் 4:6 - சத்தியவான்கள் உள்ள மார்க்கத்திற்கு சத்திய மார்க்கம் என்று பெயர்.
இந்த மார்க்கத்தின் நோக்கம்
- ஒரு தனி மனிதனை சத்தியவானாக மாற்றுவது
- ஒரு கூட்டத்தை சத்திய ஜாதியாக மாற்றுவது
- திறள் கூட்டத்தை சத்திய மார்க்கமாக மாற்றுவது ஆகும்.
இந்த ஏழு மார்க்கத்திற்குரிய குணாதிசயங்கள் இல்லாதவர்கள் மார்க்கம் தப்பி அலைகிறவர்
- யூதா 1:13, யாக் 5:19, 20
யார் இவர்கள்
- யூத 12,4
பூர்வ பாதை நல்ல வழி எது என்று பழைய ஏற்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது
- எரே 6:16, 18:15, 11, 12
