கர்த்தரின் பந்தியில் பயன்படுத்தும் ரொட்டியை தெய்வீகமாக்கினர்

கர்த்தரின் பந்தியில் பயன்படுத்தும் ரொட்டியை தெய்வீகமாக்கினர்

கர்த்தரின் பந்தியில் பயன்படுத்தும் ரொட்டிக் காக குருவானவர் ஜெபித்தவுடன், அது இயேசு கிறிஸ்துவின் சரீரமாக, ரத்தமாக, ஆத்துமாவாக மாறிவிடுகிறது. ஜெபித்த பின்பும் தோற்றத்திலும் ருசியிலும் நிறத்திலும் ரொட்டியாக தெரிந்தாலும் அது ரொட்டியல்ல. அது தெய்வீகத் தன்மையுள்ள இயேசுகிறிஸ்துவின் சரீரமாகி விடுகிறது என்று போதிக்கின்றனர், நம்புகின்றனர். எனவே இந்த ரொட்டியும் இயேசுகிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்வதாக நம்பி அதையும் வணங்கு கின்ற பழக்கம் வந்தது.

கி.பி.1545ல் திரந்து என்ற நகரில் நடந்த திருச்சபை ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"பரிசுத்த சாக்கிரமந்தில் பயன்படுத்தப்படும் அப்பமும் ரசமும் பிரதிஷ்டை செய்யப்பட்டபின் அது இயேசுகிறிஸ்துவாக மாறுகிறது என்பதை திறந்த மனதுடன் சபை போதிக்கிறது. காணக்கூடிய இந்த பொருட்களில் மெய்யான, உண்மையான கிறிஸ்து பூரணமாய் வெளிப்படுகிறார். மற்ற சாக்கிரமந்துகளில் கிறிஸ்து வெளிப்படுவதுபோல இதிலும் எந்த நிலையிலும் சற்றும் குறையாத அளவு அவர் பிரசன்னமாகிறார். எனவே சகல மரியாதை யுடனும், உயர்ந்த நிலையில் அதை வணங்கி ஆராதிக்க வேண்டும். கிறிஸ்துவினால் ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த பரிசுத்த சாக்கிரமந்தை வணங்கக் கூடாது என்றோ,புனித பவனியில் கொண்டு செல்லக் கூடாது என்றோ, மக்கள் இதை பகிரங்கமாக வணங்கக் கூடாது என்றோ அல்லது இது விக்கிரக ஆராதனை. என்றோ சொன்னால் அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கக்கடவன்".

ஜார்ஜ் மெக்பால் என்பவர்...

"ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆலயத்தை கடந்து செல்லும்போது தொப்பியை தலையைவிட்டு எடுத்து மரியாதை செய்வதும் அல்லது ஆலயத்தில் தங்கள் இருக்கையில் அமருமுன் ஆலய முன்பக்க பீடத்தைப் பார்த்து சற்றுகுனிந்து வணங்குவதற்கும் காரணமென்னவென்றால், குருவானவர் பூஜை செய்தவுடன் கிறிஸ்து அங்கே வந்து பிரசன்னமாகி யிருக்கிறார் என்றும், பிரதிஷ்டை செய்யப்பட்ட அப்பம் அங்கே இருப்பதால் அது கிறிஸ்துவே என்றும் நம்புவதால்தான்" என்று கூறுகின்றார்.

எனவே ஆலய முன்பக்க பீடத்தில் இயேசு கிறிஸ்து பிரசன்னமாகியுள்ளார் என்று இவர்கள் நம்புவதால்தான் ஆலயப் பீடத்தைக் குறித்து அதிக பயபக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இப்போது அப்பமாக வெளிப்பட்டுள்ளார் என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மறைதிரு. எம்.எம்.கிரிகரி என்பவர்...

"தேவனுடைய ஊழியம் செய்யும் குருவான வரின் வல்லமையையும் கனத்தையும் நான் மிகைப் படுத்த முடியாது. குருவானவரின் கனம் ஒரு தேவ தூதனுடைய கனத்தைக் காட்டிலும், மரியாளின் சுனத்தைக்காட்டிலும், தேவதூதரின் ராணியின் கனத்தைக் காட்டிலும் பெரியது. குருவானவர் பூஜை நடத்த பலிபீடத்தண்டை நிற்கும்போது தேவனுடைய வல்லமைக்கு இணையான வல்லமையுடையவராய் நிற்கின்றார். ஏனெனில் குருவானவர் அப்பத்தையும், ரசத்தையும் எடுத்து பிரதிஷ்டையின் வார்த்தை களைக் கூறியவுடனே அவை கிறிஸ்துவின் சரீரமாக. இரத்தமாக மாறிவிடுகிறதே. மனிதனின் எந்த வல்லமையும் இதற்கு ஈடாகாது, இது தேவனுடைய வல்லமையே" என்று கூறுகின்றார்.

இவர் எழுதிய சிறு புத்தகத்தின் 26ம் பக்கத்தில்... "குருவானவரின் வல்லமையைப் பாருங்கள். ஒரு வார்த்தையில் அப்பத்தை தேவனாக மாற்றி விடுகிறாரே, இது உலகம் படைக்கப்பட தேவன் உபயோகித்த வல்லமையைவிட பெரிதல்லவா!” என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் கொள்கைகள் வேத வசனங்களுக்கு முரண்பட்டவை என்பதை எபிரெயர் 9:11,12,26; 10:10.12.14; 1 பேதுரு 1:18,19 ஆகிய வசனங்கள் போதிக்கின்றன.

கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் ஜெபித்தபின்பும் அப்பமாக, இரசமாகவே இருக்கின்றன என்பது யாவருக்கும் தெரியும். இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கும் இரத்தத்திற்கும் அடையாளமாகவே இவைகள் இருக்கின்றன. உண்மையாகவே இவை இயேசு கிறிஸ்துவின் சரீரமாக இரத்தமாக மாறுமென்றால் நாம் நரமாமிச பட்சினிகளாக இருக்கின்றோம் என்றல்லவா பொருள்படும்.

அப்பம் இயேசுவின் சரீரமாக மாறுகிறதா? கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும். அப்பம் இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது. இந்தப் போதனை வேத வசனங்களுக்கு மாறுபட்டது.

"இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு சீஷர்களுக்கு கொடுத்து நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமா யிருக்கிறது என்றார்" (மத்.26:26).

இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அப்பம் இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது என்று போதிக்கின்றனர். இயேக அப்படிச் சொன்ன பின்பும் அப்பம் அப்பமாகவேதான் இருந்தது. அவருடைய சரீரமாக அது மாறவில்லை. மனுக் குலத்தின் பாவத்திற்காக தாம் மரிக்கப்போவதை விளக்கும் வண்ணம் இவ்விதம் சொன்னார். சீடர்கள் வாங்கி புசித்தது அப்பத்தைத்தான், இயேசுவின் சரீரம் அங்கே தனியேதான் இருந்தது.

ஒரு போட்டோவைக் காட்டி இது சாமுவேல் என்று கூறினால் சாமுவேல் என்ற அந்த நபர் அது என்று யாரும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். சாமுவேலை பிரதிபலிக்கும் படம் என்றுதானே பொருள். நானே வாசல், நானே மெய்யான திராட்சச்செடி என்று இயேசு சொன்னாரே, அதை எப்படி விளங்கிக்கொள்கிறோம். இவை உருவக மொழியில் கூறப்பட்டவை. ஜீவ அப்பம் நானே. வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே என்று இயேக சொன்னதும் உருவக மொழியில்தான். அவர் மனிதர் சாப்பிடக்கூடிய சாதாரண அப்பமாகவா மாறினார், இல்லை. மனுக்குலத்திற்கு ஜீவனைக் கொடுக்க வந்த ஜீவ அப்பம் என்ற பொருளில் பேசினார்.

எனவே கர்த்தருடைய பந்தி என்பது இயேசு கிறிஸ்து தமது சரீரத்தையும் இரத்தத்தையும் மனுக் குலத்தின் பாவத்திற்காக பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை நினைவு கூறுவதேயல்லாமல் மறுபடியும் அவரைப்பிட்டு கொலை செய்வது என்பதல்ல.

வேதத்தில் கூறப்பட்டுள்ள கர்த்தருடைய பந்திக்கும் ரோமன் சபையில் நடக்கும் பூஜைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

கர்த்தருடைய பந்தியில் அப்பமும் இரசமும் கொடுக்கப்பட்டன (மத்.26:27,28). ரோமன் சபையில் அப்பம் மட்டுமே கொடுக்கின்றனர்.

கி.பி.1414ல் கான்ஸ்டன்ஸ் என்ற இடத்தில் நடந்த சபை ஆலோசனைக் கூட்டத்தில் சபை மக்களுக்கு இரசம் கொடுக்கும் முறை நிறுத்தப்பட்டது. குருவானவர் மட்டுமே இரசம் அருந்த அனுமதிக்கப் பட்டது. சபை உருவான கால முதல் கி.பி.1414வரை சபை மக்களுக்கு கர்த்தருடைய பந்தியில் அப்பத் துடன் சேர்ந்து இரசமும் கொடுக்கப்பட்டு வந்தது. இயேசு சீடர்களுடன் உட்கார்ந்து அப்பத்தையும் இரசத்தையும் பகிர்ந்து கொடுத்தார். யாவரும் பகிர்ந்து கொண்டனர்.

ரோமன் சபையில் குருவானவர் மட்டுமே தனித்துநின்று செயல்படுகிறார். பூஜை நேரத்தில் யாவரும் அப்பத்தை தாழவிழுந்து பணிந்து கொள்கின்றனர். அப்பம் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்படுகிறது. இயேசு அப்பமாக பிரசன்ன மாகி விடுகிறார் என்று நம்புகின்றனர்.

ஒரேதரம் மரித்து மனுக்குலத்திற்கு பாவ பரிகா ரத்தை உண்டுபண்ணிவிட்டார் இயேசு. மறுபடியும் மறுபடியும் இயேசு கர்த்தருடைய பந்தியில் சரீரமாக, இரத்தமாக மாறுகிறார் என்பது அவரை திரும்பத் திரும்ப சிலுவையில் அறைவதற்கு ஒப்பானதாகும். மெய்யான இயேசுகிறிஸ்துவை தொழுதுகொள்ளு வதற்குப் பதில் அப்பத்தைத் தொழுதுகொள்வது

விக்கிரக ஆராதனையாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.