திடப்படுத்துங்கள்
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் (ஏசா 35:3)
கருப்பொருள் : எவைகளை திடப்படுத்த வேண்டும்?
தலைப்பு : திடப்படுத்துங்கள்
ஆதார வசனம் : ஏசா 35:3
துணை வசனம்: லேவி 26:9; சங் 68:28; எரே 11:5
1. கைகளை [செப் 3:16)
- நெகிழ்ந்த கைகளை நிமிர்த்த வேண்டும் (எபி 12:12)
- கைகளைத் தளர விடக்கூடாது (செப் 3:16)
- கைகளை தேவனுக்கு நேராக ஏறெடுக்க வேண்டும் (புல 2:12)
2. முழங்கால்களை (ஏசா 35:3)
- தளர்ந்த முழங்கால்களைப் பலப்படுத்த வேண்டும் (ஏசா 35:3)
- தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்த வேண்டும் (யோபு 4:4)
- தேவனுக்கு முன்பாக முடங்க பலப்படுத்த வேண்டும் (தானி 6:10)
3. மனதை [அப் 14:22]
- பவுல் சீஷருடைய மனதை திடப்படுத்தினார் (அப் 14:22)
- இயேசு தமது சீஷர்களுடைய மனதை திறந்தார் (லூக் 24:45)
- பேதுரு நிரூபத்தினால் சபையாரின் மனதை நினைப்பூட்டினார் (2பேது 3:2)
4. இருதயத்தை (யோசு 24:23]
- இருதயத்தைக் கடினப்படுத்தக் கூடாது (யாத் 9:34)
- இருதயத்தை கர்த்தருக்கு நேராக்க வேண்டும் (யோசு 24:23)
- இருதயத்தை தேவனிடத்தில் சாயப்பண்ண வேண்டும் (1இரா 8:58)
5.உள்ளான மனுஷனை (எபே 3:16]
- உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்பட வேண்டும் (2கொரி 4:16)
- ஆவியினாலே உள்ளான மனுஷனில் பலப்பட வேண்டும் (எபே 3:16)
- உள்ளாக பூரண மகிமையைக் கொண்டிருக்க வேண்டும் (சங் 45:13)
6. ஆத்துமாவை (சங் 33:18)
- வியாகுலப்படாதபடிக்குத் திடப்படுத்த வேண்டும் (சங் 6:3)
- சோர்ந்துபோகாதபடிக்குத் திடப்படுத்த வேண்டும் (சங் 23:3)
- துக்கத்தால் துவண்டுபோகாதபடி திடப்படுத்த வேண்டும் (சங் 31:9)
7. திடனற்றவர்களை (1தெச 5:14)
- திடனற்றவர்களைத் திடப்படுத்த வேண்டும் (1தெச 5:14)
- ஒருவரும் அசைக்கப்படாதபடிக்கு திடப்படுத்த வேண்டும் (1தெச 3:2)
- பயப்படுகிறவர்களை திடப்படுத்த வேண்டும் (அப் 27:25)
தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான் (1சாமு 30:6)
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று
சொன்னார்கள் (அப் 14:22)
