ஆதியிலே
தங்களால் நேசிக்கப்பட்டவர்கள், மரணத்திலிருந்து திரும்புவதை காண்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? ஆனால் இந்தப் பிரதியின் " அவனவன் தன் தன் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவான்" என்பதை வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுரைகள் காட்டுகிறது.
உயிர்த்தெழுதலைக்குறித்து ஒருவரும் திகிலடைய வேண்டாம். மாறாக அது அனைவருக்கும் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கும் காரியத்தை மையப்படுத்தும் படி "உயிர்த்தெழுதலின் பொருள் நம்பிக்கையே" என்ற கட்டுரைக் காட்டுகிறது. பாவங்களுக்காகச் செலுத்தப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் ஈடுபலியே உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்குரிய அடிப்படை என்ற வசனங்களிலிருந்து, "ஒரே மனுஷனாலே வந்த உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பு வசனங்களிலிருந்து காட்டுகிறது கிறிஸ்து அனைவருக்காக ஒருமுறை மரித்ததால். அனைவரும் நன்மையடைய வேண்டாமோ''
இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு முன் எழுப்பப்பட்ட மரித்துப்போன ஆறு நபர்களுக்கும். வாக்களிக்கப்பட்ட உயிர்த்தெழுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை, 'கல்வாரிக்கு முன் நடந்த தற்காலிகமான உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பு வேறுபடுத்திக் காட்டுகிறது. நித்தியமான முதல் உயிர்த்தெழுதல். "இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் உலகில் முதன்மையான இடத்தைச் சம்பாதித்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலின்மேல் அனைவரின் நித்திய ஜீவனுக்குரிய நம்பிக்கைகளும் சார்ந்திருக்கிறது.
பரலோக உயிர்த்தெழுதலைப் பெறக்கூடிய விசுவாசமுள்ள கிறிஸ்துவின் மணவாட்டி, ஜீவனையும் அழியாமையையும்
பெறக்கூடிய கால அவகாசத்தையும், வரிசை முறைகளையும், வசனங்களின் இசைவோடு, "விசுவாசமுள்ள சபையின் உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பு விவாதிக்கிறது.
தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு. அதற்குப் பின் தடுமாறினாலும். காலபோக்கில் எல்லாவற்றையும் மேற்கொள்ளக்கூடியவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை, "திரள் கூட்டத்தாரின் உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பு சிந்திக்கிறது. அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்காக சில நயவஞ்சகமான ஆபத்துகளை இந்தத் தலைப்பு ஆராய்கிறது. கிறிஸ்துவுக்கு முன்னிருந்த ஆபிரகாம் மற்றும் விசுவாசமுள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் முதன்மை இவர்கள் முதலில்
"முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்" என்ற தலைப்பு காட்டுகிறது. இந்தப் பூமியின்மேல் உயிர்ப்பிக்கப்படுவார்கள். இவர்களே உயிர்த்தெழுதலுக்கு முன்னோடியான மாதிரிகளாக இருப்பார்கள்.
முழு உலகமும் மரண நித்திரையிலிருந்து எழுப்பப்படுவதை. "முழு உலகத்தின் உயிர்த்தெழுதன்" என்ற தலைப்பு காண்கிறது. பரலோக அழைப்புக்குரியவர்கள் முன்னதாகவே பூரணப்பட்டிருந்தாலும், இந்த உலகத்தார் நீதியைக் கற்றுக் கொள்வதற்கு அதற்குப் பின் எழுப்பப்படுவார்கள். உண்மையில் நாத்திகர் களையும் இந்த உயிர்த் தெழுதல் நம்ப வைக்கும். இப்போது மற்றவர்களுக்கு நன்மை செய்வதற் குக் கற்றுக்கொள்வதற்கான காலத்தை ஜனங்கள் பெற்றிருப்ப தைக் காட்டிலும். இனி வரக்கூடிய யுகத்தில் அதிகமான வருடங்களைப் பெற்றிருப்பார்கள்.
உயிர்தெலுதலின் வேலையை நிறைவடையும் போது ஒவ்வொரு தனிநபரும் சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட கொஞ்ச காலத்தில் இறுதியாக ஒரு முறை சோதிக்கப்பட்டு பின் மணரமும், நரகமும் நித்தியமாக அழிக்கப்படும் என்பதை, "இறுதி பரிட்சைக்குப் பின்" என்ற தலைப்பு நமக்கு நினைப்பூட்டுகிறது. அதற்குப் பின் பரலோகங்களும், பூமியின் திரள்களும் நித்தியத்திற்கும் இசைந்து வாழும்.
உயிர்த்தெழுதலின் பொருள் நம்பிக்கை
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே,ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" (1 பேதுரு 1:3-4).
நம்முடைய அன்றாட வாழ்க்கையின் கவலைகளும். அழுத்தங்களும் குறையும்படியாக. பழைய எற்பாட்டு விகவாசிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக தேவனுடைய வார்த்தையைச்சார்ந்திருந்ததுபோல (அப்போஸ்தலர் 26:6-8) நம்முடைய நம்பிக்கைகளும் தேவனுடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களையே சார்ந்திருக்கிறது என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது (ரோமர் 15:4; 1பேதுரு 3:15), நிலையற்ற சூழ்நிலையோடு இப்போது காணப்படும் இப்படிப்பட்ட ஆர்வமூட்டும் நம்பிக்கை, நம்முடைய கடுமையான அனுபவங்களைப் பொறுமையோடு சகிப்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது ரோமர் 8:28; 1 தீமோத்தேயு 2:3-4). இதன் பலனாக, தேவனுடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களிலுள்ள நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைத் தணிப்பதற்கான கிறிஸ்தவர்களின் கருவிகளில் மதிப்பற்ற கருவிக்கும் அவநம்பிக்கைக்கும் எதிரான பலமும். ஆற்றல் வாய்ந்த செயல்முறையாக இருக்கிறது.
"நம்பிக்கையின் தேவனை" நாம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 15:13). ஆகவே வேதாகமத்தில் சுமார் 150 முறைகள் "நம்பிக்கை" என்ற வார்த்தை காணப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஒரு நபர் அல்லது உலகளாவிய அளவில். ஒரு சாதகமானக் காரியத்தை. நம்பிக்கையோடு எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியான ஒரு உணர்வை, நம்பிக்கை என்ற வார்த்தையின் பொருள் குறிப்பிடுகிறது. மனித சரீரத்தின் ஆரோக்கியத்தை. நீடித்திருக்கும்படி நம்பிக்கையின் வல்லமை மனித சிந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மனோதத்துவ மருத்துவர்கள் கண்டுபிடித்துள் அளிக்கிறது ளார்கள்.
எடுத்துகாட்டாக. நம்பிக்கை மட்டுமே எந்த விதமான மருந்துகளின் உதவியின்றி. உடல் நல ஆரோக்கியத்தின் நன்மையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்காக. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கப்பட்ட மருந்துகளின் பலன்களைத் தெளிவாக இருப்பதில்லை என்பதை நிரூபிக்கும்படியாகத் தங்களுடைய அன்றாட மருத்துவ சோதனைகளில் காலியான அதாவது மருந்தற்ற கேப்கயுல்ஸ்களை பயன்படுத்துகிறார்கள்.
உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
தேவன் தம்முடைய அநேக விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும்படியாக. அனைத்து மனுக் குலத்திற்கும் மரணத்திற்குப் பின் ஜீவனைக் கொடுப்பதற்கு ஒரு செயல்முறை தேவைப்பட்டது. உயிர்த்தெழுதலே இந்தச் செயல்முறை,
நடைமுறையில், இந்த உயிர்த்தெழுதலின் உபதேசம் மற்ற எல்லா மதங்களிலிருந்து கிறிஸ்துவத்தை வேறுபடுத்துகிறது. அழியா ஆத்துமா என்ற உபதேசத்திற்கு, உயிர்த்தெழுதலின் போதனை ஒவ்வாததாக காணப்படுகிறது. அழியா ஆத்துமாவைப்பற்றிய உபதேசம். இயற்கையாகவே நுட்பமான பெருமையின் உணர்வுகளைப் பெற்றுள்ளது (அதாவது அதுவே போதுமான இரட்சிப்பு). ஆகவே, "நீங்கள் சாகவே சாவதில்லை"( ஆதியாகமம் 3:4) என்ற தப்பறையான நம்பிக்கையை - பொய்யுக்கும். பெருமைக்கும் தந்தையாகிய நம்முடைய எதிராளியான சாத்தான். துவக்கி வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆத்துமா அழியாதது என்றால், கிறிஸ்து மரித்திருக்க வேண்டிய காரணமென்ன? மனுஷனுடைய நம்பிக்கை மரணத்தின் நிஜத்தை மறுப்பதில் அல்ல, மாறாக, வாக்களிக்கப்பட்ட மரித்தோரின் உயிர்த்தெழுதலின்
மேல் உள்ளது.
இயேசுவின் மரணம் அனைவரின் உயிர்த்தெழுதலுக்கான உபாயத்தை அளிக்கிறது
விழுந்துபோன ஆதாமின் சந்ததியாகிய நாம் அனைவரும் பாவத்தில் கர்ப்பம் தரித்து துர்குணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறோம் (சங்கீதம் 51:5). ஆகவே தேவனுடைய பரிபூரண நீதியின் அடிப்படையில் நம்முடைய பாவநிலைக்கு மரணமே நியாயமான தீர்ப்பாக உள்ளது (ஆதியாகமம் 2:17; எசேக்கியேல் 18:4; ரோமர் 6:23), மேலும் மரணம். கல்லறையில் ஒன்றுமில்லா நிலையைக்கொண்டிருப் பதினால் (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:10), பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து இரட்சிக்கப்பட்டு. விடுவிக்கப்படுவதற்கு, நம்முடைய மீட்பும். உயிர்த்தெழுதலுமே நாம் கொண்டிருக்கும் ஒரே நம்பிக்கையாக உள்ளது (அப்போஸ்தலர் 4:12). இயேசுவின் வழியாக தந்தையாகிய ஆதாமை (அவருடைய சந்ததியையும்) மீட்பதற்கு குறைபாடற்ற திட்டத்தை நம்முடைய பிதா வடிவமைத்திருப்பதை அறிந்தவர்களாக. நித்தமும் நாம் மகிழ்க்கிறோம். அந்தத் திட்டம் தேவனுடைய பரிபூரணமான நீதியை திருப்திப்படுத்தி, முழு மனுக்குலமும் உயிர்த்தெழுதலைப் பெறுவதற்கு அனுமதிக்கிறது. மீண்டும் தேவனோடு ஒப்புரவாகி, நித்தியமாக ஜீவனைப் பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது (ஓசியா 13:14; ரோமர் 5:18-19).
"உயிர்த்தெழுதல்" என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் மட்டுமே காணப்பட்டாலும், பழைய ஏற்பாட்டின் காலங்களில் இந்தக் கருத்து ஒரு பொதுவான நம்பிக்கையாக இருந்தது. இயேவுக்கு முன் வந்த சிலர் இனி வரக்கூடிய உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை உடையவர்களாக இருந்ததே இதற்கான ஆதாரம். இதில் சாமுயேல் (1சாமுயேல் 2:6); யோபு (19:25-26); தாவீது (சங்கீதம் 30:39; ஏசாயா (26:19); எசேக்கியேல் (16:55); தானியேல் (12:2); பரிசேயர்கள் (அப்போஸ்தலர் 23:8) மற்றும் ஆபிரகாமும் (எபிரெயர் 11:19) அடங்குவர். மரணம் ஒரு செயலற்ற நிலை என்றும் அதிலிருந்து அனைவரும் எழுந்து வருவார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும்படி வேதாகமத்தில் அடிக்கடி மரணத்தை "நித்திரைக்கு" ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. (எடுத்துக்காட்டாக 1 இராஜாக்கள் 2:10. தானியேல் 12:2; யோவான் 11:11, 14: அப்போஸ்தலர் 7:60; 24:15).
மனுக்குலத்தின் சீர்பொருந்தலுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் மிக அவசியம்
மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுதலே மனுக்குலத்தின் ஜீவனுக்கான ஒரே நம்பிக்கையாகும். இந்தப் பூமியின்மேல் பாவம் மற்றும் மரணத்தின் ஆளுகையை முடிவுகட்டி தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில். மனுக்குலத்தை மீண்டும் சீர்பொருத்துவதற்கு உயிர்த்தெழுதல் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. நம்முடைய தலைப்பு கூறுகிற படி மரித்த அனைவருக்கும். உயிர்த்தெழுதல் என்பது நம்பிக்கை என்று பொருள்படுகிறது.
இதற்கு நம்முடைய ஆண்டவர் விதிவிலக்கல்ல. தந்தையாகிய ஆதாமுக்கு. இயேசு இயேசு செலுத்தின ஈடுபலியானது. அவருடைய வருங்காலத்திற்கு உத்திரவாதம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக. 'இந்த உலகத்தின் ஜீவனுக்காக கொடுத்ததினால், அவருடைய ஜீவனைக் அவருடைய ஜீவன் அணைந்துபோனது (யோவான் 6:51, 11:25, 14:6), தேவனுடைய நீதியைத் திருப்திப்படுத்தும்படியாக தந்தையாகிய ஆதாமை மீட்பதற்கு இயேசு சரி நிகர் சமான விலையானார் (ஒரு பரிபூரண மனுஷனுக்காக ஒரு பரிபூரண மனுஷன்). இப்படியாக. ஆதாமின் மரணநிலையை இயேசு மூன்று பங்கெடுத்தார். நாட்கள்
இயேசுவின் உயிர்த்தெழுதல். மூன்று முக்கியமான கோட்பாடுகளை உறுதிப்படுத்துகிறது: (1) இயேசுவின் 31/2 வருட ஊழியத்தையும். அதில் சிலுவையில் ஆதாமுக்காக அவர் கொடுத்த ஈடுபலியையும் தேவன் அங்கீகரித்தார் (1கொரிந்தியர் 15:21-22). (2) திவ்விய சுபாவத்திற்கு உயிர்த்தெழுப்பக்கூடிய தேவ வல்லமை வெளிப்பட்டது (பிலிப்பியர் 2:8-10) மற்றும் (3) மரண சிறையிலிருந்து முழு மனுக்குலத்தையும் விடுவிப்பதற்கான உத்திரவாதம் கிடைத்தது (ஏசாயா 61:1; அப்போஸ்தலர் 17:31),
உயிர்த்தெழுதலின் நம்பிக்கைகள் அனைத்தும் சமமானது அல்ல
முழு மனுக்குலத்திற்கும். உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உறுதியளிக்கப்பட்டாலும். நம்முடைய ஆண்டவர் கூறுகிறபடி உயிர்த்தெழுதல்களின் அனுபவங்கள் அவர்களுக்குள் வேறுபடும். "அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்' (யோவான் 5:28-29), இந்தப் பிரதியில், தொடர்ந்து வரக்கூடிய கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டிருக்கிற படி, வெவ்வேறு வகுப்புக்குரிய தனிப்பட்ட நபர்கள், உயிர்த்தெழுதலின் அனுபவங்களைப் பெறுவதில் இயேசு, விசுவாசமுள்ள சபை, திரள் கூட்டம். மற்றும் முற்பிதாக்கள் அடங்குவார்கள்.
மீதியுள்ள உலகத்தின் மனுக்குலம் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டு, இந்தப் பூமியின்மேல் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும்போது நித்தியமாக ஜீவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படும். சாத்தானுடைய பாவம் மற்றும் மரணத்தின் ஆளுகையை மேற்கொள்ளும்படியாக (அதன் நாசகரமான பாதிப்புகளையும்) பூமியின் முழு மனுக்குலமும் மனரீதியாகவும். குணங்களிலும், சரீர ரீதியாகவும் பரிபூரண நிலையை அடைந்து தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்படுவதற்குப் பாத்திரமாக மாறும் போது முழு உணர்வோடு. இந்த உயிர்த்தொழுதலின் வேலைகள் முடிவடையும் (லூக்கா 20:35-36; 1கொரிந்தியர் 15:26).
விழுந்துபோன மனுக்குலத்தின் நிலையை இரட்சிப்பதற்கு உயிர்த்தெழுதலின்றி எந்த விதமான நன்மையான மாற்றங்களையும் ஏற்படுத்த முடியது. ஈடுபலி ஒரு வழி (அதாவது முதன்மையானது). ஆனால் உயிர்த்தெழுதல், பூமியின் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்கு ஒரு செயல்முறையாக இருக்கிறது. உயிர்த்தெழுதலை ஒரு அடிப்படையான கிறிஸ்துவ உபதேசமாக பவுல் கருதுகிறார் (எபிரெயர் 6:1-2). தேவனுடைய திட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நம்பிக்கைகளை, ஒரு சக்கரத்தின் வழியாக ஒப்பிட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். இந்த உயிர்த்தெழுதல் (சக்கரத்தில் சுற்றியுள்ள ரிம்) தேவனுடைய திட்டத்தை முன்னேறிச் செல்வதற்குத் தேவைப்படும் ஆதாரம் அல்லது ஊன்று கோலாகச் செயல்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது தனிப்பட்ட நபர்கள் இணைந்திருக்கும் வெவ்வேறு வகுப்பாருக்குத் தேவனுடைய விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களை (சக்கரத்தின் குறுக்குக் கம்பிகள்) அடிப்படையாகக்கொண்ட எல்லா நம்பிக்கைகளையும் உணரச்செய்திடும். நம்முடைய ஆண்டவரின் ஈடுபலி (சக்கிரத்தின் மையப் பகுதி) தேவ திட்டத்தின் மையமாகும். ஆயினும் சக்கரத்தில் சுற்றியுள்ள ரிம். மையம் மற்றும் குறுக்குக்கம்பிகள் இல்லாமல். அனைத்தும் பயனற்றதாக இருக்கம். ஆகவே உயிர்த்தெழுதல் இன்றி. இயேசுவின் ஈடுபலியின் மூலம் நிறைவேற்றப்பட்ட தேவனுடைய நீதி பயனற்றதாயிருக்கும். இதன் பலனாக மனிதனுடைய நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்காது.
உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் பங்கெடுத்தல்
தேவனற்றவர்களின் நம்பிக்கைகள் அழிந்து போவதற்கு எதிராக (யோபு 8:13; நீதிமொழிகள் 11:7; எபேசியர் 2:12). நம்முடைய நம்பிக்கைகள் தேவன் மேலும், அவருடைய வார்த்தைகளின் மேலும் உறுதியாக பொருத்தப்பட்டிருக்கிறது (ரோமர் 15:4; 1தீமோத்தேயு 6:17), நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இவைகள் நம்முடைய வாழ்க்கையில் ஆறுதலையும். உற்சாகத்தையும் அளித்து. அழுத்தங்களைக் குறைக்கிறது. நாம் அதிகமாக நேசித்தவர்களின் மரணம் குறிப்பாக, இரட்சகரோடுகூட நம்முடைய விசுவாசத்தில் பங்கெடுக்காதவர்களின் மரணத்தைப் பொறுத்தவரையில், நம்முடைய நம்பிக்கை நமக்குள் ஏற்படும் அதிர்ச்சியைக் குறைப்பது தெளிவாக காணப்படுகிறது. காலபோக்கில் மரணத்தை வேரோடு பிடுங்கி, குறித்த காலத்தில் முழு மனுக்குலமும் உயிர்த்தெழும் என்ற நம்முடைய பரம தந்தையின் திட்டங்களை நாம் அறிந்திருப்பது எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட ஆறுதலாக இருக்கிறது கொரிந்தியர் 15:26; 1தெசலோனிக்கேயர் 4:13). இறந்தவர்களுடைய உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும். தேவனை மகிமைப்படுத்தக்கூடிய சத்தியங்களை அறிவித்து. அவர்கள் அனைவரும் இராஜ்யத்தில் ஒன்றிணைக்கப்படுவதே நம்முடைய பெரிதான கிறிஸ்துவ சிறப்புரிமைகளில் மிகச் சிறப்பானதாகும். அவர்கள் வருத்தத்தினிமித்தம் உண்மையான சுவிசேஷத்தின் படும் நம்பிக்கையைப் பகிர்ந்துக் ( "இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்"லூக்கா 2:10) கொள்ளக்கூடிய காரியமானது. அவர்களுக்குத் தேவையான ஆறுதலையும். விடுதலையும் மட்டுமல்ல. மரணபரியந்தம் ஆண்டவரிடத்தில் விசுவாச முள்ளவர்களாக இருப்பதற்கான நம்முடைய முயற்சிகளை ஊக்குவிக்கும் (நீதிமொழிகள் 11:25; 1கொரிந்தியர் 9:16; பேதுரு 3:15) அனைவருக்காகவும் தேவன் வாக்களித் திருக்கிறார். உயிர்த்தெழுதலுக்கான நம்பிக்கையின் எதிர்பார்ப்புகளை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தி, நடமாடும் நிருபங்களாகத் தொடர்ந்து நாம் வாழக்கடவோம்.
