மரியாள் வணக்கம்
பாபிலோனியரும், எகிப்தியரும் வணங்கிவந்த வானராக்கினியின் ஸ்தானத்தை புனிதத்தாயாகிய மரியாளுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர். இயேசுவின் தாய் என்ற தலைப்பு மங்கி, “கடவுளின் தாய்" என்ற பட்டம் உயர்ந்தது. இதுவரையிலும் மரியாளைப் பற்றி எதுவும் சொல்லாதிருந்த சபையார் மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
கி.பி.431இல் எபேசு பட்டணத்தில் நடந்த திருச் சபை ஆலோசனைக் கூட்டத்தில் மரியாளை கடவுளின் தாய் (MOTHER OF GOD) என்று அழைக்கத் தீர்மா னிக்கப்பட்டது. இதுவரையிலும் இயேசுவை மட்டும் வணங்கி வந்தவர்கள், இதிலிருந்து மரியாளையும் வணங்க ஆரம்பித்தனர்.
வசனத்திற்கு முரண்பட்ட பழக்கவழக்கங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.
தி.பி.300
மரித்தவர்களுக்காக ஜெபம்
கி.பி.300
சிலுவை அடையாளத்தை முக்கியப்படுத்துதல். தம்மூஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்தாகிய 'T' என்ற எழுத்து பாபிலோனிய மந்திரங்களின் அடையாள குறியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே சற்று மாற்றி சிலுவை வடிவமாக்கி, சிலுவை அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
மரித்த பரிசுத்தவான்களையும், தேவ தூதர்களையும் வணங்க ஆரம்பித்தல்.
பி.394
தூப ஆராதனையோடு கூடிய பூஜை முறை அறிமுகம் செய்யப்பட்டது.
கி.பி.431
மரியாள் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி.500
சபை அங்கத்தினரின் ஆடையைவிட சபைக் குருவானவரின் உடை மாற்றியமைக்கப்பட்டது.
கி.பி.593
உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய உபதேசம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி.600
ஆராதனைகள் லத்தீன் மொழிகளில்
நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்டது. மரியாளிடம் வேண்டிக்கொள்ளுதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மரித்த பரிசுத்தவான்களிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது.
வெளி.2:1-7 வசனங்களில் எபேசு சபைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி, எபேசு சபை ஆதி அன்பை இழந்த சபையாக கூறப்பட்டுள்ளது. எபே.2:8-11 சிமிர்னா சபைக்குரிய செய்தி, இது உபத்திரவ கால சபைக்கு அடையாளம்.
வெளி.2:12-17 வசனங்களில் பெர்கமு சபைக்குரிய செய்தி. 'பெர்கமு' என்றால் 'திருமணம்' என்று பொருள். திருச்சபை உலகத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட உறவுக்கு அடையாளமான சபை. இந்த சபையில் நிக்கோலாய் மதப் போதனை களும், பிலேயாமின் போதனைகளும் ஊடுருவி இருந்தன. இதே நிலையில்தான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப்பின் சபைக்குள் பாபிலோனிய பழக்கவழக்கங்கள், ஆராதனை முறைகள் நுழைந்தன.
கி.பி.650
மரியாளைக் கனப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டன. பல பண்டிகைகள்
இந்தப் பத்திரிக்கையை வாசிக்கும் கத்தோலிக்க நண்பர்களுக்கு எழுத விரும்புவது, நீங்கள் மரியாளை மதிப்பது போலவே நாங்களும் மரியாளை புனிதமான தாயாக மதிக்கின்றோம். உலகில் பிறந்த எந்தப் பெண்ணையும்விட மரியாள் இயேசுவை பெற்றெடுத்ததின்மூலம் சிறப்பான சிலாக்கிய முடையவள் என நம்புகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்து ஒருவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவர ஒருவரே ஆராதனைக்குரியவர் சத்தியம் என்பது
மரியாளைப் பற்றிய பல்வேறு போதனைகள் தோன்றின.
1. மரியாள் தேவனைவிட அதிக மதிப்பிற்குரியவள்.
2. பிதா, குமாரனைவிட மரியாளை வணங்குவோர் அதிகம்.
3. தேவன் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய பட்டங்கள் மரியாளுக்கு கொடுக்கப் படுதல்.
4.தேவனைக்காட்டிலும் மரியாள் அதிக அன்பும், இரக்கமும் உள்ளவள்.
5.பாவிகளை இரட்சிக்க மற்றவர்களைவிட மரியாளே அதிக சக்தி வாய்ந்தவள்.
6.மரியாள்மூலம் மட்டுமே பாவமன்னிப்பு.
7.மரியாளே அதிக உதவியளிப்பதால் அவளிடமே
ஜெபிப்பது நல்லது.
8. தேவனுடைய அனுக்கிரகம் கிடைக்க வழி செய் பவள் மரியாளே.
9. பிதாவும், குமாரனும் மரியாளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
10.உண்மையுள்ளோருக்கெல்லாம் தாய் மரியாள்.
11. தேவனுடைய தாய் மரியாள்.
12.இயேசுவைப் போல மரியாளும் பாவமற்றவள். ஜென்ம பாவமற்றவள்.
13. எப்போதுமே கன்னியாக வாழ்ந்தவள்.
14. மரியாள் மரணத்தை ருசிபாராமல் பரலோகத் திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள். சரீரத்திலும் ஆவியிலும் அவள் பரலோகத்தில் பிரசன்னமாகி இருக்கிறாள்.
இவை ஒவ்வொன்றிற்கான விளக்கங்களை தனித்தனியாக பார்ப்போம்.
1. மரியாள் தேவனைவிட அதிக மதிப்பிற்குரியவள்
தேவன் ஒருவர் இருக்கிறார். ஆனால் மரியாளே சர்வவல்லமையுடையவள், பாதுகாக்கிறவள்: இயேசு பாலகனே, மரியாளே பெரிய தாய். இயேசு மரியாளின் அதிகாரத்திற்கு உட்பட்டவரே!
பொனவென்துரா (BONAVENTURA) என்பவர் போப் சிக்ஸ்டஸ் IV என்பவரால் கி.பி.1482இல் வேத எழுத்தாளர் என்ற அங்கீகாரம் பெற்றவர். இவர் வேதத்திலுள்ள சங்கீத புத்தகத்தில் ஒவ்வொரு சங்கீதத்தின் ஆரம்பத்திலும் மரியாளே, தாயே என்று சேர்த்துக் கொண்டார். தேவனை நோக்கி ஏறெடுக்கும் சங்கீதமாக இராமல் மரியாளை நோக்கி வேண்டிக்கொள்ளும் சங்கீதமாக மாற்றினார். இது அப்போது இருந்த போப் சிக்ஸ்டஸ் V என்பவரால் அங்கிகரிக்கப்பட்டு ரோமில் வெளியிடப்பட்டது.
2. பிதா, குமாரனைவிட மரியாளை வணங்குவோர் அதிகம்
ரோமிலுள்ள 433 ஆலயங்கள், சிற்றாலயங்களிலே 5 ஆலயங்கள் திருத்துவ தேவனுக்கும், 21 ஆலயங்கள் இயேசுவுக்கும், 2 ஆலயங்கள் பரிசுத்த ஆவிக்கும். 121 ஆலயங்கள் மரியாளுக்கும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. இதிலிருந்து மரியாளை வணங்குவோர் அதிகம் என்பது மிக தெளிவாகத் தெரிகிறது.
ஏஞ்சலஸ் (THE ANGELUS), மரி அன்னை ஜெபம் (THE AVE MARIA), ரோசரி (ROSARY) ஆகிய ஜெபங் களை ஒருவர் தவறாமல் ஏறெடுத்தால், அதில் 212 ஜெபங்கள் மரியாளை நோக்கியும், 23 மட்டுமே தேவனை நோக்கியும் ஏறெடுக்கப்படுவது தெரியும்.
மரியாளுக்கென்று ஒரு மாதமே ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் மரியாளை நோக்கி சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. எப்போதுமே பெரிய மேரி, பாலகனான இயேக என்ற தோற்றத் தையே எங்கும் காணலாம்.
3.தேவன் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டிய பட்டங்கள் மரியாளுக்கும் கொடுக்கப்படுகிறது.
'ஆசீர்வதிக்கப்பட்ட மரியாளின் லித்தானியா' என்ற தலைப்பிலுள்ள ஜெப புத்தகத்திலிருந்து
எடுக்கப்பட்ட மரியாளின் பட்டங்கள்:
தேவனின் பரிசுத்த தாயே! பரிசுத்த மரியே! கன்னிகைகளின் பரிசுத்த கன்னிகையே! கிறிஸ்துவின் தாயே! தெய்வீக கிருபையின் தாயே! மீறுதலற்ற தாயே! குற்றமற்ற தாயே! சிருஷ்டிகரின் தாயே! எங்கள் இரட்சகரின் தாயே! வல்லமையுள்ள கன்னிமரியே! நேர்மையின் கண்ணாடியே! ஞானத்தின் உறை விடமே! தாவீதின் கோட்டையே! பொன்னா லான வீடே! விடிவெள்ளி நட்சத்திரமே! பரலோகத்தின் வாசலே! பாவிகளின் புகலி டமே! தேற்றரவாளியே! தூதர்களின் ராணியே! தீர்க்கதரிசிகளின் ராணியே! அப்போஸ்தலரின் ராணியே! பாவமற்ற பரிசுத்த ராணியே! சமாதானத்தின் ராணியே!
இதுபோன்ற 46 பட்டங்கள் மரியாளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பல ஜெப புத்தகங்களிலும் இதைக் காணலாம்.
4.தேவனைக்காட்டிலும் மரியாள் அன்பும், இரக்கமும் உள்ளவள்
SALUT, O MERED DE MISERICORDE என்ற ஜெப புத்தகத்தில், பக்கம் 10,11ல் இவ்விதம் எழுதப்பட்டுள்ளது.
குமாரனிடம் நீதியுண்டு. தாயிடம் அன்பு மட்டுமே உண்டு. தேவன் நம்மீது அன்புகூர்ந்து நமக்காக மரித்தார். நமது இரட்சகர் உள்ளத்தில் நீதியே உண்டு. ஆனால் பரிசுத்த கன்னி மரியாளிடம் இரக்கம் மட்டுமே உண்டு.
குமாரன் ஒரு பாவியை தண்டிக்க நினைத்தார். மரியாள் உடனே அவரை தடுத்து நிறுத்தினாள். அந்த பாவிக்கு இரக்கம் காட்டு மகனே என்று தாய் சொன்னாள். கர்த்தர், தாயைப் பார்த்து அம்மா உங்கள் வேண்டுகோள் எதையும் மறுக்கமுடியாது. நரகம் மனந்திரும்பக் கூடுமானால் நீங்கள் நரகத் திற்கும் மன்னிப்பு வாங்கிக் கொடுத்து விடுவீர்கள் என்றார். குமாரனுக்கும் நமக்கும் நடுவில் நிற்பது பரிசுத்த கன்னியே!
5. பாவிகளை இரட்சிக்க மற்றவர்களைவிட மரியாளே அதிக சக்தி வாய்ந்தவள்.
LE PETIT CATECHISME OF QUEBEC PROVINCE என்ற புத்தகத்தில் 76ஆம் பக்கத்தில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:
"ஏன் நாம் அடிக்கடி கன்னி மரியாளிடம் வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில் நம்மைப் பாதுகாக்க வல்லவராய் இருப்பது பரலோகத்திலுள்ள கன்னி மரியாளே!"
Salut o Mered De Misericorde என்ற புத்தகத்தில் பக்கம் 5, மற்றும் 8ல்...
"மரியே, நீ பாதுகாக்கிறவன் கெட்டுப்போகவே முடியாது. மரியாள் பரிந்துபேசியிராவிட்டால் எத்தனையோபேர் அழிந்தே போயிருப்பார்கள்".
THE GLORIES OF MARY (மரியின் மகிமைகள்) என்ற புத்தகத்தின் முதல் பாகம் 8ஆம் அதிகாரம் 227ஆம் பக்கம் மரியாள் நமது இரட்சிப்பு' என்ற தலைப்பில் இவ்விதம் எழுதப்பட்டுள்ளது.
சகோதரர் லியோ ஒரு சிவப்பு ஒளியைப் பார்த்தார். அதன் உச்சியில் இயேசு நின்றார். இன்னொரு பக்கம் ஒரு வெள்ளை ஏணி இருந்தது. அதன் உச்சியில் அவரின் புனித அன்னை மரியாள் நின்றாள். பலர் சிவப்பு ஏணியில் ஏற முயற்சித்து வழுக்கி விழுந்தனர். பின்பு வெள்ளை ஏணியில் ஏற முயற்சித்து எளிதாய் ஏறினர். ஏனெனில் பரிசுத்த தாய் தன் கையை நீட்டி அவர்களுக்கு உதவி செய்தாள். எனவே அவர்கள் எளிதாக பரலோகம் போய் சேர்ந்தனர். இரட்சிப்பு மரியாளுக்கு உரியதே. பரலோக ராஜ்யம் மரியாளுக்கு உரியதே.
6. மரியாள்மூலம் மட்டுமே பாவமன்னிப்பு
பரிசுத்த அல்போன்ஸஸ் லிகோரி எழுதிய "மரியின் மகிமைகள்' என்ற புத்தகத்தின் முதல் பாகம் 168ம் பக்கத்தில்... “மரியாளின் பரிந்துபேசுதல் இல்லாமல் தேவன் நம்மை இரட்சிக்க மாட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. "ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியின் சேவையை அலட்சியப்படுத்துகிறவன் தன் பாவங்களில் சாவான்" (பக்.24). "தாயே உன்னை வேண்டிக்கொள்ளாதவன் பரலோகம் வந்து சேரமாட்டான். அப்படிப்பட்டவனுக்கு இரட்சிப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை" (பக்.225). "இயேசுவில் வாஞ்சையுள்ளோர் மரியாளிடம் செல்ல வேண்டும்" (பக்.165).
மரியாளை சேவிப்பவன், மரியாள் யாருக்காக பரிந்துபேசுகிறாளோ அவன் ஏற்கெனவே பரலோகம் போய்விட்டான் என்று உறுதியாக நம்பலாம் (பக்.224). மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே உண்மையுள்ள மத்தியஸ்தராயிருப்பவர் கிறிஸ்து. ஆனால் தேவ மகிமையிலிருக்கும் அவரிடம் செல்ல மனிதர் பயப்படுகின்றனர். எனவே மத்தியஸ்தராகிய அவரிடம் செல்ல இன்னொரு மத்தியஸ்தர் தேவை. மரியாளைவிட சிறந்த மத்தியஸ்தர் யார்? (பக்.195). லி சீக்ரெட் டி மேரி (LE SECRET DE MARIE) என்ற புத்தகத்தில் 8ம் பரிசுத்த அகஸ்டின் இவ்விதம் கூறினதாக எழுதப்பட்டுள்ளது.
தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருமே மரியாளின் கர்ப்பத்தில் இருக்கிறார்கள். மரியாள் அவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கும் நாளில்தான் அவர்கள் வெளிப்படுகிறார்கள். குழந்தையின் பெலவீனம் அறிந்து தாய் உணவு கொடுப்பதுபோல, தெரிந்து கொள்ளப்பட்ட யாவரும் தங்கள் ஆவிக்குரிய பெலனுக்குத் தேவையான உணவை மரியாளிடம் இருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர்.
7. மரியாளே அதிக உதவியளிப்பதால் அவளிடமே ஜெபிப்பது நல்லது
இயேசு மனிதராய் அவதரித்து உலகிலிருந்த நாட்களில் அவர் மரியாளைக் குறித்து சொன்னவை மேலே கூறப்பட்டுள்ளவைகளை மறுக்கின்றன.
அ) இயேசுவும் அவருடைய தாயாகிய மரியாளும் யோசேப்பும் பண்டிகைக்கு எருசலேமுக்குப் போய் விட்டு திரும்பிவந்தபோது இயேசு எருசலேமில் இருந்துவிட்டார். இது மரியாளுக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. ஒருநாள் பயணம் செய்த பின்பு தான் இயேசுவை தேடினர். பயணம் செய்யும் தங்கள் சொந்தக்காரர்கள், நண்பர்களுடன் இயேசு இருப்பார் என எண்ணினர். பின்பு அவரைத் தேடி எருசலேமுக்குச் சென்றனர். மூன்று நாளைக்குப் பின்புதான் அவர் தேவாலயத்திலிருப்பதைக் கண்டு மரியாள் அவரை நோக்கி: மகனே ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது, இயேசு அவளை நோக்கி "ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக் கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்று கேட்டார். அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை" (லூக்.2:42-50).
ஆ) கானாவூர் திருமண வீட்டிலும் மரியாள் இயேசுவிடம் அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை என்று கூறினபோது இயேசு "ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். மரியாள் வேலைக்காரரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்" (யோவான் 2:4,5).
இ) மரியாளும் இயேசுவின் சகோதரரும் இயேசுவிடம் பேசவேண்டுமென்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன் உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்முடன் பேச காத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது இயேசு "என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மத்.12:46-50).
ஈ) இயேசு ஓரிடத்தில் போதித்துக் கொண்டி என்ற ருந்தபோது ஒரு பெண் சத்தமிட்டு உம்மைப் பெற்றெடுத்த தாய் பாக்கியமுள்ளவள் பொருளில் புகழ்ந்து பேசினபோது இயேசு “அப்படி யானாலும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கிய வான்கள் என்றார்" (லூக்.11:27,28). மேற்கூறிய நான்கு இடங்களிலும் இயேசு தன் தாயாகிய மரியாளுக்கு தனிச்சலுகை ஒன்றையும் காட்டவில்லை. மரியாள் மற்றவர்களைவிட தனிச்சிறப்புப் பெற்ற வளாக தன்னை உயர்த்தவும் இல்லை.
8. தேவனுடைய அனுக்கிரகம் கிடைக்க வழி செய்பவள் மரியாளே
THE SCAPULAR OF THE SACRED HEART என்ற புத்தகத்தின் 37ஆம் பக்கத்தில் "மரியாளின் மூலமாகவே உலக இரட்சிப்பு ஆரம்பமானது. எனவே அவள் மூலமாகவே அது நிறைவு பெற வேண்டும். மரியாள் மூலமாகவே தெய்வீக பொக்கிஷசாலை திறக்கப் படுகிறது. யாருக்கு எவ்வளவு அனுக்கிரகம் அருளப்பட வேண்டுமென்று அவள் விரும்புகிறாளோ அவ்வளவு கொடுக்கப்படும். நம்பிக்கையற்றோருக்கு அவளே நம்பிக்கை. தேவன் தன்னுடைய பொக்கிஷங்கள் யாவற்றிற்கும் அதிகாரியாக மரியாளையே தெரிந்து கொண்டுள்ளார். அவள் கரத்தின்மூலமாகவே சகல வரங்களும் கொடுக்கப்படுகின்றன. அவள் விரும்பு கிறவர்களுக்கு அளவற்ற ஆசீர்வாதங்களை தாராள மாய்க் கொடுப்பாள்".
9. பிதாவும் குமாரனும் மரியாளுக்கு கீழ்ப்படிவார்கள்
மரியாளின் மகிமை’ (GLORIES OF MARY) என்ற புத்தகத்தில் 154, 155ம் பக்கங்களில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:
"மரியாளின் கட்டளைக்கு எல்லாம் கீழ்ப்படிகின் றன. தேவனே கீழ்ப்படிகிறார். மரியாளே வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எனவே உன்னால் கூடாதது ஒன்று மில்லை".
10.உண்மையுள்ளோருக்கெல்லாம் தாய் மரியாள்
கத்தோலிக்க சரித்திரம் (Catholic History) என்னும் புத்தகத்தில் 212ஆம் பக்கத்தில் இவ்விதம் எழுதப் பட்டுள்ளது:
இயேசு சிலுவையில் தொங்கினபோது இயேசுவின் தாயும், அப்போஸ்தலனாகிய யோவானும் அங்கே நின்றார்கள். இயேசு தன் தாயைப் பார்த்து ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார். பின்பு யோவானைப் பார்த்து அதோ உன் தாய் என்றார். அதுமுதல் யோவான் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னித் தாயை தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் மூலம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிள்ளையாக மரியாளிடம் கொடுக்கப்பட்டுள்ளான்.
இயற்கை உலகில் ஒரு குழந்தைக்குத் இருப்பதுபோல, கிருபை தகப்பனும் தாயும் உலகத்தில் சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் தகப்பனாகவும், மரியாள் தாயாகவும் இருக்க வேண்டும். தாயாகிய மரியாளிடம் தன் பாசத்தைக் காட்டாதவன் பிசாசின் பிள்ளையாகவும் வஞ்சிக்கிற வனுமாயிருக்கிறான்.
11. தேவனுடைய தாய் மரியாள்
உலகில் மனிதனாய் அவதரித்த இயேசுவின் தாய் மரியாள் என்ற நிலைக்கும், தேவனுடைய தாய் மரியாள் என்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இயேசுகிறிஸ்து கன்னியாயிருந்த வயிற்றில் பிறந்தார். எனவே மரியாளின் உலகில் பிறந்த இயேகவுக்கு மரியாள் தாய் என்பது உண்மை.
உலகம் உண்டாவதற்கு முன்பே கிறிஸ்து இருந்தார். முழு உலகமும் அவரால் உண்டாக்கப் பட்டது. ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பாகவே கிறிஸ்து இருந்தார் (யோ.1:1-3; 8:58). ஆனால் மரியாள் அப்போது இல்லை. மரியாள் தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு பரிசுத்தத்தாய். அவள் தேவனுடைய சிருஷ்டி. அப்படிப்பட்ட சிருஷ்டி எப்படி சிருஷ்டி கர்த்தராகிய தேவனுக்கு தாயாக முடியும்? தேவனுக்கு தாய் என்ற ஒருவர் இல்லை.
12.தேவனைப்போல மரியாளும் பாவமற்றவள்; ஜெனம பாவமற்றவள்
இந்த உபதேசத்திற்குப் பெயர் IMMACULATE CONCEPTION 'பாவமற்ற கருத்தரிப்பு' அல்லது 'கறையற்ற கருவமைவு': கி.பி.1854ல் உலகிலிருந்த எல்லா ரோமன் கத்தோலிக்க பிஷப்புகளும் சபைத் தலைவர்களும் ரோமில் கூடினர். இந்த மாநாட்டில் தேவனுடைய தாய் மரியாள் என்றும், அவள் மரித்து உயிர்த்தாள், பரமேறிப் போனாள். அந்த பாவமற்ற பரிசுத்த கன்னித்தாயை யாவரும் தொழுதுகொள்ள வேண்டும் என்றும், மரியாள் பாவமற்ற நிலையில் கருவில் உருவாகி பிறந்தாள் என்றும் பிரகடனப் படுத்தப்பட்டது. (கத்தோலிக்க வேதாகம சரித்திரம் பக்.307).
அதே ஆண்டு (கி.பி.1854) டிசம்பர் 8ஆம் தேதி இந்த உபதேசம் ரோமன் கத்தோலிக்க சபையின் அடிப்படை உபதேசங்களில் ஒன்றாய் அதிகாரப் பூர்வமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை பயஸ் IX என்ற போப் 'எஸ் கத்திட்ரா' (ES CATHEDRA) மூலம் பிரகடனப்படுத்தினார். (எஸ் சுத்திட்ரா என்பது போப் தனக்குரிய சிம்மாசன அறையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிக்கை. இப்படி வெளியிடும் அறிக்கை, பிரகடனம், உபதேசம் வேத வசனத்திற்கு இணையானதாக ரோமன் கத்தோலிக்க சபையால் ஏற்றுக்கொள்ளப்படும்).
ரோமன் கத்தோலிக்க உபதேசங்களடங்கிய வினா-விடைப் பாடத்தில் வரும் 50வது கேள்வி பதில், கேள்வி: ஜென்ம பாவமில்லாமல் இந்த உலகில்
யாராவது வாழ்ந்ததுண்டா?
பதில்: தன்னுடைய தெய்வீக குமாரன்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமேரி ஜென்மப் பாவம் இல்லாமல் வாழ்ந்தார்கள். இந்த சிலாக்கியத்திற்குப் பெயர் 'கறையற்ற கருவமைவு'. கருத்தரிப்பு'. 'பாவமற்ற
13. மரியாள் எப்போதுமே கள்ளியாக வாழ்ந்தவள்
மரியாள் ஒருபோதும் தன் கணவனை அறியாத
கன்னியாகவே வாழ்ந்ததாக ரோமன் கத்தோலிக்க சபை நம்புகிறது. எனவே மரியாளை எப்போதுமே 'கன்னி மரியாள்' அல்லது 'ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி' என்றே அழைக்கின்றனர். ஆனால் வசனம் கூறுவது என்ன?
அ. யோசேப்பின் மனைவி என்றே வேதம் மரியாளை அழைக்கிறது (மத்.1:20). அதாவது முறைப்படி திருமணம் செய்த மனைவி.
ஆ. அவள் (மரியாள்) தன் முதற்பேறான குமாரனைப்
பெறுமளவும் அவளை அறியாதிருந்து... (மத்.1:25).
எனவே இயேசுவைப் பெற்றபின் அவன் மரியாளை அறிந்தான் என்பது தெளிவு. கன்னியாக வாழ்வதுதான் புனிதம். திருமணமாகி கணவனுடன் வாழ்வது பரிசுத்தக்குறைவு என்று எங்கும் வேதம் கூறவில்லை. குழந்தைகளைப் பெற்று நல்ல தாயாக வாழ்வது பரிசுத்த வாழ்வே.
இ. முதற்பேறான குமாரன் இயேசு. இதன் பொருள் 'இயேசு முதல் மகன்'. அப்படியானால் மரியாள் பல பிள்ளைகளைப் பெற்றாள் என்பது வெளிப்படை. ஒரே பிள்ளை மட்டுமே இருந்திருந்தால் முதற் பிள்ளை என்று கூறப்பட்டிருக்காது. "இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே. சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்கு சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாம் நம்மிடத்தில் இருக்கி றார்கள் அல்லவா?" (மத்.13:55,56; மாற்கு 6:3).
இந்த வசனங்களில்மூலம் யோசேப்பும், மரியாளும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தனர் என்றும், அவர்களுக்கு பல பிள்ளைகள் இருந்தார்கள் என்றும் அறிகிறோம்.
ஈ. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு (கலா. 1:19) என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது மரியாளிடம் பிறந்த சகோதரர்களில் ஒருவன் யாக்கோபு. ரோமன் கத்தோலிக்க சபை இவர்களெல்லாம் மரியாளுக்குப் பிறக்கவில்லை. மரியாளின் இனத்தார் என்று கூறுகிறது. ஆனால் வேதம் தெளிவாக மரியாளின் பிள்ளைகள் என்று கூறுகிறது.
14.மரியாளின் சரீரம் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அவள் சரீரத்திலும் ஆவியிலும் பரலோகத்தில் பிரசன்னமாயிருக்கிறாள்.
மரியாள் பரமேறினாள் (Doctrine of the assump tion) என்ற உபதேசம் கி.பி.1950 நவம்பர் 1ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது.
மரியாள் மரித்தபோது உலகமெங்கும் சிதறப் பட்டிருந்த அப்போஸ்தலர்கள் அற்புதமாக எருசலேமிற்கு வந்து மரியாளை சுற்றி நின்றனர். கெத்சமனேயிலிருந்த கல்லறையில் அவள் அடக்கம் பண்ணப்பட்ட பின்பு அவர்கள் தாமதித்து வந்து சேர்ந்தனர். தோமாவும் மற்ற அப்போஸ்தலரும் மறுநாள் மரியாளின் கல்லறைக்குச் சென்றபோது, கல்லறை காலியாக இருந்தது. மரியாளின் சடலம் இருந்த இடத்தில் நறுமணமுள்ள பூக்கள் கிடந்தன. அவர்கள் அந்த இடத்தில் ஜெபிப்பதற்காக முழங்கால்படியிட்டு வானத்தைப் பார்த்தபோது மரியாளின் சடலம் வானத்திலே ஒரு மேகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டதை கண்டனர் கொள்கை. என்பது
இதற்கு முன்பாகவே கி.பி.1863ல் ஸ்பெயின் நாட்டிலிருந்த இசபெல்லா II என்ற ராணி, மரியாள் பரமேறிப் போனாள் என்ற உபதேசத்தை கொண்டு வந்தாள். இதை ஆமோதித்து 2600 சிபாரிசுக் கடிதங்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டன. 80 லட்சம் ரோமன் கத்தோலிக்க சபை மக்களும், ஆயிரக் கணக்கான குருக்களும், சபைத்தலைவர்களும் இதை வலியுறுத்தி கையெழுத்திட்டு சிபாரிசு அனுப்பினர்.
கி.பி.1950 நவம்பர் 1ஆம் தேதி 74 வயதான பயஸ் Xl1 என்ற போப் 6000 வார்த்தைகளடங்கிய போப்பின் பிரகடனத்தை வாசித்தார். மரியாளின் சடலம் அழிவைக் காணாமல் பரமேறிப் போயிற்று என்ற உபதேசம் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையை வாசியுங்கள்:
"தேவனின் தாயாகிய பரிசுத்த மரியாள், எப்போதுமே கன்னியாக இருந்தவள். இந்த உலக வாழ்க்கை முடிந்தபோது தன் சரீரத்திலும் ஆவியிலும் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டாள் என்ற கொள்கை தேவனால் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்று அறிக்கை செய்கி றோம், பிரகடனப்படுத்துகிறோம்".
இந்த அறிக்கை வாசிக்கப்பட்டபோது வத்திகானில் பேதுருவின் சதுக்கத்தில் சுமார் 6 லட்சம் பேர் கூடியிருந்தனர். இதற்குப் பின்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி மரியாள் பரமேறின திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மரியாளைக்குறித்து மேலே கூறப்பட்டுள்ள 14 உபதேசங்களும் பரிகத்த வேதாகம ஆதாரமற்றவை. எந்த ஒரு உபதேசத்தையும் உறுதிப்படுத்த, அதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது என்று ஆராய வேண்டும். மேலே கூறப்பட்டுள்ளவை மனிதனின் கற்பனையே.
