சபைத் தலைவர் ஆண்டவராக உயர்த்தப்படல்
பாபிலோனிய போப்புகளின் உண்மையான மகா சபை (GRAND ORIGINAL COUNCIL OF PONTIFFS) என்ற அமைப்பு ஒன்று இருந்தது. இதன் தலைவர் "The SOVEREIGN PONTIFF OF BABYLON" என்று மதிக்கப்பட்டார். அதாவது "கடவுளின் தெய்வீகத் தன்மை வாய்ந்த போப் என்றும் இவர் தவறு செய்ய இயலாதவர்" (INCAPABLE OF ERROR) என்றும் மதிக்கப் பட்டார். உயர் வட்டார குருக்கள்முதல் இவரை தொழுது கொண்டார்கள்.
இந்த பாபிலோனிய பழக்கவழக்கங்களே திருச்சபைக்குள்ளும் நுழைந்தது. ஆரம்ப நாட்களில் ஆதி சபையினர் வீடுகளில் கூடி ஆராதித்தனர். பாடல்களை பாடி, ஜெபித்து, சாட்சி கூறி, சங்கீதம் வாசித்து ஆராதனை செய்தனர். ஒவ்வொரு வீட்டுக் குழுக்களும் தங்கள் காரியங்களை தாங்களே பார்த்துக் கொண்டனர். இந்த வீட்டு சபைகளிலே மூப்பர்கள் பொறுப்பாளர்களாக இருந்தனர். இப்படி பல வீட்டு சபைகளை மேற்பார்வை செய்தவர்களை பிஷப் என்று அழைத்தனர்.
'பிஷப்' என்பதன் பொருள் 'மேற்பார்வையாளர்`. பல நாடுகளிலும் சபை வேகமாய் பரவினது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ரோம சாம்ராஜ்யத்தி லிருந்த 120 மில்லியன் (12 கோடி) மக்களில் பாதிப் பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என ஒரு குறிப்பு கூறுசிறது.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனாக என்ற ரோமப் பேரரசன் மாறியபின் சபையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பேரரசன் திருச்சபையின் தலைவனாகவும் செயல்பட ஆரம்பித்தான். சபைக்கு பல சட்ட திட்டங்களை இயற்றினான். சபைகளுக்குள் ஒரு அமைப்பு உண்டாக ஆரம்பித்தது. இந்த சபை அமைப்புகள் தங்களை 'கத்தோலிக்க சபை' என்று அழைத்தனர். 'கத்தோலிக்' என்றால் 'அகில உலசும் என்று பொருள். அதாவது நாடுகளிலும் 'பல பரவியுள்ள சபை' என்று பொருள்.
இந்த அமைப்பில் இணையாத பல சபைகளும் சுயாதீனமாய் இயங்கி வந்தன. சபையில் அங்கத்தி னராக வேண்டுமானால் சபை ஏற்படுத்தியுள்ள விசுவாசப் பிரமாணங்களுக்கு உட்பட வேண்டும் என்ற விதி உருவானது. குருமார்களுக்கும், சபை அங்கத்தினர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டாக்கப்பட்டது. குருமார்கள் ஆசாரியர் (PRIESTS) என்று அழைக்கப்படலாயினர்.
சபையின் மேற்பார்வையாளர்களாயிருந்த
பிஷப்மார் சபைகளை ஆளுகை செய்ய ஆரம்பித் தனர். பிஷப்களை கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. பெரிய பட்டணங்களிலிருந்த பிஷப்கள், மெட்ரோபாலிடன்ஸ் (கூட்டு தலைமைக் குழு தலைவர் அல்லது மேட்டிரானியர்) என்று அழைக்கப்பட்டனர். பின்பு பேட்ரியார்க்ஸ் (கோத்திரப் பிதா அல்லது குடி முதல்வன்) என்று அழைக்கப் பட்டனர்.
இப்படிப்பட்ட தலைவர்கள் எருசலேம், அந்தி யோகியா. அலெக்ஸாண்டிரியா. கான்ஸ்டாண்டி நோபிள், ரோம் ஆகிய பட்டணங்களிலிருந்தனர். இந்த ஐந்து தலைவர்களுக்குள்ளும் தங்களில் யார் அதிக அதிகாரமுடையவர் என்ற போட்டி எழுந்தது. கான்ஸ்டாண்டி நோபிள், ரோம் ஆகிய இரு பட்டண பிஷப்களுக்குள் அதிக போட்டி ஏற்பட்டது.
உலகை ஆண்டுவந்த ரோமின் அதிகாரம் உயர்ந்ததாயிருந்தது. ரோமபுரி சபையை உருவாக்கி யவர்கள் அப்போஸ்தலராகிய பேதுரு, பவுல் என மதிப்பாக கூறப்பட்டது. ரோமின் முதல் பிஷப் அப்போஸ்தலனாகிய பேதுரு. எனவே அவர் வழி வந்த ரோம் சபைத் தலைவரே எல்லா சபைகளுக்கும் தலைவர் என்று உறுதி செய்யப்பட்டது. நீ பேதுருவா யிருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத்.16:18,19). நீ என் ஆடுகளை மேய்ப்பா யாக (யோ.21:15-17). இந்த இரண்டு வசனங்களும் பேதுருவின் உயர்ந்த அதிகாரத்திற்கு ஆதரமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
4ம் 5ம் நூற்றாண்டுகளில் போப் என்ற பதம் எந்த பிஷப்பிற்கும் உரியதாயிருந்தது. பின்பு ரோமாபுரியிலிருந்த சபையின் தலைவருக்கு மட்டுமே உரியதாயிற்று. 'போப்' என்ற வார்த்தையின் பொருள் 'அப்பா'. ஒன்றாம் லியோ (கி.பி.444-461) என்ற ரோமாபுரி சபைத் தலைவர் தனக்கு உயரிய அதிகாரம் உண்டு என்று கூறி மற்ற பிஷப்களுக்கு கட்டளைகளை கொடுக்க ஆரம்பித்தார். இவர் பல இடங்களில் 'முதல் போப்' என்று அழைக்கப் பட்டதுண்டு.
சுமார் கி.பி.600ல் முதலாம் கிரிகரி (GREGORY 1, 'The GREAT') என்பவர் முதல் அகில உலக பிஷப்பா கவும், போப்பாகவும் முடிசூட்டப்பட்டார். இவர் சிலை வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம், கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பமும் இரசமும் ஜெபித்தவுடன் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமா கவும் மாறிவிடுகிறது என்ற கொள்கை (TRANSUB STANTIATION) ஆகிய உபதேசங்களைக் கொண்டு வந்தார். இவர் ஒரு துறவி. துறவறத்தை அதிகம் வலியுறுத்தினார்.
போப்பின் அதிகாரம் படிப்படியாய் உயர்ந்தது. போப்பின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடந்த அரசர்களும் உண்டு. எதிர்த்தவர்களும் உண்டு. கி.பி.1073-1216 வரை ஐரோப்பிய நாடுகளில் போப்கள் சர்வ அதிகாரமுடையவர்களாய் உயர்ந்து நின்றனர்.
ஹில்டபிராண்ட் என்ற போப்பைப்போல் அதிகாரத்துடனிருந்த போப் வேறு யாருமில்லை. இவர் அரசர்கள் போப்பை நியமிப்பதை நிறுத்தி, தலைமை பிஷப்புகள் சங்கம் (College of Cardinals) போப்பை தெரிந்துகொள்ளும் முறையை கொண்டு வந்தார். குருமார் துறவறம் கொள்ளவேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். போப்பே உலகத்தையும் சபையையும் ஆளவேண்டும் என்று கூறினார். போப் ஹில்டபிராண்ட் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் கி.பி.1085ல் மரித்தார்.
இவருக்குப்பின் குறிப்பிடத்தக்க போப் மூன்றாம் இன்னசென்ட் (INNOCENT III). இவர் ஆட்சி செய்த காலம் கி.பி.1198-1216. 37 வயதில் போப் பட்டத்திற்கு வந்து முழு உலகையும் ஆளுகை செய்வது போப்பின் அதிகாரம் என்று பிரகடனப் படுத்தினார்.
கி.பி.1303ல் 8ம் போனிபேஸ் (BONIFACE VIII) என்ற போப் பிரஞ்சு தேச அரசனாயிருந்த பிலிப்பை சபையைவிட்டுத் தள்ளும் கட்டளையைப் பிறப்பித் தார். பிலிப் தன் படையை அனுப்பி போப்பை சிறை பிடித்து, மூன்று நாள் சிறையிலடைத்ததிலிருந்து போப்பின் அதிகாரம் குறைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து 70 ஆண்டுகள் பிரஞ்சு தேச அரசர்களால் போப்மார்கள் நியமிக்கப்பட்டனர். இந்த காலக் கட்டத்தில் போப்பின் இருப்பிடம் ரோமிலிருந்து பிரஞ்சு தேச பட்டணமான அவிக்னனுக்கு (AVIGNON) மாற்றப்பட்டது.
கி.பி.1378ல் மறுபடியும் போப்பின் இருப்பிடம் ரோமுக்கு மாற்றப்பட்டது. ஆனால் பிரஞ்சு தேச தலைமை பிஷப்கள் இன்னொரு போப்பை தேர்ந்தெடுத்தனர். 30 ஆண்டுகள் இரண்டு இடங்களில் இரண்டு போப்கள் ஆட்சி செய்தனர். இந்தப் பிரச்சனையை தவிர்க்க இந்த இரண்டு போப்கள் அல்லாமல் பொதுவான ஒரு போப்பை தெரிந்து கொண்டனர். ஆனால் முந்திய இரண்டு போப்புகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தனர். எனவே சிறிதுகாலம் மூன்று போப்புகள் ஒன்றுபோல் பதவியிலிருந்தனர்.
கி.பி.1414ல் கான்ஸ்டன்ஸ் என்ற பட்டணத்தில் சபையின் ஆலோசனை சங்கம் கூடியது. பதவியிலி ருந்த அத்தனை போப்புகளையும் புறம்பாக்கி '5ம் மார்டின்' என்ற புது போப்பை தெரிந்தெடுத்தனர். கி.பி.1378லிருந்து போப்மார் ரோமில் தொடர்ந்து தங்கி வருகின்றனர். கி.பி.1870ல் இத்தாலி அரசன் ரோமையும் போப்பின் ஆளுகையிலிருந்த நாடு களையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான்.
கி.பி.1929 பிப்ரவரி 11ம் தேதி இத்தாலி அரசுக்கும் வத்திகானுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத் தானது. இத்தாலி பிரதம மந்திரி முசோலினியும், கார்டினல் கேஸ்பாரியும் கையெழுத்திட்டனர். இவ்விதமாய் வத்திகான் என்ற சிறுநகரம் சுய ஆட்சியுடைய குறுநிலமாக மாறியது. சுமார் 109 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த சிறுநாடு தனிக்கொடி, தனி தபால் தலை, தனி இராணுவம் தனி குடியுரிமை ஆகிய சிறப்புகளையுடையதாய் விளங்குகிறது.
ரோமன் கத்தோலிக்க சபையின் குறிப்புகளிலிருந்து அறிவது:
"ரோமன் கத்தோலிக்க சபை உலகிலுள்ள எந்த ஆளுகைகளுக்கும் அடிமைப்பட்டதல்ல. போப் திருச் சபையின் தலைவராயிருப்பதால் அவரே முழு உலகத்திற்கும் ராஜாதிராஜா. மனுக்குலத்தின் தலைவர். போப்மூலமாய் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப் பட்டு ஆட்சி செய்கிறார். எனவே இப்போது உலகிலுள்ள இயேசுகிறிஸ்து போப் அவர்களே! போப் பேசினால் இயேசு பேசுகிறார் என்று பொருள். எனவே போப்பின் பேச்சை பரிசோதித்துப் பார்க்க யாருக்கும் உரிமையில்லை. கீழ்படிவதே நமது கடமை''. இதுவே அவர்கள் உறுதியாய் நம்புவது. எனவே போப் 'போப் ஆண்டவராய்' உயர்த்தப் பட்டார்.
மத்.16:16-20ல் இயேசு பேதுருவைக் குறித்து சொன்ன காரியங்களை அடிப்படையாகக் கொண்டதே தங்கள் கொள்கை எனக் கூறுகின்றனர்.
