9ம் அதிகாரம் (70 வார தீர்க்கதரிசனம்)

9ம் அதிகாரம் (70 வார தீர்க்கதரிசனம்)

7ம் அதிகார தரிசனம், பாபிலோன் ராஜா பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்தாலும், 8ம் அதிகாரதரிசனம், 3ம் வருஷத்திலும் தானியேலுக்கு வெளிப்பட்டது. இந்த 3ம் வருஷமே மேதிய பெர்சிய கையில், பாபிலோன் ராஜ்யம் போய்விட்டது (தானி.5:30,31). அகாஸ்வேருவின் மகன் தரியுதான் முதல்ராஜா. அவனது முதல் வருட ஆட்சிக்காலத்தில்தான் 9ம் அதிகார தரிசனம் நடந்தது. 8ம் அதிகார தரிசனத்திற்கும், 9ம் அதிகார தரிசனத்திற்கும், இடைவெளி ஒருவருடம் இருப்பதால், 8ம் அதிகார 2300 இராப்பகல் தரிசன விளக்கமோ அல்லது தொடர்ச்சியோ இந்த 9ம் அதிகாரதரிசனம் என எண்ண வேண்டியதில்லை.

இந்த வருஷத்தில் தானியேல். எரே.25:11: 29:30 போன்ற வசனங்களைப் படித்து எருசலேமின் பாழ்க்கடிப்பு 70 வருஷம் செல்லுமென்று உள்ளதே. அது எப்போது முடியும் என்பதை தியானிக்கிறான். இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து உபவாசத்தோடு. தேவனிடம் ஜெபிக்கிறான். அதற்கு கொடுக்கப்பட்டதுதான் 70 வார தீர்க்கதரிசனம்.

இஸ்ரேலர் நாடு கடத்தப்பட்டு பாபிலோனில் அடிமையாக்கப்பட்டது, கி.மு. 604லிலும், கி.மு 597லிலும், கி.மு. 586லிலும் மூன்று பிரிவாய் நடந்திருக்கிறது. எஸ்றா 11:3ன் படி யூதர்களுக்கு விடுதலை கி.மு. 535ல். ஆக. எரேமியா சொன்னபடியே இது 70வது வருடத்தில் நடந்தது (கி.மு. 604-கி.மு 535=70). இந்த விடுதலையாகும் வருஷத்தை அறியத்தான், உபவாசம்பண் ஆண்டவரிடம் நெருங்கி ஜெபித்தான்.

இந்த தானியேலின் ஜெபம். 1 ராஜா 8:33-36ன் சாலமோன் ஜெபத்தைப் போன்றது. ஜெபத்திலே

1. துதிக்கிறான் (adoration).

2. பாவ அறிக்கை செய்கிறான் (confession தானி.9:5-15).

3. வேண்டுதல் செய்கிறான் (petiction - தானி.9:16-19).

பொதுவாக ஜெபங்களெல்லாம். இப்படித்தான். confession, adoration, petiction, thanks giving என்று இருக்க வேண்டும். இயேசு கற்பித்த ஜெபமும் இப்படித்தானே! (மத்.6) இந்த ஜெபம் அவனுக்காக அல்ல: இஸ்ரேலருக்கான. இஸ்ரேலர் விடுதலைக்கான ஜெபம் (தானி.9:18,19). தானியேல் ஜெபம் பண்ணத் தொடங்கும்போதே. அவனுக்கு, அறிவை உணர்த்தி, சொல்ல வேண்டிய கட்டளை. பரலோகில். தேவனால் வெளிப்பட்டது அல்லேலூயா. அதை தானி. 8:16ல் கொண்டு வந்த அதே காபிரியேல் தூதன் கொண்டுவந்தான். இதுதான் 70 வாரம் சம்பந்தமான புதிய தரிசனம். இது இஸ்ரேல் ஜனத்தின் மேலும், பரிசுத்த நகரத்தின் மேலும் உள்ளது (தானி.9:24). இதிலுள்ள எந்த தீர்க்கதரிசன காரியங்களும் புதிய ஏற்பாட்டு சபைக்கு உட்பட்டது அல்ல.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி. பரிசுத்த நகரம் எடுப்பித்துக்கட்ட தானியேல் சிந்தித்தான். தேவனோ, அந்த விடுதலைக்கும் மேலே. அவர்களுக்கு இறுதிவரை சம்பவிப்பதை சொல்கிறார். பாபிலோனிய விடுதலை தான் ஏற்கெனவே எரேமியாமூலம் முடிவாக்கப்பட்டாயிற்றே! இப்போதோ, தானியேல் விரும்புகிறதற்கும் வேண்டிக் கொள்கிறதற்கும் மேலாக. எபே.3:20ன் படி சொல்லிக் கொடுக்க விழைகிறார்! அல்லேலூயா!

தரிசன விளக்கம்:

70வாரம் என்பது. "Seventy shabua” என்று உள்ளது. Shabua என்றால், 7 வருஷம், திரும்பக் கட்ட உத்தரவு, பெர்சிய அர்தசஸ்டா ராஜாவால் கி.மு.445ல் வெளியானது முதல் ஆரம்பிக்கிறது. (நெகே. 2: தானி.9:25). இதிலிருந்து. 69 shabua வாரம் × 7 வருஷம் = 483 வருஷத்தில், இயேசுவாகிய மேசியா வருவார். இந்த 483 வருஷத்திற்குப் பின் மேசியா சங்கரிக்கப்படுவார். (445-483=கி.பி.38ல். இது Lunar system. தற்கால solar systemபடி பார்த்தால், இன்னும் 4,5 வருடங்கள் குறையும்). மேசியா சங்கரிக்கப்படுவது தமக்காக அல்ல; இஸ்ரேலருக்காகவே! (தானி.9:26). அதன்பின்,தானியேல் காலத்தில் சீர்படுத்தப் போகிற எருசலேம் தேவாலயம் - ஏரோது ராஜாவால் புதுப்பித்துக் கட்டப்பட்ட தேவாலயம், கி.பி.70ல் அழிக்கப்படும் (தானி.9:26). இந்த தீர்க்கதரிசன விளக்கத்தில், இரண்டு புரபுக்கள் வருகிறார்கள். ஒன்று பிரபுவாகிய மேசியா (தானி.9:25); இன்னொன்று வரப்போகிற பிரபு (தானி.9:26). இவன்தான் அந்திகிறிஸ்து இவனது ஜனங்கள்தான் - ரோமப் பேரரசு தான் எருசலேமை அழிப்பார்கள் என்றால். வரப் போகிறவனும் அவர்களிலிருந்துதானே வருவான்! அதனால்தான் Revivel Rome kingdom என்று தானி. 9:27ல் கடைசி ஒருவாரம் - ஒரு shabua - பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் அந்திகிறிஸ்து செய்யும் காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. 70 வாரக்கணக்கை. ஒரே தொடர்ச்சியாய் கணக்கிட்டால், அது கி.பி.45ல் முடிகிறது. இந்த கி.பி.45க்குள் தானி.9:24ல் சொல்லப்பட்டவை எல்லாம் முடிந்தனவா? இல்லையே...! எப்படி?

1. மீறுதலை - அவபக்தியை, யாக்கோபை விட்டு அகற்றுவது இன்றுகூட முடியவில்லையே See ரோ.11:26.27),

2. பாவங்களைத் தொலைக்கிறது. இஸ்ரேலின் பாவத்தை seal பண்ணுவது, அதாவது, அதற்குக் காரணமான சாத்தானை கட்டிப்போடுவது இன்னும் நடக்கவில்லை (see வெளி.20:1-3).

3. மேசியாவை உதறித்தள்ளி விட்ட இஸ்ரேலின் அக்கிரமம் இன்னும் நிவர்த்திபண்ணப் படவில்லையே! (sec சக.13:1).

4. இஸ்ரேலின் நித்திய நீதி இன்னும் நிறைவேறவில்லையே! (see ஆபகூக். 2:14).

5. இஸ்ரேலின் தரிசனமும், தீர்க்கதரிசனமும் தேவையில்லாத நிலை வருவது, அவர்கள் தேசமாய், தேவனோடு இணைந்தால்தானே! இன்னும் அவர்கள் இணையவில்லையே!

6. "Most Holy place" - எருசலேம் ஆலயம் அபிஷேகம் பண்ணப்படுதல் இன்னும் நடக்கவில்லையே! கி.பி.70m அழிக்கப்பட்டது இன்னும் கட்டப்படவில்லையே! (லேவி.8:10; எசே 41: 0p3:16; 6:12.13).

இவைகளெல்லாம் எப்போது நடக்கும்? இவைகளும். எருசலேம அழிக்கப்படுவதும், கி.மு.445 முதல் தொடர்ச்சியாய் 70 வாரம் (அதாவது 490 வருஷம்) என்று வைத்தாலும், கி.பி.45க்குள் நடக்கவில்லையே! அப்படியானால், கடைசி ஒருவாரம் அதாவது 7வருஷங்கள், வரப்போகிற பிரபுவாகிய (தானி.9:26) அந்திகிறிஸ்துவின் கடைசி நாட்களோடு இவைகள் இணைந்தவை என்று அறியலாமல்லவா!

தீர்க்கதரிசன நிகழ்ச்சிகள் மற்றும் காலங்கள் எல்லாம் தொடர்ச்சியாய் வருவதில்லை என்பதை முந்தி அறியவேண்டும். Prophecies are all not continuous in all cases. see ஏசா.61:1-3 & லூக்.4:18-20: 1:31-33. எனவே 69வது வாரத்திற்கு பின்வரும் 70வது வார/சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, உருவாகும் அந்திகிறிஸ்துவின் காலமாகும். இப்படி உண்மையை சிந்தித்தால். இது கத்தோலிக்கரால் கொண்டு வரப்பட்ட "Gap Theory" என்று சிலர் கூறுகிறார்கள். (69+1=70), அப்படியானால். ஏசா.61:1-3லும். லூக்.1:31-33லும், முதல் வருகையும், இரண்டாம் வருகைபற்றியும் சொல்லியிருப்பதிலே. Gap இருக்கிறதே. அங்கும் Gap theory ஐ தேவன் அங்கீகரித்திருக்கிறாரா? சிந்தியுங்கள். திரித்துவம் என்ற கொள்கையும் கத்தோலிக்கரிடமிருந்து வந்தது என்று கூடச் சொல்லும் கூட்டத்தாரும் உண்டு. யார் எந்த தியரி கொண்டு வந்தாலும், அது சரி என்றால், ஏற்று கொள்வது தவறில்லையே! இப்படித்தான் எது எப்படியோ. இவைகள் நடக்கப்போவது. 70வது வாரம் என்று எடுக்காமல், அந்திகிறிஸ்துவின் 7 வருஷகாலம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே!

அந்த 7 வருஷம், இஸ்ரேலரோடு அந்திகிறிஸ்து உடன்படிக்கை பண்ணுவான் (தானி. 9:27). கடைசி 3 /வருஷத்தில் பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவான். இதுதான் 2 தெச.2:4ல் சொல்லப்பட்டதாகும். இந்தக் காலகட்டத்தில்தான். இஸ்ரேலருக்கான மகா உபத்திரவ காலமாகும் (எரே.30:7), அப்போதுதான். மேசியாவைப் பற்றிய விசுவாசம் அவர்களுக்கு வந்து, மனமாற்றம் வரும். 1,44,000 பேர், மீதமான இஸ்ரேலர் மற்றும் இயேசுவோடு நாம் ஒலிவலையில் இறங்கும்போது. இரட்சிக்கப்படும் இஸ்ரேலர் எனப் பெருகுவார்கள். ஆமென்! அல்லேலூயா! (ரோ.11:25-27: வெளி, 12:17: 7:3,4: 1:7:12:10). தானி. 9:27ல். அவர் என்று தமிழில் போட்டிருப்பதால். அது

அந்திகிறிஸ்துவை குறிக்கவில்லை; இயேசுவைத்தான் குறிக்கிறது என்று 7ம்நாள் சபையார் போன்றோர் சொல்கின்றனர். அப்படியானால். இயேசு ஒருவாரமாகவா இஸ்ரேலரோடு உடன்படிக்கை பண்ணினார்? அவர் வியாழன் இராவில் உடன்படிக்கை பண்ணினார் (மத்.2628); அதை வெள்ளி மாலை 3 மணிக்கு தன் இரத்தம் சிந்தி மரணத்தால் உறுதிப்படுத்தினார் (see எரே.31: : எபி.8:10). அதற்குப்பின் 3 /, வருஷம் இஸ்ரேலரோடு அவர் பூமியில் இல்லையே! 40ம் நாளே பரலோகம் போய்விட்டாரே! அப்படியானால் 3 வருடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவது அந்திகிறிஸ்துதானே! மேலும், பலியையும் காணிக்கையையும் மேசியாவிற்கு நிழலாக, இஸ்லேருக்கு போதித்து வழி நடத்திய நம் தேவனே. அதை அழிப்பாரா? அவைகளை ஒழிப்பவன். மேசியாவிற்கு விரோதியான பாழக்குகிற அருவருப்பாகிய (மத்.24:15) அந்திகிறிஸ்துதானே! தானிர்.7:25ஐ செய்பவன் இவன்தானே! மட்டுமல்ல... தானி.9:27ல் அவன் என்று ஏன் இல்லை? இது கேள்வி. KJV ஆங்கிலத்தில் He என்று capital letterல் போடாமல், he என்று small letterல் போட்டதால். அவன் என்றுதானே பொருள். தமிழில் மொழி பெயர்த்தவர்களின் பிழைதான் அது. எப்படி. he என்றாலே, அவர் என்றும் சொல்லலாம்: அவன் என்றும் சொல்லலாம். இதுதான் ஆங்கில முறை. மட்டுமல்ல... ஏசா.22:22ல் அவன் என்று மேசியாவுக்கு தவறுதலாய் மொழிபெயர்க்கப்படவில்லையா? (see வெளி.3:7). சிந்தியுங்கள்.

இதை வாசிக்கும் தேவ ஜனமே! 70ம் வாரம் அல்லது கடைசி ஒருவாரம் காலகட்டத்தில்தான். தானி.9:24. 27 போன்ற வசனங்கள் இஸ்ரேலருக்குள் நிறைவேறும். இந்த ஒருவாரத்தில் (7 வருஷம்) நாம் இல்லாதபடிக்கு. இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமாவோம்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.