தீரு அகழ்வாராய்ச்சி
ஏசாயா, எரேமியா போன்ற தீர்க்கதரிசிகளின் நூல்களில் வாக்குத்தத்த வசனங்களுக்கு மட்டும் கோடு போட்டு படிக்கிறவர் களாயிராமல் முழு நூலையும் படிக்கிற பழக்கமுள்ள கிறிஸ்தவர் களுக்கு 'தீரு' ஞாபகத்திற்கு வர மறுக்கும் நகரமல்ல.
காரணம் ஏசாயா, எரேமியா, எசேக்கியா போன்ற தீர்க்கர்கள் தீருவைப் பற்றி பத்தி பத்தியாக தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள்.
தீரு இடையில் தோன்றின காமா சோமா நகரமல்ல. கி.மு. 2750 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்ததாக அறியப் பட்டுள்ளது. இத்தனை பழம்பெரும் வரலாற்றுப் பின்னணி கொண்டதேயாயினும் தீரு, இன்று தன் பெயருக்கேற்ப 'தீர்ந்து போன' நகரமாகவே காணப்படுகிறது.
இதன் இருப்பிடம் பற்றி சொல்கிறேன்: சீதோன் பட்டணத்திற்கு தெற்கே சுமார் 22 மைல் தொலைவில் அமைந்திருந்த துறைமுகப்பட்டினம் தான் தீரு. எருசலேமிற்கு வடக்கே சுமார் 100 மைல் பயணம் செய்தால் தீருவை அடையலாம்.
இன்னும் கொஞ்சம் நல்ல அடையாளம் சொல்ல வேண்டுமானால் கர்மேல் மலையிலிருந்து வடக்கே 37 மைல் தொலைவிலிருந்தது என்று கூறலாம். தீருவின் விளிம்பில் மத்திய தரைக்கடல். தீருவின் கடற் கரையிலிருந்து சுமார் 1/2மீ கடலுக்குள் உள்ள ஒரு சிறிய தீவும் கூட 'தீரு' தான்.
இதன் வரலாறு வேதத்தில் யோசுவாவின் காலத்திலிருந்தே குறிக்கப்பட்டுள்ளது.
யோசுவா 11 கோத்திரத்தினருக்கும் கானான் பூமியை பங்கு வைக்கும்போது தீரு, ஆசேர் கோத்திரத்தாருக்கு பங்காகக் கொடுக் கப்பட்டது (யோசுவா 19: 29) என்றாலும் கூட ஆசேர் கோத்திரமும் தீருவில் ஆட்சி செய்யவில்லை. இது துவக்க கால முதலே பெனிக்கேயரின் புகழ் பெற்ற துறைமுகமாகவே இருந்து வந்தது.
D. டிலாஸர் என்பவரால் 1922 லேயே தீருவில் அகழ்வா ராய்ச்சி செய்யப்பட்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே 1903ல் G.A. குக் என்பவரால் தீரு ஆராயப்பட்டிருந்தது.
G.A. குக் சீதோனை மையமாகக் கொண்டு தன் ஆராய்ச்சியை செய்ததால் தீருவை அவர் விரிவாக ஆராயவில்லை. எனவே அவருடைய குறிப்புகளில் வெகு சொற்பமான செய்தி களே தீருவைப் பற்றி உள்ளன.
தீருவைப் பற்றிய விளக்கமான குறிப்புகளை டிலாசரிட மிருந்து தான் பெற முடியும்.
இவர்கள் இருவரையும் தவிர P.K. ஹிட்டி என்பவரும் 1957ல் தீருவை ஆராய்ந்தார்.
நார்-ஏல்- கெல்ப் என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இரண்டாம் இராம்சேஸின் கல்வெட்டுக் பாறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில் ‘தீருவில்' நடைபெற்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு நமக்குத் தரும் செய்தியின்படி தீரு ஒரு பெரிய வியாபாரத் துறைமுகமாக விளங்கியது. கடற்கரைக்கு கொஞ்சம் உள்ளடங்கிய பகுதியில் தீருவின் பிரதான சந்தைத் திடல் காணப்படுகிறது.
மிகவும் புகழ்பெற்ற சந்தை தீருவினுடையது. பல அந்நிய தேசத்துக் கப்பல்கள் தீருவில் நங்கூரமிடும். வியாபாரிகள் தங்கள் பொருட்களை தீருவின் சந்தையிலே விற்பார்கள். இந்தச் சந்தை யின் பிரதான வியாபாரம் அடிமை வியாபாரமே. நல்ல திடகாத்தி ரமான அடிமைகளை கிரேக்கர்கள் தீருவின் சந்தையில் தான் வாங்குவது வழக்கம்.
அடிமைகளை சந்தைக்குக் கொண்டு வர பல முரட்டுக் குழுக்கள் (கும்பல்கள் தீருவில் இருந்தன. இவர்கள் கொடிய ஆயுதங்களுடன் சுற்றியுள்ள இஸ்ரவேல் கிராமங்களுக்குள் கடந்து போய் கிராமங்களை சூறையாடி வாலிப வயது ஆண்களையும், பெண்களையும் விலங்கிட்டு தீருவின் வியாபாரிகளிடத்தில் விற்று விடுவார்கள். இவர்களை வியாபாரிகள் தீருவின் சந்தையில் வெளி நாட்டவர்க்கு விற்று விடுவார்கள்.
சனகெரீபின் கல்வெட்டுக் குறிப்பில், “அடிமை வியாபாரத் தால் பணம் செழித்திருந்த பெனிக்கேய நகரமான தீரு”என்ற பதம் காணப்படுகிறது.
இவையெல்லாம் சரித்திரக் குறிப்புகள். ஆனால் வேதமும் இதுபற்றி சொல்கிறது பாருங்கள்.
யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர் களுடைய எல்லைக்கு தூரமாக்கும்படிக்கு கிரேக்கரிடத்தில் விற்றுப் போட்டீர்கள் (யோவேல் 3 : 4-8) யோவேல் 3 : 4-7 வரையுள்ள இந்த பகுதி தீருவில் நடைபெற்ற அடிமை வாணிபத்தை விளக்குகிறது பாருங்கள்.
தீருவிலே ஒரு பிரமாண்டமான கோட்டை இருந்ததற்கான இடிபாடுகள் இன்றளவும் காணப்படுகின்றன. இந்தக் கோட்டை யின் சுவர் 11 அடி அகலம் உடையது. இதன் சில இடியுண்ட பகுதிகளில் ஒன்று அல்லது மூன்றடி உயர அளவுகளிலேயே சுவர்கள் நிற்கின்றன. சில இடத்தில் 17 மீட்டர் உயரமாக கொஞ்சம் சுவர்கள் நிற்கின்றன. உத்தேசமாக கோட்டையின் உயரம் 20 மீட்டர் என்று வைத்துக் கொண்டாலும் ஒன்றிலிருந்து மூன்றடி வரையுள்ள நிற்கும் சுவர்கள் போக மீதமிருந்த சுவர்களின் இடிபாடுகள் சுவரை ஒட்டியே தான் விழுந்து குவிந்து கிடந்திருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் அப்படியெதுவும் இடிபாடுகளோ, கோட்டையின் இடிந்த கற்களோ சுற்றிலும் காணப்படாதது ஆராய்ச்சியாளர் களுக்கு பெரிய வியப்பை தந்தது.
எதிரிகள் 'தீருவின்' கோட்டையை தகர்த்திருக்கலாம் சரி. ஆனால் இடிந்த கோட்டையின் மண்ணையும் கல்லையுமா அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள்? புரியவில்லை.
தீருவிலிருந்து அரைமைல் தள்ளி கடலுக்குள் தீருவின் தீவு இருக்கிறது. இதையும் ஆராய்ந்து விடலாம் என்றெண்ணி கடலுக்குள் இறங்கினால் கடலுக்கடியில் ஒரு சிதிலமடைந்த பெரிய பாலத்தைக் கண்டுபிடித்தனர். சுமார் 20 குதிரைகள் ஒன்றாய் பயணம் செய்யுமளவிற்கு பெரிய பாலம் அது. பாலத்தை கொஞ்சமாய் உடைத்துப் பார்த்தால் பாலம் முழுக்க இடிக்கப்பட்ட கோட்டை, மற்றும் வீடுகளின் கற்களாலேயே கட்டியிருக்கக் கண்டனர்.
நடந்தது என்ன தெரியுமா?
கி.மு. 585ல் பாபிலோனிய ராஜா நேபுகாத்நேச்சார் தீருவின் மேல் படையெடுத்து தீருவை 13 ஆண்டுகள் முற்றுகையிட்டார். பின்னர் Battering Rams என்ற கோட்டை தகர்க்கும் இயந்திரங்களை வைத்து சுவரை தகர்த்து உள்ளே நுழைந்து கட்டிடங்களை இடித்து, தீக்கிரையாக்கி விட்டு கிடைத்தவற்றை கொள்ளை யடித்துச் சென்றார்.
நேபுகாத்நேச்சாரின் படையெடுப்பால் தீருவின் ஜனங்கள் சிதறி தீவில் குடியேறினர்.
அங்கும் அவர்களுக்கு ஆபத்து வந்தது.
கி.மு. 332ல் அலெக்ஸாண்டர் தீருவின் தீவின் மேல் படை யெடுத்தார். படைகள் கடலைக் கடந்து செல்ல பாலம் வேண்டுமே!
நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட தீரு கோட்டையின் கற்களையும் வீடுகளின் பாறைகளையும் கடலுக்குள் போட்டு பாலம் அமைத்தார்.
எனவே பழைய தீருவின் இடிபாடுகளை ஆராய வேண்டு மானால் பாலத்தை தான் ஆராய வேண்டும். பாலத்தையும் ஆராய்ந்து சில வேலைப்பாடுள்ள கற்களையும், கல்லினால் செய்த தீருவின் விக்கிரகங்களையும் கூட கண்டுபிடித்துள்ளனர்.
1915 தீருவை ஆராய்ந்த W.B. பிளிம்மிங் என்பவர் சில கல்வெட்டுகளைக் கண்டெடுத்தார்.
இதுவும் தவிர 1931ல் E. அங்கர் (UNGER) என்பவர் பாபி லோனை ஆராய்ந்தபோது கிடைத்த கல்தேயக் கல்வெட்டுகளில் நேபுகாத்நேச்சாரின் பதின்மூன்று வருட முற்றுகை பற்றிய குறிப்பு கிடைத்துள்ளது.
வழக்கம் போலவே இக்கல்வெட்டு நேபுகாத்நேச்சாரை கொஞ்சம் மிகையாய் புகழ்ந்தாலும் தீருவின் அழிவை சரியாகவே பிரதிபலித்துள்ளது.
நீண்ட கால முற்றுகையினால் தீருவின் ஜனங்கள், கோட்டையின் ரகசிய வழிகளினூடே வெளியேறி தீவில் குடியேறி விட்டனர். நேபுகாத்நேச்சார் உள்ளே நுழைந்த போது பல வீடுகள் காலியாக இருந்தன. எஞ்சியிருந்தவர்கள் தீவுக்கு பாஸ்போர்ட் கிடைக்காத கொஞ்ச ஜனங்களே.
"தீருவின் அஸ்திபாரங்களை சிதைத்தோம். கோட்டையையும் வீடுகளையும் தரைமட்டமாக்கினோம். அரண்மனைக்கு தீ வைத்தோம். ஒரே நாளில் 7000 ஜனங்களை கொலை செய்ததோம்.
1300 அடிமைகளை விலங்கிட்டு கொண்டு வந்தோம். எங்கும் தீயும், புகையும், இரத்தமும், ஓலமும் மேன்மைமிக்க நேபுகாத்நேச்சாரின் வெற்றிக்கு சாட்சியிட்டன" என்கிறது பாபிலோனிய கல்வெட்டு.
சரி, இது பற்றி வேதம் கூறுவதையும் வாசித்தால் ஆச்சரிய மடைவீர்கள்.
நான் ராஜாதி ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவை நான் வடக்கேயிருந்து -- தீரு வுக்கு விரோதமாக வரப் பண்ணுவேன்.
உன் ஆஸ்தியை கொள்ளையிட்டு மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித் து உன் கல்லுகளையும் மரங்களையும் உன் மண் ணையும் கடலின் நடுவில் போட்டு விடுவார்கள் (6TG 26: 3-21)
கட்டிடங்களும், வீடுகளும் தரை மட்டமாக்கப்பட்டது.
அலெக்ஸாண்டர் தீருவின் கற்களையும், மரங்களையும், மண்ணையும் கடலில் போட்டார்.
இன்னும் ஆச்சரியம் எசேக்கியேல் சொன்ன தரிசனம்.தீர்க்க தரிசனம் சொன்னது கி.மு. 590ல். படையெடுப்பு நடந்தது கி.மு. 585ல்.தீரு முற்றிலும் அழிக்கப்பட்டது கி.மு. 572ல். ஆனால் கடலில் எறியப்பட்டதோ கி.மு. 332 ல் தான்.
எத்தனை காலங்களுக்கு முன்னாலேயே நடைபெறப் போவதை துல்லியமாய் கூறியிருக்கிறார், பாருங்கள்!
தீரு தீவின் தென்பாகத்தில் நிறையக் கட்டிடங்களையும், வீடுகளையும் கட்டி தீரியர் வாழ்ந்திருக்கின்றனர். இங்கு வாழ்ந்தவர் களெல்லாம் பெரிய செல்வந்தர்கள், வியாபாரிகள்.
இவ்விடம் கி.பி. 1291ல் பிடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டது. அதேசமயம் படையினர் தடுப்புச் சுவரையும் தகர்த்துவிட, கடல் தண்ணீரும் உள்ளே நுழைந்து தீரு ஒரு சுடுகாடு போல ஆயிற்று.
பிளம்மிங் இப்பகுதியை ஆராய்ந்த போது தீயில் கருகின கற்கள், மற்றும் சிற் சில ஆபரணங்களையும் கூட கண்டுபிடித்தார். சமுத்திரம் உள்ளே வராதபடி கட்டப்பட்ட அரண் தற்சமயம் சுமார் மூன்றடி உயரம் மட்டுமே நின்று கொண்டுள்ளது. கடல் தண்ணீர் இவற்றை சூழ்ந்துள்ளது.
சகரியா இதுபற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்.
தீரு தனக்கு அரணைக்கட்டி தூளைப் போல வெள்ளி யையும், வீதிகளின் சேற்றைப் போல பசும்பொன்னையும் சேர்த்து வைத்தது. இதோ ஆண்டவர் அதைத் தள்ளி விட்டு, சமுத்திரத்தில் அதன் பலத்தை முறித்துப் போடுவார். அது அக்கினிக்கு இரை யாகும் (சகரியா 9: 3,4)
சகரியாவின் இந்த தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்ட காலம் கி.மு. 487ல். நிறைவேறியது கி.பி. 1291ல். எத்தனை தீர்க்கமான தரிசனம் பாருங்கள்!
தீருவில் தற்சமயம் உருப்படியாயிருப்பது எஸ்ச்சூர் என்ற ஒரு சிற்றூர் தான். ஊர் என்றவுடன் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் என்று கற்பனை பண்ணி விடக்கூடாது. வெறுமனே சிறு சிறு குடிசைகள் நிறைந்த ஒரு மீனவக் கிராமம்.
இங்குள்ள யாவருமே மிக சாதாரணமான மீனவர்கள் தான். தீரு இயல்பாகவே கற்பாறைகள் நிறைந்த பூமி. எனவே தங்கள் வலைகள் முழுவதையும் இங்குள்ள பாறைகளில் காயப் போடுகிறார்கள். மட்டுமல்ல, மீன் வலைகளை செப்பனிடுவதிலும், பின்னுவதிலும் மிகவும் தேர்ந்தவர்கள் இவர்கள்.
எனவே, பிற பகுதியிலுள்ள மீனவர்கள் கூட தங்கள் வலை களை செப்பனிட இவர்களைத்தான் நாடுகிறார்கள்.
இப்போது நீங்கள் தீருவுக்கு போனால் மீன் வலையில் கால் சிக்காமல் போவது கடினம். இந்த மீனவர்களிடம், "இப்படி ஊர் முழுதும் மீன் வலையை விரித்து வைத்துள்ளீர்களே” என்று கேட்டால் "மீன் வலையை பழுதுபார்க்கவும், காயப் போடவும் தீரு மாதிரி வேறு இடம் உலகத்திலேயே இல்லை சார்." என்பார்கள்.
என்ன காரணம்?
உன்னை வெறும் பாறையாக்கி விடுவேன் நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாய் இருப்பாய் இனி கட்டப்படாய். (எசே 26 : 14) என்ற வசனம் நிறைவேறுவது தான் காரணம்.
கி.மு.800லிருந்து கி.மு. 480 வரை உரை உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமெல்லாம் அச்சுப் பிசகாமல் நிறைவேறியுள்ளதை இன்றைய அகழ்வாராய்வு நிரூபித்துள்ளது.
இவற்றையெல்லாம் டிலாசர், பிளம்மிங் போன்றவர் களிடம் சுட்டிக் காட்டினால், “அடடா, உண்மை தெரிய வேண்டு மானால் மண்ணைப் புரட்ட வேண்டியதில்லை. வேதத்தை திருப் பினாலே போதும் போலிருக்கிறதே!" என்கிறார்கள். மண்வெட்டி யையும் கடப்பாரையையும் ஆயாசத்துடன் வைத்தபடியே. வாஸ்தவம் தானே?
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்
