7. முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்

7. முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்

"இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும்; வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்" (எபிரெயர் 11:39-40).

இயேசுவின் மரணத்திற்கு முன் வாழ்ந்த விவாசமுள்ள யோகோவா தேவனுடைய பக்தர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, "பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் அல்லது முற்பிதாக்கள்" என்ற வார்த்தைகளை வேத மாணவர்கள் பயன் படுத்துகிறார்கள்.

இதில் முதல் நபரையும். கடைசி நபரையும் நாம் கண்டுபிடித்துவிடலாம். காயினால் கொலை செய்யப்பட்ட ஆபேல் முதல் நபரும். யோவான் ஸ்நானன் இறுதி நபருமாக இருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் இவர்களைப் பற்றி ஒருசுருக்கமானக் குறிப்பை எபிரேயர் 11-ஆம் அதிகாரத்தில் கொடுத்திருக்கிறார். வெகு சிலரைப் பற்றி அவர் வரிசைப்படுத்தியிருந்தாலும் அவருடைய சிந்தையில் இன்னும் பலர் இருந்ததாக 32-ஆம் வசனம் குறிப்பிடுகிறது.

"இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள் " (எபிரெயர் 11:39) என்று பவுல் கூறுகிறார். முற்பிதாக்களுக்கு என்ன வாக்களிக்கப்பட்டது? தெளிவான ஒரு குறிப்பை 13- 16 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். "இவர்களெல்லாரும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு. விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே, அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே"

முற்பிதாக்கள் இந்த உலகத்தில். "அந்நியரும் பரதேசிகளுமாக" வாழ்ந்தார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார். இப்படியாக அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த போது. தேவனால் கொடுக்கப்பட்ட முழு ஆசீர்வாதத்தைப் பெறவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் அதைக் காட்டிலும் பரம தேசத்தை விரும்பினார்கள் என்று நாம் வாசிக்கிறோம். அதவாது மற்றொரு நிலை அதவாது "பரலோக" தேசத்தை வாஞ்சித்தார்கள் என்று வாசிக்கிறோம். முற்பிதாக்களுக்கு பரலோக ஆசீர்வாதங்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நாம் எண்ணுகிறோம். ஏனெனில், பரலோக ஆசிர்வாதங்களைக்குறித்த காரியங்கள் இயேசு வரும் வரையில் வெளிப்படவில்லை (2 தீமோத்தேயு 1:10). ஆயினும் தேவன் பரலோகத்தில் வாசம் செய்கிறார் என்றும். அவர் தம்முடைய சித்தத்தை பரத்திலிருந்து செயல்படுத்துகிறார் என்பதை அவர்கள் நம்பினார்கள். இந்தத் தேவன் அவர்களைப் பராமரிப்பார் என்றும் நம்பினார்கள். மேலும் காலபோக்கில் அவர்கள் அப்படிப்பட்ட எதிர்காலத்தை விரும்பி வாஞ்சித்தார்கள்.

சுவிசேஷ யுக அறுவடையில் வாழக்கூடிய நமக்கு தெய்வீக திட்டத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆசிர்வாதங்களை, வந்திருக்கும் இயேசு நமக்குத் தந்திருக்கிறார். இரண்டு இரட்சிப்புகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். பரம அழைப்பு. பூமிக்குரிய இரட்சிப்பு. இதற்கு இசைவான முற்பிதாக்களின் நம்பிக்கைக்குறித்து எபிரெயர் 11:40-ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். "அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்."

முற்பிதாக்கள் தங்களுடைய கிரியைகளினால் நற்சாட்சிபெற்று, அதன் பரிசாக "பரிபூரணம் அடைவார்கள் என்று பவுல் இங்குக் குறிப்பிடுகிறார். ஆனால் சபை பூரணப்படுவதற்கு முன் இவர்கள் பூரணப்படுவதில்லை என்று வாசிக்கிறோம். எந்த விதத்தில் முற்பிதாக்கள் பூரணப்படுவார்கள்! தேவனுடைய இராஜ்யத்தில் அவர்கள் பரிபூரண ஜனங்களாக உயிர்த்தெழுப்பப்படுவார்கள். பரம அழைப்பு கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவே முற்பிதாக்கள் வாழ்ந்ததினிமித்தம் இவர்கள் சபை வகுப்பினரைப் போல அழியாமை பெறமாட்டார்கள். முற்பிதாக்களில் கடைசியான. யோவான் ஸ்நானன் மிகப் பெரியவராக இருந்தாலும் சபையின் மகிமையை இவர் பெற இயலாது. "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும். பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்! (மத்தேயு 11:11) என்று இயேசு கூறியிருக்கிறார்.

முற்பிதாக்கள் இந்த உலகத்தைக் காட்டிலும் மேன்மையான உயிர்த்தெழுதலைப் பரிசாகப் பெறுவார்கள். "ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும் படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்" (எபிரெயர் 11:35) என்று கூறப்படுகிறது.

"மேன்மையான உயிர்த்தெழுதல்." இந்த உலகத்தின் உயிர்த்தெழுதலைக் காட்டிலும் மேலானது. ஏனெனில், இந்த உலக மனுக்குலம் "பரிசுத்தமான பெரும் பாதையில்" பயணித்து. பரிபூரண நிலையைப் பெறுவதற்குக் கிரியைச் செய்ய வேண்டும் (ஏசாயா 35:8). மனித பரிபூரண நிலையில் உயிர்ப்பிக்கப்பட்ட முற்பிதாக்களின் பிரசன்னம் உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு ஆசிர்வாதமாக இருக்கும். கிறிஸ்துவின் இராஜ்யத்தில் கீழ்ப்படிதலோடு நடந்துகொண்டால். காலபோக்கில், இந்த உலகத்தார் அனைவரும் எதைப் பெற்றுகொள்வார்கள் என்று அறிந்துகொள்வார்கள்.

இதைக்குறித்த சித்திரம். எண்ணாகமம் 29:7-11-ஆம் வசனங்களில் காணப்படுகிறது. "இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்குப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்."

ஒப்புரவாகுதலின் நாளும், முற்பிதாக்களும்

ஏழாம் மாதம் பத்தாம் தேதி அன்று இந்தப் பலி செலத்தப்பட வேண்டும். என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்கால இஸ்ரயேலின் மிக முக்கியமான மூன்று சமய சடங்குகளில் ஒன்று - ஒப்புரவாகுதலின் நாள் - திஷ்ரீ மாதம் பத்தாம் தேதி. இந்த நாள் தேசிய அளவில் சுத்திகரிப்புக்குரிய நாளாகவும், புதுப்பிக்கக்கூடிய நாளாகவும் இருந்தது, இப்படியாக. முழு தேசத்தாரின் கவனத்தையும் பக்தியையும். இந்த நாளில் காரியங்கள் ஆட்கொண்டது, இதைத் தொடர்ந்து எண்ணாகமம் 29-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்தப் பலிகள். ஒப்புரவாகுதலின் நாளுக்குப் பின் செலுத்தப்படும் முதல் பலிகளாகும்.

ஒப்புரவாகுதலின் பலிகள் கிறிஸ்துவின் (அபிஷேகிக்கப்பட்டவர்) - தலையாகிய இயேசு மற்றும் அவருடைய சரீரமாகிய சபையின் பலியை அடையாளப்படுத்துகிறது. இந்தச் சுவிசேஜ் யுக பலிகள் முடிந்து, சபை தன்னுடைய ஓட்டத்தை நிறைவு செய்யும் போது. இந்தப் பூமியின்மேல் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்பார்க்கலாம். அப்போது முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் நடைபெறும்.

ஆகவே ஒப்புரவாகுதலின் பலிகளுக்குப் பின் உடனடியாக வரும் முதல் பலி, ஆயிரவருட யுகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அதில் முதல் பலி காளையுடையது. காளை பரிபூரண மனுஷனைக் குறிக்கும். இப்படியாக இந்தப் பரிபூரண மிருகத்தின் பலி, பரிபூரணமான, முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் என்பது தெளிவாகிறது. சபை நிறைவடைந்தப் பின், பரிபூரண மனுஷராக முதன் முதலில் இந்த முற்பிதாக்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் (சங்கீதம் 51:19 வசனத்தை ஒப்பிட்டுப்பார்க்கவும்).

காளையின் பலியோடு. ஆட்டுக்கடா மற்றும் ஏழு ஆட்டுக்குட்டிகளின் தகன பலிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்தெழும் முற்பிதாக்கள். ஆட்டுக்கடாவாகிய இயேசுவையும். ஏழு ஆட்டுக்குட்டிகள் வல்லமை மற்றும் அதிகாரத்தின் உண்மையான ஊற்றுமாகிய சபையையும் அறிந்துகொள்வார்கள் என்று நாம் கருதுகிறோம்.

தகன பலிகளோடுச் செலுத்தப்பட்ட போஜனபலி. நம்முடைய சிந்தைக்கு மற்றொரு கோணத்தைக் கொண்டுவருகிறது. காளைக்கு 3/ 10. ஆட்டு கடாவுக்கு 2/10. ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் 1/10. ஆக மொத்தத்திற்கு 12/10 அல்லது 12 ஓமர் (2.2 லிட்டர்) மா செலுத்தப்பட்டது. 12 என்ற எண் தேவனால் கொடுக்கப்பட்ட பரிபூரண ஆட்சியின் எண்ணாகும். கோத்திரங்கள், அப்போஸ்தர்கள். புதிய எருசலேமின் சுவர்களின் அளவுகள் (12 x 12) அனைத்திலும் 12 என்ற எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பூமியின்மேல் பிரபுக்களாக இருக்கும் முற்பிதாக்கள் தேவனுடைய பரிபூரணமான ஆட்சியை அடையாளப்படுத்துவார்கள்.

எண்ணாகமம் 29-ஆம் அதிகாரத்தில் கடைசியாக நாம் அறிந்துகொள்வது என்னவெனில், இதுவரையில் அவர்கள் செலுத்தின பலிகள், தகனபலிகள் ஆகும். ஆனால் 11-ஆம் வசனத்தில், ஒரு பாவநிவாரண பலி தேவைப்படுகிறது. இந்த முறை ஒரு ஆடு பலி செலுத்தப்படுகிறது. எதற்காக இது தேவைப்படுகிறது? இராஜ்யத்தில் முற்பிதாக்களைப் பொறுத்தவரையில், "அவர்கள் தவறுகள் செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படும் போது. உடனடியாக அவர்கள் யேகோவா தேவனின் பக்கம் திரும்ப வேண்டும். ஆதாமின் விஷயத்தில் நடந்தது போல, சிறிய அளவிலான திசை மாற்றங்கள் கூட மரணம் என்று பொருள்படும். கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில், புதிய உடன்படிக்கையின் ஏற்பாட்டின் கீழ் இருக்கும் சாதகமான சூழ்நிலையைக் காட்டிலும். இவர்களின் நிலை சற்றுக் குறைவாகவே இருக்கும். அவர்களின் சிறந்த ஆர்வத்திற்கு. இது ஒரு கிருபையான ஏற்பாடாகும். எந்த ஒரு தவறுகள் நேர்ந்தாலும் கிறிஸ்துவின் மத்தியஸ்த வேலை அவைகளை மூடி மரணத்தீர்ப்பின் கீழ் இருந்து தப்புவிக்கும்" (R5074).

அங்கு ஒரு ஆடு ஏன் பலிசெலுத்தப்பட வேண்டும்? அதற்குப் பதிலாக மற்றொரு காளை ஏன் பலி செலுத்தப்படவில்லை என்று ஒருவர் சிந்திக்கலாம். ஒப்புரவாகுதலின் நாளின் பலிகளை நாம் பார்க்கும் போது. காளையின் பலி "ஆரோனுக்கும் அவன் விட்டாருக்காவும்." ஆட்டின் பலி. ஜனங்களுக்காகவும் செலுத்தப்பட்டது. பாவநிவாரண பலியின் வரிசையைப்பார்க்கும் போது. இயேசுவின் இரத்தம் முதலாவது கவிசேஜ் யுகத்திலுள்ள சபைக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் கவிசேஷ யுகத்தில் இயேசு பெற்றிராத மனித பலவீனங்கள் மற்றும் தோல்விகளை முன்னதாகவே சபை அனுபவம் பெற்றிருப்பதினால் ஆயிரவருட ஆட்சியில் சபை இயேசுவோடு கூட செயல்படுவார்கள். ஆகவே இந்த உலகம் மற்றும் முற்பிதாக்களின் விஷயத்தில், குறிப்பாக சபை இவர்களுக்கு உதவிச் செய்வதை பலி செலுத்தப்படும் ஆடு அடையாளப்படுத்தக்கூடும்.

பிரபுக்கள்

பாவம் மற்றும் மரணத்தின் யுகத்தில் விசுவாசத்தைக் காத்துக்கொண்ட முற்பிதாக்கள். தேவனுடைய இராஜ்யத்தில். மேலும் சில சிறப்பான சிலாக்கியத்தைப் பெறுவார்கள். கண்ணுக்குப் புலப்படாத ஆவிக்குரிய ஆளுநர்களின் காணக்கூடிய பிரதிநிதிகளாக இந்த உலகத்தை ஆட்சி செய்வார்கள். அனைத்து வகுப்பினரும் ஆசீர்வதிக் கப்பட்டு, பரிசளிக்கப்படுவார்கள் என்று மோலோட்ட மான கண்ணோட்டத்தை 45-ஆம் சங்கீதத்தில் காணலாம். 1-9 வசனங்கள். இராஜாவாகிய இயேசுவையும்,10-14 வசனங்கள் சபையையும். 14- ஆம் வசனத்தின் பின் பகுதியும், 15-ஆம் வசனமும், திரள் கூட்டத்தாரை "கன்னிகைகளாகிய அவளுடைய தோழிகள்" என்று விவரிக்கப்படுகிறது.

சங்கீதம் 45:16-ஆம் வசனத்தில், முற்பிதாக்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை காணலாம். "உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாகவைப்பீர்." "பிரபுக்கள்" என்ற வார்த்தை இராஜ்யத்தில் அவர்களின் பங்கை தெளிவாக விவரிக்கிறது, ஒரு பிரபு இராஜரீகமான குடும்பத்தின் ஒரு அங்கம். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு இராஜரீகமான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகள் என்ன? இராஜ்யத்தில் அவர்கள் செய்யும் வேலைகளைக்குறித்து பல வசனப் பகுதிகள் நமக்குக் காட்டுகிறது.

ஏசாயா 1:25-27 "நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு உன் ஈயத்தை யெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதி பதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக் காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். யாக்கோபின் இக்கட்டு காலத்தில் தேவன் மாம்ச இஸ்ரயேலர்களைச் சுத்திகரிக்க துவங்குவார் என்பதை இந்த வசனத்தின் துவக்க பகுதி காட்டுகிறது (எரேமியா 30:7). இந்த உபத்திரவத்தை முற்பிதாக்கள் முடிவுக்குக்கொண்டு வருவார்கள். இந்த வசனத்தில் சொல்லப்படும் ஆலோசகர்கள் இவர்களே. தேவனுடைய இராஜ்யத்தில் பிரபுக்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பங்கு சிறப்பாகப் பொருந்துகிறது. "அதற்குப் பின் நீ இஸ்ரயேல்) நீதிபுரம் என்று அழைக்கப்படுவாய்."

'இந்த மீட்பை எடுத்துக்காட்டும் மற்றொரு வசனப்பகுதி, மீகா 5:5- "இவரே சமாதான காரணர் அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும் போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரிலி எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்."யாக்கோபின் உபத்திரவ காலத்தில் இறுதி அனுபவமாக, "ஆசிரியர்கள் வருவார்கள்" ஏழு மேய்ப்பர்களும். எட்டு பிரபுக்களும் இஸ்ரயேலை மீட்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த எட்டு பிரபுக்களும் - முற்பிதாக்கள். சங்கீத புஸ்தகத்தில் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தைகள் இந்த வசனப் பகுதியிலும் காணலாம். எட்டு என்ற எண் "புதியது" பற்றிப் பேசுகிறது. குறிப்பாக இங்கு. உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்துகிறது. ஏழு மேய்ப்பர்கள் மகிமையடைந்த சபையாகும். (எண்ணாகமம் 29-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஏழு ஆட்டுக்குட்டிகளை நினைவில்கொள்ளவும்).

தேவனுடைய இராஜ்யத்தில் முற்பிதாக்கள், காணக்கூடிய பிரதிநிதிகளாகப் பங்கெடுப்பதைக் காட்டுகிற கடைசி வசனப் பகுதி - எசேக்கியேல் 44:1-3) "பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸீதலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார். ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். இது அதிபதிக்கே உரியது. அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின்வழியாய்ப் புறப்படுவான் என்றார்."

கிழக்கு வாசல். சுவிசேஷ யுகத்தின் பரம அழைப்பை அடையாளப்படுத்துகிறது. அந்தக் கதவு அடைப்படும் காரியம் - பரம அழைப்பு நிறைவு பெற்றதைக் காட்டுகிறது. ஆனால், "பிரபு"வாகிய முற்பிதாக்கள் கிழக்கு வாசலின் மண்டபத்தின் வலது புறமாக அமர்ந்திருக்கக் கூடிய காரியமானது. மகமையடைந்த கிறிஸ்துவோடும். உலகத்தின் மனுஷரோடும் அவர்கள் கொண்டிருக்கும் தொடர்பையும். பெற்ற அதிகாரத்தையும் காட்டுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.