தேவ உறவினால் வல்லமை
நான் உங்களைச் சிறகிறர் என்றேன்… யோவான் - 15:16
சிம்சோனின் வாழ்க்கையில் தேவ வல்லமை அதிகமாகச் செயல்பட்டது. தேவ வல்லமையினால் அவன் தனி மனிதனாயிருந்தும் பல்லாயிரங்களை எதிர்த்து நின்று அவர்களை ஜெயித்தான். ஆயினும் தேவவல்லமையை மிகுதியாகக் கண்ட அவனுடைய வாழ்க்கைமுறை யாருக்கும் முன்மாதிரியானதல்ல. எவ்வளவோ தேவ வல்லமை செயல்பட்டும் அந்த வல்லமை அவனுடைய குணங்களிலோ, பண்புகளிலோ, நடத்தையிலோ, மன இயல்புகளிலோ துளி அளவு கூட நல்லதைச் செய்யவில்லை.
காரணம் என்ன? ஒரு மனிதன் தேவனுடைய இரண்டுவிதமான வல்லமை களைக் காணவேண்டும். ஒன்று தேவனுடைய சர்வவல்லமையின் விளைவான வல்லமை, இன்னொன்று தம்முடைய ஐக்கியத்தின் அல்லது நட்பு றவின் விளைவான வல்லமை, சர்வ வல்லமையால் அதிசயமான காரியங்கள் நடக்கலாம். அற்புத மான காரியங்கள் நிகழலாம். வியாதிகள் அகன்று பிசாசுகள் ஓடலாம். ஆனாலும் இந்த வல்லமை ஆத்துமாவைப் பாதிக்காது.
தேவனுடைய உறவில் வாழ வருகின்றவர்களும், தேவ நட்பினை அனுபவிக்கின் றவர்களும் அவருடைய ஐக்கியத்தின் விளைவான வல்லமையை ஆத்துமாவில் உணருவார்கள். அதுதான் அவர்களுடைய சுபாவங்களையும், பண்புகளையும், இயல்புகளையும், எண்ணங்களையும், யோசனைகளையும், நடத்தைகளையும் பாதித்து உயர்ந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
தேவனால் உயர்த்தப்பட்ட தாவீதின் வாழ்க்கை நமக்கு நல்ல முன்மாதிரி. ஆனால் தேவனால் மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்த சாலொமோன் எவ்வளவோ ஞானியாயிருந்தும், அவன் நமக்கு நல்ல முன்மாதிரியல்ல. ஏனென்றால் தேவ வல்லமையின் விளைவாக அவன் மிகுந்த நன்மைகளைக் கண்டான். ஆயினும் அவன் இறை உறவில் வாழ ஆர்வம் காட்டாத மனிதன். எனவே தேவ வல்லமை யினால் அவனுக்குள் நல்ல சுபாவங்களும், பண்புகளும் ஏற்படவில்லை.
சிலுவையின் மூலமாக தேவன் நமக்குக் கொண்டு வந்ததது என்ன? அதுதான் தேவனோடு நாம் நல்லுறவில் வாழ்வதற்கான ஆவிக்குரிய பாக்கியம். அந்த இறை உறவினால்தான் நம்முடைய உள்ளான மனநிலை மாறும். அதனால்தான் நாம் நல்ல திராட்சைக் கொடியாக விளங்கி, நல்ல கனிகளைக் கொடுப்போம். ஆம் தனிப்பட்ட இறை ஐக்கியமே நம்மை கனிதரும் மரங்களாக்கும்.
தேவனோடு நிலைத்திருப்பவன் சோதனைகளால் நிலைகுலையாதிருப்பான்.
