6 அதிகாரம்

6 அதிகாரம்

இந்த அதிகாரத்தின் முதல் பகுதி, இதற்கு முந்தின அதிகாரத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த வசனப்பகுதியில் குற்றநிவாரண பலியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது (லேவி 6:1#7).

கர்த்தர் மோசேயை நோக்கி மேலும் சில பிரமாணங்களை சொல்லுகிறார். சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் (லேவி 6:8#13). போஜனபலியின் பிரமாணம் (லேவி 6:14#18).

நித்திய போஜனபலியின் பிரமாணம். (லேவி 6:19#23). பாவநிவாரண பலியின் பிரமாணம் (லேவி 6:24#30).

குற்றநிவாரணபலி

லேவி 6:1#7

லேவி 6:1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவி 6:2. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்க-லாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

லேவி 6:3. அல்லது காணமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுத-த்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவை முதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

லேவி 6:4. அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

லேவி 6:5. பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணப-யை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

லேவி 6:6. தன் குற்றநிவாரணப-யாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டுவருவானாக.

லேவி 6:7. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக் கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

ஒரு மனுஷன் கர்த்தருக்கு விரோதமாக செய்யும் அநியாயத்தைப்பற்றியும், தன் அயலானுக்கு விரோதமாக செய்யும் பாவத்தைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் அயலானுக்கு இடுக்கண் செய்தாலும், அவன் செய்த பாவம், கர்த்தருக்கு விரோதமாக செய்த அநியாயமாகவே கருதப்படுகிறது.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்க-லாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து, அல்லது காணமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுத-த்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவை முதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்'' (லேவி 6:1#3) என்று சொல்லுகிறார்.

ஒருவன் தன் அயலானுக்கு விரோதமாக தீமையான காரியங்களை பேசும்போது, அவன் கர்த்தருடைய பிரமாணத்திற்கு விரோதமான காரியங்களை பேசுகிறான். கர்த்தருடைய பிரமாணத்திற்கு விரோதமாக தீங்கு செய்கிறவன், அந்தப் பிரமாணத்தை சொன்ன கர்த்தருக்கு விரோதமாகவே தீங்கு செய்கிறான். நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பாவம் செய்கிறவன், நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிற தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறான்.

""சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர், மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?'' (யாக் 4:11,12).

ஒருவன் தமக்கு விரோதமாகவும், தன் அயலானுக்கு விரோதமாகவும் செய்கிற ஒரு சில அநியாயங்களைக் குறித்து கர்த்தர் இந்த வசனப்பகுதியில் சொல்லுகிறார். நம்பிக்கை துரோகம்பண்ணுவது கர்த்தருக்கு விரோதமான பாவம். இது தன் அயலானுக்கு விரோதமாக செய்யப்படும் இடுக்கண். இப்படிப்பட்ட பாவத்தை செய்கிறவன், கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்கிறான். அவன் தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்க-லாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி தன் அயலானுக்கு இடுக்கண் செய்கிறான்.

கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்கிறவன், தன் அயலானிடத்திலிருந்து, ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அவனுக்கு இடுக்கண்செய்கிறான். இவனால் தன் பாவத்தை மறைக்க முடியாது. இவன் எல்லோருக்கும் முன்பாக, தன் அயலானுடைய வஸ்துவை, பலாத்காரமாக பறித்துக்கொண்டவன்.

ஒருவன் காணமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுத-க்கிறான். அவன் அதைக் குறித்துப் பொய்யாணையிடுகிறான். இவையெல்லாம் கர்த்தருக்கு விரோதமாகவும், மனுஷருக்கு விரோதமாகவும் செய்யப்படும் பாவமாகும்.

கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்தவனும், தன் அயலானுக்கு விரோதமாக இடுக்கண் செய்தவனும், தான் செய்த பாவத்தினாலே குற்றவாளியாகிறான். இப்படிப்பட்ட அநியாயக்காரன், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்க வேண்டும்.

தன் அயலானுக்கு விரோதமாக இடுக்கண் செய்தவன் தான் அநியாயமாய் பறித்துக்கொண்டதை மாத்திரம் திரும்பக் கொடுத்தால் போதாது. அவன் அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதற்குரியவனுக்குக் கொடுக்கவேண்டும்.

மேலும் அந்த அநியாயக்காரன் தன் குற்றநிவாரணப-யாக, மோசேயின் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டுவரவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (லேவி 6:6).

தன் பாவத்தினாலே குற்றவாளியானவன், தான் ஏமாற்றி பெற்றுக்கொண்ட பொருளை அதற்குரியவனிடத்தில் திருப்பிக் கொடுக்கவேண்டும். தான் ஏமாற்றியதை மாத்திரம் கொடுக்காமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டிக்கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதன் பின்பு அவன் குற்றநிவாரண பலியையும் செலுத்தவேண்டும். கர்த்தர் குற்றநிவாரண பலியாக ஒரு பழுதற்ற ஆட்டுக்கடாவை நியமித்திருக்கிறார்.

கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக் கடவன் என்றும், அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றும், (லேவி 6:7) கர்த்தர் சொல்லுகிறார்.

குற்றம் செய்தவன் பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும், அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டிக் கொடுக்கக்டவன். அத்தோடு தன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஓர் ஆட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். (லேவி 6:5-6).

ஒருவன் எந்தெந்த காரியங்களிலெல்லாம் பொய்யாணையிடுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதன் விவரம் வருமாறு :

1. தன் வசனத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளைப் பற்றி (லேவி 6:2,5)

2. கொடுக்கல் வாங்கலில் இடுக்கண் செய்தல். (லேவி 6:2,4)

3. ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்த் பரித்துக் கொள்ளுதல். (லேவி 6:2,4)

4. ஏமாற்றி ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளுதல். (லேவி 6:2,4)

5. காணாமற்போயிருந்து கண்டு எடுத்த பொருளைப் பற்றி (லேவி 6:3,4)

கர்த்தருடைய சந்நிதியில் பொய்யாணையிடுகிறவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யவேண்டும். பிரச்சனையுள்ள மனுஷர்களுக்கு நடுவிலும், மேலும் தேவனுக்கும், மனுஷருக்கும் நடுவிலும் ஆசாரியர் மத்தியஸ்தராக இருக்கிறார் (லேவி 6:6-7).

பரிசுத்த வேதாகமத்தில் குற்றநிவாரண பலிகளின் பிரமாணத்தைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது :

1. சில குறிப்பிட்ட பாவங்களைச் செய்தவன். (லேவி 6:1#5) தன் குற்றநிவாரண பலியைக் கொண்டு வரவேண்டும் (லேவி 5:6).

2. தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணப-யாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவர வேண்டும் (லேவி 5:6).

3. அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

4. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண ப-யாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனப-யாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வரக்கடவன். (லேவி 5:7).

5. அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக. (யாத் 5:8)

6. அவன் பாவநிவாரண ப-க்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ப-பீடத்தின் பக்கத்தில் தெளிப்பானாக. (யாத் 5:8#9)

7. மீதியான இரத்தத்தைப் ப-பீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; (லேவி 5:9).

8. மற்றதை நியமத்தின்படியே அவன் தகனப-யாய்ச் செலுத்தக்கடவன். (லேவி 5:10).

9. இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:10).

10. இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; (லேவி 5:11).

11. அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனப-களைப்போல, ப-பீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; (லேவி 5:12).

12. அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:13).

13. மீதியானது போஜன ப-யைப்போல ஆசாரியனைச் சேரும் (லேவி 5:13).

14. ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, அவன் மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, பரிசுத்தமானதைக் குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டிக் கொடுப்பானாக; (லேவி 5:15-16).

15. இதை ஆசாரியனுக்குக் கொடுப்பானாக. குற்றநிவாரண ப-யாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:16).

16. ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதினிமித்தம் அவன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:17-18).

17. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, மனுஷருக்கு விரோதமாகவும் அநியாயம் செய்து பாவம் செய்தவன் தான் நஷ்டப்படுத்திய பொருளைத் திரும்பக் கொடுக்கக்கடவன். அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டிக் கொடுக்கக்கடவன். (லேவி 6:1-5).

18. தன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன். (லேவி 6:6-7).

சர்வாங்க தகனப-க்குரிய பிரமாணம்

லேவி 6:8#13

லேவி 6:8. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவி 6:9. நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனப-க்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனப-யானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் ப-பீடத்தின்மேல் எரியவேண்டும்; ப-பீடத்தின் மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

லேவி 6:10. ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, ப-பீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனப-யின் சாம்பலை எடுத்து, ப-பீடத்துப் பக்கத்தில் கொட்டி,

லேவி 6:11. பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

லேவி 6:12. ப-பீடத்தின்மே-ருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனப-யை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான ப-களின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

லேவி 6:13. ப-பீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

கர்த்தர் மோசேக்கு சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணத்தை சொல்லுகிறார். மோசே இந்தப் பிரமாணத்தை ஆரோனுக்கும் அவருடைய குமாரருக்கும் கற்பிக்கவேண்டும். ""சர்வாங்க தகனப-யானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் ப-பீடத்தின்மேல் எரியவேண்டும்; ப-பீடத்தின் மேலுள்ள அக்கினிஎரிந்துகொண்டே இருக்கவேண்டும்'' (லேவி 7:8,9) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆசாரியர் சர்வாங்க தகனபலியை கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நிறைவேற்றவேண்டும். ஒவ்வொரு நாளும், காலையிலும் மாலையிலும், பலிபீடத்தின்மேல் ஒரு ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாக செலுத்தவேண்டும். இந்த சர்வாங்க தகனபலி இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் பொதுவானதாக செலுத்தப்படுகிறது.

பலிபீடத்தின் மேலுள்ள அக்கினி அணைந்துபோகாமல் எரிந்துகொண்டே இருக்கவேண்டும். ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போடவேண்டும். பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியை வைத்து தகனிப்பது ஆசாரியருடைய ஊழியம்.

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, ப-பீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனப-யின் சாம்பலை எடுத்து, ப-பீடத்துப் பக்கத்தில் கொட்டவேண்டும். பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டவேண்டும் (லேவி 7:10,11).

ப-பீடத்தின்மே-ருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; இதைக்கவனிப்பது ஆசாரியருடைய ஊழியம். ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போடவேண்டும். ஆசாரியன் அந்த பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனப-யை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான ப-களின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கவேண்டும் (லேவி 6:12).

""ப-பீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது'' (லேவி 6:13) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆசாரியரே பலிபீடத்தை சுத்தம்பண்ணவேண்டும். சாம்பலை எடுத்து கொட்டுவதும் ஆசாரியருடைய ஊழியம். இது போன்ற ஊழியத்தை செய்வது தன்னுடைய கவுரவத்திற்கு குறைவானது என்று எந்த ஆசாரியரும் நினைக்கக்கூடாது. பாவம் செய்வது மாத்திரமே நமக்கு அவமானம். கர்த்தருக்காக நாம் செய்யும் எந்த ஊழியமும் நமக்கு அவமானமல்ல. கர்த்தருடைய ஊழியத்தை செய்வது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய பாக்கியம்.

பலிபீடத்திலே சர்வாங்க தகனபலி காலையிலும் மாலையிலும் செலுத்தப்படுகிறது. ஆசாரியர் எல்லா வேளைகளிலும், எப்போதும் சர்வாங்க தகனபலிகளை செலுத்திக்கொண்டே இருக்கமாட்டார்கள். ஆனாலும் பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நாம் கர்த்தருக்கு எப்போதும் பலிகளை செலுத்தாவிட்டாலும் நம்முடைய இருதயத்தில் கர்த்தர்மீதுள்ள பரிசுத்தமான அன்பு எப்போதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். நாம் இடைவிடாமல் ஜெபம்பண்ணவேண்டும்.

பரிசுத்த வேதாகமத்தில் சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணத்தைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

1. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சர்வாங்க தகனப-க்குரிய பிரமாணத்தைப் பற்றி கற்பிப்பாயாக. (லேவி 6:9).

2. சர்வாங்க தகனப-யானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் ப-பீடத்தின்மேல் எரியவேண்டும்.

3. ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, ப-பீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனப-யின் சாம்பலை எடுத்து, ப-பீடத்துப் பக்கத்தில் கொட்ட வேண்டும் (லேவி 6:10).

4. தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டு போய்க் கொட்டக்கடவன். (லேவி 6:11).

5. ப-பீடத்தின்மே-ருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; (லேவி 6:12).

6. ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனப-யை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான ப-களின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். (லேவி 6:12).

7. ப-பீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது. (லேவி 6:13).

ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியில் ஆசாரியர்கள் தங்களுடைய விசேஷ ஆசாரிய வஸ்திரங்களை அணியக்கூடாது. ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளேயே ஆசாரியருடைய வஸ்திரங்களை வைப்பதற்கு அதற்குரிய இடங்கள் இருக்கும். தேவாலயத்தில் இதுபோன்ற காரியங்களுக்காகப் பல அறைகள் உள்ளன. (1இராஜா 6:5,10; 1நாளா 9:26,33; 1நாளா 23:28; 1நாளா 28:11-12). சாம்பல் சுத்தமான ஒரு இடத்திலே கொட்டப்பட வேண்டும்.

ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போட வேண்டும். இதுபோல மாலைதோறும் பலிபீடத்தின்மீது எரியும்படி கட்டைகளைப் போடவேண்டும். (எண் 28:4).

தேவனை ஆராதிப்பது ஒருபோதும் நின்றுபோகக்கூடாது. இதற்கு அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அன்றாட பலிகளைத் தகனிப்பதற்காகவும், விசேஷித்த பலிகளைத் தகனிப்பதற்காகவும் பலிபீடத்தின்மீது அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த அக்கினி முதலாவதாக வானத்திலிருந்து வந்தது. (லேவி 9:24).

போஜனப-யின் பிரமாணம்

லேவி 6:14#18

லேவி 6:14. போஜனப-யின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் ப-பீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

லேவி 6:15. அவன் போஜனப-யின் மெல்-ய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனப-யின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

லேவி 6:16. அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

லேவி 6:17. அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண ப-யைப்போலும் குற்றநிவாரண ப-யைப்போலும் மகா பரிசுத்தமானது.

லேவி 6:18. ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனப-களில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

கர்த்தர் போஜனபலியின் பிரமாணத்தைப்பற்றிச் சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரரோ அல்லது ஆசாரியரோ போஜனபலியை படைத்திருக்கலாம். கர்த்தர் இரண்டுவிதமான போஜனபலியைப்பற்றி தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். முதலாவது போஜனபலி பொதுவான போஜனபலியாகும். இந்தப் போஜனபலியில் ஆசாரியனுடைய கைப்பிடி நிறைய எடுக்கப்பட்டு, அது கர்த்தருக்கு சுகந்த வாசனையாக தகனிக்கப்படுகிறது. இந்தப் போஜனபலியில் மீதியானதை ஆரோனும் அவருடைய குமாரரும் புசிக்கவேண்டும்.

ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும். அவன் போஜனப-யின் மெல்-ய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனப-யின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கவேண்டும் (லேவி 6:14,15).

ஆரோனும் அவருடைய குமாரரும் போஜனபலியில் மீதியானதை எவ்வாறு புசிக்கவேண்டும் என்றும் கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். அவர்கள் அதை புளிப்பில்லா அப்பத்துடன் புசிக்கவேண்டும். அவர்கள் அதை பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டும்.

ஆரோனும் அவருடைய குமாரரும் போஜனபலியில் மீதியானதை ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்தில் புசிக்கவேண்டும். ஆரோனின் பிள்ளைகளில் ஆண்பிள்ளைகள் மாத்திரம் அதைப் புசிக்கவேண்டும். ஆசாரியர்களில் பரிசுத்தமாயிருக்கிறவர்கள் மாத்திரம் அந்தப் போஜனபலியை புசிக்கவேண்டும்.

போஜனபலியில் மீதியானதை ஆரோனும் அவருடைய குமாரரும் புசிக்கவேண்டும். அதை புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும் (லேவி 6:16).

அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம் என்றும், அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு என்றும் அது பாவநிவாரண ப-யைப்போலும் குற்றநிவாரண ப-யைப்போலும் மகா பரிசுத்தமானது என்றும் கர்த்தர் சொல்லுகிறார் (லேவி 6:17).

கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனப-களில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல்'' (லேவி 6:18) என்று சொல்லுகிறார்.

பரிசுத்த வேதாகமத்தில் போஜனபலியின் பிரமாணத்தைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

1. ஆரோனின் குமாரர் போஜனபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் ப-பீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும் (லேவி 6:14).

2. ஆசாரியன் போஜனப-யின் மெல்-ய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனப-யின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். (லேவி 6:15).

3. இதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும் (லேவி 6:16,18).

4. இதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம் பண்ணவேண்டாம் (லேவி 6:17).

5. இது கர்த்தருக்கு இடப்படும் தகனங்களில் கர்த்தர் ஆசாரியருக்குக் கொடுத்த அவர்களுடைய பங்காகும்.

6. இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. (லேவி 6:18).

பரிசுத்த வேதாகமத்தில் மூன்று பலிகள் மகாபரிசுத்தமான பலிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1. போஜனபலிகள் (லேவி 2:10).

2. பாவநிவாரண பலிகள் (லேவி 2:10).

3. குற்றநிவாரண பலிகள் (லேவி 2:10).

""ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும்'' என்னும் வாக்கியம், ஆசரிப்புக் கூடாரத்து ஆராதனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்மக்கள் அனைவரையும் குறிக்கும். இதை அவர்கள் பிராகாரங்களிலும், பரிசுத்த ஸ்தலத்திலும் மட்டுமே புசிக்க வேண்டும். (லேவி 6:16). 30 வயதிற்கு உட்பட்ட ஆண்மக்கள் யாரும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை (எண் 4:3,23,30,39).

போஜனபலியை தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்தப் பரிசுத்தம் சடங்காரச்சாரமான பரிசுத்தமாகும். தெய்வீக ஊழியங்களுக்காக ஆசாரியர் வேறுபிரிக்கப்பட்டிருக்கிறார். போஜனபலியைப் புசிப்பதற்கு ஆசாரியர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நித்திய போஜனபலி

லேவி 6:19#23

லேவி 6:19. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவி 6:20. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள்.

லேவி 6:21. அது சட்டியிலே எண்ணெய்விட்டுப்பாகம்பண்ணப்படக் கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.

லேவி 6:22. அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.

லேவி 6:23. ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனப-யும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் போஜனபலியை படைப்பதுபோல, ஆசாரியர்களும் நித்திய போஜனபலியை படைக்கவேண்டும். இது ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும்நாளில், அவரும் அவருடைய குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு ஆகும் (லேவி 6:20).

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் படைக்கும் போஜனபலியில் ஒரு பாகம் தகனிக்கப்படுகிறது. அதில் மீதியானதை ஆரோனும் அவருடைய குமாரரும், கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து புசிக்கிறார்கள். ஆசாரியர் படைக்கும் போஜனபலியை அவர்கள் புசிக்கக்கூடாது. அந்தப் போஜனபலி முழுவதுமாக தகனிக்கப்படவேண்டும்.

ஆசாரியர் தமக்கு செலுத்தவேண்டிய போஜனபலியின் படைப்பைப்பற்றி, கர்த்தர் மோசேக்கு தெளிவாக சொல்லுகிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும்நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள்'' (லேவி 6:19,20) என்று சொல்லுகிறார்.

நித்திய போஜனபலி சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்பட வேண்டும். பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கவேண்டும் (லேவி 6:21).

ஆரோனுடைய குமாரரில் அவருடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யவேண்டும்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை. ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனப-யும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (லேவி 6:22,23).

பிரதான ஆசாரியன் கர்த்தருக்கு, ஒவ்வொரு நாளும் போஜனபலியை செலுத்தவேண்டும் என்றும், தான் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலிருந்து, தன்னுடைய ஜீவியகாலம் வரையிலும், அந்தப் போஜனபலியை அநுதினமும் செலுத்தவேண்டும் என்றும் யூதமார்க்கத்து சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். பிரதான ஆசாரியன் அநுதினமும் காலையிலும், மாலையிலும் இரண்டுதரம் போஜனபலியை செலுத்துகிறார். அவர் அந்தப் போஜனபலியை தன்னுடைய சொந்தக் கிரயத்தினால் செலுத்துகிறார்.

ஆசாரியர் செலுத்தும் போஜனபலியானது புசிக்கப்படுவதுபோல வேவிக்கப்படும் என்றும், ஆனாலும் ஆசாரியர் அதை புசிப்பதில்லை என்றும், அது முழுவதுமாக தகனிக்கப்படும் என்றும் யூதமார்க்கத்து சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

பரிசுத்த வேதாகமத்தில் நித்தியபோஜனபலி சம்பந்தமான கட்டளைகள் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது :

1. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்கு நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள் (லேவி 6:20,22-23).

2. ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள்.

3. அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது (லேவி 16:18,21).

4. பாகம்பண்ணப் பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய். (லேவி 16:21).

5. பிரதான ஆசாரியனும், மற்ற ஆசாரியரும் அவர்களுடைய ஸ்தானத்தில் அபிஷேகம் பண்ணப்படுகிறவர்களும் போஜன ப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவர்கள். (லேவி 6:22).

6. அது முழுவதும் தகனிக்கப்பட வேண்டும்; (லேவி 6:22-23) அதைப் புசிக்கக்கூடாது. இயேசு கிறிஸ்துவின் பரிபூரண பலிக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும், அவர் பரமேறியதற்கும் இது அடையாளமாகும். (லூக்கா 24:39-53; அப் 1:9-11).

7. அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை (லேவி 6:20,22-23).

பாவநிவாரணப-யின் பிரமாணம்

லேவி 6:24#30

லேவி 6:24. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவி 6:25. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணப-யின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.

லேவி 6:26. பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.

லேவி 6:27. அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

லேவி 6:28. அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.

லேவி 6:29. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது.

லேவி 6:30. எந்தப் பாவநிவாரணப-யின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவாரண பலியை செலுத்துவதுபோல ஆசாரியரும் பாவநிவாரண பலியை செலுத்தவேண்டும். கர்த்தர் பாவநிவாரண பலியின் பிரமாணத்தை மோசேயினிடத்தில் சொல்லுகிறார். மோசே இந்தப் பிரமாணத்தை ஆரோனிடத்திலும், அவருடைய குமாரரிடத்திலும் சொல்லவேண்டும்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணப-யின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது'' (லேவி 6:24,25) என்று சொல்லுகிறார்.

பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அதை புசிக்கவேண்டும் (லேவி 6:26).

அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும் என்றும் (லேவி 6:27).

அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும் என்றும் (லேவி 6:28) கர்த்தர் சொல்லுகிறார்.

பாவநிவாரண பலியாக செலுத்தப்படும் மிருகஜீவன் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படவேண்டும். சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும். பாவநிவாரணபலி பாவத்தை நிவிர்த்தி பண்ணப்படுவதற்கு செலுத்தப்படும் பலியாகும். இந்தப் பலியானது ஆசாரியரின் பாவத்தை நிவர்த்தி பண்ணுவதற்காக செலுத்தப்படுகிறது.

பாவநிவிர்த்தி செய்த பின்பு அதை ஆசாரியர் ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே புசிக்கவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். பாவநிவாரண பலியின் இரத்தம் பரிசுத்தமானது. ஆகையினால் அந்த இரத்தத்தில் கொஞ்சம் ஆசாரியனுடைய வஸ்திரத்தில் தெறித்துவிட்டால், அந்த இரத்தத்தை பரிசுத்த ஸ்தலத்திலேயே கழுவவேண்டும் என்றும் கர்த்தர் கட்டளையிடுகிறார்.

பாவநிவாரணபலி சமைக்கப்படும் பாத்திரத்தைப்பற்றியும் கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். அது மண்பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை உடைத்துப்போடவேண்டும். அதை செப்புப்பானையில் சமைத்தால், அதை விளக்கி தண்ணீரிலே கழுவவேண்டும்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது. எந்தப் பாவநிவாரணப-யின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் ப- புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்'' (லேவி 6:29,30) என்று சொல்லுகிறார்.

பரிசுத்த வேதாகமத்தில் பாவநிவாரண பலியின் பிரமாணத்தைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

1. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் பாவநிவாரணப-யின் பிரமாணத்தைச் சொல்லுவாயாக. (லேவி 6:25).

2. சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; (லேவி 6:25; லேவி 1:11).

3. பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; (லேவி 6:26,29).

4. ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும் (லேவி 6:26).

5. அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; (லேவி 6:27).

6. அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். (லேவி 6:27).

7. அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; (லேவி 6:28).

8. செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். (லேவி 6:28).

9. எந்தப் பாவநிவாரணப-யின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப் பட்டதோ, அந்தப் ப- புசிக்கப்படலாகாது. (லேவி 6:30; லேவி 4:5-7,16-18; எபி 13:11). பிராகாரத்தில் தெளிக்கப்பட்ட பலியின் ஒரு பங்கைப் புசிக்கலாம். (லேவி 4:25,30,34; லேவி 6:26-30; லேவி 7:1-10).

10. அது அக்கினியிலே முழுவதுமாகத் தகனிக்கப்படவேண்டும் (லேவி 6:30).

பாவநிவாரண பலி மகா பரிசுத்தமானது என்று இரண்டு இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. (லேவி 6:25,29). காண்க, லேவி 2:10).

பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கவேண்டும். பிரபுக்களும், மற்ற ஜனங்களும் செலுத்திய பலிகளின் மாம்சத்தை என்ன செய்ய வேண்டுமென்று இந்த வாக்கியம் விளக்குகிறது. கொழுப்பை முழுவதுமாகத் தகனிக்க வேண்டும். ஆசாரியர் மாம்சத்தைப் புசிக்கவேண்டும். (லேவி 6:26; லேவி 4:16-35). கர்த்தர் பலிசெலுத்துகிறவர்களுடைய பலியை அங்கிகரித்திருக்கிறார் என்பதற்குப் புசிப்பது ஓர் அடையாளமாகும். இதன் மூலமாகத் தேவன் அவர்களோடு மறுபடியும் ஐக்கியமாக இருக்கிறார். (லேவி 10:17).

பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படும் பலிகளைப்பற்றிய விவரம் வருமாறு :

1. போஜனபலிகளில் மீதமானது. (லேவி 2:1-3; லேவி 7:14)

2. இஸ்ரவேலரின் போஜனபலிகள் (லேவி 2:4-10)

3. பாவநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 4:26; லேவி 6:26; லேவி 10:17)

4. குற்றநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 7:6)

5. சமாதானபலிகளின் மாம்சம். (லேவி 7:15-17)

6. குஷ்டம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டவன் குற்றநிவாரண பலியாகக் கொண்டுவரும் ஆழாக்கு எண்ணெய் ஆசாரியனுக்குரியது. (லேவி 14:10-13)

7. மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம் பண்ணப்பட்ட இரண்டு அப்பங்கள். (லேவி 23:17-20)

8. சமுகத்தப்பம் (லேவி 24:9)

பாவநிவாரண பலியின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும். பாவநிவாரண பலியினுடைய மாம்சம் பரிசுத்தமானதாகக் கருதப்படுகிறது (லேவி 6:25-29). இது கிறிஸ்துவிற்கு அடையாளம். அவர் நமக்காகப் பலியானார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் அவர் பாவநிவிர்த்தி செய்தார். (பிலி 2:7; எபி 2:9-18; எபி 9:14-28; 1பேதுரு 1:8-23; 1பேதுரு 2:24). பாவநிவாரண மாம்சத்தில் படுகிறது பரிசுத்தமாயிருப்பதுபோல, இயேசு கிறிஸ்துவைத் தொடுகிறவர் அனைவரும் பரிசுத்தமாவார்கள்.

பாவநிவாரண ப-யை புசிக்கக்கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுவரப்பட்ட பலியைப் புசிக்கக்கூடாது. அதை அக்கினியிலே முழுவதுமாகக் தகனிக்க வேண்டும். பாவநிவாரண பலிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு பாவநிவாரண பலியின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் தெளிக்கப்படுகிறது. அதன் மாம்சத்தைப் புசிக்கக்கூடாது. அதை முழுவதுமாக அக்கினியிலே தகனிக்க வேண்டும் (லேவி 4:5-7,16-18; எபி 13:11). மற்றொரு பாவநிவாரண பலியின் இரத்தம் பிராகாரத்திலுள்ள வெண்கல பலிபீடத்தின்மீது தெளிக்கப்படுகிறது. அது அந்தப் பலிபீடத்தின்கீழே ஊற்றப்படுகிறது. அதன் மாம்சத்தின் ஒரு பகுதியைப் புசிக்கலாம். (லேவி 4:25,30,34; லேவி 6:26-30; லேவி 7:1-10; லேவி 6:26).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.