6ம் அதிகாரம் (சிங்கக் கெபியில் போடல்)

6ம் அதிகாரம் (சிங்கக் கெபியில் போடல்)

பாபிலோனை மேதிய சாம்ராஜ்யம் பிடித்துவிட்டது. இது தானியேல் 2ல் உள்ள சிலையின். பொன்னான தலைக்குக் கீழேயிருந்த.

வெள்ளியாகிய மார்பாகும்.

மேதிய ராஜாவாகிய தரியுவின் நாட்களில் நீமிக்கப்பட்டவர்கள்:

1. ராஜ்யத்தை ஆள 120 தேசாதிபதிகள்.

2. அவர்களைக் கண்காணிக்க 3 பிரதானிகள்

3. அதிலே தானியேல் ஒரு பிரதானி. அடிமையாகிய தானியேலுக்குள் விசேஷித்த ஆவி, வல்லமை இருந்ததால், ராஜ்யம் முழுமைக்குமே அதிகாரியாக வைக்க ராஜா எண்ணினான் (தானி. 6:3).

இதனால், தானியேலின் மேல் பொறாமை கொண்ட பிரதானிகளும், தேசாதிபதிகளும். தானியேலின் ராஜ்ய விசாரிப்பிலே குற்றம் காணத் தொடங்கினார்கள்: ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கடவுளைப் பற்றிய ஆன்மீகக் காரியத்திலே குற்றப்படுத்த எண்ணி. ராஜாவிடம் கூடி வந்து.

"ராஜாவைத் தவிர எந்த தேவனையோ, மனுஷனையோ நோக்கி 30நாள் விண்ணப்பம் பண்ணினால். அப்படிப்பட்டவன். சிங்கக் கெபியிலே போடப்படவேண்டும்" என்கிற கட்டளையை, மேதியருக்கும். பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே மாற்றப்படாதபடி கையெழுத்திட வேண்டும் என்று வேண்டினார்கள். (மேதியரும். பெர்சியரும் இணைந்த, கூட்டு ராஜாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது). ஒரு பிரமாணம் ராஜாவால் முத்திரையிடப்பட்டால். அது ராஜாவால் கூட மாற்றமுடியாத பிரமாணமாயிருக்கும் என்பது மேதியபெர்சியரின் நடைமுறை. இதற்கு உதாரணமாய், பெர்சிய அகாஸ்வேரு ராஜா. யூதருக்கு விரோதமாய்ப் போட்ட பிரமாணத்தை (எஸ்தர் 3:13), தன்மனைவி எஸ்தரின் விருப்பப்படியே மாற்ற முடியவில்லை என்பதை எஸ்தர் 8:8ன் மூலம் அறியலாம். எஸ்தர் 8:11, 12ல், ராஜா வேறொரு சட்டம் போட்டதால், பழையசட்டம் உயிரற்றுப் போயிற்று.

தரியு ராஜாவின் சட்டமும் கையெழுத்தானது. மதமாற்ற தடைச்சட்டம், தமிழ் நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதாவால் வந்தபோது. பயந்து போன கிறிஸ்தவர்கள் போலில்லாமல். அடிமைத்தனத்திலிருந்த போதும், எப்போதும் போல். மேலறையில் எருசலேமுக்கு நேராய் ஜன்னல்கள் திறந்திருக்க, தினமும் 3 வேளையும் முழங்காற்படியிட்டு தானியேல் ஜெபித்தான். இதைக்கண்ட தானியேலின் விரோதிகள் ராஜாவிடம் புகார் செய்தனர். இதைக்கேட்ட ராஜா, தானியேலின்மேல் அன்பும் நம்பிக்கையும் இருந்ததால், தானியேலைத் தப்புவிக்கும்படி தன்மனதை வைத்து. சூரியன் அஸ்தமிக்கும்வரை பிரயாசப்பட்டான். அந்த விரோதிகள் மறுபடியும் வந்து, ராஜாவின் எந்தக் கட்டளையும் மாறாத பிரமாணம் என்று அறிவீராக என்றார்கள்.

இதனால், ராஜாவின் கட்டளைப்படியே. தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். கெபியின் வாசல் ஒரு கல்லால் மூடப்பட்டு, ராஜா மற்றும் புரபுக்கள் மோதிரங்களினால் முத்திரையிடப்பட்டன. அப்போது ராஜா தானியேலை நோக்கி, "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்" என்றான். மனித ராஜாவால் முடியாததை. நம் தேவன் செய்வார் என்று புறஜாதியான் அன்றும் சொன்னான்: இன்றும் சொல்கிறார்கள். ஆனாலும். தானியேலின் விசுவாசம், என்றுமே பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கு, இந்தக் கடைசி காலத்தில் இல்லை என்பது வருத்தப்படத்தக்கது.

ராஜா. இரவு முழுவதும் தூங்கவில்லை: போஜனமும் பண்ணவில்லை: கீத வாத்தியங்களும் முழங்கவில்லை. காலமே எழுந்து, சிங்கக் கெபிக்கு, தீவிரமாய்ப் போய். துயரசத்தமாய் தானியேலைக் கூப்பிட்டு."நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங்களுக்கு தப்புவிக்க வல்லவராய் இருந்தாரா?" என்று கேட்டான். என்னே ராஜாவின் விசுவாசம்! இது எப்படி வந்தது? தானியேலின் நடக்கையினால் சாட்சி வாழ்க்கையினால்தான் - அல்லேலூயா!

இதற்கு தானியேலின் பதிலைப் பாருங்கள்:- "தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவன்: உமக்கு முன்பாகவும் நீதிக்கேடு செய்யவில்லை. அதனால் சிங்கங்களின் வாயை தேவன் கட்டிப் போட்டார். இது எப்படி நடந்தது? உண்மையிலேயே கட்டினாரா? தானி. 6:23ஐ வாசியுங்கள்:- தானியேல் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால் அவனால் ஒரு சேதமும் காணப்பட வில்லை" (see எபி. 11:33 also). விசுவாச வல்லமை Power of faith - மகிமையளிக்கிறது; சிங்கத்தை தடை செய்கிறது.

இதை வாசிக்கும் தேவசனமே! தேவன்பேரில்.தேவ வசனத்தின்பேரில் வைத்திருக்கும் விசுவாசத்தின் வல்லமையை,பலனை.

மகிமையைப் பார்த்தாயா? விசுவாசம் வெற்றியைத் தரும். Faith brings success. உன் விசுவாச வல்லமையின் அளவுப்படியே தேவனுடைய வல்லமையும் இணைந்து, நீ விரும்புகிறதற்கும் வேண்டிக் கொள்கிறதற்கும் மேலான காரியங்கள் நடப்பதைக் காண்பாய் (எபே.3:20).

இதைக்கேட்ட ராஜா மிகவும் சந்தோசப்பட்டு தானியேலை கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான். தானியேல் மேல் குற்றம் சாட்டினவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் கெபியிலே போடச் சொன்னான். அவர்கள் கெபியின் அடியில் சேருமுன்னே. சிங்கங்களே பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டது.

பின்பு தரியுராஜா ஒரு order போட்டான்:- என் ஆளுகைக்குள் உள்ள எல்லோரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக பயப்பட வேண்டும்; அவர் ஜீவனுள்ள தேவன்; அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்: அவருடைய மகிமை முடிவு பரியந்தமும் நிற்கும். தானியேலை தப்புவித்த அவரே. தப்புவிக்கிறவரும். இரட்சிக்கிறவரும். வானிலும் பூமியிலும் அற்புதங்களையும். அடையாளங்களையும் (அதிசயங்கள்) செய்கிறவர் என்று எழுதி, அனைவருக்கும் ஒரு தாக்கீது அனுப்பினான்.

மேதியனாகிய தரியுவின் காலத்திலும். பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்ய காலத்திலும். தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.

இதை வாசிக்கும் தேவ ஜனமே! தானியேலைப்போல. வல்லமையுள்ள - சாட்சியுள்ள, விசுவாச ஜீவியம் இருந்தால். மாறாத பிராமணத்திற்குரிய மேதிய - பெர்சிய ராஜாக்களை மட்டுமல்ல... அதற்கு மேற்பட்ட எந்த அரசரையும் மனம் மாறச் செய்து. நம் பக்கம் திருப்ப முடியும் என்றும். என்ன தீமையான காரியங்கள் நம்மை நோக்கி வந்தாலும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய். அவரிடத்தில் அனபுகூருகிறவர்களுக்கு, சகலமும் நன்மைகளுக்கேதுவாய் முடிப்பார் என்றும் அறிவீர்களாக! (ரோ.8:28).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.