6. திரள் கூட்டத்தாரின் உயிர்த்தெழுதல்_

6. திரள் கூட்டத்தாரின் உயிர்த்தெழுதல்

"ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்" (வெளிப்படுத்தல் 7:9-10).

தேவனுடை வனுடைய பரம அழைப்பு 1,44,000 மணவாட்டியாகிய சிறுமந்தைக்கு மட்டுமே ஆனால் மிக அருமையாக ஓட்டத்தைத் துவங்கின திரளானோர் வழியில் இடறினாலும். இறுதியில் அனைத்தையும் மேற்கொண்டவர்களுக்கும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன் பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி அல்லேலூயா. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்" (வெளிப்படுத்தல் 19:1,6). அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்களோ. அவர்களின் நம்பிக்கை பரலோகத்தில் இருக்கிறதோ இந்தத் திரள் கூட்டத்தர் பரலோகத்தைச் சேர்ந்தவர்களே.

முதற்பலனான சபையில் ஆவியின் ஜெநிப்பிக்கப்பட்ட, சிறுமந்தை மற்றும் திரள் கூட்டத்தாரும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் பலியினால் உடன்படிக்கை செய்து. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, வருங்கால இராஜ்யத்தில் பூமிக்குரிய வாழ்க்கையின் நம்பிக்கை அனைத்தையும் விட்டுக் கொடுத்தவர்கள், பரலோக வாழ்க்கையை எந்நிலையில் பெறுவதற்கும் மரணபரியந்தம் இருவகுப்பாரும் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும்.

இந்தச் சிறுமந்தை முற்றிலும் ஜெயங்கொள்கிறவர்கள். "இவையெல்லாவற் றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவா களாயிருக் கிறோமே" (ரோமர் 8:37). இவர்களே மிகச் சிறந்த பரிசைப் பெறுபவர்கள் - தெய்விக கபாவத்திலுள்ள அழியாமை, "நீங்களோ, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1பேதுரு 2:9). திரள் கூட்டத்தார். இறுதியில் தீமையின் வல்லமையை எதிர்த்து ஜெயிப்பதினால். இவர்களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசளிக்கப்படுகிறார்கள். ஆனால் அழியா சிறுமந்தையைப் போல அழியாமையைப் பெறாமல், தூதர்களைப் போல, தேவனைச் சார்ந்து ஜீவிப்பார்கள்.

வெளிப்படுத்தல் 7-ஆம் அதிகாரத்தில் இந்தத் திரளான வகுப்பாரைக்குறித்து பேசப் படுகிறது, "அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்" (வெளிப்படுத்தல் 7:13-15), இறுதியாக, இந்தத் திரள் கூட்டத்தார் தேவனை அவருடைய மகிமையுள்ள ஆலயத்தில் சேவிப்பார்கள் என்று அந்தக் காட்சிகள் காட்டுகிறது. (பரிசுத்தவான்கள், ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயம் 2 கொரிந்தியர் 6:16),

"திரள் கூட்டத்தாரை இழிவானவர்களாகவோ, ஆண்டவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களாகவோ குறைவாக மதிப்பிடக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்டவர்கள் நித்தியமான பரலோக ஆசீர்வாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள். சிறுமந்தையைப் போல சத்தியத்திற்கும். நீதிக்கும் சகோதரர்கள் மேலும் அதே அளவிலான அன்பைக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சற்றுக் குறைவான அன்பையும். சற்றுக் குறைவான வைராக்கியத்தையும் பெற்றிருப்பார்கள்" என்று சகோ. ரஸல் கூறுகிறார் (4648)

இந்த யுகத்தின் முடிவில் மிகுந்த உபத்திரவத்திலிருந்து. இந்த வகுப்பார் வெளியேறுவார்கள்." இந்தத் திரள் கூட்டத்தார் அனைவரும் கவிசேஷ யுகத்தின் முடிவிலோ அல்லது கவிசேஷ யுகத்தின் துவக்கத்தில் மரித்தவர்கள் பரிசுத்தவான்களோடு 1878-ஆம் வருடத்தில் உயிர்த்தெழுப்பப்படுவார்களோ, நாம் தெளிவாக அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆயினும். திரள்கூட்டத்தார் அற்புதமான பரலோக பிதாவின்மேல் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியினிமித்தம். அவர்கள் உயிரோடு எழும்பின பின் மகிழ்சியோடும் ஆரவாரத்தோடும் தங்களுடைய பரிசுகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நாம் நிச்சயித்துக கொள்ளலாம்.

மற்ற சாட்சிகள்

பழைய ஏற்பாட்டிலும், இந்தத் திரள் கூட்டத்தைப் பற்றி சித்திரிக்கப்படுகிறது. ஆபிரகாம். அதற்குப் பின் லோத்தை சந்தித்த தூதர்களைப் பற்றி. ஆதியாகம் 18 மற்றும் 19-ஆம் அதிகாரங்களில் விவரிக்கப்படுகிறது. ஆபிரகாம் மற்றும் பரலோக விருந்தாளிகளுக்கு இடையில் சம்பாஷணைகள் நடந்தது. ஆனால் ஆபிரகாமை தொடர்ந்து வந்த லோத்து, அவரைப் போல நீதிமானாக மதிப்பிடப்பட்டிருந்தாலும் ( 2 பேதுரு 2:7-8) ஆபிரகாமை காட்டிலும் சற்று ஆவியிலும். நடத்தையிலும் குறைவாக காணப்பட்டார்.

பிரதிஷ்டையின் போது, லேவியர்கள் தங்களுடைய வஸ்திரங்களைத் தோய்ப்பதினால் இவர்கள் திரள் கூட்டத்தாராக அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள். ஏனெனில். அதே வேலையை திரள் கூட்டத்தாரும் செய்கிறார்கள் (எண்ணாகமம் 8:7; வெளிப்படுத்தல் 7:14), இஸ்ரயேலில் முதல் பிறந்த அனைத்து பிள்ளைகளுக்குப் பதிலாக முழு லேவி கோத்திரமும் முதற்பலன்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். 'லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய்" (எண்ணாகமம் 3:5-10). இப்படியாக திரள் கூட்டத்தார் கிறிஸ்துவையும் சபையையும் சேவிப்பார்கள்.

எசேக்கியேல் 44-ஆம் அதிகாரத்தில், தீர்க்கதரிசனமாக லேவியர்கள் ஆயிரவருட ஆட்சியில் ஆவிக்குரிய ஆலயத்தைப் பொறுத்த வரையில் ஒரு விசேஷித்த வேலையைச் செய்வதற்கு அழைக்கப்பட்டதினிமித்தம் இவர்கள் திரள் கூட்டத்தாராக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். "இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர் களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காகத் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரரா யிருப்பார்கள். அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தாரை அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள். ஆலயத்தின் சகல வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாயிருக்கக் கட்டளையிடுவேன் (எசேக்கியேல் 44:10-14). அவர்கள் தவிறினாலும். சேவை செய்வார்கள்.

எதிரிடையாக. இராஜரீகமான ஆசாரியத்துவத்தைப் பற்றி 15-ஆம் வசனம் தொடர்ந்து விவரிக்கிறது. "இஸ்ரவேல் புத்திரரே என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில்சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்" (எசேக்கியேல் 44:15-16). (தாவிதின் காலத்தில் சாதோக்கு பிரதான ஆசாரியராக இருந்தார்). ஆசாரியத்துவம் மட்டுமே பாவநிவாரண பலியில் பங்கெடுத்துக்கொள்ள முடியும்.

"நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு. அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?" (உன்னதப்பாட்டு 8:8). இந்த வசனப் பகுதியும் திரள் கூட்டத்தாரைக்குறிப்பிடுகிறது. இவர்கள் மிக சந்தோஷத்துடன் சத்திய ஏற்றுக்கொண்டாலும். வசனங்களை கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தகுதிப் பெறுமளவுக்கு வளர்ச்சியடைவதில்லை (1கொரிந்தியர் 3:1-3, 10- 15)

"ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்" (சங்கீதம் 45:13-15). இங்கு இராஜாவின் குமாரத்தி சிறு மந்தையாகவும். அவளோடு கூட இராஜாவின் அரமனைக்குள் செல்லும் தோழிகள் திரள் கூட்டத்தாரையும் அடையாளப்படுத்துகிறார்கள்.

"நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்: நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன். என் பாதங்களைக் கழுவினேன். நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். என் நேசருக்குக் கதவைத் திறந்தேன் என் நேசரோ இல்லை. போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன். அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை" (உன்னதப்பாட்டு 5:2, 3, 6), இப்படியாக சிலர் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டாலும், பாபிலோனை விட்டு வெளியே வருவதற்குத் தாமதித்து, இறுதியாக அதை விட்டு வெளியே வரும் போது அவர்கள் எதிர்பார்த்து வரும் பரம அழைப்புக்குரிய பந்தயப் பொருளைப் பெறும் வாய்ப்பு அடைப்பட்டுவிடும் (வெளிப்படுத்தல் 18:4),

புத்தியுள்ள கன்னிகைகள் என்ற உவமையில், சிறுமந்தை மற்றும் திரள் கூட்டத்தாருக்குள் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப்படுகிறது. "அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை" (மத்தேயு 25:1-12). திரி கத்தரிக்கப்பட்டு, எண்ணெயோடிருக்கும் விளக்கு மிகுந்த வெளிச்சத்தைக் கொடுக்கும். எண்ணெய் குறைவாக இருக்கும் விளக்கு புகைந்து. குறைவான வெளிச்சத்தைப் பிரகாசிக்கும். (சில நேரங்களில் நாம் வெளிச்சத்தைக் காட்டிலும் புகையைக் (அனல்) கொடுக்கிறோமா?)

எண்ணெய் பரிசுத்த ஆவியை அடையாளப்படுத்துகிறது. தேவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இராஜ்யத்தில் சேருவதற்கு. தேவையான பலத்தைக் கொடுப்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவிக்குள் ஒருவர் வளர வேண்டும். அது இரவல் வாங்கக்கூடிய பொருள் அல்ல (மத்தேயு 25:1-12). ஆகவே ஆண்டவர் இவர்களை மணவாட்டியாக அங்கீகரிக்கவில்லை. பெரிதான அழைப்புக்குரிய வாசல் அடைப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.