4. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்"(1 கொரிந்தியர் 15:17),
ஆண்டவரின் சரீரத்திற்குச் சுகந்தவர்க் கமிடுவதற்கு மகதலேனா மரியாளும். யாக்கோபின் தாயாகிய மரியாளும் வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் ஆண்டவரின் கல்லறைக்குச் சென்றார்கள். கல்வாரிச்சிலுவையின் அருகில் ஆண்டவருடைய இறுதி நிமிடங்கள் வரைக்கும் அவரோடிருந்த இந்த இரண்டு ஸ்திரீகள் - "அவர் உயிர்த்தெழுந்தார்" என்ற வார்த்தைகளை இயேசுவின் கல்லறையை முடிக்கொண்டிருந்த கல்லைப்புரட்டி, அதின்மேல் அமர்ந்திருந்த ஒரு பிரகாசமுள்ள தூதனிடமிருந்துக் கேட்பதற்கு முதலானவர்களாக இருந்தார்கள்.
ஆண்டவராகிய இயேசுவின்மேல் அவர்கள் கொண்டிருந்த அன்பு நிறைந்த பக்திக்குப் பரிசாக அந்தக் கல் அற்புதமாக அகற்றப்பட்டிருந்தது. அவர்களை மேற்கொண்டிருந்த பயத்தை உதறிவிட்டு கல்லறைக்குள் நுழைந்தார்கள். ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அந்தத் தூதன் சொல்லியருந்ததை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டனர். அவர்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி அவர்களின் இருதயத்தின் பாரங்களை வெளியேற்றியது. அவர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து. "இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்" என்ற இந்த ஒரு முக்கியமான சம்பவத்தை அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்கும்படி ஓடினார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்த போதனை - கிறிஸ்து விசுவாசத்திற்கு அஸ்திபாரமான ஆதாரமாகும். இந்தத் தவிர்க்க இயலாத உபதேசம் உண்மையாக இராவிட்டால். மற்ற அநேக கிறிஸ்தவ உபதேசங்கள் இடறியிருக்கும் என்பதே அடிப்படையானது. மரித்தேரிலிருந்து இயேசு உயிர்தெழும் வரையில் நிகழ் வாழ்க்கைக்குப் பின் எந்த ஒரு மனுஷனுக்கும் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கக்கூடும். ஆனால் இயேசு மரணத்தி லிருந்து உண்மையில் உயிர்த்தெழுந்தார் என்ற நிச்சயத்தில் நம்முடைய ஜீவனுள்ள நம்பிக்கை உறுதிப்பட்டிருக்கிறது. "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின் படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" (1பேதுரு 1:3).
இயேசுவின் ஈடுபலியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்த நம்முடைய கிறிஸ்துவ நம்பிக்கை அடிப்படையான உபதேசங்கள், இயகேவின் உயிர்த்தெழுதலைவிட்டுப்பிரிக்க இயலாது என்பதை 1கொரிந்தியர் 15:12-22 வசனங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. (தயவு செய்து வசனங்களை வாசிக்கவும்)
கிறிஸ்து மரித்தேரிலிருந்து எழுந்திருக் காவிட்டால் ஒருவரும் உயிர்த்தெழுந்திருக்க வாய்ப்பில்லை என்று பவுல் வலியுறுத்துகிறார். அதற்கு மாறாக, கிறிஸ்து மரித்தேரிலிருந்து எழுந்ததினால், மரித்த அனைவருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால். அப்போஸ்தலர்களின் பிரசங்கமும் நம்முடைய விசுவாசமும் வீணாயிரு க்குமே. நம்முடைய விசுவாசம் வீணாக இருந்தால், நாம் இன்னும் பாவத்தில் நிலைக்கொண்டிருப்போம் மற்றும் இது வரையில் மரித்தவர்கள். நித்தியமாக அழிந்திருப்பார்களே. இந்த வாழ்க்கையில் மட்டுமே நாம் கிறிஸ்துவுக்குள் நம்பிக்கைக் கொண்டவர் களாக இருந்தால். அனைத்து மனுஷரைப் பார்க்கிலும் நாம் பரிதபிக்கப்பட்டவர்களாக இருப்போம். இப்போது கிறிஸ்து மரித்தேரிலிருந்து எழுந்த முதற்பல னானார், "மனுஷனால் மரணம் உண்டான படியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1 கொரிந்தியர் 15:21-22). மரித்தோர் எழுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கை நாம் பெற்றிருப்பதினால் நாம் தேவனையும், நம்முடைய இயேசுவையும் புகழுவோம். ஏனெனில், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதை முழுமையாக விசுவாசிக்கக்கூடிய நம்பிக்கை நமக்குண்டு.
நாம் வேதாகமத்திலுள்ள சாட்சிகளை முழுமையாக நம்புவதினால், நம்முடைய விசுவாசத்திற்கு ஒரு ஆதாரமுண்டு அந்த ஆதாரம் நம்முடைய நம்பிக்கையே - நாம் கண்களினால் காணாமலிருந்தும் விசுவாசக் கண்களினால் கண்டு. மனதளவில் புரிந்துகொண்டு - நாம் வேதாகமத்தில் வாசிக்கக்கூடிய சகலமும் யேகோவா ஒருவர் இருக்கிறார் என்றும் அவரே அதற்கு ஆசிரியர் என்றும் அவருடைய ஞானம். நீதி மற்றும் அன்புக்கும் ஆதாரமாக நிரூபிக்கக்கூடிய பரிபூரண உணர்வை ஏற்படுத்துகிறது (யோவான் 3:16).
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான சாட்சி
ஈடுபலி என்ற அடிப்படையானப் போதனையி லிருந்து. தீமையை அனுமதித்தல் மற்றும் இயேசுவின் பலியினால் பெறப்பட்ட உயிர்த்தெழுதலின் ஆசிர்வாதங்கள் வரையிலும். நம்முடைய நம்பிக்கை நம்முடைய விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மேலும் வசனங்களின் பதிவுகளே, இதற்கான நியாயமான ஆதாரங்கள்-இயேகவின் உயிர்த்தெழுதலை உறுதியாகக்கொண்டிருக்கும் முத்திரை. கூடுதலாக, பெந்தெகொஸ்தே நாளின் போது நடந்த காரியமானது, இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையையும் இயேசுவின் பலி தெய்வீகமாக அங்கீகரிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்துகிறது. ஆதிகால கிறிஸ்துவர்கள் கவிசேஷத்தை மேலும் பரப்புவதற்கு. மேல் வீட்டு அறையில் கூடியிருந்த ஜனங்களுக்குப் பிரிந்திருக்கும் நெருப்பு நாவுகளையும், பலத்த காற்று, பல பாஷைகளைப் பேசுவதற்கான அற்புதமான வல்லமையும் கொடுக்கப்பட்டதற்கான சாட்சிகள் ஆகும் (அப்போஸ்தலர் 2:1-6),
மேலும் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்ததற்குப் பதினோரு அப்போஸ்தலர்களின் சாட்சிகளையும் பெற்றிருக்கிறோம் - இறுதியாக, தமஸ்குவுக்குச் செல்லும் வழியில். ஆவியில் மகிமையடைந்த இயேசுவின் நிலைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சி கொடுத்தார் (அப்போஸ்தலர் 9:3-5). இந்த ஒருமுறை மட்டுமல்ல, பத்து அல்லது பதினோரு முறைகள் இயேசு. உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக அவர் அப்போஸ்தலர்களுக்குக் காட்சியளித்தார்! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தீர்ப்பைக்குறித்து பன்னிரண்டு பேர்கொண்ட இந்த ஆய்வு குழு. முழு திருப்தி அடைந்ததினிமித்தம் அவர்கள் மரிக்கும் வரையில். பட்டப்பாடுகளை நீடிய பொறுமையோடு சகித்து. சாட்சியாக வெளிப்படுத்தினார்கள். (ஆவிக்குரிய மகிமை என்று கூறுகிறோம். இயேசு மனுஷ சரீரத்தில் எழுப்பப்படாமல் ஆவிக்குரிய மகிமையின் சரிரத்தில் எழுப்பப்பட்டார். அவருடைய பரிபூரணமான மாம்சீக ஜீவன் கடன்பட்ட ஆதாமுக்காக முழுமையான ஈடுபலியாகச் செலுத்தப்பட்டது ) (1தீமோத்தேயு 2:5-6; 1கொரிந்தியர் 15:21-22),
அப்போஸ்தலர்களுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட விசுவாச அறிக்கையின் படி. அப்போஸ்தலர் 17:31-ஆம் வசனம் தவறாகப் புரிந்துகொண்டதினிமித்தம். இயேசு மற்றும் பரிசுத்தவான்களும் மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்கள் என்று போதிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். "
ஆயினும் அதற்கான விளக்கத்தை 2 கொரிந்தியர் 5:16-ஆம் வசனம் தருகிறது. "ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின் படி அறியோம். இனி ஒருவரும் கிறிஸ்துவை மாம்சத்தில் காணமுடியாது. மற்றொரு வார்த்தைகளில் சொல்லப்போனால், அவர் ஒரு ஆவிக்குரிய ஜீவியாக எழுப்பப்பட்டார். அதுபோல நாமும் இப்பொழுது பெற்றிருக்கும் மாம்ச சரீரத்தில் அல்ல. ஆவிக்குரிய ஜீவியாக எழுப்பப்படுவோம். "மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது" (1 கொரிந்தியர் 15:50), "ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப "பட்டிருப்போம்" (ரோமர் 6:5),
கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசமாக இருக்கும் விசுவாசிகள் மற்றும் நீதிமானாக்கப்பட்ட அனைவரின் தெய்வீக தேவைகளை. தேவன் பூர்த்தி செய்வார் என்பதை. இயேசுவின் உயிர்த்தெழுதல் உறுதிப்படுத்துகிறது (ரோமர் 3:26). தெய்விக பிரமாணத்தின்படி கடன்பட்ட ஒரு பரிபூரண வாழ்க்கையை மீட்பதற்கு ஒரு சமமான பரிபூரண வாழ்க்கை அவசியமாகத் தேவைப்படுகிறது. கண்ணுக்கு கண், வாழ்க்கைக்கு வாழ்க்கை, ஒரு பரிபூரண மனுஷன், கீழ்ப்படியாமையினால், முழு மனித இனத்தையும் மரணதீர்ப்புக்குள் நடத்தினார். ஒரு பரிபூரண மனுஷனால் மட்டுமே. ஒரு பரிபூரண ஜீவனைக் கொடுத்து விழுந்துபோன அந்தப் பரிபூரண மனுஷனையும், அவன் இனத்தையும் மீட்க முடியும்.
'அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக் கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்" (ரோர் 5:19). (அநேகர் என்பது அனைவரையும். அனைவர் என்பது அநேகரையும் குறிக்கும். இந்த உலகத்தில் அநேகர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் மரண நித்திரையிலிருந்து எழுப்பப்படுவார்கள் யோவான் 5:28-29). முழு மனுக்குலமும் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டு, ஆதாம் இழந்த உண்மையான பரிபூரண நிலையை மறுபடியும் பெற்றுக்கொள்ள வாய்ப்புப்பெறுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது (அப்போஸ்தலர் 17:31: ரோமர் 3:26),
ஒருவர் மரணத்திலிருந்து எழுப்பப்படலாம். தொடர்ந்து மரண நிலையில் வாழ்ந்து மீண்டும் மரித்துவிடலாம். எடுத்துக்காட்டாக - லாசரு. நாயின் ஊர் விதவையின் மகன். தொற்காள் மற்றும் சூனேமியாளின் மகன். ஆனால் இவர்களின் உயிர்த்தெழுதலுக்கு. இயேசுவின் இரத்தம் எவ்விதமான பங்கும் அளிக்கவில்லை.
உயிர்த்தெழுதலுக்கான கிரேக்க வார்த்தையின் தெய்வீக கண்ணோட்டத்தை நாம் பார்க்கும் போது - எழுந்து நில் - என்று பொருள் கூறப்படுகிறது. (கிரேக்க - அனாஸ்டாசிஸ் - மீண்டும் ஜீவனோடு எழுந்திருப்பது. ஆதியில் ஆதாம் பெற்றிருந்தது போல முழுமையான ஜீவன்) வெளிப்படுத்தல் 20-ஆம் அதிகாரத்தில் காணப்படுகிறபடி ஆயிரவருட ஆட்சியில் மரணத்திலிருந்து இந்த முழு மனுக்குலம் உயிர்த்தெழுப்பப்பட்டு. உண்மையான பரிபூரணத்தை நோக்கிச் செல்வர்.
தெய்வீகமான பார்வையில் அனைவரும் மரித்திருக்கிறார்கள் என்று இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறார், "மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்" (மத்தேயு 8:22). மனுஷர் முழுமையான உயிர்த்தெழுதலை பெருமளவுக்கு உண்மையான ஜீவனைப் பெறவில்லை. (மனித பூரண நிலையாகிய முழுமையான திரும்பக்கொடுத்தல்- "உயிர்த்தெழுதல் மற்றும் சீர்பொருந்துதல் என்று விவரிக்கலாம்). ஆயினும். இயேசு பரிபூரண ஆவிக்குரிய இயல்பில் எழுப்பப்பட்டார். ஆகவே அவர் முழுமையான உயிர்த்தெழுதலைப் பெற்று, பரிபூண ஜீவனை அடைந்தார். அதுபோல 144000 பேராகிய சிறுமந்தையும் பரிபூரண ஆவிக்குரிய இயல்பில் எழுப்பப்படுவார்கள் என்று வேதாகமம் வாக்களித்திருக்கிறது (ரோமர் 6:4; 1யோவான் 3:2; வெளிப்படுத்தல் 14:1). இயேசுவுக்கு முன் பல தனிப்பட்ட நபர்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டாலும், மரணத்திலிருந்து முழுமையாக ஜீவனைப் பெறுவதற்கு இயேசுவே முதலானவர். கிறிஸ்துவே முதற்பலன்
"கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்' என்று 1கொரிந்தியர் 15:20ஆம் வசனம் கூறுகிறது. உயிர்த்தெழுதலைக்குறித்து நாம் நியாயமாக விவாதிக்கலாம். மரித்தோலிருந்து கிறிஸ்துவே முதற்பலனாக எழுந்தார் என்று நாம் கூறும்போது. அவருக்கு முன் மரித்தவர்களைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? உங்களுக்கு முன் மற்றவர்கள் சென்றிருந்தால், நீங்கள் முதன்மையாக இருக்க முடியாது. தானியேல், தாவீது இராஜா மற்றும் ஆபிரகாம் பரலோகத்தில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது ( யோவான் 3:13), சிலர் கிறிப்து வரவில்லை என்று நம்புகிறார்கள். ஆனால் சிலருடைய அடக்கத்தின் போது மரித்தவர்கள் பரலோக பரிசைப் பெற்று விட்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், "கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்" முதலாவது எழுந்திருப்பார்கள்' (1தெசலோனிக்கேயர் 4:16) என்று பவுல் கூறுகிறார். இந்த மரித்தோர் முதலில் எழுந்திருந்தால். நிச்சயமாக இவர்களுக்கு முந்தி, யாரும் உயிர்த்தெழுந்திருக்க முடியாது. கிறிஸ்து வருவதற்கு முன் அனைவரும் மரண நிலையில், நித்திரை செய்துகொண்டிருந்தார்கள் -ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களும் கூட நித்திரையி லிருந்தனர் (1தெசலோனிக்கேயர் வசனங்களை வாசிக்கவும்). 4:13-16
மரித்தோரிலிருந்து இயேசுவை தேவன் உயிர்த்தெழுப்பும் போது. மரணத்திலிருந்து எழும்பினவர்களில் இயேசுவே முதற்பலனானார். "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால். கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" (ரோமர் 8:11, 23),
நம்முடைய கோணத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதல் எதைப் பொருள்படுத்தும்? பாராட்டத்தக்க இயேசுவின் பலியும். பரமேறுதலும் என்பதற்கு நித்தியமாக நாம் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமல்ல. அதோடுகூட எந்த மனுஷனுக்கும் இனி ஒருபோதும் கொடுக்கப்படாத மாபெரும் அழைப்பிதழ் என்ற பொருள் என்பதை எண்ணி நாம் மகிழ்ந்து உற்சாக உணர்வைப் பெறுகிறோமா?
இக்கால யுகத்தில். தேவனுடைய அழைப்பானது, மிக உயர்வான தெய்வீக நிலையில் ஜீவிப்பதற்கு வாய்ப்பளிக்கிறது (பாவமற்ற அழியா, தெய்வீக நிலை). இந்த உலகம் மாம்சம் மற்றும் பிசாசை வெற்றிகரமாக ஜெயித்தால். நாம் அழியாதவர்களாக எழுப்பப்பட்டு. இந்தப் பூமியிலுள்ள முழு குடும்பங்களையும் ஆசீர்வதிக்கப்படுவதற்குத் தெய்விக குடும்பத்தின் உறுப்பினராக மாறி. இந்த அண்டசராசரம் முழுவதும். நித்தியத்திற்கும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். ஆஹா. நம்முடைய ஆண்டவர். மரணத்திலிருந்து எழும்பினார் என்ற செய்தியை எவ்வளவு ஆழமாக நம்முடைய இருதயங்கள் புரிந்துகொண்டதினால் நாம் களிகூர்ந்து இந்தப் பூமியின் முழு குடும்பங்களையும் ஆசீர்வதிக்கக்கூடிய ஆபிரகாமின் சந்ததியாக இருப்பதற்கு நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியை எண்ணி தேவனைப் புகழ்ந்து போற்றலாம் (1பேதுரு 1:4;2 பேதுரு 1:4:1கொரிந்தியர் 15:53; கலாத்தியர் 3:29; 1பேதுரு 1:3 மற்றும் எபிரெயர்; 12:2),
