48 அதிகாரம்

48 அதிகாரம்

இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்து வருகிறது. அவர் மரிக்கும் முன்பாக யோசேப்பின் இரண்டு குமாரரையும் ஆசீர்வதிக்கிறார். யாக்கோபு தன்னுடைய பேரப்பிள்ளைகளை, தன்னுடைய இரண்டு குமாரராக பாவித்து, அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

யாக்கோபுக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு அறிவிக்கப்படுகிறது. யோசேப்பு தன் இரண்டு குமாரரோடுகூட, மரணப்படுக்கையிலிருக்கும் தன் தகப்பனாரைப் பார்க்கப்போகிறார் (ஆதி 48:1,2). யாக்கோபு யோசேப்பின் இரண்டு குமாரரையும் தன்னுடைய குமாரர் என்று சொல்லுகிறார் (ஆதி 48:3#7).

யாக்கோபு மனாசேயையும், எப்பிராயீமையும் ஆசீர்வதிக்கிறார் (ஆதி 48:8#16). யாக்கோபு அவர்களை ஆசீர்வதிக்கும்போது தன் வலது கையை இளையவன்மீதும், இடது கையை மூத்தவன்மீதும் வைத்து ஆசீர்வதிக்கிறார். இவ்வாறு கைமாறி வைத்து ஆசீர்வதிப்பதற்கான காரணத்தையும் யாக்கோபு சொல்லுகிறார் (ஆதி 48:17#20). யாக்கோபு யோசேப்புக்கு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார் (ஆதி 48:21,22).

யாக்கோபின் வார்த்தைகள்

ஆதி 48:1#7

ஆதி 48:1. அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.

ஆதி 48:2. இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத்திடப்படுத்திக்கொண்டு, கட்டி-ன்மேல் உட்கார்ந்தான்.

ஆதி 48:3. யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

ஆதி 48:4. நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.

ஆதி 48:5. நான் உன்னிடத்தில் எகிப்துக்குப் வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.

ஆதி 48:6. இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.

ஆதி 48:7. நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.

யாக்கோபு மரணமடையும் காலம் சமீபித்திருக்கிறது. அவர் மரணப்படுக்கையிலிருக்கிறார். அவருடைய சரீரத்தில் வேதனையும் வருத்தமும் உண்டாயிற்று. ""உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது'' என்று யோசேப்புக்கு சொல்லப்படுகிறது. அப்பொழுது யோசேப்பு தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூட்டிக் கொண்டு, தன் தகப்பனாராகிய யாக்கோபை பார்க்கப்போகிறார் (ஆதி 48:1).

வியாதிப்படுக்கையிலிருக்கிறவர்களையும், மரணப்படுக்கையிலிருக்கிறவர்களையும் நாம் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லவேண்டும். வியாதியஸ்தர்களுக்காக விசுவாசத்தோடு ஜெபம்பண்ணவேண்டும். அவர்களுக்கு நம்மால் செய்யக்கூடிய நன்மைகள் ஏதாவது இருக்குமென்றால், அதை நாம் சந்தோஷமாய்ச் செய்யவேண்டும். வியாதியஸ்தருக்கு உதவி செய்வது நம்முடைய கடமை.

யோசேப்பு தன் தகப்பனாராகிய யாக்கோபை பார்க்கப்போகும்போது, தன்னோடுகூட, தன்னுடைய இரண்டு குமாரரையும் அழைத்துக்கொண்டு போகிறார். யாக்கோபு மரணப்படுக்கையிலிருக்கிறார். யாக்கோபின் ஆசீர்வாதத்தை யோசேப்பின் குமாரரும் பெற்றுக்கொள்ளவேண்டும். மனாசேயையும் எப்பிராயீமையும், பார்க்கும்போது யாக்கோபுக்கு மிகுந்த சந்தோஷமுண்டாகும். இந்த சந்திப்பை யோசேப்பின் குமாரரும் மறக்கமாட்டார்கள்.

""இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்'' என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்படுகிறது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டி-ன்மேல் உட்காருகிறார் (ஆதி 48:2). யாக்கோபு மரணப்படுக்கையிலிருந்தாலும் அவர் தன்னைத் திடப்படுத்திக்கொள்கிறார்.

வியாதியஸ்தரும், வயோதிகரும், தங்களை விருந்தினர்கள் பார்க்க வரும்போது, தங்களால் முடிந்த வரையிலும் தங்களைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக சந்தோஷமாயும், உற்சாகமாயும், ஜீவனோடும் இருக்கவேண்டும். வியாதியஸ்தர் தங்களுடைய வியாதியை எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு சோர்வு வந்துவிடும். வயோதிகர் தங்களுடைய மரணத்தைப்பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கு மரணபயம் வந்துவிடும்.

விசுவாசிகளாகிய நமக்கு வியாதியோ, பிரச்சனைகளோ, கஷ்டங்களோ இருந்தாலும், நம்மைநாமே திடப்படுத்திக்கொள்ளவேண்டும். கர்த்தர் நம்மைத் திடப்படுத்துவார். யோசேப்பு தன்னுடைய இரண்டு குமாரரோடு யாக்கோபை பார்க்க வந்திருக்கிறார். அப்போது யாக்கோபு கட்டிலின் மேல் உட்கார்ந்திருக்கிறார்.

கர்த்தர் யாக்கோபை ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தை யாக்கோபு மறந்துவிடவில்லை. யாக்கோபு இப்போது கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்கு சொந்தக்காரர்.

யாக்கோபு யோசேப்பை நோக்கி, ""சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து: நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்'' (ஆதி 48:3,4) என்று சொல்லுகிறார்.

யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே இரண்டு குமாரர் பிறந்திருக்கிறார்கள். யாக்கோபு அவர்கள் இருவரையும் தன்னுடைய சொந்த பிள்ளைகளாகப் பாவிக்கிறார். கர்த்தர் தனக்கு கொடுத்திருக்கும் விசேஷித்த ஆசீர்வாதத்தினால், யோசேப்பின் புத்திரரை ஆசீர்வதிக்கவேண்டும் என்று யாக்கோபு விரும்புகிறார்.

யோசேப்பின் புத்திரர் இருவரும் யாக்கோபுக்கு பேரப்பிள்ளைகளாயிருக்கிறார்கள். ஆனால் யாக்கோபோ அவர்கள் இருவரையும் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளாகப் பாவிக்கிறார். ""என் பேரும், என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது'' (ஆதி 48:16) என்று யாக்கோபு சொல்லுகிறார்.

யாக்கோபு யோசேப்பை நோக்கி, ""நான் உன்னிடத்தில் எகிப்துக்குப் வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்'' (ஆதி 48:5,6) என்று சொல்லுகிறார்.

தேவன் தனக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கும் பெரிய தேசத்தில் எப்பிராயீமுக்கும், மனாசேக்கும் பங்குள்ளது என்று யாக்கோபு கூறுகிறார். இவர்கள் இருவரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இரண்டு கோத்திரங்களுக்கு முற்பிதாக்களாக இருக்கிறார்கள். ஒருவன் யோசேப்பின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறான். மற்றொருவன் லேவியின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறான்.

லேவி கோத்திரத்தார் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆகையினால், கானான் தேசத்தைப் பங்கு பாகம் பிரிக்கையில், லேவி கோத்திரத்தாருக்குப் பங்கும், பாத்தியமும் கொடுக்கப்படவில்லை.

இஸ்ரவேல் கோத்திரத்தாரைப் பற்றி பல அட்டவணைகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. அவற்றில் எட்டு அட்டவணைகளில் லேவி ஒரு கோத்திரமாகச் சேர்க்கப்படவில்லை. (யோசு 13:33; எண் 18:20). வேறு ஏழு அட்டவணையில் லேவி ஒரு கோத்திரமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆதி 29, ஆதி 35 ஆகிய அதிகாரங்களில் லேவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதி 46, ஆதி 49; யாத் 1; எண் 34; உபா 33; நியா 5; 1நாளா 2; வெளி 7 ஆகிய அதிகாரங்களிலும் மேலும் சில இடங்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரில் ஒருசில கோத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

யாக்கோபு மரிக்கும் தருவாயில்கூட தன்னுடைய ராகேலைப் பற்றி நினைவுகூருகிறார். அவள்மீது யாக்கோபு வைத்திருக்கும் அன்பு மாறாமல் இருக்கிறது. (ஆதி 48:7; ஆதி 29:18-20,30).

யாக்கோபு இப்போது மரணப்படுக்கையிலிருந்தாலும், எகிப்து தேசத்திலே உயிரோடிருக்கிற இஸ்ரவேலின் குடும்பத்தாருக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை சொல்லுகிறார். எகிப்து தேசம் அவர்களுக்கு சொந்தமான தேசமல்ல. அந்த தேசத்திலே அவர்கள் சிறிதுகாலம் பரதேசியாய்த் தங்கியிருக்கிறார்கள். கானான் தேசமே இஸ்ரவேல் புத்திரருக்கு வாக்குத்தத்த தேசம். கானான் தேசத்தில் பஞ்சம் விலகிப்போன பின்பு, இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து தேசத்தை விட்டு, கானான் தேசத்திற்கு திரும்பி வரவேண்டும்.

இஸ்ரவேலின் குடும்பத்தார் எகிப்து தேசத்திலிருக்கும் காலத்திலே, எகிப்தியரோடு சம்பந்தம் கலக்கக்கூடாது. அவர்கள் எகிப்தியரின் விக்கிரகாராதனையில் பங்குபெறக்கூடாது. இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து தேசத்திலிருந்தாலும், அவர்கள் கானான் தேசத்திற்கு திரும்பி வந்து, அந்த தேசத்தை சுதந்தரித்து, அதை தங்களுக்குள்ளே பங்கிட்டு, அங்கே குடியேறவேண்டும். இதுவே யாக்கோபின் விருப்பம். மோசே எகிப்தின் பாவமான சந்தோஷத்தை வெறுத்ததுபோல, இஸ்ரவேல் புத்திரரும் எகிப்தியரின் பாவங்களை வெறுக்கவேண்டும்.

""விசுவாசத்தினாலே மோசேதான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்'' (எபி 11:24#26).

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளில் அநேகரை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். அவர்களிடத்தில் உலகப்பிரகாரமான நன்மைகள் ஏராளமாயிருக்கும். உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பாவம். கர்த்தருடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமான ஐசுவரியங்களினாலும், ஆசீர்வாதங்களினாலும் சோதிக்கப்பட்டு, கர்த்தரை விட்டு விலகிப்போய்விடக்கூடாது. கர்த்தருடைய பிள்ளைகள் வறுமையிலிருந்தாலும், கஷ்டங்களையும் பாடுகளையும் அனுபவித்தாலும், அவமானப்படுத்தப்பட்டாலும், கர்த்தரை விட்டு விலகிப்போய்விடக்கூடாது. அவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, கர்த்தரை உண்மையாய்ப் பின்பற்றவேண்டும்.

யாக்கோபு யோசேப்பின் புத்திரரைப்பற்றிச் சொல்லும்போது, ராகேல் மரணமடைந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்து சொல்லுகிறார். யாக்கோபு யோசேப்பை நோக்கி, ""நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன்'' (ஆதி 48:7) என்று சொல்லுகிறார்.

ராகேலின் மரணத்தைப்பற்றிய சம்பவம் ஆதி 35:19 ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ""ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கப்பண்ணப்பட்டாள்'' (ஆதி 35:19). நமக்கு மிகவும் பிரியமானவர்கள் மரித்துப்போகும்போது அவர்களை அடக்கம்பண்ணுகிறோம். அதுபோலவே நாமும் மரித்துப்போகும்போது நம்மையும் அடக்கம்பண்ணுவார்கள். எல்லோருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

யோசேப்பின் குமாரருக்கு ஆசீர்வாதம் ஆதி 48:8#20

ஆதி 48:8. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.

ஆதி 48:9. யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

ஆதி 48:10. முதிர்வயதினால் இஸ்ரவே-ன் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.

ஆதி 48:11. இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.

ஆதி 48:12. அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.

ஆதி 48:13. பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலதுகையினாலே இஸ்ரவே-ன் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையிலே இஸ்ரவே-ன் வலது கைக்கு நேராகவும் விட்டான்.

ஆதி 48:14. அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

ஆதி 48:15. அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

ஆதி 48:16. எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர், இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

ஆதி 48:17. தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின் மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:

ஆதி 48:18. என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.

ஆதி 48:19. அவன் தகப்பனே தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

ஆதி 48:20. இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்-, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.

யாக்கோபு யோசேப்பின் இரண்டு குமாரரையும் ஆசீர்வதிக்கிறார். இந்த ஆசீர்வாதம் மிகவும் விசேஷமானது. எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசிரியர் இந்த ஆசீர்வாதத்தைப்பற்றி நிருபத்திலே சொல்லியிருக்கிறார்.

""விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோ-ன் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்'' (எபி 11:21).

யாக்கோபு முதிர்வயதிலிருக்கிறார். அவருடைய கண்கள் மங்கலாயிருக்கிறது. அவரால் நன்றாய் பார்க்க முடியவில்லை. யோசேப்பின் இரண்டு குமாரரும் யாக்கோபுக்கு அருகாமையிலிருக்கிறார்கள். அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து, ""இவர்கள் யார்'' என்று கேட்கிறார். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி, ""இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர்'' என்று சொல்லுகிறார். அப்பொழுது யாக்கோபு, ""நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா'' என்று சொல்லுகிறார் (ஆதி 48:8,9).

யோசேப்பின் குமாரரை யாக்கோபு ஏற்கெனவே பார்த்திருக்கிறார். இப்பொழுது முதிர்வயதினால் யாக்கோபின் கண்கள் மங்கலாய் இருக்கிறது. ஆகையினால் யோசேப்போடு இருப்பவர்களை யாக்கோபால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. (ஆதி 48:10).யோசேப்பின் பிள்ளைகளுக்கு இப்பொழுது 22 வயது, 24 வயது இருக்கும் (ஆதி 41:46,53-54; ஆதி 45:6; ஆதி 47:9,28).

யாக்கோபின் தகப்பனாராகிய ஈசாக்கு முதிர்வயதிலிருந்தபோது, அவருடைய கண்களும் மங்கலாயிருந்தது. அவராலும் நன்றாய் பார்க்க முடியவில்லை. ஈசாக்கைப்போல இப்போது யாக்கோபின் கண்களும் மங்கலாயிருக்கிறது. முதிர்வயதில் இதுபோன்ற சரீரப்பிரச்சனைகள் எல்லோருக்கும் வரும். இந்தப் பிரச்சனைகள் சரீரத்திற்கு பாரமாகவும் வேதனையாகவும் இருக்கும். முதிர்வயதிலிருக்கிறவர்கள் தங்களுக்கு வரும் சரீரப்பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு, தங்களுக்கு இருக்கும் ஆரோக்கியத்தில் திருப்தியாயிருக்கவேண்டும்.

நம்முடைய சரீரத்தின் கண்கள் மங்கலாகயிருந்தாலும், நம்மால் நன்றாய் பார்க்க முடியாமலிருந்தாலும், நம்முடைய ஆவிக்குரிய விசுவாசக்கண்கள் தெளிவாயிருக்கவேண்டும். நாம் ஆவிக்குரிய காரியங்களை விசுவாசத்தினால் தெளிவாகப் பார்க்கவேண்டும்.

யோசேப்பு தன்னுடைய குமாரர் இருவரையும், யாக்கோபண்டையில் சேரப்பண்ணுகிறார். அப்பொழுது யாக்கோபு யோசேப்பின் குமாரரை முத்தம் செய்து அணைத்துக்கொள்கிறார். யாக்கோபின் கண்கள் மங்கலாயிருந்தாலும், அவருடைய கைகள் அன்பும் பாசமும் நிரம்பியதாகயிருக்கிறது.

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, ""உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்'' (ஆதி 48:11) என்று சொல்லுகிறார்.

யோசேப்பின் இரண்டு குமாரரும் யாக்கோபுடைய முழங்கால்கள் நடுவே இருக்கிறார்கள். யோசேப்பு தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பின்னிடப்பண்ணுகிறார். அதன் பின்பு யோசேப்பு யாக்கோபுடைய முகத்திற்கு முன்பாக தரை மட்டும் குனிந்து, தன்னுடைய தகப்பனாரை வணங்குகிறார்.

யாக்கோபு யோசேப்பையும் அவருடைய இரண்டு குமாரரையும் ஆசீர்வதிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தனக்கு கொடுத்த ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் அவர்களுக்கு எடுத்து சொல்லுகிறார். யாக்கோபின் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வழிபட்டு வணங்கி வந்தார்கள். அந்த தேவன் யாக்கோபை இந்நாள் வரைக்கும் ஆதரித்து வந்திருக்கிறார். கர்த்தருடைய தூதனானவர் எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி யாக்கோபை மீட்டுக்கொண்டார் (ஆதி 48:15,16).

""எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர்'' என்று யாக்கோபு சொல்லுகிறார். தூதனானவர் என்பது தேவனைக்குறிக்கும். தேவன் யாக்கோபை பெத்தேலில் ஆசீர்வதித்தார். தேவன் யாக்கோபின் ஜீவியகாலம் முழுவதிலும் அவரைப் பாதுகாத்து, பராமரித்து வந்திருக்கிறார் (ஆதி 31:11-13; ஆதி 32:24-32; ஓசி 12:4-5).

""பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள்'' என்று யாக்கோபு யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கிறார். சமுத்திரத்திலுள்ள மச்சங்களைப் போல திரளாய்ப் பெருகுதல் என்பது இதன் பொருள். பெருகுதல் என்பதற்கான எபிரெய வார்த்தை ""தாகா'' என்பதாகும் (ஆதி 1:20).

கைகளைத் தலையின்மேல் வைத்து ஆசீர்வதிப்பது எபிரெயருடைய பழக்கம். பிற்காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் இந்த வழக்கம் பிரபல்யமாயிற்று. திருச்சபையிலும் தலையின்மீது கைவைத்து ஆசீர்வதிக்கும் பழக்கம் உண்டாயிற்று.

எப்பிராயீமின் சந்ததியார் எண்ணிக்கையிலும், வல்லமையிலும் பெருகினார்கள் (எண் 1:32-33; எண் 2:18-20; உபா 33:17). சமஸ்த இஸ்ரவேல் ராஜ்ஜியம் வடக்கு ராஜ்ஜியம், தெற்கு இராஜ்ஜியம் என்று இரண்டாகப் பிரிந்த பின்பு, எப்பிராயீமின் பெயர் இஸ்ரவேலைக் குறிப்பதற்குப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

யோசேப்பின் குமாரருக்கு ஆசீர்வாதம்

ஆதி 48:8#20

நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற காலம் வரையிலும், நாம் கர்த்தரோடு தொடர்ந்து ஐக்கியத்திலிருக்கவேண்டும். அப்போது கர்த்தர் நமக்கு கொடுக்கும் நன்மைகள் ஒருபோதும் குறையாது. நாம் எந்நாளும் கர்த்தருடைய நன்மைகளை தொடர்ந்து அனுபவிப்போம். கர்த்தர் நம்முடைய அன்றாட தேவைகளை சந்தித்து நமக்கு ஆதரவாயிருப்பார். இந்நாள் வரைக்கும் நம்மை ஆதரித்து வருகிற தேவன், இனிமேல் வரப்போகிற நாட்களிலும் நம்மை ஆதரிப்பார். கர்த்தருடைய தூதனானவர் யாக்கோபை எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி மீட்டுக்கொண்டதுபோல, நம்மையும் மீட்டுக்கொள்வார்.

யாக்கோபு யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கும்போது, ""என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவன்'' என்று சொல்லுகிறார். இஸ்ரவேல் சந்ததியார் ஆபிரகாம் ஈசாக்கு ஆகியோருடைய முன்மாதிரிகளைப் பின்பற்றவேண்டும் என்னும் பொருளில் யாக்கோபு இந்த வாக்கியத்தை சொல்லுகிறார். ஆபிரகாமும் ஈசாக்கும் கர்த்தரை நம்பினார்கள். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொண்டார்கள். அவர்களைப்போலவே இஸ்ரவேல் சந்ததியாரும் கர்த்தரை விசுவாசிக்கவேண்டும். கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டும்.

யாக்கோபு யோசேப்பின் குமாரர் இருவரையும் ஆசீர்வதிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அப்பொழுது யோசேப்பு, தன்னுடைய குமாரர் இருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலதுகையினாலே இஸ்ரவே-ன் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையிலே இஸ்ரவே-ன் வலது கைக்கு நேராகவும் விடுகிறார் (ஆதி 48:13).

ஆனால் யாக்கோபோ மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைக்கிறார் (ஆதி 48:14).

யாக்கோபு தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு காண்கிறார். யாக்கோபு இவ்வாறு செய்வது யோசேப்புக்கு பிரியமில்லாதிருக்கிறது. ஆகையினால் யோசேப்பு எப்பிராயீமுடைய தலையின் மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுக்கிறார். யோசேப்பு யாக்கோபை நோக்கி, ""என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும்'' (ஆதி 48:17,18) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு வயது முதிர்ந்தவராயிருக்கிறார். அவருடைய கண்களும் மங்கலாயிருக்கிறது. ஆகையினால் அவர் கைபிசகாக தன்னுடைய வலது கையை நீட்டி இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்திருப்பார் என்று யோசேப்பு நினைக்கிறார். ஆனால் யாக்கோபோ மனமறிய தன் வலது கையை எப்பிராயீமுடைய தலையின்மீதும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மீதும் வைத்திருக்கிறார்.

யாக்கோபு தன்னுடைய கைகளை, யோசேப்பின் குமாரர்மீது மாறி வைத்திருப்பது தேவனுடைய வழிநடத்துதலாயிருக்கிறது. அவர் தப்பிதமாக தன்னுடைய கைகளை இவ்வாறு வைக்கவில்லை. அல்லது யோசேப்பின் குமாரருக்கு வேடிக்கை காண்பிக்கவேண்டும் என்பதற்காகவோ அல்லது விளையாட்டு காண்பிக்கவேண்டும் என்பதற்காகவோ இவ்வாறு செய்யவில்லை.

யோசேப்பின் குமாரர்மீது யாக்கோபுக்கு பட்சபாதமான அன்பும் இல்லை. அவர் இரண்டு குமாரரில் ஒருவனைƒ அதிகமாய் நேசித்து, மற்றவனை குறைவாக நேசிக்கவில்லை. யாக்கோபு தீர்க்கதரிசன ஆவியினால் ஏவப்பட்டு, வழிநடத்தப்பட்டு, தன்னுடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேலும், தன்னுடைய இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைக்கிறார்.

யாக்கோபு யோசேப்பின் புத்திரரை ஆசீர்வதிப்பதன் மூலமாக, மனாசே பெரியவனாயிருப்பான். எப்பிராயீமோ அவனைவிட அதிகம் பெரியவனாயிருப்பான். யோசுவா, யெரொபெயாம் ஆகியோர் எப்பிராயீமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். மனாசே கோத்திரம் பிற்காலத்தில் இரண்டாகப் பிரிகிறது. அவர்களில் பாதிக்கோத்திரத்தார் யோர்தானுக்கு அப்புறத்திலும், மீதி கோத்திரத்தார் யோர்தானுக்கு இப்புறத்திலும் குடியேறுகிறார்கள். இதனால் மனாசே கோத்திரத்தாரின் வல்லமை குறைந்துபோயிற்று.

யாக்கோபு யோசேப்பின் புத்திரருடைய தலைகளின்மேல் தன்னுடைய கைகளை மாறி வைத்து, அவர்களை ஆசீர்வதிக்கிறார். கிருபை என்பது கர்த்தர் இலவசமாகக் கொடுக்கும் ஈவு. தேவனுடைய கிருபைக்கும் இயற்கையின் பிரமாணத்திற்கும் தொடர்பு இல்லை. கர்த்தர் தமக்கு பிரியமானபடி, தமக்கு பிரியமானவர்களுக்கு, தமக்கு பிரியமான கிருபைகளைக் கொடுக்கிறார்.

கர்த்தருடைய கிருபைகளை பெற்றுக்கொள்வதற்கு நமக்கு ஒரு தகுதியுமில்லை. கர்த்தருடைய கிருபைகளை நம்மால் கிரயம் செலுத்தியும் விலைக்கு வாங்க முடியாது.

கர்த்தர் பல சமயங்களில், இளையவனை மூத்தவனுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறார். இதுவும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக, அவருடைய கிருபையினால் நடைபெறுகிறது. கர்த்தர் காயீனைவிட ஆபேலை அதிகமாய் உயர்த்தினார். அதுபோலவே யாபேத்தைவிட சேம் உயர்த்தப்பட்டான். நாகோர், ஆரான் ஆகியோர் ஆபிரகாமின் சகோதரர்கள். கர்த்தரோ ஆபிரகாமை அவருடைய சகோதரர்களுக்கு மேலாக உயர்த்தினார்.

ஏசா மூத்தவனாகயிருந்தாலும், கர்த்தர் இளையவனாகிய யாக்கோபை உயர்த்தினார். யாக்கோபின் புத்திரரில் ரூபன் மூத்தவன். அவனே சேஷ்டƒபுத்திரன். ஆனால் சேஷ்ட புத்திர ஆசீர்வாதம் ரூபனுக்கு கிடைக்கவில்லை. ரூபனைவிட யூதாவும் யோசேப்பும் கர்த்தருக்கு பிரியமானவர்களாயிருக்கிறார்கள்.

ஆரோன் மோசேயின் மூத்த சகோதரன். ஆனாலும் கர்த்தர் ஆரோனைவிட மோசேயை அதிகமாய் உயர்த்தி, அவரை அதிகமாய் பயன்படுத்தினார். தாவீது, சாலொமோன் ஆகியோர் தங்களுடைய சகோதரரில் இளையவர்கள். அவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருந்தாலும், இளையவர்களாகிய தாவீதையும் சாலொமோனையும் கர்த்தர் அதிகமாய் உயர்த்தினார்.

""கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்'' (1சாமு 16:7).

தன்னுடைய மூத்த குமாரனை, யாக்கோபு தன்னுடைய வலது கையினால் ஆசீர்வதிக்கவேண்டும் என்பது யோசேப்பின் விருப்பம். ஆனால் யாக்கோபோ தன் வலது கையை நீட்டி இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்து அவனை ஆசீர்வதிக்கிறார். யாக்கோபு இதை தெரிந்தே செய்கிறார்.

யாக்கோபு யோசேப்பிடம் இதுபற்றிச் சொல்லும்போது, ""அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள்'' (ஆதி 48:19) என்று சொல்லுகிறார்.

இவ்விதமாக யாக்கோபு அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதிக்கிறார். யாக்கோபு யோசேப்பின் குமாரரை நோக்கி, ""தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப் போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்'' என்று சொல்-, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைக்கிறார் (ஆதி 48:20).

யோசேப்புக்கு ஆசீர்வாதம்

ஆதி 48:21,22

ஆதி 48:21. பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப் போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,

ஆதி 48:22. உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்-னாலும், எமோரியர் கையி-ருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.

யாக்கோபு யோசேப்பின் குமாரரை ஆசீர்வதித்த பின்பு, அவர் யோசேப்பையும் ஆசீர்வதிக்கிறார். யாக்கோபின் குடும்பத்தார் இப்போது எகிப்து தேசத்திலே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கானான் தேசத்திற்கு திரும்பி வரவேண்டும். யாக்கோபு யோசேப்புக்கு இந்த விசேஷித்த ஆசீர்வாதத்தையும் சொல்லுகிறார்.

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, ""இதோ, நான் மரணமடையப் போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார்'' (ஆதி 48:21) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினார் (யாத் 12:51) மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எகிப்து தேசத்தை விட்டு எடுத்துக் கொண்டு போனார் (ஆதி 50:25; யாத் 13:19).

யாக்கோபைப்போலவே நமக்கு பிரியமானவர்களும் இந்த உலகத்தில் மரித்துப்போவார்கள். அப்போது, யாக்கோபு இங்கு சொல்லுகிற வார்த்தைகள், நமக்கு மிகவும் ஆறுதலாயிருக்கும். கர்த்தர் நம்மை பரமகானானுக்கு அழைத்துக்கொண்டு போவார். நமக்கு முன்பாக மரித்துப்போன, நம்முடைய ஆவிக்குரிய சிநேகிதர்கள் எல்லோரும் பரமகானானிலே இருக்கிறார்கள். தேவனோ நம்மோடு கூடயிருந்து, நம்மையும் பரமகானானுக்கு அழைத்துக்கொண்டு போவார். அங்கே அவர்களை நாம் காண்போம்.

தேவன் நம்மோடு கூடயிருப்பதினால், நாம் இந்தப் பிரபஞ்சத்திலே கலங்கவேண்டியதில்லை. நம்முடைய ஆவிக்குரிய சிநேகிதர்கள் மரித்துப்போனாலும், அவர்கள் இந்தப் பூமியிலே நம்மோடுகூட இருக்காவிட்டாலும், நம்முடைய தேவன் இங்கே நம்மோடு கூடயிருக்கிறார். நம்முடைய தேவன் நம்மை, நம்முடைய பிதாக்களின் தேசத்திற்கு, போகப்பண்ணுவார். அவரே நம்மை கரம்பிடித்து வழிநடத்தி அழைத்துக்கொண்டு போவார். ஆகையினால் நாம் இந்தப் பூமியிலே ஜீவிக்கும் காலம் முழுவதும், நம்பிக்கையில்லாதவர்களைப்போல துக்கமாயிருக்கக்கூடாது. நமக்கு ஒரு ஆனந்த பாக்கிய நம்பிக்கை உண்டு.

யாக்கோபு யோசேப்பின் சகோதரர்கள் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் யோசேப்புக்கோ ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். யாக்கோபு யோசேப்பை நோக்கி, ""உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்-னாலும், எமோரியர் கையி-ருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன்'' (ஆதி 48:22) என்று சொல்லுகிறார்.

சேஷ்டபுத்திரனாகிய ரூபனுக்கு யாக்கோபு தன்னுடைய ஆசீர்வாதத்தை கொடுக்கவில்லை. ரூபன் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியோடே சயனித்து, பாவம் செய்தபடியினால், அவன் தன் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக யாக்கோபு யோசேப்பிற்கு சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார் (ஆதி 49:3-4; 1நாளா 5:1-2).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.