46 அதிகாரம்
யாக்கோபு தன்னுடைய முதிர்வயதில் எகிப்து தேசத்திற்குப் போகிறார். கானான் தேசத்தில் கொடிய பஞ்சமுண்டாயிருக்கிறது. இந்தப் பஞ்சகாலத்தில், யோசேப்பு யாக்கோபை எகிப்து தேசத்திற்கு வருமாறு அழைக்கிறார். கர்த்தரும் யாக்கோபை எகிப்து தேசத்திற்குப் போக அனுமதிக்கிறார். யாக்கோபுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று (ஆதி 46:1#4).
யாக்கோபு எகிப்து தேசத்திற்குப்போகும்போது, அவரோடுகூட அவருடைய குடும்பத்தார் எல்லோரும் அங்கே போகிறார்கள் (ஆதி 46:5#27). யோசேப்பு எகிப்து தேசத்திலே யாக்கோபை அன்போடு வரவேற்கிறார் (ஆதி 46:28#34).
கர்த்தருடைய வார்த்தை
ஆதி 46:1#4
ஆதி 46:1. இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குக் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் ப-யிட்டான்.
ஆதி 46:2. அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
ஆதி 46:3. அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன், நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.
ஆதி 46:4. நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.
கானான் தேசத்தில் கொடிய பஞ்சமுண்டாயிருக்கிறது. யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும், எபிரொனிலே தங்கியிருக்கிறார்கள். யோசேப்பு யாக்கோபையும், அவருடைய குடும்பத்தாரையும், எகிப்து தேசத்திற்கு வருமாறு அழைக்கிறார். யாக்கோபு தன் குமாரன் யோசேப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, எகிப்து தேசத்திற்கு பிரயாணம்பண்ண ஆயத்தமாகிறார்.
யாக்கோபு எகிப்து தேசத்திற்கு போகும் முன்பாக, பெயர்செபாவுக்கு புறப்பட்டுப்போகிறார். யாக்கோபு இங்கே தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்கு பலியிடுகிறார் (ஆதி 46:1).
யாக்கோபு இப்போது மம்ரேயில் இருக்கிறார். பெயர்செபா மம்ரேயிலிருந்து 25 மைல் தூரத்தில் உள்ளது.
இந்த வசனத்தில் தேவனைப்பற்றிச் சொல்லப்படும்போது, அவர் ஆபிரகாமின் தேவன் என்று கூறப்படாமல், ஈசாக்கின் தேவன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஈசாக்கு தன் குமாரனாகிய யாக்கோபிற்கு மெய்யான தேவனைப் பற்றிக் கற்றுக் கொடுத்தார்.
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமானார். தேவன் எட்டாம் முறையாக யாக்கோபிற்கு தரிசனமான சம்பவம். (ஆதி 28:13-15; ஆதி 31:3,11-13; ஆதி 32:1-3,24-32; ஆதி 35:1-5, 9-15; ஆதி 46:1-4).
ஆபிரகாம் இந்த ஸ்தலத்தில் தேவனை சந்தித்தார். ""ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுது கொண்டார்'' (ஆதி 21:33).
யாக்கோபின் தகப்பனாகிய ஈசாக்கும், பெயர்செபாவிலே தேவனைத் தொழுதுகொண்டார். ""அங்கே அவன் ஒரு ப-பீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்'' (ஆதி 26:25).
யாக்கோபு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பார்க்கும்போது, அவரை ஈசாக்குடைய தேவனாகப் பார்க்கிறார். கர்த்தர் ஈசாக்கோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். அவர் தேவனை உடன்படிக்கையின் தேவனாகப் பார்க்கிறார்.
யாக்கோபு பெயர்செபாவிலே தேவனுக்கு பலியிடுகிறார். யாக்கோபின் ஜீவியத்திலே ஆசீர்வாதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. யாக்கோபுக்கு முதிர்வயதாகயிருந்தாலும், அவர் எதிர்பாராத நன்மைகளெல்லாம், அவருடைய ஜீவியத்திலே இப்போது நடைபெறுகிறது. யாக்கோபு தன் குமாரன் யோசேப்பு உயிரோடிருக்கிறார் என்னும் நல்ல செய்தியை கேள்விப்பட்டிருக்கிறார். தேவன் தனக்கும், தன்னுடைய குடும்பத்தாருக்கும் செய்த நன்மைகளையெல்லாம் நினைவுகூரும் வண்ணமாக, யாக்கோபு தேவனுக்கு பலிசெலுத்துகிறார்.
யாக்கோபு இப்போது கானான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு புறப்பட்டுப்போகிறார். அவர் அந்நிய தேசத்திற்கு பிரயாணமாய்ப்போகும்போது, தேவனுடைய பிரசன்னம் அவரோடு கூடயிருக்கவேண்டும். தேவன் யாக்கோபோடு கூடவந்தால்தான், அவருக்கு பிரயாணத்தில் ஆசீர்வாதம் கிடைக்கும். தேவனுடைய பரிசுத்தமான பிரசன்னம் தன்னுடைய பிரயாணத்தில் தன்னோடு கூட வரவேண்டும் என்று விரும்பி, அவர் தேவனுக்கு பலியிடுகிறார்.
யாக்கோபு தேவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்புகிறார். எகிப்து தேசத்திற்கு அவர் போகும் பிரயாணத்தைக் குறித்து, கர்த்தரிடத்தில் விசாரிக்க விரும்புகிறார். ƒபுறஜாதியார் பலிசெலுத்தி, தங்கள் தெய்வங்களிடத்தில், தங்கள் காரியங்களைக் குறித்து விசாரிப்பது வழக்கம். ஒருவேளை யாக்கோபு, புறஜாதியாரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, தேவனுக்கு பலி செலுத்தி, தேவனிடத்தில் தன்னுடைய காரியங்களைக் குறித்து விசாரித்திருக்கலாம்.
தேவனுடைய அனுமதியில்லாமல் யாக்கோபு கானான் தேசத்தை விட்டு எகிப்து தேசத்திற்கு புறப்பட ஆயத்தமாயில்லை. கர்த்தர் அனுமதி கொடுக்கவில்லையென்றால் யாக்கோபு எகிப்து தேசத்திற்கு போகமாட்டார். கானான் தேசத்தில் பஞ்சம் கொடியதாயிருந்தாலும், யாக்கோபு தன் குடும்பத்தாரோடு, கானான் தேசத்திலேயே இருந்துவிடுவார்.
தேவன் இஸ்ரவேலை சந்திக்கிறார். யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்னும் மறுபெயருமுள்ளது. அன்று இரவிலே, தேவன் இஸ்ரவேலுக்கு தரிசனமாகிறார். நாம் தேவனிடத்தில் கருத்தாய் ஜெபம்பண்ணினால், அவர் நம்மையும் சந்திப்பார். நாம் தேவனுடைய சமுகத்தில் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசினால், அவரும் நம்மோடு கூட பேசுவார்.
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி, ""யாக்கோபே, யாக்கோபே'' என்று கூப்பிடுகிறார்; யாக்கோபு ""இதோ, அடியேன்'' என்று சொல்லுகிறார். அப்பொழுது தேவன், ""நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன், நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்'' (ஆதி 46:2,3) என்று சொல்லுகிறார்.
தேவன் தம்மை ஈசாக்கின் தேவன் என்று அழைத்துக் கொள்கிறார். தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்கு இஸ்ரவேல் பலியிடுகிறார் (ஆதி 46:1).
தேவன் யாக்கோபுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார். தான் எகிப்து தேசத்திற்கு போவது தேவனுடைய சித்தமா அல்லது அது தேவனுடைய சித்தமில்லையா என்பது யாக்கோபுக்கு இதுவரையிலும் தெரியவில்லை. தேவனோ யாக்கோபை நோக்கி, ""நீ எகிப்து தேசத்திற்குப்போக பயப்படவேண்டாம்'' என்று ஆறுதலாகச் சொல்லுகிறார்.
எகிப்து தேசத்திற்குப் போக ஈசாக்கிற்குத் தடைபண்ணப்பட்டிருந்தது. (ஆதி 26:2) ஆதி 15:13-14 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் தீர்க்தரிசனத்தின் மீதமுள்ள பகுதி நிறைவேற வேண்டிய காலம் இப்போது வந்திருக்கிறது. ஆகையினால் இஸ்ரவேல் எகிப்துக்குப் போவதற்கு அனுமதி கிடைக்கிறது.
ஒரு அந்நிய தேசத்தில் ஏராளமான ஜனங்களையும், கால்நடைகளையும் எப்படி அழைத்துச் சென்று, அங்கு தங்க வைப்பது என்னும் சந்தேகமும், பயமும் யாக்கோபின் மனதில் இருக்கிறது (ஆதி 46:3). ஆகையினால் தேவன் யாக்கோபிற்குத் தரிசனமாகி, எகிப்திற்குப் போகப் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறார்.
தன்னுடைய சந்ததியார் எகிப்து தேசத்தில் ஒடுக்கப்படுவார்கள் என்பது இஸ்ரவேலுக்குத் தெரியும்(ஆதி 15:13-14). உடன்படிக்கையின் பிரகாரம் இஸ்ரவேல் சந்ததியார் எகிப்தில் வந்து தங்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான், யாக்கோபு தேவனிடமிருந்து ஒரு நிச்சயமான செய்தியை எதிர்பார்க்கிறார்.
நாமும் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக வரும்போது, யாக்கோபைப்போல பயபக்தியோடு வரவேண்டும். நாம் கர்த்தருடைய சமுகத்திலே பயத்தோடும் நடுக்கத்தோடும் சந்தோஷமாயிருக்க வேண்டும்.
யாக்கோபு எகிப்து தேசத்திற்கு பிரயாணம்பண்ண ஆயத்தமாயிருக்கிறார். பிரயாணத்தைக் குறித்து அவருடைய மனதிலே பலவிதமான சிந்தனைகள் உண்டாயிற்று. யாக்கோபு இப்போது வயதுமுதிர்ந்தவராயிருக்கிறார். கானான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு நீண்ட தூரம் பிரயாணம் பண்ணவேண்டும்.
எகிப்து தேசம் விக்கிரகாராதனை மிகுந்த தேசம். தன்னுடைய குமாரர்கள் எகிப்து தேசத்திற்குப் போனால், அங்கே அவர்கள் எகிப்தியரின் விக்கிரகாராதனையை பின்பற்றுவார்களோ என்னும் பயம் யாக்கோபின் மனதில் உண்டாயிற்று. யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனை தொழுதுகொண்டு, அவருக்கு பலிசெலுத்துகிறார். தன்னுடைய பிள்ளைகள், தங்கள் முற்பிதாக்களின் தேவனை மறந்துவிட்டு, எகிப்தியரின் விக்கிரகங்களை பின்பற்றிப்போய்விடுவார்களோ என்னும் பயமும் யாக்கோபின் மனதில் உண்டாயிற்று.
கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான தேசம். அந்த தேசத்தில் இப்போது பஞ்சம் கொடிதாயிருக்கிறது. ஆனாலும் கானான் தேசமே கர்த்தர் இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தமாகக் கொடுத்திருக்கிற தேசம். எகிப்து தேசம் நைல் நதி ஓடுகிற செழிப்பான தேசம். ஆனாலும் அது இஸ்ரவேலருக்கு அந்நிய தேசம். தன்னுடைய குமாரர் எகிப்து தேசத்தின் அழகிலும், ஆடம்பரத்திலும் மயங்கி, வாக்குத்தத்த தேசமாகிய கானான் தேசத்தை மறந்துவிடுவார்களோ என்னும் பயமும் யாக்கோபின் மனதில் உண்டாயிற்று.
தேவனோ யாக்கோபை ஆசீர்வதிக்கிறார். ""எகிப்து தேசத்திலே உன்னை பெரிய ஜாதியாக்குவேன்'' என்று தேவன் யாக்கோபுக்கு சொல்லுகிறார். யாக்கோபு எகிப்து தேசத்திற்கு போனாலும், தேவனுடைய பிரசன்னம் அவரோடு கூடப்போகும். ""நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்'' என்று தேவன் யாக்கோபுக்கு வாக்குப்பண்ணுகிறார்.
எகிப்து தேசத்திலே யாக்கோபோ அல்லது அவருடைய குடும்பத்தாரோ காணாமல்போய்விடமாட்டார்கள். யாக்கோபு எகிப்து தேசத்தில் மரித்தாலும், அவர் கானான் தேசத்திலே அடக்கம்பண்ணப்படுவார். கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன்னை திரும்பவும் வரப்பண்ணுவேன்'' என்று சொல்லுகிறார்.
யாக்கோபு எகிப்து தேசத்திலே மரித்துப்போனார். ஆனாலும் அவருடைய சரீரம் கானான் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கே அடக்கம்பண்ணப்படுகிறது. இஸ்ரவேலின் சந்ததியார் கானான் தேசத்திலே குடியேறுகிறார்கள். கர்த்தர் வாக்குமாறாதவராயிருக்கிறார்.
யாக்கோபைப்போல, நம்முடைய ஜீவியத்தில் நாமும் வேதனையான பள்ளத்தாக்குகளில் இருக்கலாம். நம்முடைய வருங்காலம் எப்படியிருக்குமோ என்னும் நிச்சயமில்லாதவர்களாய் நாம் தவிக்கலாம். ஆனாலும் நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மைக் கரம்பிடித்து வழிநடத்துவார். நாம் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமும், அவருடைய வழிநடத்துதலின் பிரகாரமும், நாம் எங்கே போனாலும், அங்கே தேவனுடைய பரிசுத்த பிரசன்னம் நம்மோடு கூட வரும். நாம் ஆராதிக்கிற தேவன், நாம் போகவேண்டிய இலக்குக்கு, நம்மை கரம் பிடித்து வழிநடத்துவார்.
நாம் மரண பள்ளத்தாக்கிலே நடந்தாலும், நம்முடைய தேவன் அங்கேயும் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை மரணப்பள்ளத்தாக்கிலிருந்து மேலான மகிமைக்கு அழைத்து செல்வார்.
யாக்கோபு தேவனுக்கு பலி செலுத்தி அவரைத் தொழுதுகொள்கிறார். தன்னுடைய போக்கிலும் வரத்திலும் தேவன் தன்னோடு கூடயிருப்பார் என்னும் நம்பிக்கை அவருடைய மனதிலிருக்கிறது. ஆகையினால் யாக்கோபின் ஜீவியமும் மரணமும் அவருக்கு ஆறுதலாயிருக்கிறது. ""யோசேப்பு தன் கையால் உன் கண்ணை மூடுவான்'' என்று தேவன் யாக்கோபுக்கு சொல்லுகிறார். இது யாக்கோபுக்கு ஆறுதலான வார்த்தையாயிருக்கிறது.
""யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்'' என்னும் வாக்கியத்திற்கு, ""மரணத்தின்போது சமாதானமாக மரணமடையவாய். நீ மரித்த பின்பு, உன் பிள்ளை உன் கண்களை மூடும்'' என்று பொருள். கிழக்கு தேசத்தில் ஒருவர் மரித்த பின்பு, அவருடைய நெருங்கிய உறவினர்கள் அவருடைய கண்களை மூடுவது வழக்கம். தன்னுடைய குமாரன் தன் கண்களை மூடுவான் என்னும் வாக்குத்தத்தம் யாக்கோபிற்கு ஆறுதலாக இருக்கிறது (ஆதி 50:1).
எகிப்திற்கு போனவர்கள்
ஆதி 46:5#27
ஆதி 46:5. அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவி-ருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவே-ன் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,
ஆதி 46:6. தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.
ஆதி 46:7. அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக் கொண்டுபோனான்.
ஆதி 46:8. எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.
ஆதி 46:9. ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லுô, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
ஆதி 46:10. சிமியோனுடைய குமாரர் எமுவேல்,யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்தீரியின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
ஆதி 46:11. லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
ஆதி 46:12. யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
ஆதி 46:13. இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
ஆதி 46:14. செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
ஆதி 46:15. இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.
ஆதி 46:16. காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரே- என்பவர்கள்.
ஆதி 46:17. ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
ஆதி 46:18. இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
ஆதி 46:19. யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
ஆதி 46:20. யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
ஆதி 46:21. பென்யமீனுடைய குமாரர், பேலா பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், எகி, ரோஷ், முப்பிம், உப்பிம் ஆர்து என்பவர்கள்.
ஆதி 46:22. ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.
ஆதி 46:23. தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
ஆதி 46:24. நப்த-ன் குமாரர் யாத்சியேல்,கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
ஆதி 46:25. இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.
ஆதி 46:26. யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.
ஆதி 46:27. யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
யாக்கோபு எகிப்து தேசத்திற்கு புறப்பட்டுப்போவதற்கு முன்பாக தேவனுக்கு பலிசெலுத்துகிறார். அவர் தேவனுடைய ஆறுதலான வார்த்தைகளையும், ஆசீர்வாதமான வார்த்தைகளையும் பெற்றுக்கொள்கிறார்.
அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவி-ருந்து பிரயாணம் புறப்படுகிறார். இஸ்ரவே-ன் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு பிரயாணம்பண்ணுகிறார்கள் (ஆதி 46:5).
அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவர் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போகிறார்கள் (ஆதி 46:6).
யாக்கோபு தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக் கொண்டுபோகிறார் (ஆதி 46:7).
""தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும்'' என்பது தீனாளும், அவளுடைய குமாரர்களுடைய குமாரத்திகளும் ஆகும் (ஆதி 46:15,17). இவர்கள் எல்லோருமே கர்ப்பப் பிறப்பின் பிரகாரம் யாக்கோபின் குமாரத்திகள் என்று கருதப்படுகிறார்கள். (ஆதி 46:26).
யாக்கோபு தேவனை நம்பி எகிப்து தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். யாக்கோபு வயது முதிர்ந்தவராகயிருந்தாலும், தேவன் தன்னை பெலப்படுத்துவார் என்றும், அவர் தன்னோடுகூட எகிப்து தேசத்திற்கு வருவார் என்றும் யாக்கோபு நம்பிக்கையோடு போகிறார்.
கானான் தேசத்தை விட்டு பிரிந்துபோவது யாக்கோபுக்கு வருத்தமான காரியம். ஆனாலும் தேவன் யாக்கோபுக்கு, ""நான் உன்னை கானான் தேசத்திற்கு திரும்பவும் வரப்பண்ணுவேன்'' என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்த வார்த்தை யாக்கோபுக்கு ஆறுதலாயிருக்கிறது.
யாக்கோபு எகிப்து தேசத்திற்குப்போனாலும் அவருடைய சரீரம், கானான் தேசத்தில் அடக்கம்பண்ணப்படும் என்பது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது. யாக்கோபு தன்னுடைய கல்லறையை நோக்கி பிரயாணம்பண்ணவும் ஆயத்தமாயிருக்கிறார். கல்லறைக்கு முன்பாக என்னென்ன காரியங்கள் சம்பவித்தாலும், அதையும் சந்திப்பதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார். யாக்கோபைப்போலவே, விசுவாசிகளாகிய நாமும், கர்த்தருடைய அடிச்சுவடுகளை விசுவாசத்தோடு பின்பற்றி, நமக்கு நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும்.
எகிப்து தேசத்திற்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் இஸ்ரவேலின் புத்திரர். பிற்காலத்தில் இவர்கள் இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கு பிதாக்களாயிருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.
யாக்கோபு கானான் தேசத்தைவிட்டு எகிப்து தேசத்திற்கு புறப்பட்டுப்போகும்போது, தன்னுடைய குடும்பத்தார் எல்லோரையும், தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகிறார். கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது. யாக்கோபு தன்னுடைய குடும்பத்தார் யாரையும், இந்தப் பஞ்சகாலத்திலே, கானான் தேசத்தில் விட்டுவிடவில்லை.
கர்த்தர் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை கொடுப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினார். இப்போது அந்த வாக்குத்தத்தம் சொல்லப்பட்டு 215 வருஷங்களாயிற்று. கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவதாக சொன்னார். இப்போது யாக்கோபின் குடும்பத்தில் எழுபது பேர் மாத்திரமே இருக்கிறார்கள் (ஆதி 46:27).
கர்த்தர் தமக்கு சித்தமான வேளையிலே, கொஞ்சம் பேராயிருக்கிறவர்களை, அநேகம் பேராய் மாற்றுவார்.
""சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்'' (ஏசா 60:22).
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவருடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன். ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லுô, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். சிமியோனுடைய குமாரர் எமுவேல்,யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்தீரியின் குமாரனாகிய சவுல் என்பவர்கள் (ஆதி 46:8#10).
இந்த வசனப்பகுதிகளில் கூறப்பட்டிருக்கும் பெயர்களுக்கும், அதே நபர்களுக்கு வேதாகமத்தின் மற்ற பகுதிகளில் கூறப்பட்டிருக்கும் பெயர்களுக்கும் வேறுபாடு உள்ளது. வேதாகமத்தில் ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொடுக்கப்படுவது வழக்கமான சம்பவமாகும்.
எகிப்து தேசத்தின் பழங்கால ஓவியங்களில் தாடிகள் வளர்த்திருக்கும் செமிட்டிக் இனத்தார் (எபிரெயர்) எகிப்து தேசத்திற்குள் குடியேற வருவது பற்றி வரையப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்கள் உடமைகளைச் சுமந்து கொண்டு, தங்கள் மனைவி பிள்ளைகளோடு எகிப்து தேசத்திற்கு வருகிறார்கள்.
யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன் தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வில்லை. யாக்கோபின் மறுமனையாட்டியோடு இவன் சயனித்ததினால், இவனுக்கு ஆசீர்வாதம் கொடுக்கப்படவில்லை (ஆதி 35:22). ரூபனுக்குப் பதிலாகச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதம் யோசேப்பிற்குக் கொடுக்கப்படுகிறது (1நாளா 5:1#2).
யூதாவுக்கும், சிமியோனுக்கும் கானானிய ஸ்திரீகளின் மூலமாக குமாரர்கள் பிறந்திருக்கிறார்கள் (ஆதி 46:10; ஆதி 38:1#30).
லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள் (ஆதி 46:11#14).
ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள். இவ்விருவரும் சந்ததி இல்லாமல் கானான் தேசத்தில் இறந்துபோன படியினால், எகிப்துக்குப் போனவர்களுடைய அட்டவணையில் இவர்களுடைய பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
யூதாவின் குமாரரைப் பற்றி கூறப்படும்போது, இயேசுகிறிஸ்து பாரேசின் வம்சவழியில் வருகிறார். (ஆதி 46:12; ரூத் 4:18; 1நாளா 2:5; மத் 1:3; லூக்கா 3:33).
யோபுவின் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் யோபு இந்த மனுஷனாக இருக்கலாம்.
இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர் (ஆதி 46:15).
லேயாளின் சந்ததியார் முதலாவதாகக் கூறப்படுகிறார்கள். ஏனெனில் யாக்கோபிற்கு இவள் மூலமாகவே முதலாவதாக பிள்ளைகள் பிறந்தார்கள். (ஆதி 46:8-15) சில்பாளின் பிள்ளைகள் இரண்டாவதாகக் கூறப்படுகிறார்கள். ஏனெனில் இவள் லேயாளின் வேலைக்காரி. (ஆதி 46:16-18) இதற்குப் பின்பு ராகேலின் குமாரர்களும் (ஆதி 46:19-22) அதன் பின்பு அவளுடைய வேலைக்காரியாகிய பில்காளின் குமாரர்களும் வரிசையாகக் கூறப்பட்டிருக்கிறார்கள் (ஆதி 46:23-25).
""அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்'' என்று ஆதி 46:15 ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி 46:18,22,25 ஆகிய வசனங்களில் அவர்கள் 37 பேர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
யாக்கோபு லேயாள் ஆகியோருக்கு 33 குமாரர்கள் பிறக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. ரூபனும், அவனுடைய 4 குமாரரும் (ஆதி 46:8-9)
2. சிமியோனும், அவனுடைய 6 குமாரரும் (ஆதி 46:10)
3. லேவியும் அவனுடைய 3 குமாரரும் (ஆதி 46:11)
4. யூதாவும், அவனுடைய 5 குமாரரும், 2 பேரப்பிள்ளைகளும் (ஆதி 46:12)
5. இசக்காரும், அவனுடைய 4 குமாரரும் (ஆதி 46:13)
6. செபுலோனும், அவனுடைய 3 குமாரரும் (ஆதி 46:14)
காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரே- என்பவர்கள். ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள். இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள் (ஆதி 46:16#18).
யாக்கோபு, சில்பாள் ஆகியோருக்கு 15 குமாரர்கள் பிறக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. காத்தும், அவனுடைய 7 குமாரரும் (ஆதி 46:16)
2. ஆசேரும், அவனுடைய 6 குமாரரும் (ஆதி 46:17)
யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள். பென்யமீனுடைய குமாரர், பேலா பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், எகி, ரோஷ், முப்பிம், உப்பிம் ஆர்து என்பவர்கள். ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர் (ஆதி 46:19#22).
யாக்கோபு, ராகேல் ஆகியோருக்கு 14 குமாரர்கள் பிறக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. யோசேப்பும், அவருடைய 2 குமாரரும் (ஆதி 46:19-20)
2. பென்யமீனும், அவனுடைய 10 குமாரரும் (ஆதி 46:19,21)
பென்யமீனுக்குப் பத்து குமாரர்கள் பிறந்தார்கள் ஆதி 43:8; ஆதி 44:20,22,30-34 ஆகிய வசனங்களில் பென்யமீன் பிள்ளையாண்டான் என்று கூறப்பட்டிருப்பதினால், அவன் அப்போது சிறுபிள்ளையாக இருந்திருக்க முடியாது. அப்போது பென்யமீனின் வயது 30. பென்யமீன் தன்னுடைய 15 அல்லது 20 வயதிற்குள் திருமணம் செய்திருக்க வேண்டும்.
தாணுடைய குமாரன் உசீம் என்பவன். நப்த-ன் குமாரர் யாத்சியேல்,கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள். இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர் (ஆதி 46:23#25).
யாக்கோபு, பில்காள் ஆகியோருக்கு 7 குமாரர்கள் பிறக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. தாணும், அவனுடைய குமாரனும் (ஆதி 46:23)
2. நப்தலியும், அவனுடைய 4 குமாரரும் (ஆதி 46:24)
யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவருடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவர் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர். யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர் (ஆதி 46:26,27).
யாக்கோபின் கர்ப்பப்பிறப்பான 66 பேர்களைப்பற்றிய விவரம் வருமாறு:
1. யாக்கோபுடைய சொந்த 11 குமாரரும், ஒரு குமாரத்தியும் = 12
2. ரூபனின் குமாரர்கள் = 4 (ஆதி 46:9)
3. சிமியோனின் குமாரர்கள் = 6 (ஆதி 46:10)
4. லேவியின் குமாரர்கள் = 3 (ஆதி 46:11)
5. யூதாவின் குமாரரும், பேரப்பிள்ளைகளும் = 5 (ஆதி 46:12)
6. இசக்காரின் குமாரர்கள் = 4 (ஆதி 46:13)
7. செபுலோனின் குமாரர்கள் = 3 (ஆதி 46:14)
8. காத்தின் குமாரர்கள் = 7 (ஆதி 46:16)
9. ஆசேரின் குமாரரும், பேரப்பிள்ளைகளும், பேத்தியும் = 7 (ஆதி 46:17)
10. தாணின் குமாரன் = 1 (ஆதி 46:23)
11. நப்தலியின் குமாரர்கள் = 4 (ஆதி 46:24)
12. பென்யமீனின் குமாரர்கள் = 10 (ஆதி 46:21)
மொத்தம் (ஆதி 46:26) = 66பேர்
யூதாவின் இரண்டு குமாரர்கள் கானானில் மரித்துப் போனார்கள். ஆகையினால் இவர்கள் யாக்கோபோடு எகிப்துக்குப் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. யோசேப்பும், அவருடைய குமாரரும் ஏற்கெனவே எகிப்தில் இருக்கிறார்கள்.
""எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்'' என்பதற்கான விளக்கம் வருமாறு : ஆதி 46:27 ஆவது வசனத்தில் 70 பேர் என்றும், அப் 7:14 ஆவது வசனத்தில் 75 பேர் என்றும் கூறப்பட்டிருப்பதிலிருந்து இது வேறுபிரித்து காண்பிக்கப்படுகிறது. இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் 66 பேரில் யாக்கோபு, யோசேப்பு, யோசேப்பிற்கு எகிப்தில் பிறந்த இரண்டு குமாரர்கள் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. 70 பேர் என்று கூறப்பட்டிருக்கும்போது இந்த நான்கு பேரும் அட்டவணையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்தேவான் கூறிய 75 பேரில் யோசேப்பின் பேரப்பிள்ளைகள் 5 பேரும் சேர்த்து கணக்கிடப்பட்டிருக்கிறார்கள். இந்த 5 பேரும், மனாசே, எப்பிராயீம் ஆகியோருக்குப் பிறந்த குமாரர்கள். (அப் 7:14)
""எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்'' என்பதற்கான விளக்கம் வருமாறு : யோசேப்பும், யாக்கோபின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கானான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்குப் போனவர். இந்த எழுபதுபேரில், குமாரருடைய மனைவிகள், பேரப்பிள்ளைகள், வேலையாட்கள், அவருடைய குடும்பத்தார் ஆகியோர் யாரும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. (ஆதி 45:11)
யாக்கோபும் யோசேப்பும்
ஆதி 46:28#34
ஆதி 46:28. கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.
ஆதி 46:29. யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.
ஆதி 46:30. அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
ஆதி 46:31. பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்தி-ருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
ஆதி 46:32. அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
ஆதி 46:33. பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,
ஆதி 46:34. நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.
யாக்கோபு தன் குடும்பத்தாரோடுகூட எகிப்து தேசத்திற்கு வருகிறார். எகிப்து தேசத்திலே யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு இருக்கிறார். யாக்கோபு எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிற்கு போகிறார். அந்த நாட்டிலே யோசேப்பு தன்னை வந்து சந்திக்கவேண்டுமென்று யாக்கோபு விரும்புகிறார். இதற்காக யாக்கோபு தன் குமாரனாகிய யூதாவை தனக்கு முன்னாக யோசேப்பினிடத்திற்கு அனுப்புகிறார். அதன் பின்பு யாக்கோபும் அவருடைய குடும்பத்தார் எல்லோரும் கோசேனிலே வந்து சேருகிறார்கள் (ஆதி 46:28).
யாக்கோபு யோசேப்பை சந்திக்க யூதாவைத் தெரிந்தெடுக்கிறார். யோசேப்பை அவருடைய சகோதரர் அடிமையாக விற்றுப் போட்டபோது, அவருடைய இரண்டு சகோதரர்கள் யோசேப்பிற்காகப் பரிந்து பேசினார்கள். அவர்களில் யூதாவும் ஒருவன். பென்யமீனுக்காக யூதா பரிந்து பேசினான். (ஆதி 44:18-34).
யூதா நம்பிக்கைக்குரியவன். தலைவனுக்குரிய நல்ல சுபாவங்கள் அவனிடம் இருக்கிறது. தீர்க்கதரிசனத்தில் சகோதரர்களுக்குள் யூதா மேன்மையானவனாகக் கூறப்பட்டிருக்கிறான். யூதாவின் சந்ததியிலிருந்து மேசியா வருவார். யூதா ஆளும் கோத்திரம். மேசியா உலகம் முழுவதையும் நித்திய காலமாக ஆளுகை செய்வார்.
இஸ்ரவேலின் வரலாற்றில், யூதா கோத்திரத்தார் இஸ்ரவேலை ராஜ்யபாரம் பண்ணியிருக்கிறார்கள். தாவீதின் காலத்திலிருந்து, பாபிலோனிய சிறையிருப்பு வரையிலும் 473 வருஷங்கள் யூதா கோத்திரத்தார் இஸ்ரவேலை ஆட்சி புரிந்தார்கள். யூதா கோத்திரத்தாரும், பென்யமீனும், மற்ற கோத்திரங்களிலிருந்து சேர்ந்து கொண்ட திரளான ஜனங்களும் இஸ்ரவேலின் வடக்கு தேசத்தைவிட 133 வருஷங்கள் அதிகமாகத் தங்களை ராஜ்யபாரம் பண்ணினார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபோது, யூதா கோத்திரத்தார் தலைமையேற்று வழிநடத்தினார்கள். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனுஷனாக அவதரிக்கும் வரையிலும் யூதாகோத்திரத்தாருக்கு இஸ்ரவேலை ஆளுகை செய்வதில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆயிரம் வருஷ அரசாட்சியிலும், தேவனுடைய நித்திய ஆளுகையிலும் யூதா கோத்திரத்தாருக்கு முக்கிய பங்கு இருக்கும்.
யோசேப்பு தன் தகப்பனாரை சந்திப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார். யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போகிறார். யோசேப்பு யாக்கோபைக் கண்டு, அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவர் கழுத்தை விடாமல் அழுகிறார் (ஆதி 46:29).
யோசேப்பு தன்னுடைய தகப்பனாராகிய யாக்கோபை அதிகமாய்க் கனம்பண்ணுகிறார். யோசேப்பு அவர்மீது அதிகமாய் அன்பாயிருக்கிறார். யாக்கோபை கனம்பண்ணுவது யோசேப்பின் கடமை. பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக் கனம்பண்ணவேண்டும். யோசேப்பு எகிப்து தேசத்திலே உயர்ந்த அதிகாரியாகயிருந்தாலும், தன் தகப்பனாகிய இஸ்ரவேலை சந்திக்கும்படி, தானே நேரில் வருகிறார்.
யோசேப்புக்கு தன் தகப்பனாகிய இஸ்ரவேல் மீது அதிகமான அன்பும், அதிகமான பாசமும் இருக்கிறது. அவர்கள் இருவரும், பலவருஷங்களாக ஒருவரையொருவர் பார்க்கவில்லை. பல வருஷங்களுக்கு பின்பு அவர்கள் இப்போதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். ஆகையினால், யோசேப்பு, அன்பின் மிகுதியினால், யாக்கோபுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அழுகிறார். யாக்கோபை மறுபடியும் பார்ப்பது யோசேப்புக்கு மிகுந்த ஆனந்தமாயிருக்கிறது. யோசேப்பின் கண்களில் வடியும் கண்ணீர், அவர் யாக்கோபின்மீது வைத்திருக்கும் அன்புக்கு அடையாளமாயிருக்கிறது.
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து, ""நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்'' என்று சொல்லுகிறார். இஸ்ரவேல் மேலும் பதினேழு வருஷங்கள் உயிரோடிருக்கிறார் (ஆதி 47:28).
யாக்கோபின் குடும்பத்தார் எகிப்து தேசத்திலே யோசேப்பின் விருந்தினராக வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எகிப்து தேசத்திலே தங்குவதற்கு யோசேப்பு உதவி செய்யவேண்டும். ஒரு காலத்தில் யோசேப்பின் சகோதரர், அவரை தங்களைவிட்டு வெளியே துரத்தவேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் யோசேப்பை இஸ்மவேலரிடத்தில் அடிமையாக விற்றுப்போட்டார்கள்.
தன்னுடைய சகோதரர் தனக்கு செய்த தீமைகளுக்கு பதிலாக, யோசேப்பு அவர்களுக்கு நன்மை செய்கிறார். தன் சகோதரரை பழிவாங்கவேண்டும் என்னும் எண்ணம் யோசேப்பின் மனதில் இல்லை. தன்னுடைய தகப்பனாரும், சகோதரரும், அவர்களுடைய குடும்பத்தாரும் எகிப்து தேசத்திலே தங்குவதற்கு யோசேப்பு ஆயத்தம்பண்ணுகிறார்.
யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் எகிப்து தேசத்திலே கோசேன் நாட்டிலே தங்கவேண்டும் என்பது யோசேப்பின் திட்டம். கோசேன் நாடு கானான் தேசத்திற்கு அருகாமையிலுள்ளது. இந்த தேசத்தில் எகிப்தியர்கள் குறைந்த எண்ணிக்கையிலிருக்கிறார்கள். கோசேன் நாட்டில் மேய்ச்சல் நிலமும் ஏராளமாயிருக்கிறது. யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் எகிப்தியரை விட்டுப் பிரிந்து, கோசேன் நாட்டிலே தனியாக இருக்கவேண்டும் என்பது யோசேப்பின் திட்டம்.
யாக்கோபின் குடும்பத்தார் கோசேன் நாட்டில் தனியாகயிருக்கும்போது, எகிப்தியர் மூலமாக அவர்களுக்கு பாதிப்பு வராது. எகிப்தியரின் விக்கிரகாராதனையும் யாக்கோபின் குடும்பத்தார் மத்தியிலே பரவாது. யாக்கோபின் குடும்பத்தார் கோசேன் நாட்டிலே குடியிருப்பதினால், எகிப்தியர் மூலமாக அவர்களுக்கு துன்பங்களும் வராது என்று யோசேப்பு நினைக்கிறார்.
மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள். யாக்கோபின் குடும்பத்தார் எல்லோருமே மேய்ப்பர்களாயிருக்கிறார்கள். அவர்கள் மற்ற பட்டணங்களில், எகிப்தியரோடுகூட தங்கியிருந்தால், எகிப்தியர்கள் அவர்களை அருவருப்பார்கள். அவர்கள் யாக்கோபின் குடும்பத்தாரை வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடுவார்கள். தன்னுடைய குடும்பத்தாருக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்து, யோசேப்பு அவர்களை கோசேன் நாட்டிலே தனியாக தங்க வைக்கிறார்.
யோசேப்பு எகிப்து தேசத்திலே உயர்ந்த அதிகாரியாயிருக்கிறார். ஆனாலும் யோசேப்பு எகிப்தின் அதிபதியாகிய பார்வோனுக்கு, தன்னுடைய குடும்பத்தார் கானான் தேசத்திலிருந்து தன்னிடத்தில் வந்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் மேய்ப்பர்கள் என்பதையும், அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருப்பது சம்பந்தமாகவும் அறிவிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
யோசேப்பு தன் சசோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: ""நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்தி-ருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்'' (ஆதி 46:31,32) என்று சொல்லுகிறார்.
பார்வோன் யாக்கோபையும் அவருடைய குடும்பத்தாரையும் தன்னிடத்தில் அழைத்து விசாரிக்கிறார். அப்போது அவர்கள் பார்வோனுக்கு எப்படிப்பட்ட பிரதியுத்தரம் சொல்லவேண்டும் என்றும் யோசேப்பு அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
யோசேப்பு தன் சகோதரரையும், தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி, ""பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்'' (ஆதி 46:33,34) என்று சொல்லுகிறார்.
""கோசேன்'' மெம்பிஸ் பட்டணத்திற்குக் கிழக்கில் உள்ள பகுதி. கானானுக்கு அருகில் உள்ளது. நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பூமி. எகிப்தியரிடமிருந்து வேறுபிரிந்து கோசேனில் ஜீவிக்கலாம். சோவான் வெளி (சங் 78:12,43) என்று இந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. இங்கு செமிட்டியர்களும், எகிப்தியர் அல்லாத மற்ற இனத்தாரும் குடியேறினார்கள்.
மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள். யோசேப்பின் காலத்தில் பார்வோனாக இருந்த அபேபி மேய்ப்பனாக இருந்தவன். ஆதி 47:6 ஆவது வசனத்தில் யோசேப்பு தன் இனத்தாருக்குக் கூறும் ஆலோசனையின் பிரகாரம், இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்து ஜனங்களிடமிருந்து வேறுபிரிந்து ஜீவிக்க முடியும். எகிப்து தேசத்தில் விவசாயம் செய்கிறவர்கள் நாகரிகம் உள்ளவர்களாகவும், மந்தைகளை மேய்க்கிறவர்கள் நாடோடிகளாகவும் கருதப்பட்டார்கள்.
மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருந்தாலும், ஆடுமாடுகளை மேய்ப்பது மெய்யாகவே அருவருப்பான தொழில் அல்ல. ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக சும்மாயிருப்பதுதான் அருவருப்பு. தாங்கள் மேய்ப்பர்கள் என்பதை பார்வோனிடத்தில் சொல்லுவதற்கு யாக்கோபின் குடும்பத்தார் வெட்கப்படக்கூடாது. நாம் சாதாரண உத்தியோகம் பார்த்தாலும், அந்த உத்தியோகத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். நமக்கு கொடுக்கப்படும் வேலைகளை நேர்த்தியாய்ச் செய்து முடிக்கவேண்டும்.
