அமர்ந்திருங்கள்
நீங்கள் கோபங்கொண்டாலும்
பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள் (சேலா) (சங் 4:4).
தாவீது பாவத்திற்கு விரோதமாக எச்சரிக்கிறார். பாவம் பயங்கரமானது. அது மனுஷருடைய ஆத்துமாவை அழித்துப்போடும். ஆகையினால் பாவத்தைக் குறித்து நாம் எச்சரிப்போடிருக்கவேண்டும். "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்" என்று தாவீது சொல்லுகிறார். இந்த வசனத்தில் "கோபங்கொள்ளுதல்" என்னும் வார்த்தைக்கு
பக்திவைராக்கியமாயிருத்தல்", "பயபக்தியாயிருத்தல் என்று பொருள். கர்த்தருடைய பிள்ளைகள் பாவம் செய்யாமல், பயபக்தியாயிருக்கவேண்டும். பாவம் செய்யாமல் பக்திவைராக்கியத்தோடிருக்க வேண்டும்
கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் பக்திவைராக்கியம் உறுதியாயிருக்கவேண்டும். கர்த்தரிடத்தில் நாம் வைத்திருக்கும் பக்திவைராக்கியத்தை, நம்முடைய இருதயத்தோடு நாம் பேசவேண்டிய காரியங்கள் ஏராளமாய் உள்ளன. நம்முடைய இருதயத்திற்கு நாம் சொல்லவேண்டிய காரியங்களை கட்டாயம் சொல்லவேண்டும். எந்தச் சத்தியத்தையும் நாம் நம்முடைய இருதயத்திற்கு சொல்லாமல் மறைத்துவிடக்கூடாது.
இருதயத்தில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளவேண்டும். நம்முடைய
சிந்திக்கிற மனுஷன் ஞானியாகவும்
நற்குணமுள்ளவனாகவும் இருப்பான். இவன் நற்காரியங்களைச் சிந்தித்துக்கொண்டிருப்பான். தனிமையான இடத்தில் அமர்ந்திருந்து, "கர்த்தருக்குப் பிரியமானது எது" என்பதை சிந்தித்துப் பார்ப்பான். சிந்திக்கிறவர்கள் தங்கள் படுக்கையில் அமர்ந்திருந்து, தங்களுடைய இருதயத்தோடு பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் படுக்கையில் நித்திரை செய்வதற்கு முன்பாக நம்முடைய இருதயத்தோடு பேசவேண்டும். நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த நாளில் நாம் கர்த்தருக்குப் பிரியமான காரியங்களைச் செய்தோமா என்பதையும், கர்த்தருக்கு விரோதமாக இந்த நாளிலே பாவம் செய்தோமா என்பதையும் நம்முடைய இருதயத்தில் நாம் பேசிக்கொள்ளவேண்டும்.
நம்முடைய இருதயத்தில் பேசிக்கொள்வது என்னும் வாக்கியத்திற்கு, "நம்முடைய மனச்சாட்சியோடு பேசுவது" என்று பொருள். ஒவ்வொரு நாளும் நாம் கர்த்தருக்குப் பிரியமான காரியங்களைச் செய்கிறோமா, அல்லது கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிறோமா என்பது நம்முடைய மனச்சாட்சிக்குத் தெரியும் நம்முடைய மனச்சாட்சி நம்மோடு பேசுவதற்கு நாம் அனுமதிக்கவேண்டும். நம்முடைய மனச்சாட்சியின் சத்தத்திற்கு நாம் கவனமாய்ச் செவிகொடுக்கவேண்டும். ஒருவேளை நாம் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்திருந்தால், அந்தப் பாவத்தை மூடிமறைக்காமல், கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்து மனந்திரும்பவேண்டும்.
இரவில் நித்திரையாயிருக்கும்போது, திடீரென்று விழித்துக்கொண்டால், அப்போதும் கர்த்தரைப்பற்றியே தியானிக்கவேண்டும். கர்த்தருடைய வழிகளைக் குறித்து நம்முடைய இருதயத்தில் பேசிக்கொள்ளவேண்டும். நம்முடைய சமாதானத்திற்கு உதவிபுரிகிற காரியங்களை கர்த்தருடைய சமுகத்தில் தியானித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயம் சமாதானமாயிருக்கும்போது, நம்முடைய நித்திரையும் சமாதானமாயிருக்கும். இரவு வேளையில், சரியான நித்திரை வராமல் போகும்போது, தேவையில்லாத காரியங்களை சிந்தித்துப் பார்த்து, மனதில் குழப்பமடையக்கூடாது. அதற்குப் பதிலாக கர்த்தருக்குப் பிரியமான காரியங்களைச் சிந்தித்துப்
பார்த்து, தேவசமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
"நீங்கள் கோபங்கொண்டாலும்
பாவஞ்செய்யாதிருங்கள்' என்பது எபே 4:26- இல் உள்ள கருத்துக்கு ஒத்துள்ளது. இந்த ஆலோசனை தாவீதை வைராக்கியமாக பின்பற்றுவோருக்கு கொடுக்கப் பட்டிருக்கலாம். (2சாமு 16:10; 2சாமு 18:5-15)
ஒருவன் தன்னுடைய பாவங்களிலிருந்து விலகி கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தால் மட்டுமே அவனால் நீதியின் பலிகளைச் செலுத்தமுடியும்
