பக்தியுள்ளவன்
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார் (சங் 4:3).
கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்கள் அவரிடத்திலிருந்து விசேஷித்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு விசேஷித்த கிருபைகளையும், விசேஷித்த பாதுகாப்புக்களையும் தருகிறார். இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்கள், இந்த உலகத்தாரின் பார்வைக்கு சிறியவர்களாக இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய பார்வைக்கோ, அவருடைய பிள்ளைகள் விசேஷித்த ஜனமாயிருக்கிறார்கள்
தம்மிடத்தில் விசுவாசமுள்ளவர்களுக்கு விரோதமாக யாராவது தீங்கு செய்தால், கர்த்தர் அவர்களை சகித்துக்கொள்வதில்லை. "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத் 18:6) என்று இயேசு சொல்லுகிறார்
கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை
தொடுகிறவர்கள், கர்த்தருடைய கண்ணின் மணியையே தொடுகிறார்கள். ஒருவேளை, கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாக தீங்கு செய்கிறவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் சத்துருக்கள் கர்த்தருடைய தண்டனைக்கு தப்பிப்பதில்லை கர்த்தருக்கு விரோதமாக எழும்பியிருக்கிற தங்களை, கர்த்தர் தண்டிப்பார் என்பதை, சத்துருக்கள் ஏற்ற வேளையில் அறிந்துகொள்வார்கள். கர்த்தரும் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துவார்
கர்த்தர் தம்முடைய சம்பத்தைச் சேர்க்கும் நாளிலே, கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள்
அவருடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல் 3:17). கர்த்தருடைய பிள்ளைகளும், துன்மார்க்கரும், சேனைகளின் கர்த்தர் சொல்லுகிற இந்தச் சத்தியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். கர்த்தரால் பதுகாக்கப்படுகிறவர்களுக்கு தீங்கு செய்தால் தங்களுக்கு என்ன நேரிடும் என்பதை துன்மார்க்கர் உணரவேண்டும். அதுபோலவே கர்த்தரை விசுவாசிக்கிறவர்களும், கர்த்தரே தங்களுக்கு விசேஷித்த பாதுகாப்பைக் கொடுக்கிறார் என்பதை உணரவேண்டும்
பக்தியுள்ளவனை கர்த்தரே தமக்காகத்
தெரிந்துகொண்டார். இதை பக்தியுள்ளவர்களும் அறிந்துகொள்ளவேண்டும். பக்தியில்லாதவர்களும் அறிந்துகொள்ளவேண்டும். தாவீது இந்தச் சத்தியத்தைச் சொல்லும்போது, "நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்" என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்
