35 அதிகாரம்

35 அதிகாரம்

தேவனுக்கும் யாக்கோபுக்கும் இடையே நடைபெறும் மூன்று சம்பாஷணைகளைப்பற்றியும், மூன்றுபேருடைய அடக்க ஆராதனைகளைப் பற்றியும் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவன் யாக்கோபை பெத்தேலுக்கு போகுமாறு சொல்லுகிறார் (ஆதி 35:1#5). யாக்கோபு பெத்தேலிலே தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்டுகிறார் (ஆதி 35:6,7). தேவன் யாக்கோபுக்கு மறுபடியும் தரிசனமாகி, யாக்கோபின் புதிய பெயரையும், தாம் யாக்கோபோடு செய்து கொண்ட உடன்படிக்கையையும் உறுதிபண்ணுகிறார் (ஆதி 35:9#13).

தேவன் தன்னோடு பேசின ஸ்தலத்திலே யாக்கோபு ஒரு கற்றூணை நிறுத்தி அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிடுகிறார் (ஆதி 35:14,15).

ரெபெக்காளின் தாதியாகிய தெபொராளின் மரணம் (ஆதி 35:8). ராகேலின் மரணம் (ஆதி 35:16#20). ஈசாக்கின் மரணம் (ஆதி 35:27#29).

ரூபன் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனிக்கிறான் (ஆதி 35:22). யாக்கோபின் பன்னிரண்டு குமாரருடைய பெயர்கள் (ஆதி 35:23#26).

யாக்கோபின் பிரயாணம்

ஆதி 35:1#5

ஆதி 35:1. தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு ப-பீடத்தை உண்டாக்கு என்றார்.

ஆதி 35:2. அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

ஆதி 35:3. நாம் எழுந்து பெத்தேலுக்குப்போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு ப-பீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

ஆதி 35:4. அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வா- மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.

ஆதி 35:5. பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.

யாக்கோபு பெத்தேலிலே தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணினார். அந்தப் பொருத்தனையை நிறைவேற்றுமாறு, தேவன் யாக்கோபுக்கு நினைவுபடுத்துகிறார்.

யாக்கோபு மிகுந்த வேதனையிலும், துக்கத்திலும் இருந்தபோது, அவர் தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணினார். ""நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத்தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்-ப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்'' (ஆதி 28:22). யாக்கோபு இந்தப் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டுமென்று, தேவன் அவருக்கு ஞாபக்கப்படுத்துகிறார்.

தேவன் யாக்கோபை நோக்கி, ""நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு ப-பீடத்தை உண்டாக்கு'' (ஆதி 35:1) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு கானான் தேசத்திற்கு வந்து ஏழு அல்லது எட்டு வருஷங்களாயிற்று. அவர் கானான் தேசத்திலே ஒரு நிலத்தை கிரயத்திற்கு வாங்கினார். கர்த்தர் தனக்கு கடைசியாக தரிசனம் கொடுத்த இடத்திலே, யாக்கோபு தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்டினார். தேவன் இந்த ஸ்தலத்திலே யாக்கோபை, இஸ்ரவேல் என்று அழைத்தார்.

""தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, அங்கே ஒரு ப-பீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்'' (ஆதி 33:19,20).

யாக்கோபு தேவனுக்கு கானான் தேசத்திலே பலிபீடத்தைக் கட்டினாலும், அவர் பெத்தேலிலே தேவனுக்கு பலிபீடம் கட்ட மறந்துவிட்டார். தேவன் யாக்கோபை நேசிக்கிறார். ஆகையினால் யாக்கோபு தன்னுடைய கடமையை மறந்துவிட்டாலும், கர்த்தர் அவருக்கு அதை ஞாபகப்படுத்துகிறார்.

கர்த்தர் நம்மை நேசிக்கும்போது, அவர் நம்முடைய கடமைகளை நமக்கு ஞாபகப்படுத்துவார். ஒருவேளை நம்முடைய மனச்சாட்சியின் மூலமாகவோ அல்லது தெய்வீக பராமரிப்புக்களின் மூலமாகவோ அல்லது ஒரு சில சம்பவங்கள் மூலமாகவோ, நாம் மறந்துபோனதை, கர்த்தர் நமக்கு நினைவுபடுத்துவார்.

நாம் தேவனுக்கு பொருத்தனைபண்ணும்போது, அதை கவனமாய் நிறைவேற்ற வேண்டும். நாம் பொருத்தனையில் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்கவேண்டும். பொருத்தனைபண்ணிவிட்டு அதை நிறைவேற்றாமலிருப்பதைவிட, பொருத்தனை பண்ணாமலிருப்பது நமக்கு நலமாயிருக்கும்

""நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்'' (பிர 5:4,5).

யாக்கோபு பெத்தேலிலே தேவனுக்கு பலிபீடம் கட்டவேண்டுமென்று பொருத்தனைபண்ணினார். பெத்தேல் என்னும் பெயருக்கு தேவனுடைய வீடு என்று பொருள். தேவன் வாசம்பண்ணுகிற அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலே, நாமும் வாசம்பண்ண பிரியப்படவேண்டும்.

""கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்'' (சங் 27:4).

பெத்தேல் கர்த்தருடைய வீடு. அவர் அங்கே தங்கியிருக்கிறார். சங்கீதக்காரரைப்போல, நாமும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாடவேண்டும். கர்த்தருடைய ஆலயம் நாம் வந்துபோகிற ஸ்தலமாகயிருக்கக்கூடாது. அது நாம் எப்போதும் தங்கியிருக்கிற ஸ்தலமாயிருக்கவேண்டும்.

பெத்தேலிலே பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமென்று தேவன் யாக்கோபுக்கு ஞாபகப்படுத்துகிறார். யாக்கோபு தன்னுடைய பொருத்தனையை மறந்துவிடுவார் என்று நினைத்து, தேவன் அவருக்கு அதை மிகவும் தெளிவாக ஞாபகப்படுத்துகிறார். தேவன் யாக்கோபுக்கு சொல்லும்போது, ""நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு ப-பீடத்தை உண்டாக்கு'' என்று சொல்லி, அந்த சம்பவத்தையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறார்.

யாக்கோபு கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார். அவர் தன் வீட்டாரையும் தன்னோடே கூடயிருக்கிற மற்ற அனைவரையும் நோக்கி, ""நாம் எழுந்து பெத்தேலுக்குப்போவோம் வாருங்கள்'' (ஆதி 35:3) என்று சொல்லுகிறார். யாக்கோபின் வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் பிரயாணத்திற்கு தங்களை ஆயத்தம்பண்ணவேண்டும். இது உலகப்பிரகாரமான பிரயாணமல்ல. யாக்கோபின் பிரயாணம் ஆவிக்குரிய ஊழியப்பிரயாணம்.

யாக்கோபு கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, பெத்தேலிலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றப்போகிறார். யாக்கோபின் வீட்டாருக்கு, அவர் கர்த்தருக்கு பண்ணின பொருத்தனை தெரியுமா அல்லது தெரியாதா என்பது இங்கு சொல்லப்படவில்லை.

யாக்கோபு தன்னுடைய வீட்டாரை நோக்கி, நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள், என்று சொல்லும்போது, அங்கே போவதற்கான காரணத்தையும் சொல்லுகிறார். யாக்கோபு தன் வீட்டாரை நோக்கி, ""எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு ப-பீடத்தை உண்டாக்குவேன்'' (ஆதி 35:3) என்று சொல்லுகிறார்.

யாக்கோபும் அவருடைய வீட்டாரும் கர்த்தருடைய ஊழியத்தை செய்யப்போகிறார்கள். அவர்கள் பெத்தேலிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அங்கே அவரை ஆராதிக்கப்போகிறார்கள். பரிசுத்தமில்லாமல் கர்த்தரை ஆராதிப்பது இயலாத காரியம். தானும் தன்னுடைய வீட்டாரும் பெத்தேலுக்குப்போகும்போது, பரிசுத்தமாய்ப்போகவேண்டும் என்று யாக்கோபு தீர்மானம்பண்ணுகிறார்.

யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி, ""உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்'' (ஆதி 35:2) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு ஆபிரகாமைப்போலவே, தன்னுடைய வீட்டாருக்கு கட்டளை கொடுக்கிறார். ""கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்'' (ஆதி 18:19).

யாக்கோபின் வீட்டார் தங்களிடத்திலிருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போடவேண்டும். அந்நிய தெய்வங்கள் கர்த்தருக்கு பிரியமில்லாதவை. அவை கர்த்தருடைய பிரமாணத்திற்கு புறம்பானவை. யாக்கோபின் வீட்டிலே அந்நிய தெய்வங்கள் இருப்பது ஆச்சரியமான காரியம். யாக்கோபுக்கும் அவருடைய வீட்டாருக்கும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப்பற்றி நன்றாய்த் தெரியும். ஆனாலும் அவர்களுடைய வீட்டிலே அந்நிய தெய்வங்கள் இருக்கிறது.

யாக்கோபின் வீட்டாரைப்போல, இக்காலத்திலும் ஒரு சில விசுவாசிகளின் வீட்டார் தங்களிடத்தில் அந்நிய தெய்வங்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரையும் ஆராதிக்கிறார்கள். அந்நிய தெய்வங்களுக்கும் தூபங்காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களிலே தெளிந்த சிந்தனையில்லை. அவர்களிடத்தில் ஆவிக்குரிய குழப்பம் காணப்படுகிறது. இவர்கள் தங்களிடத்திலுள்ள அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, தங்களை சுத்தம்பண்ணிக்கொள்ளவேண்டும்.

யாக்கோபின் வீட்டார் தங்கள் வஸ்திரங்களையும் மாற்றிக்கொள்ளவேண்டும். சிமியோன், லேவி ஆகியோரின் கரங்களில் இரத்தக்கறை பிடித்திருக்கிறது. இவர்கள் இருவரும் குற்றமில்லாத இரத்தத்தை ஏராளமாய் சிந்தியிருக்கிறார்கள். இவர்கள் தங்களைக் கழுவி சுத்தம்பண்ணிக்கொள்ளவேண்டும். இவர்கள் தங்களுடைய இரத்தக்கறை படிந்த வஸ்திரங்களை மாற்றி, தங்களை சுத்தம்பண்ணிக்கொள்ளவேண்டும்.

வஸ்திரங்களை மாற்றுவது என்பதற்கு இருதயத்தை மாற்றி சுத்திகரிப்பது என்று பொருள். இவர்கள் யூதருடைய மார்க்க சடங்காச்சாரத்தின் பிரகாரம் தங்களை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும். இருதயத்தை சுத்தம்பண்ணாமல், வஸ்திரங்களை சுத்தம்பண்ணுவதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. இருதயம் சுத்திகரிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும்போது, அவர்கள் மெய்யாகவே சுத்திகரிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள்.

யாக்கோபின் வீட்டாரும், அவரோடேகூட இருக்கிற மற்ற அனைவரும், யாக்கோபோடுகூட பெத்தேலுக்குப் போகவேண்டும். பெத்தேலுக்குப்போகும் முன்பாக அவர்கள் தங்களை சுத்திகரிக்கவேண்டும். யாக்கோபின் வீட்டாரும், அவரோடேகூட இருக்கிற அனைவரும், யாக்கோபின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுக்கிறார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வா- மரத்தின்கீழே புதைத்துப்போடுகிறார் (ஆதி 35:4).

இஸ்ரவேலில் விக்கிரகாராதனை ஒழிக்கப்பட்டிருக்கிறது. (ஆதி 31:19) தேவனுடைய வீடாகிய பெத்தேலுக்குப் போகும்போது சுத்திகரிப்பு மிகவும் அவசியம்.

விக்கிரகாராதனையில் பயன்படுத்தப்படாத காதணிகளை ஸ்திரீகள் அணிந்திருந்தார்கள். (ஆதி 24:22,30,47; யாத் 32:2-3; யாத் 35:22; எண் 31:50; நியா 8:24-26; யோபு 42:11; நீதி 25:12; எசே 16:12; ஓசி 2:13; 1பேதுரு 3:5-6).

காதணிகள் பொன்னால் செய்யப்பட்டவை. வெள்ளி, செம்பு, தந்தம், மரம் ஆகியவற்றில் கற்களைப் பதித்து செய்யப்பட்ட காதணிகளும் அக்காலத்தில் இருந்தன. இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் காதணிகள் விக்கிரகாராதனைக்குரியவை. ஆகையினால் அவற்றைத் தன்னிடத்தில் கொடுத்து விடுமாறு யாக்கோபு கூறுகிறார்.

விக்கிரகாராதனையில் இவை பயன்படுத்தப்பட்டதின் நிமித்தமாக ஏசா 3:20, ஓசி 2:13 ஆகிய வசனங்களில் இவை கடிந்து கூறப்பட்டிருக்கிறது. விக்கிரகாராதனையில் இதை தாயத்துக்களாகக் கட்டினார்கள். இவை அசுத்த ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று நம்பி ஜனங்கள் இதை தங்கள் காதுகளிலும், கழுத்துக்களிலும், கைகளிலும், இடுப்புக்களிலும் அணிந்து கொண்டார்கள்.

யாக்கோபு தன்னுடைய வீட்டிலிருக்கிற அந்நிய தெய்வங்களையெல்லாம் கவனமாய்ப் புதைத்துப்போடுகிறார். அவற்றை புதைத்துப்போடவில்லையென்றால், யாக்கோபின் வீட்டார் பெத்தேலிலிருந்து திரும்பி வந்த பின்பு, அந்த அந்நிய தெய்வங்களை மறுபடியும் ஆராதிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் யாக்கோபு அந்த அந்நிய தெய்வங்களை கவனமாய்ப் புதைத்துப்போடுகிறார்.

யாக்கோபும், அவருடைய வீட்டாரும், அவரோடு கூடயிருக்கிற அனைவரும் பெத்தேலுக்கு பிரயாணம் புறப்படுகிறார்கள். அவர்களுக்கு கானானியர் மூலமாக எந்தவிதமான ஆபத்தும் வரவில்லை. அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருக்கிறார்கள் (ஆதி 35:5).

யாக்கோபின் வீட்டாரைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டாயிற்று. அதனால் அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருக்கிறார்கள். யாக்கோபு பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவன் யாக்கோபைப் பாதுகாப்பதாக பல வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார்.

தேவன் தம்முடைய உடன்படிக்கையை ஆபிரகாமோடு நிறைவேற்றியிருக்கிறார். (ஆதி 12:17; ஆதி 20:7,17), அவர் ஈசாக்கோடு நிறைவேற்றியிருக்கிறார். (ஆதி 26:6-31) தேவன் யாக்கோபோடு இதுவரையிலும் நிறைவேற்றி வருகிறார். (ஆதி 27:41-42; ஆதி 31; ஆதி 32:10-32; ஆதி 33:1-17) தேவன் இனிமேலும் தன்னைப் பாதுகாப்பார் என்று யாக்கோபு தாராளமாக நம்பலாம். இஸ்ரவேலைக் குறித்த தேவனுடைய திட்டம் நிச்சயமாகவே நிறைவேறும்.

நாம் கர்த்தருடைய ஊழியத்தை செய்யும்போது கர்த்தர் நம்மைப் பாதுகாத்துக்கொள்வார். நம்முடைய கடமைகளை நாம் சரியாக செய்யும்போது, நமக்கு தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும். யாக்கோபின் வீட்டிலே பாவம் இருந்தபோது அவர் தன்னைச் சுற்றிலும் இருந்த கானானியரை பார்த்து மிகவும் பயந்தார். தன் வீட்டிலுள்ள அந்நிய தெய்வங்களை அகற்றிப்போட்ட பின்பு, யாக்கோபுக்கு இப்போது கானானியரைக் குறித்த பயமில்லை. அவர்களெல்லோரும் பெத்தேலுக்குப் போகிறார்கள். யாக்கோபு கானான் தேசத்தாரைப் பார்த்து பயப்படவில்லை. கானான் தேசத்தார் யாக்கோபைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

ஏல் பெத்தேல்

ஆதி 35:6#15

ஆதி 35:6. யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.

ஆதி 35:7. அங்கே அவன் ஒரு ப-பீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

ஆதி 35:8. ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வா- மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

ஆதி 35:9. யாக்கோபு பதான் அராமி-ருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து:

ஆதி 35:10. இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்-, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

ஆதி 35:11. பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னி-ருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

ஆதி 35:12. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்-,

ஆதி 35:13. தேவன் அவனோடே பேசின ஸ்தலத்தி-ருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.

ஆதி 35:14. அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானப-யை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

ஆதி 35:15. தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

யாக்கோபும் அவரோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வருகிறார்கள் (ஆதி 35:6). அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் வரவில்லை. அவர்கள் பெத்தேலுக்கு பாதுகாப்பாய் வந்து சேருகிறார்கள்.

யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார். யாக்கோபு தன் சகோதரனுடைய முகத்திற்கு தப்பி ஓடினபோது, தேவன் அவருக்கு அங்கே தரிசனமானார். ஆகையினால் யாக்கோபு அந்த ஸ்தலத்திற்கு ஏல் பெத்தேல் என்று பேரிடுகிறார் (ஆதி 35:7).

""ஏல்பெத்தேல்'' என்னும் எபிரெய வார்த்தைக்கு ""தேவனுடைய வீடாகிய தேவன்'' என்று பொருள். தேவன் முதன் முறையாக யாக்கோபுக்குத் தரிசனமான அந்தஇடத்தில் இப்பொழுது ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிடுகிறார் (ஆதி 28:13-15).

யாக்கோபு தான் கட்டின பலிபீடத்திலே கர்த்தருக்கு பலிசெலுத்துகிறார். கர்த்தர் தனக்கு ஏற்கெனவே காண்பித்த பழைய இரக்கங்களையும், கிருபைகளையும் யாக்கோபு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்.

ஏல்பெத்தேல் என்னும் பெயருக்கு பெத்தேலின் தேவன் என்று பொருள். பெத்தேல் என்னும் பெயருக்கு தேவனுடைய வீடு என்று பொருள். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு, அவருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதே ஆறுதலான காரியம். பெத்தேலின் தேவன், நம்முடைய வீட்டின் தேவனாகவும் இருக்கிறார். கர்த்தருடைய வீட்டிலே, அவருடைய பரிசுத்த பிரமாணங்கள் ஆளுகை செய்யும்.

கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய வார்த்தைகளும், பிரமாணங்களும் நிரம்பியிருக்கவேண்டும். நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது, கர்த்தரை சந்தித்து அவரோடு ஐக்கியமாயிருக்கவேண்டும். நமக்கு கர்த்தருடைய பிரமாணம் தெரிந்திருந்தும், நாம் கர்த்தரோடு ஐக்கியமாயில்லையென்றால், நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை.

ரெபெக்காளின் தாதியாகிய தெபொராளைப்பற்றி ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. ""அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்தார்கள்'' (ஆதி 24:59).

ரெபெக்காள் இதற்கு முன்பே மரித்துப்போனாள் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இப்போது ரெபெக்காளின் தாதியாகிய தெபொராளும் மரித்துப்போகிறாள். அவளை பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வா- மரத்தின்கீழ் அடக்கம்பண்ணுகிறார்கள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று (ஆதி 35:8).

""அல்லோன்பாகூத்'' என்னும் எபிரெய வார்த்தைக்கு ""அழுகையின் கர்வாலி மரம்'' என்று பொருள்.

ஆதி 27:46 ஆவது வசனத்தில் யாக்கோபு வீட்டை விட்டு புறப்பட்டதிலிருந்து ரெபெக்காளைப் பற்றி ஒன்றுமே கூறப்பட வில்லை. அவளுடைய மரணம் குறிப்பிடப்படவில்லை. யாக்கோபு கானானுக்கு வந்தபோது, தெபொராள் யாக்கோபோடு சேர்ந்து கொண்டாளா அல்லது யாக்கோபு அவளுடைய அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. யாக்கோபும், ஏசாவும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது தெபொராள் அவர்களுடைய தாதியாக சேவை செய்திருக்கிறாள்.

யாக்கோபின் குடும்பத்தார் தெபொராளை மரியாதையோடு அடக்கம்பண்ணுகிறார்கள். தெபொராள் யாக்கோபின் குடும்பத்தாருக்கு சொந்தக்காரியல்ல. அவள் வயது முதிர்ந்தவள். தெபொராள் யாக்கோபின் குடும்பத்தாருக்கு மிகவும் அன்பானவள். யாக்கோபு இப்போது ஆவிக்குரிய காரியங்களில் வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறார். ஆனாலும் அவருடைய குடும்பத்தில், தெபொராளின் மரணத்தைப் போல, சோகசம்பவங்கள் நடைபெறுகிறது.

யாக்கோபு பெத்தேலிலே தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்டுகிறார். அந்த ஸ்தலத்திற்கு ஏல் பெத்தேல் என்று பேரிடுகிறார். இந்தப் பெயருக்கு பெத்தேலின் தேவன் என்று பொருள். இந்த ஸ்தலத்திலே தேவன் யாக்கோபுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவரை ஆசீர்வதிக்கிறார் (ஆதி 35:9). தெபொராள் மரித்துப்போனதினால் யாக்கோபு மிகுந்த மனவேதனையிலும் சோகத்திலும் இருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் வண்ணமாக தேவன் இப்போது அவருக்கு மறுபடியும் தரிசனமாகிறார்.

தேவன் யாக்கோபுக்கு ஏழு முறை தரிசனமானார். அவற்றில் இது ஆறாவது தரிசனமாகும் (ஆதி 28:13-15;ஆதி 31:11-13; ஆதி 32:1-2, 24-32; ஆதி 35:1-5,9-13; ஆதி 46:2-4).

தேவன் யாக்கோபோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருக்கிறார். இப்போது அவர் தம்முடைய உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பித்து, அதை யாக்கோபுக்கு உறுதிபண்ணுகிறார். தேவன் யாக்கோபுக்கு தம்மைப்பற்றி வெளிப்படுத்தும்போது, தம்மை சர்வவல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்துகிறார் (ஆதி 35:11).

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தம்மைப்பற்றிச் சொல்லும்போது, ""சர்வவல்லமையுள்ள தேவன்'' என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் கோத்திரத்தார்கள் ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களாகவும் இருப்பார்கள். இஸ்ரவேல் ஐக்கிய தேசமாக இருக்கும். சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதைக் குறிப்பதற்கு இரண்டு எபிரெய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்று ""ஏல்'' என்பதாகும். மற்றொன்று ""ஷாடாய்'' என்பதாகும்.

தேவன் யாக்கோபை நோக்கி ""ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னி-ருந்து உண்டாகும்'' என்று கூறினார். இந்தத் தீர்க்கதரிசனம் யாக்கோபின் சந்ததியின் வழியாக நிறைவேறும். யாக்கோபு எல்லா தேசங்களுக்கும் முற்பிதா அல்ல. பற்பல ஜாதிகளின் கூட்டங்கள் என்பது இஸ்ரவேலின் 13 கோத்திரங்களைக் குறிக்கும் (ஆதி 17:4-6).

சர்வவல்லமையுள்ள தேவன் யாக்கோபுக்கு இரண்டு ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். அவையாவன :

1. ""நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னி-ருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்'' (ஆதி 35:11).

2. ""நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்'' (ஆதி 35:12).

யாக்கோபு திரளான ஜாதிகளுக்கு தகப்பனாயிருப்பார். அவர் நல்ல தேசத்திற்கு சொந்தக்காரராகவும் இருப்பார். யாக்கோபுக்கு இந்த இரண்டு ஆசீர்வாதங்களும் தேவைப்படுகிறது. அவருக்கு சொந்தமாய் தேசமில்லாமல், அவருடைய ஜனத்தார் திரளாய்ப் பெருகினால், அவர்களுக்கு தங்குவதற்குகூட இடம் இருக்காது. அவர்கள் குடியிருக்கும் தேசமில்லாமல், தேசாந்தரிகளாயிருப்பார்கள்.

யாக்கோபுக்கு நல்ல தேசம் இருந்து, அந்த தேசத்தை சுதந்தரிக்க ஜனத்திரள் இல்லையென்றால், தேசம் வெறுமையாயிருக்கும். ஒரு சில தரித்திரருக்கு ஏராளமான பிள்ளைகள் இருக்கும். ஆனால் அவர்களுடைய வீட்டில் பிள்ளைகளுக்கு போஜனம் இருக்காது. ஒரு சில ஐசுவரியவான்களுக்கு திரளான செல்வம் இருக்கும். ஆனால் அந்த செல்வத்தை அனுபவிக்க அந்த வீட்டிலே பிள்ளைகள் இருக்காது. கர்த்தர் யாக்கோபுக்கு இப்படிப்பட்ட பிரச்சனையை அனுமதிக்கவில்லை. அவர் யாக்கோபுக்கு ஜனத்தையும் கொடுக்கிறார். தேசத்தையும் கொடுக்கிறார்.

தேவன் யாக்கோபுக்கு சொல்லுகிற ஆசீர்வாதத்திற்கு வேதபண்டிதர்கள் ஆவிக்குரிய வியாக்கியானம் சொல்லுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வித்தாகயிருக்கிறார். பரலோகம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாயிருக்கிறது. கர்த்தருடைய ஜனம் எல்லோருக்கும் பரலோகத்திலே இடமிருக்கிறது.

தேவன் யாக்கோபுக்கு இரண்டு ஆசீர்வாதங்களையும் சொல்லிவிட்டு, அந்த ஸ்தலத்திலிருந்து அவர் யாக்கோபை விட்டு எழுந்தருளிப்போகிறார். தேவன் யாக்கோபுக்கு மேலாக போகிறார். தேவனுடைய மகிமை அங்கு பிரத்தியட்சமாய் வெளிப்படுகிறது. யாக்கோபு தேவனோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தேவனுடைய மகிமை அவரை மூடுகிறது (ஆதி 35:13).

அப்பொழுது யாக்கோபு தேவன் தன்னோடே பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்துகிறார். அவர் அதின்மேல் பானப-யை ஊற்றி, எண்ணெயையும் வார்க்கிறார். தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிடுகிறார் (ஆதி 35:14,15).

பானபலி என்னும் வார்த்தை, இந்த வசனப்பகுதியில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்பு இது பிரமாணத்தின் ஒரு பகுதியாயிற்று (லேவி 23#ஆவது அதிகாரம்).

""பெத்தேல்'' என்னும் எபிரெய வார்த்தைக்கு ""தேவனுடைய வீடு'' என்று பொருள். இதன் மறுபெயர் லூஸ் (ஆதி 28:19; யோசு 18:13) இது எருசலேமிலிருந்து வடக்கு திசையில் 12மைல் தூரத்திலுள்ள பட்டணம். இது யூதமார்க்கத்தின் மைய ஸ்தலமாயிற்று. (1சாமு 7:16; 1சாமு 10:3; 1இராஜா 12:29-33; 1இராஜா 13:1-32; 2இராஜா 2:2-23; 2இராஜா 10:29; 2இராஜா 17:28; ஆமோ 3:14).

தேவன் யாக்கோபோடு பேசினது, யாக்கோபின் ஜீவியத்தில் நடைபெற்ற மிகவும் முக்கியமான சம்பவமாகும். ஆகையினால் அவருக்கு அந்த ஸ்தலம் மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. அங்கே யாக்கோபு ஒரு கற்றூணை ஞாபகசின்னமாக நிறுத்துகிறார். அதன்மீது எண்ணெயை பானபலியாக வார்க்கிறார். யாக்கோபு அந்த ஸ்தலத்திற்கு தேவனுடைய வீடு என்று பேரிடுகிறார். அவர் தேவனுடைய நாமமகிமைக்காக அங்கே கற்றூணை நிறுத்தியிருக்கிறார்.

ராகேலின் மரணம்

ஆதி 35:16#20

ஆதி 35:16. பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

ஆதி 35:17. பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.

ஆதி 35:18. மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

ஆதி 35:19. ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கப்பண்ணப்பட்டாள்.

ஆதி 35:20. அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்தநாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

ராகேல் யாக்கோபுக்கு மிகவும் பிரியமான மனைவி. ராகேலின் மரணத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. யாக்கோபும் அவருடைய வீட்டாரும் பெத்தேலைவிட்டு பிரயாணம் புறப்படுகிறார்கள். அவர்கள் இன்னும் பெத்லகேமுக்கு வந்து சேரவில்லை. பெத்லகேமுக்கு அக்காலத்தில் எப்பிராத்தா என்னும் வேறொரு பெயரும் இருந்தது.

யாக்கோபும் அவருடைய வீட்டாரும் பெத்லகேமுக்கு அருகாமையில் வருகிறார்கள். அப்போது ராகேல் பிள்ளை பெறுகிறாள். பிரசவத்தில் ராகேலுக்கு கடும் வேதனை உண்டாயிற்று. ராகேல் ஒரு ஆண்பிள்ளையை பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளை உயிரோடிருக்கிறது. ஆனால் ராகேல் மரித்துப்போகிறாள்.

ராகேல் பிரசவிக்கும்போது, அவளுக்கு கடும் வேதனையாயிருக்கிறது. மருத்துவச்சி ராகேலைப் பார்த்து, ""பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய்'' (ஆதி 35:17) என்று ஆறுதலான வார்த்தைகளை சொல்லுகிறாள்.

மரணத்தின்போது ஆத்துமா சரீரத்தை விட்டு பிரிகிறது. (யாக் 2:26). நீதிமான்களின் ஆத்துமா பரலோகத்திற்குச் செல்லும். (2கொரி 5:8; பிலி 1:21-24; எபி 12:23; வெளி 6:9) துன்மார்க்கரின் ஆத்துமா நரகத்திற்குப் போகும். (லூக்கா 16:19-31; ஏசா 14:9; வெளி 20:11-15). உயிர்த்தெழுதல் வரையிலும், சரீரம் மண்ணுக்குத் திரும்பும். (ஆதி 3:19, தானி 12:2; யோவான் 5:28-29).

ராகேலோ, பிரசவிக்கும் போது கடும் வேதனையிலிருக்கிறாள். அவள் மரித்துப்போகும் நிலமையிலிருக்கிறாள். மரணகாலத்தில் ராகேலின் ஆத்துமா பிரியும்போது, அவள் தன் மகனுக்கு, பெனானி என்று பேரிடுகிறாள். பெனானி என்னும் பெயருக்கு வருத்தத்தின் குமாரன் என்று பொருள்.

யாக்கோபோ அந்தக் குழந்தைக்கு பென்யமீன் என்று பேரிடுகிறார். இந்தப் பெயருக்கு என் வலதுகரத்தின் குமாரன் என்று பொருள். யாக்கோபு தன்னுடைய குமாரனை பெனானி என்று அழைக்க விரும்பவில்லை. யாக்கோபு அவனை அந்தப் பெயரால் ஒவ்வொரு முறை அழைக்கும்போதும், அவருடைய மனதிலே ராகேலின் கடும் வேதனையும், மரணமும் நினைவுக்கு வரும்.

யாக்கோபு அந்த சோகத்தை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. ஆகையினால் ராகேல் பெற்ற தன் மகனுக்கு ""பென்யமீன்'' என்னும் புதிய பெயரைக் கொடுக்கிறார். பென்யமீன் யாக்கோபுக்கு வலதுகரத்தைப்போல அருகாமையிலிருப்பான். வலதுகரம் ஆசீர்வாதத்திற்கு அடையாளம். அந்தக்கரம் வயதான காலத்தில் ஆதரவாயிருப்பதற்கு அடையாளம். யாக்கோபு தன்னுடைய வலதுகையில் கோலைப்பிடித்திருப்பதுபோல, பென்யமீனை தனக்கு ஆதரவாகப் பிடித்திருக்க விரும்புகிறார்.

ராகேல் எந்த ஸ்தலத்தில் மரித்தாளோ, அதற்கு அருகாமையிலேயே யாக்கோபு அவளை அடக்கம்பண்ணுகிறார். ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கப்பண்ணப்படுகிறாள். யாக்கோபு அவள் கல்லறையின்மேல் ஒரு தூணை நிறுத்துகிறார்; அதுவே இந்தநாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண் (ஆதி 35:19,20).

கல்லறையின்மேல் தூணை நிறுத்தும் பழக்கம் முதலாவதாக இங்கு ஆரம்பமாகிறது. யூதரும், அரபியரும் இன்றும் ராகேலின் கல்லறைக்கு மரியாதை செலுத்துகிறார்கள். இப்பொழுது ராகேலின் கல்லறையில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கல்லறை பெத்லகேமிலிருந்து ஒரு மைல் தூரத்திலும், எருசலேமிலிருந்து 3 மைல் தூரத்திலும் உள்ளது.

""நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகே-ன் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மே-ருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்'' (1சாமு 10:2).

கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலினால் பிற்காலத்தில் பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊர் பென்யமீனின் சுதந்தர எல்லைக்குள் வருகிறது.

ஈசாக்கின் மரணம்

ஆதி 35:21#29

ஆதி 35:21. இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

ஆதி 35:22. இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

ஆதி 35:23. யாக்கோபின் குமாரன் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

ஆதி 35:24. யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.

ஆதி 35:25. தாண், நப்த- என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.

ஆதி 35:26. காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

ஆதி 35:27. பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

ஆதி 35:28. ஈசாக்கு விருத்தாப்பிரியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,

ஆதி 35:29. பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

ராகேலின் மரணத்திற்கு பின்பு, யாக்கோபு இஸ்ரவேல் என்று அழைக்கப்படுகிறார். இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போடுகிறார் (ஆதி 35:21). யாக்கோபு தனக்கு வந்த எல்லா வேதனைகளையும் தாங்கிக்கொண்டு, அவர் கர்த்தருக்கு உண்மையுள்ளவராய் கீழ்ப்படிந்தார். ஆகையினால் அவர் இங்கு இஸ்ரவேல் என்று அழைக்கப்படுகிறார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

இந்த வசனப்பகுதியில் ரூபனுடைய பாவத்தைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கிறார். அப்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனிக்கிறான்; அதை இஸ்ரவேல் கேள்விப்படுகிறார் (ஆதி 35:22)

ரூபனுடைய பாவத்தில் பில்காளும் பங்காளியாயிருக்கிறாள். ரூபனுடைய பாவம் மிகவும் பெரிதாயிருப்பதினால், அவன் தன்னுடைய சுதந்தரபாக ஆசீர்வாதத்தை இழந்துபோகிறான். ரூபன் பில்காளோடே சயனித்தது அவனுடைய மகாபெரிய பாவம். இந்தப் பாவம் யாக்கோபுக்கு மிகுந்த மனவேதனையாயிருக்கிறது.

""ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே'' (ஆதி 49:3,4).

யாக்கோபுக்கு பன்னிரண்டாவது குமாரனாக பென்யமீன் பிறந்திருக்கிறான். இவன் யாக்கோபின் குமாரர் எல்லோருக்கும் இளையவன். இந்த வசனப்பகுதியில் யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களின் பெயர்களும் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு பிதாக்களாகயிருக்கிறார்கள்.

யாக்கோபின் குமாரன் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர். யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர். தாண், நப்த- என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர். காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர் (ஆதி 35:23#26).

யாக்கோபின் தகப்பனாராகிய ஈசாக்கு எபிரொனில் தங்கியிருக்கிறார். யாக்கோபு எபிரொனுக்கு வருகிறார். யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வருகிறார்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர் (ஆதி 35:27).

யாக்கோபு ஆரானிலிருந்து திரும்பி வந்த பிறகு ஈசாக்கை பலமுறை பார்த்திருக்க வேண்டும். இப்பொழுது ஈசாக்கின் மரணத்தின்போது யாக்கோபு அங்கே திரும்பி வருகிறார் (ஆதி 35:27-29).

ஈசாக்கின் வயதைப்பற்றியும் மரணத்தைப்பற்றியும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலின் மற்ற முற்பிதாக்களைவிட, ஈசாக்கே அதிக வருஷங்களுக்கு உயிரோடிருந்தவர். ஈசாக்கு விருத்தாப்பிரியமும் பூரண ஆயுசுமுள்ளவராகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, பிராணன்போய் மரித்தார் (ஆதி 35:28). ஈசாக்கு 42 வருஷங்களுக்கு முன்பாகவே முதிர்வயதாகிவிட்டார் (ஆதி 27:2).

ஈசாக்கு ஆபிரகாமைவிட ஐந்து வருஷம் அதிகமாக ஜீவித்தார். (ஆதி 35:28; ஆதி 25:7) இஸ்மவேலைவிட 43 வருஷம் அதிகமாக ஜீவித்தார். (ஆதி 35:28; ஆதி 25:17) யாக்கோபைவிட 33 வருஷம் அதிகமாக ஜீவித்தார். ஏசா எத்தனை வயதில் மரித்தார் என்று தெரியவில்லை.

ஈசாக்கின் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம்பண்ணுகிறார்கள். ஈசாக்கு தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுகிறார். கர்த்தர் ஏசாவின் மனதை மாற்றியிருக்கிறார். தன் தகப்பனார் மரிக்கும்போது, தன் சகோதரன் யாக்கோபை கொன்றுபோடவேண்டுமென்று, ஏசா கோபத்தோடு சொன்னான்.

""யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்-க்கொண்டான்'' (ஆதி 27:41).

ஏசா சொன்ன பிரகாரம், ஈசாக்குக்காக துக்கிக்கும் நாட்கள் வந்திருக்கிறது. ஆனால் ஏசா தன் சகோதரன் யாக்கோபை, தன் இருதயத்தில் சொல்லிக்கொண்ட பிரகாரம் கொன்றுபோடவில்லை. கர்த்தர் ஏசாவின் இருதயத்தை மாற்றியிருக்கிறார். ஏசாவும் யாக்கோபும் இப்போது சகோதர சிநேகத்தோடிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் தகப்பனாராகிய ஈசாக்கை அடக்கம்பண்ணுகிறார்கள்.

யாக்கோபும், ஏசாவும் ஈசாக்கை அடக்கம் பண்ணும்போது அவர்களுக்கு 120 வயது (ஆதி 25:26; ஆதி 35:28). இது யாக்கோபு ஆரானிலிருந்து திரும்பி வந்து 23 வருஷங்களுக்குப் பின்பு நடைபெறுகிறது. எகிப்திற்குப் போவதற்கு 10 வருஷங்களுக்கு முன்பு நடைபெறுகிறது. (ஆதி 47:9). இந்த வசனத்திலும், 1நாளா 1:34 ஆவது வசனத்திலும் யாக்கோபின் பெயருக்கு முன்பாக ஏசாவின் பெயர் கூறப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் யாக்கோபின் பெயரே முதலாவதாக வருகிறது. (யோசு 24:4; எபி 11:20).

இக்காலத்தில் மரித்தவர்களைக் குகைகளில் அடக்கம் பண்ணுவது வழக்கம். ஈசாக்கை மக்பேலாவிலுள்ள குகையில் அடக்கம் பண்ணினார்கள். ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோரையும் இந்தக் குகையிலேயே அடக்கம் பண்ணினார்கள். (ஆதி 49:29-33).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.