32 அதிகாரம்

32 அதிகாரம்

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, கானான் தேசத்திற்கு அழைத்து வருகிறார். கர்த்தர் அவர்கள் மத்தியிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துகிறார். அவர்களை ஆளுகை செய்வதற்காக கர்த்தர் தம்முடைய கட்டளைகளையும், பிரமாணங்களையும் அவர்களுக்கு சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதாக வாக்குப்பண்ணுகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரப்பாதையின் வழியாக கானான் தேசத்தை நோக்கி பிரயாணம்பண்ணுகிறார்கள். கர்த்தர் தம்முடைய கிருபைகளையும், சிலாக்கியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, கர்த்தரோடு சமாதானமாயிருக்கிறார்கள்.

மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் கர்த்தருடைய சமுகத்திலே உபவாசத்தோடிருக்கிறார். அந்த நாற்பது நாட்கள் நிறைவுபெறுகிறது. கர்த்தர் மோசேயின் கையிலே தம்முடைய விரலால் எழுதின இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறார். மோசே அந்தக் கற்பலகைகளை பெற்றுக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வர தன்னை ஆயத்தப்படுத்துகிறார்.

சீனாய் மலைக்கு கீழே இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்கியிருக்கிறார்கள். அவர்கள் தன்னை அன்போடு வரவேற்பார்கள் என்றும், கர்த்தருடைய வார்த்தைகளை அவர்களுக்கு சொல்லும்போது, அவர்கள் கர்த்தருடைய பிரமாணங்களுக்கு சந்தோஷமாய்க் கீழ்ப்படிவார்கள் என்றும் மோசே எதிர்பார்க்கிறார். சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவுடன், இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே, கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தை போடவேண்டும் என்னும் திட்டமும் மோசேயின் மனதிலிருக்கிறது.

ஆனால் மோசே எதிர்பார்த்த பிரகாரம், சீனாய் மலைக்கு கீழே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு முன்பாக காத்திருக்கவில்லை. இஸ்ரவேல் புத்திரர் தங்களை பாவத்திற்கும், அக்கிரமத்திற்கும், விக்கிரகாராதனைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். மோசே அந்த ஸ்தலத்திலே இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே, கர்த்தருடைய பிரமாணங்களை சொன்னார். அவர்களும், கர்த்தருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிவதாக வாக்குப்பண்ணினார்கள். இப்போதோ அவர்கள் அதே ஸ்தலத்தில், கர்த்தரை ஆராதியாமல், ஒரு பொன்கன்றுக்குட்டியை செய்து, அதை ஆராதிக்கிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தரை விட்டு விலகிப்போனதினால், கர்த்தரும் அவர்களை விட்டு விலகிப்போகிறார். கர்த்தருடைய கிருபையும், சிலாக்கியமும் அவர்களை விட்டு விலகிப்போகிறது. கர்த்தருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் இடையே பரிசுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ அந்த உடன்படிக்கையை மீறி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயில்லை. அவர்களிடத்தில் ஆவிக்குரிய வேசித்தனம் காணப்படுகிறது. இதனால் கர்த்தருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் நடுவே இருக்கிற உடன்படிக்கையும், ஐக்கியமும் முறிந்துபோயிற்று. முறிந்துபோன ஐக்கியத்தை மறுபடியும் ஒன்றாய் இணைப்பது மிகவும் கடினமான காரியம்.

இஸ்ரவேல் புத்திரர் ஒரு பொன்கன்றுக்குட்டியை செய்து அதைத் தங்கள் தெய்வமாக ஆராதிக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரரின் பாவத்தில் ஆரோனுக்கும் பங்கு இருக்கிறது (யாத் 32:1#6).

இஸ்ரவேல் புத்திரரின் விக்கிரகாராதனையைப்பற்றி கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார். மோசே இப்போது கர்த்தரோடு சீனாய் மலையிலிருக்கிறார் (யாத் 32:7,8). இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக கர்த்தருடைய கோபம் எழும்பியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய நீதியான நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறார் (யாத் 32:9,10).

மோசே சீனாய் மலையிலே, இஸ்ரவேல் புத்திரருக்காக, கர்த்தருடைய சமுகத்திலே பரிந்து பேசுகிறார் (யாத் 32:14). மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார். இஸ்ரவேல் புத்திரர் பொன்கன்றுக்குட்டியை செய்து அதை ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய விக்கிரகாராதனைக்கு மோசே கண்ணாரக்கண்ட சாட்சியாயிருக்கிறார் (யாத் 32:15#19).

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய விக்கிரகாராதனையைக் கண்டபோது கோபமூண்டவராகி, தன் கையிலிருக்கிற கற்பலகைகளை உடைத்துப்போடுகிறார் (யாத் 32:19) இஸ்ரவேல் ஜனத்தார் உண்டுபண்ணின பொன்கன்றுக்குட்டியை அக்கினியில் சுட்டெரித்துப்போடுகிறார் (யாத் 32:20).

இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகத்தை ஆராதிப்பது பற்றி, மோசே ஆரோனிடத்தில் விசாரிக்கிறார் (யாத் 32:21#24). இஸ்ரவேல் ஜனத்தாரை விக்கிரகாராதனைக்கு நேராக வழிநடத்தின தலைவர்களுக்கு மோசே மரணதண்டனை கொடுக்கிறார் (யாத் 32:25#29).

மோசே மறுபடியும் சீனாய் மலையில் ஏறிப்போய், இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபிக்கிறார் (யாத் 32:30#32). கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர்மீது கோபமாயிருக்கிறார். கர்த்தருடைய கோபம் குறையவேண்டும் என்பதே மோசேயின் பிரதான ஜெபமாகும். கர்த்தர் மோசேயின் ஜெபத்திற்கு கிருபையான பிரதியுத்தரம் சொல்லுகிறார். இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகுமாறு கர்த்தர் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார் (யாத் 32:33#35).

பொன்கன்றுக்குட்டி

யாத் 32:1#6

யாத் 32:1. மோசே மலையி-ருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்தி-ருந்து எங்களை அழைத்துக் கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

யாத் 32:2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

யாத் 32:3. ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டு வந்தார்கள்.

யாத் 32:4. அவர்கள் கையி-ருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்தி-ருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

யாத் 32:5. ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு ப-பீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

யாத் 32:6. மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனப-களையிட்டு, சமாதானப-களைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

மோசே சீனாய்மலையில் நாற்பது நாட்களுக்கு உபவாசித்து ஜெபிக்கிறார். இந்தச் சம்பவம் அவருடைய உபவாசத்தின் 38 அல்லது 39 ஆவது நாளில் நடைபெற்ற சம்பவமாக இருக்கலாம். யாத் 32:5 ஆவது வசனத்தில் ""நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை'' என்று ஆரோன் கூறுகிறார். ஆரோன் கன்றுக்குட்டியை வார்த்துச் செய்திருக்கிறார். ஒரே நாளில் பொன்னையெல்லாம் உருக்கி, கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார். பண்டிகை நாளில் மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார் (யாத் 32:5#28).

மோசே சீனாய் மலையிலே கர்த்தருடைய சமுகத்திலே இரவும் பகலும் நாற்பது நாட்களாக இருக்கிறார். கர்த்தர் மோசேயின் கையிலே தம்முடைய விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறார். அப்போது இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் சீனாய் மலைக்கு கீழே பாளயமிறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அங்கே கர்த்தரைப்பற்றியும், அவர் ஏற்கெனவே தங்களுக்கு சொன்ன பிரமாணங்களைப்பற்றியும் தியானிக்கலாம். ஆனால் அவர்களோ கர்த்தரைப்பற்றியும் அவருடைய வார்த்தைகளைப்பற்றியும் தியானிக்காமல், கர்த்தருக்கு விரோதமான நூதன காரியங்களைப்பற்றி யோசிக்கிறார்கள்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய பிரமாணங்களை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அவர்களும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் சிலர் கர்த்தருடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல், கர்த்தருக்கு விரோதமாக எவ்வாறு கலகம்பண்ணுவது என்று யோசிக்கிறார்கள்.

மோசே சீனாய் மலையில் கர்த்தருடைய சமுகத்திலே நாற்பது நாட்களாகயிருக்கிறார். அவர் அங்கே இருந்த முப்பத்தொன்பதாவது நாளிலே, மலைக்கு கீழே இருக்கிற இஸ்ரவேல் புத்திரரில் சிலர் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறார்கள். கர்த்தருடைய பிரமாணத்தை எவ்வாறு மீறலாம் என்று அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்.

மோசேயின் சகோதரனாகிய ஆரோன் இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே இருக்கிறார். மோசே சீனாய் மலையின்மீது கர்த்தருடைய சமுகத்திலே இருக்கிறார். மோசே இஸ்ரவேல் புத்திரரோடு இருக்க முடியாத இந்த நாட்களிலே, மோசேயின் ஸ்தானத்திலே ஆரோன் அவர்களை ஆளுகை செய்கிறார். மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதமாகிறது என்று ஜனங்கள் நினைக்கிறார்கள்.

சீனாய் மலையின்கீழே பாளயமிறங்கியிருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு பொறுமையில்லை. அவர்கள் தங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிற ஆரோனிடத்தில் கூட்டங்கூடி வருகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் ஆரோனை நோக்கி, ""எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' (யாத் 32:1) என்று சொல்லுகிறார்கள்.

அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங் கூடுகிறார்கள். எகிப்து தேசத்திற்குத் திரும்பிப் போகவேண்டுமென்றும் தங்களுக்குத் தெய்வங்களை உண்டுபண்ண வேண்டுமென்றும் இஸ்ரவேல் புத்திரர் தீர்மானமாக இருக்கிறார்கள். (யாத் 32:1,22; அப் 7:39#40). மோசே அவர்கள் மத்தியில் இல்லை. ஆரோனால் அவர்களைத் தைரியமாக வழிநடத்த இயலவில்லை. ஜனங்களுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து, ஆரோனும் ஒரு தெய்வத்தைச் செய்து, அவர்களோடு எகிப்திற்குத் திரும்பிப்போகச் சம்மதிக்கிறார் (யாத் 32:1#6).

இஸ்ரவேல் புத்திரர் ஆரோனிடம் ""நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று சொல்லுகிறார்கள். பத்துக் கற்பனைகளில் முதல் இரண்டு கற்பனைகளை இஸ்ரவேல் புத்திரர் மீறுகிறார்கள். தேவனுக்கும், அவருடைய பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவோம் என்று அவர்கள் ஆணையிட்டதை மீறிவிடுகிறார்கள் (யாத் 20:3#6; யாத் 24:3,7).

""மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்'' என்றும் இஸ்ரவேல் புத்திரர் ஆரோனிடம் சொல்லுகிறார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மோசே இஸ்ரவேல் புத்திரரை விடுவித்து, வனாந்தரத்தின் வழியாக வழிநடத்திக் கொண்டு வருகிறார். தேவன் மோசேயின் மூலமாகப் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். எகிப்தின் தெய்வங்களுக்கு வல்லமையில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும் தங்களுக்கு ஒரு தெய்வத்தை உண்டுபண்ண வேண்டுமென்று இஸ்ரவேல் புத்திரர் ஆரோனிடம் கூறுகிறார்கள். மோசே விக்கிரகாராதனையைத் தடைபண்ணியிருக்கிறார். (யாத் 20:3#6). இஸ்ரவேலரின் தூஷணமான இந்தச் செய்கையை மோசே உபா 9:8#21,25#29; உபா 10:1#11 ஆகிய வசனங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இஸ்ரவேல் புத்திரர் சீனாய் மலைக்கு கீழே பாளயமிறங்கியிருக்கிறார்கள். மோசே இப்போது அவர்கள் மத்தியிலே இல்லை. அவர் சீனாய் மலையின்மேலே கர்த்தருடைய சமுகத்திலிருக்கிறார். மோசே இஸ்ரவேல் புத்திரர் மத்தியில் இல்லாதபோது, அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக சிந்திக்கிறார்கள். அவர்களுடைய மனது கெட்டுப்போயிற்று. அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரரால் மோசே வரும் வரையிலும் பொறுமையோடு காத்திருக்க முடியவில்லை. அவர்கள் திரளான ஜனங்களாயிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலே கோபமும், வாக்குவாதங்களும், முரட்டாட்டங்களும் உண்டாயிற்று.

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் பண்ணுகிறார்கள். அந்த தேசம் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம். அது பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான தேசம். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ வாக்குத்தத்த தேசத்திற்கு போகபொறுமையில்லாதவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்பதினால் களைப்படைந்துபோயிருக்கிறார்கள். கானான் தேசத்திற்கு உடனே போய்ச்சேர வேண்டுமென்று அவசரப்படுகிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, தங்களோடுகூட கர்த்தருடைய வார்த்தைகளையும் கொண்டுபோகவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணுகிற இந்த நாட்களிலே, கர்த்தர் அவர்களுக்கு தம்முடைய கட்டளைகளையும், பிரமாணங்களையும், வார்த்தைகளையும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களோ கர்த்தருடைய வார்த்தைகளை, அவருடைய சமுகத்திலே பொறுமையோடு காத்திருந்து பெற்றுக்கொள்ள ஆயத்தமாயில்லை. அவர்கள் பொறுமையில்லாமல் அவசரப்படுகிறார்கள்.

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நாம் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, நாம் கர்த்தருடைய பிரமாணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களோடு ஒரு சில நிபந்தனைகளையும் சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தைகளை பொறுமையோடு கேட்டால்தான், அவர் சொல்லுகிற நிபந்தனைகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். கர்த்தருடைய சமுகத்திலே காத்திருப்பதினால் நமக்கு நன்மையே உண்டாகும். காத்திருக்கும் காலம் ஒருபோதும் வீணாய்ப்போவதில்லை.

இஸ்ரவேல் ஜனத்தார் சீனாய் மலையின்கீழே பாளயமிறங்கியிருக்கிறார்கள். மோசே ஏற்கெனவே சீனாய் மலைக்கு மேலே ஏறிப்போயிருக்கிறார். மோசே மலையிலிருந்து இறங்கி வருவதற்காக ஜனங்கள் மலைக்கு கீழே காத்திருக்கிறார்கள். மோசே மலையிலிருந்து இறங்கிவர தாமதமாயிற்று. அவர்கள் மோசேயைப்பற்றிச் சொல்லும்போது, ""எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்'' (யாத் 32:1) என்று சொல்லுகிறார்கள்.

அவர்கள் மோசேயைப்பற்றிச் சொல்லும்போது, மரியாதையில்லாமல் ""அந்த மோசே'' என்று மரியாதை குறைவான வார்த்தையை சொல்லுகிறார்கள். மோசே அவர்கள்மீது அன்பாகவும், கரிசனையாகவும் இருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனத்தாருக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசுகிறார். மோசே இஸ்ரவேல் ஜனத்தாரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு கர்த்தருடைய கருவியாகப் பயன்பட்டவர்.

ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, மோசே இதுவரையிலும் தங்களுக்கு செய்த உதவிகளை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் மோசேக்கு நன்றியுள்ளவர்களாகயில்லை. மோசே அவர்களுக்காகத்தான் சீனாய் மலைக்குமேல் ஏறிப்போயிருக்கிறார். மோசே அவர்களுக்காகத்தான் கர்த்தருடைய சமுகத்திலே நாற்பதுநாள் இரவும் பகலும் உபவாசத்தோடு இருக்கிறார்.

மோசே சீனாய் மலையிலிருக்கும்போது கர்த்தர் அவரோடு கூட பேசுகிறார். மோசே மலையிலிருந்து இறங்கிவர தாமதமாகிறது என்றால், கர்த்தர் அவரோடுகூட பேசவேண்டியது ஏராளமாயிருக்கிறது என்று பொருள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் நன்மைக்காகவே மோசேயினிடத்தில் தம்முடைய வார்த்தைகளை சொல்லுகிறார். மோசே கர்த்தருடைய வார்த்தைகளை அதிகமாய்ப் பெற்றுக்கொண்டால், இஸ்ரவேல் புத்திரருக்கு அதிகமான நன்மை உண்டாகும்.

மோசே சீனாய் மலையின்மேல் தனக்காகவோ அல்லது தன்னுடைய சொந்த குடும்பத்திற்காகவோ ஏறிப்போகவில்லை. அவர் இஸ்ரவேல் புத்திரரின் பிரதிநிதியாக சீனாய் மலையின்மேல் ஏறி, கர்த்தருடைய சமுகத்திலே இருக்கிறார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் அந்த மலையின்மீது இருந்தாலும், அவர் ஒன்றும் புசியாமல் உபவாசத்தோடு கர்த்தருடைய சமுகத்திலே இருக்கிறார்.

மோசே மலையின்மேல் ஏறிப்போயிருந்தாலும், கர்த்தருடைய வார்த்தைகளை பெற்றுக்கொண்ட பின்பு, அவர் நிச்சயமாய் மலைக்கு கீழே இறங்கிவருவார். மோசே போன காரியம் முடிந்துவிட்டால், அவர் மலையின் மேலேயே தங்கிவிடமாட்டார். கர்த்தர் மோசேயோடு பேசுவதற்கு நாற்பது நாட்களை எடுத்துக்கொள்கிறார். இதனால்தான் மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதமாயிற்று.

ஆனால் மலையின் கீழே இருக்கிற இஸ்ரவேல் புத்திரரோ, மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதமானதை, தங்களுடைய துன்மார்க்கமான யோசனைக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். சகலமும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமும், அவருடைய வேளையிலும் நடைபெறும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மறுபடியும் வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் தமக்கு சித்தமான வேளையிலே மறுபடியும் வருவார். அவர் வருவதற்கு தாமதமாகும்போது, அந்த தாமதத்திற்கு தப்பிதமாக வியாக்கியானம் பண்ணக்கூடாது. கர்த்தருடைய வேளை வரும் வரையிலும் நாம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். தப்பிதமான வியாக்கியானங்கள் நம்மை தவறான பாதையில் வழிநடத்தும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இப்போது பரலோகத்திலே தம்முடைய பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கே அவர் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்முடைய சரீரப்பிரகாரமான கண்களால், கிறிஸ்துவானவர் பிதாவினிடத்தில் பரிந்துபேசுவதை, நம்மால் பிரத்தியட்சமாய்ப் பார்க்க முடியாது. பரலோகத்தின் இரகசியங்கள் நமக்கு மறைவாயிருக்கிறது. ஆனாலும் நாம் தரிசித்து ஜீவிக்காமல், கர்த்தரை விசுவாசித்து ஜீவிக்கவேண்டும்.

கர்த்தருக்காக காத்திருப்பதில் நாம் ஒருபோதும் சோர்ந்துபோய்விடக்கூடாது. கர்த்தருடைய சமுகத்திலே பொறுமையோடு காத்திராதவர்கள் பல்வேறு விதமான சோதனைகளிலே சிக்கிக்கொள்கிறார்கள். கர்த்தருடைய சமுகத்திலே காத்திருக்கிறவர்களோ புதுபெலன் பெறுகிறார்கள்.

மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வர ஆயத்தமாயிருக்கிறார். மலைக்கு கீழே இருக்கிற இஸ்ரவேல் புத்திரர், இன்னும் ஒரு நாள் காத்திருந்தால், மோசே அவர்கள் மத்தியிலே வந்துவிடுவார். அப்போது மோசேக்கு என்ன சம்பவித்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால் அவர்களோ பொறுமையில்லாதவர்களாக, அவசரப்பட்டு, ""அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்'' என்று சொல்லுகிறார்கள்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே தெய்வீக ஆராதனையை ஸ்தாபனம்பண்ணுகிறார். அவர்களுக்கு தம்முடைய தெய்வீக பிரமாணங்களையும் சொல்லுகிறார். ஆனால் அவர்களோ கர்த்தருடைய தெய்வீக பிரமாணங்களை பெற்றுக்கொள்ள காத்திருப்பதிலே சோர்ந்துபோயிருக்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் இந்த மலையிலே கர்த்தரை ஆராதிக்கவேண்டும் என்று கர்த்தர் அவர்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் விரும்பிய பிரகாரம், அவர்களால் கர்த்தரை உடனே ஆராதிக்க முடியவில்லை. தமக்கு பரிசுத்த ஸ்தலத்தை ஸ்தாபிப்பதற்கான கட்டளைகளை கர்த்தர் மோசேக்கு சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டளைகளை மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லும் முன்பாகவே, இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுடைய சுயயோசனையின் பிரகாரமாக ஒருவிக்கிரகத்தை செய்து அதை ஆராதிக்கிறார்கள்.

தாங்கள் செய்த விக்கிரகம் தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளம் என்று அவர்கள் தங்களுக்கு தாங்களே நினைத்துக்கொள்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகாராதனையில் சந்தோஷப்படுகிறார்கள். தாங்கள் உண்டுபண்ணின பொன்கன்றுக்குட்டியை நினைத்து அவர்கள் பெருமைப்படவும் செய்கிறார்கள். தங்கள் கைகளால் உண்டுபண்ணின விக்கிரகத்தை அவர்கள் ஆராதனை செய்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் ஒரு பொன்கன்றுக்குட்டியை செய்து அதை தெய்வமாக ஆராதிக்கிறார்கள். அவர்கள் எகிப்து தேசத்திலே இருந்தபோது, எகிப்தியர்கள் கன்றுக்குட்டியை தங்கள் தெய்வமாக ஆராதனை செய்ததை, இஸ்ரவேல் ஜனத்தார் பார்த்திருப்பார்கள். எகிப்தியர்கள் கன்றுக்குட்டியை மாத்திரமல்ல, மேலும் பல தெய்வங்களையும் ஆராதிக்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரருக்கு கர்த்தர் மாத்திரமே தேவனாயிருக்கிறார். கர்த்தர் ஒருவரே. ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ ஆரோனை நோக்கி, ""தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று சொல்லுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரருடைய மனதிலே பல தெய்வங்களை ஆராதிக்கும் எண்ணம் இருக்கிறது. தங்களுக்கு எத்தனை தெய்வங்கள் வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியாது. கர்த்தர் மாத்திரமே அவர்களுக்கு போதுமானவராயிருக்கிறார்.

இஸ்ரவேல் புத்திரரோ தங்களுடைய தேவனாகிய கர்த்தரை மறந்துவிட்டு, தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை தங்களுக்காக உண்டுபண்ணும் என்று ஆரோனிடம் சொல்லுகிறார்கள். அவர்கள் எத்தனை தெய்வங்களை உண்டுபண்ணினாலும், அவை மெய்யான தெய்வமல்ல. கர்த்தர் மாத்திரமே மெய்யான தேவன். அவரே சர்வசிருஷ்டிகர். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ, சிருஷ்டிகராகிய கர்த்தரை ஆராதியாமல், தாங்கள் உண்டுபண்ணின சிருஷ்டியாகிய பொன்கன்றுக்குட்டியை ஆராதிக்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் ஆரோனிடம், ""நீர் எழுந்து, எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று சொல்லுகிறார்கள். அதற்கு ஆரோன், ""உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள்'' (யாத் 32:2) என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் ஆரோனிடம், ""தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று சொன்னபோது, ஆரோன் அவர்களுடைய யோசனையை மறுத்ததாக தெரியவில்லை. அவர்களுடைய வார்த்தைகளை நிராகரித்ததாகவோ அல்லது அவர்களுடைய யோசனைக்கு எதிர்ப்பு சொன்னதாகவோ இந்த வசனத்தில் சொல்லப்படவில்லை. அவர்கள் கேட்டுக்கொண்ட பிரகாரம், அவர்களுக்காக தெய்வங்களை உண்டுபண்ண ஆரோன் ஆயத்தமாயிருக்கிறார். ஆரோன் அவர்களுடைய கோரிக்கையை அங்கீகரிக்கிறார்.

மோசே இஸ்ரவேல் புத்திரர் மத்தியில் இல்லாதபோது, ஆரோன் அவர்களுடைய ஆவிக்குரிய காரியங்களை கவனிக்கவேண்டும். ஆரோன் அவர்களுக்கு கர்த்தரைப்பற்றிய சத்தியத்தை உபதேசம்பண்ணவேண்டும். ஆனால் ஆரோனோ, இஸ்ரவேல் புத்திரருக்கு மறுப்பு வார்த்தை ஒன்றும் சொல்லாமல், அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தெய்வங்களை உண்டுபண்ண சம்மதிக்கிறார்.

இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுக்காக தெய்வங்களை உண்டுபண்ண வேண்டும் என்று கேட்பது அவர்களுடைய மதியீனமான காரியம். அவர்கள் ஆரோனிடத்தில் கேட்டது ஒருவேளை ஆரோனுக்கு நகைப்பாகவும், ஏளனமாகவும் இருந்திருக்கலாம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். ஆரோன் அவர்களுக்கு வேடிக்கையான ஒரு பொருளை செய்து, அதை அவர்களுடைய தெய்வம் என்று சொல்ல நினைத்திருப்பார் என்றும் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரருடைய மதியீனத்தை அவர்களுக்கு விளக்கி சொல்ல ஆரோன் முன்வந்தார் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள்.

ஆரோன் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, ""உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள்'' என்று சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரருடைய ஸ்திரீகளுக்கு காதுகளிலிருக்கிற பொன்னணிகள் மிகவும் விசேஷமானது. அவை தங்களுக்கு அலங்காரமானது என்றும், முக்கியமானது என்றும் இஸ்ரவேல் ஸ்திரீகள் நினைக்கிறார்கள். அவர்களுடைய ஸ்திரீகள் தங்கள் காதுகளில் இருக்கிற பொன்னணிகளை கழற்றமாட்டார்கள் என்று ஆரோன் எதிர்பார்த்திருப்பார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

ஸ்திரீகள் தங்கள் பொன்னணிகளை கழற்றி ஆரோனிடத்தில் கொடுப்பதற்கு பதிலாக, தங்களுக்கு தெய்வங்களை உண்டுபண்ணவேண்டாம் என்று சொல்லுவார்கள் என்று ஆரோன் எதிர்பார்த்தார் என்றும் வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். ஆரோன் இஸ்ரவேல் புத்திரருடைய மதியீனமான யோசனையை அழித்துப்போட முயற்சி பண்ணுகிறார். அவர்கள் எல்லோரும் பொன்னாபரணங்கள்மீது பேராசையுள்ளவர்கள். பொன்னாபரணங்களை கழற்றி கொடுத்துவிட்டால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் உண்டாகும் என்று நினைத்து, தங்கள் பொன்னணிகளை கழற்றிக்கொடுக்கமாட்டார்கள் என்றும், தங்களுக்கு தெய்வங்களை உண்டுபண்ணவேண்டாம் என்று சொல்லுவார்கள் என்றும் ஆரோன் எதிர்பார்த்தார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

""பையி-ருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூ-பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்'' (ஏசா 46:6).

இஸ்ரவேல் புத்திரரோ, தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை தங்களுக்காக உண்டுபண்ணவேண்டும் என்பதில் உறுதியாயிருக்கிறார்கள். தங்களுடைய பொன்னணிகளை ஆரோனிடத்தில் கொடுப்பதினால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், தங்களுக்கு தெய்வங்கள் உண்டுபண்ணப்படவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாயிருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு தங்கள் பொன்னணிகளைவிட, விக்கிரகங்களே முக்கியமானதாகயிருக்கிறது. இஸ்ரவேலின் ஸ்திரீகள், தங்கள் பொன்னணிகளினால் தங்களை அலங்கரித்து பெருமைப்படுவதற்கு பதிலாக, தங்களுக்கு விக்கிரகங்களை செய்து, அந்த விக்கிரகங்களில் பெருமைப்படுகிறார்கள்.

ஆரோன் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் கேட்டுக்கொண்ட பிரகாரம், ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, அவரிடத்தில் கொண்டு வருகிறார்கள் (யாத் 32:3).

முதல் முறையாகக் காதணிகளையும், பொன்னணிகளையும் இஸ்ரவேல் புத்திரர் கொடுக்கிறார்கள். (யாத் 32:2#6). ஆசரிப்புக்கூடாரத்தைப் பண்ணும்போது அவர்கள் மறுபடியுமாகத் தங்கள் பொன்னணிகளைக் கொடுக்கிறார்கள். (யாத் 35:22#29).

கிழக்குத் தேசங்களில் ஸ்திரீகளைப்போல புருஷர்களும் காதணிகளையும், வளையங்களையும், மூக்குத்திகளையும் அணிந்திருந்தார்கள். பொன்னணிகள் பொதுவாக ஸ்திரீகளுக்கே உரியவை. (யாத் 35:22; எண் 31:50; ஏசா 3:19#21; எசே 16:11#12). ஒட்டகங்களும் பொன்சரப்பணிகளைத் தரித்திருந்தன. (நியா 8:26).

ஆரோனிடத்தில் ஆவிக்குரிய பின்மாற்றம் காணப்படுகிறது. அதைப்பற்றிய விவரம் வருமாறு :

1. ஜனங்கள் மோசேயைப் பற்றித் தவறாகக் கூறியதை ஆரோன் கவனித்துக் கேட்கிறார் (யாத் 32:1).

2. திரளான ஜனங்கள் விக்கிரகாராதனை செய்ய வேண்டுமென்று கூறியபோது, ஆரோனும் சம்மதம் தெரிவித்து, தன்னுடைய பெயர், புகழை ஸ்தாபிக்க விரும்புகிறார் (யாத் 32:1,22).

3. ஒரு விக்கிரகத்தைச் செய்வதற்கு ஆரோனும் ஜனங்களோடு சம்மதம் தெரிவிக்கிறார் (யாத் 31:2).

4. விக்கிரகத்தை வார்ப்பிக்க ஜனங்களிடத்திலிருந்து பொன்னணிகளைப் பெற்றுக் கொள்கிறார் (யாத் 31:4).

5. ஆராதனை செய்வதற்கு ஜனங்களுக்கு ஒரு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார்.

6. பொன்கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார் (யாத் 31:5).

7. கன்றுக்குட்டிக்கு ஒரு பண்டிகையை நியமித்து, கன்றுக்குட்டியைக் கர்த்தரோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

8. கன்றுக்குட்டிக்குச் சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்துகிறார்(யாத் 31:6).

9. கன்றுக்குட்டியை ஆராதிக்கும்போது ஜனங்களைப் புசிக்கவும், குடிக்கவும், உட்கார்ந்து விளையாடவும் அனுமதிக்கிறார் (யாத் 32:6,19).

10. கன்றுக்குட்டியைப் பணிந்து கொள்கிறார் (யாத் 31:8).

11. இஸ்ரவேலரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த தெய்வங்கள் இவைகளே என்று விக்கிரகங்களைக் குறித்துக் கூறுகிறார்.

12. ஆரோன் தான் செய்த பாவத்தை மற்றவர்கள்மீது சுமத்துகிறார் (யாத் 32:21#23).

13. கன்றுக்குட்டி அக்கினியிலிருந்து தானாக வந்தது என்று பொய்கூறுகிறார் (யாத் 31:24).

14. தேவனுடைய கோபத்திற்கு முன்பாக ஜனங்களை நிறுத்திவிடுகிறார் (யாத் 32: யாத் 11#14,25).

ஆரோன் அவர்கள் கையி-ருந்து அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார். அப்பொழுது அவர்கள்: ""இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்தி-ருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே'' (யாத் 32:4) என்று சொல்லுகிறார்கள்.

எகிப்து தேசத்தில் கன்றுக்குட்டி பிரதான தெய்வமாக இருக்கிறது. அதற்கு ""ஆபீஸ்'' என்று பெயர். கோசேன் பகுதிக்கு அருகில் மெம்பீஸ் பட்டணத்தில் எகிப்தியர் கன்றுக்குட்டியை வழிபட்டார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்தில் விக்கிரகங்களை ஆராதனை செய்தார்கள். (யோசு 24:14; எசே 20:8; யாத் 23:3#8).

""உங்களை எகிப்துதேசத்தி-ருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே'' என்று ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரும் கன்றுக்குட்டியைத் தெய்வங்கள் என்று கூறுகிறார்கள். இந்த வசனத்தில் தெய்வங்கள் என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை ""எலோஹிம்'' என்பதாகும். தேவனுடைய பெயரைக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கிறார்கள் (யாத் 32:1,4,8,23,31).

இஸ்ரவேல் புத்திரர், ""எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று கேட்டபோது ஆரோன் அவர்களுடைய யோசனையை மறுக்கவில்லை. தெய்வங்களை உண்டுபண்ணக்கூடாது என்று அவர்களிடத்தில் சொல்லாமல், பொன்னணிகளை கழற்றி தன்னிடத்தில் கொண்டு வருமாறு சொன்னார். அவர்களும் ஆரோன் சொன்ன பிரகாரம் தங்கள் காதுகளிலிருந்த பொன்னணிகளை கழற்றி ஆரோனிடத்தில் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

இஸ்ரவேல் ஸ்திரீகளுக்கு காதுகளிலிருக்கிற பொன்னணிகள் மிகவும் விசேஷமானது. அது அவர்களுக்கு மேன்மையானது. ஸ்திரீகளுக்கு அவர்களுடைய காதுகளிலிருக்கிற பொன்னணிகளே மிகுந்த அலங்காரமானது. இஸ்ரவேல் ஜனத்தாருக்கு மிகவும் பிரியமான பொன்னணிகளினால், அவர்களுக்கு விக்கிரகங்களை செய்யும்போது, அவர்கள் அந்த விக்கிரகத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் என்று ஆரோன் நினைத்திருக்கலாம். மரத்தாலும், இரும்பாலும், வெண்கலத்தாலும் செய்யப்படுகிற விக்கிரகத்தைவிட, பொன்னால் செய்யப்படுகிற விக்கிரகத்திற்கு ஜனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று ஆரோன் நினைத்திருக்கலாம்.

ஆரோன் அவர்கள் கையிலிருந்து பொன்னணிகளை வாங்கி உருக்குகிறார். அதை சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார். கன்றுக்குட்டியின் வார்ப்பு வடிவம் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது. அந்த வார்ப்பிலே உருக்கப்பட்ட பொன்னை ஊற்றுகிறார். அந்த பொன் ஒரு கன்றுக்குட்டியாக வார்ப்பிக்கப்படுகிறது. ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரும் வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியைப் பார்க்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியைப் பார்த்து, மற்ற ஜனங்களை நோக்கி, ""இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்தி-ருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே'' (யாத் 32:4) என்று சொல்லுகிறார்கள்.

ஆரோனுடைய மனதிலே ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது என்றும் வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். கன்றுக்குட்டியானது தேவனுடைய தெய்வீக பிரசன்னத்திற்கு அடையாளம் என்று ஆரோன் நினைக்கிறார். கன்றுக்குட்டிக்கு தலையும் கொம்புகளும் உள்ளது. இவை தேவனுடைய வல்லமைக்கு அடையாளம் என்று ஆரோன் நினைத்திருக்கலாம்.

இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே ஆடுமாடுகளும், கன்றுக்குட்டிகளும் ஏராளமாயிருக்கிறது. அவர்கள் தங்கள் மத்தியிலே திரளாயிருக்கிற கன்றுக்குட்டியைப்போன்ற உருவமுள்ள, இந்தப் பொன்கன்றுக்குட்டியை, தங்களுடைய தெய்வமாக நினைத்து, அதை ஆராதிக்கமாட்டார்கள் என்று ஆரோன் நினைத்திருக்கலாம். ஆனால் இஸ்ரவேல் ஜனத்தாரோ அந்தக் கன்றுக்குட்டியைப் பார்த்து, ""உங்கள் தெய்வங்கள் இவைகளே'' என்று சொல்லுகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தார் பல வருஷங்களாக எகிப்து தேசத்திலே அடிமைகளாயிருந்தவர்கள். எகிப்தியர்கள் கன்றுக்குட்டிகளையும், காளைகளையும் தங்கள் தெய்வங்களாக ஆராதிக்கிறவர்கள். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்த காலத்தில், அவர்கள் கன்றுக்குட்டியை ஆராதிக்க கற்றுக்கொண்டிருப்பார்கள்.

""அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்'' (எசே 20:8).

ஆரோன் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தபோது, அதைப் பார்த்த உடனேயே, இஸ்ரவேல் புத்திரர் அதைத் தங்கள் தெய்வமாக அங்கீகரிக்கிறார்கள். இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் விக்கிரகாராதனையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எகிப்தின் விக்கிரகங்களை விட்டு விலகி வரவில்லை.

""தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வா-பத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்'' (எசே 23:8).

ஆரோன் வார்ப்பித்த கன்றுக்குட்டியை இஸ்ரவேல் புத்திரர் பார்க்கிறார்கள். அதை தங்கள் தெய்வம் என்று சொல்லி, இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுடைய மதியீனத்தை வெளிப்படுத்துகிறார்கள். ""தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்'' (சங் 106:20).

இஸ்ரவேல் புத்திரர் ஓரேபிலே கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார்கள். அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை ஆராதிக்கிறார்கள். ""அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்'' (சங் 106:19).

தான் வார்ப்பித்த கன்றுக்குட்டியைப் பார்த்து இஸ்ரவேல் புத்திரர் சந்தோஷப்படுவதையும், அவர்கள் அதை தங்கள் தெய்வமாக அங்கீகரிப்பதையும் ஆரோன் பார்க்கிறார். ஆரோனுடைய மனதிலும் அதை பார்த்து சந்தோஷமுண்டாயிற்று. ஆரோன் இஸ்ரவேல் ஜனத்தாருடைய சந்தோஷத்தை அதிகப்படுத்தும் வண்ணமாக, தான் வார்ப்பித்த கன்றுக்குட்டியைப் பார்த்து அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார்.

ஆரோன் பலிபீடத்தை கட்டிய பின்பு ""நாளைக்கு கர்த்தருக்கு பண்டிகை'' யாத் 32:5) என்றும் சொல்லுகிறார். இந்தப் பண்டிகையானது ஆரோன் கட்டின பலிபீடத்தை பிரதிஷ்டைபண்ணும் பண்டிகையாகும். இந்தப் பலிபீடம் வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டிக்கு முன்பாக கட்டப்பட்டிருக்கிறது. இது விக்கிரத்தின் பலிபீடம். ஆனால் ஆரோனோ இதைப்பற்றிச் சொல்லும்போது, ""இது கர்த்தருக்கு பண்டிகை'' என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளில் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போகிறார்கள். தேவன் நடப்பித்த அற்புதங்களையெல்லாம் கன்றுக்குட்டி தங்களுக்குச் செய்ததாகக் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் கன்றுக்குட்டியைக் கர்த்தர் என்று அழைக்கிறார்கள். இதற்கு ஆரோன் பயன்படுத்தும் எபிரெய வார்த்தை ""யெகோவா'' என்பதாகும். கன்றுக்குட்டியைத் தெய்வம் என்றவர்கள், இப்பொழுது அதைக் கர்த்தர் என்றே கூறிவிடுகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தாருடைய பார்வையிலே, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியானது ஒரு தெய்வமாக தெரிகிறது. ஆரோனுடைய பார்வையிலே, அந்தக் கன்றுக்குட்டி, கர்த்தருக்கு ஒப்பானதாக தெரிகிறது. இந்தக் கன்றுக்குட்டியின் மூலமாக கர்த்தரை ஆராதிக்கலாம் என்று ஆரோன் நினைக்கிறார். கர்த்தர் வேறு, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டி வேறு. ஆரோன் அதை வேறுபிரிக்காமல், அந்தக் கன்றுக்குட்டியையும், அதற்காக கட்டப்பட்ட பலிபீடத்தையும் பிரதிஷ்டைபண்ணும் வண்ணமாக, ஒரு பண்டிகையை ஆசரிக்கிறார். அந்தப் பண்டிகையை ""கர்த்தருக்கு பண்டிகை'' என்று சொல்லுகிறார்.

ஆரோனுடைய வார்த்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனப-களையிட்டு, சமாதானப-களைச் செலுத்துகிறார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்திருக்கிறார்கள் (யாத் 32:6).

இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டிக்குச் செய்த ஆராதனையில் சிலவற்றை அவர்களுடைய மெய்யான தேவனாகிய கர்த்தருக்கே செய்ய வேண்டும். ஆனால் இப்போதோ அவர்கள் கன்றுக்குட்டியைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலிசெலுத்துகிறார்கள். ஆடிப்பாடுகிறார்கள். கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். மெய்யான ஆவிக்குரிய அனுபவம் விசுவாசிகளிடத்தில் வளர வேண்டும் (2தீமோ 3:5).

ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்திருக்கிறார்கள். விளையாடுதல் என்பதற்கு இங்கு பயன்படுத்தப் பட்டிருக்கும் எபிரெய வார்த்தை ""ட்சாக்காக்'' என்பதாகும். இதற்குப் பலமாகச் சிரித்தல், பரியாசம் பண்ணுதல், வேசிமார்க்கத்தாரோடு விளையாடுதல் என்று பொருள். இந்த வார்த்தை வேதாகமத்தில் பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. விளையாடுதல் என்பது பொதுவாக விபசாரத்தைக் குறிக்கிறது. ஆதி 39:14 ஆவது வசனத்தில் இது பரியாசம் பண்ணுதலைக் குறிக்கிறது.

சில விக்கிரகங்களுக்கு ஸ்திரீகளை அர்ப்பணம் செய்யும் வழக்கமும் இருந்தது. தேவதாசிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் வேசித்தனத்தில் பயன்படுத்தப்பட்டார்கள். விக்கிரகாராதனையில் வேசித்தனமும் கலந்திருந்தபடியினால் இந்த ஆராதனைகளெல்லாம் தோப்புக்களிலும், உயர்ந்த மேடைகளாகிய மறைவிடங்களிலும் நடைபெற்றன.

இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டியைப் பணிந்து கொண்டபோது, ""தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்'' என்று கர்த்தர் அவர்களைக் குறித்து கூறுகிறார் (யாத் 32:7) அவர்கள் தேவனுடைய நாமத்தைத் தூஷிக்கிறார்கள். அதை வீணாகப் பயன்படுத்துகிறார்கள். பெற்றோரைக் கனப்படுத்தாமல் அவமதிக்கிறார்கள். விபசாரம் பண்ணுகிறார்கள். பொய்கூறுகிறார்கள். பிறர்பொருளை இச்சிக்கிறார்கள். தேவனுடைய எல்லாக் கற்பனைகளையுமே இஸ்ரவேல் புத்திரர்கள் மீறிவிடுகிறார்கள். (யாத் 20:1#17)

மோசே இஸ்ரவேல் புத்திரரோடு இல்லாத சமயத்தில் அவர்கள் தேவனைவிட்டு வழிவிலகி, விக்கிரகாராதனைக்கே சென்று விடுகிறார்கள். தேவன் அவர்கள்மீது கோபம்கொண்டு, அவர்களை அழிக்க ஆயத்தமாகிறார். மோசேயின் சந்ததியின் மூலமாக ஒரு புதிய தேசத்தை உண்டுபண்ணப்போவதாகக் கர்த்தர் கூறுகிறார். ஆனால் மோசேயோ கர்த்தரிடத்தில் தன்னுடைய ஜனங்களுக்காகப் பரிந்துபேசி, கெஞ்சிப் பிரார்த்திக்கிறார். கர்த்தர் மோசேயின் விண்ணப்பத்தைக் கேட்டு, இஸ்ரவேல் புத்திரர்மீது இரக்கம் காண்பிக்கிறார்.

இஸ்ரவேல் ஜனத்தார் பூர்வகாலத்து வழக்கத்தின் பிரகாரமாக, பண்டிகையை சந்தோஷமாய் ஆசரிக்க தங்களை ஆயத்தம்பண்ணுகிறார்கள். அவர்கள் ஆரோன் கட்டின பலிபீடத்திலே வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டிக்கு சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் செலுத்துகிறார்கள். அவர்கள் பலியாக செலுத்தப்பட்ட மிருகத்தின் மாம்சத்தையும் புசிக்கிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தாருடைய காதுகளிலிருந்த பொன்னணிகளெல்லாம் இப்போது வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியாகவும், அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக கட்டப்பட்ட பலிபீடமாகவும், அந்தக் கன்றுக்குட்டிக்காக செலுத்தப்பட்ட சர்வாங்க தகனபலிகளாகவும், சமாதான பலிகளாகவும் ஆயிற்று. இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கு சொந்தமான மிருகங்களை, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டிக்கு பலியிட்டு, அந்த விக்கிரகத்தை மேன்மைப்படுத்துகிறார்கள்.

கர்த்தர் தமது கிருபையினால் இஸ்ரவேல் புத்திரருக்கு பொன்னாபரணங்களையும், ஆடுமாடுகளையும் கொடுத்திருக்கிறார். கர்த்தர் தங்களுக்கு கொடுத்திருக்கிற ஐசுவரியத்திற்காக அவர்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கவேண்டும். தங்களுடைய பொன்னாலும், மற்ற உடமைகளாலும் அவர்கள் கர்த்தரை ஆராதித்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தர் தங்களுக்கு கொடுத்திருக்கிற பொருளாதார ஆசீர்வாதங்களை, விக்கிரகங்களை மகிமைப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

சீனாய் மலையின் கீழே இஸ்ரவேல் புத்திரர் திரளான எண்ணிக்கையில் பாளயமிறங்கியிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டிக்கு பலிகளை செலுத்தி, புசித்து குடித்து வெறித்திருக்கிறார்கள். இதே ஸ்தலத்திலே, ஒரு சில நாட்களுக்கு முன்பாக கர்த்தர் அக்கினியிலே, அவர்களுக்கு மத்தியிலே வெளிப்பட்டார். அவர்கள் எல்லோரும் தங்களோடு பேசுகிற கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார்கள்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடத்தில், ""உங்களுக்கு வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை உண்டுபண்ணவேண்டாம்'' என்று சொன்னார். அவர்களும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவரோடு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். கர்த்தர் தங்களுக்கு சொன்ன எல்லா பிரமாணங்களுக்கும் தாங்கள் கீழ்ப்படிவதாக அவர்கள் உறுதிபண்ணினார்கள்.

""உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்'' (யாத் 24:7).

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு ஓரேபிலே தம்முடைய கட்டளைகளை கொடுத்தார். கர்த்தர் எந்த ஓரேபிலே தம்முடைய கட்டளைகளை அவர்களுக்கு கொடுத்தாரோ, அந்த ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஜனங்கள் மத்தியிலே இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. கர்த்தருடைய சுவிசேஷம் விக்கிரகாராதனைக்காரருக்கும் சொல்லப்படுகிறது. ஜனங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பெற்றுக்கொண்டபோது, தங்கள் விக்கிரகாராதனையைவிட்டு உடனே வெளியேறி வருகிறார்கள்.

""ஏனெனில், அவர்கள் தாமே எங்களைக் குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரி-ருந்துதெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்தி-ருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே'' (1தெச 1:9,10).

இஸ்ரவேல் புத்திரர் பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதற்கு பலிகளை செலுத்தி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். இந்த விக்கிரகாராதனையிலே ஆரோனுக்கும் பங்கு இருக்கிறது. ஆரோனே விக்கிரகத்தை வார்ப்பித்தார். அவரே அந்த விக்கிரகத்திற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக்கட்டி, ""நாளைக்கு கர்த்தருக்கு பண்டிகை'' என்று சொன்னார்.

இதே ஆரோன் இதற்கு முன்பு மோசேயோடுகூட சீனாய் மலைக்கு ஏறிப்போனவர். கர்த்தருடைய பிரசன்னத்தை மோசே தரிசித்ததுபோல, ஆரோனும் அவரோடுகூட கர்த்தருடைய பிரசன்னத்தை பிரத்தியட்சமாய்ப் பார்த்தவர்.

""கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்'' (யாத் 19:24).

""பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவே-ன் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்-ழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது'' (யாத் 24:9,10).

கர்த்தருடைய மகிமை எப்படியிருக்கும் என்பது ஆரோனுக்கு தெரியும். அந்த மகிமையை வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியின் மகிமையோடு ஒப்பிடமுடியாது என்பதும் ஆரோனுக்கு தெரியும். வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டிக்கு ஜீவனுமில்லை மகிமையுமில்லை. ஆனாலும் ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார். கர்த்தருடைய பெயரினால் அந்தக் கன்றுக்குட்டிக்கு பண்டிகையை ஆசரிக்கிறார்.

கர்த்தருடைய மகிமையை தரிசித்த ஆரோனால், ஒரு பொன்கன்றுக்குட்டியை எவ்வாறு ஆராதிக்க முடிகிறது என்று வேதபண்டிதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆரோன் தெளிந்த புத்தியில்லாமல், புத்திமயக்கத்தினால் இந்தக் காரியங்களை செய்தார் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் திரளான எண்ணிக்கையிலிருக்கிறார்கள். அவர்கள் வெகுஜனமாக ஆரோனிடத்தில் வந்து, ""எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று அதிகாரத்தோடு கேட்கிறார்கள். ஆரோன் அவர்களுடைய திரளான எண்ணிக்கையும், அவர்களுடைய கோபத்தையும் பார்த்து, பயந்து, அவர்களுக்கு ஒரு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்தார் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

இந்த சம்பவத்தைப்பற்றி யூதருடைய பாரம்பரிய சரித்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் ஆரோனை நோக்கி, ""எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்'' என்று சொன்னபோது, ஆரோனுக்கு அருகிலிருந்த ஊர் என்பவன், இஸ்ரவேல் புத்திரரை எதிர்த்தார் என்றும், அவர்களுடைய கோரிக்கையை ஊர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், இதனால் இஸ்ரவேல் புத்திரர் ஊரின்மீது கோபப்பட்டு, அவரை கல்லெறிந்து கொன்றுபோட்டார்கள் என்றும் யூதருடைய பாரம்பரிய சரித்திரம் சொல்லுகிறது.

ஆரோன் ஊரின் மரணத்தைப் பார்த்து பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்துக் கொடுத்தார் என்றும் யூதருடைய பாரம்பரிய சரித்திரம் சொல்லுகிறது. பரிசுத்த வேதாகமத்திலும் இந்த சம்பவத்திற்கு பின்பு ஊரைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. ஊர் என்பவர், ஆரோன், மோசே ஆகியோரின் சகோதரியாகிய மீரியாமின் கணவர் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். மோசேயின் கோபம்

யாத் 32:15#20

யாத் 32:15. பின்பு மோசே மலையி-ருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

யாத் 32:16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

யாத் 32:17. ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

யாத் 32:18. அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாட-ன் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.

யாத் 32:19. அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப் போட்டு;

யாத் 32:20. அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

கர்த்தர் மோசேக்கு தம்முடைய விசேஷித்த கிருபைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மோசேயின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய கையிலே இரண்டு சாட்சிப்பலகைகளைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பலகைகள் சாதாரண கல்லிலே எழுதப்பட்டிருந்தாலும், கர்த்தருடைய கட்டளைகள் இந்தக் கல்லிலே எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் சாட்சிப்பலகைகள் இரண்டும் மிகவும் விசேஷமானவை ஆகும். ஆரோனுடைய மார்ப்பதக்கத்திலே விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. மோசேயின் கையிலிருக்கிற சாட்சிப்பலகைகள் இரண்டும், ஆரோனின் மார்ப்பதக்கத்திலுள்ள கற்களைவிட மிகவும் விலையேறப்பெற்றது.

மோசே மலையிலிருந்து இறங்கி வருகிறார். சாட்சிப்பலகைகள் இரண்டும் அவருடைய கையில் இருக்கிறது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருக்கிறது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருக்கிறது (யாத் 32:15,16).

மோசே சீனாய் மலையின்மேல் ஏறிப்போனபோது யோசுவாவும் அவரோடுகூட ஏறிப்போனார். மோசே தேவபர்வதத்திலே கர்த்தருடைய சமுகத்திலிருந்தபோது, யோசுவாவோ மோசேயோடு கூடயிருக்கவில்லை. அவர் அதே பர்வதத்தில், மோசே அவருக்கு நியமித்திருந்த வேறொரு இடத்தில் தனியாகயிருந்தார்.

மோசே கர்த்தர் கொடுத்த சாட்சிப்பலகைகளைப் பெற்றுக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அவர் யோசுவா இருக்கிற இடத்திற்குப்போய் அவரையும் அழைத்துக்கொண்டு, இருவருமாக மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார்கள். யோசுவா ஒரு இராணுவ வீரர். மிகுந்த கட்டுப்பாடு உடையவர். மோசே அவரை எந்த இடத்திலே தங்கியிருக்கவேண்டும் என்று சொன்னாரோ, அந்த இடத்திலே இந்த நாற்பது நாட்களும் தங்கியிருக்கிறார்.

சீனாய் மலைக்கு கீழே இஸ்ரவேல் புத்திரர் பொன்னால் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதற்கு பலிகளை செலுத்தி, புசித்து குடித்து விளையாடுகிறார்கள். அவர்கள் ஆரவாரம்பண்ணுகிறார்கள். பொன்கன்றுக்குட்டிக்கு முன்பாக பாடல்களைப்பாடி நடனமாடுகிறார்கள். யோசுவா அந்த சத்தத்தைக் கேட்டு, பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்று நினைக்கிறார் (யாத் 32:17). இஸ்ரவேல் புத்திரருடைய பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் கேட்கப்படும்போது, யுத்தவீரராகிய யோசுவாவும் அங்கே இருக்கவேண்டுமென்று பிரியப்படுகிறார்.

பாளயத்தில் எப்படிப்பட்ட இரைச்சல் உண்டாயிருக்கிறது என்பது மோசேக்கு தெரியும். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடைய விக்கிரகாராதனையைப்பற்றி மோசேக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். மோசேக்கு யுத்த இரைச்சலுக்கும், பாடலின் சத்தத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது.

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு,மோசேயை நோக்கி, ""பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது'' என்று சொல்லுகிறார். அதற்கு மோசே, ""அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாட-ன் சத்தம் எனக்குக் கேட்கிறது'' (யாத் 32:17,18) என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதற்கு பலிகளை செலுத்தி அதை ஆராதிக்கிறார்கள். அவர்களுடைய விக்கிரகாராதனையினிமித்தமாக மோசே அவர்கள்மீது கோபமூண்டவராயிருக்கிறார். மோசேயின் கோபம் நீதியானது. இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தரை மாத்திரமே ஆராதிக்கவேண்டும். விக்கிரகாராதனை கர்த்தருக்கு விரோதமான பாவம். அவர்கள் கர்த்தரை ஆராதியாமல் விக்கிகரத்தை ஆராதித்து தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள்.

மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் பாளயத்திற்கு சமீபமாய் வருகிறார்கள். அங்கே அவர்கள் வார்ப்பித்த கன்றுக்குட்டியையும், அதற்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரர் நடனம்பண்ணுவதையும் மோசே காண்கிறார். அதைக் கண்டபோது மோசே மிகுந்த கோபமூண்டவராகிறார். அவர் தன் கையிலிருக்கிற சாட்சிப்பலகைகள் இரண்டையும் மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போடுகிறார் (யாத் 32:19).

மோசேக்குக் கோபம் இல்லாதபோது, அவர் தேவனைச் சமாதானப்படுத்த முயற்சி பண்ணுகிறார் (யாத் 32:11). ஜனங்களுடைய பாவமான காரியங்களை மோசே தன் கண்களால் கண்டபோது தேவனுடைய நீதியைக் காண்கிறார், கோபங்கொள்கிறார். அவர் 3,000 பேரைக் கொன்று போடுகிறார் (யாத் 32:19#28).

மோசே தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப் போடுகிறார். மோசே இஸ்ரவேல் புத்திரரின் விக்கிரகாராதனையைக் காண்கிறார். மோசே தேவனிடம் கெஞ்சிப் பிரார்த்திக்கவில்லை என்றால், தேவன் அவர்களை அழித்துப் போட்டிருப்பார். தேவனே கற்பலகைகளை எறிந்து உடைத்துப்போட்டிருப்பார். தேவன் செய்ய வேண்டிய காரியத்தை இங்கு மோசே செய்கிறார் (யாத் 32:10).

மோசே சாந்தகுணமுள்ளவர். ஆனாலும் அவர் வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியையும், அதற்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரர் நடனம்பண்ணுவதையும் பார்க்கிறபோது, அவருக்கு கோபமுண்டாகிறது. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சாந்தகுணமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அவசரப்பட்டு கோபப்படக்கூடாது. கோபப்படுவதற்கு தாமதம்பண்ணவேண்டும். ஆனால் மோசேயோ, சாந்தகுணமுள்ளவராகயிருந்தாலும், இஸ்ரவேல் புத்திரரின் விக்கிரகாராதனையை கண்டபோது, கோபமூண்டவராயிருக்கிறார்.

மோசேயின் கோபம் நீதியானது. அவர் துன்மார்க்கருடைய அக்கிரமத்தைப் பார்த்து கோபப்படுகிறார். மோசே கர்த்தருக்காக பக்தி வைராக்கியமாயிருக்கிறார். அவர் சாந்தகுணமுள்ளவராகயிருந்தாலும், இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்வதை பார்க்கும்போது, அவருடைய மனதிலே நீதியான கோபம் உண்டாயிற்று. இது பக்தி வைராக்கியத்தினால் ஏற்படுகிற கோபம்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்து, அவர்கள் தேவனுடைய கிருபையை இழந்துபோயிருக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய மகாபெரிய கிருபையினால் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய கட்டளைகளையும், பிரமாணங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இஸ்ரவேல் புத்திரருக்கு தேவனால் எழுதப்பட்ட சாட்சியின் பலகைகள் கொடுக்கப்பட்டிருப்பது, அவர்களுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். இதற்காக அவர்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கவேண்டும்.

ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ கர்த்தரை ஆராதியாமல், ஒரு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதற்கு பலிகளை செலுத்தி அதை ஆராதிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கு அபாத்திரராயிருக்கிறார்கள். மோசே பொன்கன்றுகுட்டியையும், அதற்கு முன்பாக அவர்கள் நடனம்பண்ணுவதையும் பார்த்து, அவர்கள் மீது கோபப்பட்டு, தன் கையிலிருக்கிற சாட்சியின் பலகைகள் இரண்டையும் மலையின் அடியிலே எரிந்து உடைத்துப்போடுகிறார்.

மோசேயின் கோபமான முகத்தை இஸ்ரவேல் புத்திரர் பார்க்கிறார்கள். அவர் சாட்சியின் பலகைகளை எரிந்து உடைத்துப்போட்டதைப் பார்த்து இஸ்ரவேல் புத்திரர் குழப்பமடைகிறார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய சிலாக்கியத்தை இழந்துபோயிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து மிகுந்த மனவேதனைப்படுகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தரோடு பண்ணின உடன்படிக்கையை முறித்துப்போட்டு கன்றுக்குட்டியை ஆராதிக்கிறார்கள். மோசே அவர்களுடைய பாவத்தை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறார். அவர் தன்னுடைய கையிலிருக்கிற சாட்சிப்பலகைகளை உடைத்துப்போடுவது மாத்திரமல்ல, அவர், அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்கிறார் (யாத் 32:20).

மோசே வார்ப்பிக்கப்பட்ட தங்கக் கன்றுக்குட்டியை மறுபடியுமாக உருக்கி, பொடியாக அரைத்து, அதைத் தண்ணீரின்மீது தூவுகிறார். தங்கத்தின்தூள் தண்ணீரில் மிதக்கும். அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்கிறார் (உபா 9:21).

தாங்கள் வார்ப்பித்த கன்றுக்குட்டியை தங்களுக்கு முன்செல்லும் தெய்வம் என்று இஸ்ரவேல் புத்திரர் நினைத்தார்கள். ஆனால் அந்தக் கன்றுக்குட்டி இப்போது அக்கினியிலே எரிந்துகொண்டிருக்கிறது. அந்த விக்கிரகத்தால் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. மோசே வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைக்கிறார். இஸ்ரவேல் புத்திரர் எந்தக் கன்றுக்குட்டியை தங்களுடைய தெய்வம் என்று நம்பினார்களோ, அந்த கன்றுக்குட்டி, இப்போது சுட்டெரிக்கப்பட்டு, பொடியாக அரைக்கப்பட்டு, தண்ணீரின்மேல் தூவப்பட்டிருக்கிறது.

மோசே சுட்டெரிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியின் தூசியை தண்ணீரின்மேல் தூவுவதை இஸ்ரவேலின் பாளயத்திலுள்ளவர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். மோசே பொன்கன்றுக்குட்டியின் பொடியை தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்கிறார். விக்கிரகத்திற்கு ஜீவனும் பெலனும் இல்லை என்பதை மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு பிரத்தியட்சமாக வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.

""விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப் பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்'' (1கொரி 8:4).

ஜனங்கள்மீது நியாயத்தீர்ப்பு

யாத் 32:25#29

யாத் 32:25. ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

யாத் 32:26. பாளயத்தின் வாச-ல் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

யாத் 32:27. அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

யாத் 32:28. லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளிலே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

யாத் 32:29. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்-யிருந்தான்.

மோசே முதலாவதாக ஆரோனை நியாயம் விசாரிக்கிறார். அதன் பின்பு அவர் இந்தப் பெரும்பாதகத்தினிமித்தமாக இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரிக்கிறார். மோசே இஸ்ரவேல் புத்திரரின் பாளயத்திற்கு சமீபமாய் வரும்போது, அவர்கள் தாங்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டிக்கு முன்பாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். மோசேயைப் பார்த்தபோது, அவர்களுடைய நடனம் நடுக்கமாக மாறிற்று.

இஸ்ரவேல் புத்திரர் ஆரோனை எளிதாக வஞ்சித்து, அவரை தங்களுடைய பாவத்திற்கு பங்களாகளாக மாற்றுகிறார்கள். ஆனால் அவர்களால் மோசேயின் முகத்தை தைரியமாய்ப் பார்க்கமுடியவில்லை. இஸ்ரவேல் புத்திரருடைய பாவஉணர்வு அவர்களைக் குற்றப்படுத்துகிறது. மோசே கர்த்தர்மீதுள்ள பக்தி வைராக்கியத்தினால், பாவம் செய்த இஸ்ரவேல் புத்திரர்மீது கோபப்படுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் பொன்கன்றுக்குட்டிக்கு முன்பாக நடனமாடுகிறார்கள். ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருக்கிறார். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே காண்கிறார் (யாத் 32:24).

இஸ்ரவேல் புத்திரருடைய காதுகளிலே பொன்னணிகள் இல்லை. அவர்கள் தங்களுடைய கண்ணியத்தை இழந்தவர்களாயிருக்கிறார்கள். விக்கிரகத்தை ஆராதிக்கிற அவர்கள், தங்களுடைய மேன்மையையும், கண்ணியத்தையும், மகிமையையும், அந்த விக்கிரகத்திற்கு ஒப்பாக மாற்றியிருக்கிறார்கள். கன்றுக்குட்டியை ஆராதிக்கிற இஸ்ரவேல் புத்திரர், அந்தக் கன்றுக்குட்டியைப்போலவே நிர்வாணமாயிருக்கிறார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டிக்கு முன்பாக நடனமாடும்போது, அந்தக் கன்றுக்குட்டியைப்போலவே தங்கள் சரீரங்களில் வஸ்திரங்கள் இல்லாமல் நிர்வாணமாயிருக்கிறார்கள். புறஜாதியாரும், இஸ்ரவேலின் பகைஞரும், அவர்கள் நிர்வாணமாயிருப்பதைப் பார்த்து, வெட்கப்படுகிறார்கள். ஆனாலும் தாங்கள் நிர்வாணமாயிருப்பதைப் பார்த்து, இஸ்ரவேல் புத்திரருக்கு வெட்கமோ, அவமானமோ ஏற்படவில்லை. அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே காண்கிறார்.

இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே காணப்படுகிற பாவத்தின் நிந்தையை அகற்றிப்போடவேண்டுமென்று மோசே தீர்மானமாயிருக்கிறார். அவர்களுடைய பாவங்களை மூடி மறைப்பதினால், அவர்களுடைய நிந்தை அவர்களை விட்டு நீங்காது. அவர்களை தண்டிப்பதினாலேயே, அவர்களுடைய நிந்தை அவர்களை விட்டு நீங்கும். பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும்போது, அந்தத் தண்டனை அவர்களுடைய பாவத்திற்கு விரோதமாக சாட்சியாயிருக்கும்.

பாவம் செய்தவர்களை தண்டிக்க வேண்டுமென்று மோசே விரும்புகிறார். பாவிகளை கர்த்தரும் தண்டிக்கிறார். நாதாபும் அபியுவும் கர்த்தருக்கு அந்நிய அக்கினியை காண்பித்தபோது, கர்த்தருடைய கரம் அவர்களைக் கொன்றுபோட்டது.

இஸ்ரவேல் புத்திரரின் பாளயத்திலிருக்கிற அநேகர் கன்றுக்குட்டிக்கு முன்பாக தங்களை நிர்வாணப்படுத்தி நடனமாடுகிறார்கள். கர்த்தருடைய கரம் இவர்களைத் தண்டிப்பதற்கு பதிலாக, மனுஷருடைய பட்டயம் இவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று மோசே விரும்புகிறார். விக்கிரகாராதனை கர்த்தருக்கு விரோதமான பாவம் என்பதை இஸ்ரவேல் புத்திரர் உணரவேண்டும். இஸ்ரவேலின் நியாயாதிபதிகள், விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருக்கிற இஸ்ரவேல் புத்திரரை தண்டிக்கவேண்டும்.

""இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்தி-ருக்கிற தேவனை மறுத-ப்பேனே'' (யோபு 31:28).

""உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், நீ அவனுக்கு சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும், அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது'' (உபா 13:7#9).

பாவம் செய்யாதவர்கள் பாவம் செய்தவர்களை தண்டிக்கவேண்டுமென்று மோசே தீர்மானிக்கிறார். வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியை ஆராதிக்காதவர்கள், கர்த்தரை ஆராதிக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய பட்சத்திலிருக்கிறார்கள். மோசே பாவம் செய்யாத இவர்களைக் கொண்டு, பாவம் செய்த விக்கிரகாராதனைக்காரரை தண்டிக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறார்.

மோசே பாளயத்தின் வாச-ல் நின்று, ""கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள்'' என்று கூப்பிடுகிறார். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் மோசேயினிடத்தில் கூடிவருகிறார்கள் (யாத் 32:26).

மோசேயின் விண்ணப்பத்திற்கு லேவியின் புத்திரர்கள் உடனடியாகச் செவிகொடுக்கிறார்கள். கர்த்தர் பக்கமாக இருக்க வேண்டுமென்று அவர்கள் தெரிந்தெடுக்கிறார்கள். தங்களுடைய உற்றார் உறவினர்களில் கன்றுக்குட்டியை வணங்கி, தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை அவர்கள் கொன்றுபோடுகிறார்கள். லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்கிறார்கள்; அந்நாளிலே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுகிறார்கள் (யாத் 32:26#28).

மோசே அவர்களை நோக்கி, ""உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்'' (யாத் 32:27) என்று சொல்லுகிறார்.

லேவியர்கள் மோசேயின் பட்சத்தில் பக்திவைராக்கியதோடு கூடிவருகிறார்கள். அவர்கள் கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள். மோசேயைப்போலவே லேவியரும் வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டிக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். பாவிகள் பாவிகளின் பட்சத்தில் சேருவார்கள். பரிசுத்தவான்களோ கர்த்தருடைய பட்சத்தில் கூடிவருவார்கள்.

பாவிகளுக்கு தங்கள் பாவத்தின் மீது பிரியமும் ஆர்வமும் இருக்கும். பரிசுத்தவான்களுக்கோ சத்தியத்திலும் பரிசுத்தத்திலும் ஆர்வம் இருக்கும். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கர்த்தருக்கும், பிசாசுக்கும் நடுவிலே ஒப்புரவாகமாட்டார்கள். அவர்கள் கர்த்தருடைய பட்சத்திலே தீர்மானமாக சேர்ந்துகொள்வார்கள். கர்த்தருக்கும் பிசாசுக்கும் இடைப்பட்ட நடுநிலை என்று எதுவுமில்லை. கர்த்தரை ஆராதிக்கிறவர்கள் பிசாசுகளை ஆராதிக்கமாட்டார்கள்.

மோசே தன்னிடத்தில் கூடிச்சேர்ந்திருக்கிற லேவியின் புத்திரரை நோக்கி, "" பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன்'' என்று சொல்லுகிறார்.

""தன் தன் சகோதரன், தன் தன் சிநேகிதன், தன் தன் அயலான்'' என்னும் வாக்கியம், அறிமுகமான நபர்களைக் குறிக்கிறது. தங்களுக்கு தெரிந்து யாரெல்லாம் வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியை ஆராதித்தார்களோ, அவர்களையெல்லாம் லேவியர்கள் தங்கள் பட்டயத்தால் கொன்றுபோடவேண்டும். விக்கிரகாராதனைக்காரர்கள் மோசேயினிடத்தில் சேர்ந்துகொண்ட லேவியருக்கு உற்றார் உறவினராகவும், சிநேகிதராகவும், அயலகத்தாராகவும் இருந்தாலும், அவர்கள்மீது பட்சபாதம் காண்பிக்காமல், லேவியர்கள் அவர்களை தங்கள் பட்டயத்தினால் கொன்றுபோட வேண்டும்.

மோசேயினிடத்தில் சேர்ந்து கொண்ட லேவியர்கள், தங்கள் பட்டயத்தைப் பயன்படுத்தும்போது, மிகவும் கவனமாக பயன்படுத்தவேண்டும். அவர்கள் விக்கிரகாராதனையில் ஈடுபட்டவர்களை மாத்திரம் கொன்றுபோடவேண்டும். இதற்காக லேவியர்கள் பாளயமெங்கும் உள்ளும் புறம்பும், வாசலுக்கு வாசல் போகவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரரில் அநேகர் வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியை ஆராதியாமல், பாளயத்திலே தங்கள் கூடாரத்திற்குள்ளே தங்கியிருக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டிக்கு முன்பாக வஸ்திரமில்லாமல் நிர்வாணமாய் நடனம்பண்ணுவதை பார்க்க மனதில்லாமல், இவர்கள் வெட்கமும் வேதனையும் அடைந்து, தங்கள் கூடாரத்திற்குள்ளே இருந்துகொண்டு கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுகிறார்கள். மோசேயோடு கூடயிருக்கிற லேவியர்கள் கூடாரத்திற்குள்ளே ஜெபித்துக் கொண்டிருக்கிறவர்களை கொன்றுபோடக் கூடாது. கூடாரத்திற்கு வெளியே, கன்றுக்குட்டியை ஆராதிக்கிறவர்களை மாத்திரம் அவர்கள் கொன்று போடவேண்டும்.

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்கிறார்கள்; அந்நாளிலே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுகிறார்கள் (யாத் 32:28). வார்ப்பிக்கப்பட்ட பொன்கன்றுக்குட்டியை மூவாயிரத்திற்கும் அதிகமானோர் ஆராதித்தார்கள். ஆனாலும் மூவாயிரம் பேருக்கு மாத்திரமே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஒரு வேளை இந்த மூவாயிரம் பேரும், ஜனங்களை பாவம் செய்யத் தூண்டின தலைவர்களாகயிருக்கலாம். தங்கள் கூடாரங்களில் சும்மாயிருந்தவர்களை, இவர்கள் வெளியே அழைத்து வந்து, அவர்களை கன்றுக்குட்டியை ஆராதிக்குமாறு வழிநடத்தியிருக்கலாம்.

லேவியர்கள் அப்படிப்பட்ட விக்கிரகாராதனைக்காரர்களை பாளயமெங்கும் உள்ளும் புறம்பும், வாசலுக்கு வாசல் போய் தேடிப்பார்த்து, அவர்களை தங்கள் பட்டயங்களால் கொன்றுபோடுகிறார்கள். விக்கிரகாராதனைக்காரருக்கு வந்த சங்காரத்தைப் பார்த்து, மற்ற இஸ்ரவேல் புத்திரருடைய மனதிலே பயமும், நடுக்கமும், திகிலும் உண்டாயிற்று.

""கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள்'' (யாத் 32:29) என்று மோசே லேவியருக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.

இந்த வாக்கியத்தில் ""பிரதிஷ்டை பண்ணுதல்'' என்னும் வார்த்தைக்கு இரண்டு எபிரெய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையாவன: "மலே'' ""யாத்''என்பனவாகும். இவ்விரண்டு எபிரெய வார்த்தைகளுக்கும் சேர்த்து ""உங்கள் கைகளை நிரப்புங்கள்'' என்று பொருள் கூறலாம்.

ஆசாரியர்கள் தங்களுடைய கைகளில் பிரதிஷ்டையின் காணிக்கைகளை நிறைய வைத்திருக்க வேண்டும். அந்தநாளுக்கு அவர்கள் ஆசாரியர்களாக பிரதிஷ்டை பண்ணப்பட வேண்டும். (யாத் 29:1#35) தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணுகிற சகோதரரையும், குமாரரையும் சங்காரம் பண்ணுவதற்கு அவர்கள் கைகளில் பட்டயங்கள் இருக்க வேண்டுமென்றும் இதற்குப் பொருள் கூறலாம்.

மோசேயின் பரிந்துபேசும் ஜெபம்

யாத் 32:30#35

யாத் 32:30. மறுநாளிலே மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக் கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப் போகிறேன் என்றான்.

யாத் 32:31. அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.

யாத் 32:32. ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்தி-ருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

யாத் 32:33. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்தி-ருந்து கிறுக்கிப்போடுவேன்.

யாத் 32:34. இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக் கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.

யாத் 32:35. ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

பொன்கன்றுக்குட்டிக்கு பலியிட்டு, அதற்கு ஆராதனை செய்த விக்கிரகாராதனைக்காரரில் பிரதானமானவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படுகிறது. இதற்கு பின்பு மோசே கர்த்தருடைய சமுகத்திலே மீதமுள்ள இஸ்ரவேல் புத்திரருக்காக பரிந்து பேசுகிறார். அவர்கள் விக்கிரகத்தை ஆராதித்து கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும்.

லேவியின் புத்திரர் ஏறக்குறைய மூவாயிரம்பேரை தங்கள் பட்டயத்தால் வெட்டிக்கொன்றுபோடுகிறார்கள். செத்துப்போகாமல், உயிரோடிருக்கிறவர்கள் தங்களிடத்தில் பாவமில்லை என்று நினைத்து, இறுமாப்பாயிருக்கக்கூடாது. அவர்களும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையினால் அவர்கள் மரணத்திற்கு தப்பித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய பாவம் அவர்களிடத்தில் இன்னும் இருக்கிறது.

மோசே ஜனங்களை நோக்கி, ""நீங்கள் மகாபெரிய பாவம் செய்தீர்கள்'' (யாத் 32:30) என்று சொல்லுகிறார். தங்களிடத்தில் பாவம் இல்லையென்று அவர்கள் நினைத்து விடக்கூடாது. அவர்களுடைய பாவங்களினிமித்தமாக கர்த்தரும் அவர்கள்மீது கோபமாயிருக்கிறார். அவர்கள் தங்கள் பாவத்திற்கு மனந்திரும்ப வேண்டுமென்றால், முதலாவதாக தங்களிடத்தில் பாவம் இருக்கிறது என்பதை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். மோசே அவர்களுடைய பாவத்தை அவர்களுக்கு உணர்த்துகிறார். ""நீங்கள் மகாபெரிய பாவம் செய்தீர்கள்'' என்று அவர்களுக்கு சொல்லுகிறார்.

யாத் 32:30 ஆவது வசனம் ""மறுநாளிலே'' என்று ஆரம்பமாகிறது. இந்த வார்த்தைக்கு, சீனாய் மலையில் நாற்பது நாட்களுக்கு உபவாசம் இருந்த பின்பு, பொன்கன்றுக்குட்டியின் அனுபவத்திற்குப் பின்பு என்று பொருள் (யாத் 32:1#29).

""நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்'' என்று மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு தேவன் இஸ்ரவேல் புத்திரரை மன்னிப்பாரா அல்லது மன்னிக்கமாட்டாரா என்னும் நிச்சயம் இல்லாத அளவிற்குப் பெரிய பாவம் என்று பொருள். எந்தப் பாவமும் அதற்குரிய பாவநிவிர்த்தி செய்யப்படாமல் மன்னிக்கப்படுவதில்லை. (மத் 26:28; எபி 9:22).

பாவத்தின் சம்பளம் மரணம். ஆனாலும் இப்போது உயிரோடிருக்கிற இஸ்ரவேல் ஜனங்கள், பாவம் செய்தவர்களாயிருந்தாலும், மரித்துப்போகாமல், மரணத்திற்கு தப்பித்திருக்கிறார்கள். பட்டயத்தினால் செத்துப்போன மூவாயிரம் பேரைப்போல, தாங்களும் செத்துபோவோமோ என்னும் பயம் அவர்களுடைய மனதிலே இருக்கிறது.

மோசே உயிரோடிருக்கிற ஜனங்களை பயமுறுத்தவில்லை. அவர்கள் மகாபெரிய பாவம் செய்தவர்களாயிருந்தாலும், மோசே அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லுகிறார். மோசே அவர்களை நோக்கி, ""உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக் கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப் போகிறேன்'' என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் ஜனத்தாருடைய பாவம் நிவிர்த்தி செய்யப்படுமா என்னும் நிச்சயம் மோசேயினிடத்தில் இல்லை. ஆகையினால் மோசே அவர்களுடைய பாவநிவிர்த்தியைப்பற்றி சந்தேகமாக சொல்லுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நமக்கும் தேவனுக்கும் நடுவே, மகாபிரதான மத்தியஸ்தராயிருக்கிறார். அவர் பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். கிறிஸ்துவானவர் பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசும்போது, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்னும் நிச்சயம் நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்துவானவருக்கும் நமக்கும் உண்டு.

நம்முடைய மத்தியஸ்தராகிய இயேசுகிறிஸ்து, பிதாவின் வலதுபாரிசத்திலே அமர்ந்திருக்கிறார். தேவனுடைய தெய்வீக ஆலோசனைகளெல்லாம் அவருக்கு தெரியும். கிறிஸ்துவானவர் நமக்காக பரிந்து பேசும்போது, பிதாவானவர் அதை தமக்காக செய்வார் என்னும் நிச்சயத்தோடு, கிறிஸ்துவானவர், பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.

மோசே தேவனுடைய சமுகத்திலே அவருடைய கிருபைக்காகவும், இரக்கத்திற்காகவும் கெஞ்சி மன்றாடுகிறார். மோசே கர்த்தரிடத்திற்கு திரும்பிப்போகிறார். அவர் ஆசரிப்புக்கூடாரத்தைப்பற்றி இன்னும் அதிகமான விவரங்களை விசாரிப்பதற்காக கர்த்தரிடத்திற்கு திரும்பிப்போகவில்லை. இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படுமா என்பதை அறிந்துகொள்வதற்காக மோசே கர்த்தரிடத்திற்கு திரும்பிப்போகிறார்.

மோசே கர்த்தரிடத்தில் ஜனங்களுக்காக பரிந்து பேசும்போது, ""ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்'' (யாத் 32:31) என்று ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடைய பாவத்தைக் குறித்து, ஏற்கெனவே மோசேக்கு சொல்லியிருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறார்கள். தேவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் காரியங்களை மோசே மறுபடியுமாகத் தன்னுடைய ஜெபத்தில் அறிக்கை செய்கிறார் (யாத் 32:8,31).

""அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்தி-ருந்து நீ நடத்திக் கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்'' (யாத் 32:7,8) என்று சொன்னார்.

கர்த்தர் தன்னிடத்தில் சொன்னதை, மோசே இப்போது கர்த்தரிடத்தில் திரும்ப சொல்லுகிறார். மோசேயின் வார்த்தையில் நடுக்கமும், வேதனையும் நிரம்பியிருக்கிறது. அவர் இஸ்ரவேல் ஜனத்தாருக்காக கவலையோடும், கண்ணீரோடும் கர்த்தரிடத்திலே பரிந்து பேசுகிறார். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்களை நிவிர்த்தி செய்வாரா என்னும் நிச்சயம் மோசேயினிடத்தில் இல்லை.

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்களை அறிந்திருக்கிறார். கர்த்தர் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கவேண்டும் என்றோ அல்லது அவர்களை பாவத்திற்கான தண்டனையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றோ மோசே கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவில்லை. அவர் இஸ்ரவேல் புத்திரரைப்பற்றி கர்த்தரிடத்தில் சொல்லும்போதே, ""அவர்கள் மகாபெரிய பாவம் செய்திருக்கிறார்கள்'' என்று சொல்லுகிறார். அவர்களுடைய பாவத்திற்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்பது மோசேயின் விருப்பம்.

மோசே கர்த்தரை நோக்கி, ""தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்'' (யாத் 32:32) என்று ஜெபம்பண்ணுகிறார். இரட்சிக்கக்கூடாதபடிக்கு கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் ஒருபோதும் குறுகிப்போவதில்லை. கர்த்தரால் இரட்சிக்க முடியாதபடிக்கு, எந்தப் பாவமும் கர்த்தருடைய பார்வையில் பெரிய பாவமும் இல்லை. ஆகையினால் கர்த்தர் நிச்சயமாகவே இஸ்ரவேல் புத்திரருடைய பாவத்தை மன்னிப்பார் என்று மோசே நம்புகிறார்.

""நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்தி-ருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்'' என்று மோசே ஜெபம்பண்ணியதைப் போல அப்போஸ்தலர் பவுலும் கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபித்திருக்கிறார். (ரோமர் 9:3)

தேவனுடைய புஸ்தகத்தைப் பற்றிய முதலாவது குறிப்பு இந்த வசனத்தில் வருகிறது. நீதிமான்களின் பெயர்கள் இதில் எழுதப்பட்டிருக்கும். வேதாகமத்தில் இந்தப் புஸ்தகத்திற்குப் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன: ""உம்முடைய புஸ்தகம்'' ""என் புஸ்தகம்'' (யாத் 32:32#33); ""ஜீவபுஸ்தகம்'' (சங் 69:28); ""புஸ்தகம்'' (தானி 12:1); ""ஜீவபுஸ்தகம்'' (பிலி 4:3; வெளி 3:5; வெளி 13:8; வெளி 17:8; வெளி 20:11#15; வெளி 22:18#19); ""ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்'' (வெளி 21:27) என்பனவாகும்.

எல்லா இடங்களிலும் ஜீவபுஸ்தகம் என்னும் பெயர் காணப்படாதபடியினால், அவை வேறு புஸ்தகங்கள் என்று பொருள்கூறக்கூடாது. பெயர்கள் மாறினாலும், புஸ்தகம் ஒன்றே.

வேதாகமத்தில் தேவனுடைய வார்த்தைக்குப் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன: ""பரிசுத்த வேதஎழுத்துக்கள்'' (ரோமர் 1:2; 2தீமோ 3:15); ""தேவனுடைய வாக்கியங்கள்'' (ரோமர் 3:2; எபி 5:12; 1பேதுரு 4:11); ""தேவனுடைய வசனம்'' (மாற்கு 7:13; ரோமர் 10:17; எபி 4:12); ""ஆவியின் பட்டயம்'' (எபே 6:17) இந்தப் பெயர்கள் எல்லாமே பரிசுத்த வேதாகமத்தையே குறிக்கும்.

ஒருவன் நித்திய ஆக்கினைக்கு ஏதுவாகப் பாவம் செய்யும்போது அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும். (யாத் 32:33). யூதாசுடைய பெயர் தேவனுடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும் என்று சங்கீதக்காரர் முன்னறிவித்திருக்கிறார். (சங் 69:20#28). பாவத்திலிருந்து ஜெயம் பெறாதவர்களுடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்று கிறிஸ்து எச்சரித்துக் கூறியிருக்கிறார். (வெளி 3:5; வெளி 22:18#19).

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய புஸ்தகத்தைப்பற்றி பல்வேறு சம்பவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

1. நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத் 32:32).

2. எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத் 32:33).

3. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக. நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங் 69:28; சங் 109:13).

4. அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படும் உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். (தானி 12:1).

5. உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப் படுங்கள். (லூக்கா 10:20).

6. அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலி 4:3).

7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என்பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5).

8. ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (வெளி 13:8; வெளி 17:8).

9. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. (வெளி 20:11#12).

10. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15).

11. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21:27).

12. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். (வெளி 22:18#19).

கர்த்தருடைய ஜீவப்புஸ்தகத்தில் ஆரோனின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்களின் விவரம் வருமாறு :

1. ஆரோன் மறுபடியும் பிறந்திருக்கிறார் (உபா 32:18).

2. ஆரோன் பரிசுத்தமானவர் (யாத் 19:6; யாத் 22:31; லேவி 11:44#45; லேவி 21:6#8).

3. ஆரோனின் பெயர் பரலோகத்தில் எழுதப்பட்டிருந்தது. (யாத் 32:32#33).

4. ஆரோன் ஒரு தீர்க்கதரிசி. (யாத் 7:1).

5. ஆரோன் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார் (யாத் 7:1#17; யாத் 8:6,16; யாத் 11:10; யாத் 12:1; சங் 77:20).

6. பொன்கன்றுக்குட்டியைச் செய்யும் வரையிலும் தேவனுடைய கிருபை ஆரோனோடு கூட இருந்தது. (யாத் 24:14; யாத் 32:1).

7. சீனாய் மலையில் ஆரோன் தேவனைத் தரிசித்து அவரோடு புசித்துக் குடித்தவர் (யாத் 24:1#11).

ஆரோன் பாவம் செய்தார். ஆதலால் ஆரோனுடைய பெயர் தேவனுடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்பட்டிருக்கும். (யாத் 32:1#6, 21#24,30, 32#33) ஆரோன் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டார் (உபா 9:20). ஆரோன் பாவம் செய்தார் என்று தேவனும், மோசேயும் அறிக்கையிட்டிருக்கிறார்கள் (யாத் 32:7#10, 30#33).

ஆனாலும் மோசே ஆரோனுக்காகவும், இஸ்ரவேல் புத்திரருக்காகவும் தேவனிடத்தில் பரிந்துபேசி ஜெபிக்கிறார். கர்த்தர் மோசேயின் ஜெபத்தைக் கேட்டு, ஆரோனையும், மற்ற இஸ்ரவேல் புத்திரரையும் மன்னிக்கிறார். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, பாவநிவிர்த்தி செய்கிறார்கள் (யாத் 32:11#14, 30#33; உபா 9:12#21). தேவன் தம்முடைய புஸ்தகத்திலிருந்து ஆரோனுடைய பெயரைக் கிறுக்கிப்போட்டு, மறுபடியுமாக அவருடைய பெயரை எழுதுகிறார். இதற்குப் பின்பும், ஆரோன் 38 வருஷங்களுக்குப் பிரதான ஆசாரியனாக ஊழியம் செய்கிறார் (யாத் 39; லேவி 6:9; லேவி 8:1#36; லேவி 13:1; லேவி 16:1#23).

பரிசுத்த வேதாகமத்தில், ""அகற்றுதல்'' என்னும் வார்த்தை பல சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1. சாபங்கள் (எண் 5:23)

2. வானத்தின் கீழுள்ள பெயர்கள் (உபா 9:14; உபா 29:20; 2இராஜா 14:27)

3. அமலேக்கைப் பற்றிய நினைவு (உபா 25:19)

4. மீறுதல்கள் (சங் 51:1; ஏசா 43:25; ஏசா 44:22)

5. அக்கிரமங்கள் (சங் 51:9)

6. பாவங்கள் (அப் 3:19)

7. மோசேயின் பிரமாணம் (கொலோ 2:14#17)

தமக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ அவனுடைய பெயரை கர்த்தர் தம்முடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவார். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக மகாபெரிய பாவம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் கர்த்தருடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடவேண்டிய பெயர்களாயிருக்கிறது. ஆனாலும் கர்த்தர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தால், அவர்களுடைய பெயர்களை தம்முடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடமாட்டார்.

இஸ்ரவேல் புத்திரர் எல்லோருமே மகாபெரிய பாவம் செய்திருக்கிறார்கள். மோசே மாத்திரமே கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்யாதவர். கர்த்தர் பாவம் செய்த எல்லோருடைய பெயரையும் கிறுக்கிப்போடும்போது, அவருடைய புஸ்தகத்தில் மோசேயின் பெயர் மாத்திரமே கிறுக்கிப்போடப்படாமல், எழுதப்பட்டதாகயிருக்கும். கர்த்தருடைய புஸ்தகத்திலே எல்லோருடைய பெயர்களும் கிறுக்கிப்போடப்பட்டு, தன்னுடைய பெயர் மாத்திரம் கிறுக்கிப்போடப்படாமல் எழுதப்பட்டிருப்பதை மோசே விரும்பவில்லை. எல்லோரும் அழிந்துபோகும்போது, தான் மாத்திரம் பிழைத்திருப்பது மோசேயின் விருப்பமல்ல.

மோசே கர்த்தரை நோக்கி, ""தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்தி-ருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்'' (யாத் 32:32) என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும், தங்களுடைய பாவத்தின் நிமித்தமாக அழிந்துபோகும்போது, மோசேயும் அவர்களோடுகூட அழிந்துபோக ஆயத்தமாயிருக்கிறார். கானான் தேசம் இஸ்ரவேல் புத்திரர் எல்லோருக்கும் வாக்குத்தத்த தேசமாகயிருக்கவேண்டும் என்று மோசே விரும்புகிறார். மோசே அழிந்துபோகாமல் உயிரோடிருப்பதினால், கானான் தனக்கு மாத்திரம் வாக்குத்தத்த தேசமாயிருப்பது மோசேயின் விருப்பமல்ல.

மோசே இஸ்ரவேல் ஜனத்தார்மீது பிரியமும், அன்பும், கரிசனையும் உள்ளவராயிருக்கிறார். நல்ல மேய்ப்பர் தன்னுடைய ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுப்பார். மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்துகிற நல்ல மேய்ப்பராயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனத்தார் எல்லோரும் அழிந்துபோகவேண்டிய சூழ்நிலை வரும்போது, மோசேயும் அவர்களோடுகூட அழிந்துபோக ஆயத்தமாயிருக்கிறார்.

""நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்'' (யோவா 10:11).

""நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்-முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்தி-ருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுத-னிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்'' (ஏசா 53:6#8).

""அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது'' (தானி 9:26).

மோசே ஒரு சுயநலக்காரரல்ல. அவர் இஸ்ரவேல் ஜனத்தாருடைய பொதுவான நன்மைகளை விரும்புகிறவர். கர்த்தரிடத்திலும் அநீதியோ, அநியாயமோ இல்லை. கர்த்தர் நீதிபரர். கர்த்தர் ஒருபோதும் பாவம் செய்யாதவர்களை தண்டிக்கமாட்டார். அவர் பாவம் செய்யாதவர்களின் பெயரை தம்முடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடவும் மாட்டார்.

""நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பெயரை கிறுக்கிப்போடும்'' என்று மோசே ஜெபம்பண்ணினாலும், மோசேயினிடத்தில் பாவம் இல்லையென்றால், கர்த்தர் அவருடைய பெயரை தம்முடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடமாட்டார். மோசே விருப்பப்பட்ட பிரகாரம் அவருடைய ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுக்கமாட்டார்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்தி-ருந்து கிறுக்கிப்போடுவேன்'' (யாத் 32:33) என்று சொல்லுகிறார். இதுவே கர்த்தருடைய நீதி. கர்த்தர் மோசேயின் பரிந்து பேசும் ஜெபத்திற்கு தம்முடைய நீதியான பிரதியுத்தரத்தை சொல்லுகிறார்.

இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருக்கு விரோதமாக மகாபெரிய பாவம் செய்தவர்களாயிருந்தாலும், கர்த்தர் மோசேயின் பரிந்துபேசும் ஜெபத்தைக் கேட்டு, அவர்களை உடனே தண்டிக்காமல் விட்டுவிடுகிறார். கர்த்தர் அவர்களுடைய பெயர்களை தாம் எழுதின தம்முடைய புஸ்தகத்திலிருந்து உடனே கிறுக்கிப்போடவில்லை. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக் கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்'' (யாத் 32:34) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக் கொண்டுபோ'' என்று சொல்லுகிறார். மோசே ஏழாம் முறையாகச் சீனாய் மலையிலிருந்து இறங்கி வரும் சம்பவம் (யாத் 19:3). கற்பலகைகள் உடைக்கப்பட்ட பின்பு, மோசேயின் பழைய ஊழியம் மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறது. (யாத் 32:1#33) இஸ்ரவேல் புத்திரரைக் கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தேவன் மறுபடியும் ஏற்றுக் கொள்கிறார். (யாத் 32:7#14).

""நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவன் இஸ்ரவேல் புத்திரரை அழிக்காமல் விட்டுவிட்டாலும், அவர்களுக்குத் தண்டனை தருகிறார். வனாந்தரத்தில் தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணிய இஸ்ரவேல் புத்திரரின் பழைய சந்ததியார் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கவில்லை (எண் 14:28#35).

கர்த்தரே இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர். அவர்களை கானான் தேசத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த தேசத்தில் குடியேற்றவேண்டும் என்பது கர்த்தருடைய திட்டம். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாயிருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் தம்முடைய வார்த்தையிலும், வாக்குத்தத்தத்திலும் உண்மையுள்ளவராயிருக்கிறார். மோசே இஸ்ரவேல் புத்திரரை கானான் தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பமாயிருக்கிறது. தம்முடைய தூதனானவர் மோசேக்கு முன்செல்வார் என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக மகாபெரிய பாவம் செய்தவர்களாயிருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை உடனே தண்டிக்காவிட்டாலும், தமக்கு சித்தமான வேளை வரும்போது, அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். ""ஆகிலும் நான் விசாரிக்கும் நாளில், அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்'' (யாத் 32:34) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடைய மற்ற பாவங்களை விசாரிக்கும்போது, அவர்கள் இப்போது செய்த மகாபெரிய பாவங்களுக்கும் கர்த்தர் தண்டனை கொடுப்பார். தங்களிடத்தில் பாவமும் அக்கிரமும் இல்லையென்று இஸ்ரவேல் புத்திரர் சொன்னாலும், பொன்கன்றுக்குட்டியை அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவப்பட்டதைப் பருகியிருக்கிறார்கள். அது அவர்களுடைய வயிற்றில் எப்போதும் இருக்கும்.

ஸ்தேவான் இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்களைப்பற்றி பிரதான ஆசாரியனிடத்திலும், தேவாலயத்தின் அதிகாரிகளிடத்திலும் சொல்லும்போது, அவர்கள் பொன்கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதற்கு பலியிட்டு, அதை ஆராதித்ததைப்பற்றி சொல்லுகிறார்.

""அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் ப-யிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்தி-ருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் ப-களையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே'' (அப் 7:41#43).

இஸ்ரவேல் புத்திரர் கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை ஆராதித்ததினால், கர்த்தர் அவர்களை விக்கிரகாராதனைக்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறார். இஸ்ரவேல் புத்திரரின் சரித்திரத்திலே, அவர்களுடைய விக்கிரகாராதனையும் ஒரு அங்கமாகயிருக்கிறது. பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று திரும்பி வரும் வரையிலும், இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகாராதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை.

""அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்-யும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்'' (ரோம 1:22#25).

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதிக்கிறார் (யாத் 32:35). ஆரோன் இந்த உபாதைக்கு தப்பிக்கிறார். ஆரோன் அறியாமல் இந்தப் பாவத்தை செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனத்தாரோ, துணிகரமாய் இந்தப் பாவத்தை செய்திருக்கிறார்கள்.

கர்த்தர் அவர்களை உபாதிக்கிறார். ஏற்கெனவே 3,000 பேர் செத்துப்போனார்கள். இதோடு கர்த்தருடைய உபாதையும் சேர்ந்து வருகிறது. இதில் எத்தனைபேர் மரித்தார்கள் என்று தெரியவில்லை (யாத் 32:28).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.