31. தேவனுடைய ஏழு கையெழுத்துக்கள்_

31. தேவனுடைய ஏழு கையெழுத்துக்கள்

ஓசியா 8:12

1. தேவன் மோசேக்கு இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்த பத்து கற்பனைகள். யாத். 24:12; 31:18; 32:16,20; உபா, 4:13,14; 9:9-12 (இஸ்ரவேலர் அதை மீறினதினால் பாவமும் சாபமும் அவர்களுக்கு உண்டாயிற்று -1 யோவான் 3:4

2. எருசலேம் தேவாலயம் கட்ட, அதன் அளவுகள் கர்த்த ருடைய கரத்தினால் எழுதி தாவீதின் கையில் கொடுக் கப்பட்டது. 1 நாளா, 28:19

3. ஒரு கையுறுப்பு சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதினது. "மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்" என்பதே. தனி. 5:5,6,25-30 (அன்று இராத்திரியிலே கல்தேய ரின் இராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப் பட்டான்)

4. ஜீவ புத்தகத்தில் கர்த்தர் தமது ஜனங்களின் பெயர் களை எழுதுகிறார். சங். 87:5.6 (யாத். 32:33; லூக் 10:20; அப் . 2:47; 5. 69:28; தானி. 12:1; சங். 139:16; எபி, 12:22,23; ໑໙. 20:15; 3:5; 13:8; 17:8; 21:27; 22:19; 9. 4:3)

5. தமது ஜனங்களை உள்ளங்கைகளில் வரைந்திருக்கி றார். ஏசாயா 49:15,16; எரே. 18:6

6. இயேசு குனிந்து விரலினால் தரையிலே எழுதினார். யோவான். 8:6,8 (ரோமர். 9:5 பாவிக்கு விடுதலை). நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிற தில்லை; நீ போ. இனிப் பாவஞ் செய்யாதே என்றார். யோவான் 8:11

7. மனந்திரும்புகிறவர்களின் இருதயத்தில் எழுதுகிறார். எரே 31:3; 2 கொரி. 3:3; 9, 8:10,11; 10:16; 36:26,27; 1சாமு. 10:6,9,10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.