31.தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்

31.தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்

1) தீர்மானம் பண்ணும் பழக்கம் இருந்தது (தினசரி 5 அதிகாரம், 1 மணி நேரம் ஜெபிப்பேன் என்று தீர்மானம் செய்து அதன்படி செய்ய வேண்டும்) - தானி 1:8

3) நண்பர்களோடு சேர்ந்து ஜெபிக்கும் பழக்கம் உள்ளவன் - தானி 2:17

4) ஸ்தோத்திரம் செய்யும் பழக்கம் இருந்தது - 2:19, 6:10

5) ஆகாரத்தினால் தன்னை தீட்டுப்படுத்தவில்லை (கறைபடுத்தவில்லை) - தானி 1:8

6) முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தது (பெரிய தலைவன் ஆனால் முழங்கால்படியிட்டான்) - தானி 6:10

7) கர்த்தருக்கு முன்பாக குற்றமற்றவனாக காணப்பட்டான் - தானி 6:22

8) மற்றவர்கள் முன்பாக சுத்த மனசாட்சி உள்ளவனாக இருந்தான் - 6:22

9) இடைவிடாமல் ஆராதனை செய்தான் - தானி 6:10

10) கர்த்தரை தேடினான் - 9:3

11) உபவாசம் இருக்கும் பழக்கம் இருந்தது - 9:3

12) ஜெப ஜிவியம் காணபட்டது - 6:10

13) உண்மையுள்ளவன் - 6:4

14) பாடுகளில் அன்பின் ஆண்டவரை அண்டிக் கொண்டான் (தானியேல் தன் உயிர் காக்கப்பட ஒரு வேளை ராஜாவாகிய தரியுவை அண்டி தன் ஜீவனுக்காக மன்றாடியிருக்கலாம் (or) தனக்கு விரோதமாக எழும்பின 120 தேசாதிபதிகளையும், 3 பிரதானிகளையும் அண்டிக் கொண்டு தன் பிராணன் காக்கப்பட மன்றாடியிருக்கலாம். ஆனால் தானியேலோ தன் அன்பின் ஆண்டவரையே அண்டிக் கொண்டார். வெகு பத்திரமாக பாதுகாக்கப்பட்டார்)

15) முணுமுனுப்பு காணப்படவில்லை ( குழியில் போடும் வாய் திறக்கவில்லை)

16) ராஜாவை பற்றி மற்றவர்கள் இடம் குறை கூறவில்லை (ஏன் ராஜா எனக்கு இப்படி செய்கிறார்)

17) கர்த்தர் தன்னை காப்பார் என்ற விசுவாசம் இருந்தது - தானி 6:23

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.