அதிகாரம் 3(1)

அதிகாரம் 3

மனிதன் விழுந்து போகுதல்

மனித நாடகத்தின் இரண்டாம் பகுதி துயரமாக இருக்கிறது. ஒரு. புது முக நடிகரின் ஒரு பாம்புடன் இது துவங்குகிறது; அவனது மற்றும் மனிதன் களங்கமற்றவனாக, தேவனோடு பூரண உறவோடிருந்த நிலையிலிருந்து, விழுந்த நிலையை அது படம்பிடித்துக் காட்டுகிறது.

சோதனையும் விழுந்து போகுதலும் 3:1-7

1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின

சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. 2ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 4அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 5நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.

வசனம் 1. தேவன் ஆதாமையும் ஏவாளையும் வைத்திருந்த தோட்டத்திலே பாம்பு நுழைந்தது, ஒரு உண்மையான பாம்பைப் பற்றி இங்கு பேசியிருக்க வேண்டும். ஏனெனில் இது தேவன் படைத்த உயிரினங்களில் ஒன்றென ஆசிரியர் அடையாளப்படுத்துகின்றார். மட்டுமல்லாது பாம்பு என்பதற்கான (Vrபு, nachash), சாதாரண எபிரெயச் சொல்லையேப் பயன்படுத்தியுள்ளார், இச்சொல் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் ஐந்து முறையும், ஏனைய பழைய ஏற்பாட்டு நூல்களில் முப்பத்தொரு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது, தரையில் போட்டு பாம்பாக மாறிய மோசேயின் கோல் nachash என்றச் சொல்லால் அழைக்கப்பட்டது (யாத். 4:3; 7:15), மற்றும் வனாந்திரத்தில் முரட்டாட்டமான இஸ்ரவேலர் மீது கர்த்தர் அனுப்பின "கொள்ளிவாய் சர்ப்பங்களையும் இது விவரிக்கிறது." மேலும், கர்த்தர், மோசேயிடம் வெண்கலத்தில் சர்ப்பமொன்றைச் செய்து கோலில் உயர்த்தி வைக்கச் சொல்கையில் அவர் பயன்படுத்தினச் சொல் இதுவே; கடிப்பட்டவர்கள் குணமடைய அதை நோக்கிப் பார்க்கவேண்டும் (எண். 21:6, 7, 9).1

கில்கிமிஷ் புராணம் போன்ற பண்டைய அண்மை கிழக்கத்திய இலக்கியம் சொல்வதுப் போல் பாம்பு புராண இலக்கிய தெய்வமோ பாதி தெய்வ ஐந்துவோ அல்ல என்று அர்த்தப்படுகிறது. சில வேளைகளில் இந்தக் கட்டுக்கதை வேதாகமக் கதையின் ஆதாரமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் ஆதியாகமத்தின் ஆசிரியர் மெசபொத்தோமியாவின் புராணங்களை பயன்படுத்தினார் என்பதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை.

முதல் ஆணையும் பெண்ணையும் சோதிக்க சாத்தான் பயன்படுத்தின கருவியே ஆதியாகமத்திலுள்ள பாம்பு பிற்காலத்தைய யூதா என வியாக்கியானிகள் புரிந்து கொண்டனர். சாலொமோனின் ஞானம், என்ற தள்ளுபடியாகமத்தின் ஆசிரியர் சொல்கிறார், "தேவன் நம்மை தூய்மையான நிலைக்காகப் படைத்தார்; பிசாசின் பொறாமையால் உலகில் மரணம் நுழைந்தது. மற்றும் அவனது கூட்டத்திலிருப்பவர்கள் அதனை அனுபவிக்கிறார்கள். "3

புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் சாத்தான் பாம்பின் மூலம் பேசினான், மனுக்குலத்தின் பெற்றோரை ஏதேன் தோட்டத்தில் வஞ்சித்தான் என நம்பினார்கள். இயேசுவின் வாரத்தையை யோவான் கீழ்கண்டபடி பதிவு செய்கிறார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான் அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" (யோவான் 8:44). கள்ளப்போதகர்கள் கொரிந்து கிறிஸ்தவர்களை வஞ்ஜித்துவிடுவாரோ என கரிசனையுடனிருந்தார். எனவே இவ்வார்த்தைகளை எழுதுகிறார். "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்" (2 கொரி. 11:3). அப்போஸ்தலர் உறுதிப்படுத்தும்படிக் கூறுகிறார், "சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே" (2 கொரி. 11:14, 15). மக்களை ஏமாற்ற பிசாசு வேடம் போடுவான் என பவுல் நம்பினார். இதையே தான் ஆதியில் அவன் செய்தான் என்பது வெளிப்படையானது, ஆதியில் பூலோக பரதீசில் முதல் மனிதனையும், மனுஷியையும் சோதிக்க பாம்பை பயன்படுத்தினான் (வெளி. 12:9, 15; 20:2 பார்க்கவும்).

வேதாகமக் கதைகளை முன்னதாக ஒருவர் அறியாதிருந்தால், விவரணையில் திடீரென பாம்பு வருவது வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இருப்பினும், அது சந்தேகப்படாதப் பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியைவிட அதிகமாக இருக்க முடியாது திடீரென தேவன் படைத்தவற்றிலேயே மற்ற எந்த காட்டு உயிரினங்களைக் காட்டிலும் மிகவும் அதிக தந்திரமான பாம்புடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறாள். "தந்திரம்" சொல் (a7y', 'arum, "ஆரும்") என்பது "புத்தியுள்ள" அல்லது "விவேகமுள்ள" என மொழி பெயர்க்கும் போது (நீதி. 12:16, 23; 13:16; 14:8, 15, 18; 22:3 27:12). நேர்மறையான பண்பாக விளங்கிக் கொள்ளலாம் இருப்பினும், “தந்திரமான" அல்லது "கூர்மதியான" என்று (யோபு 5:12; 15:5; பார்க்க. யாத். 21:14; யோசுவா 9:4; சங். 83:3), பயன்படுத்தும்போது எதிர்மறையான அர்த்தம் கொண்டுள்ளது. ஆதியாகமம் 3:1ல் பாம்பைப் பற்றியக் குறிப்பு மிகவும் கருத்தாக இருக்கிறது. ஆதியாகமம் 3:1-5ல் கிட்டதட்ட குழந்தைகளைப் போல் கள்ளம் கபடமற்ற ஆதாம் ஏவாளுக்கும் 2:25.4 கொடூர உள்நோக்கு கொண்ட பாம்புக்கும் இடையே ஓர் ஒப்பீட்டு வேறுபாட்டைக் காண்கிறோம்.

பாம்பு ஆணிடம் பேசாமல் பெண்ணிடம் பேசினது ஏன் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவுமே தெளிவாக இல்லை, பெண்கள் ஆண்களைக் காட்டிலும் சுலபமாக தந்திரங்களில் சிக்கிக்கொள்ளுகிறவர்களாக இருப்பதாக சிலர் கருதுகின்றனர். பவுல் விளக்கும்போது, "மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்" (1 தீமோ. 2:14) என்றார். இன்னொரு வகையில் கூறினால், ஏனோ அவர் ஆதாமைக் காட்டிலும் ஏவாள் கள்ளம் கபடமற்றவர் போன்று பவுல் ஏவாளின் சுபாவத்தினைக் குறித்துக்கூற எதுவும் இருக்கவில்லை; பாவம் செய்தமையால் அவனது கண் அகலமாக திறக்கப்பட்ட நிலையில் பாவஞ்செய்த, தம் கணவனருக்கு எதிரிடையாக, வஞ்சிக்கப்பட்டாள்5 எனக் கூறுகிறார். தேவன் ஆதாமிடம் "நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை" (2:17) சாப்பிடும் நாளில் சாகவே சாவாய் எனக் கூறினபோது ஏவாள் படைக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி யென்றால் ஏவாளுக்கு தடை செய்யப்பட்ட மரத்தைப்பற்றிய அறிவு ஆதாம் சொல்லியேத் தெரிந்திருந்தது எனவே இது இரண்டாம் தர தகவலாகும். ஒரு வேளை சர்ப்பத்திற்கு இது தெரிந்திருக்கலாம், எனவே அவன் தேவனது தடையையும் அவரது தன்மையையும் சந்தேகிக்கும்படியாக கேள்வியை தயார் செய்தான்.

பார்ப்பதற்கு கள்ளம் கபடமற்றதாகக் காணப்படும் கேள்வியுடன் சோதனை தொடங்குகிறது; நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ? மனிதனையும், மனுஷியையும் தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியையும் சாப்பிட அவர் அனுமதிப்பதில்லை என தேவனுடைய கட்டளையை மிகைப்படுத்தி எடுத்த எடுப்பிலேயே கூறுகின்றான். இது முழுவதும் தவறான ஒரு கருத்தை முன்னிறுத்தியது. ஏனெனில் தேவன், ஒரே ஒரு மரத்தைத் தவிர்த்து மிக தாராளமாக அனைத்து மரங்களின் கனிகளையும் சாப்பிடும் வாய்ப்பை வழங்கியிருந்தார். இப்படியான ஒரு கேள்வியை எழுப்பினதினால் ஏவாளின் மனதில் தேவனுடைய தன்மையைக் குறித்து ஒரு சந்தேகத்தை விதைப்பதே அவனது திட்டம்.

வசனங்கள் 2, 3. தேவனுடைய கூற்றை திரும்பக் கூறுவது மூலம் பாம்பை திருத்துவதில் பெண்ணின் முயற்சியின் பொறுப்பைக் காண்கிறோம்; இருப்பினும், அவ்வாறு செய்யும் போதோ அவளே மிகைப்படுத்திக் கூறுகிறாள். தொடக்கத்தில் ஏவாள் கூறுகையில் மிகச் சரியாக விளக்குகிறாள், நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை புசிக்கலாம் என்று தேவன் அனுமதித்துள்ளார். ஆனால் அவள் தோட்டத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைக்குறித்து சற்று கூடுதலாக கூறினாள், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் கனியைக் குறித்து, தடை செய்யப்பட்டதிலிருந்து சாப்பிட வேண்டாம் என்றார் எனக் கூறுவதற்குப் பதிலாக, சாகாதபடிக்கு அதைப்புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம், என்றார் எனக் கூட்டிச் சொன்னாள்.6 தேவன் அம்மரத்தை தோட்டத்தில் அமைத்ததுடன் ஆதாமையும் ஏவாளையும் அதன் கனியை அனுபவிக்காமல் தடை செய்ததால், தேவன் மிகவும் கொடூரமானவர், நியாயமற்றவர் என்று அவள் நினைத்ததை ஏவாளின் அறிக்கை குறிப்பதாகக் காணப்படுகிறது.

வசனங்கள் 4, 5. இந்த வேளையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய பாம்பு தேவனுடைய தன்மையை கேள்விக் குறியாக்கி, அவர் பொய் சொல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறான், அவன் ஏவாளிடம் சொல்கிறான், நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின், தேவன் நல்லவரல்ல, இரக்கமுள்ளவரல்ல ஆதாம் ஏவாளின் நன்மைகளைத் தம் இருதயத்தில் அவர் கொண்டிருக்கவில்லை என்பதாக அறிவித்தான். தேவன் தன்நலமானவர், பொறாமையுள்ளவர், ஏமாற்றுகிறவர் என்றதொரு சித்திரத்தை சித்தரிக்கிறான். தேவனது உண்மையான நோக்கம் அவர் தாம் படைத்த மக்களை "நன்மை தீமை அறிந்து" "தம்மைப்போல்" மாறிடுவர் என்ற காரணத்தினாலேயே மரத்திடம் செல்ல அவர்களைத் தடுத்தார் எனவும் கூறினான். பாம்பு பெண்ணிடம் மறைமுகமாக அவளின் நியாயமான உரிமைகளான தேவனைப் போன்ற நிலையை அடையவும், அழியாமையை (சாகாமையை) அடையவும், அறிவு (நன்மைத் தீமையை அறியும் அறிவு ) பெறவும் கூடாதப்படி செய்வதே. தேவனுடைய நோக்கம் என்ற எண்ணத்தை ஊட்டுகிறான்.

ஆதாமும் ஏவாளும் பூமியில் பரதீசுக்கு ஒப்பான ஒரு இடத்தில் வசித்தனர் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அங்கு அவர்களது நல்வாழ்வுக்கான அனைத்தும் வழங்கப்பட்டன. தம் படைப்புகள் அனைத்தும் "நல்லது"என்று மட்டுமல்ல, அது "மிகவும் நல்லது" என தேவன் சொன்னார். ஆனாலும் ஆதாமும் ஏவாளும் தேவன் தங்களிடமிருந்து மிகப் பெரிய நன்மையை மறைத்து வைத்துள்ளதாக ஒரு எண்ணத்தை கொள்ள சோதிக்கப்பட்டனர். தாங்கள் தேவனைப் போலவே அழியாமை யையும், அறிவுமுள்ளவர்களாவதற்கு சிருஷ்டிகளுக்குக் கீழ்ப்படி யாமலிருப்பதை மிகச்சிறியச் செயலாகவே எண்ணியிருக்கக்கூடும். மிக ஆழமான மட்டத்தில், தேவனைப்போல் மாறுவது என்ற எண்ணம், தடுத்து நிறுத்தமுடியாதபடி அவர்களது இருதயத்தில் தற்பெருமையைத் தட்டி எழுப்பியது.

வசனம் 6. தேவன் நன்மை தீமை அறியத்தக்கதான மரத்திலிருந்து புசிப்பதைத் தடை செய்திருந்தாலும், பெண்ணை எதிர்கொண்ட அந்த காட்சி தன் வேண்டுகோளில் வல்லமையுள்ளதாய் இருந்தது. இது முதலாவதாக அவளிடம் உடலின் தணிக்க முடியாத ஆசையை எழுப்பியது. அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லது என கண்டாள். மற்றும் புதியதும் ருசியானதுமான அதை ருசிக்க ஆசித்தாள். முதலாம் அதிகாரத்தில் சொல்லபட்ட "நல்லது" (≥iu, tob) என்றச் சொல் எல்லா படைப்புக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது (1:4,10, 12, 18, 25,31); சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் பொருத்தமானதாய் இருக்க வேண்டியதாயிருந்தது, மற்றும் அது என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்பினாரோ அதைச் செய்யும், Tob என்றால் அழகு என்றும் ஒரு பொருள்படும், அல்லது நடத்தை சார்ந்த கருத்தெனவும் கொள்ளலாம்; ஆனால் இங்கே பெண் தேவனுக்குரிய இடத்தை வலுக்கட்டாயமாக அபகரித்து, அவர் புசிக்கலாகாதென விலக்கினதை புசிப்புக்கு "நல்லது" எனத் தீர்மானிக்கிறாள். விசேஷமாக ஒருவரை கீழ்ப்படியாமைக்குள் இழுக்குமானால் உடல் சார்ந்த அழகு (tob) கொண்ட எல்லாமே நடத்தைச் சார்ந்த நல்லது (1ob) அல்ல, இதையே புதிய ஏற்பாடு (1 யோவான் 2:16) ல் "மாம்சத்தின் இச்சை" எனக்கூறுகிறது. அந்த உடற்கவர்ச்சி தடைச்செய்யப்பட்ட பொருளுக்கோ நபருக்கோ மேற்கொள்ள முடியாததாகி விடுகிறது.

இரண்டாவதாக, அவள் அம்மரத்தால் கவரப்பட காரணம் அதன் அழகில் அவள் மயங்கினாள், அது பார்வைக்கு இன்பமாயிருந்தது, இறுதியாக, புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சம் என்று உணர்கிறாள். இங்கு இது முக்கியத்துவம் பெரும் வார்த்தை. "இன்பம்" (7)gr,tha "wah), மற்றும் "இச்சிக்கப்படத்தக்கது" (Tpy, chamad) என்ற இரண்டு வார்த்தைகளும் “இச்சை" என்றே பத்துக் கட்டளையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு இசைந்த வினைச் சொற்கள் உபாகமம் 5:21ன் பட்டியலில் காணப்படுகிறது. ஆனால் யாத்திராகமம் 20:17ல் இரண்டாவது மட்டுமே காணப்படுகிறது. இந்தச் சம்பவம், ஆசையாய்த் தோன்றுகிறவைகளும், பார்ப்பதற்கு இனிமை யானதும், மற்றும் 1 யோவான் 2:16ல் பொருந்துவதுபோல "கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை" என்பதும், பார்வையின் அடிப்படையில் இயங்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு எச்சரிக்கையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. உண்ணுகையில் மகிழலாமென நம்பியப் பெண் கனியின் அழகில் மயங்கியது மட்டுமல்லாது, தான் "ஞான"மடைவேன் (7py, sakal, "சாகால்") என உறுதியான எதிர்பார்ப்பும் கொண்டிருந்தாள். உயர்வான ஞானம், அறிவு, புத்தி ஆகியவைகளை அடைந்து விடலாமென அவள் கற்பனை செய்து, அதன் மூலம் தன் சொந்த வாழ்வையும் எதிர் காலத்தையும் நிர்ணயம் செய்யத் தீர்மானிக்கிறாள். இப்படிப்பட்ட ஞானம் தன்னுடைய சாதனையையும், "தேவனைப் போல் (3:5) ஆவதைக் குறித்தும் பெருமை கொள்ளச் செய்யுமென்று அப்படியே அவள் பாம்பின் பொய்யை உள்ளபடியே நம்பினாள். அவள் எப்போது தேவனுடைய போதனையைத் தள்ளி, தன்னுடைய பெருமைக்குரிய உணர்வுகளைப் பின்பற்றி, சுய நோக்கத்தை நிறைவு செய்வதை அவளது முதன்மையான இலக்காகக் கொண்டாளோ, அப்போது துயரம் ஜீவன் அல்ல - தொடர்ந்து சோகம் வந்தது.

ஏவாள், அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். ஆண் இந்த தந்திரமான பகுத்தறிவு கொண்ட வார்த்தைகளினால் சோதிக்கப்பட்டான் என வசனப்பகுதி சொல்லவில்லை, பெண் கனியை சாப்பிடுவதையும், மற்றும் அவள் சாகாமலிருப்பதையும் அவன் கவனிக்கிறான். எனவே அவனும் அப்படியே செய்கிறான். தேவன் சொன்னதைக் காட்டிலும் தன் மனைவியின் சொல்லுக்கு அவன் செவிகொடுத்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றினான். அவள் வஞ்சிக்கப்பட்டு, பாவம் செய்தாள், ஆனால் அவனுடைய பாவமோ தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் துணிந்து செய்யப்பட்டது. இருவரும் தங்கள் தவற்றை மிகவும் காலம் தாழ்த்தியே உணர்ந்தனர், விடுதலையாகி இருப்பதற்குப் பதிலாக. ஆதாமும்,ஏவாளும்,உழைப்பு மற்றும் மரணத்தில் முடியும் துன்பமான வாழ்க்கையில் கட்டப்பட்டிருப்பார்கள். வசனம் 7. பாவத்தின் பலன் ஒன்றன் பின் ஒன்றாக மிகத் துரிதமாக வந்தது, அவர்கள் இருவருடைய கண்களும் [அதாவது அவர்களின் அறிவு] திறக்கப்பட்டது. அவர்கள் பெற்றது தெய்வீக ஞானமோ, வெளிப்பாடோ அல்ல, மாறாக, முன்பு அவர்கள் எதை சரி என்று எண்ணினார்களோ அது இப்போது தவறாகத் தோன்றியது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்தனர். கபடற்ற முந்தைய நிலையை விட்டு தாங்கள் நிர்வாணிகள் என வெட்கப்படலாயினர். எனவே இருவரும் தங்கள் நிர்வாணத்தை மறைக்க அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

யாரிடமிருந்து தங்களை மறைக்க இவர்கள் முயற்சி செய்கிறார்கள்: தங்களில் ஒருவருக்கு ஒருவரா? அல்லது தேவனுக்கா? ஒருவேளை இரண்டுமே என பதிலளிக்கலாம். முதல் ஆணும் பெண்ணும் அறிகிறோம். இருவரும் பருவம் அடைந்திருந்த நிலையில், குழந்தைகளைப்போல் இருந்ததாக திடீரென தாங்கள் இருவரும் நிர்வாணமாயிருப்பதாகவும் நம்பினார்கள், தங்களது பாலினம் வித்தியாசமானதால் முன்பு இதுவரையிலும் அவர்களுக்குத் தோன்றியிராத முறையில் வெட்கம் கொள்ளவும் தொடங்கினார்கள். மேலும், தாங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதற்குப் பின்தான் நிர்வாணிகளாக இருப்பதாக உணர்ந்தனர் என்று உண்மையானது. தேவன் அவர்களை எதிர்கொள்ளும் முன்பாகவே இவர்கள் குற்ற உணர்வு கொண்டிருந்தனர் என்று கருத்துத் தெரிவிக்கிறது. அவர்கள் சிருஷ்டிகளின் பிரசன்னத்தில் வசதியாக இல்லாமல், ஒரு பிரிவை உணர்ந்தனர். உணரவில்லை.

விழுந்துபோன இணையை தேவன் சந்தித்தல் (3:8-13)

8பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். 9அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். 1°அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். 11அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 12அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். 13அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

வசனம் & வேதாகம ஆசிரியர் தெய்வங்களுக்கு மனித பண்புகளைக் கொடுக்கிற மொழியை இப்பகுதியில் பயன்படுத்தியுள்ளார். தேவன் மரங்கள் அடங்கிய ஒரு தோட்டத்தின் உரிமையாளராகவும், அவர் பகலின் குளிர்ச்சியான வேளையில், அந்த உடைமையின் நடுவே நடந்து செல்லதீர்மானித்தது போலவும் தேவனா விவரிக்கிறார். எபிரெயத்தில் இதற்கு எழுத்துப்பூர்வமாக, "பகலின் காற்றோட்டமான (tin, ruach) வேளையில், அதற்கு "பகலின் மென்காற்று வீசும் வேளையில்" எனப் பொருள் கொள்ளலாம் (N.JPSV) அல்லது NRSV வியாக்கினம் செய்வது போல் "மாலை மென்காற்று வீசும் வேளை," தம் தோட்டத்தில் உலாவ தீர்மானித்தது போல் சித்தரிக்கிறார்.

ஆணும் பெண்ணும் பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். "சத்தம்" என மொழிபெயர்க்கப்பட்ட (7ip,qol) "குரல்"8 எனவும் பொருள் கொள்ளலாம், ஆனால் இங்கு மாலை நேரத்து காற்றினால் செடி கொடிகளின் அசைவினால் உண்டான சத்தமாக ஒருவேளை இருந்திருக்கலாம். இணையினர் பாவம் செய்தபின் தேவன் அவர்களுடன் பேசினதாக வசனம் எதுவும் சொல்லவில்லை.

தனிப்பட்டவர்களுடன் தேவன் "நடந்தார்" என வேதம் கூறுகையில், அது ஒரு உருவகமான வெளிப்படுத்தலாக, தனிப்பட்டவர்களான ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், மற்றும் ஈசாக்கு போன்றவர்கள் கர்த்தரோடு ஐக்கியம் கொண்டு அவருடைய சித்தத்துடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதைக் குறிக்கிறது (5:22, 24; 6:9; 17:1; 24:40; 48:15). கிருபையுள்ள படைப்பாளர் தோட்டத்தில் ஆண், பெண் ஆகியோருடன்

"நடக்க" (ஐக்கியம் கொள்ள) வந்தார்; ஆனால், அவர்களோ

கீழ்ப்படியாமையினால் அவருக்கு தங்களை மறைக்க

விருட்சங்களுக்குள்ளே ஒளிந்துக் கொண்டனர். வசனம் 9. தேவன் அவர்களிடம் தொடர்ச்சியான கேள்விகளைக்

கேட்க ஆரம்பித்தார். தகவல் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அவர்கள் என்ன செய்திருந்தார்கள் என்பதைப்பற்றிய ஒரு சுய விழிப்புணர்வை இணையினருக்கு அளித்து, அவருடையப் பார்வையில் இவர்களது ஆவிக்குரிய நிலை என்ன என்று அவர்களுக்கு விளக்கிடவே, அவர் கேள்வி கேட்டார். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். இது ஒரு சாதுரியமான கேள்வியாக இருந்தது. ஏனெனில் அவன் எங்கே ச இருந்தான் என்று அவர் தெளிவாக அறிந்திருந்தார். கேள்வி, 9 தோட்டத்தில் ஆணையும், பெண்ணையும் தேவன் எதிர்கொண்ட போது, அவர், ஒரு அன்பின் தகப்பனாக, அவர்களை வெளியே அழைத்து அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வைக்க வேண்டுமென்றே விரும்பினார், ஏனென்றால், ஒப்புரவாவதற்கு இது ஒன்று தான் வழி என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

வசனம் 10.கேள்விக்கான பதிலை தவிர்ப்பதே உண்மையில் தேவனுக்கு மனிதனுடைய பதிலாயிருந்தது. தான் தோட்டத்தில் [தேவனுடைய] சத்தத்தைக் கேட்டதாகக் கூறுகிறான். அவன் நிர்வாணியாய் இருந்ததால் இது அவனை பயந்திருக்கச் செய்தது, ஆகவே அவன் தன்னை மறைத்துக் கொண்டான். மனிதன் பொய் கூறிடத் துணியாமல் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளாமல் இருக்க பாதி உண்மையைக் கூறி மழுப்புகிறான். உண்மையில் உரையாடலின் சாராம்சத்தை வேறொரு திசைக்குத் திருப்ப முயற்சிக்கிறான். பாவம் செய்வதற்கு முன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டபோது அவன் பயப்பட்டிருக்கவில்லை, அவனுடைய நிர்வாணத்தினால் தன்னறிவுள்ளவனாய் இருந்திருக்கவும் இல்லை. தோட்டத்தில் பாவம் நுழைந்தவுடன் எல்லாமே சோகமான பின் விளைவுகளாக மாறியது. வசனம் 11. கர்த்தர் மனிதனின் பகுதி உண்மையையோ,

பிரச்சனையிலிருந்து நழுவுகிறதையோ ஏற்றுக்கொள்ளமாட்டார். அவர் அவனிடம் மிக சாதுர்யமாக இன்னும் இரண்டு கேள்விகளைக் கேட்டார்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். இந்தக் கூடுதல் கேள்விகள் குற்றஞ்சாட்டுகிறவருக்கு தகவல் கிடைக்காததால், எண்ணற்ற கேள்விகளைக் கேட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர் தாமாக குற்றத்தை ஒத்துக்கொள்ளும்படிச் செய்வதற்கான ஒரு வாதியின் கேள்வி அல்ல. அதற்கு மாறாக இக்கேள்விகள் ஓர் ஞானமுள்ளப் பெற்றோர் தம் பிள்ளை என்ன செய்தது என அறிந்துகொள்ள, மென்மையாக குத்திக் கேட்டு, குழந்தை நேர்மையோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு அறிக்கைச் செய்ய வழிநடத்துவதற்குச் சமானமாகும். இங்கு இந்த இரண்டு கேள்விகளும் சேர்ந்து மனிதனுக்கு அவனது வெட்கமும், கேவலமும் தன் மனப்பூர்வமான கீழ்ப்படியாமையினால் வந்தது, என்ற தேவனுடைய விழிப்புணர்வை வெளிப்படுத்தியது.

வசனம் 12. மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவானது. தேவனுக்குமுன் அல்லது இருவரும் ஒருவர் மற்றவருக்கு முன் உணர்ந்த வெட்கத்தைக் காட்டிலும் மிகவும் ஆழமானதாக இருந்தது. ஏனெனில் அவன் தனது சொந்த மீறுதலுக்கு பொறுப்பாளியாக்க முயற்சித்தான். என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். இறுதியாக ஆண் தன் பாவத்தை அறிக்கையிட்டான் ஆனால் அதனைச் செய்யத் தூண்டியது தன் மனைவிதான் என அவளைக் கைகாட்டுகிறான். சாராம்சமாக, ஆதாம், கூறுகிறார், "எல்லாமே அவளுடைய தவறு. அவள் கொடுத்ததை மாத்திரமே அதை நான் பெற்றுக்கொண்டேன்!"10 தன் மனைவியின் மீது பழியை நகர்ந்த அவருடைய பரிதாபமான முயற்சி, அவனுடைய பாவத்திலிருந்து அவனை விலக்கவில்லை. எப்படியிருப்பினும், அவன் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை அடுத்ததாக அப்பெண்ணை அவரே அவனுக்குக் கொடுத்ததினால் தேவனை இன்னொரு குற்றவாளியாக்குகிறான். துக்கமான வஞ்சகப்புகழ்ச்சி என்னவெனில், பெண்ணை ஆணுக்குக் கொடுத்ததன் தேவனின் நோக்கம் அவள் "துணையாக" இருப்பதற்காகத்தான் அவனுடைய எதிரிணையை ஒரு துணையாக பார்ப்பதற்கு பதிலாக, அவளை தடையாகவும் அவனுடைய பிரச்சனைகளுக்குக் காரணமாகவும் பார்க்கிறான்.

வசனம் 13. கர்த்தர் பெண்ணிடம் மிகவும் அழுத்தமான ஒரு கேள்வியைக் கேட்கிறார், நீ இப்படிச் செய்தது என்ன? இக் கேள்வி அமைக்கப்பட்ட விதம், "என்ன இது ...?" என்பது 2:23 ல் முதன் முதலில் பெண்ணைப் பார்த்த நிகழ்வுக்குப் பின்னிட்டு மனிதனுடைய எதிர்ச்செயலைக் காட்டும். அப்போது, திக்கு வாயன் போல் மகிழ்ச்சியில் “இவள்" என்ற பதத்தை இரண்டு முறை உளருகிறான். 3:13 ல் உள்ள "இப்படி," தேவன் பெண்ணைப் படைத்ததின் நோக்கமாயிருக்கவில்லை. இது ஒரு துணையென்பதில் ஆண் கற்பனைப்பண்ணியிருந்ததுமில்லை.

பெண்ணும், தம் கணவனைப் போல் தன் செயல்களுக்காக பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து, குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறாள். அவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன். என்று கூறினான் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் "நான் புசித்தேன்" தங்கள் கீழ்ப்படியாமையை என ஒத்துக்கொண்டனர், ஆனால் ஒருவராகிலும் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. அவளுக்கு முன் அவள் கணவரைப் போன்று; ஏவாள் மனத்தாங்கலாகவோ, மனவருத்தத்தையோ காண்பிக்கவில்லை, ஆனால் தன் மீறுதல் என்ற பழியிலிருந்து தப்பிக்க முயற்சித்தாள். ஏவாள், பொறுப்பை பாம்பின் மீது சாட்டினாள். பாம்பு தன்னை "வஞ்சித்தது" என கூறினபோது சாராம்சமாகச் சொல்வதானால், பாம்பு "கவர்ச்சிகரமான திட்டத்தை முன்வைத்து" மற்றும் அவள் அதற்கு இசைந்தாள்.11

இரண்டாம் அதிகாரத்தின் முடிவில், மகிழ்ச்சிக்கும் மனக்கிளர்ச்சிக்கு மான ஒப்பீட்டு வேறுபாட்டில் வரப்போகும் தண்டனையின் பயத்தால் வசனப்பகுதியில் துக்கம் மேலோங்கி நிற்கிறது கடுமையானது. தேவனுக்கும் மனுக்குலத்திற்கும் இடையிலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைய டையிலும், மனுக்குலத்திற்கும், விலங்குகளுக்கும் இடையிலும் ஆதியில் காணப்பட்ட அமைதி அற்றுப்போனது என்பது தெளிவாயிருக்கிறது. ஆகவே படைப்பாளரின் வார்த்தையை அலட்சியம் பண்ணின குற்றமுள்ளவர்கள் மேல் வரப்போகும் தண்டனைகளுக்கு வாசகர் ஆயத்தமாயிருக்கிறார்.

விழுந்து போனதின் விளைவுகள் (3:14-19)

தேவனால் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தண்டனைகள், பாவங்களும் மற்றும் பாவம் செய்யாதவர்களும் (அல்லது பாவத்தின் ஆதாரம்) பெயரிடப்பட்டதற்கு எதிரான வரிசையில் விளக்கப்பட்டிருக்கின்றன வசனப்பகுதி முதலில் ஆணின் பாவத்தை அடையாளப்படுத்துகிறது (3:9-11), பின்பு பெண்ணின் பாவம் (3:12), மற்றும் இறுதியாக, பாம்பின் பாவம் (3:13).தீர்ப்புகள் முதலாவது சர்ப்பத்தின் மேல் வழங்கப்பட்டது (3:14,15), பெண்ணுக்கு இரண்டாவதாகவும் (3:16), மற்றும் இறுதியாக ஆணுக்கும் (3:17-19) வழங்கப்பட்டது.

பாம்புக்கான சாபம் (3:14,15)

14அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்; 15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

வசனம் 14.ஆணிடமும், பெண்ணிடமும் குற்ற உணர்வு ஏற்படுத்தும் விதமாக தேவன் கேட்டதுபோல் பாம்பிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இதற்குக் காபணம் பின்னணி யாதெனில் இந்த தந்திரமான ஜந்துவின் பின் பின்னாலிருப்பது ஒரு விழுந்துபோன ஆவி ("பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்"; வெளி. 12:9), தெரியும் அது இரட்சிப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலுள்ள ஒன்று என்று கர்த்தருக்கு எனவே, மனந்திரும்புதலுக்குக் கொண்டுவர எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.12 பெண்ணை பாவத்திற்கு உட்படுத்தியதற்காக பாம்பிடம் விளக்கம் கேட்பதன் மூலம் படைப்பாளரும் பாம்பை மதிக்க மறுத்துவிட்டார். மாறாக, பாம்பை சபித்தார். மற்றெல்லா காட்டு மிருகங்களிலும் அதிக கடினப்பாட்டை அதன் மீதுச் சொன்னார். அவர், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; என்றார்.

சாபத்திற்கு முன்னதாக பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்ததாக இருக்கவில்லை என்று இருந்தக் கூற்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறதா? உடனே வாசகர்கள் பாம்பு எவ்வாறு தன் கால்களை இழந்தது என்பதை இது விளக்குகிறது என்று இந்த நிகழ்வை தோற்றத்தின் புராணமாக கண்ணோக்கக்கூடாது. இந்த வகையான வியாக்கியானம் பழைய ஏற்பாடு முடிவுற்றபின், துவங்கிய பிந்தைய காலத்தில் பாலஸ்தீனாவின் டார்கம் போன்ற சில யூத எழுந்துக்களின் அடிப்படையில் இம்மாதிரியான விளக்கங்கள் வந்துள்ளன. அதுச் சொல்கிறது, "உன் வயிற்றினால் நீ ஊர்ந்து செல்வாய், உன் கால்கள் வெட்டப்படும்."13 வேத வாக்கியம் இப்படிச் சாதாரணமாகச் 13 அர்த்தப்படும். அதாவது கிழக்கு ஆப்பரிக்காவிலுள்ள கருப்பு மம்பா, போன்று சில வகைப் பாம்புகள் தங்களின் உடலின் முன்பகுதியை நிலத்தில் ஊன்றி முன்னேறிச் செல்லும், ஆனால் இந்த குறிப்பிட்ட பாம்பு தன் வயிற்றினால் ஊர்ந்து தான் செல்ல வேண்டும் சாதாரணமாக ஊர்வதே அனைத்து பாம்புகளுக்கும் உரியது.

ஊர்வது ஒரு அடையாளமாக இருக்கக்கூடும். ஆதியாகமம் 9:13 ஆனது, வானவில் முழுதும் ஒரு புதிய அபூர்வத்தோற்றம் என்று அர்த்தங் ய கொள்ளாமல், ஆனால் "ஒரு புதிய முக்கியத்துவம்"14 பெற்றதுபோல, எனவே பாம்பு வயிற்றில் ஊர்வது ஒரு புதிய வழியில் காணப்படும். இந்த சாபம் கூறப்பட்டப் பின்னர் வயிற்றில் ஊர்வதும், மண்ணை தின்பதும் அல்லது நக்குவதும் தோல்விக்கும். மற்றும் தனிப்பட்டவர்களை இழிவுப்படுத்துவதற்கும் பொதுவாக பயன்படுத்தும் உருவகச் சொல்லாடலாகிவிட்டது. உதாரணமாக சங்கீதம் 72:9 "வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்" (ஏசாயா 49:23; 65:25; மீகா 7:17 காண்க) என்று கூறுகிறது. எழுத்துப்படி பாம்புகள் மண்ணைத் தின்று ஜீவிப்பதில்லை; ஆனால் இது ஒரு பாவத்திற்கான பிரதிபலனை நினைவுப்படுத்தும் அடையாளமாகும். இது பாம்பின் பொய்யினால் நிகழ்ந்தது போல், தந்திரமான வஞ்சக சோதனைகளில் சிக்கிக்கொள்வோர் பாவத்தினால் விளையும் அவமானம் இவ்வாறே வரும் என மனதில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை.

வசனம் 15. தேவன் பாம்பின் மீது கூறப்பட்ட சாபத்தின் தொடர்ச்சி உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; "வித்து" என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெயச் சொல் (Sli, zera') ஜீரா என்பதாகும். இது ஒருமைக் கூட்டுப் பெயர்ச் சொல், இதற்கு "வம்சாவழி" அல்லது "பின் சந்ததி" எனப் பொருள்படும்; சில வேளைகளில் இது "ஒரு முழுக் குழுவையும் சுருக்கி அடக்குகிறவன்" என்பதாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.15 சாபத்தின் முதல் பாகம், பெண்ணின் வித்திற்கும் (மானிடர்கள்); பாம்பின் வித்திற்கும் (பாம்புகளின் உலகம்) இடையே உள்ள பகையைக் குறிக்கிறது, பாம்பு மனிதனின் குதி காலை கடிப்பதற்கு (நக்கு) முன் மனிதர்கள் அதன் தலையை அழிப்பார்கள் (நசுக்கு). பாம்பின் தலைக்கு என்ன நிகழுகிறதோ அதுவே பெண்ணின் வித்தின் குதிகாலுக்கும் ஏற்படுகிறது. வசனப்பகுதி சொல்கிறது அவர் உன் தலையை நசுக்குவார் (utu', shup], நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் [shup] என்றார். வாக்கியத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் எபிரெயப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், NIV மொழி பெயர்ப்பாளர்கள் செய்துள்ள வித்தியாசத்திற்கு சிறிதளவே சரி என்று கொடுக்கமுடியும். "அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிக்காலை நசுக்குவாய்." இது அடியைப் பெரும் ஒவ்வொருவருக்கும் ஏதோ வித்தியாசமான ஒன்று நடக்கும் என உணர்த்துகிறது. பாம்பின் மேல்விழுந்து தலையை நசுக்கும்போது உயிருக்கு ஆபத்து வருவிக்கும்; ஆனால் பெண்ணின் வித்துக்கு வெறுமனே வலியுள்ளதாக இருக்கும். அவன் ஒரு காயப்பட்ட குதிங்காலால் கஷ்டப்படுவான் அவ்வளவுதான். 16

மானிடர்களுக்கும், விலங்குகளுக்கும் நல்லதொரு உறவும் ஒற்றுமையும் ஆதியில் இருந்தது என்று வேதாகம் வரலாறு குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் முதல் மனிதன் அவைகளின் மீது ஆளுகைச் செய்து அவைகளுக்குப் பெயருமிட்டான் (2:19, 20). இருப்பினும், விலங்குகளின் பிரதிநிதியாக சர்ப்பமானது மூல சோதனையில் பங்கெடுத்து பிசாசின் கருவியாக மாறி பெண்ணை வஞ்சித்தப் போது அந்த அமைதி உறவு கெட்டுப்போனது. மனிதன் தவறியவுடன் அவனோடு விலங்கியல் அரசும் தவறியது. இரண்டுக்குமிடையே உள்ள பகைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் (ரோமர் 8:20-22).

பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்குவார் என்ற அறிக்கை இரட்சிப்பின் நம்பிக்கையின் செய்தி அல்லது மேசியா வாக்குத்தத்தம் என்பதனை பல அறிஞர்கள் நம்புவதில்லை.17 அப்படியிருந்தும் மனித ஜாதிக்கும் மானிடர்களுக்கும் பாம்புகளுக்குமிடையே தொடர்ந்து நீடிக்கும் பகைமையைவிட ஆழமான அர்த்தம் கொண்டதாகத் தோன்றுகிறது. சர்ப்பமானது பேசும் பாம்பைக் காட்டிலும் மேலான ஒன்றாக இருந்தது (3:1). உண்மையில் அது சாத்தானின் பிரதிநிதியாக, அவன் இந்த விலங்கின் மூலம் பேசி மனிதர்களுக்கு சோதனையையும் வீழ்ச்சியையும் கொண்டு வந்தான். ஆதியாகம பதிவில் இது அவ்வளவு தெளிவில்லாமல் இருக்கிறது. காலம் கடக்கும் போதுதான் நமக்கு சர்ப்பத்தின் பின்னணியில் இருந்த எதிராளி, "உலகமனைத்தையும் மோசம்போக்குகிற... சாத்தான்" என்று வெளிப்படுத்தப்படும் (வெளி. 12:9; காண்க யோவான் 8:44).

பெயர் குறிப்பிடாமல் சொல்லப்பட்ட பெண்ணின் வித்தைக் குறித்த குறிப்புகூட இதுபோல்தான் இருக்கிறது. உடனடி சூழலைப் பார்க்கையில், வித்து (வம்சம்) ஏவாள் வாக்குத்தத்தத்தைப் புரிந்துகொண்ட வகையில் - காயின் ஆபேலைக் கொலை செய்த பின் சேத் மூலம் அவள் அடையாளப்படுத்தப்படுகிறாள். தனது மூன்றாம் மகனைப் பெற்றெடுத்த பின் அவள் சொன்னாள், "காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் [Eera', "வித்து"] கொடுத்தார்" (4:25). பாம்பின் தலையை நசுக்கும் காரியம் குறித்து ஏவாள் அனைத்தையும் அறியாமலிருந்தாலும்கூட, ஒரு நாள் அவள் தனது வம்சத்தின் ஒருவர் (வித்து).மூலம், எப்படியாகிலும் தேவனுடைய வாக்குறுதி நிறைவேறும் என்று அவள் சிந்தித்தாள்.

ஆதியாகமம் 1-11ல் மனிதனின் பாவமும், மீறுதலும் விவரிக்கப் பட்டாலும், பெண்ணின் வித்து குறித்த தேவனுடைய வாக்குத்தத்தம் ஆதியாகமத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வுக்கருத்தாக ஆனது. மேலும், மனிதனின் பாவம் மற்றும் மீறுதலின் மத்தியில் தேவன், தம் கிருபையினால் முதலாவதாக பொதுவாக பெண்கள் வழியாகவும், பின்னர் சிறப்பாக ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் யூதா வழியாகவும் - இவர்களுக்கும் இவர் சந்ததியினருக்காகவும் அளவற்ற ஆசீர்வாதத்தை வைத்திருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினார். நாட்கள் செல்லச் செல்ல, யூதர் தாங்களாகவே ஆதியாகமம் 3:15ன் முழுமையான நிறைவேற்றத்தை மேசியாவின் வருகையில் கண்டனர். 18

தேவன் பாம்புக்குச் சொன்ன அறிக்கையை நாம் முதன்மை சுவிசேஷமாக ("முதல் நற்செய்தியாக") புரிந்துகொள்ள வேண்டுமா? பதில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் இருக்கிறது. முதன்மையான சந்தர்ப்பத்தில் பெண் என்பது ஏவாள், மரியாள் அல்ல மற்றும் அவளது "வித்து" அவளது சந்ததியாரைக் குறிக்கிறது; இது இயேசுவின் கன்னிப் பிறப்பின் தெளிவாகத் தெரிகிற தீர்க்கதரிசனமும் அல்ல.19 இருப்பினும், இது குறித்து இந்த வேதவசனத்தின் முழு பொருளின் அடிப்படையில். வில்லியம் சென்போர்ட் லாசோர் சொல்கிறார்.

நான் இதன் முழு பொருளையும் காண்கின்றேன் குறிப்பிடப்படாத மானிட உறுப்பினர் ஒருவர் சாத்தானிய சர்ப்பத்தின் தலையை நசுக்கிடுவார். தேவனின் மீட்பின் திட்டத்தின் முக்கியமாகச் செயல்படுபவார். அவ்வகையில் பார்த்தால், இப்பகுதியானது நற்செய்தி முதல் தெளிவான விளக்கமாக இருக்கிறது. 21 201

இயேசு கிறிஸ்துவுக்குள்ளும், மூலமாகவும் இந்த தீர்க்கதரிசனத்தின் உச்சம் நிறைவேற்றத்திற்கு வரும் (கலா. 3:8-29; எபே. 1:3-14 காண்க). ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தின் இறுதியில் பவுல் ஆதியாகமம் 3:15 ஐ எதிரொலிக்கிறார். “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்" (ரோமர் 16:20).

பெண்ணுக்கானத் தீர்ப்பு (3:16)

16அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

வசனம் 16. பெண்ணின் மீதான நியாயத்தீர்ப்பு அவளது படைப்பின் நோக்கத்தைக் குலைத்தது. அவள் ஆதாமுக்கு மனைவியாக இருக்க ஒரு துணையாக அவனுடன் இசைந்திருக்க படைக்கப்பட்டார். அவனுடைய குழந்தைகளுக்குத் தாயாகவும் வேண்டியதாயிருந்தது (2:18,23,24) பிள்ளைகளைக் கொண்டிருப்பது சிருஷ்டிகரின் நியாயத்தீர்ப்பல்ல; அது "பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்," என்று ஆதியில் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தின் அங்கமாயிருந்தது (1:28). ஆதாரப்பூர்வமாக, பாவம் உலகத்தில் நுழைவதற்கு முன்னர், சிறிய வலியோடோ அல்லது ஒருவேளை வலியில்லாமலோ பெண்ணால் குழந்தைகளைப் பெற முடிந்திருக்கும், சாபத்திற்குப் பின் பெண் என்ற மிகவும் சிறப்பான நிலையில் குழந்தை பெற்றெடுப்பாள், கத்தர் [அவளது] வேதனையைப் பெருகப்பண்ணுவார், இது அவளுடைய பாவத்தின் பலாபலனாயிருந்தது.

இத்துடன், உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்று தேவன் சொன்னார். இந்தக் கூற்றின் சரியான அர்த்தம் மிகவும் விவாதத்திற்குட்பட்டது. சிலர் "ஆசை" என்பதை இயற்கையான பாலுறவு சார்ந்த ஆசை எனக் கூறுவர். "அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்" என்ற கூற்று "அதிகாரத்தின் சங்கிலியை (தேவன் ஆண் பெண்) மீண்டும் உறுதி செய்திருக்கக்கூடும். விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை ஆண் புசித்ததில் பெண்ணின் தலைமையை பின்பற்றியபோது, சிருஷ்டிப்பில் ஏற்படுத்தப்பட்டது, ஆனால் வீழ்ச்சியில் தலைகீழானது".21

இக்கருத்திற்கு சிறிதளவே ஆதரவு உள்ளது. ஏனெனில் இயற்கையான பாலியல் ஆசையானது பாலியல் ஆசீர்வாதத்தின் அங்கமாயிருந்த, அது, மனுக்குலத்தின் காரணக்கர்த்தாக்களாக ஆதியிலிருந்தே ஆண் பெண்ணுக்குள் கட்டப்பட்டிருந்து. இது விழுந்து போனதற்குப் பின் வந்த பாவத்திற்கான தண்டனையல்ல. மேலும், திருமண உறவின் சரியான ஒரு பகுதியாக பெண்ணின் மீது ஆண் தலைமைத்துவம் செலுத்துவது படைப்பிலிருந்தே தேவனால் திட்டமிடப்பட்ட ட்டது (2:18-25). ஏவாளின் மேல் ஆதாமின் முன்னுரிமை என்பது மற்ற விலங்குகளுக்கு பெயரிட்டதுபோல் அவளுக்கும் பெயரிட்டதின் அடிப்படையில் வெளிப்பட்டது (1 கொரி. 11:3, 7-12; 1 தீமோ. 2:12-15களில் பவுலின் விவாதத்தைக் காணவும்).

ஒரு வேளை "ஆசை" என்பது பெண் தன் கணவரிடம் கொள்ளும் இயற்கையான பாலியல் ஆசையைக் குறிப்பிடுகிறது எனில், ஆண் தன் மனைவியின் மீது செலுத்தும் "அதிகாரம்" திருமண வாழ்க்கையில் தேவன் ஏற்படுத்திய இயற்கையான செயலாகும். எப்படியிருப்பினும், "ஆசை" என்ற பெயர்சொல் (npUr, th*shuqah) பழைய ஏற்பாட்டில் மூன்று முறை மட்டுமே வருகிறது. ஆதியாகமத்தில் மேற்கண்ட வசனத்தில் மட்டுமல்லாது உன்னதப்பாட்டு 7:10 ல் இது வருகிறது. இங்கு மணவாட்டி தன் மணவாளன் மீது ஆசைக்கொண்டுள்ளதாக கூறுகிறாள். "நான் என் நேசருடையவள். அவர் பிரியம் என்மேலிருக்கிறது இது இயற்கையான ஆவல் "அன்பும்," "மகிழ்சியும்" வரும் சூழலில் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் ஆதியாகமம் 3:16 ன் "பாவமும், நியாயத்தீர்ப்பும், என்ற சூழலில்"2 பெண்ணின் ஆசை சொல்லப்பட்டுள்ளது.

"ஆசை" என்ற (thtshuqah) பாடத்திற்கு அப்பால் இன்னொரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்றுமொரு இடம்: ஆதியாகமம் 4:6, 7. காயீன் தேவனுக்கு உகந்த காணிக்கையை கொண்டுவர தவறியபோது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலாக, "ஆளுகை" (7up mashai) என்ற சொல்லாடல் சிறப்புப்பெறுகிறது, இது ஆதியாகமம் 3:16ல் பயன்படுத்தப்பட்டது. அதே சூழலில் கையாளப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களில் மட்டுமே இவ்விரு thshuqah, mashal வார்த்தைகளும் ஒருமிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இரண்டு இடங்களிலும் பாவம், நியாயத்தீர்ப்பு என்ற சூழலில் வருகிறது.

கர்த்தர் காயீனை நோக்கி: "உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது ? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை [th shuqah] உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டு [mashal] கொள்ளுவாய்" என்றார் (4:6, 7),

ஒரு காட்டுமிருகம் காயீன் மீது பாய்ந்து அவனை மேற்கொண்டது போல் பாவம் என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. தேவன் காயீனிடம் ஆசையை ஆண்டுகொள்ளவும் ("கட்டுப்பாட்டில் வைக்கவும்"), மேலும் அது அவனை மேற்கொள்ள இடமளிக்கமால் இருக்க சவால் விட்டார்.

Mashal என்ற எபிரெய பதத்திற்கு 'ஆளுகை,' அல்லது "அதிகாரத்தில் இரு" என்று அர்த்தமாகும், இது பொதுவாக அரசர்கள் தம் குடிகள் மீது செலுத்தும் அதிகாரத்தையே குறிக்கிறது.23 மிகத்தீவிரமாக இரண்டு தொகுப்புகளிலுள்ள பதங்களின் பயன்பாடும், வாக்கிய அமைப்பின் ஒற்றுமைகளை பார்த்தால், 3:16ன் பொருளானது 4:6, 7ன் ஒத்தத் தன்மையுடன், ஆளுகை மற்றும் அதிகாரத்திற்கான போராட்டத்தைக் குறிக்கிறது. காயீனை பாவ ஆசை மேற்கொள்ள முயற்சி செய்வதுப் போலவே, அதிகார ஆசை பால் பிரிவுகளுக்குள்ளும் போராடுகிறது. மூலத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருந்த உறவு, 3:16 ல் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பினால் காக்கப்படவில்லை, அது பாவத்தினாலும், தவறியதாலும் அழிக்கப்பட்டது. சுருக்கச் சொல்லின், "அவன் உன்னை ஆண்டுக் கொள்வான்" என்ற கூற்று ஆண் பெண் மீது அதிகாரம் செலுத்த கட்டளைக் கொடுக்கிறது இல்லை.

ஆண் மீது தீர்ப்பும் பூமி மீது சாபமும் அறிவிக்கப்பட்டது (3:17-19)

17பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே,பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர் வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும். 19உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" என்றார்.

வசனங்கள் 17-19. ஆணுக்கு சொல்லப்பட்ட தீர்ப்பு பாம்புக்கும், பெண்ணுக்கும் அளிக்கப்பட்டத் தீர்ப்புகளைக் காட்டிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது. ஏனெனில் தேவனுடைய கட்டளையை தள்ளிவிட்டு தன் மனைவியின் ஆலோசனையை பின்பற்றியமையால், பாவத்தைப் பற்றி அவனுக்கு அதிகப் பொறுப்பு இருந்தது.

எபிரெய பாடத்தை NASB என்ஏஎஸ்பி சரியாக பிரதிபலித்து சொல்கிறது, ஆதாமிடம் தேவன் பேசினார், முதல் முதலாக கர்த்தர், "மனிதன்" (€T8, adam) என்ற பொதுப் பெயரை தனி ஆளின் தனிப்பெயராக அழைத்தார்; "ஆதாம்" என சிலர் கருதுகின்றனர். எப்படியிருப்பினும், எபிரெய அமைப்பு (€7X7, Padam) இங்கே பார்க்கிற இது முன்னதாக 2:20ல் வந்துள்ளது, NASB என்ஏஎஸ்பி யில் "ஆதாமுக்கு" என இந்தப் பகுதியில் தனிப்பட்டப் பெயராக புரிந்து கொண்டால் 3:17 (€78ī, ha'adam) என்ற பெயர் இரண்டாம் முறைப் பயன்பாட்டிலுள்ளது.

தேவன் ஆதாமை நேரடியாக அடிக்காமல் நியாயத்தீர்ப்பின் நடுவிலும் கிருபைப் பாராட்டினார். சாபம் அவன் மேல் மட்டும் விழாமல் ஆதாமுக்கும் அவன் குடும்பம் சாப்பிட உணவு உற்பத்திச் செய்யும் பூமியின் மீதும் விழுந்தது.

அதற்குப் பின், மனித முயற்சிக்கு ஒத்துழைக்காமல் அவனுக்கு முட்களையும் குருக்கையும் விளைவிக்கும். உண்மை யாதெனில் முன்பெல்லாம் நிலம் நன்றாக விளைந்ததினால் அதனைப் பண்படுத்துவது மகிழ்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அது முட்களையும் குருக்கையும் விளைவித்தமையால் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டியிருந்தது. மனிதன் தவறியதால் வேலை சாபமாக வரவில்லை; மனிதனின் உடல், உள்ள சுகத்திற்கு எதாவது ஒரு பயனளிக்கும் வேலை மிக அவசியமாகும் (2:15 க்கான விளக்கத்தை காண்க). இருப்பினும், பண்டைய விவசாய சமுதாயத்தில் விவசாயம் செய்வதற்காக நீணட நேர சூட்டில் உழைப்பது. கூடுதலாக பாடுபடுவதாகும். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எல்லாமே இருந்தது, ஆனால் கூடுதலாக வேண்டும் என்று முயற்சி செய்தபோது இழந்து போனார்கள். நூற்றாண்டுகளாக பலர் இவர்களின் வழியைப் பின்பற்றியுள்ளனர், "சுய விருப்பத்தின் கைகளில் தோல்வி அடைந்தார்கள்."24

மனித நியாயத்தீர்ப்பின் இரண்டாவது பகுதி சரீர மரணம். பூமியின் மண்ணினால் படைக்கப்பட்டு சுலபமாக சாப்பிட்டு வாழ பரதீசில் தங்க வைக்கப்பட்டார். அவன் பிழைத்திருக்க பூமி எளிதாக அளித்தது. ஆனால் உலகத்தில் பாவம் நுழைந்தபின், பூமி அவனுக்கு எதிரியாக மாறி, அவனை மரணத்தில் தன்னிடமே சேர்த்துக்கொள்ளும்: நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் ... நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய். மனிதனின் வீழ்ச்சியின் மிகப்பெரிய துக்கம் என்வென்றால், தேவ சாயலில் படைக்கப்பட்ட அவன் தன் படைப்பாளருடன் ஐக்கியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமிக்குரிய பரதீசில் நித்தியமாக இருந்திருக்கக்கூடும், ஆனால், தன் பிறப்புரிமையை இழந்து தான் முந்தி தான் இருந்த மண்ணுக்கு திரும்ப வேண்டியதாயிற்று.

தேவன் நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் அறிவித்தப்பின், இறுதியாக மரணத்தைப் பற்றியதொரு முன்னறிவிப்பினால், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை கைவிட்டுச் சென்றிருக்க வேண்டும். 2:17 ல் தேவன் எச்சரித்தபடி, பாவம் செய்த மாத்திரத்திலேயே மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கலாம். இருப்பினும், நிகழப்போகிற தண்டனையின் நடுவிலும், மனிதன் இன்றும் நம்பிக்கையைக் கண்டான், அதாவது பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்குவார் என்ற ஓர் தெளிவற்ற தீர்க்கதரிசனம் இருந்தது (3:15).

புதிய பெயர் மற்றும் புதிய ஆடை: ஆதாமின் விசுவாசமும்,

தேவனுடைய கிருபையும் (3:20, 21)

20ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். 21தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.

வசனம் 20. ஏவாள் என்றப் பெயர் (niī, Chanwah) உச்சரிப்புப்படி " (chay) என்றால் "ஜீவன்" எனப்பொருள்படும். இது எழுபதின்மார் மொழிபெயர்ப்பில் (Zon), Zöē, "ஜீவன்") வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி, ஆதாம் ஏன் அவளுக்கு இப் பெயரை சூட்டினார் என ஆதியாகமத்தின் ஆசிரியர் விளக்குகிறார். விளக்கம் சற்று வினோதமாக உள்ளது, அவன் அவளை ஜீவனுள்ள எல்லாருக்கும் தாயானவள் என ஏவாள் என அழைத்தான் என இது சொல்கிறது. ஏவாள் இது வரை குழந்தைகளையும் பெறவில்லை, அப்படியிருக்க அவள் ஜீவனுள்ள அனைத்திற்கும் தாயானவள். என எப்படிக் கூறலாம் ? "ஆனவள்" என்ற எபிரெய வினைச் சொல் முழுமைப்பெற்ற வாக்கியமாக உள்ளது. இது ஒரு நடந்த செயலை முன்னிறுத்துகிறது. ஒருவர் முழுமையடையாத வினைச்சொல்லை எதிர் பார்த்திருக்கலாம். எதிர்காலத்தை வைத்து மொழிபெயர்த்தால். "இவள் ஜீவனுள்ள எல்லாருக்கும் தாயாய் இருப்பார்" மொழிபெயர்க்க வேண்டும். "ஆனவள்" என்ற என வினைச்சொல் "தீர்க்கதரிசன நிறைவு" எதிர்காலத்தில் நடக்கும் என்ற நிச்சயத்துடன். எதிர் காலத்தில் நிச்சயமாக ஒன்று நடக்குமானால் அதனை முன்னதாகவே நடந்ததெனக் கூறலாம்.

ஏவாளுக்கு பெயர் சூட்டுதலென்பது ஆதாமின் விசுவாசத்தை பிரதிபலிக்கிறது. மரணம் அவர்களை பயப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவர்கள் தான் பூமியின் மீது இருந்த மற்றும் இருக்கப் போகும் முதலும் முடிவுமான மனிதர்கள் அவர்கள் நம்பவில்லை. அவன் என எதிர்காலத்தை பார்க்கத் தொடங்கினான். ஏவாள் வாக்களிக்கப்பட்ட வித்தைப் பெற்றெடுப்பாள் (3:15) அவர் பாம்பின் தலையை நசுக்குவார் என நம்பினான்.

வசனம் 21. ஆதாமையும் அவன் மனைவியையும் தேவன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பும் முன் அவர்களுக்குத் தோல் உடைகளை வழங்கி தம் இறுதியான கிருபையை வெளிப்படுத்தினார். அவர்கள் கடினப்பாடுகளுடன் அத்தியிலையினால் செய்த உடைக்கு (3:7) முற்றிலும் எதிர் மாறாக இருந்தது. "உடை என்பதற்கு" எபிரெயச் சொல் (nra, kuthoneth) மனித உடலில் போர்த்திக் கொள்ளும் உடையை பொருள்படுத்துகிறது. சாதாரணமாக அரைக்கையுடன் கூடிய நீண்ட முழங்கால் வரைக்கோ, குதிகால் வரைக்கோத் தொங்கும் (காண்க 37:3; யாத்.28:4),25 "தோலு"க்கு எபிரெய வார்த்தை (his, or) என்பதாகும். அதற்கு மிருகத்தின் மேல் தோலெனப்படும் (காண்க 27:16; லேவி. 4:11). பலியைக் குறித்து ஆசிரியர் இங்கு எதுவும் ஆராய்வதில்லை. இருப்பினும் ஒரு விலங்கு ஆதாம் ஏவாளின் பாவத்தின் விளைவாக மரிக்க வேண்டியிருந்தது. கர்த்தர் ஒரு விலங்கை கொன்று அதன் தோலை தம்பதியினருக்கு உடையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. தேவன் மனிதனையும் அவன் மனைவியையும் தோட்டத்தை விட்டு வெளியேற்றும் போது அவர்களை நிர்வாணமாக அனுப்ப விரும்பவில்லை. எனவே அவர்களை மூடுவதற்கு பாதுகாப்பான உடையை வழங்கினார். கள்ளங் கபடமற்ற யுகம் நிரந்தரமாக மறைந்து அவர்களது உடை அவர்களது பாவத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுதல் (3:22-24)

22பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று, 23அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த, தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

வசனம் பாம்பின் முன்னறிவிப்பு (3:5) திருகப்பட்ட,

22. சிதைக்கப்பட்ட வித்தில் நிறைவேறியிருந்தது. ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்தினின்று வெளியேற்றும் போது தேவன் சொன்னக் காரணம்: இதோ. மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான், "நம்மை" என்று கர்த்தர் பன்மையில் இங்கு கூறுவது ஒருவேளை இங்கு ஆலோசனையில் பங்கெடுத்த தேவதூதர்களின் கூட்டத்தைப் பற்றிக் கூறியிருக்கலாம் (1:26க்குரிய விளக்கக் குறிப்பைக் காண்க). இதற்குக் காரணம் 24 ம் வசனம் சொல்கிறது ஆதாமும் அவர் மனைவி ஏவாளும் தோட்டத்தை விட்டு வெளியேறின உடனே தேவன் அதை பாதுகாக்க "ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியை" பாதுகாக்க "கேருபீன்களை" (தேவதூதர்கள்) வைத்தார்.

தேவனும் அவர் தூத சங்கமும் "நன்மைத் தீமை"யை அறிந்திருந்தனர் - அனுபவமாகவல்ல ஆனால் உணர்வு ரீதியாக தேவன் மட்டுமே நன்மையிலிருந்து தீமை எது என தீர்மானிப்பவராவார்.26 எந்த ஒரு அணுகு முறையோ, சிந்தனையோ, அல்லது செயலோ தேவனது தன்மைக்கோ குணாதிசயத்திற்கோ, அல்லது சித்தத்திற்கு முரணாக இருந்தாலோ அது பாவாமாகும். ஆதாமும் ஏவாளும் தங்கள் பெருமையால் தேவனைப் போல் "ஞானம்" அடைய விரும்பினபோது (3:6) தானாக அறிவை தேர்ந்தெடுக்க தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு எதிராக கீழ்ப்படி யாமையினால் தேர்ந்தெடுத்தனர். சுருங்கக்கூறின் அவர்கள் தங்களது விடுதலையை அறிவிக்கவும் மற்றும் அவர்கள் தங்கள் சொந்த "தேவனாக" இருக்கவும் விரும்பினர்.

இது அல்லாது தேவனது சிங்காசனத்தை கைப்பற்றும் ஆவலுடன் கூடுதலாக, ஜீவவிருட்சத்திலிருந்து சாப்பிட்டு பாவத்தில் என்றென்றும் ஜீவிக்க முயற்சித்தால் கர்த்தருக்கு எதிராக, தங்களது

முரட்டாட்டத்தையும், மீறுதலையும் கூட்டுவார்கள். உடல் சார்ந்த வாழ்வு ஆசீர்வாதமானது என கற்க வேண்டியிருந்தது. மானிடர்கள் தேவனது கிருபையையும் நித்திய ஜீவனையும் பெற்று அனுபவிக்கிறார்கள், இது படைப்பாளரின் பரிசு, இதனை அவர் தம்மை நேசித்து சேவிப்பவர்களுக்கு ஆயத்தப்படுத்தியுள்ளார். மனிதன் தன் சொந்த அறிவினாலே சுய முயற்சி செய்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலாது.

வசனம் 23. மேலும் கீழ்ப்படிதலில்லாமல் போகாதபடி, தேவன் [அவர்களை] ஏதேன் தோட்டத்தினின்று வெளியே அனுப்பிவிட்டார். இங்கு பயன்படுத்தப்பட்ட "அனுப்பு" என்ற வினச்சொல் (n2w, shalach), இதற்கு "தூரம் அனுப்புதல்," "விரட்டியடி" எனப் பொருள்படும். இதே வார்த்தை ஈசாக்குக்கு இடையூறாக இருப்பார்களென, ஆபிரகாம், ஆகாரையும் இஸ்மவேலையும், மக்களையும் தன் மறுமனையாட்டிகளின் விலக்கி அனுப்பின போது பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும் (21:14: 25:6). மேலும் shalach என்றால் வெளியேற்றப்படுதல், உறவின் மரணம், அதாவது ஆண் ஒருவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்தப்பின், அல்லது இஸ்ரவேலர்கள் வேறு தெய்வங்களை வழிபட்டு, தேவனை மறந்ததினால் அவர்களை அவர் சிறையிருப்புக்கு அனுப்பினபோது பயன்படுத்திய சொல்லாகும் (ஏசாயா 50:1; எரே. 28: 16).27

தோட்டத்திலிருந்து வெளியே துரத்தி விடப்பட்டப்பின், மனிதனின் பங்கு தான் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்துவதே ஆகும். ஆதாமும் ஏவாளும் தங்களிடமிருந்த நெருங்கிய உறவை மட்டும் இழக்கவில்லை, முன்னொரு நாளில் தேவனோடு இருந்த நெருங்கிய உறவையும் இழந்தனர். தேவன் அவர்களை அவர்களுக்கு கடுமையான முன்பின் பழக்கமில்லாத சூழ்நிலையுள்ள இடத்திற்கு அனுப்பினார். முன்பு ஆதாம் அபரிவிதமான பலன் கொடுத்த தோட்டத்தில் மிக சிறிதளவே பராமரிப்பு வேலை செய்ய வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அனைத்தையும் புதிதாக தொடங்க வேண்டியிருந்தது. சபிக்கப்பட்ட நிலத்திலிருந்து தன் தோட்டத்தை உருவாக்க வேண்டும். ஓய்வின்றி தன்னால் இயன்றதைச் சிறப்பாக செய்ய வேண்டும். முதலாவதாக, ஒரே ஒரு மரத்தின் கனியை தடை செய்திருந்த நோக்கம் சந்தேகத்திற்கு இடமாயிருப்பினும் சந்தேகித்திருக்கக்கூடாது. ஆனால் ஆணும் பெண்ணும் தேவனை நம்பத் தவறினார்கள். இதனால் குளிர்ச்சியான வரவேற்பற்ற உலகில் நுழைந்தனர். தேவனுடைய கிருபையினால் மட்டுமே வீடு வாசலற்ற தம்பதியினர் அடைக்கலம்

பெற்றனர்.28 வசனம் 24. தேவன் மனிதனை தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். வசனம் 22 முதல் 24 வரை பெண் குறிப்பிடப்படவேயில்லை என்பது வினோதமாயிருக்கிறது, ஏனெனில் அவளுடைய எதிர்காலமும் தன் கணவரோடு சேர்ந்து தோட்டத்திலிருந்து விலக்கப்பட்டது. ஆணின் மீதுள்ள தீர்ப்பு தீவிரமாயிருந்தது, காரணம் இவர் தான் நன்மைத்தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க கூடாதென தடை ஆணையை நேரிடையாகப் பெற்றவர் (2:17).இன்னொரு கருத்து என்னவென்றால் தங்கள் மீது வந்த மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஜீவ விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசிக்க முயற்சி செய்ய வேண்டிய ஒருவனாக இருந்தான்.

தேவன் ஜீவ விருட்சத்திற்குச் செல்ல எந்த ஒரு மார்க்கத்தையும் வைக்கவில்லை வழியைக் காக்க கேரூபீன் வைத்தார். தோட்டத்தின் வாசல் கிழக்கில் இருந்தது.29 இங்குத்தான் "கேரூபீன்கள்" (கேரூப் என்பதின் பன்மையில்) காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. "கேரூபீன்கள்" ("கேரூப்") என வேதம் முழுவதிலும் தொண்ணூறு முறை வருகிறது. இது சிறகுகளுள்ள தேவ தூதர்களின் வகையைச் சார்ந்தது, இவை பொதுவாக தேவனுடைய பரிசுத்தத்தை காக்கும். ஆசரிப்பு கூடாரத்தில் இரண்டு பொன் கேரூபீன்கள் உடன்படிக்கைப் பெட்டியின் மேல் தேவனுடைய சிங்காசனத்தின் அடையாளமாக செயல்பட்டது (யாத். 25:18-22); ஒலிவ மரத்தில் செதுக்கப்பட்டு பொன்னால் மூடப்பட்ட இரண்டு பெரிய கேரூபீன்கள் சாலோமோனின் தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது (1 இராஜா.6:23-28) 30

வீசிக் கொண்டிருக்கிற சுடரொளி பட்டயம் என்பது. தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சொல்கிறது. நுழைய முயற்சி செய்பவர் மீது மரண பயத்தை ஏற்படுத்துகிறது.31 கதையின் துயரமான நிகழ்வு யாதெனில் ஆதாம் தோட்டத்தை "பண்படுத்த" (7pw, shamar) வேண்டும் (2:15) என்பதே தேவத்திட்டம், ஆனால் இப்போதோ கெரூபீன்கள் “சுடரொளிப் பட்டயத்துடன்" அதை அவனுக்கு எதிராக "காவல் காத்துக்" (7pu', shamar) கொண்டிருக்கின்றன.

நடைமுறைப்படுத்துதல்

மனிதனின் தேர்ந்தெடுப்பு (2:9, 16, 17; 3:1-24)

என் வாழ்வின் மையம் என்ன?"வாழ்வின் மையம் என்ன என்பதை சோதிக்கும்படிக்கு, நன்மை தீமை அறியதக்க விருட்சம் தோட்டத்தின் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது; தேவனா? அல்லது சுயமா? தேவன், நிச்சயமாக அவர் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24); ஆனால் அவர் படைப்பாளராகவும் இருக்கிறார். அவரே உலக அமைப்பையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்தார். அவர் மனிதனை தம் சொந்த சாயலில் படைக்கும் போது, படைப்பானது சரீரம் கொண்டதாக மட்டுமல்லாமல், தன் வாழ்வைப் பற்றி தீர்மானிக்கக் கூடியவனாகவும் ஒழுக்க முடையவனாகவும், ஆவிக்குரியவனாகவும் படைத்தார்.

சுயாதீனம் மிக நல்லதொரு வரம், அதில் பொறுப்புகளையும்,

அத்துடன் தவறாக தீர்மானம் செய்யும் போது அதற்குரிய விளைவுகளையும் அது கொண்டுள்ளது. நாம் உணர்ந்து கொள்ளுகிறோமோ இல்லையோ, வாழ்வின் பின்னணியானது, நம் வெளிப்புறச் செயல்பாடுகளை நடத்துகிறது. அடிப்படைப் பிரச்சனையில் உள்ளது ஒரே கேள்வி; "யார் என் மீது ஆளுகைச் செய்வது படைப்பாளரா அல்லது என் சுயமா?" இக் கேள்விக்குப் பின் மனிதனின் பெருமை காணப்படுகிறது, ஒருவரின் சுயநலத்தை ஊதி பெரிதாக்குதலே, அவன் இதயத்தைப் பிடித்து குழப்பி, தேவனுக்கு எதிராக கலகம் செய்ய வைப்பதற்கான சுலபமான வழி என்பதை பாம்பு நன்றாக அறிந்திருந்தது (நீதி. 16:18; மற்றும் 1 தீமோ. 3:6ன் படி சாத்தானின் அடிப்படைப் பாவமே பெருமை) முதல் தம்பதியினரிடம் "நன்மை தீமை அறிந்து" தேவனைப் போல் ஞான முள்ளவர்களாய் இருப்பீர்கள் எனச் சொன்னபோது, அதன் விளைவு என்னமாயிருக்குமென பாம்புக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சோதனையை இவ்வார்த்தைகளால் சொல்லி விளக்க இயலாது, ஆனால் இந்தக் கருத்து எப்போதுமே இருந்தது: தனக்கே கடவுளாக இருக்க யாருக்குத்தான் விருப்பமில்லை, தடைகளும், கட்டளைகளுமின்றி சுதந்திரமாக நிரந்தரமாக வாழலாம் அல்லவா? அது சாத்தியமாயின், எல்லாரும் தம் தம் வழியேப் போவார்கள். தங்களுக்கு பிடித்ததைச் செய்வார்கள், யாருக்கும் கணக்குக்கொடுக்க வேண்டியதே இல்லை. என்னத்தான் இருப்பினும் இம் முறை சரியாகச் செயல்படாது. மனிதர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மெய் தேவனை விட்டுவிட்டு தனக்குத் தானே கடவுளாக இருந்தாலும், அவன் பிசாசைப் போலாவான். மனிதனை அவனது சுயத்திற்கு விட்டுவிட்டால், மிக துரிதமாக அழிவுள்ள பாவக்கட்டில் அடிமையாக சிக்கிக் கொள்வான் (காயீனும் அவனது சந்ததியும் செய்ததுப் போல், பெருவெள்ளத்திற்கே இழுத்துச் சென்றனர்: 4:8, 23, 24:6:4, 5, 11-13).

"நான் தேவனை நம்புவேனா?" விலக்கப்பட்ட விருட்சம் உறவை சோதிக்கும்படி ஒரு சோதனைவைத்தது. "நன்மை தீமையை அறிகிற அறிவு" எல்லாவற்றையும் அறியக்கூடியத் தன்மை, இது தேவன் மட்டுமே கொண்டுள்ள அறிவு. மனிதன் இப்படிப்பட்ட அறிவைப் பெற இயலாது அப்படியேப் பெற்றாலும் அதனை அவன் கையாளுவது மிகக்கடினமாகும். அப்படியானால், விலக்கப்பட்ட விருட்சம் தேவனோடுள்ள உறவுக்கு ஒரு சோதனையின் பிரதிநிதியாகும், அதில் தேவனை நம்புவதும் அடங்கியிருக்கிறது. தேவன் நல்லவர், அன்புள்ளவர், அவனுக்கு நன்மையை வழங்குவார் என மனிதன் நம்புகிறானா? அல்லது அவர் பொறாமையுள்ளவர், அற்புதமான அனுபவங்களை காட்டாமல் வஞ்சிக்கின்றார் என ஏதேனில் பாம்பு ஏமாற்றியது போல் சந்தேகப் பார்வையில் பார்க்கிறானா? தேவனை நம்புவது என்பது அவரோடுள்ள உறவுக்கு அடிப்படை,

இரண்டு வேத உதாரணங்கள் இதற்கு சிறந்த ஆதாரங்களாகும். நோவா பூமி மீது பெரும் வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அழிக்கும் என்ற தேவனுடைய எச்சரிப்பை அப்படியே நம்ப நோவா தீர்மானித்தார். அதனால் அன்றைய சமுதாயத்தின் பொதுவான ஞானம் அறிவு என்பவைகளுக்கு எதிராக இருக்க வேண்டியிருந்தது (மத் 24:35 39; எபி. 11:7; 2 பேதுரு 3:3-7).

மோசே மோசேயும் தேவனை நம்பத் தீர்மானித்தார். எபிரெய மக்களை அவர்களது கட்டுகளிலிருந்து விடுவிக்கவும் மற்றும் எகிப்திற்கு திரும்புவதில் மனிதப் பார்வையில், சரியாகத் தோன்றுகிற எல்லாவற்றிற்கும் எதிராக நிற்க வேண்டியிருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பாலைவனத்தில் ஆடு மேய்த்தவனின் சொல்லுக்குச் செவி சாய்த்திடமாட்டார், இப்படிப்பட்ட நிலையில் தேவன் எபிரெய மக்களை அடிமைத்தளத்திலிருந்து மீட்பார் என என்ன வாக்குறுதியை வழங்கிட முடியும்? (யாத். 3:16-4:31; 6:1-9 காண்க.) விடுதலையின் ஒவ்வொரு அடியிலும் தேவனை நம்ப வேண்டியிருந்தது; எகிப்தியர் மீது வந்த வாதை இஸ்ரவேலர்களை சேதப்படுத்தாது என்று நம்ப வேண்டியிருந்தது, (யாத். 8:1-12:36) பார்வோனின் படைவீரர்களின் கடுங்கோபத்திலிருந்து, தங்கள் பயணத்தைத் தொடராதபடி மூழ்கடிக்கும் கடலிலிருந்து மீட்பார் என்று நம்ப வேண்டியிருந்தது (யாத். 14:10-31). பாலைவனத்திலே மோசேயும் மக்களும் தாங்கள் அழியாதபடிக்கும் தங்கள் தேவைகளான மன்னாவுக்காகவும், தண்ணீருக்காகவும், காடைகளுக் காகவும், தேவனை நம்ப வேண்டியிருந்தது. சீனாய் மலையில் தங்களுக்கு எதிராக பதிவிருந்த அமலேக்கியர் மீது தங்களுக்கு வெற்றி வேண்டும் என தேவனை அவர்கள் நம்ப வேண்டியிருந்தது (யாத். 15:22-7:13; எபி. 11:24-29).

திரும்பத் திரும்ப, தேவன் இஸ்ரவேலரை நேசிக்கின்றவரும், அவர்களுக்கு மிக சிறப்பானதை தருவதே அவரது இருதயத்தின் விருப்பம் என்பதனை வெளிப்படுத்தினார். இருப்பினும், எகிப்திலிருந்து அழைத்து வந்தது பாலைவனத்தில் அவர்கள் கொல்லத்தான் என நினைத்து அவருக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டின் எல்லையில் முகாமிட்டிருந்த போது தேவன் தங்களுக்கு வெற்றி அளிப்பார் என நம்பாமல் அதனுள் நுழைய மறுத்தனர், கர்த்தர் மோசேயிடம் சொன்னார், "எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?," "விசுவாசம்" என மொழிபெயர்க்கப்பட்டது எண்ணாகமம் 14:11ல் "நம்பிக்கை" எனப்படும். மக்கள் தேவனை மூளை அறிவினால் நம்பினார்கள், அவர் மிகப்பெரிய அதிசயம் செய்தார் என அவர்களுக்குத் தெரியும்; இருப்பினும் அவரை அவர்கள் விசுவாசிக்கவில்லை. தங்கள் வாழ்வை அவருக்கு ஒப்புவிக்கவும், எதிர்காலத்தை அவரது பாதுகாப்புக்கு ஒப்புவிக்கவும் மனதில்லாதிருந்தார்கள்.

இயேசுவும் தம் பூலோக ஊழியத்தின் மத்தியில் இப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத யூதர்களைக் கண்டார். "பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் [ErioTeucav, episteusan] வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்த படியால், அவர்களை நம்பி [énicteuev, episteuen] இணங்கவில்லை" (யோவான் 2:23, 24). யோவானால் முதலில் பயன்படுத்தப்பட்ட செயல்பாட்டுவினை பெயர்சொல் பொதுவாக "குறிப்பிட்ட செயல்" அந்த சமயத்திற்கான நம்பிக்கை அல்லது விசுவாசம், இது அற்பணிப்பின் நம்பிக்கையல்ல எனவே இது இரட்சிப்புக்குரிய விசுவாசமல்ல. இரண்டாவது பதம் அதே வார்த்தையிலிருந்து வருகிறது. அது விசுவாசம் என பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிறது. இது விசுவாசித்தல், நம்புதல், ஒப்புவித்தல், ஒருவருக்கு அற்பணிப்பது போன்ற தொடர் செயலைக் காட்டுகிறது. யோவான் சொல்லுகையில், இயேசுவுக்கு அவர்களின் விசுவாசத்தின் மீது விசுவாசமில்லை, எனவே அவர்களை நம்பி தம்மை அவர்களுக்கு ஒப்புவிக்கவில்லை, எனெனில் அவர்கள் அவரை நம்பி அவர்களை ஒப்புவிக்கவில்லை. இரட்சிப்புக்கு ஏற்ற விசுவாசம் என்பது அவர் இருக்கிறார் என்றோ, அல்லது அவரது அற்புதத்தை நம்புவதல்ல; அது கிறிஸ்துவை விசுவாசித்து, தம்மை அவருக்கு ஒப்புவிப்பதாகும்.32

வரலாற்றில், இப்படிப்பட்ட விசுவாசமே ஆதாம் ஏவாளிடம் எதிர்பார்க்கப்பட்டது. தேவன் தங்கள் படைப்பாளர் என அவர்களுக்குத் தெரியும். தங்கள் வாழ்வு, சூழ்நிலை, தேவைகள் அனைத்தும் அவருக்குரியது. இருப்பினும், அவர்களே தங்களுக்குரிய தீர்மானத்தை எடுக்க விரும்பினார்கள். தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு எதிராக தங்களுக்கு சிறப்பானதைத் தருவார் என நம்பாமல் போனார்கள்.

"தேவனுடைய கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படிவேனா?" தடைச்செய்யப்பட்ட விருட்சமானது ஒரு கட்டளைக்கு சோதனையாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு முதல் தம்பதியரின் சோதனை எதிர்மறையானது, எதோ ஒன்று தடைச் செய்யப்பட்டுள்ளது. சில செயலை அவர்கள் செய்யக்கூடாது, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது. இச் சோதனையின் முக்கியத்துவம் தடை செய்யப்பட்ட செயலில் அல்ல. மரத்தின் கனியைப் புசிப்பதென்பது பாவமோ, தீமையோ அல்ல. வசனம் 6 சொல்லுகிறது; "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும்" எனக் கண்டு சில கனியை சாப்பிட்டு, சிலதை தன் கணவனுக்கும் கொண்டு வந்து கொடுத்து அனுபவிக்க கூறுகிறாள். பழம் விஷமானதோ, கெட்டதோ சுவையானதுமாகும். அல்ல. விரும்பத்தக்கதும்,

தேவன் தடை செய்தார் என்பதுதான் முக்கியம். மனிதனுக்கு எதையாவது செய்யவோ, அல்லது சாப்பிடவோ எது நல்லது அல்லது கெட்டது என தீர்மானிப்பவர் அவர் மட்டுமே. தேவன் கட்டளையிட்டு மனிதன் அதைச் செய்தால் அது நல்லது, தேவன் தடுத்து மனிதன் அதை செய்தால் அது கெட்டது; அவர் வேறு எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.

நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க தடை செய்தது என்பது மனிதன் தேவனை நம்புகிறானா அல்லது அவரோடுள்ள உறவை மதிக்கிறானா என சோதித்துப் பார்ப்பதே ஆகும். தேவனுக்குத் தெரியும், எல்லை இல்லாமல், அவர் சிருஷ்டித்த மனுக்குலம் தங்களையே அகிலத்தின் மையமாக இருப்பதை சீக்கிரமே காண்பார்கள் தங்களது வாழ்வில் இனி அவர் இல்லாமல் சுயத்தின் மையமாக இருப்பார்கள், இனி எல்லாமே அவர்களின் விருப்பம், ஆசை இவைகளைச் சுற்றியிருக்கும். ஒரு முறை மனிதனின் பார்வை உள்பக்கமாகும்போது, அவன் தன் சொந்த சிந்தனையிலே இருப்பான், சுயத்தை திருப்தியாக்க மற்றவர்களைப் பயன்படுத்துவான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளை உணரான். சுருங்கக் கூறினால், தேவனைப்போல் மாறுவதற்கு பதிலாக பிசாசாக மாறிவிடுவான்.

பெற்றோர் தம் பிள்ளைகள் ஆபத்துக்கு விலக பத்துக் கட்டளையை கைக்கொள்ளச் சொல்லுவார்கள் பொதுவாக நடுநிலையான சட்டங்கள் அல்லது விதிகளாக பார்க்கப்படுகிறது, தேவன் விலக்கிய நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை சாப்பிட பாம்பு சவால்விட்டது, இது போல் பெற்றோர் தங்கள் மீது ஒழுக்க சட்டவிதிகளைக் கொணரும்போது பிள்ளைகள் கேள்வி கேட்கின்றனர். கட்டளைகள், ஒழுங்கு அல்லது அறம் சார்ந்த விதிகள் அனைத்தும் தேவனிடமிருந்து முளைத்தது, ஒழுக்கத்தின் இடத்திலிருந்து பார்த்தால் அவர் அவரில் நித்தியமாக நிலைத்துள்ளார். யாக்கோபு சொல்கிறார், தேவனிடத்தில், "யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக். 1:17). பத்துக் கட்டளைப் போன்று சட்டங்கள் கொள்கைகளுக்குப் பின்னால் தேவனுடைய தன்மைகள் பிரதிபலிக்கின்றது, இது நித்திய உண்மை.

தேவன் மனிதனுக்கு தோட்டத்தில் ஒரு கட்டளைத்தான் கொடுத்தார், முதல் தம்பதியினர் அதனை மீறி கீழ்ப்படியாமல் போனபோது தண்டணை மிகக் கடுமையாக இருந்தது. அது பொய் சொல்ல, அறிவுப்பூர்வமாயிருக்க, ஒருவர் இன்னொருவர் மீது பழி சாட்ட, பாம்பின் மீதும், ஏன் தேவன் மீதும் சுமத்தப்பட்டது. எல்லாரும் பாவம் செய்தனர், சட்டத்தையோ, ஒழுக்கம் அல்லது அறம் சார்ந்த விதிகளையோ அறிந்திருந்தே மீறுவதாகும். ஆதாமும் ஏவாளும் தேவனுக்கும், தங்களுக்கும் அல்லது ஒருவருக்கொருவரும் "உண்மையாய்" இருக்கவில்லை, தங்களுடைய நடத்தைக்காக

சாக்குப்போக்கு சொன்னார்கள். மனிதன் தன்னிலும், மனித உறவிலும், இசைந்து வாழ விரும்புவோர்க்கு, மனிதன் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு உறுதியளிக்கக் கூடியதாக இயேசுவின் சத்தியமும், நேர்மையுமான வாழ்க்கையும் இருக்கிறது. மனிதர்களுக்கிடையே

உண்மை நிலைக்கொள்ளாவிட்டால், ஒரு இல்லமோ, சமுதாயமோ அதிக நாள் இராது. "நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற முக்கிய மானவைகள்" முக்கியப் பகுதிகளை விட்டுவிட்டீர்கள் (மத். 23:23) மற்றும் "முதலாம் பிரதானக் கட்டளை" (மத். 22:38) நாம் இருக்க வேண்டிய பிரகாரம் படைக்கப்பட்டதை பிரதிபலிக்கின்றன. நாம் தெய்வங்களாகவோ, கவர்ச்சியின் மையமாகவோ படைக்கப் படவில்லை. நம் வாழ்வின் அடிப்படை கட்டளை தேவனை நேசிப்பது (அவரை நடுநாயகமாய் வைத்திருப்பது). நமது வாழ்வையே நாம் அதிகமாக பிரியப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாக நமக்கடுத்தவனை நம்மைப்போல நேசிப்பது முக்கியம். இதைச் செய்வதற்கு முதலாவதாக மேல் நோக்கி தேவனையும், பின்பு வெளிப் படையாக நமக்கடுத்தவனை நோக்கியுமான வாழ்வு அவசியமாகிறது. நாம் அனுதினமும் பரிசுத்தம், நீதி இரக்கம், மனதுருக்கம் இவைகளை கடைப்பிடிக்க வேண்டும். நமது கர்த்தரின் தன்மையையும். குணா திசயத்தையும், உலகத்திற்கு பிரதிபலிக்க வேண்டும். அதனால் உலக மக்கள் எவ்வளவு ஆச்சரியமான தேவனை நாம் கொண்டிருக்கிறோம் என அறிந்து, அவரை மகிமைப்படுத்துவார்கள் (மத். 5:16, 33-48; லூக். 6:35,36).

தேவனைத் தேர்வு செய்வதும்-வாழ்வைத் தேர்வு செய்வதும்

(3:1-13)

விலக்கப்பட்ட விருட்சத்தின் கனிக்கு முன் வாழ்வா சாவா என்ற தீர்மானத்தில் ஆதாமும் ஏவாளும் நின்றார்கள். மக்களுக்கு வாழ்வு வேண்டும்-ஆனால் தங்களுடைய சொந்த வழியில் இருக்க வேண்டும். தங்களுக்குப் பொருத்தமாக இருக்கிற வரைக்கும் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்: அவை தேவைகளை அதிகமாய் எதிர்பார்க்காத வரைக்கும், தங்களுக்கு வேண்டியதைச் செய்ய முடியும்போது, தங்கள் பாதையை தாங்களே வகுக்க முடியும்போது தேவனுடைய வழியை ஏற்கிறார்கள். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இதுதான் சிக்கல் ஏனெனில் பாம்பு தேவனுடைய வழி பொருத்தமற்றது என மாற்றி விட்டாள். சோதனைகாரன் கூற்றுபடி சாவதைப் பற்றி தேவனை தவறாக புரிந்து கொண்டார்கள் அல்லது விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை அவர்கள் புசிப்பதால் அவரைப்போல் மாறிவிடுவார்கள் என அவருக்கு நன்றாகத் தெரியும் எனவே தேவன் பொய்யுரைத்திருக்க வேண்டும்.

வாழ்வா அல்லது சாவா என்ற இரண்டு வழிகளை பாம்பு உணர்த்தியது அது கடுமையானதாக தோன்றியது. இரண்டில் ஒன்றுதான் என ஆதாம் தெய்வீக போதனையைப் பெற்றிருந்தும், சத்தியத்தை சொல்லும் தேவனைவிட ஏவாளின் வழியாக பாம்பின் வார்த்தையை கேட்க ஏவப்பட்டான். ஆதாமும் ஏவாளும் கனியை பறித்து புசித்தபோது விரும்பியே மரணத்தைத் தேர்வு செய்தனர் மானிடர்களுக்குள்ளேயும் இதே அடிப்படையான தேர்ந்தெடுப்பே எப்போதும் எதிர்கொண்டது வாழ்வா சாவா? எதைக் கொண்டிருப்போம் என்று தேர்வு செய்ய நம் ஒவ் வொருவரையும்

அழைக்கிறது. தேவன் தம் பிள்ளைகள் வாழ்வுக்கு வழிநடத்தும் தம் வசனங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புகிறார். வேதத்தில் காணும் பல உதாரணங்களைப் போலவே, சில சமயங்களில் அவரது கட்டளைகள் புரிந்து கொள்வதற்கு கடினமானதாகத் தெரியலாம்.

இஸ்ரவேலர்கள் வீட்டு வாசலின் நிலைக்காலில் இரத்தம் பூசப்பட்ட செய்து, உணவை

வீட்டிற்குள் பஸ்கா

ஆட்டுக்குட்டியைத்

தயார்

சாப்பிட வேண்டும். இந்த தெய்வீக ஆலோசனையை கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்வு வாக்களிக்கப்பட்டது, ஆனால் கீழ்ப்படியாதவர்களுக்கு தண்டனையாக மனிதர்களிலும், விலங்குகளிலும் தலைச்சன்கள் சாக வேண்டும் (காண்க யாத். 12:1-14, 28-30). மனிதப்பார்வையில் இது முழுக்க முழுக்க முட்டாள்தனமானதாக காணப்பட்டிருக்கும். இருப்பினும், இந்த எச்சரிப்பு உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டது: இரத்தத்தின் கீழ் இருந்து, பஸ்கா உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே கர்த்தரின் நியாயத்தீர்ப்புக்குத் தப்பினார்கள். இஸ்ரவேலர்கள் வெளியேறினபோது பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவன் அவர்களை சமுத்திரம் மட்டும் துரத்திச் சென்றான். அங்கு அவர்கள் தப்பிக்க வழியே இல்லாதபடி நெருக்கினான். மோசேயிற்கான தேவனுடைய கட்டளைகள்: கோலை நீட்டி, மக்களை சமுத்திரத்திற்கு நேரே நடக்கச் செய்வது. மீண்டும் ஒருமுறை வாழ்வா சாவா என்ற நிலை; ஆனால் இது ஒரு முரண்பாடான தீர்மானம்: மோசமான சமுத்திரத்திற்குள் நடப்பது நிச்சயமாக சாவாக காணப்பட்டது. ஆனால் அதுதான் உண்மையிலே வாழ்வில் வழியாய் இருந்தது. பார்வோனிடம் சரணடைந்து எகிப்துக்குத் திரும்பிச் செல்வது, வாழ்க்கையைக் காப்பாற்றுவது போல் காணப்பட்டிருக்கலாம், ஆனால் அது உண்மையிலேயே மரணத்தின் வழியாய் இருந்திருக்கும்.

இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்த நாட்டிற்கு செல்லும் முன், மோசே தன் பிரிவு பிரசங்கத்தில் அன்னிய தெய்வங்களைச் சேவிப்பதைக்குறித்து எச்சரிக்கிறார். ஒரு வேளை சோதனைக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்கள் சுதந்தரிக்கப் போகிற நாட்டிலிருந்து அழிக்கப்படுவார்கள் என்றார். மோசே பிரசங்கத்தின் முடிவுரையாக சொல்கிறார்;

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான் (உபா.30:19, 20).

கர்த்தரை நேசித்து, அவர் சத்தத்திற்கு செவிசாய்த்து, அவரை உறுதியாகப் பிடித்து, வாழ்வையும், ஆசீர்வாதத்தையும்; சாவுக்கும், சாபத்திற்கும் எதிராக தேர்வு செய்ய மக்கள் துரிதப் படுத்தப்பட்டனர். இப்படிச் செய்வதால் வாக்குத்தத்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படாமலும் சாவு, சாபத்திற்கு விலகி அதற்கு மாறாக நீடிய வாழ்வை அனுபவிக்கவும் இயலும். இது ஆதாம் ஏவாளின் அனுபவத்தை எதிரொலிக்கிறது. மோசே இஸ்ரவேலர் செய்யும்படி ஊக்கப்படுத்தியதற்கு, நேர் எதிராக அவர்கள் செய்தனர், தோட்டத்தின் நீண்ட வாழ்வையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க இயலாதவர்களாகி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்து சாபத்தையும் சாவையும் தேர்வுச் செய்தனர்.

இயேசு தம் ஊழியத்தில், வாழ்வுக்குச் செல்லும் இடுக்கமான வாசலைப் பற்றியும், அழிவுக்குச் (சாவுக்கு) செல்லும் அகலமான வாசல் பற்றியும் போதித்தார் (மத். 7:13, 14). "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக் கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை. தேவனுடைய கோபம் அவன் மேல் நிலைநிற்கும்" (யோவான் 3:36). கிறிஸ்துவை அனுப்பின தேவன் சொல்வதைக் கேட்டு, அவரை "விசுவாசிக்கிறவனுக்கு" நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் (யோவான் 5:24). இயேசுவே வாழ்விற்கு வழியாயிருக்கிறார் (யோவான் 14:6). ஆனால் விசுவாசிக்க மறுப்பவர்கள், தங்கள் பாவங்களிலேயே சாவார்கள். அவர் எங்கே போகிறாரோ அங்கே, உதாரணமாக பரலோகத்திற்குப் போக முடியாது (யோவான் 8:21,24).

வாழ்வையோ, சாவையோ தேர்வு செய்ய எதிர் கொள்ளும்போது நாம் வாழ்வையே தெரிந்தெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். இயேசு நமக்காக மரித்தார் எனவே நாம் இனி மரிக்கத் தேவையில்லை. எனவே அவருக்குள் வாழ்வைத் தேர்வு செய்வோமாக.

பெருமையின் பாவம் (3:5, 6)

தேவனுக்கு எதிரான அனைத்து வெளிப்படையான செயல்களுக்கும்

பெருமையே அடிப்படையான பாவமாக நிற்கிறதெனில் அது மிகையல்ல. எசேக்கியேல் 28:2ல் தீருவின் அரசர், "நான் தேவன், தேவர்களின் அரியணையில் அமருவேன்" என தன் இருதயத்தினை பெருமையினால் உயர்த்திக் கொண்டதனால், அவரை இகழும் வண்ணம் அவரை வைத்து வியத்தகு விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. எனினும் "உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப் போல் ஆக்கினாலும் நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல" என கூறப்பட்டுள்ளது. எசேக்கியேல் அவர்கள், இந்த புற இன அரசரை உயரிய அடையாள மொழியினை பயன்படுத்தி, தேவனைப் போன்று பேரறிவுள்ளவர்களாக வேண்டுமென பேராசை கொண்ட, ஏதேன் தோட்டத்தின் முதல் குடிகளை எடுத்துரைக்கிறார்.33 "நீ ஏதேனில் உருவாக்கப்பட்டாய் உன்னில் அநீதி காணப்படும் வரை உன் வழிகளில் நீ குற்றமற்றவனாய் இருந்தாய்"(எசே.28:13-15).

இந்த அரசரின் பெருமை கொண்ட இருதயத்தினை விளக்கும் விதமாக "உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று: உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்" (எசே.28:17). எனும் மற்றுமொரு அறிக்கையினை இத்தீர்க்கதரிசி தருகிறார். எனவே தேவன், ஏதேனில் இவருக்கிருந்த சிறப்பான இடத்தினை விட்டு, "உன்னை தரையிலே தள்ளிப் போடுவேன் ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்"; என இந்த நேர்மையற்ற அரசரின் மேல் தண்டனையை வருவித்தார். மேலும் இந்த அரசர் "கொலையுண்டு சாகிறவர்களைப் போல் கொலை" செய்யப்பட்டார் (எசே. 28:8; காண்க 28:10, 19).

இயேசு கூறினது போன்று இந்த உண்மையற்ற கூற்றே மனிதனை தொடக்கக் காலத்தில் வஞ்சித்தது (யோவான் 8:44 ஐ காண்க) மனித இனம் பெருமையினால் தங்களை உயர்த்தி, தேவனிடமிருந்து தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்துக் கொண்டு தங்கள் சொந்த வாழ்கையின் திட்டங்களை தாங்களே வரைந்துக் கொண்டனர். தங்கள் கீழ்ப்படி யாமைக்கான தண்டனையைக் குறித்த எவ்வித அச்சமில்லாமல், தீங்கு நிறை பாவங்களை செய்யலாமென நினைத்தனர். எப்படியாயினும் மனித இனத்தின் அனுபவங்கள் "உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்" (எண். 32:23) என்ற உண்மைக்கு மீண்டும் மீண்டும் சாட்சியாக இருக்கிறது. பாவத்தின் சம்பளமானது விடுதலையையும் வாழ்வையும் அளிக்காமல், எல்லா மனிதருக்கும் வந்தது போல (ரோமர் 5:12), பாடுகளையும் மரணத்தையும் (ரோமர் 6:23) அளிக்கிறது என்பதே மிகப் பெரிய சோகம்.

இறுதிக் குறிப்புகள்

Robert L, Alden, “øg;," in TWOT, 2:571, 2இக்கதையில் ஏறக்குறைய கடவுளாக கருதப்பட்ட அரசராகிய கில்காமேஷ். தனது முதுமை காலத்தில் இளமையாக மாற எண்ணி, ஒரு தாவரத்தை உண்ண கடலுக்கடியில் நெடும் பயணத்தை மேற்கொண்டு இல்லம் திரும்புகையில், ஆழம் நிறைந்த குளம் ஒன்றில் சற்று தன்னை குளிர்வித்துக் கொள்ள எண்ணினார். குளத்தின் குளுமையை சுகித்திருக்கும் சமயம் ஒரு பாம்பானது அத்தாவரத்தின் நறுமணத்தினால் ஈர்க்கப்பட்டு. அதனை பறித்துக் கொண்டு போய் தின்று விட்டது. அதன் விளைவாக அப்படைப்பானது தனது தோலை உரித்து புத்தெழுச்சிப் பெற்றது (கில்காமேஷ் புராணம் 11.263-296,) àசாலொமோனின் ஞானம் 2:23, 24 (NRSV). *Ronald B. Allen, “otny,” in TFOT, 2.697-98 5ரோமர் 5:12-19ல் பவுல் முதலில் பாவம் செய்ததாக ஆதாமின் மேல் குற்றஞ்சுமத்தினார். "தேவனுடைய மூல கட்டளையில் அம்மரத்தினை தொடக் கூடாதென்பது இணைக்கப்பட்டு இருந்திருக்கக்கூடும். ஆனால் அதன் ஆக்கியோன் வேண்டுமென்றே அதனை 3:3 வரை வெளிப்படுத்த தவிர்த்திருக்கிறார். எப்படியாயினும் ஏவாளின் பதில் செயலை விளக்குவது தேவனுடைய கட்டளையை மிகைப்படுத்துவது என கூறுவது இயல்பானதாகும். PRobert L Alden, “7}8ā," in TWOT, 1:18, sLudwig Koehler and Walter Baumgartnet, The Hebrew and Aramaic Lexicon of the Old Testament, study ed., trans, and ed. M. E. J. Richardson (Boston: Brill, 2001), 2:1083. “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே" (4:9) என்று கேட்கையில் தேவன் அதேப் போன்ற வினாவினை தான் காயீனிடம் கேட்டார். தனது இளைய உடன்பிறப்பை கொன்று அவரது உடலை மண்ணில் மறைப்பதன் மூலம் மூத்த உடன்பிறப்பு தனது பாவத்தை மூட முயற்சிப்பதனை தேவன் நன்கு அறிந்திருந்தார். எனவே தேவன் ஆபேலின் உடல் இருக்கும் இடத்தினை காயீன் ஒத்துக் கொள்ள மறுத்தப் போது என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது" (ஆதி. 4:10) என்று அவளிடம் கூறினார். 10Kenneth A. Mathews, Genesis 1-11:26, The New American Commentary, vol. 1A (Nashville: Broadman & Holman Publishers, 1996), 241.

+Victor P Hamilton, The Book of Genesis: Chapters !-17, The New International Commentary on the Old Testament (Grand Rapids, Mich: Wm B. Eerdmans Publishing Co. 1990), 194, 12H C. Leupold, Exposition of Genesis, vol. 1 (N.p.: Wartburg Press, 1942; reprint. Grand Rapids, Mich Baker Book House, 1953), 160, Targum of Palestine," in The Targums, trans. J W Etheridge (New York KTAV Publishing House, 1968), 166 இதன் கூடுதலாக ஜொசிபஸ் குறிப்பிடும் போது "தேவன் அவாது அடிகளைப் பயன்படுத்த முடியாதபடி செய்தார் "எனக்குறிப்பிட்டுள்ளார்" (ஜொசிபஸ் தொல்பொருட்கள் 1.1.4). 14Derek Kidner, Genesis: An Introduction and Commentary. The Tyndale Old Testament Commentaries (Downers Grove,ll: Inter-Varsity Press; 1967), 70 15Walter C Kaiser, “unt," in TWO7, 1:253 "Hamilton, The Book of Genesis: Chapters 1-17, 197, PH. D Preuss, “vy," in Theological Dictionary of the Old Testament, trans. David E. Green, ed. G. Johannes Botterweck and Helmer Ringgren (Grand Rapids, Mich, Wm. B. Eerdmans Publishing Co. 1980), 4:150, "இந்த வசனத்தை மொழிப்புரை செய்கையில், எருசலேம் ட்டார்கம் கூறுகையில், "எனினும் பெண்மணியின் பிள்ளைகளுக்கு ஒரு மருந்து உண்டு, ஆனால் பாம்பே உனக்கோ ஒரு மருந்தும் கிடையாது ஆனால் இவர்களுக்கு இவர்களின் குதிகாலிற்கு மெஷிஹா [மெசியா] அரசரின் காலத்தில் பரிகாரம் உண்டு." பாலஸ்தீன ட்டர்கமும் இதற்கு ஒத்தாற்போன்றதொரு கருத்தினையே கூறுகிறது. (The Targums, 166 ) sJack P. Lewis, “The Woman's Seed (Gen. 3:15)," Journal of the Evangelical Theological Society 34, no. 3 (September 1991): 319. William Sanford LaSor, "Prophecy, Inspiration, and Sensus Plenior." Tyndale Bulletin 29 (1978): 57.

2¹Gordon J. Wenham, "Genesis," in New Bible Commentary: 21" Century Edition, ed. G. J. Wenham, J. A. Motyer, D, A. Carson, and R. T. France (Downers Grove, IIl Inter-Varsity Press, 1994), 63, 22Victor P Hamilton, "ngrur," in TWO1, 2913 ≈Koehler and Baumgartner, 1:647, a4Mark S. Howell, 'Paradise Lost (Genesis 3 —4)," in Harding University Lectures (1991). 35, z:Jacob M Myers, “"Dress and Ornaments," in The Interpreter's Dictionary of the Bible, ed. George Arthur Buttrick (Nashville Abingdon Press, 1962), 1869 2"இந்த அறிக்கையில் பாவம் செய்த தூதர்கள் என்பது சேர்க்கப்படவில்லை (2 பேதுரு 2:4; யூதா 6), 7[lermann J. Austel, -“rry," in TWOT, 2:927–28, Mathews, 257 2பல காலத்திற்கு பிறகு, ஆசரிப்பு கூடாரம் மற்றும் தேவாலயத்தின் வாயில்கள் கிழக்கு திசையில் இருந்தது. d°பழங்கால கிழக்கு பகுதியில் அரமனைகளையும் ஆலயங்களையும் பாதுகாக்க கலப்பின உயிரினங்களின் சிலைகள் பயன்படுத்தப்பட்டது. இச்சிலைகள் மனித முகம், கழுகின் சிறகுகள், எருது அல்லது சிங்கத்தின் உடல்களைக் கொண்டிருந்தது. (See David L Roper, Revelation 12-22, Truth for Today Commentary (Searcy, Ark Resource Publications, 2002], 435) காண்க. மேலும் பழங்கால கிழக்கு பகுதியின் சித்திரங்களில் சிறகுகளுள்ள உயிரினங்கள் ஒரு புனிதமான மரத்தினை பாதுகாப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். (See John H. Walton, "Genesis," in Zondervan Illustrated Bible Backgrounds Commentary, vol. 1, Genesis, Exodus Leviticus Numbers Deuteronomy, ed. John H. Walton [Grand Rapids, Mich... Zondervan,2009) 2, 3, 37)

11எண்ணாகமம் 22:23, 31, 33 ல் ஒரு தேவதூதன் பட்டயத்தோடு பிலேயாமுடைய கழுதையின் பாதையை மறித்தார்.உபாகமம் 32:41, 42 ல் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் எதிரிகளை பழி தீர்க்கும் விதத்தையும் குறிப்பிடுகையில் ஒரு ஒளிரும் பட்டயத்தைக் குறித்து குறிப்பிடுகிறது. 2மூல கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் தற்போதைய வேதாகமத்தில் காணப்படுவது போன்று அதிகாரங்கனாக பிரிக்கப்பட்ட பகுதிகள் காணப்படுவதில்லை. யோவான் 2:23-25 ல் காணப்படுகிற சிந்தனைகள் யோவான் 3 அதிகாரத்திலும் தொடருகிறபடியினால், யோவான் குறிப்பிடுகிற இந்த நிக்கொதேமு என்பவர் எகுசலேமில் வாழ்ந்த யூதர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தாரென்பதில் ஐயமில்லை. இயேசுவை அவர் செய்த வியத்தகு செயல்களினிமித்தம் அவர் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் என்பதனை விசுவாசித்தார். ஆனால் இங்கு இயேசுவிற்கு தம்மை அர்ப்பணித்து மறுபிறப்படைவதனை அவர் விசுவாசிக்க விருப்பமற்று இருந்தப்படியினால் அவர் மீட்படையும் விசுவாசத்தினை கொண்டிருக்கவில்லை (யோவான் 3:1-5), தேவனைப் போன்று மாற வேண்டுமெனும் ஆவல் ஏசாயாவிலும் 14:4-23ல் காணப்படுகின்றது. அங்கே ஏற்னெவே குறிப்பிட்டிருப்பதனை போன்று பழங்கால கிழக்குப் பகுதியினை தனது கொடூர முறையினால் கைப்பற்றிய பாபிலோனிய அரசரைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. பெருமையினாலும் தனது முரடான சிந்தனையினாலும், உன்னதமான அரியணைக்கு "தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக" ஏறினார்: என் சிங்காசனத்தை உயர்த்துவேன் "ஆனாலும் அவள் அந்த உயரத்திலிருந்து விழுந்து அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோவான்" (ஏசாயா 14:13, 15).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.