31 அதிகாரம்

31 அதிகாரம்

மோசே பரிசுத்த பர்வதத்தில், நாற்பதுநாள் இரவும் பகலும் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக இருக்கிறார். கர்த்தர் மோசேயோடு சொன்ன வார்த்தைகளெல்லாம் இந்த அதிகாரத்திலும், இதற்கு முந்திய ஆறு அதிகாரங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் மோசேயோடு மேலும் சில காரியங்களை சொல்லியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

ஆசரிப்புக்கூடாரத்தை செய்வதற்கும், அதிலுள்ள பணிமுட்டுக்களை செய்வதற்கும் கர்த்தர் ஒரு சிலரை விசேஷமாய்த் தெரிந்தெடுக்கிறார் (யாத் 31:1#11).

கர்த்தர் ஓய்வுநாள் பிரமாணத்தை இங்கு மறுபடியுமாய்ச் சொல்லுகிறார் (யாத் 31:12#17). கர்த்தர் மோசேயிடம் சாட்சியின் இரண்டு பலகைகளைக் கொடுக்கிறார் (யாத் 31:18).

பெசலெயேலும் அகோலியாபும்

யாத் 31:1#11

யாத் 31:1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

யாத் 31:2. நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்- அழைத்து,

யாத் 31:3. விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,

யாத் 31:4. இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

யாத் 31:5. மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.

யாத் 31:6. மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோ-யாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள்.

யாத் 31:7. ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

யாத் 31:8. மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

யாத் 31:9. தகனப-பீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

யாத் 31:10. ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

யாத் 31:11. அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்கக்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்ய வேண்டும் என்றார்.

ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு சில வேலைகளை மிகவும் நுணுக்கமாக செய்யவேண்டும். ஆசரிப்புக்கூடாரத்திற்காக ஜனங்கள் பொருட்களை காணிக்கையாக கொண்டு வருகிறார்கள். அந்தப் பொருட்களை வைத்து ஆசரிப்புக்கூடாரத்தையும், பரிசுத்த பணிமுட்டுக்களையும் செய்யவேண்டும்.

மோசே எகிப்து தேசத்தில் பார்வோனுடைய அரண்மனையில் நாற்பது வருஷங்களாகயிருந்தார். மோசே எகிப்தியரின் சாஸ்திரங்களையெல்லாம் கற்று அறிந்திருந்தார். ஆனாலும் அவருக்கு மெல்லிய நூலினால் பின்னுகிற வேலையோ அல்லது வெண்கல வேலைகளோ, பொன்னிலே கற்களை பதிக்கும் வேலைகளோ தெரியாது.

இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே விநோதமான வேலைகளை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல வருஷங்களாக எகிப்து தேசத்திலே அடிமைகளாகயிருந்தவர்கள். அங்கே அவர்களுக்கு மண் மிதிக்கும் வேலையும், செங்கல் செய்யும் வேலையும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு பொன்வேலையோ, இரும்பு வேலையோ செய்யத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களில் சிலர் ஞானஇருதயமுள்ளவர்களாயிருக்கிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும் நூதன வேலைகளை செய்வதற்கு விசேஷித்த ஞானத்தைக் கொடுக்கிறார்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே அடிமைகளாயிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பொற்கொல்லர்களோ, மரத்தச்சர்களோ, இரும்பு வேலை செய்கிற கொல்லர்களோ ஒருவருமில்லை. அவர்கள் எல்லோரும் செங்கல் வேலைகளையும், கட்டிடம் கட்டுகிற வேலைகளையும் செய்கிறவர்கள்.

இஸ்ரவேல் புத்திரருக்கு விநோதமான வேலைகளை செய்ய தெரியாவிட்டாலும், கர்த்தர் சர்வஞானமுள்ளவராகயிருக்கிறார். அவர் இந்த வேலைகளை செய்வதற்கு போதுமானவராயிருக்கிறார். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரில் ஒரு சிலரை விநோதமான வேலைகளை செய்வதற்கு தெரிந்தெடுத்து அவர்களுடைய இருதயத்திலே ஞானத்தை அருளுகிறார். அவர்கள் கர்த்தருக்கு சித்தமான வேலைகளை நேர்த்தியாய்ச் செய்கிறார்கள்.

கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்- அழைக்கிறார் (யாத் 31:2).

கர்த்தர் பெசலெயேலை விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்புகிறார் (யாத் 31:3#5).

பெசலெயேல் யூதாகோத்திரத்தைச் சேர்ந்தவன். யூதாகோத்திரத்தார் கர்த்தருக்கு பிரியமானவர்கள். அந்த கோத்திரத்தாரை உயர்த்துவதும், மேன்மைப்படுத்துவதும் கர்த்தருக்கு பிரியமாயிருக்கிறது. பெசலெயேல் ஊருடைய பேரன்.

இஸ்ரவேல் ஜனத்தார் அமலேக்கியருக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். மோசேயின் கை தாழ்ந்துவிடாதவாறு ஆரோனும், ஊரும் அவருடைய கையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள் (யாத் 17#ஆவது அதிகாரம்). பெசலெயேலின் தாத்தாவாகிய ஊரும், மோசேயின் கையை தாங்கிப்பிடித்த ஊரும் ஒரே நபராக இருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவர் மோசேயின் சகோதரியாகிய மிரியாமின் கணவர் என்று யோசபஸ் என்னும் சரித்திர ஆசிரியர் சொல்லுகிறார்.

ஆசரிப்புக் கூடாரத்தை தம்முடைய திட்டத்தின்படி செய்வதற்குத் தேவன் ஒருசிலரைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தம்முடைய ஆவியினால் நிரப்புகிறார். (யாத் 31:3#6; யாத் 28:3; யாத் 35:31). பெசலெயேலை உலோக வேலை, கல்வேலை, மரவேலை ஆகியவற்றைச் செய்வதற்கும், (யாத் 31:1#5; யாத் 37:1,29), அகோலியாபை துணி நெசவு சம்பந்தமான வேலை செய்வதற்கும் (யாத் 31:6; யாத் 35:35; யாத் 38:23) தேவன் தம்முடைய ஆவியினால் நிரப்புகிறார்.

கர்த்தர் விநோதமான வேலைகளை செய்வதற்கு அகோலியாபையும் தெரிந்தெடுக்கிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோ-யாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் செய்வார்கள்'' (யாத் 31:6) என்று சொல்லுகிறார்.

அகோலியாப் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரில் தாண் கோத்திரத்தார் மிகவும் சாதாரணமானவர்கள். இவர்கள் யூதாகோத்திரத்தையும், லேவி கோத்திரைத்தையும்போல மிகவும் முக்கியமான கோத்திரத்தார் அல்ல. ஆனாலும் கர்த்தர் தாண் கோத்திரத்திலுள்ள அகோலியாபை, விநோதமான வேலைகளை செய்வதற்கு தெரிந்தெடுக்கிறார்.

சாலொமோன் தேவாலயம் கட்டியபோது ஈராம் என்பவன், சகல வேலைகளுக்கும் தலைவனாயிருந்தான். ஈராமும் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.

""அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூ-லும் இளநீலநூ-லும் மெல்-ய நூ-லும், சிவப்பு நூ-லும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்'' (2நாளா 2:14).

கர்த்தர் பெசலெயேலை பெயர் சொல்லி அழைத்து, அகோலியாபை அவனுக்கு துணையாக கூட்டினதுபோல, விநோதமான வேலைகளை செய்வதற்கு மேலும் சிலரையும் பயன்படுத்துகிறார். கர்த்தர் ஞானஇருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளுகிறார். கர்த்தர் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்கிறார்கள் (யாத் 31:6).

தம்முடைய விசேஷித்த ஊழியத்தை செய்வதற்கு கர்த்தர் யாரை தெரிந்தெடுக்கிறாரோ அவர்களை தம்முடைய ஆவியினால் நிரப்புகிறார். அவர்களுடைய இருதயங்களிலே ஞானத்தை அருளுகிறார்.

ஒரு சிலருக்கு ஒரு சில கலைகளில் விசேஷித்த திறமையிருக்கும். கர்த்தரே அந்த திறமைகளை தம்முடைய கிருபையினால் பயன்படுத்துகிறார். கர்த்தர் அவர்களுடைய இருதயத்தில் ஞானத்தை அருளுகிறார். அப்போது அவர்களுடைய விசேஷித்த திறமைகள் வெளிப்படுகிறது.

நாம் கர்த்தரிடத்திலிருந்துதான் ஞானத்தையும், அறிவையும், விசேஷித்த திறமைகளையும் பெற்றுக்கொள்கிறோம். கர்த்தருடைய தயவினால் நம்முடைய ஞானமும் அறிவும், திறமையும் வளம் பெறுகிறது.

கர்த்தர் தொழில் செய்கிறவர்களுக்கு, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை போதிக்கிறார். அதுபோலவே, கர்த்தர் விவசாய வேலைகளை செய்கிறவர்களுக்கும், விசேஷித்த பயிற்சி கொடுக்கிறார்.

""அவன் அதை மேலாக நிரவின பின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்'' (ஏசா 28:25,26).

கர்த்தர் தம்முடைய வரங்களை, தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக மனுபுத்திரருக்கு பகிர்ந்து கொடுக்கிறார். கர்த்தர் ஒரு சிலருக்கு ஒரு சில வரங்களையும், வேறு சிலருக்கு வேறு வரங்களையும் கொடுக்கிறார். இந்த வரங்கள் எல்லாமே கர்த்தருடைய சபையின் நன்மைக்காகவும், மனுக்குலத்தின் பொதுவான நன்மைக்காகவும் பிரயோஜனமாயிருக்கும்.

இஸ்ரவேல் புத்திரரை ஆளுகை செய்வதற்கு மோசே தகுதியானவர். ஆனாலும் பெசலெயேலே ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுவதற்கு விசேஷித்த ஞானத்தைப் பெற்றிருக்கிறார்.

கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்காக யாரை அழைக்கிறாரோ, அவர்களை அந்த ஊழியத்தை செய்வதற்கு தகுதிப்படுத்தவும் செய்கிறார். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே பிரயாணம் செய்கிறார்கள். அங்கே கர்த்தருக்கு வாசஸ்தலமாக ஒரு கூடாரம் போடவேண்டும் என்பதும், அந்தக் கூடாரத்தில் பரிசுத்த பணிமுட்டுக்களை செய்து வைக்கவேண்டும் என்பதும் கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும், மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும், தகனப-பீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், செய்யவேண்டும்'' (யாத் 31:7#9) என்றும்,

""ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்கக்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்ய வேண்டும்'' (யாத் 31:10,11) என்றும் சொல்லுகிறார்.

பொன்வேலைகளை செய்பவர்களும், வெள்ளி வேலைகளை செய்கிறவர்களும், வெண்கல வேலைகளை செய்கிறவர்களும் கர்த்தருக்கு பரிசுத்தமான பணிமுட்டுகளை செய்கிறார்கள். கர்த்தர் அவர்களை தம்முடைய ஆவியினால் நிரப்புகிறார். அவர்களுடைய இருதயத்தில் ஞானத்தை அருளுகிறார். அவர்கள் கர்த்தர் செய்ய சொன்ன வேலைகளை நேர்த்தியாய்ச் செய்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய அப்போஸ்தலர்களை சுவிசேஷ ஊழியத்திற்காக அனுப்பியபோது, அவர்கள்மீது தம்முடைய பரிசுத்த ஆவியானவரை ஊற்றினார். அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை மனுஷர் மத்தியிலே பிரசங்கிக்கவேண்டும்.

கர்த்தருடைய மகிமையான காரியங்களை அப்போஸ்தலர்கள் அந்நிய பாஷைகளினால் பேசி, கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். சுவிசேஷத்தின் கூடாரத்தை கட்டியெழுப்பும் ஊழியமே அப்போஸ்தலரின் ஊழியம். அவர்கள் இரும்பினாலோ, பொன்னினாலோ, வெள்ளியினாலோ சுவிசேஷத்தின் கூடாரத்தை கட்டியெழுப்பாமல், மனுஷருடைய இருதயங்களில், சுவிசேஷத்தின் கூடாத்தை கட்டியெழுப்பினார்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, தம்முடைய ஊழியக்காரர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வரங்களை பகிர்ந்துகொடுக்கிறார். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற வரங்களை அவருடைய நாமமகிமைக்காகவும், அவருடைய பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்.

""கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்'' (எபி 9:11,12).

ஓய்வுநாள்

யாத் 31:12#17

யாத் 31:12. மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:

யாத் 31:13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

யாத் 31:14. ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக: அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.

யாத் 31:15. ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

யாத் 31:16. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.

யாத் 31:17. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டும். அது அவர்களுக்கு பரிசுத்தமானது. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு மற்ற பிரமாணங்களை கொடுப்பதற்கு முன்பாகவே, ஓய்வுநாள் பிரமாணத்தை பற்றி சொல்லியிருக்கிறார். இந்தப் பிரமாணத்தை அவர்கள் பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கு கர்த்தர் அவர்களை இதுவரையிலும் ஆயத்தம் செய்து வந்திருக்கிறார்.

""அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளை மட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றார்'' (யாத் 16:23).

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு சொன்ன நீதிநெறியின் பிரமாணத்திலும் ஓய்வுநாளை பற்றிய பிரமாணம் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு சொன்ன பத்துக்கட்டளைகளில் ஓய்வுநாளைப்பற்றிய கட்டளை நான்காவது கட்டளையாகும்.

""ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக'' (யாத் 23:12).

கர்த்தர் இப்போது இஸ்ரவேல் புத்திரருக்கு ஆராதனை சம்பந்தமான பிரமாணத்தைச் சொல்லுகிறார். ஆராதனையின் ஒரு பகுதி ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்பதாகும்.

கர்த்தர் மோசேயினிடத்தில், ""நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்'' (யாத் 31:11,12) என்று சொல்லுகிறார்.

இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்காதவர்களுக்கு கர்த்தர் தண்டனையும் சொல்லுகிறார்.

கர்த்தர் மோசேயை நோக்கி, ""ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக: அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலை செய்கிறவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்'' (யாத் 31:14,15) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் எல்லோருக்கும் வேலைகளை நியமித்திருக்கிறார். கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வேலைகளை அவர்கள் நேர்த்தியாகவும், விரைவாகவும் செய்யவேண்டும். ஒருவரும் சோம்பேறியாகயிருக்கக்கூடாது. இஸ்ரவேல் ஜனத்தார் அதிவேகமாக, அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்வது கர்த்தருடைய சித்தமல்ல. கர்த்தர் நியமித்திருக்கிற வேகத்திற்குட்பட்டு அவர்கள் வேலை செய்யவேண்டும்.

இஸ்ரவேல் ஜனத்தார் ஆறுநாளும் வேலை செய்யவேண்டும் என்பது கர்த்தருடைய திட்டம். அவர்கள் ஏழாம் நாளிலே வேலை செய்யவேண்டியதில்லை. அந்த நாள் அவர்களுக்கு பரிசுத்தமான நாள். அவர்கள் ஏழாம் நாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஆசரிப்புக்கூடாரத்தை உண்டுபண்ணுகிறார்கள். இது கர்த்தருடைய ஊழியம். ஆசரிப்புக்கூடாரத்தில் வேலைசெய்கிறவர்களும், அதில் பயன்படுத்தப்படும் பணிமுட்டுக்களை செய்கிறவர்களும் ஆறுநாட்களுக்கு வேலை செய்தால் போதுமானது. ஏழாம் நாளிலே அவர்கள் வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கவேண்டும். அந்த ஓய்வுநாளை அவர்கள் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்.

கர்த்தர் ஓய்வுநாளைப்பற்றி மோசேக்கு சொல்லும்போது, ""இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்'' (யாத் 31:16,17) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஓய்வுநாளை பரிசுத்தப்படுத்தி அதைக் கனம்பண்ணுகிறார். கர்த்தர் பரிசுத்தப்படுத்தும் ஓய்வுநாள் நமக்கும் பரிசுத்தமானதாயிருக்கிறது. கர்த்தர் பரிசுத்தமாக்கின ஓய்வுநாளை நாம் பரிசுத்தக்குலைச்சலாக்கக்கூடாது. கர்த்தர் மோசேயிடம் ஓய்வுநாளைப்பற்றி பல காரியங்களை சொல்லுகிறார்.

ஓய்வுநாள் கர்த்தருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கிறது (யாத் 31:13,17). கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை மற்ற ஜாதியாரிடமிருந்து வேறுபிரித்து, அவர்களை தமக்கு சொந்த ஜனமாக அங்கீகரித்து, அவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.

ஓய்வுநாள் மற்ற நாட்களிலிருந்து வேறுபிரிக்கப்பட்டு கர்த்தருக்கு பரிசுத்தநாளாயிருக்கிறது. இஸ்ரவேல் ஜனத்தார் மற்ற ஜாதியாரிடமிருந்து வேறுபிரிக்கப்பட்டு கர்த்தருக்கு பரிசுத்த ஜனமாயிருக்கிறார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை பரிசுத்தப்படுத்தி, தம்மை சேவிப்பதற்காக அவர்களை வேறுபிரித்திருக்கிறார். இவையெல்லாவற்றிற்கும் ஓய்வுநாள் அடையாளமாயிருக்கிறது.

இஸ்ரவேல் புத்திரருக்கு ஓய்வுநாள் பரிசுத்தமானது (யாத் 31:14). இஸ்ரவேல் ஜனத்தாருடைய நன்மைக்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் கர்த்தர் ஏழாம் நாளை ஓய்வுநாளாக பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். ஓய்வுநாள் மனுஷருக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வுநாள் கர்த்தருக்கு பரிசுத்தமானது. இந்த நாள் மற்ற நாட்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஓய்வுநாளிலே நாம் உலகப்பிரகாரமான வேலைகளில் ஈடுபடாமல், கர்த்தரை கனம்பண்ணுவதிலும், அவருக்கு சேவை செய்வதிலும் நம்முடைய நேரத்தை செலவு செய்து, அதை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை தங்கள் தலைமுறைதோறும் நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கவேண்டும் (யாத் 31:16). அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பாகவே கர்த்தர் அவர்களுக்கு ஓய்வுநாள் பிரமாணத்தைக் கொடுக்கிறார். அவர்களுடைய பின்சந்ததியார், கானான் தேசத்திற்குள் பிரவேசித்த பின்பும், அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும்.

ஒரு பொக்கிஷத்தை நாம் பத்திரமாக வைத்திருப்பதுபோல, இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டும் (யாத் 31:13,14,16). கர்த்தர் ஓய்வுநாள் பிரமாணத்தை, ஒரு பொக்கிஷத்தை ஒப்படைப்பதுபோல, இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பத்திரமாக ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

கர்த்தர் தம்முடைய தெய்வீக அதிகாரத்தினால் இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய கட்டளைகளை கொடுக்கிறார். இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவேண்டும். கர்த்தருடைய கட்டளைக்கு தாங்கள் ஏன் கீழ்ப்படியவேண்டும் என்று அவர்கள் கர்த்தரிடத்தில் விவாதம்பண்ணவும் கூடாது. விளக்கம் கேட்கவும் கூடாது. ஆனாலும் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதில், கர்த்தரே அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17).

ஓய்வுநாள் பிரமாணத்தை மீறுகிறவர்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுப்பதாகவும் சொல்லுகிறார். ஓய்வுநாளை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் என்றும், அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்றும் (யாத் 31:14) கர்த்தர் சொல்லுகிறார். மேலும் ஓய்வுநாளிலே வேலை செய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார் (யாத் 31:15).

கர்த்தர் ஓய்வுநாளைப்பற்றி சொல்லியிருக்கிற பிரமாணம் இஸ்ரவேல் புத்திரரோடு தொடர்புடையது. கர்த்தர் ஓய்வுநாள் பிரமாணத்தை இஸ்ரவேல் புத்திரருக்கு பிரத்தியேகமாக சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

1. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கூறுவாயாக. (யாத் 31:13).

2. நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்.

3. இது எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

4. இது உங்கள் தலைமுறைதோறும் அடையாளமாயிருக்கும்.

5. உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி இதை ஆசரிக்க வேண்டும்.

6. உங்களைக் கர்த்தர் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.

7. நீங்கள் ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக. (யாத் 31:14).

8. அது உங்களுக்குப் பரிசுத்தமானது.

9. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். (யாத் 31:16).

10. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்க வேண்டும்.

11. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். (யாத் 31:17).

மேலே கூறப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் இஸ்ரவேல் புத்திரரோடு தொடர்புடையது. இதன் மூலமாக ஓய்வுநாள் பிரமாணத்திற்கும், புறஜாதியாருக்கும், புதிய ஏற்பாட்டுச் சபையாருக்கும், சம்பந்தமில்லை என்று தெரியவருகிறது.

ஓய்வுநாள் தேவனுக்கும், இஸ்ரவேலுக்கும் ஓர் அடையாளம் என்று நான்கு முறை கூறப்பட்டிருக்கிறது. (யாத் 31:13,17; எசே 20:12,20). பழைய உடன்படிக்கை ஒழிந்துபோனபோது, அதன் அடையாளமும் ஒழிந்துபோயிற்று. தேவன் இதை முன்னறிவித்து, (ஏசா 1:13; ஓசி 2:11) இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றினார். (ரோமர் 10:4; 2கொரி 3:6#15; கலா 3:19#25; கலா 4:21#31; எபே 2:14#16; கொலோ 2:14#17; எபி 7:10).

ஓய்வுநாள் உடன்படிக்கையின் அடையாளம் மட்டுமல்ல. புறஜாதியாருக்கு இது சாட்சியாகவும் இருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வேறுபிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த உலகத்திற்குள் மேசியா வருவதற்கு இவர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியாக இருக்கிறார்கள். இந்த வாக்கியத்தில் பரிசுத்தப்படுத்துதல் என்பதற்கு தேவனுடைய அழைப்பிற்காக வேறுபிரிக்கப்படுதல் என்று பொருள்.

""ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக'' என்று கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லுகிறார். ஒருகுறிப்பிட்ட நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டுமென்று புறஜாதியாருக்கோ, அல்லது புதிய ஏற்பாட்டுச் சபையாருக்கோ கட்டளை கொடுக்கப்படவில்லை (ரோமர் 14:5#6; கலா 4:9#11). புதிய ஏற்பாட்டுப் பிரமாணத்தில் யூதரும், புறஜாதியாரும் எல்லா நாட்களையும் பாவம் செய்யாமல், பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட நாளும் யாரையும் பாவியாக்காது. ஒருவனுடைய பாவகிரியையே அவனைப் பாவியாக்குகிறது. (1யோவான் 3:4).

""அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்'' என்று கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லுகிறார். ஓய்வுநாளில் விறகு பொறுக்குகிறவன் கல்லெறிந்து கொல்லப்படக்கடவன். (எண் 15:32#36) புதிய ஏற்பாட்டுப் பிரமாணத்தில் எல்லா நாளிலும் வேலை செய்யலாம். எல்லா நாளிலும் கர்த்தரை ஆராதிக்கலாம். (ரோமர் 14:4#5; கலா 4:9#11; கொலோ 2:14#17).

""ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். புதிய ஏற்பாட்டில் ஓய்வுநாள் பிரமாணம் கட்டளையாகக் கூறப்படவில்லை. ஓய்வுநாளைப் பற்றிக் கூறப்பட்டாலும், ஒரே கிழமை எல்லா வருஷத்திலும் ஓய்வுநாளாக வராது. தேவன் சனிக்கிழமையில் ஓய்ந்திருந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. (ஆதி 2:3#4). தேவன் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார் என்று மட்டுமே வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அது என்ன கிழமையில் என்று கூறப்படவில்லை. புதிய ஏற்பாட்டுச்சபையில் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையைக் கிறிஸ்தவ விசுவாசிகள் ஓய்வுநாளாக ஆசரித்து, அதைப் பரிசுத்தப் படுத்தி, அன்றைய தினத்தில் சபையாகக் கூடிவந்து, கர்த்தரைத் துதிக்கிறார்கள்.

""அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்'' (யாத் 31:17) என்றும் கர்த்தர் சொல்லுகிறார். இந்த வசனத்தில் ""என்றைக்கும்'' என்று கூறப்பட்டிருப்பதினால் இந்தப் பிரமாணம் ""இன்றைக்கும்'' புதிய ஏற்பாட்டுச் சபையாரைக் கட்டுப்படுத்தும் என்று பொருள்கூறக்கூடாது. மோசேயின் பிரமாணம் நித்தியமானது என்றும், ஆகையினால் அதைப் புதிய ஏற்பாட்டுச் சபையாரும் கடைபிடிக்க வேண்டுமென்றும் கூறுவது தவறான உபதேசம்.

மோசே ஓய்வுநாள் பிரமாணத்தை மட்டுமல்ல, அவர்கள் பலிகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் விசுவாசிகள் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்றால், மோசேயின் பிரமாணத்தின் பிரகாரம் புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் இப்போதும் பலிகளைச் செலுத்தி, பல்வேறு சடங்குகளையும் நிறைவேற்ற வேண்டியது வரும். மோசேயின் பிரமாணம் ஒழிந்து போயிற்று. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குக் கிறிஸ்துவின் புதிய பிரமாணம் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். (ஆதி 1:1#2) கர்த்தருடைய சிருஷ்டிப்பின் கிரியை நிறைவேறிற்று. ஆகையினால், அவர் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார். அவருடைய கிரியைகள் நிறைவேறவில்லையென்றால், அவர் ஏழாம் நாளிலும்கூட கிரியை செய்திருப்பார். தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து மூலமாக கர்த்தர் ஓய்வுநாளைப் பற்றி தெளிவாக உபதேசம் பண்ணியிருக்கிறார். (மத் 12:1#8; மாற்கு 2:23#3:5; லூக்கா 13:10#17; யோவான் 5:1#16; யோவான் 9:1#41). கர்த்தர் ஓய்வுநாளில் பூரித்தார் (யாத் 31:17= யாத் 23:12; 2சாமு 16:14).

சாட்சியின் இரண்டு பலகைகள்

யாத் 31:18

யாத் 31:18. சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விர-னால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

சீனாய்மலையில் மோசே நாற்பது நாள் உபவாசம்பண்ணி முடிந்தபின்பு. (யாத் 24:12#18; உபா 9:9#18) ஆசரிப்புக் கூடாரம் (யாத் 25:1#27:21; யாத் 30:1#21) ஆசாரியத்துவம், வஸ்திரங்கள், ஊழியங்கள் (யாத் 28:1#29:46), அபிஷேகத்தைலம், தூபவர்க்கங்கள் (யாத் 30:22#38), விசித்திரவேலை செய்கிறவர்கள் (யாத் 31:1#11), ஓய்வுநாளைப் பற்றிய புதிய கட்டளைகள் (யாத் 31:12#18) ஆகியவற்றைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட பின்பு. சீனாய் மலையிலிருந்து ஆறாம் முறையாகக் கீழே இறங்கி வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். (யாத் 19:3).

மோசே சீனாய் மலையிலே, கர்த்தருடைய சமுகத்திலே நாற்பதுநாள் இரவும் பகலும் இருக்கிறார். கர்த்தர் மோசேயோடு பேசி முடித்த பின்பு, இரண்டு பலகைகளை அவரிடத்தில் கொடுக்கிறார். இவை தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளாகும்.

கர்த்தர் சொன்ன பத்துக்கட்டளைகள் இந்தப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் சீனாய் மலையிலிருந்து பத்துக்கட்டளைகளை சொன்னபோது, அதை இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் கேட்டார்கள். தாம் சொன்ன பத்துக்கட்டளைகளை, கர்த்தர் இப்போது தம்முடைய விரலினால் இரண்டு கற்பலகைகளில் எழுதி, அதை மோசேயினிடத்தில் கொடுக்கிறார்.

எழுதப்பட்டது சீக்கிரத்தில் அழிந்துபோகாமல் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடைய கட்டளைகளை காகிதத்தில் எழுதாமல் கற்பலகைகளில் எழுதியிருக்கிறார். கர்த்தருடைய கட்டளைகளெல்லாமே இஸ்ரவேல் புத்திரருக்கு நித்திய கட்டளைகளாயிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறை தோறும், கர்த்தருடைய கட்டளைகளை நினைவுகூர்ந்து, அவற்றை கைக்கொள்ளவேண்டும்.

கர்த்தர் பத்துக்கட்டளைகளையும் இரண்டு கற்பலகைகளில் எழுதியிருக்கிறார். காகிதத்தில் எழுதப்பட்டதைவிட, கற்பலகைகளில் எழுதப்பட்டது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்.

யாத் 24:12 ஆவது வசனத்தில் தேவன் மோசேயை நோக்கி ""நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளைக் கொடுப்பேன்'' என்று கூறினார்.

கர்த்தர் தம்முடைய கட்டளைகளை எழுதுவதற்கு எழுத்தாணியை பயன்படுத்தவில்லை. கர்த்தருடைய கட்டளைகள் தேவனுடைய விரலினால் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய சித்தத்தினாலும் வல்லமையினாலும், தம்முடைய கட்டளைகளை, கற்பலகைகளில் எழுதியிருக்கிறார்.

""தேவனுடைய விரல்'' என்னும் வாக்கியம் மிகவும் விசேஷமானது. தானி 5:5,24; யோவான் 8:6 ஆகிய வசனங்களைப் போல இதைப் பிரத்தியட்சமான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தேவனுடைய வல்லமையைக் குறிக்கும் என்று இதற்கு உருவகப் பொருள் கூறுவதற்கு வாய்ப்பில்லை. (யாத் 8:19; லூக்கா 11:20). தேவன் தம்முடைய விரலினால் இந்தக் கற்பலகைகளை எழுதினார். தேவனுக்குக் கைகளும், விரல்களும் உள்ளன (யாத் 24:12; யாத் 31:18; யாத் 32:14#15; யாத் 34:27#28; உபா 5:22; உபா 9:10; 2கொரி 3:6).

கர்த்தருடைய ஆவியானவரே, தம்முடைய கட்டளைகளை மனுஷருடைய இருதயங்களில் எழுதுகிறார்.

""ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்'' (2கொரி 3:3,4).

கர்த்தர் தம்முடைய பத்துக்கட்டளைகளையும் ஒரே பலகையில் எழுதாமல், இரண்டு பலகைகளில் எழுதியிருக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருக்கவேண்டும் என்பதும், மனுஷர்மீது அன்புள்ளவர்களாயிருக்கவேண்டும் என்பதும் இதற்கு அடையாளம். நாம் கர்த்தருக்கு செய்ய வேண்டிய ஊழியத்தையும் செய்யவேண்டும். மனுஷருக்கு செய்யவேண்டிய கடமைகளையும் செய்யவேண்டும்.

கர்த்தர் மோசேயிடம் கொடுத்த பலகைகள் சாட்சியின் பலகைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பலகைகளில் கர்த்தருடைய சித்தம் சாட்சியாக எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர்மீது அன்பாகயிருக்கிறார் என்பதற்கும், கர்த்தர் அவர்களுக்கு நன்மை செய்வார் என்பதற்கும் கற்பலகைகளில் எழுதப்பட்டிருக்கிற வாக்கியங்கள் சாட்சியாயிருக்கிறது.

இஸ்ரவேல் ஜனத்தார் இந்தப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிற கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லையென்றால், அந்த வார்த்தைகள் அவர்களுக்கு விரோதமாக சாட்சியாயிருக்கும். ஆகையினால் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளும், சாட்சியின் பலகைகள் என்று அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.