30 அதிகாரம்

30 அதிகாரம்

யாக்கோபின் குடும்பம் விருத்தியடைகிறது. அவருக்கு மேலும் எட்டு பிள்ளைகள் பிறக்கிறார்கள் (ஆதி 30:1#24). யாக்கோபுடைய ஆடுகளின் எண்ணிக்கையும் விருத்தியடைகிறது. அவர் லாபானோடு பேரம் பேசுகிறார் (ஆதி 30:25#34). யாக்கோபு லாபானுக்கு மேலும் ஆறு வருஷங்கள் வேலை செய்கிறார். கர்த்தர் யாக்கோபை அற்புதமாக ஆசீர்வதிக்கிறார். யாக்கோபு விருத்தியடைகிறார் (ஆதி 30:35#43).

யாக்கோபும் ராகேலும்

ஆதி 30:1#13

ஆதி 30:1. ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

ஆதி 30:2. அப்பொழுது யாக்கோபு ராகே-ன் மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.

ஆதி 30:3. அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்-,

ஆதி 30:4. அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.

ஆதி 30:5. பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:6. அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்-, அவனுக்குக் தாண் என்று பேரிட்டாள்.

ஆதி 30:7. மறுபடியும் ராகே-ன் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:8. அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்-, அவனுக்கு நப்த- என்று பேரிட்டாள்.

ஆதி 30:9. லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

ஆதி 30:10. லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:11. அப்பொழுது லேயாள்; ஏராளமாகிறதென்று சொல்-, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

ஆதி 30:12. பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:13. அப்பொழுது லேயாள்; நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்-, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

யாக்கோபு இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்கிறார். இதனால் அவருடைய குடும்பத்தில் பெரிய பிரச்சனைகளும், குழப்பங்களும் உண்டாயிற்று. யாக்கோபுக்கும், ராகேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் யாக்கோபு ராகேல்மீது பிரியமாயிருந்தார். ஆனால் இப்போதோ அவர் ராகேல்மீது கோபப்படுகிறார்.

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரி லேயாள்மேல் பொறாமை கொள்கிறாள். ராகேல் யாக்கோபை நோக்கி, ""எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்'' (ஆதி 30:1) என்று சொல்லுகிறாள்.

பொறாமை ஒரு எலும்புறுக்கி. பிறர்மீது பொறாமைப்படுவது கர்த்தருக்கு விரோதமான பாவம். நாம் மற்றவர்மீது பொறாமைப்படும்போது, அதன் மூலமாக, நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்கிறோம். நாம் பொறாமைப்படுவதன் மூலமாக, நம்மை நாமே அழித்துப்போடுகிறோம். மற்றவர்களுடைய அழிவுக்கும் நாம் காரணமாயிருக்கிறோம்.

பரிசுத்த வேதாகமத்தில் பொறாமைப்படுவதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1. பொறாமைக்கு எதிரான கட்டளைகள் (சங் 37:1-7; நீதி 3:31; நீதி 24:1; 1பேதுரு 2:1)

2. மாம்சத்தின் கிரியை (ரோமர் 1:29-31; ரோமர் 13:13; கலா 5: 19-21; 1தீமோ 6:4; தீத்து 3:3)

3. பொறாமையின் விளைவுகள் (யோபு 5:2; நீதி 14:30; நீதி 27:4; உன் 8:6; 1கொரி 3:3; யாக் 3:14; யாக் 5:9)

4. அன்புக்குப் பொறாமையில்லை. (1கொரி 13:4)

5. பொறாமைக்கு எடுத்துக்காட்டுக்கள். (ஆதி 4:4-8; ஆதி 16:5-6; ஆதி 21:9-10; ஆதி 26:14; ஆதி 30:1,15; ஆதி 31:1; ஆதி 37:4-11,19-20; நியா 11:28-30; நியா 12:1-10; நியா 16:3; 1சாமு 18:8-9,29; 1சாமு 20:31; எஸ் 5:13; தானி 6:4; மத் 27:18; யோவான் 11:47; அப் 13:45; அப் 17:5).

யாக்கோபு ராகே-ன் மேல் கோபங்கொண்டார். புருஷன் தன் மனைவியிடத்தில் கோபம் கொள்வதைப்பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் முதலாவது வாக்கியம். (1சாமு 1:2-23; 2சாமு 6:20-23; எஸ் 1; யோபு 2:10).

யாக்கோபு ஒரு குணசாலி. அவர் ராகேலைப்போல பொறாமைப்படவில்லை. அவர் ஒரு நீதிமான். யாக்கோபு ராகேல் பேரில் இன்னும் பிரியமாயிருக்கிறார். ஆகையினால் ராகேல் தன் சகோதரியாகிய லேயாள்மேல் பொறாமைப்பட்டபோது, யாக்கோபு ராகேலை அன்போடு கடிந்துகொள்கிறார்.

யாக்கோபு ராகேலைக் கடிந்து கொள்கிறார். யாக்கோபு ராகேலை நோக்கி, ""தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?'' (ஆதி 30:2) என்று சொல்லுகிறார்.

நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான வார்த்தைகளை மாய்மாலமாய்ச் சொல்லுவதைவிட, அவர்களை உண்மையான அன்போடு கடிந்துகொள்வதே மேன்மையானது.

""நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போ-ருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்'' (சங் 141:5).

""மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்'' (நீதி 27:5,6).

யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொள்ளவில்லை. அவர் ராகேலுடைய பொறாமைக்குணத்தின்மீது கோபப்படுகிறார். யாக்கோபு தன்னுடைய வார்த்தையின் மூலமாய் ராகேலுடைய பொறாமைக்குணத்தின்மீது தான் அதிருப்தியாயிருப்பதை வெளிப்படுத்துகிறார். அவர் ராகேல் பேரில் பிரியமாயிருக்கிறார். ஆனாலும் அவர் ராகேலுடைய பொறாமை என்னும் பாவத்தின்மீது கோபப்படுகிறார்.

ராகேல் யாக்கோபை நோக்கி, ""எனக்கு பிள்ளை கொடும்'' என்று கேட்கிறாள். யாக்கோபோ, ""நான் தேவனா'' என்று அவளுக்கு பதில் சொல்லுகிறார். யாக்கோபு சொல்லுகிற வாக்கியத்திற்கு, ""நான் தேவனைவிட மேலானவனா'' என்று பொருள். கர்த்தர் ஒரு காரியத்தை தடைபண்ணியிருக்கும்போது, அதை நம்மால் நிச்சயமாய்ச் செய்ய முடியாது. அதே வேளையில், கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது.

தேவன் ராகேலின் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என்று யாக்கோபு சொல்லுகிறார். ஆனால் ராகேலோ தனக்கு எப்படியாவது பிள்ளை வேண்டும் என்று பிடிவாதம் பண்ணுகிறாள். ராகேலின் மனது குறுக்கு வழியில் யோசிக்கிறது. அவள் தன்னுடைய யோசனையை யாக்கோபுக்கு சொல்லுகிறாள்.

ராகேல் யாக்கோபை நோக்கி, ""இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்'' என்று சொல்லுகிறாள். ராகேல் தான் சொன்ன பிரகாரமாக, யாக்கோபுக்கு தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுக்கிறாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேருகிறார். ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெறுகிறாள் (ஆதி 30:3#5).

ராகேல் தன் வேலைக்காரியாகிய பில்காளை யாக்கோபுக்கு கொடுக்கிறாள். ஆதி 16:2 ஆவது வசனத்தில் சாராள் செய்ததைப் போன்று இங்கு ராகேலும் செய்கிறாள். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். குடும்பத்தைக் கட்டி எழுப்புவதில் புருஷருக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அடிமைகளும், அடிமைகள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளும் மனைவிமார்களுடைய தனிப்பட்ட சொத்து.

ஒரு குடும்பத்தின் தலைவிக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், அவள் தன்னுடைய புருஷனுக்கு தன் வேலைக்காரியைக் கொடுத்து, அவள் மூலமாக குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தையை தன்னுடைய குழந்தையாக தத்தெடுப்பது அக்காலத்து வழக்கம். ராகேலுக்கு பிள்ளையில்லை. தான் பிள்ளையில்லாமல் இருப்பதைவிட, தன்னுடைய வேலைக்காரி மூலமாக தனக்கு பிள்ளையிருப்பது நலம் என்று ராகேல் நினைக்கிறாள். ராகேல் தன்னுடைய வேலைக்காரியின் பிள்ளையை, தன்னுடைய சொந்தப் பிள்ளையாகப் பாவித்து வளர்க்க விரும்புகிறாள்.

ராகேலின் சகோதரியாகிய லேயாளுக்கு பிள்ளைகள் பிறந்திருக்கிறது. அவளுக்கு முன்பாக ராகேல் பிள்ளையற்றவளாக இருக்க விரும்பவில்லை. பிள்ளையில்லாதிருப்பது ராகேலுக்கு ஒரு குறையாயிருக்கிறது. இந்தக் குறையை நிவிர்த்தி பண்ணுவதற்கு ராகேல் தன் வேலைக்காரியாகிய பில்காளை யாக்கோபுக்கு கொடுக்கிறாள். பில்காளும் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெறுகிறாள்.

அப்பொழுது ராகேல்: ""தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார்'' என்று சொல்-, அவனுக்குக் தாண் என்று பேரிடுகிறாள் (ஆதி 30:6). தாண் என்னும் பெயருக்கு நியாயத்தீர்ப்பு என்று பொருள். கர்த்தர் ராகேலின் வழக்கை தீர்த்து வைத்து, அவளுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்திருக்கிறார்.

ராகே-ன் வேலைக்காரியாகிய பில்காள் மறுபடியும் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெறுகிறாள். அப்பொழுது ராகேல்: ""நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்'' என்று சொல்-, அவனுக்கு நப்த- என்று பேரிடுகிறாள் (ஆதி 30:7,8). யாக்கோபின் குமாரர்கள் எல்லோரும் போட்டியினாலும், பொறாமையினாலும் பிறந்தவர்கள்போல இருக்கிறார்கள்.

யாக்கோபுக்கும் லேயாளின் வேலைக்காரியாகிய பில்காளுக்கும் இரண்டு குமாரர்கள் பிறப்பதை, லேயாள் பார்க்கிறாள். லேயாளுக்கு பிள்ளை பெறுகிறது நின்றுபோகிறது. அவள் தன் சகோதரியைப்போல யோசித்து, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு கொடுக்கிறாள். லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெறுகிறாள் (ஆதி 30:9,10).

அப்பொழுது லேயாள்; ""ஏராளமாகிறது'' என்று சொல்-, அவனுக்குக் காத் என்று பேடுகிறாள். பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெறுகிறாள். அப்பொழுது லேயாள்; ""நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்'' என்று சொல்-, அவனுக்கு ஆசேர் என்று பேரிடுகிறாள் (ஆதி 30:11#13).

ராகேலின் வேலைக்காரிக்கு இரண்டு குமாரர்கள் பிறப்பதுபோலவே, லேயாளின் வேலைக்காரிக்கும் இரண்டு குமாரர்கள் பிறக்கிறார்கள். இரண்டு சகோதரிகளுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியினாலும், பொறாமையினாலும், யாக்கோபுக்கு இந்த நான்கு குமாரரும் பிறக்கிறார்கள். கர்த்தரோ யாக்கோபின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த தீமையிலிருந்து நன்மையை உண்டுபண்ணுகிறார்.

யாக்கோபுக்கு இதுவரையிலும் எட்டு குமாரர்கள் பிறந்திருக்கிறார்கள். லேயாளுக்கு நாலு குமாரர்கள், பில்காளுக்கு இரண்டு குமாரர்கள், சில்பாளுக்கு இரண்டு குமாரர்கள் ஆக மொத்தம், யாக்கோபுக்கு எட்டு குமாரர்கள் இருக்கிறார்கள். ராகேலுக்கு இன்னும் பிள்ளை பிறக்கவில்லை.

தூதாயீம் கனிகள்

ஆதி 30:14#24

ஆதி 30:14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

ஆதி 30:15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

ஆதி 30:16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியி-ருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.

ஆதி 30:17. தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:18. அப்பொழுது லேயாள்; நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்-, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

ஆதி 30:19. அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.

ஆதி 30:20. அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்-, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

ஆதி 30:21. பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.

ஆதி 30:22. தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவி கொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.

ஆதி 30:23. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்ககிவிட்டார் என்றும்,

ஆதி 30:24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்-, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுக்கிறான். இப்போது ரூபனுக்கு ஐந்து அல்லது ஆறு வயது ஆகிறது. இவன் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அங்கே தூதாயீம் கனிகளைக் கண்டெடுக்கிறான்.

தூதாயீம் கனிகளைப்பற்றிய முழுமையான விவரம் தெரியவில்லை. இது கனியாக இருக்கலாம் என்றும், ஒருவேளை இது பூவாகயிருக்கலாம் என்றும் சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். இது நறுமணமுள்ள பூ என்பது பொதுவான கருத்து. தூதாயீம் கனிகள் வயல்வெளியிலே முளைத்திருக்கிறது. ஒருவேளை இவை கோதுமை செடி வளருகிற தோட்டத்தில் விளைந்திருக்கலாம். தூதாயீம் கனிகள் அதிக மதிப்புள்ளவை. அவை மிகவும் பிரயோஜனமானவை.

ரூபன் தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளை தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுக்கிறான். அந்தக் கனிகள் லேயாளின் கைகளிலிருப்பதைப் பார்க்கும்போது, ராகேலின் மனதிற்கு கஷ்டமாகவும், பொறாமையாகவும் இருக்கிறது. அந்தக் கனிகள் தனக்கு வேண்டும் என்று ராகேல் ஆசைப்படுகிறாள்.

யாக்கோபுக்கு ராகேலும், லேயாளும் மனைவிகளாயிருக்கிறார்கள். யாக்கோபு எப்போதும் தன்னோடு மாத்திரமே இருக்கவேண்டும் என்றும், அவர் தன்மீது மாத்திரமே பிரியமாயிருக்க வேண்டும் என்றும் இரண்டு சகோதரிகளும் ஆசைப்படுகிறார்கள்.

கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல திரளாக ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறவேண்டுமென்றால், தாங்களும் முயற்சி பண்ணவேண்டும் என்று ராகேலும் லேயாளும் நினைக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை, தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக நிறைவேற்றுவார். கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கு மனுஷருடைய உதவியோ ஒத்தாசையோ தேவையில்லை. அவர் ஒருவராகவே பெரிய காரியங்களை செய்கிறவர். ஆனால் ராகேலும், லேயாளும் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு, தங்களுக்கு இஷ்டமான காரியங்களை செய்கிறார்கள்.

லேயாளின் கையிலே தூதாயீம் கனிகள் இருப்பதை ராகேல் பார்த்து பொறாமைப்படுகிறாள். ராகேல் லேயாளை நோக்கி, ""உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா'' என்று கேட்கிறாள். அதற்கு லேயாள்: ""நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ'' என்று சொல்லுகிறாள்; அதற்கு ராகேல்: ""உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும்'' (ஆதி 30:15) என்று சொல்லி தன் புருஷன் யாக்கோபை, தன் சகோதரியாகிய லேயாளுக்கு விட்டுக்கொடுக்கிறாள்.

தூதாயீம் கனிகளைச் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கி, பிள்ளை பிறக்குமென்று பூர்வகாலத்தில் நம்பினார்கள். (ஆதி 30:14-16; உன் 7:13). பிற்காலத்தில் அரபியர்கள் தூதாயீம் கனியை ""சாத்தானின் கனி'' என்று அழைத்தார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை. தனக்கு தூதாயீம் கனி அவசியம் தேவை என்று ராகேல் உணருகிறாள். (ஆதி 30:16-21) இந்தக் கனியைப் புசித்த பின்பும்கூட ராகேலுக்கு உடனடியாகக் குழந்தை பிறக்கவில்லை.

சாயங்காலத்தில் யாக்கோபு வெளியி-ருந்து வருகிறார். அப்போது லேயாள் புறப்பட்டு யாக்கோபுக்கு எதிர்கொண்டுபோய், அவரை நோக்கி, ""என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்'' என்று கூப்பிடுகிறாள்; யாக்கோபு அன்று இரவு லேயாளோடே சயனிக்கிறார் (ஆதி 30:16).

தேவன் லேயாளுக்குச் செவிகொடுக்கிறார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெறுகிறாள். அப்பொழுது லேயாள்; ""நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்'' என்று சொல்-, அவனுக்கு இசக்கார் என்று பேரிடுகிறாள் (ஆதி 30:17,18).

அப்புறம் லேயாள் மறுபடியும் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெறுகிறாள். அப்பொழுது லேயாள்: ""தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்'' என்று சொல்-, அவனுக்குச் செபுலோன் என்று பேரிடுகிறாள் (ஆதி 30:19,20).

""மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா'' (சங் 113:9).

லேயாளுக்கு இதுவரையிலும் ஆறு குமாரர்கள் பிறந்திருக்கிறார்கள். பின்பு லேயாள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிடுகிறாள் (ஆதி 30:21). தீனாளைப்பற்றி சரித்திரம் ஆதி 34#ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ராகேலுக்கு இதுவரையிலும் ஒரு பிள்ளையும் பிறக்கவில்லை. லேயாள் ஆறு பிள்ளைகளைப் பெற்றதை ராகேல் மனவேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுடைய இருதயத்தில் பொறாமையும் உண்டாயிற்று. மனதில் ஏக்கமும் இருக்கிறது.

தனக்கு பிள்ளை பிறக்கவேண்டுமென்று ராகேல் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறாள். அவள் ஆரம்பத்தில் யாக்கோபிடம், ""எனக்கு பிள்ளை கொடும்'' (ஆதி 30:1) என்று கேட்டாள். யாக்கோபோ, ""நான் தேவனா'' என்று சொல்லிவிட்டார். இப்போது ராகேல் தேவனிடத்தில் ஜெபம்பண்ணுகிறாள்.

தேவன் ராகேலை நினைத்தருளுகிறார்; தேவன் ராகேலின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்து அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்கிறார். ராகேல் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுகிறாள். ராகேல் ""தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார்'' என்றும், ""இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார்'' என்றும் சொல்-, அவனுக்கு யோசேப்பு என்று பேரிடுகிறாள் (ஆதி 30:22#24).

எபிரெய பாஷையில், ""யோசேப்பு'' என்னும் பேரில் இரண்டு எபிரெய வார்த்தைகள் சேர்ந்திருக்கிறது. அவை ""ஆசாப்'', ""ஜாசாப்'' என்பனவாகும். ஆசாப் என்னும் வார்த்தைக்கு ""அவர் என் நிந்தையை நீக்கிவிட்டார்'' என்று பொருள். ஜாசாப் என்னும் வார்த்தைக்கு, ""கர்த்தர் எனக்கு இன்னும் ஒரு குமாரனைத் தருவார்'' என்று பொருள்.

யாக்கோபும் லாபானும்

ஆதி 30:25#36

ஆதி 30:25. ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபனை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.

ஆதி 30:26. நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத்தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.

ஆதி 30:27. அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

ஆதி 30:28. உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.

ஆதி 30:29. அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

ஆதி 30:30. நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம் பண்ணுவது எப்பொழுது என்றான்.

ஆதி 30:31. அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.

ஆதி 30:32. நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

ஆதி 30:33. அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

ஆதி 30:34. அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்-,

ஆதி 30:35. அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

ஆதி 30:36. தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.

யாக்கோபு தன்னுடைய குடும்பத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கிறார். லாபான் சொன்ன பிரகாரம் யாக்கோபு அவருக்கு இதுவரையிலும் உண்மையாய் வேலை செய்தார். யாக்கோபு இதுவரையிலும் லாபானுக்கு பதினாலு வருஷங்கள் வேலை செய்திருக்கிறார். இப்போது யாக்கோபின் மனதிலே கானான் தேசத்தின்மீது பிரியமுண்டாயிற்று.

கானான் தேசம் யாக்கோபின் சொந்ததேசம். யாக்கோபின் தகப்பனாரும் தாயும் அங்கே இருக்கிறார்கள். யாக்கோபு தன் பெற்றோரைப் பார்க்க விரும்புகிறார். யாக்கோபு கானான் தேசத்தின்மீது பிரிமாயிருப்பதற்கு இவை மாத்திரம் காரணமல்ல. கானான் தேசம் வாக்குத்தத்த தேசம். கர்த்தர் கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்கு சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். ஆகையினால் யாக்கோபுக்கு கானான் தேசத்தின்மீது பிரியமுண்டாயிற்று.

யாக்கோபு கானான் தேசத்திற்கு போகவேண்டும் என்னும் விருப்பத்தை லாபானுக்கு சொல்லுகிறார். அவர் லாபானிடத்தில் சொல்லிக்கொள்ளாமல், தன்னுடைய தேசத்திற்கு திருட்டளவாய்ப்போக பிரியப்படவில்லை.

ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபனை நோக்கி, ""நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத்தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர்'' (ஆதி 30:25,26) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு தன் மனைவிகளோடு இருந்த பதினான்கு வருஷ காலத்தில் அவருக்கு பதினொரு குமாரர்களும், ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள். இதன் பின்பு, தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்று யாக்கோபு விரும்புகிறார். ஆனால் லாபான் அவரை ஆரானில் மேலும் ஆறு வருஷங்கள் இருக்க வைக்கிறார். (ஆதி 30:25-43= ஆதி 29:20-30; ஆதி 31:38-42).

புதிய ஏற்பாட்டில் பல மனைவி விவாகம் தடைபண்ணப்பட்டிருக்கிறது. (மத் 19:4-5; மாற்கு 10:2-8; 1தீமோ 3:2,12; தீத்து 1:6; அப் 17:30). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல மனைவி விவாகத்தை ஏற்றுக் கொண்டார்கள். (யாத் 21:10; 1சாமு 1; 2சாமு 12:8; 2நாளா 24:3) பலர் பல மனைவிகளை விவாகம் பண்ணியிருக்கிறார்கள். (ஆதி 4:19; ஆதி 16:1-4; ஆதி 25:1-6; ஆதி 26:34; ஆதி 28:9; ஆதி 29:16-28; நியா 8:30; 1சாமு 1:2; 1சாமு 25:39-44; 2சாமு 3:2-5; 2சாமு 5:13; 2சாமு 12:8; 1இராஜா 11; 1நாளா 4:5; 1நாளா 14:3; யோபு 27:15).

அர்மகெதோன் யுத்தத்தின்போது பல மனைவி விவாகத்தை ஸ்திரீகள் விரும்புவார்கள். (ஏசா 4:1). பல மனைவி விவாகத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் ஆதி 16:1-4; ஆதி 29:20-30:26; உபா 17:17; 1சாமு 1:1-10; 1இராஜா 11:1-11; 2நாளா 11:21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.

பரிசுத்தவேதாகமத்தில் பல மனைவிகளை விவாகம்பண்ணின ஒரு சிலரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு :

1. லாமேக்கு (ஆதி 4:19-23)

2. ஆபிரகாம் (ஆதி 16, ஆதி 25)

3. ஏசா (ஆதி 26:34; ஆதி 28:9)

4. யாக்கோபு (ஆதி 29:16-30:24)

5. கிதியோன் (நியா 8:30)

6. எல்க்கானா (1சாமு 1:2)

7. தாவீது (1சாமு 25:39-44; 2சாமு 3:2-5; 2சாமு 5:13; 1நாளா 14:3)

8. சாலொமோன் (1இராஜா 11:1-8)

9. ரெகொபெயாம் (2நாளா 11:18-23)

10. அசூர் (1நாளா 4:5)

11. அபியா (2நாளா 13:21)

12. யோராம் (2நாளா 21:14)

13. யோசியா (2நாளா 21:14)

14. ஆகாப் (2இராஜா 10:1)

15. யோயாக்கீம் (2இராஜா 24:15)

16. பெல்ஷாத்சார் (தானி 5:2)

லாபானுக்கு யாக்கோபை அவருடைய சொந்த தேசமாகிய கானான் தேசத்திற்கு அனுப்ப இஷ்டமில்லை. யாக்கோபு தன்னோடுகூடவே இருந்து தனக்கு வேலை செய்யவேண்டுமென்று லாபான் விரும்புகிறார். லாபானுக்கு யாக்கோபின்மீதோ அல்லது அவருடைய மனைவிகள்மீதோ அல்லது அவருடைய பிள்ளைகள்மீதோ அதிகமான பிரியமில்லை. லாபான் தன்னுடைய சுயநலத்தைப் பார்க்கிறார். யாக்கோபு தன்னோடு கூடயிருந்து, தனக்கு வேலை செய்தால், தனக்கு ஆதாயம் உண்டாகும் என்று லாபான் எதிர்பார்க்கிறார்.

லாபான் யாக்கோபை நோக்கி, ""உன் கண்களில் எனக்குத்தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்'' (ஆதி 30:27,28) என்று சொல்லுகிறார்.

லாபான் யாக்கோபை அவருடைய சொந்த தேசத்திற்கு அனுப்பிவிடாமல், அவரை தன்னோடுகூட வைத்திருப்பதற்கு, ஆசை வார்த்தைகளைப் பேசி, பேரம் பேசுகிறார். லாபானிடத்தில் ஏராளமான ஆடுகள் இருக்கிறது. இந்த ஆடுகளையெல்லாம் மேய்க்கும் வேலையை யாக்கோபு பார்க்கவேண்டுமென்று லாபான் விரும்புகிறார். அதற்காக லாபான் யாக்கோபுக்கு நல்ல சம்பளம் கொடுக்கவும் முன்வருகிறார்.

லாபான் ஒரு தந்திரவாதி. அவர் ஒரு சுயநலக்காரர். லாபானைப்போன்றவர்களுக்கு தந்திரமான வார்த்தைகளை எப்படி பேசவேண்டும் என்பதும் தெரிந்திருக்கும். அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஆசை வார்த்தைகளைப் பேசுவார்கள். யாக்கோபு கடினமாய் உழைக்கக்கூடியவர். அவர் உண்மையானவர். யாக்கோபு தன்னுடைய ஆடுகளை மேய்த்தபோது, தனக்கு அதிகலாபம் உண்டாயிற்று என்பதை லாபானால் மறுக்க முடியவில்லை. ""உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்'' என்று லாபான் யாக்கோபுக்கு சொல்லுகிறார்.

யாக்கோபு மூலமாக தனக்கு வந்த ஆசீர்வாதத்தை லாபான் குறிப்பினால் அறிந்திருக்கிறார். ""குறிப்பினால் அறிதல்'' என்னும் வாக்கியத்திற்கு, ""அனுபவத்தின் மூலமாக அறிந்துகொள்ளுதல்'' என்று பொருள். யாக்கோபு தன்னுடைய ஆடுகளை நன்றாக மேய்த்து நிர்வாகம்பண்ணியிருக்கிறார் என்பது லாபானுக்கு தெரிந்திருக்கிறது. லாபான் யாக்கோபைப்பற்றி புகழ்ந்துசொல்லும்போது, அவர் கர்த்தரையும் புகழ்ந்து பேசுகிறார்.

யாக்கோபு லாபானிடத்தில், தான் லாபானுக்கு வேலை செய்த விதத்தை தெளிவாக எடுத்து சொல்லுகிறார். யாக்கோபு லாபானை நோக்கி, ""நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம் பண்ணுவது எப்பொழுது'' (ஆதி 30:29,30) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு லாபானுக்கு உண்மையாய் வேலை செய்திருக்கிறார். ஆனாலும் லாபானுக்கு வந்த ஆசீர்வாதம் தன்னால் வந்ததல்ல என்றும், அது கர்த்தரால் வந்தது என்றும் யாக்கோபு சொல்லுகிறார். யாக்கோபு கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர். அவர் கர்த்தருடைய சமுகத்தில் தன்னைத் தாழ்த்தி, கர்த்தரை உயர்த்துகிறார். யாக்கோபு லாபானின் ஆசீர்வாதத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது'' என்று சொல்லுகிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தால் மாத்திரமே, நமக்கு ஆசீர்வாதம் வரும். கர்த்தருடைய ஆசீர்வாதமே நமக்கு தங்கும். யாக்கோபு ஒளிவு மறைவு இல்லாமல், மாய்மாலம்பண்ணாமல் தெளிவாகப் பேசுகிறார். அவருடைய வார்த்தையில் உண்மையிருக்கிறது. அவருடைய சுபாவத்தில் கண்ணியம் இருக்கிறது. லாபானோ யாக்கோபின் நல்ல சுபாவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்.

யாக்கோபு தன்னோடு கூடயிருக்கவேண்டும் என்று லாபான் விரும்பினாலும், யாக்கோபு தன் ஸ்தானத்திற்கும், தன் தேசத்திற்கும் போகவேண்டும் என்று விரும்புகிறார். லாபான் தனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், யாக்கோபு இனிமேல் தன் குடும்பத்திற்கு சம்பாத்தியம் பண்ணவேண்டும் என்றே பிரியப்படுகிறார். யாக்கோபுக்கு இப்போது மனைவிகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பாத்தியம் பண்ணவேண்டும் என்பது யாக்கோபின் மனவிருப்பமாயிருக்கிறது.

லாபானோ யாக்கோபுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். லாபான் ஏற்கெனவே யாக்கோபிடம், ""உன் சம்பளம் இன்னதென்று எனக்கு சொல், நான் அதைத்தருவேன்'' (ஆதி 30:28) என்று ஏற்கெனவே சொன்னார். இப்போது மறுபடியுமாய், ""நான் உனக்கு என்ன தரவேண்டும்'' என்று லாபான் யாக்கோபினிடத்தில் கேட்கிறார் (ஆதி 30:31).

யாக்கோபு லாபானிடத்தில் பணத்தை சம்பளமாக பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர் லாபானை நோக்கி, ""நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை'' என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் தன் குடும்பத்திற்கு சம்பாத்தியம் பண்ணவேண்டும் என்னும் விருப்பம் யாக்கோபின் மனதிலிருக்கிறது.

யாக்கோபு லாபானை நோக்கி, ""நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்'' (ஆதி 30:31) என்று சொல்லுகிறார். யாக்கோபு இனிமேல் லாபானிடத்தில் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்க விரும்பவில்லை.

யாக்கோபின் மூலமாக லாபானுக்கு ஏற்கெனவே அதிக வருமானம் கிடைத்திருக்கிறது. யாக்கோபின் நிமித்தம் கர்த்தர் லாபானை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். யாக்கோபு லாபானிடத்தில் வருவதற்கு முன்பாக, அவரிடத்தில் சம்பாத்தியம் கொஞ்சமாயிருந்தது. யாக்கோபு வந்தபின்போ, லாபானின் சம்பாத்தியம் பெருகியிருக்கிறது. இது லாபானுக்கும் தெரியும். ஆகையினால் லாபான் யாக்கோபுக்கு அதிகமான சம்பளத்தைக் கொடுத்து, அவரை தன்னோடு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

லாபான் யாக்கோபுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க முன்வந்தாலும், யாக்கோபு பேராசைப்படவில்லை. யாக்கோபின் வார்த்தையில் உண்மையும் கண்ணிமும் இருக்கிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மனத்தாழ்மையுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்கள் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்றே விரும்புவார்கள். பரிசுத்தவான்கள் பிறருடைய சொத்துக்கள்மீது ஆசைப்படவும் மாட்டார்கள். அதை அபகரிக்கவேண்டுமென்று வஞ்சகமாய் திட்டமிடவும் மாட்டார்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதே பரிசுத்தவான்களுக்கு மெய்யான சந்தோஷம்.

யாக்கோபுக்கும் இப்போது குடும்பம் இருக்கிறது. அவருக்கு மனைவிகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். யாக்கோபு தன் குடும்பத்திற்கும் சம்பாத்தியம் பண்ணவேண்டும். இது யாக்கோபின் குடும்ப கடமை. யாக்கோபு தன்னுடைய குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து, லாபானுடைய மந்தையை திரும்ப மேய்த்து காப்பதற்கு சம்மதிக்கிறார். ஆனாலும் யாக்கோபு சம்பளமில்லாமல் வேலை பார்க்க விரும்பவில்லை. தான் சொல்லுகிறபடி லாபான் தனக்கு செய்யவேண்டுமென்று யாக்கோபு ஒரு நிபந்தனையை சொல்லுகிறார்.

யாக்கோபு லாபானை நோக்கி, ""நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்'' (ஆதி 30:32) என்று சொல்லுகிறார்.

யாக்கோபு லாபானிடத்திலிருந்து சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை. தேவனுடைய பராமரிப்பு தனக்கு போதுமென்று யாக்கோபு நினைக்கிறார் (சங் 118:8; எபி 13:5).

வெண்மை நிற பெண்ணாடுகள் புள்ளியும் வரியுமுள்ள ஆடுகளை ஈணும். (ஆதி 30:35; ஆதி 31:8). கிழக்கு தேசத்தில் செம்மறியாடுகள் பொதுவாக வெண்மை நிறத்திலும், வெள்ளாடுகள் பொதுவாக கருப்பு நிறத்திலும் இருக்கும். புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகளோ, செம்மறியாடுகளோ அதிகமாக இருக்காது. யாக்கோபு தனக்கு புள்ளியும் வரியுமுள்ள ஆடுகள் போதும் என்று நினைக்கிறார்.

யாக்கோபு தன்னை கர்த்தருடைய தெய்வீக பராமரிப்புக்கும், அவருடைய வழிநடத்துதலுக்கும் ஒப்புக்கொடுக்கிறார். யாக்கோபுக்கு ஆடுகளைப்பற்றி நன்றாய்த் தெரிந்திருக்கிறது. புள்ளியும், வரியும், கலப்பு நிறமும் உள்ள ஆடுகள் தனக்கு சம்பளமாக தரப்படவேண்டும் என்று யாக்கோபு எதிர்பார்க்கிறார். புள்ளியும் வரியுமில்லாத, ஒரே நிறத்திலுள்ள ஆடுகளெல்லாம் லாபானுக்கு சொந்தமாக இருக்கும்.

கர்த்தர் லாபானுடைய மந்தையிலே, புள்ளியும் வரியும், கலப்பு நிறமுமான ஆடுகளை பெருகப்பண்ணினால், யாக்கோபுக்கு சம்பளம் அதிகமாய்க் கிடைக்கும். கர்த்தரே பெருக்கத்தைக் கொடுக்கிறவர். யாக்கோபு தன்னுடைய சம்பளத்திற்கு கர்த்தரையே சார்ந்திருக்கிறார்.

புள்ளியும் வரியுமில்லாத, கலப்பு நிறமில்லாத ஆடுகளெல்லாம் லாபானுக்கே சொந்தம் என்று யாக்கோபு சொல்லுகிறார். லாபானுக்கு சொந்தமானதை யாக்கோபு தனக்கு சொந்தமாக்கிக்கொள்ளமாட்டார். யாக்கோபு லாபானிடத்தில் இதையும் தெளிவுபடுத்துகிறார்.

யாக்கோபு லாபானை நோக்கி, ""இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும்'' (ஆதி 30:33) என்று சொல்லுகிறார்.

யாக்கோபை தன்னிடத்தில் எப்படியாவது வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று லாபான் விரும்புகிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்'' என்று ஏற்கெனவே சொன்னார். அவர் யாக்கோபுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இப்போது யாக்கோபு தன்னுடைய சம்பளத்தைப்பற்றிச் சொல்லும்போது, லாபான் யாக்கோபை நோக்கி, ""நீ சொன்னபடியே ஆகட்டும்'' (ஆதி 30:34) என்று சொல்லி சம்மதம் தெரிவிக்கிறார்.

லாபான் யாக்கோபுக்கு உண்மையிலேயே அதிகமான சம்பளத்தை கொடுக்க விரும்பவில்லை. லாபானுக்கு தன்னுடைய மந்தையிலுள்ள ஆடுகளைப்பற்றி நன்றாய்த் தெரியும். லாபானுடைய மந்தையில் புள்ளியும், வரியும், கலப்பு நிறமுமுமான ஆடுகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆகையினால் யாக்கோபுக்கு குறைவான சம்பளமே கிடைக்கும் என்று லாபான் நினைக்கிறார்.

அந்தக் குறைவான சம்பளத்தையும் யாக்கோபுக்கு கொடுக்க, லாபானுக்கு இஷ்டமில்லை. ஆகையினால் தன் மந்தையிலுள்ள வரியும், புள்ளியும், கலப்பு நிறமுமான ஆடுகளை லாபான் தனியாகப் பிரித்துவிடுகிறார். ஆகையினால், இயற்கையின் பிரமாணத்தின் பிரகாரம், இனிமேல் மந்தையிலுள்ள ஆடுகள், புள்ளியும் வரியும், கலப்பு நிறமுமான குட்டிகளை போடுவதற்கு வாய்ப்பு இல்லை.

லாபான் தன் மந்தையிலுள்ள ஆடுகளை யாக்கோபினிடத்தில் ஒப்புவிப்பதற்கு முன்பாக, தன்னிடத்திலுள்ள கலப்பு நிற ஆடுகளை தன் குமாரரிடத்தில் ஒப்புவிக்கிறார். அவற்றை தனியாக வேறுபிரித்து விடுகிறார்.

அந்நாளிலே லாபான் கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவிக்கிறார். லாபான் தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி அந்த ஆடுகளை வைக்கிறார். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்க்கிறார் (ஆதி 30:35,36).

யாக்கோபின் நிபந்தனைகளை லாபான் அங்கிகரிக்கிறார். ஆரம்பத்திலேயே லாபான் கருப்பு நிறமும் புள்ளியும் வரியுமுள்ள ஆடுகளையெல்லாம் தனியாகப் பிரித்து விடுகிறார். இனிமேல் இப்படிப்பட்ட ஆட்டுக்குட்டிகள் பிறக்காது என்பது லாபானின் எண்ணம். மேலும் பல வருஷங்களுக்கு யாக்கோபை தன்னிடத்தில் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று லாபான் நினைக்கிறார்.

லாபான் கறுப்பு நிற ஆடுகளையும், புள்ளியும் வரியுமுமான ஆடுகளையும் தனியாகப் பிரித்து விட்டார். யாக்கோபு மீதமுள்ள ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார். மூன்றுநாள் பிரயாண தூரம் என்பது 50 மைல்களைக் குறிக்கும். லாபான் தான் பிரித்துக் கொண்ட ஆடுகளை 50 மைலுக்கு அப்பால் தள்ளி வைக்கிறார் (ஆதி 30:31-35).

யாக்கோபு மறுபடியும் தன்னுடைய வேலையை ஆரம்பிக்கும்போது அவரிடத்தில் கறுப்பு நிற ஆடுகளோ, புள்ளியும் வரியுமுள்ள ஆடுகளோ ஒன்றும் இல்லை. லாபானின் குமாரர் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் லாபானுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள் என்று தெரியவில்லை. இந்த காலத்தில் யாக்கோபுக்கு பதினொரு குமாரர்கள் இருக்கிறார்கள் (ஆதி 30:22-28).

இப்போது யாக்கோபு மேய்க்கிற ஆடுகள் எல்லாமே ஒரே நிறமுள்ளதாயிருக்கிறது. எல்லா ஆடுகளும் வெள்ளை நிறத்திலோ, அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கிறது. யாக்கோபு மேய்க்கிற ஆடுகளில் புள்ளியோ, வரியோ, கலப்புநிறமோ இல்லை. இவை குட்டி போடும்போது, தங்களுடைய நிறத்தைப்போலவே குட்டி போடும். ஒரே நிறமுள்ள ஆடுகள், கலப்பு நிற குட்டிகளைப் போடுவதற்கு வாய்ப்பில்லை.

வரியும் புள்ளியுமுள்ள ஆட்டுக்குட்டிகளும், கலப்புநிறமுள்ள ஆட்டுக்குட்டிகளும் யாக்கோபுக்கு சம்பளமாக கொடுக்கப்படும். லாபான் தன்னுடைய கலப்புநிற ஆடுகளை வேறுபிரித்து, தனியே வைத்துவிட்டதினால், யாக்கோபின் மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் ஒரே நிறமுள்ளதாயிருக்கிறது. ஒரே நிறமுள்ள குட்டிகளெல்லாம் லாபானைச்சேரும். கலப்புநிறமுள்ள குட்டிகள் மாத்திரமே யாக்கோபுக்கு சம்பளமாக கிடைக்கும்.

ஆகையினால், இயற்கையின் பிரகாரமாக, யாக்கோபுக்கு அதிகமான சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அவருக்கு சம்பளமே கிடைக்காமல் போனாலும் போகலாம். மந்தையிலுள்ள ஆடுகள் கலப்பு நிறமுள்ள குட்டிகளைப் போடவில்லையென்றால், யாக்கோபு லாபானுக்கு சம்பளமில்லாமல் இலவசமாக வேலை பார்க்கவேண்டும்.

யாக்கோபு விருத்தியடைகிறார்

ஆதி 30:37#43

ஆதி 30:37. பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,

ஆதி 30:38. தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொ-வதுண்டு.

ஆதி 30:39. ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொ-ந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

ஆதி 30:40. அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையி-ருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

ஆதி 30:41. பலத்த ஆடுகள் பொ-யும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரேபொ-யும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

ஆதி 30:42. பலவீனமான ஆடுகள் பொ-யும் போது, அவைகளை போடாம-ருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

ஆதி 30:43. இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

இயற்கையின் பிரமாணம் யாக்கோபுக்கு பாதகமாகயிருக்கிறது. ஆனாலும் யாக்கோபு கர்த்தருடைய வார்த்தையையும், அவருடைய தெய்வீக பிரமாணத்தையும் நம்புகிறார். கர்த்தர் யாக்கோபை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். யாக்கோபுக்கு ஆடுகளை நன்றாய் மேய்க்கத் தெரியும். கர்த்தர் அவருக்கு விசேஷித்த ஞானத்தைக் கொடுக்கிறார். யாக்கோபு கர்த்தருடைய ஆலோசனையின் பிரகாரமாக லாபானுடைய ஆடுகளை மேய்க்கிறார்.

யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைக்கிறார். ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொ-வதுண்டு. ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொ-ந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போடுகிறது (ஆதி 30:37#39).

தனக்கு கறுப்பு நிற ஆடுகளும், புள்ளியும் வரியுமுள்ள ஆடுகளும் உற்பத்தியாக வேண்டுமென்பதற்காக யாக்கோபு இயற்கையில் பலவிதமான தந்திரங்களையெல்லாம் செய்கிறார். இதனால் யாக்கோபிற்கு ஏதாவது பயன் கிடைத்ததா என்று தெரியவில்லை. தேவனே யாக்கோபை ஆசீர்வதிக்கிறார். தேவன் லாபானின் ஆடுகளை எடுத்து யாக்கோபுக்குக் கொடுக்கிறார் (ஆதி 31:4-13). லாபான் யாக்கோபின் சம்பளத்தைப் பத்து முறை மாற்றி அவரை வஞ்சித்தார். வஞ்சிக்கப்பட்ட யாக்கோபிற்கு தேவன் நியாயம் செய்கிறார். (ஆதி 30:37, 31:5,7,9,11-12).

கானான் தேசத்திலுள்ள மேய்ப்பர்கள் இந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்கள். ஆட்டுக்குட்டிகள் தங்களுக்கு இஷ்டமான நிறத்திலே பிறக்கவேண்டுமென்றால், மேய்ப்பர்கள் இதுபோல செய்வது வழக்கம். யாக்கோபு கர்த்தருடைய கிருபையினால், மேய்ப்பரின் வழக்கத்தைப் பின்பற்றி, பட்டைகளை உரித்துப்போடுகிறார். ஆடுகளோ கலப்பு நிறமான குட்டிகளைப்போடுகிறது. புள்ளியும், வரியும் கலப்பு நிறமுமான குட்டிகளெல்லாம் யாக்கோபுக்கு சொந்தம்.

யாக்கோபு அந்த ஆட்டுக்குட்டிகளை பிரித்துக்கொண்டு, மற்ற ஆடுகளை லாபானுடைய மந்தையி-ருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்திக்கொள்வார். யாக்கோபு தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வார் (ஆதி 30:40).

பலத்த ஆடுகள் பொ-யும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரேபொ-யும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பார். பலவீனமான ஆடுகள் பொ-யும்போது, அவைகளை போடாம-ருப்பார்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேருகிறது (ஆதி 30:41,42).

யாக்கோபின் ஆரம்பம் மிகவும் சாதாரணமாகயிருக்கிறது. ஆனால் முடிவோ சம்பூரணமானதாயும் திரளானதாயும் இருக்கிறது. யாக்கோபு மிகவும் விருத்தியடைகிறார். அவர் திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவராகிறார் (ஆதி 30:43).

நாம் அற்பமான ஆரம்பத்தை அசட்டைபண்ணக்கூடாது. கர்த்தர் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார். யாக்கோபு கொஞ்சத்திலே உண்மையுள்ளவராயிருந்தார். கர்த்தர் அவருக்கு திரளான ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். யாக்கோபு ஆரம்பத்தில் உண்மையுள்ள வேலைக்காரராகயிருந்தார். இப்போதோ அவர் கர்த்தருடைய கிருபையினாலும், உதவியினாலும், ஒத்தாசையினாலும், அநுக்கிரகத்தினாலும் திரளான ஆடுமாடுகளுக்கும், ஐசுவரியத்திற்கும் எஜமானராயிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.