யோம் கிப்பூர் வகுப்பு 2

யோம் கிப்பூர் வகுப்பு 2

லேவியர்களின் மூன்று குடும்பங்கள் செய்த அன்றாடப் பணிகள்

1. வனாந்தரக் காலம் (ஆசரிப்புக் கூடாரப் பணிகள்)

கோகாத்தியர் (Kohathites):

  • சுமந்து சென்ற பொருட்கள்:
  • ஆசரிப்புக் கூடாரத்தின் திரைகள்-
  • மூடுதிரைகள்-
  • வாசலின் தொங்குதிரைகள்-
  • பிராகாரத்தின் தொங்குதிரைகள் மற்றும் அதற்கான கயிறுகள்.
  • பணியின் தன்மை:
  • இவர்கள் தங்கள் பொருட்களைச் சுமந்து செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
  • தென் திசைக் காவல்:
  • கூடாரத்தின் தெற்குப் பகுதியைக் காவல் காக்கும் அன்றாடப் பொறுப்பு (எண்ணாகமம் 3:29).
  • பரிசுத்த பாத்திரங்களைப் பராமரித்தல்:
  • ஆசாரியர்கள் (ஆரோனின் சந்ததியினர்)
  • குத்துவிளக்கை ஏற்றுவது-
  • தூபங்காட்டுவது போன்றவற்றைச் செய்யும் போது- அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
  • யூத பாரம்பரியத்தின்படி-
  • பாத்திரங்களைத் துடைத்துச் சுத்தமாக வைத்திருப்பது இவர்களின் வேலை.
  • சமூகத்தப்பம் தயாரித்தல் (Showbread):
  • ஒவ்வொரு ஓய்வுநாளிலும் சமூகத்தப்ப மேஜையில் வைக்கப்படும் 12 அப்பங்களைத் தயாரித்துச் சுடும் வேலை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (1 நாளாகமம் 9:32).
  • இதற்கான மாவை அரைத்து- பிசைந்து தயார் செய்யும் அன்றாட வேலைகளை இவர்கள் செய்தனர்.

கெர்சோனியர் (Gershonites):

  • சுமந்து சென்ற பொருட்கள்:
  • உடன்படிக்கைப் பெட்டி-
  • குத்துவிளக்கு-
  • சமூகத்தப்ப மேஜை-
  • தூபபீடம்-
  • தகனபலிபீடம்
  • பரிசுத்த ஸ்தலத்தின் பாத்திரங்கள்.
  • பணியின் தன்மை:
  • இந்தப் பரிசுத்த பொருட்களை வண்டிகளில் ஏற்றக்கூடாது;
  • ஆசாரியர்கள் அவற்றை மூடிய பின்பு-
  • கோகாத் புத்திரர்கள் அவற்றைத் தங்கள் தோள்களில்தான் சுமந்து செல்ல வேண்டும்
  • மேற்றிசைக் காவல்:
  • கூடாரத்தின் பின்புறமான மேற்குத் திசையைக் காவல் காக்கும் பொறுப்பு இவர்களுடையது (எண்ணாகமம் 3:23).
  • திரைகள் மற்றும் துணிகளைப் பராமரித்தல்:
  • ஆசரிப்புக் கூடாரத்தின் மேலூறைகள்-
  • தொங்குதிரைகள் காற்றில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்தல்.
  • சுத்தம் செய்தல்:
  • பிராகாரத்தின் துணிகளில் படியும் வனாந்தரத்து தூசிகளைத் தட்டிப் பராமரிப்பது
  • கிழிசல்கள் ஏற்பட்டால் தையல் வேலைகளைச் செய்வது இவர்களின் அன்றாடச் செயலாக இருந்தது.

மெராரியர் (Merarites):

  • சுமந்து சென்ற பொருட்கள்:
  • கூடாரத்தின் பலகைகள்-
  • தாழ்ப்பாள்கள்-
  • தூண்கள்-
  • பாதங்கள் (Sockets)-
  • பிராகாரத்தின் தூண்கள்-
  • அவற்றின் முளைகள் மற்றும் கயிறுகள்.
  • பணியின் தன்மை:
  • இந்தப் பொருட்கள் மிகவும் கனமாக இருந்ததால்-
  • இவற்றைச் சுமந்து செல்ல இவர்களுக்கும் மாட்டு வண்டிகள் வழங்கப்பட்டன.
  • வட திசைக் காவல்:
  • கூடாரத்தின் வடக்குப் பகுதியைக் காவல் காக்கும் பொறுப்பு இவர்களுடையது (எண்ணாகமம் 3:35).
  • கட்டமைப்புப் பராமரிப்பு:
  • கூடாரத்தின் பலகைகள்-
  • தூண்கள்-
  • வெள்ளிப் பாதங்கள் சரியாகப் பொருந்தியிருக்கிறதா எனத் தினமும் சோதிப்பது இவர்களின் வேலை.
  • முளைகள் மற்றும் கயிறுகள்:
  • பலத்த காற்று அடிக்கும் போது-
  • கூடாரம் சரிந்து விடாமல் இருக்க-
  • முளைகளை (Tent pegs) ஆழமாக அடித்து-
  • கயிறுகளை இழுத்துக் கட்டும் தச்சு மற்றும் கட்டமைப்பு வேலைகளை இவர்கள் தினமும் செய்தனர்.

2. தேவாலயக் காலம்

கோகாத்தியர் (Kohathites):

  • பிரதான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள்:
  • தாவீதால் நியமிக்கப்பட்ட பிரதான பாடகரான ஏமான் (Heman) கோகாத் குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:33).
  • வாசல் காப்பாளர்கள் (கோராகியர்):
  • கோகாத்தின் சந்ததியான கோராகின் புத்திரர்கள்
  • தேவாலயத்தின் பிரதான வாசல்களைக் காக்கும் காவல் அதிகாரிகளாகச் செயல்பட்டனர் (1 நாளாகமம் 26:1).
  • தல்மூத் (Mishnah Middot) படி-
  • இவர்கள் இரவில் தேவாலயத்தைச் சுற்றி
  • 21 இடங்களில் காவல் காத்து-
  • எரியும் பந்தங்களுடன் ரோந்து சென்றனர்.
  • அப்பம் மற்றும் பலிப்பொருட்கள் தயாரிப்பு:
  • காலையிலும் மாலையிலும் செலுத்தப்படும்
  • போஜனபலிக்குத் (Meal offering) தேவையான
  • மாவை எண்ணெயில் பிசைந்து தயாரிப்பதும்-
  • ஓய்வுநாள் அப்பத்தைச் சுடுவதும் இவர்களுடைய அன்றாடப் பணியாகத் தொடர்ந்தது.

கெர்சோனியர் (Gershonites):

  • பொக்கிஷங்களைக் காப்பவர்கள்:
  • தேவாலயத்தின் பொக்கிஷங்கள்
  • காணிக்கையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களின் கிடங்குகளை (Treasuries) நிர்வகிக்கும் பொறுப்பு (1 நாளாகமம் 26:21-22).
  • நிதி மற்றும் கணக்கு வழக்குகள்:
  • தேவாலயப் பராமரிப்பிற்காக வரும் காணிக்கைகளைப் பெற்று-
  • அதைத் தேவாலய வேலைகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் கணக்காளர்களாகவும் இவர்கள் செயல்பட்டனர்.
  • பாடகர்கள்:
  • ஆசாப் (Asaph) என்ற பிரதான பாடகர் கெர்சோன் குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:39).
  • இவர்கள் கோகாத்தியரோடு இணைந்து தேவாலய ஆராதனைகளில் வாத்தியங்களை வாசித்துப் பாடினர்.

மெராரியர் (Merarites):

  • பாடகர்கள்:
  • ஏத்தான் (Ethan - யெதுத்தூன்) என்ற பாடகர் மெராரி குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:44).
  • இவர்களும் தேவாலய ஆராதனைகளில் தினமும் இசைப் பணியாற்றினர்.
  • பொருட்களின் கிடங்குப் பராமரிப்பு:
  • வனாந்தரத்தில் கட்டமைப்புகளைப் பார்த்துக் கொண்டதைப் போலவே-
  • தேவாலயக் காலத்திலும் கட்டமைப்புப் பொருட்கள்-
  • இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள்
  • தேவாலயத்தின் பராமரிப்புப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் இருந்தது.
  • வெளிப் பிராகாரக் காவல்:
  • தேவாலயத்தின் வெளிப் பிராகாரங்கள்
  • கட்டமைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை இவர்கள் அன்றாடம் காவல் காத்தனர் (1 நாளாகமம் 26:10).

ஆசாரியர்கள் யார்?

ஆசாரியர்கள்:

  • ஆரோன் வம்சம்
  • யாத்திராகமம் 28:1

ஆகவே:

➡ எல்லா ஆசாரியர்களும் லேவியர்கள்
➡ ஆனால் எல்லா லேவியர்களும் ஆசாரியர்கள் அல்ல

ஆலயத்தில் இருந்த 24 குழு அமைப்புகள்

  1. ஆசாரியர்கள் 24 குழுக்கள் நாளாகமம் 24:7–18
  2. இசை லேவியர்கள் 24 குழுக்கள் 1 நாளாகமம் 25:9–31
  3. வாசற்காவலர்கள் 24 குழுக்கள் 1 நாளாகமம் 26

லேவியர்களின் பணிகள்

  1. ஆலய காவல் 1 நாளா 23:5
  2. இசை / துதி 1 நாளா 25:1
  3. ஆலய வேலை 1 நாளா 23:28
  4. கதவுக்காப்பு 1 நாளா 26:1

லேவியர்களின் சேவை பிரிவு

  1. ஆலய வேலை 24-000 பேர் 1 நாளா 23:4
  2. அதிகாரிகள் / நியாயாதிபதிகள் 6-000 பேர் 1 நாளா 23:4
  3. வாசற்காவலர்கள் 4-000 பேர் 1 நாளா 23:5
  4. இசை / துதி 4-000 பேர் 1 நாளா 23:5
  5. மொத்தம்: ➡ 38-000 லேவியர்கள்

24 ஆசாரியக் குழுக்கள் (1 நாளாகமம் 24:7–18)

1- யோயாரீப்- Jehoiarib- 1 நாளா 24:7

2- எதாயா- Jedaiah- 1 நாளா 24:7

3- ஹாரீம்- Harim- 1 நாளா 24:8

4- சேயோரீம்- Seorim- 1 நாளா 24:8

5- மால்கியா- Malchijah- 1 நாளா 24:9

6- மியாமீன்- Mijamin- 1 நாளா 24:9

7- ஹக்கோஸ்- Hakkoz- 1 நாளா 24:10

8- அபியா- Abijah- 1 நாளா 24:10

9- யேசுவா- Jeshua- 1 நாளா 24:11

10- செக்கனியா- Shecaniah- 1 நாளா 24:11

11- எலியாசீப்- Eliashib- 1 நாளா 24:12

12- யாக்கீம்- Jakim- 1 நாளா 24:12

13- உப்பா- Huppah- 1 நாளா 24:13

14- யெசேபேப்- Jeshebeab- 1 நாளா 24:13

15- பில்கா- Bilgah- 1 நாளா 24:14

16- இம்மேர்- Immer- 1 நாளா 24:14

17- ஹேசீர்- Hezir- 1 நாளா 24:15

18- ஹப்பிச்சேஸ்- Happizzez- 1 நாளா 24:15

19- பெத்தாஹியா- Pethahiah- 1 நாளா 24:16

20- யெகெஸ்கேல்- Jehezekel- 1 நாளா 24:16

21- யாக்கீன்- Jachin- 1 நாளா 24:17

22- காமூல்- Gamul- 1 நாளா 24:17

23- தெலாயா- Delaiah- 1 நாளா 24:18

24- மாசியா- Maaziah- 1 நாளா 24:18

யூத ஆலயத்தில் ஒரு நாள் சேவை – முழு படிநிலை

ஆசாரியர்கள் எழுதல் மற்றும் சுத்திகரிப்பு

நேரம்:
➡ அதிகாலை (சூரிய உதயத்திற்கு முன்) நடைமுறை

  • ஆசாரியர்கள் Mikveh (சுத்திகரிப்பு குளியல்) செய்வார்கள்
  • பரிசுத்த உடைகளை அணிவார்கள்
  • யாத்திராகமம் 28:40–43

பலிபீடத்தின் சாம்பலை அகற்றுதல் நடைமுறை

  • முந்தைய நாள் பலிகளின் சாம்பல் அகற்றப்பட்டது
  • புதிய மரக்கட்டைகள் வைக்கப்பட்டது
  • லேவியராகமம் 6:10–13

காலை Tamid பலி தயாரிப்பு நடைமுறை

  • குற்றமற்ற ஆட்டுக்குட்டி ஆய்வு செய்யப்பட்டது
  • பலிக்குத் தயாராக்கப்பட்டது
  • எண்கள் 28:3–4

காலை தகனபலி (Morning Tamid)

நேரம்

➡ காலை மூன்றாம் மணி (சுமார் 9 AM) நடைமுறை

  • ஆட்டுக்குட்டி அறுக்கப்பட்டது
  • இரத்தம் பலிபீம்யில் தெளிக்கப்பட்டது
  • மிருகம் பலிபீம்யில் எரிக்கப்பட்டது

தானியபலி மற்றும் பானபலி பொருட்கள்

  • நல்ல மாவு
  • ஒலிவ் எண்ணெய்
  • திராட்சரசம்
  • எண்கள் 28:5–7

தூப பலி நடைமுறை

  • பொற்கால பலிபீம்யில் தூபம் புகைக்கப்பட்டது
  • மக்கள் வெளியில் ஜெபித்தார்கள்
  • யாத்திராகமம் 30:7
  • லூக்கா 1:10

வேதாகம வாசிப்பு மற்றும் ஆசீர்வாதம் நடைமுறை

  • வேதாகம வசனங்கள் வாசிக்கப்பட்டது
  • ஆரோனின் ஆசீர்வாதம் கூறப்பட்டது
  • எண்கள் 6:24–26

மாலை Tamid பலி

நேரம் ஒன்பதாம் மணி (3 PM)

  • எண்கள் 28:4

மாலை தூப பலி

  • யாத்திராகமம் 30:8

இரவு காவல் நடைமுறை

  • பலிபீடத்தின் தீ தொடர்ந்து எரிந்தது
  • லேவியர்கள் காவல் பார்த்தனர்
  • லேவியராகமம் 6:13

ஒரு நாள் ஆலய சேவை – முழு Timeline நேரம்- நிகழ்வு

  • அதிகாலை - ஆசாரியர் சுத்திகரிப்பு
  • காலை - பலிபீம் சுத்தம்
  • காலை 9 - காலை Tamid பலி
  • காலை - தானியபலி + பானபலி
  • காலை - தூப பலி
  • காலை - வேதாகம வாசிப்பு
  • மாலை 3 - மாலை Tamid பலி
  • மாலை - தூப பலி
  • இரவு - ஆலய காவல்

ஆலயத்தில் ஒரு நாளில் வேலை செய்த ஆசாரியர்களின் எண்ணிக்கை

  • தாவீது காலத்தில் ஆசாரியர்கள் 24 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
  • 1 நாளாகமம் 24:1–19
  • ஒவ்வொரு குழுவும் ஒரு வாரம் ஆலயத்தில் சேவை செய்தது.

ஒரு குழுவில் இருந்த ஆசாரியர்கள் (மிஷ்னா + யூத வரலாறு):

  • ஒரு ஆசாரியக் குழுவில் சுமார்
  • 700 – 900 ஆசாரியர்கள்
  • ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் வேலை செய்யவில்லை.

ஒரு நாளில் சேவை செய்த ஆசாரியர்கள்

மிஷ்னா (Tamid) படி தினசரி சேவைகளுக்கு சுமார்:

  • 50 – 60 ஆசாரியர்கள்
  • அவர்கள் பல்வேறு பணிகளில் இருந்தனர்.

ஒரு நாள் ஆலய சேவை – ஆசாரியர்களின் பணிகள்

  • பலிபீம்யை சுத்தம் செய்தல் - 5–10
  • காலை Tamid பலி - 13
  • தூப பலி - 1
  • விளக்குகளை ஏற்றுதல் - 2
  • தகன பலி ஏற்பாடு - 10+
  • மற்ற பலிகள் - 10–20
  • மொத்தம் சுமார் 50–60 ஆசாரியர்கள்

லேவியர்கள் (Levites) ஆசாரியர்களுடன் சேர்ந்து:

  • பாடகர்கள்
  • இசைக்கலைஞர்கள்
  • காவலர்கள்
  • இவர்களும் சேவை செய்தனர்.
  • சுமார் 150–200 லேவியர்கள்

மொத்த ஆலய பணியாளர்கள் (ஒரு நாள்)

  • ஆசாரியர்கள் - 50–60
  • லேவியர்கள் - 150–200
  • காவலர்கள் - 20–30
  • மொத்தம்: 200 – 300 பேர்
  • ஒரு நாளில் ஆலயத்தில் சேவை செய்தனர்.

யோம் கிப்பூர் நாள் – முழு நேர வரிசை (Step-by-Step)

அதிகாலை – பிரதான ஆசாரியர் சுத்திகரிப்பு

  • பிரதான ஆசாரியர் Mikveh (சுத்திகரிப்பு குளியல்) செய்வார்
  • தங்க ஆடைகள் அல்ல; வெள்ளை பரிசுத்த ஆடை அணிவார்
  • லேவியராகமம் 16:4

அர்த்தம்

  • பரிசுத்தம் + தாழ்மை

ஆசாரியருக்கான பாவநிவாரண பலி

  • ஒரு காளை பலியாக்கப்பட்டது
  • இது பிரதான ஆசாரியருக்கும் அவரது குடும்பத்திற்கும்
  • லேவி 16:6

இரண்டு ஆடுகளுக்கான சீட்டு

  • இரண்டு ஆடுகள் கொண்டுவரப்பட்டன.
  • சீட்டு போடப்பட்டது
  • ஒரு ஆடு → கர்த்தருக்காக
  • ஒரு ஆடு → போக்காடு (Scapegoat)
  • லேவி 16:7–10

காளையின் இரத்தத்தை பரிசுத்த ஸ்தலத்தில் தெளித்தல்

  • வருடத்தில் ஒரே நாளில் மட்டும்
  • பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில் (Holy of Holies) சென்றார்.

நடைமுறை

  • தூபம் கொண்டு சென்றார்
  • காளையின் இரத்தத்தை கிருபாசனத்தின் முன் தெளித்தார்
  • லேவி 16:14–15

மக்களின் பாவங்களுக்கான ஆடு பலி

  • கர்த்தருக்கான ஆடு பலியாக்கப்பட்டது
  • அதன் இரத்தம் Holy of Holies-ல் தெளிக்கப்பட்டது
  • லேவி 16:15

Scapegoat – பாவத்தை எடுத்துச் செல்லும் ஆடு

  • பிரதான ஆசாரியர் மக்களின் பாவங்களை ஒப்புக்கொண்டார்
  • கைகளை ஆட்டின் மேல் வைத்தார்
  • அந்த ஆடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டது
  • லேவி 16:21–22

அர்த்தம்

  • பாவங்கள் அகற்றப்படுதல்

தகனபலிகள் அதற்குப் பிறகு:

  • இரண்டு ஆட்டுக்கிடாய்கள் (Rams) தகனபலியாக்கப்பட்டது.
  • லேவி 16:24

நாள் முடிவு

  • பிரதான ஆசாரியர் மீண்டும் குளித்தார்
  • தங்க ஆடைகளை மீண்டும் அணிந்தார்
  • நாள் முடிந்தது

யோம் கிப்பூர் – 15 படிநிலை (Mishnah Yoma Study)

  1. அதிகாலை – பிரதான ஆசாரியர் தயாராகுதல்
  • இரவு முழுவதும் தோரா வாசிக்கப்பட்டது
  • அதிகாலையில் எழுந்தார்
  • ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்
  1. முதல் சுத்திகரிப்பு குளியல் (Mikveh)
  • பிரதான ஆசாரியர் முதல் முறையாக குளித்தார்
  • மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
  1. தினசரி காலை Tamid பலி
  • வழக்கமான காலை தகனபலி முதலில் நடந்தது
  • இது யோம் கிப்பூர் ஆரம்பம் அல்ல;
  • தினசரி சேவை எண்கள் 28
  1. பிரதான ஆசாரியரின் முதல் பாவ ஒப்புக்கொள்ளல் (Confession)
  • மீண்டும் தண்ணீரில் மூழ்கித் தன்னைச் சுத்திகரித்தார்
  • பொன் வஸ்திரங்களைக் களைந்துவிட்டு
  • சாதாரண வெள்ளைச் சணல் வஸ்திரங்களை அணிந்துகொள்வார்.
  • காளையின் மேல் கைகளை வைத்தார்
  • தனது பாவங்களையும் குடும்பத்தின் பாவங்களையும் ஒப்புக்கொண்டார்
  • லேவி 16:6
  1. இரண்டு ஆடுகளுக்கான சீட்டு
  • இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களை நிறுத்தி
  • ஒரு பொற்பெட்டியிலிருந்து இரண்டு சீட்டுகளை எடுப்பார்
  • வலது கையில் - “கர்த்தருக்காக”
  • இடது கையில் - “போக்காடு ”
  • போக்காட்டின் தலையில் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டுவார்
  • வாசாலிலும் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டுவார்
  • கர்த்தருக்கான ஆட்டையும் காளையையும் பலியிடுவதற்காக நிறுத்திவைப்பார்.
  1. இரண்டாவது பாவ ஒப்புக்கொள்ளல்
  • மீண்டும் காளையின் மேல் கைகளை வைத்தார்
  • ஆசாரியர்களுக்காக பாவ ஒப்புக்கொண்டார்
  1. தூபம் கொண்டு Holy of Holies-க்கு செல்லுதல்
  • பலிபீடத்திலிருந்து நெருப்பைத் தூபகலசத்தில் எடுப்பார்
  • மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்
  • தூபவர்க்கத்தைப் போட்டுப் புகையினால் கிருபாசனத்தை மறைப்பார்.
  • லேவி 16:12–13
  1. காளையின் இரத்தத்தை தெளித்தல்
  • காளையை பலியிடுவார்
  • Mercy Seat முன் 8 முறை இரத்தம் தெளித்தார்
  • லேவி 16:14
  1. ஆட்டுக்குட்டி பலி (மக்களுக்காக)
  • கர்த்தருக்கான ஆடு பலியாக்கப்பட்டது
  • லேவி 16:15
  1. ஆட்டின் இரத்தம் Holy of Holies-ல் தெளித்தல்
  • மீண்டும் Holy of Holies-ல் இரத்தம் தெளித்தார்
  1. ஆலயத்தை சுத்திகரித்தல்
  • ஆலயம்
  • பலிபீடம்
  • பரிசுத்த ஸ்தலம்
  • இவை எல்லாம் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டது.
  1. Scapegoat மேல் பாவ ஒப்புக்கொள்ளல்
  • உயிருள்ள போக்காட்டின் தலையில்
  • பிரதான ஆசாரியன் தன் இரு கைகளையும் வைத்தார்
  • இஸ்ரவேலரின் சகல பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டு
  • அதின் மேல் சுமத்துவார்.
  • அந்த ஆடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டது
  • நியமிக்கப்பட்ட ஒருவன் அந்தப் போக்காட்டைப் பாளையத்திற்கு வெளியே வனாந்தரத்திற்குக் கொண்டு செல்வான்
  • செங்குத்தான பாறையிலிருந்து (Zuk) கீழே தள்ளிவிடுவான்.
  • லேவி 16:21–22
  1. தினசரி மாலை தகனபலிகள்
  • மூன்றாம் முறை குளித்தார்
  • மீண்டும் மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
  • இரண்டு ஆட்டுக்கிடாய்கள் தகனபலியாக்கப்பட்டது
  • லேவி 16:24
  1. நான்காம் குளியல் – மீண்டும் சாதாரண ஆடை மாற்றுதல்
  • மீண்டும் ஆடை மாற்றம்
  • Mikveh நான்காம் முறை குளியல்
  • மீண்டும் வெள்ளை ஆடை
  • Holy of Holies உள்ளே விட்ட பொருட்களை எடுத்தார்.
  • லேவியராகமம் 16 , எண்கள் 29 வாசித்தார்.
  1. நாள் முடிவு மற்றும் மக்களுக்கு ஆசீர்வாதம்
  • மீண்டும் ஐந்தாம் முறை குளியல்
  • மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
  • சூரியன் மறைந்தவுடன் யோம் கிப்பூர் உபவாசம் நிறைவடையும்;
  • எக்காளம் (Shofar) முழங்கப்பட்டுப் பண்டிகை முடிவுக்கு வரும்.
  • மக்கள் அவரை மகிழ்ச்சியோடு அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்;
  • வீடுகளில் ஆனந்தமாக உணவருந்துவார்கள்.
  • வேத ஆதாரம்: பிரசங்கி 9:7
  • யூத மரபு சொல்வது:
  • மக்கள் பிரதான ஆசாரியரை வீட்டிற்கு விழாவாக அழைத்துச் சென்றனர்.

📊 யோம் கிப்பூர் 15 படிநிலை – சுருக்கம்

  1. பிரதான ஆசாரியர் தயாராகுதல்
  2. முதல் குளியல்
  3. காலை Tamid பலி
  4. முதல் Confession
  5. ஆடுகளுக்கான சீட்டு
  6. இரண்டாவது Confession
  7. தூபம் Holy of Holies
  8. காளையின் இரத்தம்
  9. ஆடு பலி
  10. இரத்தம் தெளித்தல்
  11. ஆலயம் சுத்திகரிப்பு
  12. Scapegoat அனுப்புதல்
  13. தகனபலிகள்
  14. வேதாகம வாசிப்பு
  15. ஆசீர்வாதம்

யோம் கிப்பூர் vs இயேசுவின் சிலுவை 25 தீர்க்கதரிசன ஒப்பீடுகள்

1. பிரதான ஆசாரியர் - இயேசு நித்திய பிரதான ஆசாரியர் - எபி 4:14

2. பரிசுத்த ஆடை - இயேசுவின் நீதித்தன்மை - எபி 7:26

3. காளை பாவநிவாரண பலி - இயேசு பாவ பலி - எபி 9:12

4. இரண்டு ஆடுகள் - இயேசு பலியும் பாவத்தை எடுத்துச் செல்லும் ஆட்டும் - ஏசா 53:6

5. இரத்தம் பரிகாரம் - கிறிஸ்துவின் இரத்தம் மீட்பு - எபி 9:22

6. Holy of Holies நுழைவு - இயேசு பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்தார் - எபி 9:24

7. வருடத்தில் ஒருமுறை - கிறிஸ்து ஒருமுறை என்றென்றைக்கும் - எபி 10:12

8. தூபம் - கிறிஸ்துவின் ஜெபமும் மத்தியஸ்தமும் - ரோமா 8:34

9. பாவ ஒப்புக்கொள்ளல் - மனித பாவத்தை சுமந்தார் - ஏசா 53:5

10. Scapegoat - பாவத்தை அகற்றினார் - யோவா 1:29

11. பாவம் வனாந்தரத்திற்கு - பாவம் முழுமையாக அகற்றப்பட்டது - மீகா 7:19

12. இரத்தம் Mercy Seat - கிறிஸ்து கிருபா ஆசனம் - ரோமா 3:25

13. ஆலயம் சுத்திகரிப்பு - மனசாட்சி சுத்திகரிப்பு - எபி 9:14

14. பலிபீடம் சுத்தம் - விசுவாசிகள் பரிசுத்தம் - எபி 10:10

15. ஆசாரியர் நடுவுரையாளர் - கிறிஸ்து ஒரே மத்தியஸ்தர் - 1 திமோ 2:5

16. மக்கள் வெளியே காத்தனர் - இயேசு வெளியே துன்பப்பட்டார் - எபி 13:12

17. பாவம் மாற்றப்பட்டது - பாவம் கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டது - 2 கொரி 5:21

18. தகனபலிகள் - முழு அர்ப்பணிப்பு - எபே 5:2

19. இரத்த தெளித்தல் - கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிப்பு - 1 யோவா 1:7

20. மக்களுக்கு பரிகாரம் - உலகத்திற்கு மீட்பு - 1 யோவா 2:2

21. ஆசாரியர் உயிருடன் வெளியே வருதல் - இயேசு உயிர்த்தெழுதல் - எபி 7:25

22. மக்களுக்கு ஆசீர்வாதம் - கிறிஸ்துவின் ஆசீர்வாதம் - எபே 1:3

23. பாவம் மறைக்கப்பட்டது - பாவம் நீக்கப்பட்டது - எபி 10:17

24. தற்காலிக பரிகாரம் - நித்திய பரிகாரம் - எபி 9:12

25. நிழல் - கிறிஸ்து உண்மை - எபி 10:1

யோம் கிப்பூர் – பிரதான ஆசாரியர் 5 முறை குளித்த ரகசியம்

முதல் குளியல் – காலை Tamid சேவைக்கு முன்

  • பிரதான ஆசாரியர் Mikveh-ல் குளித்தார்
  • தங்க ஆசாரிய ஆடைகள் (Golden Garments) அணிந்தார்

பின்னர்:

  • காலை Tamid தகனபலி செய்தார்.
  • எண்கள் 28

இரண்டாம் குளியல் – யோம் கிப்பூர் சேவை தொடக்கம்

  • தங்க ஆடைகளை கழற்றினார்
  • மீண்டும் குளித்தார்
  • வெள்ளைஆடைகள் அணிந்தார்
  • லேவியராகமம் 16:4
  • இந்த ஆடையில் தான் Holy of Holies உள்ளே சென்றார்.

மூன்றாம் குளியல் – Holy of Holies சேவை முடிந்தபின்

  • Holy of Holies சேவை முடிந்தது
  • மீண்டும் Mikveh குளியல்
  • மீண்டும் தங்க ஆடை அணிந்தார்

பின்னர்:

  • பொதுப் பலிகள் செலுத்தினார்.

நான்காம் குளியல் – மீண்டும் லினன் ஆடைக்கு

  • மீண்டும் ஆடை மாற்றம்
  • Mikveh குளியல்
  • மீண்டும் வெள்ளை ஆடை
  • Holy of Holies உள்ளே விட்ட பொருட்களை எடுத்தார்.

ஐந்தாம் குளியல் – நாள் முடிவில்

  • கடைசி Mikveh
  • தங்க ஆடை மீண்டும் அணிந்தார்

பின்னர்:

  • மாலை பலி
  • நாள் முடிவு

யோம் கிப்பூர் காலை (ஆலயத்தின் ஆரம்ப சடங்குகள்)

  • பிரதான ஆசாரியன் முதல் முறையாகத் தண்ணீரில் முழுமையாக மூழ்கித் தன்னைச் சுத்திகரித்து (Mikvah)-
  • மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்து காலை நேரத்துத் தகன பலியைச் செலுத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:4
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:1-2)
  • மீண்டும் தண்ணீரில் மூழ்கித் தன்னைச் சுத்திகரித்து-
  • பொன் வஸ்திரங்களைக் களைந்துவிட்டு- சாதாரண வெள்ளைச் சணல் வஸ்திரங்களை அணிந்துகொள்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:4
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:6)
  • தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பலியிடப்படவிருக்கும் காளையின் தலையின் மேல் தன் கைகளை வைத்து முதல் பாவ அறிக்கை செய்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:6
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:8)

இரண்டு ஆடுகள் மற்றும் சீட்டுப் போடுதல்

  • இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களை நிறுத்தி- ஒரு பொற்பெட்டியிலிருந்து இரண்டு சீட்டுகளை எடுத்து "கர்த்தருக்காக" மற்றும் "அசாசேலுக்காக" (போக்காடு) எனப் பிரிப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:7-8
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 4:1)
  • போக்காட்டின் தலையில் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டி- கர்த்தருக்கான ஆட்டையும் காளையையும் பலியிடுவதற்காக நிறுத்திவைப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:9-10
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 4:2)

மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தல்

  • பலிபீடத்திலிருந்து நெருப்பைத் தூபகலசத்தில் எடுத்துக்கொண்டு-
  • மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து-
  • தூபவர்க்கத்தைப் போட்டுப் புகையினால் கிருபாசனத்தை மறைப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:12-13
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:1)
  • காளையைக் கொன்று அதன் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேல் ஒரு முறையும்-
  • கிருபாசனத்திற்கு முன்பாக ஏழு முறையும் தெளிப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:14
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:3)
  • கர்த்தருக்கான ஆட்டைக் கொன்று-
  • அதன் இரத்தத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு சென்று முன்போலவே தெளித்து இஸ்ரவேலரின் பாவங்களுக்காகப் பிராயச்சித்தம் செய்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:15
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:4)

போக்காடு மற்றும் வனாந்தரப் பயணம்

  • உயிருள்ள போக்காட்டின் தலையில் பிரதான ஆசாரியன் தன் இரு கைகளையும் வைத்து-
  • இஸ்ரவேலரின் சகல பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டு- அதின் மேல் சுமத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:21
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 6:2)
  • நியமிக்கப்பட்ட ஒருவன் அந்தப் போக்காட்டைப் பாளையத்திற்கு வெளியே வனாந்தரத்திற்குக் கொண்டு சென்று-
  • செங்குத்தான பாறையிலிருந்து (Zuk) கீழே தள்ளிவிடுவான்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:22
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 6:6)

பண்டிகையின் முடிவு

  • பிரதான ஆசாரியன் மீண்டும் தண்ணீரில் மூழ்கி-
  • வெள்ளை வஸ்திரங்களைக் களைந்துவிட்டு-
  • மீண்டும் பொன் வஸ்திரங்களை அணிந்து
  • மற்ற தகன பலிகளைச் செலுத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:23-24
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 7:3)
  • சூரியன் மறைந்தவுடன் யோம் கிப்பூர் உபவாசம் நிறைவடையும்;
  • எக்காளம் (Shofar) முழங்கப்பட்டுப் பண்டிகை முடிவுக்கு வரும்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 25:9
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (ரோஷ் ஹஷானா 33b)
  • பிரதான ஆசாரியன் எவ்வித மரணமுமின்றித் தேவ சமூகத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்ததைக் கொண்டாடும் விதமாக-
  • மக்கள் அவரை மகிழ்ச்சியோடு அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்;
  • வீடுகளில் ஆனந்தமாக உணவருந்துவார்கள்.
  • வேத ஆதாரம்: பிரசங்கி 9:7
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 7:4)

பின்னணி விவரங்கள் (Background Details)

  • இந்த ஒரே நாளில் பிரதான ஆசாரியன் ஐந்து முறை முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி (Immersion) தன்னைச் சுத்திகரித்துக்கொள்வார்;
  • பத்து முறை தன் கைகளையும் கால்களையும் கழுவுவார்.
  • (ஆதாரம்: தல்மூட் யோமா 3:3)
  • பிரதான ஆசாரியன் தன் பாவ அறிக்கை ஜெபத்தின் போது- வழக்கமாகக் கூறக் கூடாத தேவனுடைய பரிசுத்த நாமமான "யெகோவா" (YHVH) என்ற நாமத்தை முப்பரிமாணத்தில் உச்சரிப்பார்;
  • அதைக் கேட்கும் மக்கள் பயபக்தியோடு தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்.
  • (ஆதாரம்: தல்மூட் யோமா 6:2)
  • போக்காடு வனாந்தரத்தில் மடிந்தவுடன்-
  • தேவாலயத்தின் கதவில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறக் கயிறு வெண்மையாக மாறும்;
  • இது தேவன் பாவங்களை மன்னித்துவிட்டார் என்பதற்கான அடையாளமாக மக்களால் பார்க்கப்பட்டது.
    • (ஆதாரம்: தல்மூட் யோமா 39b)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.