29. எல்லாரும் தேவனைச் சேவிக்க முடியும்
1. தனக்காக வைத்திருந்த 5 அப்பங்களையும் 2 மீனையும்
கொடுத்த பையனைப்போல -இளம் பிராயத்திலும். யோவான். 6:9
2. இராட்சதனைக் (கோலியாத்) கொன்ற தாவீதைப் போல-வாலிபப் பிராயத்திலும்; 1 சாமு, 17:54.55
3. நாகமானின் வீட்டில் வேலை செய்துவந்த யூத அடி மைப் பெண்ணைப்போல தாழ்ந்த நிலையிலும் 2இரா. 5:2-4
4. இயேசு பாலகனை ஆசீர்வதித்த சிமியோனைப்போல முதிர்வயதிலும், லூக்கா 2:25-35
5. இரண்டு காசு காணிக்கை போட்ட விதவையைப் போல- வறுமையிலும் லூக்கா 21:1-4
6. கொர்நேலியுவைப்போல - சிநேகிதர்களைப் பிரசங்கம் கேட்க ஆயத்தம் பண்ணிவைப்பதிலும். அப். 10:24: 33,44-48
7. சகரியாவையும் எலிசபெத்தையும்போல - பரிசுத்த ஜீவியத்திலும், லூக்கா 1:5,6
8. தையல்காரியான தொற்காளைப்போல நற்கிரியை களையும் தருமங்களையும் செய்வதிலும். அப் 9:36-42
9. யோவன்னாள் சூசன்னாளைப்போல- தங்கள் ஆஸ்டு சுளால் ஊழியம் செய்வதிலும். லூக்கா 8:2
10. பிலோமோனைப்போல-பரிசுத்தவான்களுடைய உள் எங்களை இளைப்பாறப் பண்ணியும். பிலே, 7
11, அன்னாளைப்போல உபவாசித்து ஜெபம்பண்ணுவ திலும், லூக்கா 3:36:37
12. ஆபிரகாமைப்போல அந்நியரை உபசரிப்பதிலும். ஆதி. 18:1-8; எபி. 13:2
13. அரிமத்தியா ஊர் யோசேப்பைப்போல கொடிய சோதனைகளாகிய துன்ப நேரத்திலும் இயேசுவுக்கு செய்ய வேண்டிய சுடமையைச் செய்வதிலும் மத். 27:57-60; லூக்கா 23:50-53; மாற்கு 15:43-46
14. எப்பாப்பிராவைப்போல போராடி ஜெயிப்பதிலும், கொலோ. 4:12; ரோமர் 15:32
15. காயுவைப்போல சபையை உபசரிப்பதிலும், ரோமர் 16:23; 3 யோவான் 1-5
16. தஞ் சகோதரனாகிய சீமோனை இயேசுவண்டை அழைத்துவந்த அந்திரேயாவைப்போல-ஆத்துமாக் களை இயேசுவண்டை வழிநடத்துதலிலும், யோவான் 1:40-42
17. யோவான் ஸ்நானனைப்போல-பாவத்தை பாவமாக வும் சத்தியத்தைச் சத்தியமாகவும் போதித்து எரிந்து பிரகாசிக்கிற விளக்காகவும், யோவான் 5:35
18. ஸ்தேவானைப்போல- இயேசுவுக்கு உத்தம சாட்சி யாய் நின்று இரத்த சாட்சியாக மரிப்பதினாலும் . அப் 7:55-60
19. தீமோத்தேயுவைப்போல - நற்சாட்சி ஜீவியத்தாலும் 16:1,2 نبر
20. ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போல தங்கள் கழுத் தைக் கொடுத்தும், ரோமர் 6:3,4,5
21. அப். பவுலைப்போல - முன்மாதிரியான ஜீவியத்தா லும் ஊக்கமான ஊழியத்தாலும். 1 கொரி. 11:1; கலா. 6:17; ரோமர் 15:19; அப். 20:19-24; ரோமர் 8:35-39; 2தீமோ. 4:6,7,8
தேவனை எல்லாரும் எவ்விதமாகிலும் சேவிக்க முடியும்!
