29 அதிகாரம்

29 அதிகாரம்

கர்த்தருடைய தெய்வீக பராமரிப்பு யாக்கோபுக்கு கிடைக்கிறது. யாக்கோபு பிரயாணம்பண்ணி, லாபானுடைய ஊருக்கு வந்து சேருகிறார் (ஆதி 29:1#14). யாக்கோபுக்கும் லாபானுடைய குமாரத்திகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது (ஆதி 29:15#30). யாக்கோபுக்கு நான்கு குமாரர்கள் பிறக்கிறார்கள் (ஆதி 29:31#35).

ஆரானில் யாக்கோபு

ஆதி 29:1#8

ஆதி 29:1. யாக்கோபு பிரயாணம் பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.

ஆதி 29:2. அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்-னால் அடைக்கப்பட்டிருந்தது.

ஆதி 29:3. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயி-ருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

ஆதி 29:4. யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

ஆதி 29:5. அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

ஆதி 29:6. அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

ஆதி 29:7. அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.

ஆதி 29:8. அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

யாக்கோபு பெத்தேலிலே கர்த்தரை தரிசிக்கிறார். கர்த்தர் யாக்கோபுக்கு ஆறுதலான வார்த்தைகளையும், ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களையும் சொல்லுகிறார். யாக்கோபு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, சந்தோஷமாய்ப் பிரயாணம்பண்ணுகிறார். அவர் கீழ்த்திசையாரின் தேசத்தில் போய் சேருகிறார்.

லாபான் ஆரானிலிருக்கிறார். லாபானுடைய ஊரார் கீழ்த்திசையார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரத்தின் முதலாவது வசனத்தில், ""யாக்கோபு பிரயாணம்பண்ணி'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்திற்கு ""யாக்கோபு தன்னுடைய கால்களை எடுத்து வைத்து'' என்று பொருள்.

யாக்கோபின் பிரயாணம் சந்தோஷமாக முடிவுபெறுகிறது. யாக்கோபு எங்கே வரவேண்டுமோ, அங்கே கர்த்தர் அவரை வழிநடத்திக் கொண்டு வருகிறார். யாக்கோபுக்கு பிரயாணத்தில் ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. யாக்கோபு போகிற இடத்திலெல்லாம் கர்த்தர் அவரைக் காத்து வழிநடத்துகிறார். கர்த்தர் யாக்கோபை கைவிடவில்லை.

யாக்கோபு ஆரானிலே வந்து சேருகிறார். அங்கே யாக்கோபு வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் காண்கிறார்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்-னால் அடைக்கப்பட்டிருக்கிறது (ஆதி 29:2).

பூமியின் மேலுள்ள தூசிகள், காற்றினால் அடித்து வரப்படும் மணல்கள் ஆகியவை கிணற்றினுள் போகாதவாறு அதை ஒரு கல்லினால் அடைப்பது வழக்கம். சில கற்கள் மிகவும் பெரியதாகவும், கனமுள்ளதாகவும் இருக்கும். அதைப் புரட்டுவதற்குப் பலர் தேவைப்படலாம்.

மேய்ப்பர்கள் எல்லா மந்தைகளும் வரும்வரைக்கும், கல்லைப் புரட்டாமல் காத்திருப்பார்கள். பொதுவாக கிணற்றின் கல்லை காலையிலும், மாலையிலும் புரட்டித் திறப்பது வழக்கம். இவ்வேளையில் ஊரிலுள்ள ஸ்திரீகளும் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவார்கள். கிணறுகளைச் சுற்றியே கிராமங்களின் குடியிருப்பு இருக்கும். பூர்வகாலத்தில் தண்ணீர் பஞ்சம் இருந்த படியினால் தண்ணீருக்காக வாக்குவாதங்களும், சண்டைகளும் நடைபெறுவதுண்டு. ஈசாக்கும், பெலிஸ்தரின் ராஜாவும், ஆபிரகாம் தோண்டிய துரவுக்காக பல மாதங்களாகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் (ஆதி 26:15-33).

அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயி-ருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள் (ஆதி 29:3).

யாக்கோபு இப்போது ஆரானுக்கு வந்திருக்கிறார். ஆனால் தான் எங்கே வந்திருக்கிறோம் என்பது யாக்கோபுக்கு தெரியவில்லை. யாக்கோபு மூன்று ஆட்டுமந்தைகளையும், அவற்றை மேய்க்கிற மேய்ப்பர்களையும் அந்த ஊரிலே பார்க்கிறார். யாக்கோபு அவர்களைப் பார்த்து: ""சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார்'' என்று கேட்கிறார்; அவர்கள், ""நாங்கள் ஆரான் ஊரார்'' (ஆதி 29:4) என்று யாக்கோபுக்கு பிரதியுத்தரம் சொல்லுகிறார்கள்.

லாபான் ஆரான் ஊரைச் சேர்ந்தவர் என்பது யாக்கோபுக்கு தெரியும். மந்தைகளை மேய்க்கிறவர்கள் லாபானை அறிந்திருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள யாக்கோபு ஆவலாயிருக்கிறார். யாக்கோபு அந்த மேய்ப்பர்களை நோக்கி, ""நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா'' என்று கேட்கிறார்; அவர்களும், ""அறிவோம்'' (ஆதி 29:5) என்று சொல்லுகிறார்கள்.

லாபான் நகோரின் குமாரனல்ல. இவன் நாகோரின் பேரன். லாபான் பெத்துவேலின் குமாரன். பெத்துவேல் நாகோரின் குமாரன். (ஆதி 22:20-24; ஆதி 24:15,24,29,47,50; ஆதி 28:2).

யாக்கோபு அவர்களிடத்தில் லாபானின் சுகசெய்தியை விசாரிக்கிறார். ""அவன் சுகமாயிருக்கிறானா'' என்று யாக்கோபு மேய்ப்பர்களிடத்தில் கேட்டபோது, அதற்கு அவர்கள், ""சுகமாயிருக்கிறான்'' என்று சொல்லுகிறார்கள். அப்போது அங்கே லாபானின் குமாரத்தியாகிய ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள். மந்தைகளின் மேய்ப்பர்கள், ராகேலைப்பற்றி யாக்கோபுக்கு சொல்லுகிறார்கள் (ஆதி 29:6).

ராகேல் யாக்கோபுக்கு மனைவியாகப்போகிறவள். கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலினால், யாக்கோபு அந்தக் கிணற்றண்டையில் வந்திருக்கிறார். அதே கிணற்றண்டையிலே ராகேலும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்.

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், சிறிய காரியமாகயிருந்தாலும், பெரிய காரியமாகயிருந்தாலும், எதுவும் எதேச்சையாக நடைபெறுவதில்லை. எல்லாமே கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமும், அவருடைய தீர்மானத்தின் பிரகாரமும் நடைபெறுகிறது.

நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் கர்த்தரும் நம்மோடு கூடவருகிறார். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார். நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவேண்டும். அப்போது நம்முடைய பிரயாணத்தில் பாதுகாப்பும், ஜெயமும் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் சிலரை சந்திப்போம். அவர்கள் நமக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை சொல்லுவார்கள். இந்த சம்பவங்கள் எதேச்சையாக நடைபெறுகிறது என்று நாம் நினைக்கக்கூடாது. கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலின் பிரகாரமாகவே நாம் அவர்களை சந்திக்கிறோம். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவே அவர்கள் நமக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை சொல்லுகிறார்கள். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறும்.

இந்த வசனப்பகுதியில் மேய்ப்பர்களைப்பற்றியும், அவர்களுடைய மந்தைகளைப்பற்றியும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு நல்ல மேய்ப்பராயிருக்கிறார். அவரே பிரதான மேய்ப்பர். இயேசுகிறிஸ்துவின் சபையே அவருடைய தொழுவம். விசுவாசிகளெல்லோரும் இயேசுகிறிஸ்துவின் தொழுவத்திலுள்ள ஆடுகளாயிருக்கிறார்கள். நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார். ஆடுகள் மேய்ப்பரின் சத்தத்திற்கு செவிகொடுக்கும்.

""நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்'' (யோவா 10:14,15).

யாக்கோபு ஆரானிலுள்ள மேய்ப்பரோடு பேசிக்கொண்டிருக்கிறார். யாக்கோபும் ஆடுகளை மேய்க்கிறவர். அவருக்கு மந்தைகளை எப்படி மேய்க்கவேண்டும் என்றும், ஆடுகளுக்கு எப்போது தண்ணீர் காட்டவேண்டும் என்பதும் தெரியும்.

யாக்கோபு ஆரானிலுள்ள மந்தைகளின் மேய்ப்பர்களை நோக்கி, ""இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம்'' (ஆதி 29:7) என்று சொல்லுகிறார்.

எல்லா ஆடுகளுக்கும் ஒரே வேளையில் தண்ணீர் காட்டவேண்டுமென்று மேய்ப்பர்கள் சொல்லுகிறார்கள். ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்கு என்று அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த வேளையில் எல்லா மேய்ப்பர்களும் கிணற்றண்டையிலே ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

மந்தைகளின் மேய்ப்பர்கள் யாக்கோபை நோக்கி, ""எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்'' (ஆதி 29:8) என்று சொல்லுகிறார்கள்.

ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட ஆரானிலுள்ள மேய்ப்பர்களும் வருவார்கள். மற்ற ஊர்களிலுள்ள மேய்ப்பர்களும் வருவார்கள். ஆரானிலுள்ள மேய்ப்பர்கள் அந்நியர்களை உபசரிக்கிறார்கள். அவர்களுடைய ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்து அவர்களை ஆதரிக்கிறார்கள். அன்பின் பிரமாணம் மிகுந்த பலமுள்ளது.

""குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது'' (நீதி 31:26).

ராகேல்

ஆதி 29:9#14

ஆதி 29:9. அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள்.

ஆதி 29:10. யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயி-ருந்த கல்லைப்புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

ஆதி 29:11. பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,

ஆதி 29:12. தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.

ஆதி 29:13. லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு, முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான்.

ஆதி 29:14. அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

ராகேல் ரூபவதியாகவும், பார்வைக்கு அழகானவளுமாயிருக்கிறாள். யாக்கோபு கிணற்றண்டையில் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுகிற மேய்ப்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள் (ஆதி 29:9).

யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், லாபானின் ஆடுகளையும் காண்கிறார். அப்போது, யாக்கோபு போய், கிணற்றின் வாயி-ருந்த கல்லைப்புரட்டி, லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுகிறார் (ஆதி 29:10).

ராகேல் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவள். அவள் மிகுந்த மனத்தாழ்மையுள்ளவள். யாக்கோபு இப்போதுதான் ராகேலை முதன் முறையாக பார்க்கிறார். யாக்கோபுக்கு ராகேல் மீது பிரியம் இருக்கிறது. அவர் ஒரு குணசாலி. இரக்ககுணமுள்ளவர். யாக்கோபு லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுகிறார். அவர் ராகேலுக்கு உதவிசெய்ய விரும்புகிறார். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுகிறார் (ஆதி 29:11).

யாக்கோபு சத்தமிட்டு அழுவதற்கு வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். அவர் ராகேலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அந்த ஆச்சரியத்தினாலும், சந்தோஷத்தினாலும் யாக்கோபின் கண்களில் கண்ணீர் வருகிறது. யாக்கோபு ராகேல் பேரில் பிரியமாயிருக்கிறார்.

ராகேலுக்கு யாக்கோபைப்பற்றித் தெரியாது. யாக்கோபு அவளிடத்தில் தன்னைப்பற்றிச் சொல்லுகிறார். தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் யாக்கோபு ராகேலுக்கு அறிவிக்கிறார். ராகேல் ஓடிப்போய் இந்தச் செய்தியை தன் தகப்பனுக்கு அறிவிக்கிறாள் (ஆதி 29:12).

யாக்கோபு லாபானுடைய சகோதரியின் குமாரன். லாபான் இந்தச் செய்தியை கேட்டபோது, அவர் யாக்கோபுக்கு எதிர்கொண்டு ஓடி, அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்கிறார். லாபான் யாக்கோபை தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகிறார். யாக்கோபு லாபானுடைய வீட்டிலே தன் காரியங்களையெல்லாம் அவருக்கு விவரமாகச் சொல்லுகிறார்.

கிழக்கு தேசங்களில் முத்தம் செய்து வரவேற்கும் வழக்கம் இருந்தது. புருஷர், மற்ற புருஷரை முத்தஞ்செய்தார்கள். (ஆதி 29:13; ஆதி 27:27; ஆதி 33:4; ஆதி 45:15; ஆதி 48:10; யாத் 4:27; யாத் 18:7; 1சாமு 20:41; லூக்கா 15:20; அப் 20:37).

தன்னுடைய பிரயாணத்தின் நோக்கம், பெத்தேலில் நடைபெற்ற நிகழ்ச்சி, கிணற்றண்டையில் தான் வந்தபொழுது அங்கு நடைபெற்ற காரியங்கள் ஆகிய அனைத்தையும், யாக்கோபு லாபானிடம் விவரமாகச் சொல்லுகிறார்.

லாபான் யாக்கோபை அதிகமாய் நேசிக்கிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""நீ என் எலும்பும், என் மாம்சமுமானவன்'' என்று அன்பான வார்த்தைகளை சொல்லுகிறார். யாக்கோபு ஒரு மாதம் வரைக்கும் லாபானிடத்தில் தங்குகிறார் (ஆதி 29:14).

அதிகாரம்

கர்த்தருடைய தெய்வீக பராமரிப்பு யாக்கோபுக்கு கிடைக்கிறது. யாக்கோபு பிரயாணம்பண்ணி, லாபானுடைய ஊருக்கு வந்து சேருகிறார் (ஆதி 29:1#14). யாக்கோபுக்கும் லாபானுடைய குமாரத்திகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது (ஆதி 29:15#30). யாக்கோபுக்கு நான்கு குமாரர்கள் பிறக்கிறார்கள் (ஆதி 29:31#35).

ஆரானில் யாக்கோபு

ஆதி 29:1#8

ஆதி 29:1. யாக்கோபு பிரயாணம் பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.

ஆதி 29:2. அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்-னால் அடைக்கப்பட்டிருந்தது.

ஆதி 29:3. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயி-ருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

ஆதி 29:4. யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

ஆதி 29:5. அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

ஆதி 29:6. அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

ஆதி 29:7. அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.

ஆதி 29:8. அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

யாக்கோபு பெத்தேலிலே கர்த்தரை தரிசிக்கிறார். கர்த்தர் யாக்கோபுக்கு ஆறுதலான வார்த்தைகளையும், ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களையும் சொல்லுகிறார். யாக்கோபு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, சந்தோஷமாய்ப் பிரயாணம்பண்ணுகிறார். அவர் கீழ்த்திசையாரின் தேசத்தில் போய் சேருகிறார்.

லாபான் ஆரானிலிருக்கிறார். லாபானுடைய ஊரார் கீழ்த்திசையார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரத்தின் முதலாவது வசனத்தில், ""யாக்கோபு பிரயாணம்பண்ணி'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்திற்கு ""யாக்கோபு தன்னுடைய கால்களை எடுத்து வைத்து'' என்று பொருள்.

யாக்கோபின் பிரயாணம் சந்தோஷமாக முடிவுபெறுகிறது. யாக்கோபு எங்கே வரவேண்டுமோ, அங்கே கர்த்தர் அவரை வழிநடத்திக் கொண்டு வருகிறார். யாக்கோபுக்கு பிரயாணத்தில் ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. யாக்கோபு போகிற இடத்திலெல்லாம் கர்த்தர் அவரைக் காத்து வழிநடத்துகிறார். கர்த்தர் யாக்கோபை கைவிடவில்லை.

யாக்கோபு ஆரானிலே வந்து சேருகிறார். அங்கே யாக்கோபு வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் காண்கிறார்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்-னால் அடைக்கப்பட்டிருக்கிறது (ஆதி 29:2).

பூமியின் மேலுள்ள தூசிகள், காற்றினால் அடித்து வரப்படும் மணல்கள் ஆகியவை கிணற்றினுள் போகாதவாறு அதை ஒரு கல்லினால் அடைப்பது வழக்கம். சில கற்கள் மிகவும் பெரியதாகவும், கனமுள்ளதாகவும் இருக்கும். அதைப் புரட்டுவதற்குப் பலர் தேவைப்படலாம்.

மேய்ப்பர்கள் எல்லா மந்தைகளும் வரும்வரைக்கும், கல்லைப் புரட்டாமல் காத்திருப்பார்கள். பொதுவாக கிணற்றின் கல்லை காலையிலும், மாலையிலும் புரட்டித் திறப்பது வழக்கம். இவ்வேளையில் ஊரிலுள்ள ஸ்திரீகளும் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவார்கள். கிணறுகளைச் சுற்றியே கிராமங்களின் குடியிருப்பு இருக்கும். பூர்வகாலத்தில் தண்ணீர் பஞ்சம் இருந்த படியினால் தண்ணீருக்காக வாக்குவாதங்களும், சண்டைகளும் நடைபெறுவதுண்டு. ஈசாக்கும், பெலிஸ்தரின் ராஜாவும், ஆபிரகாம் தோண்டிய துரவுக்காக பல மாதங்களாகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் (ஆதி 26:15-33).

அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயி-ருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள் (ஆதி 29:3).

யாக்கோபு இப்போது ஆரானுக்கு வந்திருக்கிறார். ஆனால் தான் எங்கே வந்திருக்கிறோம் என்பது யாக்கோபுக்கு தெரியவில்லை. யாக்கோபு மூன்று ஆட்டுமந்தைகளையும், அவற்றை மேய்க்கிற மேய்ப்பர்களையும் அந்த ஊரிலே பார்க்கிறார். யாக்கோபு அவர்களைப் பார்த்து: ""சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார்'' என்று கேட்கிறார்; அவர்கள், ""நாங்கள் ஆரான் ஊரார்'' (ஆதி 29:4) என்று யாக்கோபுக்கு பிரதியுத்தரம் சொல்லுகிறார்கள்.

லாபான் ஆரான் ஊரைச் சேர்ந்தவர் என்பது யாக்கோபுக்கு தெரியும். மந்தைகளை மேய்க்கிறவர்கள் லாபானை அறிந்திருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள யாக்கோபு ஆவலாயிருக்கிறார். யாக்கோபு அந்த மேய்ப்பர்களை நோக்கி, ""நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா'' என்று கேட்கிறார்; அவர்களும், ""அறிவோம்'' (ஆதி 29:5) என்று சொல்லுகிறார்கள்.

லாபான் நகோரின் குமாரனல்ல. இவன் நாகோரின் பேரன். லாபான் பெத்துவேலின் குமாரன். பெத்துவேல் நாகோரின் குமாரன். (ஆதி 22:20-24; ஆதி 24:15,24,29,47,50; ஆதி 28:2).

யாக்கோபு அவர்களிடத்தில் லாபானின் சுகசெய்தியை விசாரிக்கிறார். ""அவன் சுகமாயிருக்கிறானா'' என்று யாக்கோபு மேய்ப்பர்களிடத்தில் கேட்டபோது, அதற்கு அவர்கள், ""சுகமாயிருக்கிறான்'' என்று சொல்லுகிறார்கள். அப்போது அங்கே லாபானின் குமாரத்தியாகிய ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள். மந்தைகளின் மேய்ப்பர்கள், ராகேலைப்பற்றி யாக்கோபுக்கு சொல்லுகிறார்கள் (ஆதி 29:6).

ராகேல் யாக்கோபுக்கு மனைவியாகப்போகிறவள். கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலினால், யாக்கோபு அந்தக் கிணற்றண்டையில் வந்திருக்கிறார். அதே கிணற்றண்டையிலே ராகேலும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்.

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், சிறிய காரியமாகயிருந்தாலும், பெரிய காரியமாகயிருந்தாலும், எதுவும் எதேச்சையாக நடைபெறுவதில்லை. எல்லாமே கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமும், அவருடைய தீர்மானத்தின் பிரகாரமும் நடைபெறுகிறது.

நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் கர்த்தரும் நம்மோடு கூடவருகிறார். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார். நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவேண்டும். அப்போது நம்முடைய பிரயாணத்தில் பாதுகாப்பும், ஜெயமும் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் சிலரை சந்திப்போம். அவர்கள் நமக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை சொல்லுவார்கள். இந்த சம்பவங்கள் எதேச்சையாக நடைபெறுகிறது என்று நாம் நினைக்கக்கூடாது. கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலின் பிரகாரமாகவே நாம் அவர்களை சந்திக்கிறோம். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவே அவர்கள் நமக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை சொல்லுகிறார்கள். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறும்.

இந்த வசனப்பகுதியில் மேய்ப்பர்களைப்பற்றியும், அவர்களுடைய மந்தைகளைப்பற்றியும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு நல்ல மேய்ப்பராயிருக்கிறார். அவரே பிரதான மேய்ப்பர். இயேசுகிறிஸ்துவின் சபையே அவருடைய தொழுவம். விசுவாசிகளெல்லோரும் இயேசுகிறிஸ்துவின் தொழுவத்திலுள்ள ஆடுகளாயிருக்கிறார்கள். நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார். ஆடுகள் மேய்ப்பரின் சத்தத்திற்கு செவிகொடுக்கும்.

""நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்'' (யோவா 10:14,15).

யாக்கோபு ஆரானிலுள்ள மேய்ப்பரோடு பேசிக்கொண்டிருக்கிறார். யாக்கோபும் ஆடுகளை மேய்க்கிறவர். அவருக்கு மந்தைகளை எப்படி மேய்க்கவேண்டும் என்றும், ஆடுகளுக்கு எப்போது தண்ணீர் காட்டவேண்டும் என்பதும் தெரியும்.

யாக்கோபு ஆரானிலுள்ள மந்தைகளின் மேய்ப்பர்களை நோக்கி, ""இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம்'' (ஆதி 29:7) என்று சொல்லுகிறார்.

எல்லா ஆடுகளுக்கும் ஒரே வேளையில் தண்ணீர் காட்டவேண்டுமென்று மேய்ப்பர்கள் சொல்லுகிறார்கள். ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்கு என்று அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த வேளையில் எல்லா மேய்ப்பர்களும் கிணற்றண்டையிலே ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

மந்தைகளின் மேய்ப்பர்கள் யாக்கோபை நோக்கி, ""எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்'' (ஆதி 29:8) என்று சொல்லுகிறார்கள்.

ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட ஆரானிலுள்ள மேய்ப்பர்களும் வருவார்கள். மற்ற ஊர்களிலுள்ள மேய்ப்பர்களும் வருவார்கள். ஆரானிலுள்ள மேய்ப்பர்கள் அந்நியர்களை உபசரிக்கிறார்கள். அவர்களுடைய ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்து அவர்களை ஆதரிக்கிறார்கள். அன்பின் பிரமாணம் மிகுந்த பலமுள்ளது.

""குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது'' (நீதி 31:26).

லாபானும் யாக்கோபும்

ஆதி 29:15#30

ஆதி 29:15. பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

ஆதி 29:16. லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

ஆதி 29:17. லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

ஆதி 29:18. யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

ஆதி 29:19. அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.

ஆதி 29:20. அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக எழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

ஆதி 29:21. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

ஆதி 29:22. அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணினான்.

ஆதி 29:23. அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக் கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.

ஆதி 29:24. லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

ஆதி 29:25. காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர் என்றான்.

ஆதி 29:26. அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.

ஆதி 29:27. இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

ஆதி 29:28. அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

ஆதி 29:29. மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

ஆதி 29:30. யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

யாக்கோபு லாபானுடைய வீட்டிலே ஒரு மாதம் வரைக்கும் விருந்தாளியாக தங்கியிருக்கிறார். யாக்கோபு தன் மாமன் வீட்டில் சும்மாயிருக்காமல், அவருடைய வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கிறார். யாக்கோபு தனக்கு சும்மா வேலை செய்வது லாபானுக்கு பிடிக்கவில்லை.

லாபான் யாக்கோபை நோக்கி: ""நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல்'' (ஆதி 29:15) என்று கேட்கிறார். யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்படுகிறார். அவள்மீது தான் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவே நல்ல தருணம் என்று யாக்கோபு நினைக்கிறார். யாக்கோபு லாபானை நோக்கி, ""உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழுவருஷம் வேலை செய்கிறேன்'' (ஆதி 29:18) என்று சொல்லுகிறார்.

ஐரோப்பிய தேசங்களில் பெண்ணின் தந்தை மணமகனுக்கு வரதட்சணை கொடுப்பார். ஆனால் கிழக்கு தேசங்களில் பெண்ணின் தந்தை மணமகனிடம் வரதட்சணை பெற்றுக் கொள்வார். பல மனைவிகளைத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்ததினால் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து அவர்களைத் திருமணம் செய்து வந்தார்கள். பேராசையுள்ள பெண்ணின் தகப்பனார்கள் தங்கள் மகள்களை வைத்து அதிக பணம் சம்பாதிப்பதும் உண்டு.

லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருக்கிறார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருக்கிறது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருக்கிறாள் (ஆதி 29:16,17). யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்படுகிறார்.

யாக்கோபிடத்தில் இப்போது உலகப்பிரகாரமான ஐசுவரியம் எதுவுமில்லை. ராகேலை திருமணம் செய்து கொள்வதற்கு, பரிசம் கொடுப்பதற்குகூட யாக்கோபின் கையிலே பணம் இல்லை. ஆனாலும் யாக்கோபு ராகேலுக்காக லாபானிடத்தில் ஏழுவருஷம் வேலை செய்ய சம்மதிக்கிறார். ஏழுவருஷம் முடிந்த பின்பு, லாபான் தன் இளைய குமாரத்தியாகிய ராகேலை யாக்கோபுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும்.

யாக்கோபு சொல்லுகிற வார்த்தைகளை லாபானும் ஏற்றுக்கொள்கிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு'' (ஆதி 29:19) என்று சொல்லுகிறார்.

லாபான் தன் மகளை அந்நிய இனத்தாருக்குக் கொடுக்க விரும்பவில்லை. தன்னுடைய இனத்தாருக்குள், உறவினருக்குள் திருமணம் செய்து வைப்பது அக்காலத்து வழக்கம்.

அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக எழு வருஷம் வேலை செய்கிறார்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் யாக்கோபுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றுகிறது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: ""என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்'' (ஆதி 29:20,21) என்று கேட்கிறார்.

யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தார். ஆதி 29:18-30 ஆகிய வசனங்களைப் பார்க்கும்போது லேயாள், ராகேல் ஆகியோரை யாக்கோபு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அவர் லாபானுக்கு ஏழு வருஷம் வேலை செய்தார் என்று கூறப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. வேதபண்டிதர்களில் சிலர் யாக்கோபு இவ்விருவரையும் திருமணம் செய்து கொண்ட பின்பே, லாபானிடம் பதினான்கு வருஷங்களாக வேலை செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

யாக்கோபு லாபானுக்கு உண்மையாய் வேலை செய்கிறார். யாக்கோபிடத்தில் மாய்மாலமோ, ஏமாற்று வேலையோ இல்லை. யாக்கோபின் மனதிலே அதிகமாய் பணம் சம்பாதிக்கவேண்டும் என்னும் ஆசையில்லை. ராகேலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பம் மாத்திரமே யாக்கோபுக்கு இருக்கிறது. அவருக்கு ராகேலின்மீது அதிகமான பிரியம் இருக்கிறது. இதனால் யாக்கோபு லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்தாலும், அந்த வருஷங்கள் யாக்கோபுக்கு கொஞ்சநாளைப்போல தோன்றுகிறது. யாக்கோபு களைப்பும் சலிப்பும் இல்லாமல் லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்கிறார்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணுகிறார். அன்று இரவிலே லாபான் தன் மூத்தகுமாரத்தியாகிய லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடத்தில் விடுகிறார்; யாக்கோபு லேயாளை சேருகிறார். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:22#24).

அக்காலத்தில், திருமண விருந்தை ஒருவார காலத்துக்கு அனுசரிப்பது வழக்கம் (ஆதி 29:27-28; நியா 14:12).

சில்பாள் என்பவள் காத், ஆசேர் ஆகியோருக்குத் தாய். (ஆதி 30:10-13) திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் அடிமைகள் மகளுடைய சொந்தச் சொத்தாகும். புருஷனுக்கு அடிமைகள்மீது எவ்வித உரிமையும் இல்லை.

யாக்கோபு லாபானுக்கு உண்மையாயும் கண்ணியமாயும் வேலை செய்கிறார். ஆனால் லாபானோ யாக்கோபை வஞ்சித்துவிடுகிறார். யாக்கோபு லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்திருக்கிறார். அவர்கள் ஏற்கெனவே பேசி சம்மதித்துக்கொண்ட பிரகாரம் ஏழுவருஷம் முடியும்போது, ராகேலை யாக்கோபுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் லாபானோ யாக்கோபுக்கு ராகேலைக் கொடுப்பதற்குப் பதிலாக லேயாளைக் கொடுக்கிறார். இரவின் இருட்டிலே லாபான் யாக்கோபை ஏமாற்றிவிடுகிறார்.

லாபான் யாக்கோபை வஞ்சித்தது, அவருடைய பாவம். லாபான் யாக்கோபுக்கு விரோதமாகவும், ராகேலுக்கு விரோதமாகவும் பாவம் செய்திருக்கிறார். யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரர். ஏமாற்றுக்காரராகிய யாக்கோபு, இப்போது லாபானால் ஏமாற்றப்படுகிறார். யாக்கோபு தன் தகப்பனாரை வஞ்சித்து, ஏசாவுக்கு கிடைக்கவேண்டிய ஆசீர்வாதத்தை ஏமாற்றிப்பெற்றுக்கொண்டார். இப்போது லாபான் யாக்கோபை ஏமாற்றுகிறார். யாக்கோபு தன் தகப்பனாரை ஏமாற்றினார். இப்போது மாமனார் மருமகனாகிய யாக்கோபை ஏமாற்றுகிறார்.

இரவு வேளையிலே தான் ஏமாற்றப்பட்டது யாக்கோபுக்கு தெரியவில்லை. அவர் லேயாளோடே சேருகிறார். லேயாளை ராகேல் என்று நினைத்து யாக்கோபு அவளோடு சேருகிறார். காலைப்பொழுதில்தான் தான் ஏமாற்றப்பட்டது யாக்கோபுக்கு தெரிகிறது . காலையில் தன்னோடு கூடயிருப்பது லேயாள் என்பதை யாக்கோபு காண்கிறார்.

அக்காலத்தில் மணப்பெண்ணை முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். அத்துடன் திருமண அறையும் இருட்டாக இருக்கும். லேயாளை மாலை வேளையில் யாக்கோபுவிடம் அழைத்து வருகிறார்கள். அவள் யாரென்று தெரியாமலேயே யாக்கோபு ஏமாந்து போகிறார்.

யாக்கோபு லாபானை நோக்கி, ""ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்'' (ஆதி 29:25) என்று கேட்கிறார்.

யாக்கோபு இதுவரையிலும் மற்றவர்களை வஞ்சித்தார். (ஆதி 27) இப்பொழுது மற்றவர்களின் வஞ்சனைக்கு யாக்கோபு ஆளாகிறார். (ஆதி 31: 7-10,31; ஆதி 34:30; ஆதி 37: 28-36; ஆதி 35:22; ஆதி 43:1-28).

லாபானோ தன்னுடைய தப்பிதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் யாக்கோபுக்கு சாக்குப்போக்கு சொல்லுகிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய்'' (ஆதி 29:26,27) என்று சொல்லுகிறார்.

கிழக்கு தேசத்தில் மூத்தவளுக்கு திருமணமான பின்பே இளையவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். மூத்தவள் உடல் ஊனமானவளாகவோ, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவளாகவோ இருந்தால் அவளை ஒதுக்கி வைத்து விட்டு, இளையவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். தனக்கு லேயாள் என்று ஒரு மகள் இருப்பதை லாபான் யாக்கோபுக்கு மறைத்து விட்டார். லேயாளுக்கு திருமணமாகும் வரையில் லாபான் யாக்கோபிடம் அவளைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

யாக்கோபு ராகேலுக்காக எதையும் செய்வார் என்பது லாபானுக்குத் தெரியும். லாபான் யாக்கோபை ஏமாற்றினார். லாபான் தன் இரண்டு மகள்களுக்கும் யாக்கோபிடமிருந்து நல்ல வரதட்சணையைப் பெற்றுக் கொண்டார். (நியா 15:2; 1சாமு 14:49; 1சாமு 18:17-20,28).

லாபான் சொல்லுகிற பிரகாரமாக மெய்யாகவே ஆரானிலே மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுக்கக்கூடாது என்னும் வழக்கம் இருந்ததா என்பது தெரியவில்லை. இது லாபானுடைய சுயகற்பனை. யாக்கோபை வஞ்சிக்கவேண்டும் என்பதற்காக லாபான் சாதுரியமாகப் பேசுகிறார். யாக்கோபை வஞ்சித்ததினால் லாபானின் மனதில் சந்தோஷமுண்டாயிற்று. லாபான் தன்னுடைய தப்பிதத்தை திருத்துவதற்காக, ""ராகேலையும் உனக்குத்தருவேன்'' என்று சொல்லுகிறார். ஒரு சிறிய தப்பிதத்தை மூடி மறைப்பதற்கு, லாபான் பெரிய தப்பிதத்தை செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.

லாபான் இப்போது யாக்கோபையும் பாவம் செய்யுமாறு வழிநடத்துகிறார். யாக்கோபுக்கு மறைவாக கண்ணியை விரிக்கிறார். யாக்கோபுக்கு லேயாள் ஏற்கெனவே மனைவியாயிருக்கிறாள். அவருக்கு இப்போது ராகேலையும் மனைவியாகக் கொடுக்க லாபான் சம்மதிக்கிறார்.

யாக்கோபு குணசாலி. அவர் கண்ணியமானவர். யாக்கோபு ராகேலை மாத்திரமே திருமணம் செய்யவேண்டும் என்று விரும்பினார். தனக்கு ஒரு மனைவி மாத்திரம் போதும் என்று நினைத்தார். பல மனைவிகளை விவாகம்பண்ணவேண்டும் என்பது யாக்கோபின் விருப்பமோ திட்டமோ அல்ல. ஆனால் லாபான் யாக்கோபை ஏமாற்றி, அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை விவாகம் செய்து கொடுக்க திட்டமிடுகிறார்.

யாக்கோபு ராகேல் மீது பிரியமாயிருக்கிறார். ராகேலை விட்டுக்கொடுக்க யாக்கோபுக்கு மனமில்லை. தனக்கு ராகேல் மனைவியாக வேண்டுமென்று யாக்கோபு விரும்புகிறார். ஆகையினால் லாபானுடைய வார்த்தையின் பிரகாரம், யாக்கோபு ராகேலுக்காக இன்னும் ஏழுவருஷம் அவரிடத்தில் வேலை செய்ய சம்மதிக்கிறார். ராகேல் தனக்கு வேண்டுமென்றால், யாக்கோபுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

லாபான் யாக்கோபை நோக்கி, ""இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று'' என்று சொல்லுகிறார். லாபான் ஏழு நாள் விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறார். விருந்தினர்கள் அநேகரை அழைத்திருக்கிறார். இந்த ஏழு நாளிலும் விருந்திற்கு எவ்வித இடையூறும் பண்ண வேண்டாமென்று லாபான் யாக்கோபிடம் கேட்டுக் கொள்கிறார். (ஆதி 29:22).

ராகேலையும், யாக்கோபுக்கு மணம் முடித்துத் தருவதாக லாபான் வாக்குப்பண்ணுகிறார். யாக்கோபு லாபானின் நிபந்தனைகளுக்கெல்லாம் ஒப்புக்கொண்டு, லேயாளையும் திருமணம் செய்து கொள்கிறார். ராகேலையும் திருமணம் செய்து கொள்கிறார். (ஆதி 29:27-28).

அந்தப்படியே யாக்கோபு, லேயாளுடைய ஏழுநாளை நிறைவேற்றுகிறார். அப்பொழுது லாபான் தன் இளைய குமாரத்தியாகிய ராகேலையும் யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:28). இஸ்ரவேலரின் முற்பிதாக்களுடைய ஜீவியத்திலே பல மனைவி விவாகம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

முற்பிதாக்களின் காலத்தில் பல மனைவி விவாகம் தடைபண்ணப்படவில்லை. பல மனைவி விவாகத்திற்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல மனைவி விவாகத்திற்கு எதிராக, அக்காலத்தில் திட்டமான பிரமாணம் எதுவும் சொல்லப்படவில்லை.

""அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னைஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' (மல் 2:15).

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது மாத்திரமே கர்த்தருடைய பிரமாணம். ""ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்'' (1கொரி 7:2).

லாபான் யாக்கோபுக்கு லேயாளைக் கொடுத்தபோது, தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார் (ஆதி 28:24). இப்போது லாபான் யாக்கோபுக்கு ராகேலை மனைவியாகக் கொடுக்கிறபோது, தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:29).

யாக்கோபு ராகேலையும் சேருகிறார்; யாக்கோபு லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் லாபானிடத்தில் சேவிக்கிறார் (ஆதி 29:30).

மூன்றாவதாக சந்ததியாக குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஈசாக்கு, இஸ்மவேல் ஆகியோரைக் குறித்து சாராள், ஆகார், ஆபிரகாம் ஆகியோரிடையே பிரச்சனை இருந்தது. (ஆதி 16:1-16; ஆதி 17:18; ஆதி 21:9-16; கலா 4: 21-31). யாக்கோபு, ஏசா ஆகியோரைக் குறித்து ஈசாக்கு, ரெபெக்காள் ஆகியோரிடையே பிரச்சனை இருந்தது. (ஆதி 25:28;27). இங்கு யாக்கோபின் மனைவிகளுக்குள் பிரச்சனை வருகிறது (ஆதி 29:31-30:43).

வேதபண்டிதர்கள் லேயாளுக்கும் ராகேலுக்கும் ஆவிக்குரிய வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இவர்கள் இருவரும் இரண்டு சபைகளுக்கு அடையாளமாயிருக்கிறார்கள். லேயாள் நியாயப்பிரமாணத்திற்கு கீழிருக்கிற யூதர்களுக்கு அடையாளம். ராகேலோ சுவிசேஷத்திற்கு கீழிருக்கிற புறஜாதியாருக்கு அடையாளம்.

ராகேல் மூத்தவளைவிட ரூபவதியாயிருக்கிறாள். கிறிஸ்துவைப்பற்றிய சிந்தனையினால், புதிய ஏற்பாட்டுக்காலத்து சபையானது அதிக அழகுள்ளதாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் மனுஷரூபமெடுத்து, ஒரு வேலையாளைப்போல இந்த உலகத்திற்கு வந்தார். யாக்கோபு லேயாளோடு முதலாவதாக சேர்ந்தார். யூதர்களே நியாயப்பிரமாணத்தை முதலாவதாக பற்றிக்கொண்டார்கள்.

யாக்கோபின் நான்கு குமாரர்

ஆதி 29:31#35

ஆதி 29:31. லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பம் தரிக்கும் செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

ஆதி 29:32. லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்-, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

ஆதி 29:33. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்-, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

ஆதி 29:34. பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்-, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

ஆதி 29:35. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்-, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப் பேறு நின்று போயிற்று.

யாக்கோபுக்கு லேயாள் மூலமாக நான்கு குமாரர் பிறக்கிறார்கள். ஆனால் யாக்கோபோ லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அதிகமாய் நேசிக்கிறார். லேயாள் அற்பமாய் எண்ணப்படுகிறாள். கர்த்தர் இதைக்கண்டு, லேயாளை கர்ப்பம் தரிக்கும்படி செய்கிறார். ராகேலோ மலடியாயிருக்கிறாள் (ஆதி 29:31).

லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுகிறாள். அவனுக்கு ரூபன் என்று பேரிடுகிறாள். லேயாள் தன்னுடைய பிள்ளைகளுக்கு பேரிடும்போது தேவன்மீதும், தன் புருஷனாகிய யாக்கோபின்மீதும் தன்னுடைய மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறாள்.

லேயாள் தன் முதலாவது குமாரனுக்கு ரூபன் என்று பேரிடுகிறாள். ""கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார்'' என்று சொல்-, லேயாள் அவனுக்கு ரூபன் என்று பேரிடுகிறாள் (ஆதி 29:32).

லேயாள் தன்னுடைய இரண்டாவது குமாரனுக்கு சிமியோன் என்றும், மூன்றாவது குமாரனுக்கு லேவி என்றும், நான்காவது குமாரனுக்கு யூதா என்றும் பேரிடுகிறாள்.

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள். அதை கர்த்தர் கேட்டருளி, தனக்கு ஒரு குமாரனைத் தந்தார் என்று சொல்லி, லேயாள் தன்னுடய இரண்டாவது குமாரனுக்கு சிமியோன் என்று பேரிடுகிறாள்.

லேயாளுக்கு மூன்றாவதாக ஒரு குமாரன் பிறக்கிறான். ஆனாலும் யாக்கோபு லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அதிகமாய் நேசிக்கிறார். லேயாள் தன் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது தன்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, தன்னுடைய மூன்றாவது குமாரனுக்கு லேவி என்று பேரிடுகிறாள்.

லேயாள் தன்னுடைய குமாரருக்கு பேரிடும்போது, ""நான் அற்பமாய் எண்ணப்பட்டதை கர்த்தர் கேட்டருளினார்'' என்றும், ""கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார்'' என்றும், ""கர்த்தரைத் துதிப்பேன்'' என்றும் பொருள்படும் வண்ணமாக, தன் குமாரருக்கு பேரிடுகிறாள்.

லேயாளின் நான்காவது குமாரனுக்கு யூதா என்று பேர். லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றபோது, ""இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்'' என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிடுகிறாள். பிற்பாடு அவளுக்கு பிள்ளைபேறு நின்றுபோயிற்று.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, இந்தப் பூமியிலே மனுஷராக அவதரித்தபோது, அவர் யூதாகோத்திரத்தில் அவதரிக்கிறார். கிறிஸ்துவானவரே நம்முடைய துதிகளுக்கு பாத்திரராயிருக்கிறார். நம்முடைய இருதயத்தில் கிறிஸ்து உருவாகும்போது, நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.

ரூபன் என்னும் பெயருக்கு ""ஒரு குமாரன்'' என்று பொருள். யாக்கோபு லேயாளைக் குறைவாகவே நேசிக்கிறார். ராகேலுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக லேயாளுக்குக் குழந்தை பிறக்கிறது (ஆதி 29:30-32).

சிமியோன் என்னும் பெயருக்கு ""கேட்டருளுதல்'' என்று பொருள். லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, மேலும் ஒரு குமாரனை லேயாளுக்குக் கொடுத்திருக்கிறார். யாக்கோபு இதன் மூலமாக தன்னை அதிகமாக நேசிப்பார் என்று லேயாள் நினைக்கிறாள். (ஆதி 29:33).

லேவி என்னும் பெயருக்குச் ""சேர்ந்திருப்பது'' என்று பொருள். தனக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருப்பதினால், யாக்கோபு தன்னை நேசித்து இனிமேல் தன்னுடனே சேர்ந்திருப்பார் என்று லேயாள் நினைக்கிறாள்.

யூதா என்னும் பெயருக்கு ""துதித்தல்'' என்று பொருள். லேயாளுக்கு நான்கு குமாரர்கள் பிறந்திருக்கிறார்கள். இதற்காக லேயாள் கர்த்தரைத் துதிக்கிறாள். யூதா கோத்திரத்திலிருந்து மேசியா பிறப்பார் (ஆதி 49:10; ஏசா 9:6-7).

யாக்கோபும்

ஆதி 29:15#30

ஆதி 29:15. பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

ஆதி 29:16. லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

ஆதி 29:17. லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

ஆதி 29:18. யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

ஆதி 29:19. அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.

ஆதி 29:20. அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக எழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

ஆதி 29:21. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

ஆதி 29:22. அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணினான்.

ஆதி 29:23. அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக் கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.

ஆதி 29:24. லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

ஆதி 29:25. காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர் என்றான்.

ஆதி 29:26. அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.

ஆதி 29:27. இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

ஆதி 29:28. அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

ஆதி 29:29. மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

ஆதி 29:30. யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

யாக்கோபு லாபானுடைய வீட்டிலே ஒரு மாதம் வரைக்கும் விருந்தாளியாக தங்கியிருக்கிறார். யாக்கோபு தன் மாமன் வீட்டில் சும்மாயிருக்காமல், அவருடைய வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கிறார். யாக்கோபு தனக்கு சும்மா வேலை செய்வது லாபானுக்கு பிடிக்கவில்லை.

லாபான் யாக்கோபை நோக்கி: ""நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல்'' (ஆதி 29:15) என்று கேட்கிறார். யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்படுகிறார். அவள்மீது தான் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவே நல்ல தருணம் என்று யாக்கோபு நினைக்கிறார். யாக்கோபு லாபானை நோக்கி, ""உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழுவருஷம் வேலை செய்கிறேன்'' (ஆதி 29:18) என்று சொல்லுகிறார்.

ஐரோப்பிய தேசங்களில் பெண்ணின் தந்தை மணமகனுக்கு வரதட்சணை கொடுப்பார். ஆனால் கிழக்கு தேசங்களில் பெண்ணின் தந்தை மணமகனிடம் வரதட்சணை பெற்றுக் கொள்வார். பல மனைவிகளைத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்ததினால் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து அவர்களைத் திருமணம் செய்து வந்தார்கள். பேராசையுள்ள பெண்ணின் தகப்பனார்கள் தங்கள் மகள்களை வைத்து அதிக பணம் சம்பாதிப்பதும் உண்டு.

லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருக்கிறார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருக்கிறது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருக்கிறாள் (ஆதி 29:16,17). யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்படுகிறார்.

யாக்கோபிடத்தில் இப்போது உலகப்பிரகாரமான ஐசுவரியம் எதுவுமில்லை. ராகேலை திருமணம் செய்து கொள்வதற்கு, பரிசம் கொடுப்பதற்குகூட யாக்கோபின் கையிலே பணம் இல்லை. ஆனாலும் யாக்கோபு ராகேலுக்காக லாபானிடத்தில் ஏழுவருஷம் வேலை செய்ய சம்மதிக்கிறார். ஏழுவருஷம் முடிந்த பின்பு, லாபான் தன் இளைய குமாரத்தியாகிய ராகேலை யாக்கோபுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும்.

யாக்கோபு சொல்லுகிற வார்த்தைகளை லாபானும் ஏற்றுக்கொள்கிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு'' (ஆதி 29:19) என்று சொல்லுகிறார்.

லாபான் தன் மகளை அந்நிய இனத்தாருக்குக் கொடுக்க விரும்பவில்லை. தன்னுடைய இனத்தாருக்குள், உறவினருக்குள் திருமணம் செய்து வைப்பது அக்காலத்து வழக்கம்.

அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக எழு வருஷம் வேலை செய்கிறார்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் யாக்கோபுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றுகிறது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: ""என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்'' (ஆதி 29:20,21) என்று கேட்கிறார்.

யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தார். ஆதி 29:18-30 ஆகிய வசனங்களைப் பார்க்கும்போது லேயாள், ராகேல் ஆகியோரை யாக்கோபு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அவர் லாபானுக்கு ஏழு வருஷம் வேலை செய்தார் என்று கூறப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. வேதபண்டிதர்களில் சிலர் யாக்கோபு இவ்விருவரையும் திருமணம் செய்து கொண்ட பின்பே, லாபானிடம் பதினான்கு வருஷங்களாக வேலை செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

யாக்கோபு லாபானுக்கு உண்மையாய் வேலை செய்கிறார். யாக்கோபிடத்தில் மாய்மாலமோ, ஏமாற்று வேலையோ இல்லை. யாக்கோபின் மனதிலே அதிகமாய் பணம் சம்பாதிக்கவேண்டும் என்னும் ஆசையில்லை. ராகேலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பம் மாத்திரமே யாக்கோபுக்கு இருக்கிறது. அவருக்கு ராகேலின்மீது அதிகமான பிரியம் இருக்கிறது. இதனால் யாக்கோபு லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்தாலும், அந்த வருஷங்கள் யாக்கோபுக்கு கொஞ்சநாளைப்போல தோன்றுகிறது. யாக்கோபு களைப்பும் சலிப்பும் இல்லாமல் லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்கிறார்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச் செய்து விருந்து பண்ணுகிறார். அன்று இரவிலே லாபான் தன் மூத்தகுமாரத்தியாகிய லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடத்தில் விடுகிறார்; யாக்கோபு லேயாளை சேருகிறார். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:22#24).

அக்காலத்தில், திருமண விருந்தை ஒருவார காலத்துக்கு அனுசரிப்பது வழக்கம் (ஆதி 29:27-28; நியா 14:12).

சில்பாள் என்பவள் காத், ஆசேர் ஆகியோருக்குத் தாய். (ஆதி 30:10-13) திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் அடிமைகள் மகளுடைய சொந்தச் சொத்தாகும். புருஷனுக்கு அடிமைகள்மீது எவ்வித உரிமையும் இல்லை.

யாக்கோபு லாபானுக்கு உண்மையாயும் கண்ணியமாயும் வேலை செய்கிறார். ஆனால் லாபானோ யாக்கோபை வஞ்சித்துவிடுகிறார். யாக்கோபு லாபானுக்கு ஏழுவருஷம் வேலை செய்திருக்கிறார். அவர்கள் ஏற்கெனவே பேசி சம்மதித்துக்கொண்ட பிரகாரம் ஏழுவருஷம் முடியும்போது, ராகேலை யாக்கோபுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் லாபானோ யாக்கோபுக்கு ராகேலைக் கொடுப்பதற்குப் பதிலாக லேயாளைக் கொடுக்கிறார். இரவின் இருட்டிலே லாபான் யாக்கோபை ஏமாற்றிவிடுகிறார்.

லாபான் யாக்கோபை வஞ்சித்தது, அவருடைய பாவம். லாபான் யாக்கோபுக்கு விரோதமாகவும், ராகேலுக்கு விரோதமாகவும் பாவம் செய்திருக்கிறார். யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரர். ஏமாற்றுக்காரராகிய யாக்கோபு, இப்போது லாபானால் ஏமாற்றப்படுகிறார். யாக்கோபு தன் தகப்பனாரை வஞ்சித்து, ஏசாவுக்கு கிடைக்கவேண்டிய ஆசீர்வாதத்தை ஏமாற்றிப்பெற்றுக்கொண்டார். இப்போது லாபான் யாக்கோபை ஏமாற்றுகிறார். யாக்கோபு தன் தகப்பனாரை ஏமாற்றினார். இப்போது மாமனார் மருமகனாகிய யாக்கோபை ஏமாற்றுகிறார்.

இரவு வேளையிலே தான் ஏமாற்றப்பட்டது யாக்கோபுக்கு தெரியவில்லை. அவர் லேயாளோடே சேருகிறார். லேயாளை ராகேல் என்று நினைத்து யாக்கோபு அவளோடு சேருகிறார். காலைப்பொழுதில்தான் தான் ஏமாற்றப்பட்டது யாக்கோபுக்கு தெரிகிறது . காலையில் தன்னோடு கூடயிருப்பது லேயாள் என்பதை யாக்கோபு காண்கிறார்.

அக்காலத்தில் மணப்பெண்ணை முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். அத்துடன் திருமண அறையும் இருட்டாக இருக்கும். லேயாளை மாலை வேளையில் யாக்கோபுவிடம் அழைத்து வருகிறார்கள். அவள் யாரென்று தெரியாமலேயே யாக்கோபு ஏமாந்து போகிறார்.

யாக்கோபு லாபானை நோக்கி, ""ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்'' (ஆதி 29:25) என்று கேட்கிறார்.

யாக்கோபு இதுவரையிலும் மற்றவர்களை வஞ்சித்தார். (ஆதி 27) இப்பொழுது மற்றவர்களின் வஞ்சனைக்கு யாக்கோபு ஆளாகிறார். (ஆதி 31: 7-10,31; ஆதி 34:30; ஆதி 37: 28-36; ஆதி 35:22; ஆதி 43:1-28).

லாபானோ தன்னுடைய தப்பிதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் யாக்கோபுக்கு சாக்குப்போக்கு சொல்லுகிறார். லாபான் யாக்கோபை நோக்கி, ""மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய்'' (ஆதி 29:26,27) என்று சொல்லுகிறார்.

கிழக்கு தேசத்தில் மூத்தவளுக்கு திருமணமான பின்பே இளையவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். மூத்தவள் உடல் ஊனமானவளாகவோ, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவளாகவோ இருந்தால் அவளை ஒதுக்கி வைத்து விட்டு, இளையவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். தனக்கு லேயாள் என்று ஒரு மகள் இருப்பதை லாபான் யாக்கோபுக்கு மறைத்து விட்டார். லேயாளுக்கு திருமணமாகும் வரையில் லாபான் யாக்கோபிடம் அவளைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

யாக்கோபு ராகேலுக்காக எதையும் செய்வார் என்பது லாபானுக்குத் தெரியும். லாபான் யாக்கோபை ஏமாற்றினார். லாபான் தன் இரண்டு மகள்களுக்கும் யாக்கோபிடமிருந்து நல்ல வரதட்சணையைப் பெற்றுக் கொண்டார். (நியா 15:2; 1சாமு 14:49; 1சாமு 18:17-20,28).

லாபான் சொல்லுகிற பிரகாரமாக மெய்யாகவே ஆரானிலே மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுக்கக்கூடாது என்னும் வழக்கம் இருந்ததா என்பது தெரியவில்லை. இது லாபானுடைய சுயகற்பனை. யாக்கோபை வஞ்சிக்கவேண்டும் என்பதற்காக லாபான் சாதுரியமாகப் பேசுகிறார். யாக்கோபை வஞ்சித்ததினால் லாபானின் மனதில் சந்தோஷமுண்டாயிற்று. லாபான் தன்னுடைய தப்பிதத்தை திருத்துவதற்காக, ""ராகேலையும் உனக்குத்தருவேன்'' என்று சொல்லுகிறார். ஒரு சிறிய தப்பிதத்தை மூடி மறைப்பதற்கு, லாபான் பெரிய தப்பிதத்தை செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.

லாபான் இப்போது யாக்கோபையும் பாவம் செய்யுமாறு வழிநடத்துகிறார். யாக்கோபுக்கு மறைவாக கண்ணியை விரிக்கிறார். யாக்கோபுக்கு லேயாள் ஏற்கெனவே மனைவியாயிருக்கிறாள். அவருக்கு இப்போது ராகேலையும் மனைவியாகக் கொடுக்க லாபான் சம்மதிக்கிறார்.

யாக்கோபு குணசாலி. அவர் கண்ணியமானவர். யாக்கோபு ராகேலை மாத்திரமே திருமணம் செய்யவேண்டும் என்று விரும்பினார். தனக்கு ஒரு மனைவி மாத்திரம் போதும் என்று நினைத்தார். பல மனைவிகளை விவாகம்பண்ணவேண்டும் என்பது யாக்கோபின் விருப்பமோ திட்டமோ அல்ல. ஆனால் லாபான் யாக்கோபை ஏமாற்றி, அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை விவாகம் செய்து கொடுக்க திட்டமிடுகிறார்.

யாக்கோபு ராகேல் மீது பிரியமாயிருக்கிறார். ராகேலை விட்டுக்கொடுக்க யாக்கோபுக்கு மனமில்லை. தனக்கு ராகேல் மனைவியாக வேண்டுமென்று யாக்கோபு விரும்புகிறார். ஆகையினால் லாபானுடைய வார்த்தையின் பிரகாரம், யாக்கோபு ராகேலுக்காக இன்னும் ஏழுவருஷம் அவரிடத்தில் வேலை செய்ய சம்மதிக்கிறார். ராகேல் தனக்கு வேண்டுமென்றால், யாக்கோபுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

லாபான் யாக்கோபை நோக்கி, ""இவளுடைய ஏழுநாளை நிறைவேற்று'' என்று சொல்லுகிறார். லாபான் ஏழு நாள் விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறார். விருந்தினர்கள் அநேகரை அழைத்திருக்கிறார். இந்த ஏழு நாளிலும் விருந்திற்கு எவ்வித இடையூறும் பண்ண வேண்டாமென்று லாபான் யாக்கோபிடம் கேட்டுக் கொள்கிறார். (ஆதி 29:22).

ராகேலையும், யாக்கோபுக்கு மணம் முடித்துத் தருவதாக லாபான் வாக்குப்பண்ணுகிறார். யாக்கோபு லாபானின் நிபந்தனைகளுக்கெல்லாம் ஒப்புக்கொண்டு, லேயாளையும் திருமணம் செய்து கொள்கிறார். ராகேலையும் திருமணம் செய்து கொள்கிறார். (ஆதி 29:27-28).

அந்தப்படியே யாக்கோபு, லேயாளுடைய ஏழுநாளை நிறைவேற்றுகிறார். அப்பொழுது லாபான் தன் இளைய குமாரத்தியாகிய ராகேலையும் யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:28). இஸ்ரவேலரின் முற்பிதாக்களுடைய ஜீவியத்திலே பல மனைவி விவாகம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

முற்பிதாக்களின் காலத்தில் பல மனைவி விவாகம் தடைபண்ணப்படவில்லை. பல மனைவி விவாகத்திற்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல மனைவி விவாகத்திற்கு எதிராக, அக்காலத்தில் திட்டமான பிரமாணம் எதுவும் சொல்லப்படவில்லை.

""அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னைஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' (மல் 2:15).

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது மாத்திரமே கர்த்தருடைய பிரமாணம். ""ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்'' (1கொரி 7:2).

லாபான் யாக்கோபுக்கு லேயாளைக் கொடுத்தபோது, தன் வேலைக்காரியாகிய சில்பாளை தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார் (ஆதி 28:24). இப்போது லாபான் யாக்கோபுக்கு ராகேலை மனைவியாகக் கொடுக்கிறபோது, தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கிறார் (ஆதி 29:29).

யாக்கோபு ராகேலையும் சேருகிறார்; யாக்கோபு லேயாளைப் பார்க்கிலும் ராகேலை அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் லாபானிடத்தில் சேவிக்கிறார் (ஆதி 29:30).

மூன்றாவதாக சந்ததியாக குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஈசாக்கு, இஸ்மவேல் ஆகியோரைக் குறித்து சாராள், ஆகார், ஆபிரகாம் ஆகியோரிடையே பிரச்சனை இருந்தது. (ஆதி 16:1-16; ஆதி 17:18; ஆதி 21:9-16; கலா 4: 21-31). யாக்கோபு, ஏசா ஆகியோரைக் குறித்து ஈசாக்கு, ரெபெக்காள் ஆகியோரிடையே பிரச்சனை இருந்தது. (ஆதி 25:28;27). இங்கு யாக்கோபின் மனைவிகளுக்குள் பிரச்சனை வருகிறது (ஆதி 29:31-30:43).

வேதபண்டிதர்கள் லேயாளுக்கும் ராகேலுக்கும் ஆவிக்குரிய வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இவர்கள் இருவரும் இரண்டு சபைகளுக்கு அடையாளமாயிருக்கிறார்கள். லேயாள் நியாயப்பிரமாணத்திற்கு கீழிருக்கிற யூதர்களுக்கு அடையாளம். ராகேலோ சுவிசேஷத்திற்கு கீழிருக்கிற புறஜாதியாருக்கு அடையாளம்.

ராகேல் மூத்தவளைவிட ரூபவதியாயிருக்கிறாள். கிறிஸ்துவைப்பற்றிய சிந்தனையினால், புதிய ஏற்பாட்டுக்காலத்து சபையானது அதிக அழகுள்ளதாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் மனுஷரூபமெடுத்து, ஒரு வேலையாளைப்போல இந்த உலகத்திற்கு வந்தார். யாக்கோபு லேயாளோடு முதலாவதாக சேர்ந்தார். யூதர்களே நியாயப்பிரமாணத்தை முதலாவதாக பற்றிக்கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.