28 அதிகாரம்
யாக்கோபு தன் பெற்றோரை விட்டு புறப்பட்டு பதான் அராமுக்கு போகிறார். ஈசாக்கு யாக்கோபுக்கு சொன்ன கட்டளையும், ஆசீர்வாதமான வார்த்தைகளும் (ஆதி 28:1#4). யாக்கோபு தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிகிறார் (ஆதி 28:5#10).
ஏசா ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குடும்பத்திலே பெண்கொள்கிறார் (ஆதி 28:6#9).
யாக்கோபின் நித்திரை (ஆதி 28:10,11). யாக்கோபு தன் சொப்பனத்தில் கண்ட ஏணி (ஆதி 28:11,12). கர்த்தர் யாக்கோபுக்கு சொன்ன கிருபையுள்ள வாக்குத்தத்தங்கள் (ஆதி 28:13#15). யாக்கோபு தான் கர்த்தரை தரிசித்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிடுகிறார் (ஆதி 28:16#19). யாக்கோபு தேவனுக்கு செலுத்துவதாக சொன்ன பொருத்தனை (ஆதி 28:20#22).
யாக்கோபின் பிரயாணம்
ஆதி 28:1#5
ஆதி 28:1. ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
ஆதி 28:2. எழுந்து புறப்பட்டுப், பதான் அராமி-ருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
ஆதி 28:3. சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;
ஆதி 28:4. தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்-;
ஆதி 28:5. ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமி-ருக்கும் சீரியா தேசத்தனாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கிறார். உடன்படிக்கையின் ஆசீர்வாதம் யாக்கோபுக்கு கொடுக்கப்படுகிறது. யாக்கோபு சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டவுடன், தன்னுடைய தேசத்தில் தங்க முடியாமல் பதான் அராமுக்கு ஓடிப்போகிறார்.
யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போகிறார். ""யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்'' (ஓசி 12:12).
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""தேவன் உனக்கு மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக'' (ஆதி 27:28) என்று சொன்னார். ஆனால் யாக்கோபோ தன் தேசத்தைவிட்டு ஒன்றுமில்லாமல் வெறுமையாகப் போகிறார்.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ஜனங்கள் உன்னை சேவிக்கவும், ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவார்கள். உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்'' (ஆதி 27:29) என்று சொன்னார். ஆனால் யாக்கோபு இப்போது தன்னுடைய மாமன் வீட்டிலே வேலை செய்யப்போகிறார். யாக்கோபு அங்கே மிகவும் கடினமாய் வேலை செய்யவேண்டும்.
யாக்கோபுக்கு சொல்லப்பட்ட ஆசீர்வாதம் வேறு. ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடைபெறுகிற சம்பவம் வேறு. யாக்கோபு ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தை வஞ்சனையினால் கிரயத்திற்கு வாங்கினார். அவர் தன் தகப்பன் ஈசாக்கை வஞ்சித்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
யாக்கோபுக்கு சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதம் உறுதிபண்ணப்படுகிறது. ஆனால் அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபால் அனுபவிக்க முடியவில்லை. யாக்கோபு உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை வஞ்சனையினால் பெற்றுக்கொண்டாலும், அதை அனுபவிக்கும் அளவுக்கு, அவரிடத்தில் ஞானமோ, புத்தியோ, பெலமோ இல்லை.
யாக்கோபு சேஷ்டபுத்திரபாகத்திற்கு சொந்தக்காரர். ஆனால் அவர் இப்போது பாடுகளையும் வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கிறார். யாக்கோபுடைய ஜீவியத்தின் மூலமாக விசுவாசிகளாகிய நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்கிறவர்கள், பாடுகளை அனுபவிக்கவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் சமாதானமாயிருக்கிறவர்களுக்கு, இந்த உலகத்தில் உபத்திரவங்கள் இருக்கும். ""என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்'' (யோவா 16:33).
ஈசாக்கு தன் குமாரன் யாக்கோபை ஆசீர்வதித்தார். அதே வேளையில், அவர் இப்போது யாக்கோபை அந்தத் தேசத்தைவிட்டே அனுப்பிவிடுகிறார்.
ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவரை ஆசீர்வதித்து, ""நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டுப், பதான் அராமி-ருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள்'' (ஆதி 28:1,2) என்று அவருக்குக் கட்டளையிடுகிறார்.
யாக்கோபு ஏசாவை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டார். அதன்பின்பு ஈசாக்கு யாக்கோபைத் தாராளமாக ஆசீர்வதிக்கிறார். (ஆதி 27:1-46). சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதம் இப்பொழுது யாக்கோபிற்கே உரியது.
இஸ்ரவேல் ஜனத்தார் மற்ற ஜனத்தாரோடு கலக்கக்கூடாது என்று தேவன் பூர்வத்திலே தடைபண்ணியிருக்கிறார். (ஆதி 24:3; யாத் 34:12-16; எண் 23:9; உபா 7:3-4; யோசு 23:12; எஸ்றா 9:1-10:44; நெகே 13:1-30). ஏசா இந்தத் தடையை மீறி அவனுடைய பெற்றோருக்கு மனவருத்தத்தை உண்டுபண்ணினான். (ஆதி 26:34-35) இஸ்ரவேலில் இப்படிப்பட்ட கவனக்குறைவையும், பிற இனக்கலப்பையும் தேவன் சபிக்கிறார் (எண் 25:1-8; நியா 3:5-8).
பெத்துவேல் என்பவன் நாகோர், மில்க்காள் ஆகியோரின் குமாரன். இவன் லாபான், ரெபெக்காள் ஆகியோரின் தகப்பன். (ஆதி 28:2-5; ஆதி 11:29; ஆதி 22:23; ஆதி 24:15,24,47,50; ஆதி 25:20) பெத்துவேலின் மறுபெயர் ""சீரியன்'' என்பதாகும். (ஆதி 28:5) இக்காலத்தில் பெத்துவேல் மரித்துப் போயிருக்கவேண்டும். ஏனெனில், ஆதி 24 ஆம் அதிகாரத்தில் ரெபெக்காளின் திருமணக் காரியத்தைக் குறித்து எலியேசரிடம் லாபானே பேசுகிறான்.
ஈசாக்கு தன் குமாரன் யாக்கோபை ஆசீர்வதிக்கவும் செய்கிறார். அவருக்கு கட்டளையிடவும் செய்கிறார். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறவர்கள், அந்த ஆசீர்வாதத்தோடு தொடர்புடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆசீர்வாதம் வேறு, நிபந்தனை வேறு என்று இரண்டையும் வெவ்வேறாகப் பிரிக்கக்கூடாது. அதை தேவன் இணைத்திருக்கிறார். தேவன் இணைத்ததை மனுஷர் பிரிக்காதிருப்பார்களாக.
யாக்கோபு உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்திற்கு சொந்தக்காரர். சேஷ்டபுத்திர ஆசீர்வாதம் யாக்கோபுக்கு உறுதிபண்ணப்பட்டிருக்கிறது. ஆகையினால் யாக்கோபு கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளக்கூடாது. கானானியர் விக்கிரகங்களை ஆராதிக்கிறார்கள். கர்த்தரை ஆராதிக்கிறவர்கள் விக்கிரகாராதனைபண்ணுகிற ஸ்திரீகளை விவாகம்பண்ணக்கூடாது. கானானியர் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள்.
ஈசாக்கு யாக்கோபை சீரியா தேசத்திற்கு அனுப்பிவிடும்போது அவரை சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி; தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த்தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' (ஆதி 28:3,4) என்று சொல்லுகிறார்.
ஈசாக்கு யாக்கோபை ஏற்கெனவே ஆசீர்வதித்தார். அப்போது அவர் ஏசாவை ஆசீர்வதிப்பதாக நினைத்து, யாக்கோபை ஆசீர்வதித்தார். யாக்கோபும் ஈசாக்கின் ஆசீர்வாதத்தை வஞ்சனையினால் பெற்றுக்கொண்டார். யாக்கோபு தன்னை ஏசாபோல காண்பித்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். இப்போதோ ஈசாக்கின் ஆத்துமா மெய்யாகவே யாக்கோபை ஆசீர்வதிக்கிறது.
ஈசாக்கின் ஆசீர்வாதமான வார்த்தைகள் யாக்கோபுக்கு ஆறுதலாயும், உற்சாகமாயும் இருக்கிறது. யாக்கோபு இப்போது துக்கமாயும் சோகமாயும் இருக்கிறார். அவர் தன் பெற்றோரை விட்டு பிரிந்துபோகப்போகிறார். ரெபெக்காள் யாக்கோபின்மீது பட்சமாயிருக்கிறாள். யாக்கோபோ தன் தாயாரையும்விட்டுப் பிரிந்து, லாபானிடத்திற்கு போகப்போகிறார்.
இப்படிப்பட்ட துக்கமான சூழ்நிலையில், ஈசாக்கின் ஆசீர்வாதமான வார்த்தைகள், யாக்கோபின் மனதிற்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது. ஈசாக்கு யாக்கோபை இதற்கு முன்பு ஆசீர்வாதத்தைவிட, இப்போது தெளிவாகவும், பரிபூரணமாகவும் ஆசீர்வதிக்கிறார்.
ஈசாக்கு யாக்கோபுக்கு சொல்லும் ஆசீர்வாதம், கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன ஆசீர்வாதத்திற்கு இணையாகயிருக்கிறது. தேவன் ""ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' என்று ஈசாக்கு யாக்கோபுக்கு சொல்லுகிறார்.
யாக்கோபு பெற்றுக்கொள்கிற ஆசீர்வாதம் சுவிசேஷ ஆசீர்வாதமாகும். இந்த ஆசீர்வாதம் சர்வவல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து வருகிறது.
""ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று'' (கலா 3:14).
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் முற்பிதாக்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, சர்வவல்லமையுள்ள தேவனாக தம்மை வெளிப்படுத்தினார்.
""சர்வவவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை'' (யாத் 6:3).
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணுவாராக'' (ஆதி 28:3) என்று சொல்லுகிறார்.
சர்வவல்லமையுள்ள தேவன் மெய்யாகவே யாக்கோபின் சந்ததியை பலுகிப்பெருகப்பண்ணியிருக்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் விடுவிக்கப்பட்டு, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போனபோது அவர்கள் திரளான ஜனக்கூட்டமாயிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில் பாளயமிறங்கியிருந்தபோதும், அங்கே பிரயாணம்பண்ணியபோதும், அதன்பின்பும் அவர்கள் பலுகிப்பெருகி திரளான ஜனக்கூட்டத்தாராயிருந்தார்கள்.
கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை யாக்கோபின் மூலமாக ஆசீர்வதிக்கிறார். யாக்கோபின் மூலமாக பூமியிலுள்ள குடும்பங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லா ஜனங்களும் இயேசுகிறிஸ்துவுக்குள்ளே ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்.
""காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்தி-ருக்கிறவைகளும் பூலோகத்தி-ருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்'' (எபே 1:10).
யாக்கோபு இப்போது கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கியிருக்கிறார். யாக்கோபும், யாக்கோபின் சந்ததியாரும் கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்று ஈசாக்கு சொல்லுகிறார். ஏசாவின் சந்ததியாருக்கு கானான் தேசத்தில் சுதந்தரம் இல்லை.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' (ஆதி 28:4) என்று சொல்லுகிறார்.
யாக்கோபு எந்த தேசத்தில் பரதேசியாய்த் தங்கியிருக்கிறாரோ, அந்த தேசத்தை அவர் சுதந்தரித்துக்கொள்வார். இஸ்ரவேலின் முற்பிதாக்கள் எல்லோருமே கானான் தேசத்தை சுதந்தரிக்கவேண்டும் என்று பிரியமாயிருந்தார்கள். ஆனால் கானான் தேசம் அவர்களுக்கு நிரந்தரமான நித்திய தேசமல்ல. அவர்கள் எல்லோரும் கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கியிருந்தார்கள். பரமதேசமே கர்த்தருடைய ஜனத்திற்கு நித்திய சுதந்தரம்.
நம்மிடத்தில் இப்பிரபஞ்சத்திற்குரிய காரியங்கள் எவ்வளவு திரளாகயிருந்தாலும், அந்தக் காரியங்கள் நமக்கு நிலையானது என்று நினைக்கக்கூடாது. அவை நமக்கு தற்காலிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. யாக்கோபைப்போல நாமும் இந்தப் பூமியில், நம்முடைய ஜீவியகாலம் வரையிலும், பரதேசியாய்த் தங்கியிருக்கிறோம்.
""இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'' (எபி 11:13).
ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிடுகிறார். அப்பொழுது யாக்கோபு பதான் அராமி-ருக்கும் சீரியா தேசத்தனாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்படுகிறார் (ஆதி 28:5).
பெத்துவேல் இரண்டு முறை சீரியா தேசத்தான் என்று அழைக்கப்பட்டிருக்கிறான். (ஆதி 28:5; ஆதி 25:20) பெத்துவேலின் குமாரனாகிய லாபான் மூன்று முறை இப்பெயரால் அழைக்கப் பட்டிருக்கிறான். (ஆதி 25:20; ஆதி 31:20,24). யாக்கோபிற்கு உபா 26:5 ஆவது வசனத்தில் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. குஷ்டரோகியான நாகமானுக்கும் சீரியா தேசத்தான் என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. (2இராஜா 5:20; லூக்கா 4:27).
இஸ்ரவேலுடைய ராஜாக்களின் காலத்தில் சீரிய பாஷை பிரபலமாக இருந்தது. (2இராஜா 18:26; எஸ்றா 4:7; ஏசா 36:11). சீரியா தேசம் பாலஸ்தீனாவிற்கு வடபகுதியில் இருக்கிறது. இவர்கள் இஸ்ரவேலரோடு பலமுறை யுத்தம் பண்ணினார்கள். ராஜாக்கள் புஸ்தகத்திலும், நாளாகமம் புஸ்தகத்திலும் சீரியா தேசத்தார் யூதருடைய விரோதிகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏசாவின் விவாகம்
ஆதி 28:6#9
ஆதி 28:6. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ள வேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
ஆதி 28:7. யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,
ஆதி 28:8. கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,
ஆதி 28:9. ஏசா இஸ்மவே-டத்துக்குப் போய் தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவே-ன் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான்.
இந்த வசனப்பகுதியில் யாக்கோபின் சரித்திரத்தைப்பற்றிச் சொல்லும்போது, ஏசாவின் சரித்திரமும் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏசா யாக்கோபின்மீது கோபமாயிருந்தான். ஆனாலும் யாக்கோபின் நல்ல சுபாவமும், பெற்றோருக்கு கீழ்ப்படியும் பண்பும் ஏசாவின் இருதயத்தைத் தொடுகிறது. ஏசா வேட்டையாடுவதில் வல்லவன். அவன் திருமணம் செய்து குடும்பஸ்தனாயிருக்கிறான். ஏசா பெரியவன். ஆனாலும் அவன் யாக்கோபைப்பற்றி நினைக்கும்போது, யாக்கோபு தன்னைவிட பெரியவன் என்று ஏசா நினைக்கிறான்.
ஏசாவுக்கு ஏற்கெனவே திருமணமாயிற்று. அவன் ஏத்தியருடைய குமாரத்திகளை விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி 26:34,35). ஏசா இப்போது தன்னுடைய பெற்றோரை பிரியப்படுத்த விரும்புகிறான்.
ஏசா தன் தகப்பனாகிய ஈசாக்கின் வீட்டிலே நடைபெறுகிற ஒவ்வொரு சம்பவத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறான்.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவரைப் பதான் அராமுக்கு அனுப்பினது ஏசாவுக்கு தெரிந்திருக்கிறது. மேலும் ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கையில்: ""நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ள வேண்டாம்'' என்று யாக்கோபுக்கு கட்டளையிட்டதும் ஏசாவுக்கு தெரிந்திருக்கிறது (ஆதி 28:6).
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா காண்கிறான். கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதையும் ஏசா அறிந்து கொள்கிறான் (ஆதி 28:7,8).
ஏசா தன்னுடைய தப்பிதத்தை உணருகிறான். ஆனால் அவன் காலம் கடந்து மனந்திரும்புகிறான். ஏசாவுக்கு தெளிந்த புத்தி இருக்கவேண்டிய நேரத்தில், அவனுக்கு குழப்பமான புத்தியிருந்தது. அப்போது அவன் கானானியருடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தன்னுடைய பெற்றோரின் மனதை துக்கப்படுத்தினான். கானானிய ஸ்திரீகள் மூலமாக, தன்னுடைய பெற்றோரின் மனது வேதனைப்பட்டது ஏசாவுக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இப்போது கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்துகொள்கிறான்.
ஏசா தன்னுடைய தப்பிதத்தை திருத்திக்கொள்வதற்கு, மேலும் ஒரு தப்பிதத்தை செய்கிறான். ஏசாவின் மனதில் தெளிந்த சிந்தனையில்லை. அவனுடைய இருதயத்தில் கர்த்தருக்கு பயப்படும் பயமுமில்லை. ஏசா கர்த்தரைப்பற்றித் தியானிப்பதுமில்லை. அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதுமில்லை. ஏசா எப்போதுமே தன்னுடைய மனதிற்கு பிரியமானதை செய்கிறான்.
ஏசா இஸ்மவே-டத்துக்குப் போய் தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவே-ன் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணுகிறான் (ஆதி 28:9).
யாக்கோபு தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார். இது அவருக்குச் சுலபமானது, லாபகரமானது. தனக்கு ஆதாயம் வரும்போது கீழ்ப்படிவது யாக்கோபின் வழக்கம். (ஆதி 25:30-31; ஆதி 27:8,13; ஆதி 31:1-13).
இஸ்மவேல் மரித்து 15 வருஷமாயிற்று. தனக்கு பெண்கொள்வதற்காக ஏசா அவனுடைய வீட்டாரிடத்திற்குப் போகிறான். ஈசாக்கு பிறந்த போது, இஸ்மவேலுக்கு 14 வயது. (ஆதி 17:17,24-25) ஈசாக்கிற்கு இப்பொழுது 138 வயதாகிறது (ஆதி 27:1).
ஏசாவின் முதல் மனைவிகள் அவனுடைய பெற்றோருக்கு மனமடிவாக இருந்தார்கள். (ஆதி 26:34-35; ஆதி 27:46) ஆகையினால் ஏசா இப்பொழுது ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் குடும்பத்திலிருந்து பெண்கொண்டு தன் பெற்றோரை மகிழ்விக்க விரும்புகிறான். மகலாத்தை விவாகம்பண்ணுகிறான். இவள் இஸ்மவேலின் குமாரத்தி. யாக்கோபு தன் தாயின் உறவுக்காரியை திருமணம் செய்கிறார். ஏசா தன் தகப்பனின் உறவுக்காரியைத் திருமணம் செய்கிறான்.
இஸ்மவேல் அடிமைப்பெண்ணாகிய ஆகாரின் குமாரன். ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மவேலையும் தன் கூடாரத்தைவிட்டு துரத்திவிட்டார். இப்போது ஏசா இஸ்மவேலின் குடும்பத்தில் விவாகம்பண்ணி, ஆபிரகாமால் துரத்தப்பட்ட அவர்களை, தன்னுடைய கூடாரத்திற்கு கொண்டுவருகிறான். ஏசா தன் தகப்பன் ஈசாக்கை பிரியப்படுத்த முயற்சிபண்ணுகிறான். ஆனால் ஏசாவின் கிரியைகள் கர்த்தருக்கு பிரியமாயில்லை. ஏசாவின் மனமாற்றம் பூரணமாயில்லை. ஏசா தன்னுடைய தப்பிதங்களுக்கு அறையும் குறையுமாக மனந்திரும்பி, மேலும் அதிக பாவங்களை செய்கிறான்.
அதிகாரம்
யாக்கோபு தன் பெற்றோரை விட்டு புறப்பட்டு பதான் அராமுக்கு போகிறார். ஈசாக்கு யாக்கோபுக்கு சொன்ன கட்டளையும், ஆசீர்வாதமான வார்த்தைகளும் (ஆதி 28:1#4). யாக்கோபு தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிகிறார் (ஆதி 28:5#10).
ஏசா ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குடும்பத்திலே பெண்கொள்கிறார் (ஆதி 28:6#9).
யாக்கோபின் நித்திரை (ஆதி 28:10,11). யாக்கோபு தன் சொப்பனத்தில் கண்ட ஏணி (ஆதி 28:11,12). கர்த்தர் யாக்கோபுக்கு சொன்ன கிருபையுள்ள வாக்குத்தத்தங்கள் (ஆதி 28:13#15). யாக்கோபு தான் கர்த்தரை தரிசித்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிடுகிறார் (ஆதி 28:16#19). யாக்கோபு தேவனுக்கு செலுத்துவதாக சொன்ன பொருத்தனை (ஆதி 28:20#22).
யாக்கோபின் பிரயாணம்
ஆதி 28:1#5
ஆதி 28:1. ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
ஆதி 28:2. எழுந்து புறப்பட்டுப், பதான் அராமி-ருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
ஆதி 28:3. சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;
ஆதி 28:4. தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்-;
ஆதி 28:5. ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமி-ருக்கும் சீரியா தேசத்தனாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கிறார். உடன்படிக்கையின் ஆசீர்வாதம் யாக்கோபுக்கு கொடுக்கப்படுகிறது. யாக்கோபு சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டவுடன், தன்னுடைய தேசத்தில் தங்க முடியாமல் பதான் அராமுக்கு ஓடிப்போகிறார்.
யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போகிறார். ""யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்'' (ஓசி 12:12).
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""தேவன் உனக்கு மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக'' (ஆதி 27:28) என்று சொன்னார். ஆனால் யாக்கோபோ தன் தேசத்தைவிட்டு ஒன்றுமில்லாமல் வெறுமையாகப் போகிறார்.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ஜனங்கள் உன்னை சேவிக்கவும், ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவார்கள். உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்'' (ஆதி 27:29) என்று சொன்னார். ஆனால் யாக்கோபு இப்போது தன்னுடைய மாமன் வீட்டிலே வேலை செய்யப்போகிறார். யாக்கோபு அங்கே மிகவும் கடினமாய் வேலை செய்யவேண்டும்.
யாக்கோபுக்கு சொல்லப்பட்ட ஆசீர்வாதம் வேறு. ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடைபெறுகிற சம்பவம் வேறு. யாக்கோபு ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தை வஞ்சனையினால் கிரயத்திற்கு வாங்கினார். அவர் தன் தகப்பன் ஈசாக்கை வஞ்சித்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
யாக்கோபுக்கு சேஷ்டபுத்திரபாக ஆசீர்வாதம் உறுதிபண்ணப்படுகிறது. ஆனால் அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபால் அனுபவிக்க முடியவில்லை. யாக்கோபு உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை வஞ்சனையினால் பெற்றுக்கொண்டாலும், அதை அனுபவிக்கும் அளவுக்கு, அவரிடத்தில் ஞானமோ, புத்தியோ, பெலமோ இல்லை.
யாக்கோபு சேஷ்டபுத்திரபாகத்திற்கு சொந்தக்காரர். ஆனால் அவர் இப்போது பாடுகளையும் வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கிறார். யாக்கோபுடைய ஜீவியத்தின் மூலமாக விசுவாசிகளாகிய நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்கிறவர்கள், பாடுகளை அனுபவிக்கவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் சமாதானமாயிருக்கிறவர்களுக்கு, இந்த உலகத்தில் உபத்திரவங்கள் இருக்கும். ""என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்'' (யோவா 16:33).
ஈசாக்கு தன் குமாரன் யாக்கோபை ஆசீர்வதித்தார். அதே வேளையில், அவர் இப்போது யாக்கோபை அந்தத் தேசத்தைவிட்டே அனுப்பிவிடுகிறார்.
ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவரை ஆசீர்வதித்து, ""நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டுப், பதான் அராமி-ருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள்'' (ஆதி 28:1,2) என்று அவருக்குக் கட்டளையிடுகிறார்.
யாக்கோபு ஏசாவை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டார். அதன்பின்பு ஈசாக்கு யாக்கோபைத் தாராளமாக ஆசீர்வதிக்கிறார். (ஆதி 27:1-46). சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதம் இப்பொழுது யாக்கோபிற்கே உரியது.
இஸ்ரவேல் ஜனத்தார் மற்ற ஜனத்தாரோடு கலக்கக்கூடாது என்று தேவன் பூர்வத்திலே தடைபண்ணியிருக்கிறார். (ஆதி 24:3; யாத் 34:12-16; எண் 23:9; உபா 7:3-4; யோசு 23:12; எஸ்றா 9:1-10:44; நெகே 13:1-30). ஏசா இந்தத் தடையை மீறி அவனுடைய பெற்றோருக்கு மனவருத்தத்தை உண்டுபண்ணினான். (ஆதி 26:34-35) இஸ்ரவேலில் இப்படிப்பட்ட கவனக்குறைவையும், பிற இனக்கலப்பையும் தேவன் சபிக்கிறார் (எண் 25:1-8; நியா 3:5-8).
பெத்துவேல் என்பவன் நாகோர், மில்க்காள் ஆகியோரின் குமாரன். இவன் லாபான், ரெபெக்காள் ஆகியோரின் தகப்பன். (ஆதி 28:2-5; ஆதி 11:29; ஆதி 22:23; ஆதி 24:15,24,47,50; ஆதி 25:20) பெத்துவேலின் மறுபெயர் ""சீரியன்'' என்பதாகும். (ஆதி 28:5) இக்காலத்தில் பெத்துவேல் மரித்துப் போயிருக்கவேண்டும். ஏனெனில், ஆதி 24 ஆம் அதிகாரத்தில் ரெபெக்காளின் திருமணக் காரியத்தைக் குறித்து எலியேசரிடம் லாபானே பேசுகிறான்.
ஈசாக்கு தன் குமாரன் யாக்கோபை ஆசீர்வதிக்கவும் செய்கிறார். அவருக்கு கட்டளையிடவும் செய்கிறார். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறவர்கள், அந்த ஆசீர்வாதத்தோடு தொடர்புடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆசீர்வாதம் வேறு, நிபந்தனை வேறு என்று இரண்டையும் வெவ்வேறாகப் பிரிக்கக்கூடாது. அதை தேவன் இணைத்திருக்கிறார். தேவன் இணைத்ததை மனுஷர் பிரிக்காதிருப்பார்களாக.
யாக்கோபு உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்திற்கு சொந்தக்காரர். சேஷ்டபுத்திர ஆசீர்வாதம் யாக்கோபுக்கு உறுதிபண்ணப்பட்டிருக்கிறது. ஆகையினால் யாக்கோபு கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளக்கூடாது. கானானியர் விக்கிரகங்களை ஆராதிக்கிறார்கள். கர்த்தரை ஆராதிக்கிறவர்கள் விக்கிரகாராதனைபண்ணுகிற ஸ்திரீகளை விவாகம்பண்ணக்கூடாது. கானானியர் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள்.
ஈசாக்கு யாக்கோபை சீரியா தேசத்திற்கு அனுப்பிவிடும்போது அவரை சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி; தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த்தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' (ஆதி 28:3,4) என்று சொல்லுகிறார்.
ஈசாக்கு யாக்கோபை ஏற்கெனவே ஆசீர்வதித்தார். அப்போது அவர் ஏசாவை ஆசீர்வதிப்பதாக நினைத்து, யாக்கோபை ஆசீர்வதித்தார். யாக்கோபும் ஈசாக்கின் ஆசீர்வாதத்தை வஞ்சனையினால் பெற்றுக்கொண்டார். யாக்கோபு தன்னை ஏசாபோல காண்பித்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். இப்போதோ ஈசாக்கின் ஆத்துமா மெய்யாகவே யாக்கோபை ஆசீர்வதிக்கிறது.
ஈசாக்கின் ஆசீர்வாதமான வார்த்தைகள் யாக்கோபுக்கு ஆறுதலாயும், உற்சாகமாயும் இருக்கிறது. யாக்கோபு இப்போது துக்கமாயும் சோகமாயும் இருக்கிறார். அவர் தன் பெற்றோரை விட்டு பிரிந்துபோகப்போகிறார். ரெபெக்காள் யாக்கோபின்மீது பட்சமாயிருக்கிறாள். யாக்கோபோ தன் தாயாரையும்விட்டுப் பிரிந்து, லாபானிடத்திற்கு போகப்போகிறார்.
இப்படிப்பட்ட துக்கமான சூழ்நிலையில், ஈசாக்கின் ஆசீர்வாதமான வார்த்தைகள், யாக்கோபின் மனதிற்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது. ஈசாக்கு யாக்கோபை இதற்கு முன்பு ஆசீர்வாதத்தைவிட, இப்போது தெளிவாகவும், பரிபூரணமாகவும் ஆசீர்வதிக்கிறார்.
ஈசாக்கு யாக்கோபுக்கு சொல்லும் ஆசீர்வாதம், கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன ஆசீர்வாதத்திற்கு இணையாகயிருக்கிறது. தேவன் ""ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' என்று ஈசாக்கு யாக்கோபுக்கு சொல்லுகிறார்.
யாக்கோபு பெற்றுக்கொள்கிற ஆசீர்வாதம் சுவிசேஷ ஆசீர்வாதமாகும். இந்த ஆசீர்வாதம் சர்வவல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து வருகிறது.
""ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று'' (கலா 3:14).
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் முற்பிதாக்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, சர்வவல்லமையுள்ள தேவனாக தம்மை வெளிப்படுத்தினார்.
""சர்வவவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை'' (யாத் 6:3).
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணுவாராக'' (ஆதி 28:3) என்று சொல்லுகிறார்.
சர்வவல்லமையுள்ள தேவன் மெய்யாகவே யாக்கோபின் சந்ததியை பலுகிப்பெருகப்பண்ணியிருக்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் விடுவிக்கப்பட்டு, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப்போனபோது அவர்கள் திரளான ஜனக்கூட்டமாயிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில் பாளயமிறங்கியிருந்தபோதும், அங்கே பிரயாணம்பண்ணியபோதும், அதன்பின்பும் அவர்கள் பலுகிப்பெருகி திரளான ஜனக்கூட்டத்தாராயிருந்தார்கள்.
கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை யாக்கோபின் மூலமாக ஆசீர்வதிக்கிறார். யாக்கோபின் மூலமாக பூமியிலுள்ள குடும்பங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லா ஜனங்களும் இயேசுகிறிஸ்துவுக்குள்ளே ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்.
""காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்தி-ருக்கிறவைகளும் பூலோகத்தி-ருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்'' (எபே 1:10).
யாக்கோபு இப்போது கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கியிருக்கிறார். யாக்கோபும், யாக்கோபின் சந்ததியாரும் கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்று ஈசாக்கு சொல்லுகிறார். ஏசாவின் சந்ததியாருக்கு கானான் தேசத்தில் சுதந்தரம் இல்லை.
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, ""தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக'' (ஆதி 28:4) என்று சொல்லுகிறார்.
யாக்கோபு எந்த தேசத்தில் பரதேசியாய்த் தங்கியிருக்கிறாரோ, அந்த தேசத்தை அவர் சுதந்தரித்துக்கொள்வார். இஸ்ரவேலின் முற்பிதாக்கள் எல்லோருமே கானான் தேசத்தை சுதந்தரிக்கவேண்டும் என்று பிரியமாயிருந்தார்கள். ஆனால் கானான் தேசம் அவர்களுக்கு நிரந்தரமான நித்திய தேசமல்ல. அவர்கள் எல்லோரும் கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கியிருந்தார்கள். பரமதேசமே கர்த்தருடைய ஜனத்திற்கு நித்திய சுதந்தரம்.
நம்மிடத்தில் இப்பிரபஞ்சத்திற்குரிய காரியங்கள் எவ்வளவு திரளாகயிருந்தாலும், அந்தக் காரியங்கள் நமக்கு நிலையானது என்று நினைக்கக்கூடாது. அவை நமக்கு தற்காலிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. யாக்கோபைப்போல நாமும் இந்தப் பூமியில், நம்முடைய ஜீவியகாலம் வரையிலும், பரதேசியாய்த் தங்கியிருக்கிறோம்.
""இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'' (எபி 11:13).
ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிடுகிறார். அப்பொழுது யாக்கோபு பதான் அராமி-ருக்கும் சீரியா தேசத்தனாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்படுகிறார் (ஆதி 28:5).
பெத்துவேல் இரண்டு முறை சீரியா தேசத்தான் என்று அழைக்கப்பட்டிருக்கிறான். (ஆதி 28:5; ஆதி 25:20) பெத்துவேலின் குமாரனாகிய லாபான் மூன்று முறை இப்பெயரால் அழைக்கப் பட்டிருக்கிறான். (ஆதி 25:20; ஆதி 31:20,24). யாக்கோபிற்கு உபா 26:5 ஆவது வசனத்தில் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. குஷ்டரோகியான நாகமானுக்கும் சீரியா தேசத்தான் என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. (2இராஜா 5:20; லூக்கா 4:27).
இஸ்ரவேலுடைய ராஜாக்களின் காலத்தில் சீரிய பாஷை பிரபலமாக இருந்தது. (2இராஜா 18:26; எஸ்றா 4:7; ஏசா 36:11). சீரியா தேசம் பாலஸ்தீனாவிற்கு வடபகுதியில் இருக்கிறது. இவர்கள் இஸ்ரவேலரோடு பலமுறை யுத்தம் பண்ணினார்கள். ராஜாக்கள் புஸ்தகத்திலும், நாளாகமம் புஸ்தகத்திலும் சீரியா தேசத்தார் யூதருடைய விரோதிகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
யாக்கோபு கண்ட தரிசனம்
ஆதி 28:10#15
ஆதி 28:10. யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகபிரயாணம் பண்ணி,
ஆதி 28:11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான்.
ஆதி 28:12. அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
ஆதி 28:13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
ஆதி 28:14. உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
ஆதி 28:15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
யாக்கோபு சீரியா தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். அவர் இப்போது பெயர்செபாவிலிருக்கிறார். யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போக பிரயாணம்பண்ணுகிறார். யாக்கோபின் பிரயாணம் மிகுந்த துக்கமாயும், மனவேதனையாயும் இருக்கிறது. அவர் தன்னுடைய பெற்றோரை விட்டுப் பிரிந்து, தனியாகப் புறப்பட்டுப்போகிறார்.
யாக்கோபு பகல் வேளையிலே நீண்ட தூரம் பிரயாணம் செய்து பெத்தேல் என்னும் இடத்திற்கு வந்திருக்கிறார். இரவு வேளையாயிற்று. அவருடைய சரீரத்தில் களைப்பு உண்டாயிற்று.
யாக்கோபு பெத்தேல் என்னும் இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொள்கிறார் (ஆதி 28:11).
ஆபிரகாம் கல்தேயருடைய பட்டணமாகிய ஊரை விட்டுப் புறப்பட்டு தேராகு மரிக்கும் வரையிலும் ஆரானில் தங்கியிருந்தார். (ஆதி 11:26-30). நாகோர் ஆரானில் இருந்து விட்டார். இதன் காரணமாகத்தான் ஆதி 24, ஆதி 28 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் பிரயாணங்கள் நடைபெறுகிறது.
யாக்கோபு ஒரு இடத்திலே வந்து சேருகிறார். ""ஒரு இடம்'' என்பது ஆபிரகாம் இரண்டாம் பலிபீடம் கட்டிய இடமாகும். பெத்தேல் என்பது இதன் பெயர். இது பெயர்செபாவிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ளது. (ஆதி 12:8, ஆதி 28:19).
யாக்கோபு கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து நித்திரை செய்கிறார். ஒரே ஒரு கல்லை மட்டுமே யாக்கோபு எடுத்து பயன்படுத்துகிறார். தலையின்கீழ் இந்தக் கல்லை வைத்து நித்திரை செய்ய வேண்டுமானால் அந்தக் கல்லை ஒரு தலையணைபோல துணிகளால் சுற்றியிருக்க வேண்டும். ஆதி 28:18 ஆவது வசனத்தில் கல் என்பது பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வெளியிடங்களில் படுத்து நித்திரை செய்வது மந்தைமேய்ப்பர்களுக்கு புதிய அனுபவமோ, கடினமான அனுபவமோ அல்ல. (லூக்கா 2:8).
யாக்கோபுக்கு அங்கே படுப்பதற்கு வசதியான படுக்கை எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கு மென்மையான தலையணையும் இல்லை. அவ்விடத்திலுள்ள கற்களில் ஒன்றே அவருக்கு தலையணையாயிருக்கிறது. அவர் வானத்தைப் பார்த்தபடி படுத்துக்கொண்டிருக்கிறார். வானமே அவருக்கு கூரையாயிருக்கிறது.
யாக்கோபுக்கு பிரயாணக்களைப்பினால் உடனே நித்திரை வந்துவிடுகிறது. யாக்கோபு நித்திரையாயிருக்கும்போது ஒரு சொப்பனம் காண்கிறார்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதின் நுனி வானத்தை எட்டியிருக்கிறது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள். அதற்கு மேலாக கர்த்தர் நிற்கிறார் (ஆதி 28:12).
யாக்கோபுக்கு வசதியான படுக்கை இல்லாவிட்டாலும், சந்தோஷமான சொப்பனம் உண்டாயிற்று. யாக்கோபு தரிசனம் கண்டதுபோல, நாமும் தரிசனம் கண்டால், நம்முடைய நித்திரையும் இன்பமாயிருக்கும். நம்முடைய படுக்கை மென்மையாயிராமல், கடினமாயிருந்தாலும், நம்முடைய நித்திரை இன்பமாயிருக்கும்.
யாக்கோபு நித்திரையாயிருக்கும்போது, அவர் கண்ட சொப்பனத்திலே, கர்த்தர் யாக்கோபோடு கூட பேசுகிறார். யாக்கோபு சொப்பனத்திலே ஒரு ஏணியைக் காண்கிறார். கர்த்தர் அந்த ஏணியின் மேலாக நின்று யாக்கோபோடுகூட பேசுகிறார்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்'' என்றும்,
""உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்'' என்றும்,
""நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப் பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை'' (ஆதி 28:13#15) என்றும் சொல்லுகிறார்.
யாக்கோபு தன்னுடைய சொப்பனத்திலே சர்வவல்லமையுள்ள தேவனை தரிசிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறார். யாக்கோபு இதுவரையிலும் இதுபோல நிம்மதியாக நித்திரை செய்திருக்கமாட்டார். அவருக்கு இதுபோன்ற இன்பமான தூக்கம் இதுவரையிலும் வந்திருக்காது. நம்முடைய நித்திரையில், கர்த்தர் நம்மோடு பேசுவது, நமக்கு மிகுந்த ஆசீர்வாதம்.
யாக்கோபு கண்ட சொப்பனம் அவருக்கு உற்சாகமாயிருக்கிறது. அவர் தன் சொப்பனத்திலே ஒரு ஏணியைக் காண்கிறார். அந்த ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதன் நுனியோ வானத்தை எட்டியிருக்கிறது. அந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். அந்த ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார்.
வேதபண்டிதர்கள், யாக்கோபு கண்ட சொப்பனத்திற்கு பல்வேறுவிதமாக வியாக்கியானம் சொல்லுகிறார்கள். யாக்கோபு கண்ட சொப்பனம், தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்கு அடையாளம். வானத்திற்கும் பூமிக்கும் தொடர்ந்து சம்பாஷணை நடைபெற்றுக்கொண்டிருக்கும். தேவனுடைய கிரியைகள் ஒரே வேளையில் மொத்தமாய் நடைபெறுவதில்லை. அவை ஒவ்வொன்றாக, படிப்படியாக நடைபெறும். தேவதூதர்கள் ஏணிப்படியில், ஒவ்வொரு படியாக, ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். தேவனுடைய தெய்வீக ஞானமே எல்லாவற்றிக்கும் மேலாக உயரத்திலிருக்கிறது. கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, எல்லா காரியங்களையும் இயக்குகிறார். அவர் எல்லாவற்றையும் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
யாக்கோபு கண்ட தரிசனம் அவருக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுக்கிறது. அவருடைய மனது இப்போது வேதனையிலும் வியாகுலத்திலும் இருக்கிறது. அவர் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்திருக்கிறார். யாக்கோபின் சகோதரன் ஏசா, அவரைப் பகைத்து, அவரைக் கொன்றுபோட திட்டமிடுகிறான். யாக்கோபு இப்போது சீரியா தேசத்திற்கு தனியாகப் போகிறார். அவருக்கு அங்கே போக வழியும் தெரியாது. அவருக்கு பாதுகாப்புமில்லை.
யாக்கோபை வழிநடத்துவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி தேவைப்படுகிறார். யாக்கோபுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. யாக்கோபு போகும்போதும் வரும்போதும் அவரோடுகூட யாராவது ஒருவர் உடனிருந்து, அவரைக் காத்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்திற்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன்'' என்றும், ""நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை'' என்றும் சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தை யாக்கோபுக்கு ஆறுதலாயிருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, பிதாவாகிய தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். கிறிஸ்துவானவர் நமக்கும் தேவனுக்கும் நடுவிலிருந்து, மத்தியஸ்த ஊழியம் பண்ணுகிறார். யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியானது, இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்திற்கு அடையாளமாயிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
கிறிஸ்துவானவரே ஏணியாகயிருக்கிறார். அந்த ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய மனுஷசுபாவத்தில், இந்தப் பூமியிலே வாசம்பண்ணுகிறார். அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டியிருக்கிறது. கிறிஸ்துவானவருடைய தெய்வீக சுபாவம் பரலோகத்திலிருக்கிறது.
ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருப்பது இயேசுகிறிஸ்துவின் தாழ்மைக்கும், அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டியிருப்பது, கிறிஸ்துவானவர் உயர்த்தப்படுவதற்கும் அடையாளமாயிருக்கிறது. தேவன் நம்மோடு வாசம்பண்ணுகிறார் என்றால், நாம் தேவனோடு ஐக்கியமாயிருக்கிறோம் என்றால், இது இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நமக்கு சாத்தியமாகிறது. பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு வழி எதுவும் நமக்கு நியமிக்கப்படவில்லை.
யாக்கோபு கண்ட சொப்பனத்திலே, அந்த ஏணியானது பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதன் நுனி வானத்தை எட்டியிருக்கிறது. அந்த ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். தேவதூதர் அந்த ஏணியிலே ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். நாம் பரலோகத்திலே பிரவேசிக்கவேண்டுமென்றால், கிறிஸ்துவாகிய ஏணியின் மூலமாக ஏறிப்போகவேண்டும். மற்ற வழியாக ஏறுகிறவர்கள் கள்ளரும், கொள்ளைக்காரருமாயிருப்பார்கள்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் யாக்கோபு கண்ட தரிசனத்தைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
""பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்தி-ருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்'' (யோவா 1:51).
யாக்கோபு தன்னுடைய நித்திரையில், சொப்பனம் கண்டது மாத்திரமல்ல, அவர் கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகளையும் கேட்கிறார். கர்த்தர் யாக்கோபின் தகப்பனாகிய ஈசாக்குக்கு சொன்ன வாக்குத்தத்த வார்த்தைகளை, அவர் இங்கு யாக்கோபுக்கும் சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை யாக்கோபுக்கு உறுதிபண்ணுகிறார்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்'' (ஆதி 27:13,14) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் எப்படியிருந்தாரோ, அப்படியே அவர் யாக்கோபுக்கும் இருப்பார். இதுவே கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பொதுவான கருத்து. யாக்கோபு கானான் தேசத்தில் குடியிருப்பார். யாக்கோபின் சந்ததி திரளாய்ப் பெருகும். யாக்கோபின் சந்ததியில் மேசியா வருவார். மேசியாவின் மூலமாக பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
யாக்கோபுக்கு அவருடைய சகோதரர் ஏசா மூலமாக ஆபத்து இருக்கிறது. கர்த்தரோ யாக்கோபை பாதுகாப்பதாக வாக்குப்பண்ணுகிறார். யாக்கோபு சீரியா தேசத்திற்கு தனியாகப் போகிறார். அந்தப் பாதையில் அவர் இதுவரையிலும் போனதில்லை. யாக்கோபுக்கு சீரியா தேசத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. கர்த்தர் யாக்கோபோடு கூடயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு பிரயாணம்பண்ணும்போது அவருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பதும் அவருக்கு தெரியாது. கர்த்தரோ யாக்கோபோடு கூடயிருந்து, அவர் போகிற இடத்திலெல்லாம் அவரைக் காத்துக்கொள்வதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு பெயர்செபாவைவிட்டு ஆரானுக்குப்போகிறார். அவர் நாடு கடத்தப்பட்டவர்போல புறப்பட்டுப்போகிறார். யாக்கோபின் தகப்பனாராகிய ஈசாக்கு, அவருக்கு கட்டளை கொடுத்து அனுப்பியிருக்கிறார். யாக்கோபு மறுபடியும் பெயர்செபாவுக்கு திரும்பி வருவாரா என்பது அவருக்கே தெரியாது. கர்த்தரோ யாக்கோபை இந்த தேசத்திற்கு திரும்பி வரப்பண்ணுவதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு இப்போது எல்லாராலும் கைவிடப்பட்டவர் போல இருக்கிறார். அவருடைய உற்றார் உறவினரும், அவருடைய சிநேகிதரும் அவரைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் கர்த்தரோ யாக்கோபுக்கு சொன்னதை செய்யுமளவும் அவரை கைவிடுவதில்லை என்று வாக்குப்பண்ணுகிறார். கர்த்தர் யாரை நேசிக்கிறாரோ, அவரை ஒருபோதும் கைவிடமாட்டார்.
பெத்தேல்
ஆதி 28:16#19
ஆதி 28:16. யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
ஆதி 28:17. அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
ஆதி 28:18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து அதைத் தூணாக நிறுத்தி, அதின் மேல் எண்ணெய் வார்த்து,
ஆதி 28:19. அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர்இருந்தது.
யாக்கோபு சந்தோஷமாக நித்திரை பண்ணுகிறார். கர்த்தருடைய தரிசனமும், வார்த்தையும் அவருக்கு உற்சாகத்தையும் தெம்பையும் தருகிறது. யாக்கோபு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அதை இன்னும் அதிகமாய்த் தியானம்பண்ணுகிறார்.
சொப்பனத்திலே தனக்கு கிடைத்த தரிசனத்தை நினைத்து யாக்கோபு மிகவும் ஆச்சரியப்படுகிறார். அவர் நித்திரை தெளிந்து விழித்தபோது, ""மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்திலிருக்கிறார், இதை நான் அறியாதிருந்தேன்'' (ஆதி 28:16) என்று சொல்லுகிறார்.
கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னத்தையும், அவருடைய தெய்வீக வெளிப்பாட்டையும் யாக்கோபால் மற்றவர்களுக்கு சொல்ல முடியவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வெளிப்பாட்டை யாக்கோபால் மறுக்க முடியவில்லை.
கர்த்தர் தமக்கு சித்தமான இடத்திலே, தமக்கு சித்தமான ஜனங்களுக்கு தம்முடைய தெய்வீக தரிசனத்தை வெளிப்படுத்துகிறார். நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு வேளை நாம் நகரத்திலோ அல்லது வனாந்தரத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது வயல்வெளியிலோ இருக்கலாம். ஒருவேளை நாம் கடையிலிருக்கலாம் அல்லது தெருவில் இருக்கலாம். நாம் எங்கே இருந்தாலும் கர்த்தருடைய வெளிப்பாடு எந்த இடத்திலும் கிடைப்பதற்கு தடை எதுவுமில்லை.
ஆகார் கர்த்தருடைய தூதனானவரை வனாந்தரத்திலே கண்டாள். ""அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்-, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்'' (ஆதி 16:13).
யாக்கோபு நித்திரை தெளிந்து எழுந்தபோது அவருக்கு பயமுண்டாயிற்று. ""இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்'' (ஆதி 28:17) என்று யாக்கோபு சொல்லுகிறார். யாக்கோபு இப்போது பார்த்தது தேவனுடைய வீடாகவும், வானத்தின் வாசலாகவும் இருக்கிறது.
யாக்கோபுக்கு இந்த ஸ்தலம் மிகவும் முக்கியமான ஸ்தலமாகயிருக்கிறது. மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்திலிருக்கிறார் என்பதை யாக்கோபு அங்கீகரிக்கிறார். அவர் இந்த ஸ்தலத்தை தேவனுடைய வீடு என்றும், வானத்தின் வாசல் என்றும் சொல்லுகிறார். இந்த ஸ்தலத்தை மறவாமல் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்றும், அதற்காக இங்கே ஒரு ஞாபகசின்னத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் யாக்கோபு விரும்புகிறார்.
யாக்கோபுக்கு இந்த ஸ்தலம் மிகவும் விசேஷமாகயிருக்கிறது. அவர் இந்த ஸ்தலத்தை மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருப்பதற்காக இரண்டு காரியங்களை செய்கிறார். அவையாவன: 1. யாக்கோபு ஒரு தூணை நிறுத்துகிறார். 2. அவர் அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிடுகிறார்.
யாக்கோபு பெயர்செபாவிலிருந்து சீரியா தேசத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆரானுக்குப்போக புறப்பட்டபோது, இந்த ஸ்தலத்திலே, அவருக்கு தரிசனம் கிடைத்தது. கர்த்தர் இந்த ஸ்தலத்தில் மெய்யாகவே இருக்கிறார் என்பதை யாக்கோபு அறிந்திருக்கிறார். யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து அதைத் தூணாக நிறுத்தி, அதின் மேல் எண்ணெய் வார்க்கிறார் (ஆதி 28:18).
யாக்கோபுக்கு அங்கே பலிபீடம் கட்ட நேரமில்லை. அவர் தன்னுடைய பிரயாணத்தின் நடுவிலே இருக்கிறார். கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமானபோது, ஆபிரகாம் அந்த ஸ்தலத்திலே ஒரு பலிபீடத்தை கட்டினார்.
""கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு ப-பீடத்தைக் கட்டினான்'' (ஆதி 12:7).
யாக்கோபு ஆபிரகாமைப்போல பலிபீடம் கட்டாவிட்டாலும், அவர் ஒரு கல்லைத் தூணாக நிறுத்தி, அதற்கு எண்ணெய் வார்க்கிறார். தனக்கு ஏற்ற சூழ்நிலை உண்டாகும்போது, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டவேண்டும் என்னும் வாஞ்சை யாக்கோபுக்கு இருக்கிறது.
யாக்கோபு இந்த ஸ்தலத்தை மறக்கவில்லை. அவர் பிற்காலத்தில் இந்த ஸ்தலத்திலே ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார்.
""அங்கே அவன் ஒரு ப-பீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்'' (ஆதி 35:7).
யாக்கோபு அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிடுகிறார்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர்இருந்தது (ஆதி 28:19). லூஸ் என்னும் பெயருக்கு வாதுமை மரம் என்று பொருள். பெத்தேல் என்னும் பெயருக்கு தேவனுடைய வீடு என்று பொருள். யாக்கோபு அந்த இடத்திற்கு தேவனுடைய வீடு என்று பொருள்படும் , பெத்தேல் என்னும் பெயரை இடுகிறார்.
லூஸ் என்னும் பெயருக்கு வாதுமை மரம் என்று பொருள். இந்த ஸ்தலம் இனிமேல் வாதுமைமரம் என்று அழைக்கப்படுவதில்லை. கர்த்தர் இந்த ஸ்தலத்திலிருக்கிறார். இந்த ஸ்தலம் தேவனுடைய வீடாகவும், வானத்தின் வாசலாகவும் இருக்கிறது. ஆகையினால் யாக்கோபு இந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிடுகிறார். அவர் இந்த ஸ்தலத்தை மறவாமல் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காக, இதற்கு புதிய பெயரைக் கொடுக்கிறார்.
யாக்கோபு தேவனை இங்கு காண்கிறார். அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பெயரிடுகிறார். (ஆதி 28:19) இது வானத்தின் வாசல். பரலோகத்திற்குச் செல்லும் ஏணி இங்கிருந்துதான் போகிறது. இதன் வழியாகப் பரலோகத்திற்குச் செல்ல முடியும்.
யாக்கோபு தன் தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, அதை ஒரு தூணாக நிறுத்தினார். அதன்மேல் எண்ணெய் வார்த்து, தேவனுக்கு ஒரு பலிபீடமாக அதைப் பிரதிஷ்டை பண்ணினார் (ஆதி 28:18). முப்பது வருஷங்களுக்குப் பின்பு, யாக்கோபு இதே இடத்தில் தன்னுடைய பொருத்தனையைத் திரும்பவும் பண்ணுகிறார் (ஆதி 35:14).
பெரிய காரியங்களைக் கொண்டாடும்போது இவ்வாறு நினைவுத்தூண் எழுப்புவது வழக்கம். சீனாய் மலையில் மோசே இதுபோன்று செய்திருக்கிறார். (யாத் 24:4). யோசுவா யோர்தான் நதியிலும் (யோசு 4), சீகேமிலும் (யோசு 24:26). இரண்டு நினைவுத்தூண்களை எழுப்பினார். கற்களை நினைவுத்தூண்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை விக்கிரகங்களாக வழிபடக்கூடாது (லேவி 26:1; உபா 16:22).
கண்ட தரிசனம்
ஆதி 28:10#15
ஆதி 28:10. யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகபிரயாணம் பண்ணி,
ஆதி 28:11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான்.
ஆதி 28:12. அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
ஆதி 28:13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
ஆதி 28:14. உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
ஆதி 28:15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
யாக்கோபு சீரியா தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். அவர் இப்போது பெயர்செபாவிலிருக்கிறார். யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போக பிரயாணம்பண்ணுகிறார். யாக்கோபின் பிரயாணம் மிகுந்த துக்கமாயும், மனவேதனையாயும் இருக்கிறது. அவர் தன்னுடைய பெற்றோரை விட்டுப் பிரிந்து, தனியாகப் புறப்பட்டுப்போகிறார்.
யாக்கோபு பகல் வேளையிலே நீண்ட தூரம் பிரயாணம் செய்து பெத்தேல் என்னும் இடத்திற்கு வந்திருக்கிறார். இரவு வேளையாயிற்று. அவருடைய சரீரத்தில் களைப்பு உண்டாயிற்று.
யாக்கோபு பெத்தேல் என்னும் இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொள்கிறார் (ஆதி 28:11).
ஆபிரகாம் கல்தேயருடைய பட்டணமாகிய ஊரை விட்டுப் புறப்பட்டு தேராகு மரிக்கும் வரையிலும் ஆரானில் தங்கியிருந்தார். (ஆதி 11:26-30). நாகோர் ஆரானில் இருந்து விட்டார். இதன் காரணமாகத்தான் ஆதி 24, ஆதி 28 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் பிரயாணங்கள் நடைபெறுகிறது.
யாக்கோபு ஒரு இடத்திலே வந்து சேருகிறார். ""ஒரு இடம்'' என்பது ஆபிரகாம் இரண்டாம் பலிபீடம் கட்டிய இடமாகும். பெத்தேல் என்பது இதன் பெயர். இது பெயர்செபாவிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ளது. (ஆதி 12:8, ஆதி 28:19).
யாக்கோபு கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து நித்திரை செய்கிறார். ஒரே ஒரு கல்லை மட்டுமே யாக்கோபு எடுத்து பயன்படுத்துகிறார். தலையின்கீழ் இந்தக் கல்லை வைத்து நித்திரை செய்ய வேண்டுமானால் அந்தக் கல்லை ஒரு தலையணைபோல துணிகளால் சுற்றியிருக்க வேண்டும். ஆதி 28:18 ஆவது வசனத்தில் கல் என்பது பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வெளியிடங்களில் படுத்து நித்திரை செய்வது மந்தைமேய்ப்பர்களுக்கு புதிய அனுபவமோ, கடினமான அனுபவமோ அல்ல. (லூக்கா 2:8).
யாக்கோபுக்கு அங்கே படுப்பதற்கு வசதியான படுக்கை எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கு மென்மையான தலையணையும் இல்லை. அவ்விடத்திலுள்ள கற்களில் ஒன்றே அவருக்கு தலையணையாயிருக்கிறது. அவர் வானத்தைப் பார்த்தபடி படுத்துக்கொண்டிருக்கிறார். வானமே அவருக்கு கூரையாயிருக்கிறது.
யாக்கோபுக்கு பிரயாணக்களைப்பினால் உடனே நித்திரை வந்துவிடுகிறது. யாக்கோபு நித்திரையாயிருக்கும்போது ஒரு சொப்பனம் காண்கிறார்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதின் நுனி வானத்தை எட்டியிருக்கிறது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள். அதற்கு மேலாக கர்த்தர் நிற்கிறார் (ஆதி 28:12).
யாக்கோபுக்கு வசதியான படுக்கை இல்லாவிட்டாலும், சந்தோஷமான சொப்பனம் உண்டாயிற்று. யாக்கோபு தரிசனம் கண்டதுபோல, நாமும் தரிசனம் கண்டால், நம்முடைய நித்திரையும் இன்பமாயிருக்கும். நம்முடைய படுக்கை மென்மையாயிராமல், கடினமாயிருந்தாலும், நம்முடைய நித்திரை இன்பமாயிருக்கும்.
யாக்கோபு நித்திரையாயிருக்கும்போது, அவர் கண்ட சொப்பனத்திலே, கர்த்தர் யாக்கோபோடு கூட பேசுகிறார். யாக்கோபு சொப்பனத்திலே ஒரு ஏணியைக் காண்கிறார். கர்த்தர் அந்த ஏணியின் மேலாக நின்று யாக்கோபோடுகூட பேசுகிறார்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்'' என்றும்,
""உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்'' என்றும்,
""நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப் பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை'' (ஆதி 28:13#15) என்றும் சொல்லுகிறார்.
யாக்கோபு தன்னுடைய சொப்பனத்திலே சர்வவல்லமையுள்ள தேவனை தரிசிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறார். யாக்கோபு இதுவரையிலும் இதுபோல நிம்மதியாக நித்திரை செய்திருக்கமாட்டார். அவருக்கு இதுபோன்ற இன்பமான தூக்கம் இதுவரையிலும் வந்திருக்காது. நம்முடைய நித்திரையில், கர்த்தர் நம்மோடு பேசுவது, நமக்கு மிகுந்த ஆசீர்வாதம்.
யாக்கோபு கண்ட சொப்பனம் அவருக்கு உற்சாகமாயிருக்கிறது. அவர் தன் சொப்பனத்திலே ஒரு ஏணியைக் காண்கிறார். அந்த ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதன் நுனியோ வானத்தை எட்டியிருக்கிறது. அந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். அந்த ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார்.
வேதபண்டிதர்கள், யாக்கோபு கண்ட சொப்பனத்திற்கு பல்வேறுவிதமாக வியாக்கியானம் சொல்லுகிறார்கள். யாக்கோபு கண்ட சொப்பனம், தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்கு அடையாளம். வானத்திற்கும் பூமிக்கும் தொடர்ந்து சம்பாஷணை நடைபெற்றுக்கொண்டிருக்கும். தேவனுடைய கிரியைகள் ஒரே வேளையில் மொத்தமாய் நடைபெறுவதில்லை. அவை ஒவ்வொன்றாக, படிப்படியாக நடைபெறும். தேவதூதர்கள் ஏணிப்படியில், ஒவ்வொரு படியாக, ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். தேவனுடைய தெய்வீக ஞானமே எல்லாவற்றிக்கும் மேலாக உயரத்திலிருக்கிறது. கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, எல்லா காரியங்களையும் இயக்குகிறார். அவர் எல்லாவற்றையும் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
யாக்கோபு கண்ட தரிசனம் அவருக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுக்கிறது. அவருடைய மனது இப்போது வேதனையிலும் வியாகுலத்திலும் இருக்கிறது. அவர் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்திருக்கிறார். யாக்கோபின் சகோதரன் ஏசா, அவரைப் பகைத்து, அவரைக் கொன்றுபோட திட்டமிடுகிறான். யாக்கோபு இப்போது சீரியா தேசத்திற்கு தனியாகப் போகிறார். அவருக்கு அங்கே போக வழியும் தெரியாது. அவருக்கு பாதுகாப்புமில்லை.
யாக்கோபை வழிநடத்துவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி தேவைப்படுகிறார். யாக்கோபுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. யாக்கோபு போகும்போதும் வரும்போதும் அவரோடுகூட யாராவது ஒருவர் உடனிருந்து, அவரைக் காத்துக்கொள்ளவேண்டும்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்திற்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன்'' என்றும், ""நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை'' என்றும் சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தை யாக்கோபுக்கு ஆறுதலாயிருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, பிதாவாகிய தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். கிறிஸ்துவானவர் நமக்கும் தேவனுக்கும் நடுவிலிருந்து, மத்தியஸ்த ஊழியம் பண்ணுகிறார். யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியானது, இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்திற்கு அடையாளமாயிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
கிறிஸ்துவானவரே ஏணியாகயிருக்கிறார். அந்த ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய மனுஷசுபாவத்தில், இந்தப் பூமியிலே வாசம்பண்ணுகிறார். அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டியிருக்கிறது. கிறிஸ்துவானவருடைய தெய்வீக சுபாவம் பரலோகத்திலிருக்கிறது.
ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருப்பது இயேசுகிறிஸ்துவின் தாழ்மைக்கும், அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டியிருப்பது, கிறிஸ்துவானவர் உயர்த்தப்படுவதற்கும் அடையாளமாயிருக்கிறது. தேவன் நம்மோடு வாசம்பண்ணுகிறார் என்றால், நாம் தேவனோடு ஐக்கியமாயிருக்கிறோம் என்றால், இது இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நமக்கு சாத்தியமாகிறது. பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு வழி எதுவும் நமக்கு நியமிக்கப்படவில்லை.
யாக்கோபு கண்ட சொப்பனத்திலே, அந்த ஏணியானது பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறது. அதன் நுனி வானத்தை எட்டியிருக்கிறது. அந்த ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். தேவதூதர் அந்த ஏணியிலே ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். நாம் பரலோகத்திலே பிரவேசிக்கவேண்டுமென்றால், கிறிஸ்துவாகிய ஏணியின் மூலமாக ஏறிப்போகவேண்டும். மற்ற வழியாக ஏறுகிறவர்கள் கள்ளரும், கொள்ளைக்காரருமாயிருப்பார்கள்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் யாக்கோபு கண்ட தரிசனத்தைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
""பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்தி-ருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்'' (யோவா 1:51).
யாக்கோபு தன்னுடைய நித்திரையில், சொப்பனம் கண்டது மாத்திரமல்ல, அவர் கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகளையும் கேட்கிறார். கர்த்தர் யாக்கோபின் தகப்பனாகிய ஈசாக்குக்கு சொன்ன வாக்குத்தத்த வார்த்தைகளை, அவர் இங்கு யாக்கோபுக்கும் சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை யாக்கோபுக்கு உறுதிபண்ணுகிறார்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போ-ருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும், பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்'' (ஆதி 27:13,14) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் எப்படியிருந்தாரோ, அப்படியே அவர் யாக்கோபுக்கும் இருப்பார். இதுவே கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பொதுவான கருத்து. யாக்கோபு கானான் தேசத்தில் குடியிருப்பார். யாக்கோபின் சந்ததி திரளாய்ப் பெருகும். யாக்கோபின் சந்ததியில் மேசியா வருவார். மேசியாவின் மூலமாக பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
யாக்கோபுக்கு அவருடைய சகோதரர் ஏசா மூலமாக ஆபத்து இருக்கிறது. கர்த்தரோ யாக்கோபை பாதுகாப்பதாக வாக்குப்பண்ணுகிறார். யாக்கோபு சீரியா தேசத்திற்கு தனியாகப் போகிறார். அந்தப் பாதையில் அவர் இதுவரையிலும் போனதில்லை. யாக்கோபுக்கு சீரியா தேசத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. கர்த்தர் யாக்கோபோடு கூடயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு பிரயாணம்பண்ணும்போது அவருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பதும் அவருக்கு தெரியாது. கர்த்தரோ யாக்கோபோடு கூடயிருந்து, அவர் போகிற இடத்திலெல்லாம் அவரைக் காத்துக்கொள்வதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு பெயர்செபாவைவிட்டு ஆரானுக்குப்போகிறார். அவர் நாடு கடத்தப்பட்டவர்போல புறப்பட்டுப்போகிறார். யாக்கோபின் தகப்பனாராகிய ஈசாக்கு, அவருக்கு கட்டளை கொடுத்து அனுப்பியிருக்கிறார். யாக்கோபு மறுபடியும் பெயர்செபாவுக்கு திரும்பி வருவாரா என்பது அவருக்கே தெரியாது. கர்த்தரோ யாக்கோபை இந்த தேசத்திற்கு திரும்பி வரப்பண்ணுவதாக வாக்குப்பண்ணுகிறார்.
யாக்கோபு இப்போது எல்லாராலும் கைவிடப்பட்டவர் போல இருக்கிறார். அவருடைய உற்றார் உறவினரும், அவருடைய சிநேகிதரும் அவரைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் கர்த்தரோ யாக்கோபுக்கு சொன்னதை செய்யுமளவும் அவரை கைவிடுவதில்லை என்று வாக்குப்பண்ணுகிறார். கர்த்தர் யாரை நேசிக்கிறாரோ, அவரை ஒருபோதும் கைவிடமாட்டார்.
யாக்கோபின் பொருத்தனை
ஆதி 28:20#22
ஆதி 28:20. அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
ஆதி 28:21. என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
ஆதி 28:22. நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத்தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்-ப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்.
யாக்கோபு இந்த ஸ்தலத்திலே கர்த்தரோடு பொருத்தனை பண்ணிக்கொள்கிறார். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நமக்கு உறுதிபண்ணும்போது, நாமும் நம்முடைய மனதிலே கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை மறுபடியுமாய் நினைவுகூரவேண்டும்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, ""நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்திற்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன்'' (ஆதி 28:15) என்று வாக்குப்பண்ணினார். யாக்கோபு கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தைகளை விசுவாசிக்கிறார்.
கர்த்தர் தனக்கு சொன்ன வார்த்தைகளை யாக்கோபு தன்னுடைய இருதயத்திலே பற்றிக்கொண்டு, ""தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றுவாரானால்'' (ஆதி 28:20) என்று விசுவாசத்தோடே சொல்லுகிறார். யாக்கோபு கர்த்தருடைய வார்த்தையை நம்பி, அதை இறுகப்பற்றிக்கொள்கிறார்.
யாக்கோபு கர்த்தரிடத்தில் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை அதிகமாய் எதிர்பார்க்கவில்லை. தனக்கு உண்ண ஆகாரமும் உடுக்க வஸ்திரமும் கர்த்தர் கொடுத்தால், அதுவே போதுமானது என்று யாக்கோபு நினைக்கிறார். யாக்கோபினிடத்தில் பேராசையில்லை. அவரிடத்தில் போதுமென்கிற மனமும், திருப்தியும் இருக்கிறது.
யாக்கோபு கர்த்தரிடத்தில் பக்தியாயிருக்கிறார். கர்த்தர் தன்னை காப்பற்றவேண்டும் என்றும், அவர் தன்னை தன் தகப்பன் வீட்டிற்கு சமாதானத்தோடே திரும்பி வரப்பண்ணவேண்டும் என்றும் யாக்கோபு விரும்புகிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளில் உண்மையுள்ளவர் என்றும், அவர் வாக்குமாறாதவர் என்றும் யாக்கோபு விசுவாசிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரம், தன்னுடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து அதை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை யாக்கோபின் இருதயத்தில் காணப்படுகிறது. யாக்கோபு கர்த்தரிடத்தில் பொருத்தனை பண்ணுகிறார். கர்த்தர் தன்னுடைய விண்ணப்பங்களை நிறைவேற்றுவாரானால், ""கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார்'' (ஆதி 28:27) என்று யாக்கோபு விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
யாக்கோபு கர்த்தர்மீது பயபக்தியாயிருக்கிறார். தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தும் வண்ணமாக, ""நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுடைய வீடாகும்'' (ஆதி 28:22) என்று யாக்கோபு விசுவாசத்தோடு சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய கிருபையினால் யாக்கோபை இந்த ஸ்தலத்திற்கு சமாதானத்தோடே திரும்பி வரப்பண்ணும்போது, யாக்கோபு இந்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டுவார். இப்போது யாக்கோபு இந்த ஸ்தலத்தில், தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தியிருக்கிறார்.
பலிபீடத்தில் பலிகள் செலுத்தப்படவேண்டும். பலிசெலுத்தாத பலிபீடம் தேவனுடைய வீடாகயிருக்காது. யாக்கோபு இந்தப் பலிபீடத்தில் கர்த்தருக்கு பலிசெலுத்துவதாகவும் வாக்குப்பண்ணுகிறார். தேவன் தனக்கு தரும் எல்லாவற்றிலும் அவருக்கு தசமபாகம் செலுத்துவதாக, யாக்கோபு பொருத்தனை பண்ணிக்கொள்கிறார் (ஆதி 28:22).
யாக்கோபு கர்த்தரோடு பொருத்தனை பண்ணும்போது, ""தேவன் என்னோடே இருந்தால்'' என்று சொல்லுகிறார். யாக்கோபிற்குச் சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் தேவன் ஆதி 28:13#15 ஆகிய வசனங்களில் வாக்குத்தத்தம் பண்ணியபடி யாக்கோபோடேகூட இருக்கிறார்.
மோசேயின் பிரமாணத்திற்கு முன்பாகவே, யாக்கோபு பொருத்தனை பண்ணுகிறார். தேவனும் பொருத்தனையை நினைவுகூருகிறார். (ஆதி 31:13). நாம் பொருத்தனைகளைச் செய்ய வேண்டும். (லேவி 23:37-38; எண் 29:39) அவற்றை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும் (எண் 30:2; பிர 5:4-6) பொருத்தனையை மீறக்கூடாது. (லேவி 5:4-13; லேவி 22: 18-25; எண் 15:2-16; எண் 30:2-16; உபா 23:18-22). நாம் பொருத்தனையின் கிரயத்தைக் கணக்குப் பார்க்கவேண்டும் (லேவி 27:1-25).
காணிக்கையாகச் செலுத்துவதற்குச் சில காரியங்கள் தடைபண்ணப்பட்டிருக்கிறது. (லேவி 7:16-18; உபா12:6-26; நியா 18:14). (உபா 23:18-23, யோபு 22:27; சங் 22:25; சங் 50:14; சங் 56:12; சங் 61:5; சங் 65:1; சங் 66:13; சங் 76:11; சங் 116:14-19; நீதி 20:25; நாகூம் 1:15).
நாம் அவசரப்பட்டு பொருத்தனை பண்ணக்கூடாது. பரிசுத்த வேதாகமத்தில் அவசரப்பட்டு பொருத்தனை பண்ணின சில சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. யெப்தாவின் பொருத்தனை (நியா 11:29-40)
2. இஸ்ரவேலுடைய பொருத்தனை (நியா 21:5-6)
3. நாற்பது மனுஷருடைய பொருத்தனை (அப் 23:12)
பரிசுத்த வேதாகமத்தில் பொதுவான பொருத்தனைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு:
1. யாக்கோபின் பொருத்தனை# தசமபாகம் செலுத்துதல் (ஆதி 28:20-22)
2. அன்னாளின் பொருத்தனை (1சாமு 1:11,27-28)
3. எல்க்கானாவின் வருஷாந்தரப் பொருத்தனை (1சாமு 1:21)
4. யோபு தன் கண்களோடே பண்ணிய பொருத்தனை (யோபு 31:1)
5. தாவீதின் பொருத்தனை (சங் 132:2)
6. யோனாவின் பொருத்தனை (யோனா 2:9)
7. பவுலின் பொருத்தனை (அப் 18:18)