பெருமையின் வடிவம்
மாயமான தாழ்மையிலும்... கோலோசெயர் - 2 :19
பக்கத்து கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்குச் செல்ல தகப்பனிடம் மகன் காசு கேட்டான். தகப்பன் அவனுக்கு முன்பாக ஒரு 10 ரூபாய் நாணயத்தையும், ஒரு 100 ரூபாய் தாளையும் வைத்து. இதில் ஏதாவது ஒன்றை நீ எடுத்துக்கொள்ளலாம். என்றார். மகன் “அப்பா இந்த 10 ரூபாய் நாணயம் எனக்கு போதும்” என்றான். அதோடு அவன் நின்றுவிடவில்லை. “ அப்பா இந்த நாணயத்தை இந்த தாளில் (100 ரூபாய் தாளில்) மடித்து பத்திரமாக எடுத்துச் செல்கிறேன்" என்று சொல்லி 100 ரூபாய் தாளையும் எடுத்துச் சென்றான். பாருங்கள் இவன் ரொம்ப புத்தி சாலியான மகன்.
பிசாசானவன் இந்த புத்திசாலித்தனத்தை பல ஆவிக்குரியவர்களிடம் எப்படியாவது செயல்படவைக்கிறான். அவர்கள் தெரிந்து கொள்வது தாழ்மை என்னும் குணத்தை, ஆனால் அந்தத் தாழ்மையைப் பெருமை என்னும் தாளில் பொதிந்து வைக்கிறார்கள். அவர்கள் தெரிந்து கொள்வது எளிமை என்னும் உயர்ந்த குணத்தை, ஆனால் மனமேட்டிமையால் அதை மூடிக் கொள்கிறார்கள்.
சிலருடைய தாழ்மையான செயல்பாடுகளே அவர்களைப் பெருமைக்காரர்கள் ஆக்கிவிடுகிறது. அவர்கள் தங்களின் தாழ்மை நிலையை அதிகமாகப் பெரிதுபடுத் திக் காண்பிப்பதோடு தங்களின் தாழ்மையான செயல்களுக்காகவே பிறர் அதிக மாகத் தங்களைப் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். சில வேளை களில், அவர்களின் பார்வையில் மற்றவர்கள் யாவரும் பெருமைக்காரர்களாகத் தோன்றி, தங்களுக்குள் தங்களை மிகச் சிறப்பானவர்களாக உணரச் செய்கின்றது.
ஆம். தாழ்மை ஒரு நல்ல குணம். ஆனால் அந்தத் தாழ்மையைப் பிறருக்குப் பெரிதாகக் காட்டி, தங்களை மேன்மைப்படுத்துவது ஒரு பெருமை ஆகும். எளிமை யாக வாழ்வதை தேவன் விரும்புகிறார். ஆனால் அந்த எளிமையை மற்றவர்கள் காண வேண்டுமென்றும், மற்றவர்கள் புகழ வேண்டும் என்றும் நினைப்பது ஒரு மனமேட்டிமை.
ஒருவன் தன்னைப் பெரியவன் என்றுக் காட்டிக்கொள்வது மட்டுமல்ல பெருமை. தன்னைப் பெரிய தாழ்மை நிறைந்தவனாகக் காண்பித்து அதில் ஒரு புகழ்ச்சியைத் தேடுவதும் பெருமைதான். ஏதாவது நம்மில் உள்ள ஒன்றைக் குறித்து மேன்மை பாராட்டுவது பெருமையின் விளைவே.
நல்ல ஒழுக்கங்கள் உனக்கு அலங்காரத்தைத் தரும். ஆயினும் அந்த அலங்காரம் உனக்கு அகங்காரத்தை தராதிருக்கப்பார்.
