26 அதிகாரம்
ஆசரிப்புக்கூடாரத்தின் உட்புறத்தில் பயன்படுத்தப்படும் மூடுதிரைகளைப்பற்றியும், காதுகளைப்பற்றியும் கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார் (யாத் 26:1#6).
ஆசரிப்புக்கூடாரத்தின் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் மூடுதிரைகள் ஆட்டுமயிரினால் செய்யப்படுகிறது. உட்புறத்து மூடுதிரைகளைவிட, வெளிப்புறத்து மூடுதிரைகள் அதிக பலமுள்ளதாகயிருக்கிறது (யாத் 26:7#13).
ஆசரிப்புக்கூடாரத்திற்கு சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடா தோலினால் ஒரு மூடியும், தகசுதோலால் ஒரு மூடியும் உண்டுபண்ணப்படுகிறது (யாத் 26:14).
வாசஸ்தலத்திற்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பலகைகளின் அளவுகளும், இவை இசைக்கப்படும் விதமும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது (யாத் 26:15#30).
மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் பிரிவினை உண்டாகும் திரைச்சீலை (யாத் 26:31#35). கூடாரத்தின் வாசலில் பயன்படுத்தப்படும் தொங்குதிரை (யாத் 26:36,37).
மெல்-ய நூல் மூடுதிரைகள்
யாத் 26:1#6
யாத் 26:1. மேலும் திரித்த மெல்-ய பஞ்சுநூ-னாலும் இளநீலநூ-னாலும் இரத்தாம்பர நூ-னாலும் சிவப்புநூ-னாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
யாத் 26:2. ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
யாத் 26:3. ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
யாத் 26:4. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக
யாத் 26:5. காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
யாத் 26:6. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றொடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் கூடாரமாயிருக்கிறது. கர்த்தர் தம்முடைய பிரசன்னத்தை இஸ்ரவேல் புத்திரர் மத்தியில், இந்தக் கூடாரத்தில் வெளிப்படுத்துகிறார். இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில் பாளயமிறங்கும்போது அவர்கள் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். கர்த்தரும் வனாந்தரத்திலே தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்தில் வாசம்பண்ணுகிறார்.
இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிரயாணம்பண்ணும்போது தங்களுடைய கூடாரங்களை பிரித்தெடுத்து தங்களோடுகூட கொண்டுபோவார்கள். அதுபோலவே அவர்கள் கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தையும் பேர்த்தெடுத்து, தாங்கள் பிரயாணம்பண்ணும்போது சுமந்துகொண்டு போவார்கள்.
வனாந்தரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆசரிப்புக்கூடாரம், இந்த உலகத்தில் கர்த்தருடைய சபைக்கு அடையாளமாயிருக்கிறது.
""கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?'' (சங் 15:1).
விசுவாசிகளாகிய நமக்கு இந்த உலகத்தில் நிலையான நகரம் எதுவுமில்லை. நாம் இந்தப் பிரபஞ்சத்திற்கு அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருக்கிறோம். நாம் பரமகானானை நோக்கி பிரயாணம்பண்ணுகிறோம். நாம் பரலோகத்தில் போய்ச்சேரும் வரையிலும், நம்முடைய பிரயாணம் முடிவு பெறுவதில்லை. இஸ்ரவேல் புத்திரரும், கானான் தேசத்திற்கு போய்ச்சேரும் வரையிலும், வனாந்தரத்திலே தொடர்ந்து பிரயாணம் பண்ணவேண்டும்.
ஆசரிப்புக்கூடாரத்தை செய்வதற்கு மூடுதிரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூடுதிரைகள் திரித்த மெல்லிய பஞ்சு நூலினாலும், இளநூலினாலும், இரத்தாம்பர நூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்டிருக்கிறது. இந்த நூல்கள் எல்லாமே விலையேறப்பெற்றவை. இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய வர்ணங்களெல்லாம் கண்ணுக்கு இனிமையானவை. மூடுதிரைகள் நேர்த்தியான நூல்களால் நெய்யப்பட்டிருக்கிறது.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""மேலும் திரித்த மெல்-ய பஞ்சுநூ-னாலும் இளநீலநூ-னாலும் இரத்தாம்பர நூ-னாலும் சிவப்புநூ-னாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்'' (யாத் 26:1) என்று சொல்லுகிறார்.
பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார். பத்து என்னும் எண்ணிற்கு விசேஷித்த அடையாளம் எதுவுமில்லை. தீர்க்கதரிசனங்களிலும், ""பத்து'' என்று கூறப்பட்டிருக்கிற எண் ""பத்து'' என்னும் எண்ணை மட்டுமே குறிக்கும். (தானி 7:7,20,24; வெளி 12:3; வெளி 13:1; வெளி 17:3,7,17).
மூடுதிரைகள் திரித்த மெல்-ய பஞ்சுநூலால் நெய்யப்படுகிறது. ஆசரிப்புக்கூடாரம், பலிகள், காணிக்கைகள், சடங்குகள் ஆகியவை வேதாகமத்தில் அடையாளங்களாக கூறப்பட்டிருக்கின்றன. (கொலோ 2:14#17; எபி 10:1). மெல்லிய பஞ்சுநூல் என்பது நீதியையும், பரிசுத்தத்தையும் குறிக்கலாம். (வெளி 19:8)
கேருபீன்கள் பரலோகத்தின் சிருஷ்டிகள். இவை தேவனுடைய பிரசன்னத்தில் வாசம்பண்ணுகிறது. இவற்றிற்கு சில கடமைகள் உண்டு. அவையாவன:
1. தேவன் மனுஷனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அதன் பின்பு ஜீவவிருட்சத்திற்குப் போகும் வழியைக் காவல் செய்வதற்குத் தேவன் கேருபீன்களை வைத்தார். (ஆதி 3:24)
2. கர்த்தர் கேருபீன்களின்மேல் ஏறி, வேகமாகச் செல்லுகிறார். (2சாமு 22:11; சங் 18:10)
3. இவை தேவனுடைய சிங்காசனத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தூக்கிச் செல்லும். (எசே 1; எசே 9:3; எசே 10:1#20; எசே 11:22)
கிருபாசனம் தேவனுடைய பிரசன்னத்தைக் குறிக்கிறது. பரலோகத்தில் கேருபீன்கள் தேவனுடைய பிரசன்னத்தில் வாசம்பண்ணுகிறது. ஆசரிப்புக்கூடாரத்தில் விசித்திரவேலையாகக் கேருபீன்கள் செய்யப்பட்டிருப்பது, தேவனுடைய பிரசன்னம் அங்கு இருப்பதை இஸ்ரவேல் ஜனத்தாருக்கு உறுதிபண்ணுகிறது. சாதாரண தூதர்களுக்கு ""கேருப்'' என்று பெயர் (எசே 28:11#17)
மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்க வேண்டும். ஒரு முழம் என்பது 18 அங்குலமாகும். ஒவ்வொரு மூடுதிரையும் 6 ல 42 அடி அளவுள்ளது. ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளை உண்டுபண்ணவேண்டும். ஐம்பது காதுகளும் மூடுதிரைகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது (யாத் 26:6).
மூடுதிரைகளில் கேருபீன்கள் விசித்திர வேலையாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய தூதர்கள் ஆசரிப்புக்கூடாரத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருக்கிறார்கள் என்பதற்கு இது அடையாளம்.
""கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்'' (சங் 34:7).
ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும் என்றும், ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் (யாத் 26:2,3) கர்த்தர் சொல்லுகிறார்.
மூடுதிரைகளின் ஓரத்தில் காதுகள் உண்டுபண்ணப்படவேண்டும். அந்தக் காதுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கவேண்டும். இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு என்றும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக என்றும், காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக என்றும் (யாத் 25:4,5) கர்த்தர் சொல்லுகிறார்.
ஆசரிப்புக்கூடாரத்திற்கு பத்து மூடுதிரைகள் நெய்யப்படுகிறது. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகிறது. மூடுதிரைகளை இணைப்பதற்கு காதுகள் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் நூறு காதுகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மூடுதிரையிலும் ஐம்பது காதுகள் வீதமாக உண்டுபண்ணப்படுகிறது.
காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும்போது, மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, கூடாரத்தின் வடிவத்தைப் பெறுகிறது. ""ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றொடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்'' (யாத் 26:6) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருடைய சபையில் அவருடைய பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவராகயிருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஏகோபித்து கர்த்தருடைய சபையாகயிருக்கிறார்கள். மூடுதிரைகள் காதுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதுபோல, கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பரிசுத்தமான அன்பினால் இசைவாய்க் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்.
கர்த்தருடைய சபையிலே அவருடைய பரிசுத்தவான்கள் அநேகராயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தினால் ஒன்றுகூடியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக கட்டியெழுப்பப்படுகிறார்கள்.
""அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்'' (எபே 2:21,22).
""அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது'' (எபே 4:16).
ஆட்டுமயிர் மூடுதிரைகள்
யாத் 26:7#14
யாத் 26:7. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
யாத் 26:8. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழநீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
யாத் 26:9. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.
யாத் 26:10. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
யாத் 26:11. ஐம்பது வெண்கலக் கொக்கிளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.
யாத் 26:12. கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
யாத் 26:13. கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
யாத் 26:14. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோ-னால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
ஆசரிப்புக்கூடாரத்திற்கு இரட்டிப்பான மூடுதிரைகளைப்போடுமாறு கர்த்தர் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார். கூடாரம் மழையில் தாக்குப்பிடிக்கவேண்டும். மழைத்தண்ணீர் கூடாரத்திற்குள் ஒழுகக்கூடாது. இதற்காக ஆட்டுமயிரால் மூடுதிரைகளை செய்து வாசஸ்தலத்தின்மேல் போடுமாறு கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழநீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்'' (யாத் 26:7,8) என்று சொல்லுகிறார்.
ஆட்டுமயிர் மூடுதிரைகள் வலுவாகவும், கனமுள்ளதாகவும் இருக்கிறது. மெல்லிய நூலால் நெய்யப்பட்ட மூடுதிரைகளைவிட ஆட்டுமயிரால் உண்டுபண்ணப்பட்ட மூடுதிரைகள் அளவில் பெரியவை. மெல்லிய நூல் மூடுதிரையின் நீளம் இருபத்தெட்டு முழம். ஆட்டுமயிர் மூடுதிரையின் நீளம் முப்பது முழம்.
ஆட்டுமயிர் மூடுதிரைகளின் எண்ணிக்கையும், மெல்லிய நூல் மூடுதிரைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாயிருக்கிறது. மெல்லிய நூல் மூடுதிரைகள் பத்து. ஆட்டுமயிர் மூடுதிரைகளோ பதினொன்று.
கூடாரத்திற்குள்ளே மெல்லிய நூல் மூடுதிரைகள் போடப்பட்டிருக்கிறது. ஆட்டுமயிர் மூடுதிரைகளோ, வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாக போடப்படுகிறது. ஆகையினால் இவை அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரித்திருக்கிறது. ஆட்டுமயிர் மூடுதிரைகள், கூடாரத்தின் வெளிப்புறத்தை மூடுகிறது.
பதினொரு ஆட்டுமயிர் மூடுதிரைகளையும் எவ்வாறு இணைக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ""ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக'' (யாத் 26:9) என்பது கர்த்தருடைய கட்டளையாகும்.
பதினொரு ஆட்டுமயிர் மூடுதிரைகளையும் இணைப்பதற்கு ஐம்பது காதுகளையும், ஐம்பது வெண்கல கொக்கிகளையும் உண்டுபண்ண வேண்டுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணவேண்டும். ஐம்பது வெண்கலக் கொக்கிளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும் (யாத் 26:10,11).
ஆட்டுமயிர் மூடுதிரைகளால் போடப்பட்ட கூடாரத்திற்கு, மேலும் இரண்டு மூடிகள் போடப்படுகிறது. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோ-னால் கூடாரத்திற்கு ஒரு மூடியும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியும் போடப்படுகிறது (யாத் 26:14).
சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடா தோல் என்பது கம்பளி தோலைக் குறிக்கலாம். தகசுதோல் என்பது பாதரட்சைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும், பாடம்பண்ணப்பட்ட கடினமான தோலைக் குறிக்கலாம்.
""சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்-ய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்தேன்'' (எசே 16:10).
ஆசரிப்புக்கூடாரத்தின் வெளிப்பகுதி கனமானதாகவும், மழுமழுப்பில்லாமல் சுரசுரப்பாகவும் இருக்கிறது. கூடாரத்தின் உட்பகுதியோ மழுமழுப்பாகவும் அழகாகவும் இருக்கிறது. கர்த்தர் இந்த ஆசரிப்புக்கூடாரத்தில் வாசம்பண்ணுகிறார். இந்தக் கூடாரத்தின் வெளிப்பகுதி பார்வைக்கு அழகாகயில்லாவிட்டாலும், அது கூடாரத்திற்கு அதிக பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.
கர்த்தர் விசுவாசிகளாகிய நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். நாமே கர்த்தருக்கு ஆலயமாகயிருக்கிறோம். கர்த்தர் நமக்குள்ளே வாசம்பண்ணுவதினால் நாம் கர்த்தருடைய கூடாரமாகயிருக்கிறோம். கர்த்தர் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறவரல்ல. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தர் மனுஷனுடைய இருதயத்தை ஆராய்ந்து அறிகிறார்.
கர்த்தர் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். நாம் கூடாரத்தின் வெளிப்புறத்திலிருக்கிற ஆட்டுமயிர் மூடுதிரைகளைப்போலவும், சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலைப்போலவும், தகசுதோலைப்போலவும் வெளிப்பார்வைக்கு அழகில்லாமல் சுரசுரப்பாகயிருந்தாலும், கர்த்தர் வாசம்பண்ணுகிற அவருடைய கூடாரத்திற்கு பிரயோஜனமான ஊழியத்தை செய்யவேண்டும்.
விசுவாசிகளாகிய நம்மிடத்தில் அழகும், ஆடம்பரமும், ஐசுவரியமும் இல்லாவிட்டாலும், நாம் தகசு தோலைப்போல சாதாரணமானவர்களாகயிருந்தாலும், மெல்லிய நூல் மூடுதிரைகளைப்போல அழகாயிராமலும் ஆட்டுமயிர் மூடுதிரைகளைப்போல சாதாரண ஜனங்களாயிருந்தாலும், நாமும் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாகயிருக்கவேண்டும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஊழியத்தை உண்மையாய்ச் செய்யவேண்டும்.
நம்முடைய உள்ளான மனுஷன் கர்த்தருக்குள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படவேண்டும். நம்முடைய மெய்யான அழகு, நம்முடைய இருதயத்தில் மறைந்திருக்கிற நல்ல குணமேயாகும்.
""அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது'' (1பேது 3:4).
கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும் என்றும், கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும் (யாத் 26:12,13) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
பரிசுத்த ஸ்தலத்தை மூடும் இரண்டாவது மூடி ஆட்டு மயிரினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. கூடாரத்திற்குள் தண்ணீர் ஒழுகாமல் இது பாதுகாக்கும். பிரயாணத்தின்போதும் பிய்ந்து போகாமல், நீண்டநாள் உழைக்கக்கூடியது.
பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்க வேண்டும். ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழநீளமும் அதாவது 45 அடி நீளமும், நாலு முழ அகலமும் அதாவது 6 அடி அகலமும் இருக்கவேண்டும். மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்ட மூடுதிரையைவிட இது அளவில் பெரியது. முதலாவது திரையை விட இரண்டாவது மூன்றடி நீளமும், 6அடி அகலமும் அதிகமானது. (யாத் 26:1#6)
ஆறாம் மூடுதிரை கூடாரத்திற்கு இரண்டாம் மூடுதிரையாக இருக்கும். இதைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடவேண்டும். மடித்துப்போடும் அளவிற்கு இது அளவில் பெரியதாக இருக்கும்.
மெல்லிய நூலினால் செய்யப்பட்ட பத்து திரைகளைப்போல (யாத் 26:1#6), இவற்றிலும் ஐம்பது காதுகள் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. பொன்னுக்குப் பதிலாக இந்தக் கொக்கிகளும், காதுகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கிறது.
மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். பதினொறாவது மூடுதிரையின் பாதி 3 அடி நீளமுடையதாக இருக்கும். முன்புறத்தில் தொங்குவதுபோல பின்புறத்திலும் 3 அடி நீளத்தில் மூடுதிரை தொங்கும் (யாத் 26:9,12). ஆசரிப்புக்கூடாரத்தின் ஒவ்வொரு புறத்திலும் மூடுதிரைகள் 18 அங்குலம் ஒன்றுக்குமேல் ஒன்று பொருந்தியிருக்கும்.
கூடாரத்திற்கு இரண்டு மூடிகள் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. மெல்லிய நூலினால் செய்யப்பட்டிருக்கும் மூடுதிரைக்கு மேல் (யாத் 26:1#6) இவை இரண்டும் மூடப்படும். (யாத் 26:7#14). முழுக் கூடாரத்தையும் மூடும் அளவிற்கு இந்த மூடுதிரைகள் அளவில் பெரியதாயிருக்கும். மூன்றாம் மூடுதிரை சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. அதன்மேல் மூடப்படும் நான்காம் திரை தகசுத்தோலால் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது.
குளிரிலும், மழையிலும், வெயிலிலும் தகசுத்தோல் கூடாரத்தைப் பாதுகாக்கிறது. தேவனுடைய வாசஸ்தலத்திற்கு நான்கு மூடிகள் ஏன் போடப்பட்டது என்று தெரியவில்லை. யூதேயாவில் அடிக்கடி ஏற்படும் பருவ மழையிலிருந்தும், கோடைக்காலத்து வெயிலிலிருந்தும் வாசஸ்தலத்தைப் பாதுகாப்பதற்காக அதற்கு நான்கு மூடிகள் போடப்பட்டிருக்கலாம்.
பலகைகள்
யாத் 26:15#30
யாத் 26:15. வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
யாத் 26:16. ஒவ்வொரு பலகையும் பத்து முழநீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
யாத் 26:17. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
யாத் 26:18. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
யாத் 26:19. அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத் 26:20. வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
யாத் 26:21. அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத் 26:22. வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறுபலகைகளையும்,
யாத் 26:23. வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
யாத் 26:24. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.
யாத் 26:25. அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
யாத் 26:26. சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
யாத் 26:27. வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
யாத் 26:28. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
யாத் 26:29. பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.
யாத் 26:30. இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
ஆசரிப்புக்கூடாரத்திற்கு தேவையான பலகைகளை செய்யவேண்டும். இவற்றை சீத்திம் மரத்தில் உண்டுபண்ணவேண்டும். ஒவ்வொரு பலகையும் பத்து முழநீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும் (யாத் 26:15,16).
""உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து'' (ஏசா 54:2).
இந்தப் பலகைகளை உண்டுபண்ணுவது பற்றியும், அதன் அளவுகளைப்பற்றியும், அவை ஒன்றோடொன்று இசைக்கப்பட வேண்டிய விதம் பற்றியும் கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார். ""ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக'' (யாத் 26:17) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது என்றும், அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக என்றும், ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும் (யாத் 26:18,19) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
""வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறுபலகைகளையும், வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக'' (யாத் 26:20#23) என்றும்,
""பலகைகள் கீழேயும் மேலேயும் இசைக்கப்படவேண்டும். அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்'' (யாத் 26:24) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
ஒவ்வொரு பலகையின் கீழும் இரண்டு பாதங்கள் இருக்கவேண்டும். அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும் (யாத் 26:25).
ஒவ்வொரு பலகையும் 27 அங்குலம் அகலமும், 45 அடி நீளமும் உடையது. வாசஸ்தலத்தின் மேற்புறத்தில் ஆறு பலகைகள் இருக்கும். (யாத் 26:22) வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகள் இருக்கும்.
வாசஸ்தலத்தில் மொத்தம் எட்டு பலகைகள் இருக்கும். வாசஸ்தலத்தின் அகலம் 18 அடி (யாத் 26:22#25). நான்கு மூலைகளிலுமுள்ள பலகைகள் மேலும், கீழும் பொன் வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும் (யாத் 26:23#24).
பலகைகளில் பண்ணவேண்டிய தாழ்ப்பாள்களைப்பற்றியும் கர்த்தர் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார். ""சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக'' (யாத் 26:26,27) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும் என்றும், பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய் என்றும், கர்த்தர் சொல்லுகிறார் (யாத் 26:28,29).
மரப்பலகைகளை ஒன்றாக இணைப்பதற்குத் தாழ்ப்பாள்கள் பயன்படுத்தப்படுகிறது. பொன்வளையங்களால் பலகைகளும், தாழ்ப்பாள்களும் இணைக்கப்படுகிறது. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும் (யாத் 26:26#28).
கர்த்தர் மோசேயை நோக்கி, ""இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக'' (யாத் 26:30) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திரைச்சீலை
யாத் 26:31#35
யாத் 26:31. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
யாத் 26:32. சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
யாத் 26:33. கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
யாத் 26:34. மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;
யாத் 26:35. திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
மோசே இரண்டு திரைச்சீலைகளை செய்யவேண்டும். ஒரு திரைச்சீலை மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவிலே தொங்கவிடப்படுகிறது. மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதான ஆசாரியனைத்தவிர வேறு யாரும் பிரவேசிக்க கூடாது. அது மாத்திரமல்ல பரிசுத்த ஸ்தலத்திலோ அல்லது வெளிப்பிரகாரத்திலோ இருக்கிறவர்கள் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நோக்கிப் பார்க்கவும் கூடாது. அதற்காகவே மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருக்கிறது.
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும் என்றும்,
சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும் என்றும்,
கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய் என்றும், (யாத் 26:31#33) கர்த்தர் சொல்லுகிறார்.
அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் (யாத் 26:33).
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லோருக்கும் தேவனுடைய கிருபை தாராளமாய்க் கிடைக்கவில்லை. திரைச்சீலை மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும் ஜனங்களுக்கும் பிரிவை உண்டாக்கியதுபோல, பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கிருபைக்கு தூரமாய் விலகியிருந்தார்கள்.
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாமோ கர்த்தருடைய கிருபாசனத்தண்டையிலே கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
""நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக்கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்'' (2கொரி 3:18).
""அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் ப-களும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்'' (எபி 9:8,9).
இயேசுகிறிஸ்துவின் மரணத்தின்போது, தேவாலயத்தில், மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே பிரிவை உண்டாக்கிய திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்தது.
""அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது'' (மத் 27:51).
விசுவாசிகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தின் வல்லமையினால், கர்த்தருடைய மகாபரிசுத்த ஸ்தலத்திலே தைரியமாய்க் கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனாலும் நாம் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக மிகுந்த பயபக்தியோடும், மனத்தாழ்மையோடும், பணிவோடும் நிற்கவேண்டும்.
மகாபரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தலத்திற்கு வெளியே திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருக்கிறது. இது மகாபரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்குகிறது.
திரைச்சீலைக்கு புறம்பாக உள்ள பரிசுத்த ஸ்தலத்தில் மேஜையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. மேஜை வடபுறமாக வைக்கப்பட்டிருக்கிறது (யாத் 26:35).
தொங்குதிரை
யாத் 26:36,37
யாத் 26:36. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
யாத் 26:37. அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.
மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருப்பதுபோல ஆசரிப்பு கூடாரத்தின் வாசலில் தொங்குதிரை தொங்கவிடப்பட்டிருக்கிறது.
முதலாவது திரைச்சீலை வழியாக ஆசாரியர்கள் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஸ்தலத்திலே ஊழியம் செய்வதற்கு பிரவேசிப்பார்கள். ஆனாலும் பொதுஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கக்கூடாது.
""இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்'' (எபி 9:6).
கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கப்பட்டிருக்கும் தொங்குதிரையோ, கூடாரத்தின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டிருக்கிறது. ஆசாரிப்புக்கூடாரத்திற்குள் திருடர்கள் நுழைந்துவிடக்கூடாது. ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள விலையுயர்ந்த பணிமுட்டுக்களை யாரும் திருடிச்சென்று விடக்கூடாது. ஆசரிப்புக்கூடாரம் மூடப்படாமல் திறந்தபடியே இருப்பதினால், கள்ளர்கள் கூடாரத்திற்குள் எளிதாக பிரவேசித்து கூடாரத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களை எளிதாக திருடிச்சென்றுவிடக்கூடிய ஆபத்துள்ளது.
ஆசரிப்புக்கூடாரத்தின் பாதுகாப்புக்காக தொங்குதிரையை செய்யுமாறு கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்'' (யாத் 25:36,37) என்று சொல்லுகிறார்.
வாசஸ்தலத்தின் முதலாவது மூடியாகிய பத்து திரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே இங்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (யாத் 25:4; யாத் 26:1). உள்திரை (யாத் 26:31), வெளித்திரை (யாத் 26:36), பிரகாரத்தின் வாசல்திரை (யாத் 27:16).
வெளித்திரையும், வாசல்திரையும் சித்திரத்தையல் வேலையால் செய்யப்பட்டிருக்கிறது (யாத் 27:16). உள்திரை விசித்திர வேலையாகச் செய்யப்பட்டிருக்கிறது. (யாத் 26:1,31) யாத் 35:35 ஆவது வசனத்தில் இது விசித்திர நெசவுவேலை என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆசரிப்புக்கூடாரத்தின் நுழை வாசலில் கதவுகள் இல்லை. அதற்கு பூட்டுகளோ அல்லது தாழ்ப்பாள்களோ போடப்படவில்லை. ஆசரிப்புக்கூடாரத்தில் ஏராளமான ஐசுவரியங்கள் அங்கங்கே இருக்கிறது. அவை எல்லோருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாய்த் தெரிகிறது.
ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு பூட்டுகள் இல்லாததினால், ஆசரிப்புக்கூடாரத்தை காவல் காக்கிற லேவியரும், அதிலே ஊழியம் செய்கிறவர்களும் மிகவும் எச்சரிப்பாயிருக்க வேண்டும். ஆசரிப்புக்கூடாரத்தின் பரிசுத்த பணிமுட்டுக்களை கவனமாய்ப் பாதுகாக்கவேண்டும்.
ஆசரிப்புக்கூடாரத்தைப்போலவே, இந்தப் பூமியிலுள்ள கர்த்தருடைய சபையும் பாதுகாப்பு இல்லாமல் பலவீனமாயிருக்கிறது. சத்துரு சபைக்குள்ளே எளிதாக பிரவேசித்து, சபையை சேதப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளது. மனுஷருடைய முயற்சியினால் சபையை பாதுகாக்க முடியாது. கர்த்தரே தம்முடைய சபையை பாதுகாத்து பராமரிக்கிறார்.
கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தைப் பாதுகாப்பதற்கு சாதாரண தொங்குதிரை போதுமானதாயிருக்கிறது. மெய்யான பாதுகாப்பு கர்த்தர் மூலமாக வருகிறது. இரும்பு கதவுகளினாலும், இரும்பு தாழ்ப்பாள்களினாலும் கொடுக்க முடியாத பாதுகாப்பை கர்த்தர் தம்முடைய கிருபையினால் கொடுக்கிறார்.
