25 அதிகாரம்
ஆசரிப்புக்கூடாரத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமாகவும், ஆசரிப்புக்கூடாரத்தில் வைக்கவேண்டிய பரிசுத்த பணிமுட்டுகள் சம்பந்தமாகவும் கர்த்தர் மோசேக்கு தம்முடைய வார்த்தைகளை சொல்லுகிறார். கர்த்தருடைய நாமமகிமைக்காகவும், அவரை கனம்பண்ணும் வண்ணமாகவும் அவருக்கு ஆசரிப்புக்கூடாரம் ஸ்தாபிக்கப்படுகிறது.
ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும், அதில் பயன்படுத்தவேண்டிய பணிமுட்டுகளை செய்வதற்காகவும் மோசே இஸ்ரவேல் ஜனத்தாரிடமிருந்து காணிக்கைகளை வாங்கவேண்டும் (யாத் 25:1#9).
உடன்படிக்கைப்பெட்டி சம்பந்தமான பிரமாணம் (யாத் 25:10#22). சமுகத்தப்ப மேஜை சம்பந்தமான பிரமாணம் (யாத் 25:23#30). பொன்குத்துவிளக்கு சம்பந்தமான பிரமாணம் (யாத் 25:31#40).
ஆசரிப்புக்கூடாரம்
யாத் 25:1#9
யாத் 25:1. கர்த்தர் மோசேயை நோக்கி:
யாத் 25:2. இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
யாத் 25:3. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
யாத் 25:4. இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்-ய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
யாத் 25:5. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
யாத் 25:6. விளக்கெண்ணையும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
யாத் 25:7. ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
யாத் 25:8. அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
யாத் 25:9. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின்மேல் ஏறுகிறார். அவர் சீனாய் மலையில் இரவும் பகலும் நாற்பதுநாள் இருக்கிறார். அந்த நாட்களில் அவர் கர்த்தருடைய மகிமையான காரியங்களைப் பார்த்திருப்பார் என்றும், மேலும் அவர் அந்த நாட்களிலே கர்த்தருடைய மகிமையான காரியங்களை தன்னுடைய செவிகளால் கேட்டிருப்பார் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனாலும் இந்த சம்பவங்கள் எதுவும் பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. கர்த்தருடைய இரகசியங்கள் ஒருவேளை சொல்லக்கூடாததாகயிருக்கலாம். அல்லது அதைப்பற்றி சொல்லுவது கர்த்தருடைய பிரமாணத்திற்கு முரண்பட்டதாகயிருக்கலாம். ஆகையினால் அந்த இரகசியம் பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படாத மறைபொருளாகயிருக்கிறது.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணவேண்டுமென்று சித்தமுள்ளவராயிருக்கிறார். அதற்காக தமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குமாறு கர்த்தர் மோசேயினிடத்தில் சொல்லுகிறார் (யாத் 25:8).
கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாரை தமக்கு சொந்த ஜனமாக தெரிந்துகொண்டார். கர்த்தரே அவர்களுக்கு ராஜாவாயிருக்கிறார். அவர்களை ஆளுகை செய்வதற்கு கர்த்தர் தம்முடைய பிரமாணங்களையும் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். இஸ்ரவேல் புத்திரர் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும், அவர்கள் ஆவிக்குரிய ஆராதனைகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்றும் கர்த்தர் அவர்களுக்கு பிரமாணங்களாக சொல்லியிருக்கிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறார். அவர் வாசம்பண்ணுவதற்காக அவருக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்கவேண்டும். இந்த ஸ்தலம் கர்த்தருடைய பரிசுத்த அரண்மனையாகயிருக்கும்.
""எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது'' (எரே 17:12).
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் மாதிரியை கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார். கர்த்தர் சொல்லுகிற பிரகாரமாக அதிலுள்ள தட்டுமுட்டுகளையெல்லாம் செய்யவேண்டும். கர்த்தர் மோசேயை நோக்கி, ""நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக'' (யாத் 25:9) என்று சொல்லுகிறார்.
""இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல'' (எபி 9:10).
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. ""அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது'' (எபி 9:1).
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலே வாசம்பண்ணுகிறார். இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே கர்த்தருடைய பிரசன்னம் பிரத்தியட்சமாய் வெளிப்படுகிறது. அவருடைய பரிசுத்த ஸ்தலம், அவருடைய பிரசன்னத்திற்கு அடையாளமாயிருக்கிறது.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய தேவனாகிய கர்த்தரும், அவர்கள் மத்தியிலே வாசம்பண்ணுகிறார். ஆகையினால் இஸ்ரவேல் புத்திரர் இனிமேல், ""கர்த்தர் எங்களோடு இருக்கிறாரா'' என்று சந்தேகத்தோடு கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லை.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே கூடாரங்களிலே தங்கியிருக்கிறார்கள். கர்த்தர் அவர்கள் மத்தியிலே ஆசரிப்புக்கூடாரத்திலே தங்கியிருக்கிறார். இஸ்ரவேல் ஜனத்தார் எல்லோரும் வனாந்தரத்திலே, கூடாரங்களில் தங்கியிருக்கும்போது, கர்த்தர் தாம் வாசம்பண்ணுவதற்கு மிகப்பெரிய அரண்மனை வேண்டும் என்று கேட்கவில்லை. வனாந்தரத்தில் ஆசரிப்புக்கூடாரமே கர்த்தருடைய வாசஸ்தலமாயிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணும் போதெல்லாம், கர்த்தருடைய கூடாரமும் அவர்களோடு கூட பிரயாணம் பண்ணும். அவர்கள் பாளயமிறங்கியிருக்கும் இடத்திலே கர்த்தருக்கு கூடாரம் போடவேண்டும். அவர்கள் தங்கள் கூடாரங்களை எடுத்துக்கொண்டு வனாந்தரத்திலே பிரயாணம்பண்ணும்போது, ஆசரிப்புக்கூடாரத்தையும் பேர்த்தெடுத்து தங்களோடுகூட எடுத்துக்கொண்டு போகவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் எங்கே இருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே கர்த்தரும் வாசம்பண்ணுகிறார்.
இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே வந்து அவரை ஆராதிக்கவேண்டும். அங்கே அவருக்கு காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும், கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே கூடிவந்து கர்த்தரை ஆராதிக்கவேண்டும். அங்கே அவர்கள் பண்டிகைகளை ஆசரிக்கவேண்டும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, இஸ்ரவேல் ஜனத்தார் எல்லோரும் ஏகமாய் ஆராதிக்கவேண்டும்.
ஆசரிப்புக்கூடாரம் மனுஷருடைய கைகளினால் செய்யப்படுகிறது. இது மெய்யான பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ""அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்'' (எபி 9:24).
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி பண்ணுவதற்காக, தம்முடைய திருஇரத்தத்தையே, பாவநிவாரண கிரயமாக செலுத்தினார். கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலே வாசம்பண்ணுகிறார். கிறிஸ்துவானவர் வார்த்தையாகயிருக்கிறார். அவர் மாம்சமாகி நம் மத்தியிலே வாசம்பண்ணுகிறார். கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தில் வாசம்பண்ணியதுபோல, கிறிஸ்துவானவர் நம் மத்தியிலே வாசம்பண்ணுகிறார்.
கிறிஸ்துவின் சபையாகிய விசுவாசிகள் கர்த்தருக்கு பரிபூரணமான ஆசரிப்புக்கூடாரமாயிருக்கிறோம்.
""கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்'' (எபி 9:11,12).
கர்த்தரே தம்முடைய வாசஸ்தலத்தின் மாதிரியை மோசேக்கு காண்பிக்கிறார். அதிலுள்ள எல்லா தட்டுமுட்டுகளின் மாதிரியையும் கர்த்தர் மோசேக்கு காண்பிக்கிறார். கர்த்தர் தனக்கு காண்பித்த மாதிரியின்படியே மோசே ஒவ்வொரு காரியத்தையும் செய்யவேண்டும்.
ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுவதற்கு பணம் தேவைப்படும். இதற்காக ஆகும் செலவை சேகரிப்பதற்காக, மோசே இஸ்ரவேல் ஜனத்தாரிடமிருந்து கட்டாயமாய் வரிவசூலிக்கக்கூடாது. அவர்களிடத்தில் சுயாதீனமான காணிக்கைகளை வாங்கலாம்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக'' (யாத் 25:1,2) என்று சொல்லுகிறார். நாம் கர்த்தரை சார்ந்து ஜீவிக்கிறோம். ஆகையினால் நாம் கர்த்தருக்காக ஜீவிக்கவேண்டும்.
இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருக்கு மனப்பூர்வமாயும், உற்சாகமாயும் காணிக்கைகளை செலுத்தவேண்டும். கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கவேண்டுமென்று அவர்களை யாரும் கட்டாயம்பண்ணக்கூடாது. பொதுவாக ""நாம் என்ன செய்யவேண்டும்'' என்று கேட்போம். கர்த்தருடைய பிள்ளைகளோ, ""நாம் கர்த்தருக்காக என்ன செய்யவேண்டும்'' என்று தங்களுக்குத் தாங்களே எப்போதும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மோசே இஸ்ரவேல் புத்திரரிடத்தில், தமக்காக என்னென்ன காணிக்கைகளை வாங்கவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். ""நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்-ய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும், சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்கெண்ணையும், அபிஷேகதைலத்துக்குப் பரிமள வர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே'' (யாத் 25:3#7) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு சில பணிமுட்டுக்கள் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தினாலும் செய்யப்படுகிறது. ஆனால் ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள எந்தப் பொருளும் இரும்பினால் செய்யப்படவில்லை. இரும்பு இராணுவத்திலே பயன்படுத்தப்படும் உலோகம். கர்த்தருடைய வாசஸ்தலம் யுத்தம்பண்ணுகிற யுத்தகளமல்ல. அது சமாதான ஸ்தலம். கர்த்தர் சமாதான கர்த்தராயிருக்கிறார். அவருடைய வாசஸ்தலமும் சமாதானத்தின் வாசஸ்தலமாயிருக்கிறது.
கர்த்தர் தாமே தம்முடைய வாசஸ்தலத்தின் மாதிரியை மோசேக்கு சொல்லுகிறார். அந்த மாதிரியின்படியே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய வாசஸ்தலத்தையும், அதிலுள்ள எல்லா தட்டுமுட்டுகளையும் செய்யவேண்டும்.
ஆசரிப்புக்கூடாரத்தில் பல்வேறுவிதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
1. பொன்
2. வெள்ளி
3. வெண்கலம்
4. இளநீலநூல்
5. இரத்தாம்பரநூலும், தூபவர்க்கமும்
6. சிவப்புநூல்
7. மெல்-ய பஞ்சுநூல்
8. வெள்ளாட்டுமயிர்
9. தகசுத்தோல்
10. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல்
11. சீத்திம் மரம்
12. விளக்கெண்ணைய்
13. அபிஷேகதைலத்துக்குப் பரிமள வர்க்கங்கள்
14. கோமேதக்கற்கள்
15. ரத்தினங்கள் (யாத் 28:15#29)
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரிடத்திற்குக் காணிக்கையை மனப்பூர்வமாய் கொண்டுவரவேண்டும். காணிக்கை என்பது கட்டாயமாகச் செலுத்தப்படும் வரியல்ல. எகிப்தியரிடமிருந்து பெற்றுக் கொண்ட ஐசுவரியங்களிலிருந்து இஸ்ரவேல் புத்திரர் காணிக்கை செலுத்த வேண்டும். (யாத் 12:35#36) தங்கள் பிதாக்களிடமிருந்து சுதந்தரமாகப் பெற்றுக் கொண்ட பொருட்களிலிருந்து இஸ்ரவேல் புத்திரர் காணிக்கை செலுத்த வேண்டும். (ஆதி 13:2; ஆதி 25:5). தேவனுக்குச் செலுத்தப்படும் காணிக்கையை இருதயத்தின் நிறைவினால் செலுத்த வேண்டும்.
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்-ய பஞ்சுநூலும் காணிக்கையாக வாங்கலாம். நான்குவிதமான நூலைப்பற்றி இங்கு கூறப்பட்டிருக்கிறது. அவை இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு, மெல்லிய பஞ்சு (வெண்மை) ஆகிய நூல்களாகும்.
இரத்தாம்பரமும், சிவப்பும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதோடு தொடர்புடையது. (மத் 27:28; யோவான் 19:2). வெண்மை இந்த வசனத்திலும், வெளி 19:13#14 ஆகிய வசனங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இளநீலத்தை ஒருவிதமான சங்குகளிலிருந்தும், இரத்தாம்பரத்தை ஒருவிதமான மீன்களிலிருந்தும் சிவப்புநூலை புழுவிலிருந்தும் தயாரித்தார்கள். (அப் 16:14) ஸ்திரீகள் பஞ்சை நூற்று, அதற்குச் சாயம்போடுவார்கள். ஆடை நெய்வது, சித்திரத்தையலாடை செய்வது ஆகியவற்றை அகோலியாபும், அவனுடைய ஆட்களும் செய்தார்கள் (யாத் 35:25,34#35)
வெள்ளாட்டுமயிர் என்பது கம்பளி நூலைக் குறிக்கும். ஆசியா தேசத்தில் வெள்ளாடுகளின் ரோமம் நீளமாகவும், அழகாகவும் இருக்கும். பட்டுபோல மென்மையாக இருக்கும். இது உயர்ந்த கம்பளி நூலாகும்.
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலை காணிக்கையாக வாங்கலாம். சில ஆட்டுக்கடாக்களின் தோல்கள் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். இதற்கு அதிக சாயம் பூசத்தேவையில்லை.
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் தகசுத்தோலையும் காணிக்கையாக வாங்கலாம். ஆசரிப்புக் கூடாரத்தை மூடுவதற்கும், பணிமுட்டுக்கள், பாதரட்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கும் தகசுத்தோலைப் பயன்படுத்துகிறார்கள். பிரயாணம் பண்ணும்போது தகசுத்தோல் பாதத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சீத்திம் மரத்தையும், விளக்கெண்ணையையும் காணிக்கையாக வாங்கலாம் என்று சொல்லுகிறார். எகிப்துதேசத்திலும், சீனாய் வனாந்தரத்திலும் சீத்திம் மரம் ஏராளமாக உள்ளன. இந்த மரத்தின் கட்டைகள் அழகானவை, நீடித்த நாள் உழைக்கக்கூடியவை.
ஒலிவஎண்ணெயே விளக்கெண்ணைய் என்று அழைக்கப்படுகிறது (யாத் 27:20; யாத் 30:24; லேவி 24:2; உபா 8:8; உபா 24:20). பாலஸ்தீன தேசத்தில் ஒலிவமரம் ஏராளமாக உள்ளன. (உபா 6:11; உபா 28:40).
அபிஷேக தைலம் தயாரிக்கும்போது பரிமள வர்க்கங்களும், (யாத் 30:22#33) சுகந்தவர்க்கங்களும் (யாத் 37:29) பயன்படுத்தப்படுகிறது.
ஏபோத்தில் இரண்டு கோமேதகக் கற்கள் இருக்கும். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரின் பெயர்கள் அதில் பதிக்கப்பட்டிருக்கும். (ஆதி 2:12, யாத் 28:6#14). மார்ப்பதக்கத்தில் பன்னிரண்டு இரத்தினங்கள் இருக்கும். அவற்றில் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் பெயர்கள் பதிக்கப்பட்டிருக்கும் (யாத் 28:15#29).
உடன்படிக்கைப்பெட்டி
யாத் 25:10#22
யாத் 25:10. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
யாத் 25:11. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
யாத் 25:12. அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
யாத் 25:13. சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
யாத் 25:14. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களி-ருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.
யாத் 25:15. அந்தத் தண்டுகள் பெட்டியி-ருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
யாத் 25:16. நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
யாத் 25:17. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
யாத் 25:18. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
யாத் 25:19. ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
யாத் 25:20. அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
யாத் 25:21. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
யாத் 25:22. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியை பண்ணுமாறு கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி. கர்த்தருடைய பத்துக்கட்டளைகள் எழுதப்பட்டிருக்கிற இரண்டு கற்பலகைகளும் இந்தப் பெட்டியில் வைக்கப்படவேண்டும். இதை மிகுந்த கனத்தோடும், பரிசுத்தத்தோடும், கவனத்தோடும் வைக்கவேண்டும். இந்தப் பெட்டியின் நீளமும், அகலமும், உயரமும் எவ்வளவு இருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக'' (யாத் 25:10) என்று சொல்லுகிறார். ஒரு முழம் என்பது இக்கால அளவின்படி ஒன்றரை அடியாகும். ஒரு முழம் என்பது இருபத்தொரு அங்குலம் என்றும் வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
இந்தப்பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் பசும்பொன்தகட்டினால் மூடப்படவேண்டும். கர்த்தர் மோசேயை நோக்கி, ""அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கு'' (யாத் 25:11) என்று சொல்லுகிறார்.
அந்தப் பெட்டிக்கு வளையங்களும், தண்டுகளும் செய்யப்படவேண்டும். கர்த்தர் மோசேயை நோக்கி, ""அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களி-ருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்'' (யாத் 25:12#14) என்றும்,
""அந்தத் தண்டுகள் பெட்டியி-ருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக'' (யாத் 25:15,16) என்றும் சொல்லுகிறார்.
கர்த்தருடைய பத்துக்கட்டளைகள் எழுதப்பட்டிருக்கிற கற்பலகைகள் சாட்சி பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரமாணத்தில் கர்த்தர் தம்முடைய சித்தத்தை சாட்சியாக எழுதியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷமும் சாட்சி என்று அழைக்கப்படுகிறது.
""ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்'' (மத் 24:14).
பத்துக்கட்டளைகளும் எழுதப்பட்டிருக்கிற கற்பலகைகள் உடன்படிக்கைப்பெட்டியிலே வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும். கர்த்தருடைய வார்த்தையை நமக்கு உபதேசம் பண்ணுவதற்காகவும், கர்த்தருடைய கட்டளைகள் நம்முடைய இருதயங்களில் தங்கியிருக்கவேண்டும் என்பதற்காகவும், இரண்டு கற்பலகைகளும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, ஆசரிப்புக்கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்திலே பாதுகாக்கப்பாக வைக்கப்பட வேண்டும். கர்த்தருடைய கட்டளைகள் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலே பாதுகாப்பாக வைக்கப்படவேண்டும். இதற்கு அடையாளமாக, இது மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படுகிறது.
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவருடைய பிரசன்னத்திற்கு அடையாளமாகயிருக்கிறது. நம்முடைய இருதயத்தில் கர்த்தருடைய கட்டளையைப் பதியவைத்து, அவருடைய பிரமாணங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது, கர்த்தருடைய கிருபையும் சிலாக்கியமும் நமக்கு கிடைக்கும். இதற்கு அடையாளமாகவே, கர்த்தருடைய பத்துக்கட்டளைகளும், உடன்படிக்கைப்பெட்டியிலே வைக்கப்பட்டு, அது ஆசரிப்புக்கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்படுகிறது.
கர்த்தருடைய பிரமாணம் யாரை ஆளுகை செய்கிறதோ அவர்களை கர்த்தரும் ஆளுகை செய்கிறார். கர்த்தர் அவர்கள் மத்தியிலே வாசம்பண்ணுகிறார்.
""அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்'' (எபி 8:10).
இஸ்ரவேல் புத்திரர்வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணும்போதெல்லாம், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தங்களோடு சுமந்துகொண்டு போகிறார்கள். அவர்கள் அவ்வாறு பிரயாணம்பண்ணும்போது, கர்த்தருடைய பத்துக்கட்டளைகளையும் தங்களோடு கூட சுமந்து செல்கிறார்கள். கர்த்தருடைய பிரமாணம் இஸ்ரவேல் புத்திரரோடுகூட எல்லா இடங்களுக்கும் பிரயாணம் பண்ணுகிறது. கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னம் அவர்களோடுகூட எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பதற்கு, அவருடைய உடன்படிக்கைப்பெட்டி அடையாளமாகயிருக்கிறது.
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம், எங்கு போனாலும், இயேசுகிறிஸ்துவின் அன்பையும், அவருடைய சுவிசேஷத்தையும் சுமந்து செல்கிறவர்களாயிருக்கவேண்டும்.
மோசே உடன்படிக்கைப்பெட்டியை பண்ணும்போது, கிருபாசனத்தையும் பண்ணவேண்டும். கர்த்தர் மோசேயை நோக்கி, ""பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது'' (யாத் 25:17) என்றும், ""கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக'' (யாத் 25:21) என்றும் சொல்லுகிறார்.
கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் கேருபீன்களை வைக்கவேண்டும். அந்தக் கேருபீன்களை பொன்னினால் செய்யவேண்டும் என்றும், அந்தப் பொன்னை தகடாய் அடித்து, கேருபீன்களை செய்து, அந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார் (யாத் 25:18).
கேருபீன்கள் கர்த்தருடைய பரிசுத்த தூதர்களுக்கு அடையாளமாயிருக்கிறது. கர்த்தருடைய மகிமை ஷேக்கைனா மகிமை என்று அழைக்கப்படுகிறது. இது கர்த்தருடைய தெய்வீக மகிமையாகும். கர்த்தருடைய மகிமை வெளிப்படும் பரிசுத்த ஸ்தலத்திலே, அவருடைய பரிசுத்த தூதர்கள் அவரை சேவிக்கிறார்கள்.
கேருபீன்கள் கர்த்தருடைய பரிசுத்த தூதர்களுக்கு அடையாளமாகயிருந்தாலும், இவை தூதர்களின் உருவத்தில் செய்யப்படவில்லை. தூதர்கள் இந்த உருவத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. தூதர்களை விக்கிரகங்களாக செய்து, அவற்றை கிருபாசனத்தின் ஓரங்களில் வைக்கவில்லை.
எசேக்கியேல் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற நான்கு முகங்கள், கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேருபீன்களுக்கு ஒப்பாயிருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.
""அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச்சென்றது; ஆவிபோகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை'' (எசே 1:10#12).
கேருபீன்களை செய்யவேண்டிய விதத்தைப்பற்றியும் கர்த்தர் மோசேக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக'' என்றும்,
""ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்'' என்றும்,
""அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக'' (யாத் 25:18#20) என்றும் சொல்லுகிறார்.
""அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழ-ட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை'' (எபி 9:5).
கர்த்தர் கேருபீன்களின் மத்தியிலே வாசம்பண்ணுகிறார். ""இஸ்ரவே-ன் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்'' (சங் 80:1).
கர்த்தர் பிற்காலத்திலே, இந்தப் பரிசுத்த ஸ்தலத்திலே மோசேயை சந்திப்பதாக வாக்குப்பண்ணுகிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்'' (யாத் 25:22) என்று சொல்லுகிறார்.
கிருபாசனமானது கிருபையின் சிங்காசனத்திற்கு அடையாளமாயிருக்கிறது. நாம் கர்த்தருடைய கிருபாசனத்தண்டையிலே தைரியமாய்க் கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
""ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்'' (எபி 4:16).
புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாமல், கர்த்தருடைய கிருபையின் கீழ் இருக்கிறோம். கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து நம்மை வரவேற்கிறது. கர்த்தருடைய செட்டையின் கீழே நாம் அடைக்கலம்பெறும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
""உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக'' (ரூத் 2:12).
கேருபீன்களைப் பொன்னைத் தகடாய் அடித்துச் செய்ய வேண்டும். கிருபாசனத்தையும் இதுபோலவே பொன்னைத் தகடாய் அடித்துச் செய்ய வேண்டும். இதில் வேறு உலோகங்களின் கலப்பு எதுவும் இருக்கக்கூடாது. இஸ்ரவேல் ஜனத்தாரோடு தேவன் கொண்டிருக்கும் ஐக்கியத்தில் எந்த விதமான மாய்மாலமும் இருக்கக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. (யாத் 25:17#22; யாத் 37:6#9).
உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாகும். பத்துக் கற்பனைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளும் உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. தேவனுக்கும், இஸ்ரவேல் ஜனத்தாருக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையை இது தொடர்ந்து நினைவுபடுத்தும். (யாத் 25:16,21) உடன்படிக்கைப் பெட்டியில் மன்னா வைக்கப்பட்டிருக்கும் கலசமும் உள்ளது. பரலோகத்திலிருந்து வந்த தேவனுடைய அப்பத்திற்கு மன்னா ஓர் அடையாளம். (யாத் 16:33; யோவான் 6; எபி 9:4). ஆரோனின் கோலும் உடன்படிக்கைப் பெட்டிற்குள் பிற்காலத்தில் வைக்கப்பட்டது. தேவன் தெரிந்தெடுத்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கு ஆரோனின் கோல் சாட்சி பகருகிறது. (எண் 17:10; எபி 9:4).
""நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணம்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். மோசே இன்னும் பத்துக் கற்பனைகள் எழுதப்பட்டுள்ள கற்பலகைகளைத் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. (யாத் 32:15).
""அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்'' என்றும் கர்த்தர் மோசேயிடம் சொல்லுகிறார். தேவன் தாம் நியமித்திருக்கும் ஸ்தலத்தில் தம்முடைய பிள்ளைகளைச் சந்திக்கிறார். (யாத் 23:14#17; யாத் 29:42#46; யாத் 34:22#24; யாத் 40:33#35)
""உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்'' என்று கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார். தேவனைச் சந்தித்து, அவரோடு ஒப்புரவாகும்போது தேவனுடைய சப்தத்தைத் தெளிவாகக் கேட்க முடியும். (2கொரி 10:16; 2கொரி 6:14; 2கொரி 13:14).
பரிசுத்த வேதாகமத்தில் உடன்படிக்கைப் பெட்டிக்கு வேறு சில பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. பெட்டி (யாத் 25:10)
2. தேவனுடைய பெட்டி (1சாமு 4:11#22; 2சாமு 6:2#12)
3. கர்த்தராகிய தேவனுடைய பெட்டி (1நாளா 13:6)
4. நமது தேவனுடைய பெட்டி (1நாளா 13:3)
5. இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டி (1சாமு 5:7#6:3)
6. கர்த்தருடைய பெட்டி (1சாமு 6:1#7:1)
7. கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டி (1இராஜா 2:26)
8. உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டி (யோசு 4:5)
9. சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டி (யோசு 3:13)
10. உடன்படிக்கைப்பெட்டி (யோசு 3:6)
11. தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி (நியா 20:27; 1நாளா 16:6)
12. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (எண் 10:33; உபா 31:9)
13. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (உபா 31:26; யோசு 3:3)
14. சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி (யோசு 3:11)
15. சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (1சாமு 4:4)
16. சாட்சிப்பெட்டி (யாத் 25:22; யாத் 26:33,34)
17. உமது வல்லமை விளங்கும் பெட்டி (2நாளா 6:41; சங் 132:8)
18. பரிசுத்தப்பெட்டி (2நாளா 35:3)
உடன்படிக்கைப் பெட்டி ""சாட்சிப்பெட்டி'' என்று அழைக்கப் படுகிறது. ஏனெனில் இதற்குள் இருக்கும் பிரமாணத்தைக் குறித்து இது எப்போதும் சாட்சி பகருகிறது. இந்தப் பெட்டி ""உடன்படிக்கைப் பெட்டி'' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் தேவனுக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் மோசேயின் உடன்படிக்கையை இது அறிவிக்கிறது.
உடன்படிக்கைப் பெட்டி ""உமது வல்லமை விளங்கும் பெட்டி'' எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இஸ்ரவேல் ஜனத்தாரை ஆசீர்வதிப்பதிலும், இஸ்ரவேலரைப் பொறுத்த அளவில் தேவனுடைய வல்லமை எப்படிப்பட்டது என்பதையும் இந்தப் பெட்டி விளக்கிக் கூறுகிறது. உடன்படிக்கைப் பெட்டி ""பரிசுத்தப்பெட்டி'' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் பெட்டி புனிதமானது, பரிசுத்தமானது.
சமுகத்தப்ப மேஜை
யாத் 25:23#30
யாத் 25:23. சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழநீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.
யாத் 25:24. அதைப் பசும் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
யாத் 25:25. சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,
யாத் 25:26. அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
யாத் 25:27. அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
யாத் 25:28. அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
யாத் 25:29. அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானப- கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
யாத் 25:30. மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் சமுகத்தப்ப மேஜை வைக்கப்பட்டிருக்கும். இதை உண்டுபண்ண வேண்டிய மாதிரி வடிவத்தை கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழநீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது. அதைப் பசும் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி, சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி, அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்'' (யாத் 25:23#26) என்று சொல்லுகிறார்.
சமுகத்தப்ப மேஜை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டாலும், அது பசும்பொன் தகட்டால் மூடப்பட்டிருக்கிறது. மகாபரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டி மாத்திரமே வைக்கப்பட்டிருக்கும். சமுகத்தப்ப மேஜை பொன்தகட்டால் மூடப்பட்டிருந்தாலும்,அது மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படுவதில்லை. சமுகத்தப்ப மேஜை ஆசரிப்புக்கூடாரத்திலே, மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே உள்ள, பரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்பட்டிருக்கும்.
""எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது'' (எபி 9:2,3).
சமுகத்தப்ப மேஜையின் நாலு மூலைகளிலுமுள்ள நாலுகால்களும் தைக்கப்பட்டிருக்கிறது. ""அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்'' என்றும், ""அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்'' (யாத் 25:27,28) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
சமுகத்தப்ப மேஜைக்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானப- கரகங்களையும் பண்ணவேண்டும்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணவேண்டும் (யாத் 25:29).
சமுகதப்ப மேஜை எப்போதும் விரிக்கப்பட்டதாகயிருக்கவேண்டும். ""மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்'' (யாத் 25:30) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேஜையின்மேல் பன்னிரண்டு சமுகதப்பங்கள் வைக்கப்பட்டிருக்கும். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு அடையாளமாக, பன்னிரண்டு அப்பங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு சமுகத்தப்பங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
""அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனப-யாயிருக்கும்'' (லேவி 24:6,7).
அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன். அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனப-களில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்'' (லேவி 24:8,9).
ஆசரிப்புக்கூடாரம் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம். இது ராஜாவின் அரண்மனை. கர்த்தர் தம்முடைய பரிசுத்தஸ்தலத்தில் வாசம்பண்ணுகிறார். ராஜாவின் அரண்மனையிலே, அவர் போஜனம்பண்ணுவதற்கு, ராஜாவின் அந்தஸ்துக்குரிய மேஜை அழகுபடுத்தப்பட்டிருக்கும். ஆசரிப்புக்கூடாரத்திலே, சமுகதப்ப மேஜை நேர்த்தியாக பண்ணப்பட்டு, அங்கே வைக்கப்பட்டிருக்கிறது.
உடன்படிக்கைப்பெட்டி கர்த்தருடைய பிரசன்னத்திற்கு அடையாளம். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே வாசம்பண்ணுகிறார் என்பதற்கு உடன்படிக்கைப்பெட்டி அடையாளமாகயிருக்கிறது. சமுகத்தப்ப மேஜையிலே வைக்கப்பட்டிருக்கும் பன்னிரண்டு சமுகத்தப்பங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு அடையாளமாயிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரரின் பன்னிரண்டு கோத்திரத்தாரும், தங்களை கர்த்தருக்கு அற்பணித்திருப்பதற்கு இந்தப் பன்னிரண்டு அப்பங்களும், அடையாளமாயிருக்கிறது.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு அநேக நன்மைகளை செய்திருக்கிறார். அவர்களுக்கு அன்றாட போஜனத்தைக் கொடுக்கிறார். அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணியபோது கர்த்தர் அவர்களுக்கு மன்னாவை புசிக்கக்கொடுக்கிறார்.
இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்திலே பிரயாணம்பண்ணினாலும் கர்த்தர் அவர்களுக்கு அங்கேயும் ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணுகிறார். அதற்கு அடையாளமாக கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திலே, சமுகதப்ப மேஜை வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கானான் தேசத்தில் குடியேறும்போது, அந்த தேசத்தின் தானியத்தை புசிப்பார்கள். அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணுகிறபோதோ வானத்திலிருந்து பெய்யும் மன்னாவை புசிக்கிறார்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஜெபம்பண்ண கற்றுக்கொடுக்கிறார். கர்த்தர் தாமே நமக்கு அன்றன்றுள்ள அப்பத்தை புசிக்க கொடுக்கவேண்டும். நம்முடைய அன்றாட போஜனத்தை கர்த்தரிடத்திலிருந்து ஜெபித்து பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுக்கும் போஜனத்திற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடு ஐக்கியமாயிருப்பதற்கும், அவரோடு சம்பாஷணை பண்ணுவதற்கும் சமுகத்தப்ப மேஜை அடையாளமாயிருக்கிறது. சமுகத்தப்ப மேஜையிலே வைக்கப்பட்டிருக்கும் அப்பங்கள் எந்த தானியத்தினால் செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த தானியத்தினால் செய்த அப்பத்தையே இஸ்ரவேல் ஜனத்தாரும் புசிக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கூடாரங்களில் புசிக்கும் அப்பத்திற்கும், ஆசரிப்புக்கூடாரத்தில் சமுகத்தப்ப மேஜையிலே வைக்கப்பட்டிருக்கும் சமுகத்தப்பங்களுக்கும் வித்தியாசமில்லை. இவை இரண்டும் ஒரே மாவினால் செய்யப்பட்டவை.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரோடு சிநேகமாகவும், ஐக்கியமாகவும் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக, சமுகத்தப்பங்களும், இஸ்ரவேல் புத்திரரின் கூடாரத்து அப்பங்களும் வித்தியாசமில்லாமல் ஒன்றுபோலிருக்கிறது. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரோடுகூட போஜனம் பண்ணுகிறார் என்பதற்கும், அவர்களும் கர்த்தரோடுகூட போஜனம்பண்ணுகிறார்கள் என்பதற்கும் சமுகத்தப்பங்கள் அடையாளமாகும்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தர் தம்முடைய சபையை போஷிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய போஜனம் கொடுக்கப்படுகிறது. நாம் கர்த்தருக்கு ஆசாரியர்களாயிருக்கிறோம். நம்முடைய பிதாவின் வீட்டிலே நமக்கு தேவையான அப்பங்களும் உள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பகிர்ந்துகொடுக்கும் அளவுக்கு, கர்த்தருடைய சபையிலே இன்னும் மீதமான அப்பங்களும் இருக்கிறது.
தட்டுகள், தூபக்கரண்டிகள், கிண்ணங்கள், பானபலிகரகங்கள் ஆகியவை பசும் பொன்னினால் பண்ணப்படவேண்டும். (யாத் 25:29; யாத் 37:16) இவை மேஜையின்மீது வைக்கப்பட்டிருக்கும். மேஜையின்மேல் நித்தமும் சமுகத்தப்பங்கள் வைக்கப்படவேண்டும். (யாத் 25:30; லேவி 24:5#9). மொத்தம் பன்னிரண்டு அப்பங்கள் சுடப்படும். அவை மேஜையின்மீது இரண்டு அடுக்காக அடுக்கி வைக்கப்படும். பன்னிரண்டு அப்பங்கள் பன்னிரண்டு கோத்திரத்தாரைக் குறிக்கும். தட்டுகள் மாவு பிசைவதற்கு ஏற்றாற்போன்று, அளவில் பெரியதாக இருக்கும். தூபக்கரண்டிகள் அளவில் சிறியவை. கிண்ணங்களில் பலிகள், காணிக்கைகள் ஆகியவற்றின் இரத்தம் இருக்கும் (யாத் 25:29; யாத் 37:16; எண் 4:7).
சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டி விரிக்கப்பட்டிருக்கும். அதன்மேல் தட்டுகளும், தூபக்கரண்டிகளும், கிண்ணங்களும், மூடுகிற தட்டுகளும் இருக்கும். (எண் 4:7). மேஜை வாசஸ்தலத்தின் வடக்குப் பக்கமாக வைக்கப்பட்டிருக்கும். (யாத் 26:35) இது பரலோகத்தின் திசை. (ஏசா 14:12#14; சங் 75:6#7). உடன்படிக்கைப் பெட்டியை வெளியில் சுமந்து செல்லும்போது மேஜையின் மேல் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதை தகுசுத்தோல் மூடியால் மூடவேண்டும்.
தேவனுடைய சமுகத்தில் சமுகத்தப்பங்கள் எப்போதும் போஜனபலியாக வைக்கப்பட்டிருக்கும். வாரத்தின் முடிவில் அப்பங்கள் மாற்றப்படும். அவற்றை ஆசாரியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் போஜனமாகப் புசிக்கலாம். (லேவி 24:5#9; மத் 12:3#5).
குத்துவிளக்கு
யாத் 25:31#40
யாத் 25:31. பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
யாத் 25:32. ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
யாத் 25:33. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கி-ருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
யாத் 25:34. விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
யாத் 25:35. அதி-ருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டி-ருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
யாத் 25:36. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
யாத் 25:37. அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
யாத் 25:38. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
யாத் 25:39. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
யாத் 25:40. மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
ஆசரிப்புக்கூடாரம் கர்த்தருடைய வாசஸ்தலம். அது கர்த்தருடைய அரண்மனை. இந்த அரண்மனையிலே மிகவும் நேர்த்தியான குத்துவிளக்கு வைக்கப்படுகிறது. இந்த விளக்கு பசும்பொன்னினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்'' (யாத் 25:31) என்று சொல்லுகிறார்.
ஆசரிப்புக்கூடாரத்தில் பொன்குத்துவிளக்கு மிகுந்த அலங்காரமாயிருக்கிறது. இந்தக் குத்துவிளக்கிலே ஆறுகிளைகள் உள்ளன. பொன்குத்துவிளக்கின் மாதிரி வடிவத்தை கர்த்தர் மோசேக்கு சொல்லுகிறார்.
""பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்'' (யாத் 25:31,32).
குத்துவிளக்கின் மொக்குகளில், விளக்குகள் எரிவதற்கு தேவையான எண்ணெய் சேகரிக்கப்பட்டிருக்கும். அதிலுள்ள பழமும் பூவும் குத்துவிளக்கின் அலங்காரத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது.
குத்துவிளக்கிலே மொக்குகளையும், பழங்களையும், பூக்களையும் எவ்வாறு உண்டுபண்ணவேண்டும் என்றும் கர்த்தர் கட்டளை கொடுக்கிறார்.
""விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. அதி-ருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டி-ருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்'' (யாத் 25:34,35) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பொன்குத்துவிளக்கு மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த விளக்கிலிருந்து புறப்படும் வெளிச்சம் ஆசரிப்புக்கூடாரம் முழுவதற்கும் வெளிச்சம் கொடுக்கிறது. ஆசரிப்புக்கூடாரத்திற்குள் புகை, சாம்பல் ஆகிய எதுவும் தங்கியிருக்காதவாறு, கூடாரம் சுத்தமாயிருக்கிறது. குத்துவிளக்கை சுத்தம்பண்ணுவதற்கு கத்திரிகளும், சாம்பல் பாத்திரங்களும் செய்யப்பட்டிருக்கிறது. அவை பசும்பொன்னினால் செய்யப்பட வேண்டுமென்று கர்த்தர் சொல்லுகிறார் (யாத் 25:38).
குத்துவிளக்கின் பழங்களும், அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கிறது (யாத் 25:36). குத்துவிளக்கில் ஏழு அகல்கள் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அகல்களும் நேர் எதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்பட்டிருக்கிறது (யாத் 25:36).
ஆசரிப்புக்கூடாரத்தில் பொன்குத்துவிளக்கு வைக்கப்பட்டிருப்பது மிகவும் விசேஷமான காரியம். ஆசரிப்புக்கூடாரத்தில் ஜன்னல்கள் எதுவும் இல்லை. பகல்வேளையிலே சூரிய வெளிச்சம் வெளியிலிருந்து ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. பொன்குத்துவிளக்கே பகல் வேளையிலும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வெளிச்சத்தைக் கொடுக்கிறது.
கர்த்தருடைய கட்டளையும், பிரமாணமும் இல்லையென்றால் நாம் ஆவிக்குரிய காரியங்களில் இருளிலிருப்போம். கர்த்தர் நம்மை இருளிலே தவிக்க விட்டுவிடவில்லை. அவர் நமக்கு ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறார். கர்த்தருடைய கட்டளையே நமக்கு விளக்காக இருக்கிறது. கர்த்தருடைய வேதமே நமக்கு வெளிச்சமாகயிருக்கிறது.
கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் குத்துவிளக்கில் உண்டாக்கப்பட்டிருக்கிற கிளைகளைப்போல இருக்கிறார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டுக்காலத்து சபையாருக்கு, பல வருஷங்களாக ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆசரிப்புக்கூடாரம், ஜன்னல் இல்லாமல் இருளிலிருந்ததுபோல, புதிய ஏற்பாட்டுக்காலத்து சபையும் இருளிலிருக்கிறது. பரலோகத்தின் வெளிச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பூமியிலுள்ள சபையானது பிரகாசமில்லாததாகவும், வெளிச்சம் மங்கியதாகவும் இருக்கிறது. புதிய ஏற்பாட்டுக்காலத்து சபைக்கு கர்த்தருடைய வார்த்தையே விளக்காக இருக்கிறது.
""அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்'' (2பேது 1:19).
கர்த்தருடைய வசனம் எந்த தேசத்தில் இல்லையோ அந்த தேசம் இருளுள்ள தேசமாகவே இருக்கும். கர்த்தருடைய வார்த்தை இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுக்கிறது.
கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாக ஏழு அக்கினி தீபங்கள் எரிந்துகொண்டிருக்கிறது. இவை கர்த்தருடைய ஆவியானவருக்கும் அவருடைய பல்வேறு வரங்களுக்கும், கிருபைகளுக்கும் அடையாளம்.
""அந்தச் சிங்காசனத்தி-ருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன'' (வெளி 4:5).
புதிய ஏற்பாட்டுக்காலத்து சபைகள் பொன்குத்துவிளக்குகளுக்கு அடையாளமாயிருக்கிறது. இவை இந்த உலகத்திற்கு ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது.
""நான் வீணாக ஓடினதும் வீணாகப்பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்'' (பிலி 2:14#16).
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அகல்களை ஏற்றுகிறவர்களாகவும், அவற்றின் திரிகளை தீண்டிவிடுகிறவர்களாகவும், எரிகிற அகல்களுக்கு எண்ணெய் வார்க்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அகல்கள் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (யாத் 25:37). கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பரிசுத்த வேதாகமத்திலுள்ள வசனங்களை ஜனங்களுக்கு போதித்து, அவர்களுடைய அகல்களை ஏற்றுகிறார்கள், அவைகளை பிரகாசமாக எரியப்பண்ணுகிறார்கள்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு'' (யாத் 25:39,40) என்று சொல்லுகிறார்.
குத்துவிளக்கைப் பசும்பொன்னினால் அடிப்பு வேலையாய் உண்டாக்க வேண்டும். (யாத் 37:17; எண் 8:4) அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருக்கவேண்டும்.
குத்துவிளக்கி-ருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருக்க வேண்டும். அதி-ருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்க வேண்டும். விளக்குத்தண்டி-ருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்க வேண்டும்.
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருக்க வேண்டும். அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். அதில் ஏழு அகல்களைச் செய்ய வேண்டும்; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்பட வேண்டும். வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கை வைக்கவேண்டும். (யாத் 26:35)
மேஜை வடபுறமாக வைக்கப்பட்டிருக்கும். இவ்விரண்டும், எதிரெதிராக இருப்பதினால் மேஜையின்மீது வைக்கப்பட்டிருக்கும் அப்பங்களின்மீது எப்போதும் வெளிச்சம் பட்டுக் கொண்டிருக்கும். குத்துவிளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். சாயங்காலத்திலும், காலையிலும் விளக்கில் எண்ணெய் ஊற்றுதல், திரியைச் சரிசெய்தல் போன்ற வேலைகள் செய்யப்பட வேண்டும். (யாத் 27:21; லேவி 24:1#4)
எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பதற்கு ஏதுவாக எண்ணெய் வைக்கப்படும் பகுதி அளவில் பெரியதாக இருக்கிறது. பிரயாணத்தின் போது இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத் தண்டையும், அதின் அகல்களையும், அதன் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் அதற்குரிய எண்ணெய் பாத்திரங்களையும் மூடவேண்டும்.
""மூன்று மொக்குகள்'' என்பது மூன்று விளக்குகளைக் குறிக்கும். (யாத் 25:34) விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகள் இருக்கிறது (யாத் 25:33#34).
குத்துவிளக்கிற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது. ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளும் இருக்கிறது. நடுப்பக்கத்தில் விளக்குத்தண்டும் அதே உயரத்தில் இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து ஏழு அகல்களாகும். ஏழு அகல்கள் பரலோகத்திலுள்ள மாதிரியின் படியே செய்யப்பட்டிருக்கிறது (யாத் 25:40; சக 4:2)
விளக்குத்தண்டில் ஏன் ஏழு அகல்கள் உள்ளன என்பதற்கான காரணம் தெரியவில்லை. சக 4:2 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களுக்கு அடையாளமாகும். (சக. 4:10) வெளி 1:12#13; வெளி 2:1 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு சபைகளைக் குறிக்கும். (வெளி 1:20). வெளி 4:5 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அக்கினி தீபங்கள் தேவனுடைய ஏழு ஆவிகளையும் அல்லது பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும் குறிக்கும் (வெளி 5:6) ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களை அடையாளமாகக் குறிக்கலாம். (யாத் 25:40; சக 4:2,10; எபி 8:5; எபி 9:23).
வேதாகமத்தில் பல இடங்களில் பலவிதமான எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஆவிக்குரிய அர்த்தம் கூறமுடியாது. சான்றாக ஒன்று என்பது ஒற்றுமையைக் குறிக்கும். (ஆதி 2:24; ஆதி 11:6; யோவான் 10:30; யோவான் 17:21#23) ஆனாலும், ஒன்று என்னும் எண் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்லா வசனங்களும் ஒற்றுமையைக் குறிப்பதில்லை. (ஆதி 2:21; ஆதி 4:19; ஆதி 14:13; ஆதி 19:9; யோசு 12:9#24; யோவான் 1:23, 26,40)
அகல்களைக் காலையிலும், மாலையிலும் பராமரிக்க வேண்டும். திரிகளை மாற்றுவதற்கு சாம்பல் பாத்திரங்களில் திரிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். (யாத் 30:7#8; லேவி 24:3#4).
ஒரு தாலந்து பசும்பொன் என்பது சுமார் 60 கிலோ எடையுள்ளது. கர்த்தர் மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியையும், அதிலுள்ள பரிசுத்த பணிமுட்டுகளைப் பற்றிய கட்டளைகளையும் கொடுக்கிறார். கர்த்தர் தனக்கு சொன்ன மாதிரியின்படி மோசே ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு கவனமாயிருக்கவேண்டும்.
