24 அதிகாரம்

24 அதிகாரம்

திருமண வைபவங்களும், அடக்க ஆராதனைகளும் குடும்பங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்கு முந்தின அதிகாரத்தில், ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளின் சரீரத்தை அடக்கம்பண்ணின சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்திலோ ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆபிரகாமின் குடும்பத்தில் நடைபெறுகிற ஒவ்வொரு சம்பவமும், பரிசுத்த வேதாகமத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உலகப்பிரகாரமான தேசங்களின் சரித்திரங்கள் சரியாக எழுதப்படாவிட்டாலும், இஸ்ரவேலுடைய முற்பிதாக்களின் சரித்திரம் மிகவும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் செய்து வைப்பதில் மிகவும் கவனமாயிருக்கிறார் (ஆதி 24:1#9). ஈசாக்குக்கு பெண் பார்க்க, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரனை, தன்னுடைய சொந்த ஜனங்கள் வசிக்கும் தேசத்திற்கு அனுப்புகிறார் (ஆதி 24:10#14).

கர்த்தருடைய கிருபையினாலும், தெய்வீக வழிநடத்துதலினாலும், ஆபிரகாமின் வேலைக்காரன் ரெபெக்காளை சந்திக்கிறான். ரெபெக்காளின் குடும்பத்தாரும், ஈசாக்கின் குடும்பத்தாரும் ஏற்கெனவே இரத்த சம்பந்தமுள்ள உறவினர்களாயிருக்கிறார்கள் (ஆதி 24:15#28).

ஆபிரகாமின் வேலைக்காரன், ரெபெக்காளின் குடும்பத்தாரோடு, ஈசாக்கின் திருமண வைபவம் சம்பந்தமாக பேசுகிறான் (ஆதி 24:29#49). அவர்களுக்குள்ளே திருமண பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்படுகிறது (ஆதி 24:50#60).

ஈசாக்கும் ரெபெக்காளும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது (ஆதி 24:61#67).

ஈசாக்குக்கு பெண் பார்க்கிறார்கள்

ஆதி 24:1#9

ஆதி 24:1. ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.

ஆதி 24:2. அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

ஆதி 24:3. நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

ஆதி 24:4. நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.

ஆதி 24:5. அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேúண்டுமோ என்று கேட்டான்.

ஆதி 24:6. அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

ஆதி 24:7. என்னை தன் தகப்பனுடைய வீட்டிலும் என்இனத்தார் இக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்- ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.

ஆதி 24:8. பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போக வேண்டாம் என்றான்.

ஆதி 24:9. அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையை தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொûயின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.

ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவராயிருக்கிறார். இப்போது ஆபிரகாமின் வயது 140 ஆகும் (ஆதி 25:20 = ஆதி 21:5). ஈசாக்கு ஆபிரகாமுடைய குமாரன். ஆபிரகாம் தன் குமாரன்மீது அன்பாயும், கரிசனையாயும் இருக்கிறார். கர்த்தர் ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்திருக்கிறார். ஈசாக்குக்கு நல்ல பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைக்கவேண்டும் என்னும் விருப்பம் ஆபிரகாமின் மனதில் உண்டாயிற்று.

ஆபிரகாம் ஈசாக்கின் திருமணத்தைக் குறித்து ஒரு சில காரியங்களை திட்டமிடுகிறார். அவையாவன: 1. கானானியருடைய குமாரத்திகளில் ஈசாக்குக்கு பெண்கொள்ளக்கூடாது. 2. தான் விட்டு வந்த தேசத்திற்கு ஈசாக்கு மறுபடியும் போகக்கூடாது.

ஆபிரகாமின் தேசம் மெசொபொத்தாமியாவிலிருக்கிறது. ஆபிரகாமின் சகோதரராகிய நாகாரும், அவருடைய உறவினரும் அந்த ஊரிலே வாசம்பண்ணுகிறார்கள். ஆபிரகாம் ஈசாக்குக்கு தன் தேசத்திலுள்ள, தன் இனத்தாரிடத்தில் பெண்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். கானான் தேசத்து குமாரத்திகளை, ஈசாக்குக்கு பெண்கொள்ள ஆபிரகாமுக்கு விருப்பமில்லை.

ஆபிரகாமின் பார்வையில் கானானியர் மிகப்பெரிய துன்மார்க்கராயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தர்மீது பக்தியில்லாதவர்களாயும், பாவிகளாயும், விக்கிரகங்களை ஆராதிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கானானியரிடத்திலிருந்து, தன்னுடைய குமாரன் ஈசாக்குக்கு பெண்கொண்டால், அது ஈசாக்கின் ஆவிக்குரிய ஜீவியத்தைப் பாதிக்கும் என்று ஆபிரகாம் நினைக்கிறார்.

ஆபிரகாம் இப்போது தன் குமாரன் ஈசாக்கோடு கானான் தேசத்திலே குடியிருக்கிறார். கானான் தேசத்தார் துன்மார்க்கராயிருக்கிறார்கள் என்பதற்காக, ஈசாக்கு கானான் தேசத்தைவிட்டு, ஆபிரகாமின் இனத்தார் குடியிருக்கும் தேசத்திற்கு திரும்பிப்போய்விடக்கூடாது. தன்னுடைய இனத்தார் மத்தியில் ஈசாக்கு ஒரு பெண்ணைக்கொண்டு, அவர் அந்த தேசத்திலேயே தங்கிவிடக்கூடாது. ஈசாக்குக்கு தன்னுடைய இனத்தார் மத்தியில் பெண்கொண்டால், ஈசாக்கு அந்த தேசத்திலேயே தங்கிவிடுவாரோ என்னும் சந்தேகம் ஆபிரகாமின் மனதில் உண்டாயிற்று.

ஆபிரகாமின் வீட்டிலே ஒரு ஊழியக்காரன் இருக்கிறான். இவனுடைய பெயர் இந்த வசனப்பகுதியில் சொல்லப்படவில்லை. இவன் தமஸ்கு ஊரானாகிய எலியேசர் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவன் ஆபிரகாமின் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவன். ஆபிரகாமுக்கு உண்டான எல்லாவற்றிற்கும் எலியேசர் அதிகாரியாயிருக்கிறான். இவன் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரன். இவன் ஆபிரகாமின் வீட்டில் அநேக வருஷங்கள் தங்கியிருந்ததினால், ஆபிரகாமின் குடும்பத்தைப்பற்றி எலியேசருக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது.

தமஸ்கு ஊரானாகிய எலியேசர் (ஆதி 15:2). ஆபிரகாமின் வீட்டிலுள்ள வேலைக்காரர்களுக்கு மூத்தவன். வயதில் இளையவன்கூட சில சமயங்களில் அந்தஸ்தில் மூத்தவனாக அங்கிகரிக்கப்பட்டிருக்கிறான். (ஆதி 39:4,22; ஆதி 41:46).

எலியேசர் ஆபிரகாமின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். அவன் ஆபிரகாமின் நன்மையை நாடுகிறவன். ஈசாக்குக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பது ஆபிரகாமின் விருப்பம். ஆனாலும் ஈசாக்குக்கு பெண்பார்க்க, ஆபிரகாம் ஈசாக்கை தனியாக அனுப்பவில்லை. ஆபிரகாம் தன் தேசத்திலே, தன் இனத்தாரிடத்திற்கு ஈசாக்கை அனுப்பாமல், தன் வேலைக்காரனாகிய எலியேசரை அனுப்புகிறார்.

ஆபிரகாம் தன் வேலைக்காரன் எலியேசரை தன் இனத்தாரிடத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, தன்னுடைய மனதின் விருப்பங்களை அவனிடத்தில் சொல்லுகிறார். தன்னுடைய மனதின் விருப்பத்தின் பிரகாரம் ஈசாக்குக்கு பெண்கொள்ளவேண்டும் என்று, ஆபிரகாம் தன் வேலைக்காரனிடத்தில் ஆணையிட்டுக்கொள்கிறார்.

ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, ""நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை'' (ஆதி 24:3,4) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் கானானியரோடு பெண்கொள்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். (ஆதி 24:3; ஆதி 27:46; ஆதி 28:1-9; ஆதி 34:1-31). கானானியர் இராட்சத சந்ததியார். ஆதாமின் சுத்தமான சந்ததி வருவதைத் தடைபண்ணுவதற்கு பிசாசு இவர்களைப் பயன்படுத்துகிறான். ஸ்திரீயின் வித்து இந்த உலகத்தில் வரக்கூடாது என்பது சாத்தானுடைய நோக்கம். ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் சாத்தானுடைய திட்டமறிந்து அதில் பங்குபெறுவதைத் தவிர்க்கிறார்கள்.

ரெபெக்காள் கிறிஸ்துவிற்கோ அல்லது சபைக்கோ அடையாளமல்ல. ஏனெனில் ரெபெக்காள் ஒரே சந்ததியிலிருந்து வந்திருக்கிறவள். சபையில் எல்லா இனத்தாரும் இருப்பார்கள் (ஆதி 24:3,4,7,37,38; ஆதி 26:35; ஆதி 27:46; ஆதி 28:1-8). கிறிஸ்து தமது சபையைத் தம்முடைய ஜனத்தாலும், புறஜாதி ஜனத்தாலும் கட்டி எழுப்புகிறார். (அப் 15:13-18; 1கொரி 12:13; கலா 3:26-29; எபே 2:14-20; கொலோ 3:11). புதிய ஏற்பாட்டுச் சபையில் பிரதானமாக புறஜாதியாரே இருக்கிறார்கள் (அப் 15:13-18).

ஆபிரகாம் எலியேசரிடம் ""நீ உன் கையை என் தொடையின்கீழ் வை'' என்று சொல்லுகிறார். யூதருடைய பாரம்பரிய பழக்கத்தின் பிரகாரம், தொடையின்கீழ் கைவைப்பது ஒரு புனிதமான நிகழ்ச்சி. (ஆதி 47:29-31). யாக்கோபின் பெயரை தேவன் ஆசீர்வாதத்தின் அடையாளமாக மாற்றியபோது, அவனுடைய தொடைச் சந்தைத் தொட்டார் (ஆதி 32:24-32; ஆதி 14:22; ஆதி 47:29-31).

ஆபிரகாமின் ஊழியக்காரன், அவருடைய தேசத்திற்கும், அவருடைய இனத்தாரிடத்திற்கும்போய், பெண்ணைப் பார்த்த பின்பு, அந்தப்பெண் அந்த ஊழியக்காரனின் பின்னே கானான் தேசத்திற்கு வர மனதில்லாமலிருந்தால், அந்த ஊழியக்காரன் ஆணைக்கு நீங்கலாகயிருப்பான்.

ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கின் திருமண விஷயத்தில் கர்த்தரை நம்புகிறார். ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம், ""கர்த்தர் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்'' என்று சொல்லுகிறார்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் தன் எஜமானுடைய வார்த்தையை கவனமாய்க் கேட்கிறான். ஊழியக்காரனின் மனதில் ஒரு சில சந்தேகங்கள் உண்டாயிற்று. அவன் ஈசாக்குக்கு பெண் பார்க்க போவதற்கு முன்பாகவே தன்னுடைய சந்தேகங்களை ஆபிரகாமிடத்தில் சொல்லுகிறான். அவன் ஆபிரகாமிடத்தில் ஆணையிட்டுக் கொடுத்ததினால், அவனுடைய மனதில் பயமும், சந்தேகமும் உண்டாயிற்று.

ஆபிரகாமின் ஊழியக்காரன் ஆபிரகாமை நோக்கி, ""அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேúண்டுமோ'' (ஆதி 24:5) என்று கேட்கிறான்.

ஆபிரகாம் ஏற்கெனவே தன் சொந்த தேசத்திலிருந்து, தன் இனத்தார் மத்தியிலிருந்து கானான் தேசத்திற்கு வந்திருக்கிறார். ஈசாக்கு மறுபடியும் அங்கே போவதில் ஆபிரகாமுக்கு இஷ்டமில்லை. ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, ""நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு'' (ஆதி 24:6) என்று சொல்லுகிறார்.

தன்னுடைய மனதின் விருப்பத்தை கர்த்தர் நிறைவேற்றி தருவார் என்னும் நம்பிக்கை ஆபிரகாமின் மனதில் உறுதியாயிருக்கிறது. கர்த்தரே தன்னுடைய மனதில் இந்த விருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் என்றும், அவர் இதை நிறைவேற்றித் தருவார் என்றும் ஆபிரகாம் நம்புகிறார்.

ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, ""என்னை தன் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்'' (ஆதி 24:7) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஈசாக்கின் சந்ததிக்கு கானான் தேசத்தை சுதந்தர தேசமாக கொடுக்கப்போவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். கானான் தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென்றால், ஈசாக்கின் சந்ததியார் கானான் தேசத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்கள் கானான் தேசத்தைவிட்டு ஆபிரகாமின் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போய்விடக்கூடாது.

கர்த்தர் ஈசாக்கின் வித்தைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியிருப்பதினால், அந்த வித்திற்கு தாயாராக இருக்கப்போகிற ஈசாக்கின் மனைவி, கானான் தேசத்து ஸ்திரீகளைப்போல விக்கிரகாராதனைக்காரியாக இருக்கக் கூடாது. அவள் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவளாயிருக்கவேண்டும். ஆகையினால்தான் ஆபிரகாம், தன் குமாரன் ஈசாக்குக்கு, தன்னுடைய தேசத்திலே, தன் இனத்தார் மத்தியிலே பெண்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

நம்முடைய ஜீவியத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கர்த்தரையே நம்பவேண்டும். நம்முடைய ஜீவியத்தில் நாம் பல அனுபவங்களைக் கடந்து வந்திருப்போம். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களும், நம்முடைய சொந்த அனுபவங்களும், கர்த்தரை இன்னும் தொடர்ந்து நம்பவேண்டும் என்று நம்மை உற்சாகப்படுத்தவேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நாம் கர்த்தரை நம்பவேண்டும். நம்முடைய உதவிகளுக்காகவும், ஒத்தாசைகளுக்காகவும் நாம் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தருக்கு சித்தமான காரியம் நம்முடைய ஜீவியத்தில் நிறைவேறும்.

ஈசாக்கு கானான் தேசத்திலேயே குடியிருக்கவேண்டும் என்பதில் ஆபிரகாம் உறுதியாயிருக்கிறார். ஆபிரகாமின் சொந்த தேசத்தில், சொந்த இனத்திலுள்ள பெண், ஈசாக்கோடு குடியிருக்க கானான் தேசத்திற்கு வர மறுத்துவிட்டால், ஆபிரகாமின் ஊழியக்காரன் நூதனமாக யோசனைபண்ணி, ஈசாக்கை கானான் தேசத்தைவிட்டு அழைத்துக்கொண்டுபோய், ஆபிரகாமின் சொந்த தேசத்திற்கு, அவருடைய இனத்தார் மத்தியிலே கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது.

ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, ""பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போக வேண்டாம்'' (ஆதி 24:8) என்று சொல்லுகிறார்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையை தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுக்கிறான் (ஆதி 24:9).

ரெபெக்காள்

ஆதி 24:10#28

ஆதி 24:10. பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,

ஆதி 24:11. ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்-க்கொண்டது என்னவென்றால்:

ஆதி 24:12. என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் என்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

ஆதி 24:13. இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.

ஆதி 24:14. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேúண்டும் என்று நான் சொல்லும்போது: குடிஎன்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

ஆதி 24:15. அவன் இப்படிச் சொல்- முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

ஆதி 24:16. அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.

ஆதி 24:17. அப்பொழுது அநத் ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்தி-ருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.

ஆதி 24:18. அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதி 24:19. கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்-;

ஆதி 24:20. சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.

ஆதி 24:21. அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.

ஆதி 24:22. ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து,

ஆதி 24:23. நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.

ஆதி 24:24. அதற்கு— அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற —குமாரனாகிய பெத்துவே-ன் மகள் என்று சொன்னதுமன்றி,

ஆதி 24:25. எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும்உண்டு என்றாள்.

ஆதி 24:26. அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு,

ஆதி 24:27. என் எஜமானாகிய ஆபிராகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மைûயையும், என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னைஅழைத்துக்கொண்டு வந்தார் என்றான்.

ஆதி 24:28. அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள்.

இந்த அதிகாரத்தில் ஆபிரகாமுடைய ஊழியக்காரரின் பெயர் சொல்லப்படாவிட்டாலும், அவனுடைய குணாதிசயங்களைப்பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது .அவன் ஆபிரகாமுக்கு உண்மையுள்ள ஊழியக்காரன். அவன் ஆபிரகாமால் அங்கீகரிக்கப்பட்டவன். ஆபிரகாமின் கட்டளையைப் பெற்றுக்கொண்ட உடனே, அவருடைய ஊழியக்காரன் உடனே பிரயாணம் பண்ண ஆயத்தமாகிறான்.

அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டு போகிறான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருக்கிறது; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேருகிறான் (ஆதி 24:10).

""மெசொப்பொத்தாமியா'' என்பதன் எபிரெய பெயர் ""ஆராம்நகராயீம்'' என்பதாகும். ஐபிராத்து, டைகிரீஸ் ஆகிய இரண்டு நதிகள் இங்கு பாய்கின்றன. இதை மனுஷ இனத்து நாகரிகத்தின் தொட்டில் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்தப் பகுதியில் பழங்கால பெருநகரங்கள் ஏராளமாய் உள்ளன.

""நாகோருடைய ஊர்'' என்பது ஆரானைக் குறிக்கும். நாகோர் இங்கு குடியேறியதினால் இதற்கு நாகோருடைய ஊர் என்று பெயர். (ஆதி 11:31-32; ஆதி 12:4).

ஆபிரகாமின் ஊழியக்காரன், தன் எஜமானுக்கு உண்மையுள்ளவனாயிருப்பது மாத்திரமல்ல, அவன் தேவனாகிய கர்த்தரிடத்திலும் பக்தியுள்ளவனாயிருக்கிறான். ஆபிரகாமின் ஊழியக்காரன், நாகோருடைய ஊரில் சேர்ந்து, அந்த ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்குகிறான் (ஆதி 24:11).

ஆபிரகாமின் ஊழியக்காரன் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறான். அவன் அங்கே கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தவில்லை. தன் கைகளை உயர்த்தி ஆசாரியர்களைப்போல கர்த்தரிடத்தில் உரத்தசத்தமாக விண்ணப்பம்பண்ணவில்லை. ஆபிரகாமின் ஊழியக்காரன் தனக்குள்ளே கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும் ஜெபவார்த்தைகளை சொல்லிக்கொள்கிறான்.

ஆபிரகாமின் ஊழியக்காரன் கர்த்தரை நோக்கி, ""என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்'' என்றும்,

""இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே'' என்றும்,

""நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடிஎன்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்'' என்றும் (ஆதி 24:12#14) ஜெபம்பண்ணுகிறான்.

எலியேசர் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது ""ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே'' என்று சொல்லி ஜெபிக்கிறான். ஆபிரகாமின் தேவனை ஆராதிப்பதற்கு எலியேசருக்குப் பழக்கம் இருக்கிறது. ஆகையினால் தன்னுடைய எஜமானாகிய ஆபிரகாமைப் போலவே இவனும் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாக இருந்து ஜெபம் பண்ணுகிறான். தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்ததற்கு ஓர் அடையாளத்தையும் எதிர்பார்க்கிறான் (ஆதி 24:14). அவனுடைய ஜெபத்திற்கு உடனடியாகப் பதில் கிடைக்கிறது. (ஆதி 24:15; நியா 6:36#40; சங் 145:18; தானி 9:21#23; ஏசா 65:24).

ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்கு பெண்பார்க்க வந்திருக்கிறான். தன்னுடைய முயற்சியில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதும், அதுவும் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டும் என்பதும் ஊழியக்காரனுடைய விண்ணப்பமாயிருக்கிறது. ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தரை நோக்கி, ""இன்றைக்கு நீர் எனக்கு காரியம் சித்திக்கப்பண்ணும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறான்.

காரியம் சீக்கிரத்தில் சித்தியாகவேண்டுமென்றால், நாம் கர்த்தரிடத்தில் அதற்காக ஜெபம்பண்ணவேண்டும். எந்தக் காரியமாகயிருந்தாலும், கர்த்தருக்கு சித்தமான வேளையில்தான் அது நிறைவேறும். ஆனாலும் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, அவர் தம்முடைய கிருபையினால், காரியத்தை சீக்கிரமாய் சித்திக்கப்பண்ணுவார்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையையும் நினைவுபடுத்துகிறான். ""என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தயவு செய்தருளும்'' என்று ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தரிடத்தில் சொல்லுகிறான். கர்த்தர் தம்முடைய தயவினாலேயே, நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்கிறார்.

ஈசாக்கின் மனைவி மிகுந்த மனத்தாழ்மையுள்ளவளாயிருக்கவேண்டும். அவள் சோம்பேறியாயிராமல் சுறுசுறுப்பாய் வேலை செய்யவேண்டும். குடும்பத்தை சரியாக நிர்வாகம்பண்ணவேண்டும். ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்யவேண்டுமோ, அப்படி செய்து, அந்த வேலையை நேர்த்தியாய்ச் செய்து முடிக்கவேண்டும். ஈசாக்குக்கு மனைவியாக வரப்போகிறவள் ஏழைகளை ஆதரிக்கிறவளாகவும், அந்நியரை உபசரிக்கிறவளாகவும் இருக்கவேண்டும்.

ஈசாக்குக்கு பெண்பார்க்க ஆபிரகாமுடைய ஊழியக்காரன், நாகோருடைய ஊரிலே வந்து சேர்ந்தபோது, அவன் களியாட்டு நடைபெறுகிற இடத்திற்கோ அல்லது விளையாட்டு மைதானத்திற்கோ அல்லது ஜனங்கள் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து வீண்பேச்சு பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கோ போகவில்லை. அவன் ஒரு தண்ணீர் துரவண்டையிலே வந்து நிற்கிறான். தண்ணீர் மொள்ள வருகிற ஸ்திரீகள் மாத்திரமே அங்கே வருவார்கள். அவர்கள் சோம்பேறிகளாயிராமல் கடினமாய் உழைக்கிற ஸ்திரீகளாயிருப்பார்கள்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே'' (ஆதி 24:13) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தருடைய வழிநடத்துதலையும், உதவியையும், ஒத்தாசையையும் நாடுகிறான். துரவண்டையிலே ஏராளமான ஸ்திரீகள் வருவார்கள். அவர்களில் எந்த ஸ்திரீ ஈசாக்குக்கு நியமிக்கப்பட்ட ஸ்திரீ என்பது ஆபிரகாமுடைய ஊழியக்காரனுக்கு தெரியாது. கர்த்தர் தாமே அந்தக் குறிப்பிட்ட ஸ்திரீயை அந்த ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கவேண்டும்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேúண்டும் என்று நான் சொல்லும்போது: குடிஎன்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்'' (ஆதி 24:14) என்று சொல்லுகிறான்.

கர்த்தர் ஆபிரகாமுடைய ஊழியக்காரனின் ஜெபத்திற்கு செவிகொடுக்கிறார். கர்த்தருடைய கிருபை அவன்மீது தங்கியிருக்கிறது. அவன் கர்த்தரிடத்தில் இப்படி சொல்லி முடிக்கும் முன்பே (ஆதி 24:15) கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார். கர்த்தருடைய பிரதியுத்தரம் காலதாமதமில்லாமல் உடனே வருகிறது.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் இப்படிச் சொல்- முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வருகிறாள் (ஆதி 24:15).

கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக, ரெபெக்காள் அந்தத் தண்ணீர் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள முதலாவதாக வருகிறாள். அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருக்கிறாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவருகிறாள் (ஆதி 24:16).

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் எதிர்பார்த்த பிரகாரமாக ரெபெக்காள் இருக்கிறாள். கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்திருக்கிறார் என்னும் நிச்சயம் அந்த ஊழியக்காரனுடைய மனதில் உண்டாயிற்று.

அந்த ஊழியக்காரன் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""நான் குடிக்க உன் குடத்தை சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடிஎன்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே ஈசாக்குக்கு நியமித்தவள்'' (ஆதி 24:14) என்று ஏற்கெனவே சொல்லியிருந்தான். அதன் பிரகாரமாக அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: ""உன் குடத்தி-ருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும்'' (ஆதி 24:17) என்று கேட்கிறான்.

ரெபெக்காள் துரவுக்கு தண்ணீர் மொள்ள வந்தபோது, அவள் துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக்கொண்டு, ஏறி வருகிறாள். அவள் தன் வீட்டிற்கு திரும்பிப்போக ஆயத்தமாயிருக்கிறாள். அந்தத் துரவின் அருகே ஆபிரகாமுடைய ஊழியக்காரன் தன் ஒட்டகங்களை மடக்கி கட்டி வைத்திருக்கிறான். ரெபெக்காள் அந்நியனையோ, அவனுடைய ஒட்டகங்களையோ வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா நிற்கவில்லை. அவனைப்பற்றி விசாரித்து அவனோடு தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கவில்லை. ரெபெக்காள் தண்ணீர் மொண்டு முடித்தவுடன், தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டுப்போகிறாள். அவள் தன்னுடைய வேலையில் கருத்தாயிருக்கிறாள்.

தன் வீட்டிற்கு புறப்பட்டுப்போகிற ரெபெக்காளை சந்திப்பதற்காக, ஆபிரகாமின் ஊழியக்காரன் அவளுக்கு எதிர்கொண்டு ஓடுகிறான். ""உன் குடத்திலிருக்கிற தண்ணீரில், கொஞ்சம் குடிக்க தரவேண்டும்'' என்று கேட்கிறான். கர்த்தருடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகவும், அவருடைய வழிநடத்துதலின் பிரகாரமாகவும், அவன் எதிர்பார்த்த பிரகாரமாகவே ரெபெக்காள் பேசுகிறாள்.

ரெபெக்காள் ஆபிரகாமுடைய ஊழியக்காரனை நோக்கி, ""குடியும் என் ஆண்டவனே'' என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுக்கிறாள். கொடுத்தபின், ""உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன்'' என்றும் சொல்லுகிறாள்.

ரெபெக்காள் சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்க்கிறாள் (ஆதி 24:20).

தண்ணீர் மொள்ள வருகிற ஸ்திரீ தனக்கும், தன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்க்கவேண்டும் என்று அந்த ஊழியக்காரன் எதிர்பார்த்தான். அவளே ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கிறவள் என்று தீர்மானம்பண்ணினான். அந்த ஊழியக்காரன் எதிர்பார்த்த பிரகாரமாக, ரெபெக்காள் அவனுக்கும் அவனுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு வந்து கொடுக்கிறாள். ஆபிரகாமுடைய ஊழியக்காரன் எதிர்பார்த்ததைவிட, ரெபெக்காள் அதிக நற்குணமுள்ளவளாகவும், அந்நியரை அதிகமாய் உபசரிக்கிறவளாகவும், அதிகமான தயாள குணமுள்ளவளாகவும் இருக்கிறாள்.

ரெபெக்காளை போல நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். நாம் பிறருக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்க கொடுத்தால்கூட, கர்த்தர் நமக்கு அதற்குரிய பிரதிபலனைத் தருவார்.

""சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' (மத் 10:42).

ஆபிரகாமுடைய ஊழியக்காரனுக்கு ரெபெக்காளைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருக்கிறான் (ஆதி 24:21).

கிழக்குத் தேசத்தில் காலையிலும், மாலையிலும் ஊரில் உள்ள பெண்கள் தண்ணீர் மொள்ளத் தண்ணீர் துரவண்டைக்கு வருவது வழக்கம். (ஆதி 24:15; ஆதி 29:10; யாத் 2:16; 1சாமு 9:11).

""ரெபெக்காள்'' என்னும் பெயருக்கு ""வயப்படுத்துகிறவள்'' என்று பொருள். ஆதி 26:7-11 ஆகிய வசனங்களில் ரெபெக்காளின் சுபாவம் விளக்கப்பட்டிருக்கிறது.

""பெத்துவேல்'' என்னும் பெயருக்கு ""தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்டவள்'' என்று பொருள். ஆபிரகாமின் தேவனை நாகோர் அறிந்திருக்க வேண்டும்.

பாலஸ்தீன தேசத்தில் தண்ணீர் மொண்டு வருவதற்கு இன்றும் குடங்களைப் பயன்படுத்துகிறார்கள் (யோவான் 4:28).

எலியேசர் ரெபெக்காளுக்கு எதிர்கொண்டு ஓடுகிறான். எலியேசர் விசுவாசத்தோடு கிரியை செய்ய வேண்டும். தன்னுடைய பங்கிற்கு தான் செய்ய வேண்டிய காரியங்களை எலியேசர் செய்கிறான். தன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்து விட்டதா என்று காண்பதற்காக எலியேசர் அவளுக்கு எதிர்கொண்டோடுகிறான் (யாக் 2:14-26).

ரெபெக்காள் எலியேசரிடம் ""குடியும் என் ஆண்டவரே'' என்று சொல்லுகிறாள். எலியேசர் ஆதி 24:14 ஆவது வசனத்தில் ஜெபம் பண்ணியது போன்றே ரெபெக்காள் செயல்படுகிறாள்.

ரெபெக்காள் இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடுகிறாள். எலியேசர் ஓடுவதுபோல ரெபெக்காளும் ஓடுகிறாள். அவள் சுறுசுறுப்பானவள். ரெபெக்காள் செய்யும் வேலைகளை மனமகிழ்ச்சியோடு செய்யக்கூடியவள்.

கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப் பண்ணினாரோ இல்லையோ என்று அறியும் பொருட்டு எலியேசர் மவுனமாயிருக்கிறான். தன்னுடைய எஜமான் தன்னை என்ன காரியமாக அனுப்பினாரோ அதில் எலியேசர் மிகவும் கவனமாக இருக்கிறான். கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கொடுத்து விட்டாரா என்பதை அறிந்து கொள்வதில் அவன் ஆவலோடு இருக்கிறான் (ஆதி 24:33,54,56).

அந்த ஊழியக்காரன் ரெபெக்காளுக்கு பரிசு பொருட்களைக் கொடுத்து, அவளைப்பற்றி விசாரிக்கிறான். ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுக்கிறான். அதன்பின்பு அவன் ரெபெக்காளை நோக்கி, ""நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா'' (ஆதி 24:22,23) என்று கேட்கிறான்.

ரெபெக்காள் அந்த ஊழியக்காரனை நோக்கி, ""நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற —குமாரனாகிய பெத்துவே-ன் மகள்'' என்று சொல்லுகிறாள் . மேலும் அவள் அந்த மனுஷனை நோக்கி, ""எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு'' (ஆதி 24:24,25) என்றும் சொல்லுகிறாள்.

ரெபெக்காள் சொல்லுகிற பிரதியுத்தரம் ஆபிரகாமுடைய ஊழியக்காரனுக்கு மிகுந்த ஆறுதலாகவும், மிகுந்த சந்தோஷமாகவும் இருக்கிறது. ரெபெக்காள் தன் எஜமான் ஆபிரகாமுடைய நெருங்கிய உறவிலிருக்கிறாள் என்பதை அறிந்து அந்த ஊழியக்காரன் மிகவும் சந்தோஷப்படுகிறான். ரெபெக்காளின் குடும்பத்தார் அந்நியரை உபசரிக்கிற நற்குணமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

தான் வந்த வேலை கர்த்தருடைய கிருபையினால் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என்பதை அந்த ஊழியக்காரன் புரிந்துகொள்கிறான். அதற்காக அவன் கர்த்தரைப் பணிந்துகொள்கிறான். அந்த ஊழியக்காரன் ஏற்கெனவே ரெபெக்காளுக்கு வெகுமதிகளைக் கொடுத்தான். ரெபெக்காள் தனக்கும், தன்னுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு வந்து கொடுத்ததற்காக, அவன் அவளுக்கு நன்றி சொல்லும் வண்ணமாக வெகுமதிகளைக் கொடுத்தான் (ஆதி 24:22).

இப்போதோ அந்த ஊழியக்காரன், தலைகுனிந்து கர்த்தரைப் பணிந்துகொள்கிறான். அவன் கர்த்தரை நோக்கி, ""என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும், என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னைஅழைத்துக்கொண்டு வந்தார்'' (ஆதி 24:27) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், ஆரம்பத்திலேயே கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணினான் (ஆதி 24:12). கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு இப்போது பதில் கொடுத்திருக்கிறார். ஆகையினால் அவன் இப்போது, காலதாமதம்பண்ணாமல், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பண்ணுகிறான் (ஆதி 24:26,27).

நமக்கு ஜெபத்தினால் ஜெயமுண்டாகிறது. நாம் பெற்றுக்கொண்ட ஜெயத்திற்காக கர்த்தருக்கு துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்தி, அவருடைய கிருபையை அங்கீகரிக்கவேண்டும்.

ஆபிரகாமுடைய வேலைக்காரன் மிகவும் சந்தோஷமாயிருக்கிறான். அவன் இப்போது தன் எஜமானுடைய சகோதரனின் வீட்டிற்கே வந்திருக்கிறான். இவர்கள் எல்லோரும் கல்தேயருடைய தேசத்திலுள்ள ஊர் என்னும் நகரத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களல்ல. இவர்கள் கர்த்தரை ஆராதிக்கிறவர்கள். இவர்கள் எல்லோரும் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திக்கொண்டிருக்கும்போது ரெபெக்காள் ஓடி, இந்தக் காரியங்களை, தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவிக்கிறாள் (ஆதி 24:28).

ரெபெக்காளின் வீட்டார்

ஆதி 24:29#53

ஆதி 24:29. ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.

ஆதி 24:30. அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.

ஆதி 24:31. அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் பண்ணியிருக்கிறேன் என்றான்.

ஆதி 24:32. அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

ஆதி 24:33. பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லு முன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான்.

ஆதி 24:34. அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.

ஆதி 24:35. கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், கொடுத்திருக்கிறார்.

ஆதி 24:36. என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டானயாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

ஆதி 24:37. என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்,

ஆதி 24:38. நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.

ஆதி 24:39. அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என் பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,

ஆதி 24:40. அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

ஆதி 24:41. நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால்,என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.

ஆதி 24:42. அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

ஆதி 24:43. இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலேநிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்தி-ருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது:

ஆதி 24:44. நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.

ஆதி 24:45. நான் இதை என் இருதயத்தில் சொல்- முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.

ஆதி 24:46. அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மே-ருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.

ஆதி 24:47. அப்பொழுது: நீ யாருடைய மகள் என்றுஅவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகேருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவே-ன் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

ஆதி 24:48. தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

ஆதி 24:49. இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குக் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

ஆதி 24:50. அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால்வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.

ஆதி 24:51. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாகஇருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

ஆதி 24:52. ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

ஆதி 24:53. பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும், தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.

ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் விவாகம்பண்ணுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறது. ரெபெக்காளின் வீட்டார் ஆபிரகாமுடைய ஊழியக்காரனை தங்கள் வீட்டிற்கு அன்போடு வரவேற்கிறார்கள்.

அந்த மனுஷன் வந்ததையும், அவன் தன்னோடு சொன்ன காரியங்களையும் ரெபெக்காள் தன் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவிக்கிறாள். ரெபெக்காள் இப்போது பார்ப்பதற்கு வித்தியாசமாயிருக்கிறாள். தன்னுடைய காதுகளில் அவள் காதணியைத் தரித்திருக்கிறாள். அவள் தன் கைகளில் கடகங்களைப் போட்டிருக்கிறாள். ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். அவனுக்கு லாபான் என்று பெயர் (ஆதி 24:28,29).

லாபான் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்க்கிறான். அந்த மனிதன் இன்ன இன்னபடி தன்னோடே பேசினானென்று ரெபெக்காள் தன் சகோதரன் லாபானிடத்தில் சொல்லுகிறாள். லாபான் அந்த வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், வெளியே துரவண்டையிலிருந்த அந்த மனிதனிடத்திற்கு ஓடுகிறான். ஆபிரகாமுடைய ஊழியக்காரன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருக்கிறான் (ஆதி 24:30).

ரெபெக்காளுக்கும், அவளுடைய சகோதரனாகிய லாபானுக்கும் வித்தியாசம் உண்டு. ரெபெக்காள் பொன்னாபரணங்களைக் காணாமலேயே எலியேசருக்கு மரியாதை கொடுக்கிறாள். லாபான் பொன்னாபரணங்களைக் கண்ட பின்பு எலியேசருக்கு மரியாதை கொடுக்கிறான் (ஆதி 29:13-31:55).

லாபான் ஆபிரகாமுடைய ஊழியக்காரனை அன்போடு வரவேற்கிறான். அவன் அந்த மனிதனைப் பார்த்து, ""கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் பண்ணியிருக்கிறேன்'' (ஆதி 24:31) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை லாபான் அறிந்திருக்கிறான். ஒரு வேளை லாபான் தன் சகோதரி ரெபெக்காள் மூலமாக, அந்த மனிதனைப்பற்றி அதிகமாக விசாரித்து தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த மனிதனுடைய வாயிலிருந்து கிருபை நிரம்பிய வார்த்தைகள் வெளிப்படுகிறது. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை, நாமும் நம்முடைய வீடுகளுக்கு அன்போடு வரவேற்று, அவர்களை கர்த்தருடைய நாமத்தினால் உபசரிக்கவேண்டும். கர்த்தருக்கு சொந்தமானவர்களை நமக்கும் சொந்தமாக்கிக்கொள்வது நமக்கு நல்லது.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் லாபானுடைய அழைப்பை ஏற்று அவனுடைய வீட்டிற்குப்போகிறான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுக்கிறான்.

விருந்தினர்களுடைய கால்களைக் கழுவ தண்ணீர் கொடுப்பது அக்காலத்து வழக்கம். (ஆதி 24:32; ஆதி 18:4; ஆதி 19:2; 1சாமு 25:41; 2சாமு 11:8; லூக்கா 7:44-45).

பின்பு, ஆபிரகாமுடைய ஊழியக்காரனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்படுகிறது. அப்பொழுது அந்த மனிதன், ""நான் வந்த காரியத்தைச் சொல்லு முன்னே புசிக்கமாட்டேன்'' என்று சொல்லுகிறான். அப்பொழுது லாபான், ""சொல்லும்'' என்று சொல்லுகிறான் (ஆதி 24:33).

ரெபெக்காளின் வீட்டார் ஆபிரகாமுடைய ஊழியக்காரனை உபசரித்து பராமரிப்பது போலவே, அவனுடைய ஒட்டகங்களையும் பராமரிக்கிறார்கள். லாபான் அந்த ஒட்டங்களின் கட்டவிழ்த்து, அவைகளுக்கு வைக்கோலும் தீவனமும் போடுகிறான். ""நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்'' (நீதி 12:10).

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் தன்னுடைய எஜமானின் வீட்டைப்பற்றி, ரெபெக்காளின் வீட்டாரிடத்தில் சுருக்கமாகச் சொல்லுகிறான். அந்த மனிதன் நீண்டதூரம் பிரயாணம் பண்ணி வந்திருக்கிறான். அவனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவன் இப்போது ரெபெக்காளுடைய வீட்டிற்கு வந்திருக்கிறான். ஆனாலும் அந்த மனிதன், ""நான் வந்த காரியத்தை சொல்லும் முன்னே புசிக்கமாட்டேன்'' என்று சொல்லிவிடுகிறான். ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கு போஜனத்தைவிட, தான் வந்த வேலையே மிகவும் முக்கியமானதாயிருக்கிறது.

ஆபிரகாமின் ஊழியக்காரன் தன் எஜமானுடைய குடும்பத்தைப்பற்றி, ரெபெக்காளின் வீட்டாரிடத்தில் சுருக்கமாகச் சொல்லுகிறான். அவன் தன்னைப்பற்றிச் சொல்லும்போது, ""நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்'' (ஆதி 24:34) என்று சொல்லுகிறான். இந்த மனிதன் தன்னை வெகுவாகத் தாழ்த்துகிறான். அவன் ஈசாக்குக்கு பெண் பார்க்க வந்திருந்தாலும், அவன் ஆபிரகாமுக்கு உறவுக்காரனல்ல. அவன் ஆபிரகாமுடைய ஊழியக்காரரில் ஒருவன். அந்த மனிதன் பெண் பார்க்க வந்த இடத்தில், தன்னைப்பற்றிய உண்மையை சொல்லுகிறான்.

ஆபிரகாம் எலியேசரிடம் ஆரானிலுள்ள தன்னுடைய உறவினரைப்பற்றி முழுவதுமாகக் கூறியிருக்கிறான். அவர்களுடைய பெயர்களைக் கேட்டவுடன் தான் சரியான இடத்திற்கு வந்திருப்பதை எலியேசர் முடிவு பண்ணுகிறான் (ஆதி 24:23-27) ஆபிரகாமிற்கு ரெபெக்காளையும், அவனுடைய சகோதரன் லாபானையும் தெரியும் (ஆதி 22:20-24).

அக்காலத்தில் பெண்வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே பேசவேண்டிய காரியங்களையெல்லாம் பேசி, திருமணம் நிச்சயம் பண்ணுவது வழக்கம். பெரியவர்களே திருமணத்தை நிச்சயம் பண்ணுவார்கள் (ஆதி 24:3; ஆதி 21:21; ஆதி 28:1; ஆதி 38:6).

சிலவேளைகளில், பெற்றோருடைய ஈடுபாடு இல்லாமல் திருமணம் நடைபெறுவதும் உண்டு (ஆதி 26:34-35); திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள் தங்களுடைய விருப்பத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் (ஆதி 34:4; நியா 14:2).

அந்த ஊழியக்காரன் ஆபிரகாமைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், கொடுத்திருக்கிறார். என் எஜமானுடைய மனைவியாகிய சாராள்முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டானயாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்'' (ஆதி 24:35,36) என்று சொல்லுகிறான்.

லாபான் ஆபிரகாமுடைய ஊழியக்காரனைப் பார்த்து, ""கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே'' (ஆதி 24:31) என்று சொன்னான். ஆனால் இந்த ஊழியக்காரனோ, ""கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார்'' என்று சொல்லுகிறான். கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் ஆபிரகாம் சீமானாயிருக்கிறார் என்றும், கர்த்தரே அவருக்கு திரளான ஆஸ்திகளையும், ஐசுவரியங்களையும் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லி, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறான்.

ஆபிரகாமுடைய ஐசுவரியமெல்லாம் ஈசாக்குக்கே சொந்தம் என்பதையும் அந்த ஊழியக்காரன் ரெபெக்காளின் வீட்டாரிடத்தில் உறுதிபடுத்துகிறான். அவன் ஈசாக்குக்கு பெண் பார்க்க வந்திருக்கிறான். பெண் வீட்டாருக்கு ஆபிரகாமின் ஐசுவரியத்தைவிட, ஈசாக்கின் ஐசுவரியமே முக்கியமானதாயிருக்கும். ஆகையினால் அந்த ஊழியக்காரன் ஈசாக்கின் ஐசுவரியத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்கு கொடுத்திருக்கிறார்'' (ஆதி 24:36) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் தான் இந்த தேசத்திற்கு வந்ததற்கான காரணத்தையும் சொல்லுகிறான். அவன் தன்னுடைய சுயயோசனையின் பிரகாரமாகவோ, சுயவிருப்பத்தின் பிரகாரமாகவோ இந்த தேசத்திற்கு வரவில்லை. அவன் எந்தவிதமான காரணமுமில்லாமல், ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகவோ அல்லது வீணாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ இந்த தேசத்திற்கு வரவில்லை. அவன் தன் எஜமான் ஆபிரகாமுடைய கட்டளையின் பிரகாரம் இந்த தேசத்திற்கு வந்திருக்கிறான். ஆபிரகாம் தனக்கு கொடுத்த வேலையை செய்து முடிப்பதற்காக அந்த ஊழியக்காரன் இங்கே வந்திருக்கிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், தான் இந்த தேசத்திற்கு வந்ததற்கான காரணத்தை ரெபெக்காளின் வீட்டாரிடத்தில் சொல்லுகிறான். அந்த மனிதன் அவர்களை நோக்கி, ""என் எஜமானாகிய ஆபிரகாம் என்னை நோக்கி, ""நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்'' (ஆதி 24:37,38) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர். அதே வேளையில் அவர் தன் உற்றார் உறவினரிடத்திலும் பிரியமும் பாசமுமுள்ளவராயிருக்கிறார். கர்த்தரிடத்தில் பிரியமாயிருக்கிறவர்கள், தங்கள் குடும்பத்தாரிடத்தில் பிரியமாயிருப்பார்கள். கர்த்தரை நேசிக்கிறவர்கள், தங்கள் உற்றார் உறவினரையும் நேசிப்பார்கள்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், ரெபெக்காளின் வீட்டாரிடத்தில், தனக்கும் தன் எஜமானாகிய ஆபிரகாமுக்கும் இடையே நடைபெற்ற சம்பாஷணையை இங்கு விவரமாகச் சொல்லுகிறான். ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடத்தில், ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொல்லுகிறார்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன், தன் எஜமானாகிய ஆபிரகாமை நோக்கி, ""ஒருவேளை அந்தப் பெண் என் பின்னே வராதேபோனாலோ'' என்று கேட்கிறான் (ஆதி 24:39).

அதற்கு ஆபிரகாம் தன் ஊழியக்காரனை நோக்கி, ""நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய். நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்'' (ஆதி 24:40,41) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன், ரெபெக்காளுடைய வீட்டாரிடத்தில் பேசும்போது, தான் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணியதைப்பற்றியும், கர்த்தர் தம்முடைய கிருபையினால், தன்னை வழிநடத்தியதுபற்றியும் தெளிவாகச் சொல்லுகிறான். தன்னுடைய சுயசித்தத்தின் பிரகாரமாக, தான் ரெபெக்காளை சந்திக்கவில்லை என்றும், கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலினாலேயே, தான் பெரபெக்காளை சந்தித்ததாகவும் அந்த ஊழியக்காரன் தெளிவுபடுத்துகிறான். இந்தக் காரியங்கள் எல்லாவற்றிலும் தேவனுடைய விரல் இருப்பதை ஆபிரகாமுடைய ஊழியக்காரன், ரெபெக்காளின் வீட்டாரிடத்தில் தெளிவாகச் சொல்லுகிறான்.

அந்த மனிதன் ரெபெக்காளின் வீட்டாரிடத்தில், ""அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால், இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலேநிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்தி-ருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது: நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்'' (ஆதி 24:42#44) என்று சொல்லுகிறான்.

கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு அற்புதமாக பதில் கொடுத்ததையும் அந்த ஊழியக்காரன் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறான். அந்த மனிதன் அவர்களை நோக்கி, ""நான் இதை என் இருதயத்தில் சொல்- முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன். அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மே-ருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்'' (ஆதி 24:45,46) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் ரெபெக்காளோடு பேசின வார்த்தைகளையும், அவளுடைய வீட்டாரிடத்தில் அப்படியே சொல்லுகிறான். அந்த ஊழியக்காரன், அவளுடைய வீட்டாரிடத்தில் அதுபற்றிச் சொல்லும்போது, ""நீ யாருடைய மகள் என்றுஅவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகேருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவே-ன் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு; தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்'' (ஆதி 24:47,48) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமுடைய ஊழியக்காரன் தன் எஜமானைப்பற்றியும், அவர் தன்னிடத்தில் சொன்ன காரியத்தைப்பற்றியும், தான் இந்த தேசத்திற்கு வந்தது பற்றியும், துரவண்டையில் தான் ரெபெக்காளை சந்தித்து, அவளோடு பேசியதுபற்றியும் தெளிவாகச் சொல்லுகிறான். இவையெல்லாவற்றையும் சொல்லிய பின்பு, ஆபிரகாமுடைய ஊழியக்காரன், ரெபெக்காளின் வீட்டாரைப் பார்த்து, ""இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குக் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன்'' (ஆதி 24:49) என்று சொல்லுகிறான்.

அந்த மனிதன் ரெபெக்காளின் வீட்டாரை, ஈசாக்குக்கு பெண்கொடுக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. பெண்கொடுக்க மனதிருந்தாலும், மனதில்லாவிட்டாலும் அதை தனக்கு சொல்லுமாறு கேட்கிறான். ரெபெக்காளின் வீட்டார் அந்த மனிதன் சொன்ன வார்த்தைகளை கவனமாய்க் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஈசாக்குக்கு பெண் கொடுக்க விருப்பம் இருக்கிறது.

அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: ""இந்தக் காரியம் கர்த்தரால்வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம்'' (ஆதி 24:50,51) என்று சொல்லுகிறார்கள். இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாக எதையும் பேசவிரும்பவில்லை.

நாகோருடைய ஊருக்கும், பெயர்செபாவிற்கும் இடையிலுள்ள தூரம் 450 மைல். பாதை மிகவும் கடினமானது. வழிப்பயணம் ஆபத்தானது. ஒட்டகத்தில் ஏறி பிரயாணம் செய்தால், 25 அல்லது 30 நாள் பிரயாணம் பண்ண வேண்டும். ரெபெக்காளைப்போல இளவயதுள்ள கன்னிப்பெண் இவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணுவதற்கு யோசித்திருப்பாள். அதுவும் முன்பின் தெரியாத எலியேசர்கூட பிரயாணம் பண்ண வேண்டும். ஈசாக்கைப் பார்ப்பதற்காகப் போனாலும், அவள் இதுவரையிலும் ஈசாக்கையும் கண்டதில்லை. ஈசாக்கின் சுபாவம் பற்றியும் ரெபெக்காளுக்கு ஒன்றும் தெரியாது.

ஆனாலும் ரெபெக்காள் எலியேசருடைய வார்த்தையை நம்புகிறாள். எலியேசரிடம் கர்த்தர் பேசியதற்கு மதிப்பு கொடுக்கிறாள். கர்த்தருடைய கரம் இதில் இருப்பதைப் பூரணமாகப் புரிந்து கொள்கிறாள். ரெபெக்காள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, எலியேசரோடு பெயர்செபாவிற்குப் போக சம்மதிக்கிறாள்.

ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தரைத் துதிக்கிறான். அவன் தரைமட்டும் குனிந்து கர்த்தரைப் பணிந்துகொள்கிறான் (ஆதி 24:52). ஆபிரகாம் தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி, ""தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்'' (ஆதி 24:7,40) என்று சொன்னார். ஆபிரகாம் சொன்ன பிரகாரமாகவே, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி, இந்த ஊழியக்காரனுடைய பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்கிறார்.

ரெபெக்காளின் வீட்டார் ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கு நல்ல பதிலை சொல்லுகிறார்கள். ரெபெக்காளை ஈசாக்குக்கு பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆபிரகாம் சொன்ன பிரகாரம், கர்த்தருடைய தூதனானவர், இந்த ஊழியக்காரனுடைய பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்கிறார். ஆனாலும் அந்த மனிதன், ரெபெக்காளுடைய வீட்டார் சொன்ன நல்ல வார்த்தைகளை கேட்டபோது, அவன் கர்த்தருடைய தூதனைப் பணிந்துகொள்ளாமல் கர்த்தரைப் பணிந்துகொள்கிறான்.

பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும், தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுக்கிறான் (ஆதி 24:53).

ரெபெக்காளின் சம்மதம்

ஆதி 24:54#61

ஆதி 24:54. பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்து குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.

ஆதி 24:55. அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.

ஆதி 24:56. அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

ஆதி 24:57. அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்-,

ஆதி 24:58. ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.

ஆதி 24:59. அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

ஆதி 24:60. ரெபெக்ககாளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாகஎன்று ஆசீர்வதித்தார்கள்.

ஆதி 24:61. அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி,அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

லாபானும் பெத்துவேலும், ஆபிரகாமுடைய ஊழியக்காரனை நோக்கி, ""கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம்'' (ஆதி 24:51) என்று சொல்லுகிறார்கள். அந்த ஊழியக்காரன் கர்த்தரைத் துதித்து, ரெபெக்காளுக்கும், அவளுடைய சகோதரனுக்கும், தாய்க்கும், சில உச்சிதங்களையும், சில வெகுமதிகளையும் கொடுக்கிறான்.

அதன் பின்பு அந்த ஊழியக்காரனும், அவனோடிருந்த மனிதரும், புசித்து குடித்து இராத்தங்குகிறார்கள். ரெபெக்காளின் வீட்டார், அந்த ஊழியக்காரனுக்கு, இந்தக் காரியங்கள் எல்லாம் பேசப்படுவதற்கு முன்பாகவே போஜனம் வைத்தார்கள். அப்பொழுது அவன், ""நான் வந்த காரியத்தை சொல்லும் முன்னே புசிக்கமாட்டேன்'' (ஆதி 24:33) என்று சொல்லிவிட்டான். அந்த ஊழியக்காரன் இப்போது தான் வந்த காரியத்தை அவர்களுக்கு சொல்லிவிட்டான். அவர்களும் அந்த மனிதனுக்கு சாதகமான பதிலை சொல்லியிருக்கிறார்கள். ஆகையினால் அவனும், அவனோடிருந்த மனிதரும் புசிக்கிறார்கள்.

ஆபிரகாமின் ஊழியக்காரர் மறுநாள் காலையிலே எழுந்திருந்து, ""என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்'' (ஆதி 24:54) என்று கேட்கிறான். அவன் ரெபெக்காளை, தன்னோடுகூட அழைத்துக்கொண்டுபோக ஆயத்தமாயிருக்கிறான். ஆபிரகாமின் ஊழியக்காரன், ரெபெக்காளின் வீட்டில் அதிக நாட்களுக்கு தங்கியிருக்காமல், ரெபெக்காளை ஈசாக்குக்கு மனைவியாகும்படி, உடனே அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று விரும்புகிறான். ரெபெக்காளின் வீட்டாரும், ""அவளை அழைத்துக்கொண்டுபோம்'' (ஆதி 24:51) என்று முந்தின நாளிலே சொன்னார்கள். ஆனால் இங்கு, ரெபெக்காளின் சகோதரனும் அவள் தாயும், ""பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம்'' (ஆதி 24:55) என்று சொல்லுகிறார்கள்.

ரெபெக்காளின் வீட்டாருக்கு, அவளை ஈசாக்குக்கு மனைவியாகக் கொடுக்க இஷ்டம் இருக்கிறது. ஆனால் ரெபெக்காளை விட்டுப்பிரிவது அவர்களுக்கு கஷ்டமாயிருக்கிறது. ஆபிரகாமின் ஊழியக்காரன், ரெபெக்காளை தன்னோடு உடனே அனுப்பிவிடுமாறு கேட்கிறான். அந்த மனிதன் அவர்களை நோக்கி, ""கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும்'' (ஆதி 24:56) என்று சொல்லுகிறான்.

ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கும், ரெபெக்காளின் வீட்டாருக்கும், ரெபெக்காளை அவனோடுகூட உடனே அனுப்பிவிடுவது சம்பந்தமாக, கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அவர்கள் இந்தப் பிரச்சனையை ரெபெக்காளுடைய விருப்பத்தின் பிரகாரம் தீர்த்து வைக்கலாம் என்று தீர்மானிக்கிறார்கள். அப்பொழுது அவர்கள், ""பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம்'' (ஆதி 24:57) என்று சொல்லுகிறார்கள்.

அவர்கள் ரெபெக்காளை அழைத்து: ""நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா'' என்று கேட்கிறார்கள். அதற்கு ரெபெக்காள், ""போகிறேன்'' (ஆதி 24:58) என்று சொல்லுகிறாள். அவள் ஆபிரகாமின் ஊழியக்காரனோடு உடனே போவதற்கு சம்மதம் சொல்லுகிறாள். ரெபெக்காளின் வீட்டாரும், அவளுடைய விருப்பத்தின் பிரகாரம், அவளை ஆபிரகாமின் ஊழியக்காரனோடு அனுப்புவதற்கு ஆயத்தம்பண்ணுகிறார்கள்.

""நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா'' என்று ரெபெக்காளின் வீட்டார் அவளிடத்தில் கேட்கிறார்கள். கடைசியாகத் தீர்மானம் பண்ண வேண்டியவள் ரெபெக்காள். உனக்குப்போக சம்மதமா என்று அவளுடைய குடும்பத்தார் கேட்கிறார்கள். ஒருவேளை இப்பொழுது போகிறாயா அல்லது சிறிது நாட்கள் சென்ற பின்பு போகிறாயா என்ற பொருளிலும் அவர்கள் கேட்டிருக்கலாம்.

ரெபெக்காளின் வீட்டார் அவளை, ஆபிரகாமின் ஊழியக்காரனோடு அனுப்புவதற்கு முன்பாக, அவளை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார்கள். அவர்கள் ரெபெக்காளை ஆசீர்திக்கும்போது, அவளை வாழ்த்தி, ""எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்களாக'' (ஆதி 24:60) என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்கள்.

ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் மட்டுமே இருக்கிறான். ஆயினும் கிழக்கு தேசத்தில் ஸ்திரீகளை ""சகோதரி'' என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. மேலும் கிழக்கு தேசத்தில் தாதியும் குடும்பத்தில் முக்கியமான பொறுப்பு வகிக்கிறாள். தாதி பெற்ற தாயைப்போல இருப்பாள். ரெபெக்காளோடு போகும் தாதி அவளுக்குத் துணையாகவும், ஆலோசனைக்காரியாகவும் இருப்பாள். ரெபெக்காளின் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பும் இந்த தாதியிடம் கொடுக்கப்படும். (ஆதி 16: 1-8; ஆதி 24:59; ஆதி 29:24,29; ஆதி 30:3,9).

ரெபெக்காளின் குடும்பத்தார் அவளை வாழ்த்தும்போது, ""எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக'' என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். கிழக்கு தேசங்களில் பெரிய குடும்பம் பெரிய ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது (ஆதி 14:19; ஆதி 22:17; ரூத் 4:11-12).

ரெபெக்காளின் வேலைக்காரிகள் எத்தனை பேர் என்று கூறப்படவில்லை. அவர்களில் ஒருத்தி அவளுடைய தாதி (ஆதி 24:59). அவளுடைய பெயர் தெபோராள்(ஆதி 35:8).

அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவிக்கிறார்கள். அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி,அந்த மனிதனோடேகூடப் போகிறார்கள். ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு போகிறான் (ஆதி 24:59,61).

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததிக்கு ரெபெக்காள் தாயாகப்போகிறாள். அவள் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கை திருமணம் செய்துகொள்ளப்போகிறாள். கர்த்தர் ஈசாக்கின் சந்ததியை ஆசீர்வதிக்கப் போவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் ஈசாக்கும் ரெபெக்காளும் விவாகம் செய்துகொள்ளப்போகிறார்கள். லாபானும் பெத்துவேலும், கர்த்தருடைய ஆவியானவரால் ஏவப்பட்டு, இந்த விவாக சம்மந்தத்தைப்பற்றி சொன்னபோது, ""இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது'' (ஆதி 24:50) என்று சொன்னார்கள்.

ஈசாக்கும் ரெபெக்காளும்

ஆதி 24:62#67

ஆதி 24:62. ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.

ஆதி 24:63. ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.

ஆதி 24:64. ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,

ஆதி 24:65. ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

ஆதி 24:66. ஊழியக்காரன் தான் செய்த கசல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.

ஆதி 24:67. அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ணுவதற்காக வெளியிலே போகிறார். சாயங்காலை வேளை அமைதியான வேளை. அந்த வேளையிலே கர்த்தருடைய சமுகத்திலே தனிமையாயிருந்து, கர்த்தரைப்பற்றித் தியானிக்கவும், அவரிடத்தில் ஜெபம்பண்ணவும் ஈசாக்கு தன்னுடைய நேரத்தை ஆயத்தம்பண்ணுகிறார். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் எப்போதும் தேவனோடு ஐக்கியமாயிருக்கவேண்டும் நம்முடைய இருதயங்களில் கர்த்தரைப்பற்றிய சிந்தனை நிரம்பியிருக்கவேண்டும்.

பரிசுத்தமான ஆத்துமாக்கள் கர்த்தரைக் குறித்து தியானம்பண்ணும். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் உலகப்பிரகாரமான வேலைகளைவிட்டு ஓய்ந்து, கர்த்தரைப்பற்றி தியானம்பண்ண விரும்புவார்கள். அவர்கள் கர்த்தரோடு தனிமையான ஐக்கியத்திலிருக்க ஆவலாயிருப்பார்கள். நாம் தனிமையாயிருந்தாலும், கர்த்தர் நம்மோடு கூடயிருக்கிறார்.

ஒவ்வொரு விசுவாசியின் ஜீவியத்திலும் தியானமும் ஜெபமும் இடம்பெற்றிருக்க வேண்டும். நாம் தனிமையாயிருக்கும்போது, ஜெபமும் தியானமும் நம்முடைய மனதிற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். நம்முடைய அன்றாட வேலைகளை பகல் வேளையில் செய்து முடித்துவிட்டு, சாயங்கால வேளையிலே கர்த்தரோடு தனிமையாக அமர்ந்திருப்பது நமக்கு மிகவும் ஆசீர்வாதமாயிருக்கும்.

சாயங்கால வேளையிலே நம்முடைய சரீரப்பிரகாரமான களைப்புக்களையெல்லாம் நீக்கிவிட்டு, நம்முடைய ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் கர்த்தருடைய சமுகத்திலிருந்து உற்சாகத்தையும் பெலத்தையும் பெற்றுக்கொள்ளலாம். நாம் இரவிலே நித்திரை செய்யப்போவதற்கு முன்பாக, கர்த்தரைப்பற்றித் தியானித்து, அந்த நாளை நிறைவுசெய்வதற்கு நம்மை ஆயத்தம்பண்ணிக்கொள்ளவேண்டும்.

ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருக்கிறார். அப்பொழுது அவர், லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவருகிறார். ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருக்கிறார்.

""நான் என் காவ-லே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்'' (ஆப 2:1).

ஈசாக்கு சாயங்கால வேளையிலே, தியானம்பண்ணப்போகும்போது தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கிறார். அங்கே ஒட்டகங்கள் வருவதைக் காண்கிறார். அப்பொழுது ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கிறாள். அவள் அங்கே ஈசாக்கைக் காண்கிறாள் (ஆதி 24:64).

""கண்களை ஏறெடுத்து'' என்னும் வாக்கியத்திற்கு விரைவாக நோக்கிப் பார்ப்பது என்று பொருள். இது மரியாதை கொடுப்பதற்கு அடையாளம். ரெபெக்காள் ஈசாக்கைப் பற்றி எலியேசர் மூலமாக ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனாலும் இப்பொழுதுதான் அவள் முதன் முறையாக அவனைத் தன் கண்களால் காண்கிறாள்.

எலியேசர் ஈசாக்கை ""அவர்தான் எஜமான்'' என்று சொல்லுகிறான். எலியேசருக்கு ஆபிரகாம்தான் எஜமான். இப்பொழுது அவன் ஈசாக்கையும் தன் எஜமானாக அங்கீகரிக்கிறான். (ஆதி 15:2; ஆதி 24:10, 12,27,34-37).

ரெபெக்காள் இதற்கு முன்பு ஈசாக்கைப் பார்க்கவில்லை. ஈசாக்கும் ரெபெக்காளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்து வருகிறான். ரெபெக்காள் அந்த ஊழியக்காரனை நோக்கி, ""அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார்'' என்று கேட்கிறாள். ""அவர்தான் என் எஜமான்'' என்று ஊழியக்காரன் சொல்லுகிறான். அப்பொழுது ரெபெக்காள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொள்கிறாள் (ஆதி 24:65).

கிழக்கு தேசத்திலே ஸ்திரீகள் முக்காடிட்டுக்கொள்வது, அவர்களுடைய மனத்தாழ்மைக்கும், கண்ணியத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் அடையாளம் (1கொரி 11:5-6; 1தீமோ 2:9) புதிய மனுஷரைப் பார்க்கும்போது கிழக்கு தேசத்து ஸ்திரீகள் தங்களுடைய முகத்தை துணியால் மூடிக்கொள்வது வழக்கம்.

ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்கு ஏற்கெனவே அறிமுகமானவன். அந்த ஊழியக்காரன் தான் செய்த கசல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொல்லுகிறான் (ஆதி 24:66).

ஈசாக்கும் ரெபெக்காளும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசிக்கிறார் (ஆதி 24:67).

ஈசாக்கு ரெபெக்காளை தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறார். புருஷருடைய கூடாரமும், மனைவியுடைய கூடாரமும் தனித்தனியாக இருக்கும். அதுபோலவே பெற்றோரின் கூடாரமும், பிள்ளைகளின் கூடாரமும் தனித்தனியாக இருக்கும். அவரவர்கள் தங்கள் தங்கள் கூடாரங்களில் வசிப்பார்கள்.

ஈசாக்கு ரெபெக்காளை தனக்கு மனைவியாக்கிக்கொள்கிறார். திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக வேதாகமத்தில் சான்றுகள் இல்லை. ஒருசிலர் திருமணத்தைப் பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். மணப்பெண் தன்னுடைய பெற்றோரின் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குப் புறப்பட்டு வருவது திருமணம் நடந்து முடிந்து விட்டதற்கு அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஈசாக்கின் தாயாராகிய சாராள் மரித்து மூன்று வருஷமாயிற்று. ஆனாலும் ஈசாக்கு தன் தாய்க்காக இன்னும் துக்கம் கொண்டாடுகிறார். அவருக்கு தன் தாயார்மீது மிகவும் பிரியம் இருக்கிறது. இப்போது ஈசாக்குக்கு ஆறுதலாக ரெபெக்காள் வந்திருக்கிறாள். இதனால் ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.