24. திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் வெளி 4-1

திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் வெளி 4:1

வெளி 4:1. இவைகளுக்குப்பின்பு இதோ , பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருத்த சத்தமானது: இங்கே ஏறி வா இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பியது

அப்போஸ்தலர் யோவானுக்கு இந்த தரிசனத்தை காணும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது யோவான் தரிசனம் காண்பதற்கு முன்பாக பரலோகத்திலே திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் காண்கிறார். வருங்காலத்தில் நமக்கு என்ன நடைபெறும் என்பது நமக்குத் தெரியாது கர்த்தர் நமக்கு எதை வெளிப்படுத்துகிறாரோ அதை மாத்திரமே நம்மால் காண முடியும் வருங்காலத்தில் நடைபெறப்போகிற சம்பவங்களெல்லாம் ஒரு திரைக்குள் மறைவாயிருக்கிறது கர்த்தர் வாசலைத் திறந்தால் மாத்திரமே இனிமேல் நடைபெறப்போகிற சம்பவங்களை நம்மால் தரிசிக்கமுடியும்

யோவானுக்கு பரலோகத்தில் தரிசனம் கிடைக்கிறது. ஒவ்வொரு காரியத்தையும் அவர் தெளிவாகப் பார்க்கவேண்டுமென்பதற்காக, கர்த்தர் தாமே பரலோகத்திலுள்ள வாசலை அவருக்குத் திறந்துகொடுக்கிறார். ஏற்கெனவே எக்காள சத்தம் போல தன்னுடனே பேசின சத்தத்தை யோவான் கேட்டிருக்கிறார். இப்போது அதே சத்தம் யோவானோடு மறுபடியும் பேசுகிறது. "இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று அந்தச் சத்தம்

யோவானுக்கு விளம்பியது

"இவைகளுக்குப்பின்பு" என்னும் வாக்கியத்திற்கு வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் சபைகளை பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்களுக்குப் பின்பு என்று பொருள் இந்த வசனத்தில் இவைகளுக்குப்பின்பு என்று இரண்டு முறை குறிப்பிடப் ரபட்டிருக்கிறது. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சபைகளின் காலத்திற்குப் பின்பு நிகழப்போகிறவைகளாகும். அதாவது இந்த நிகழ்ச்சிகள் சபை எடுத்துக் கொள்ளப்பட்டபின்பு நடை பெறும்.

வெளி 4:1 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றுகள்

1. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப் பட்டிருக்கும் காரியங்கள் "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்" என்று இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தி யிருக்கிறார். இவைகளுக்குப்பின்பு என்பது சபைகளுக்கு பின்பு என்று பொருள் படும். (வெனி 1:19) வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும். வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் கூறப் பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது சபை இந்த உலகத்தில் இருந்தது. அதன்பின்பு சபை எடுத்துக் கொள்ளப் பட்டு, வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் நடைபெறும். அப்போது சபை இந்த உலகத்தில் இராது

2. "சபை" என்னும் வார்த்தை வெளி 1-3 ஆகிய அதிகாரங்களில் 19 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் மூன்றாவது பகுதியான வெளி 4:1-22:5 ஆகிய வசனப்பகுதிகளில் "சபை" என்னும் வார்த்தை ஒரு தடவை கூட பயன்படுத்தப்படவில்லை. ஆகையினால் "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்" என்பது சபைக் காலத்திற்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளாகும். வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவுரையில் சபையைப் பற்றி மறுபடியும் கூறப்பட்டிருக்கிறது. (வெளி- 22:6-21) நிறைவேற வேண்டியவைகள் பூரணமாக வெளிப்படுத்தப்பட்ட பின்பே சபையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் நிறைவேறும் போது சபை பூமியில் இருந்திருக்கு மென்றால் இந்த அதிகாரங்களில் சபையைப் பற்றிய குறிப்பு நிச்சயமாகவே காணப்பட்டிருக்கும்.

3. சிங்காசனங்களில் வீற்றிருக்கும் மூப்பர்கள் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களின் பிரதிநிதிகளாவார்கள். வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு அவர்கள் பரலோகத்தில் காணப்படுகிறார்கள். (வெளி 4:4)

4. தானியேலின் - எழுபதாவது வாரம் இக்காலத்தின் கடைசி ஏழு வருஷமாக இருக்கும். இக்காலத்தில் வெளி 4-19; மத் 24-25 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாரம் என்பது இஸ்ரவேலைக் குறிக்கும். சபையைக் குறித்து, ஆகையினால் வாரத்திற்கு முன்பாகவே சபை எடுத்துக் கொள்ளப்படும்.

5. வெளி 4: ஆவது வசனத்தைத் தவிர, சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கும், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் வேறு வசன ஆதாரம் எதுவுமில்லை . தானியேலின் எழுபதாவது வாரத்தில் உபத்திரக்காலத்தின் பரிசுத்தவான்களும், ஆண்பிள்ளையும் மட்டுமே இரட்சிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப் பட்டார்கள். இவர்கள் வேறு, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் சபையும் வேறு (வெளி-4:4) ஆகையினால் சபையானது வெளி 4:1 ஆவது வசனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைவேறிய பின்பும், வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்கு முன்பும் சபை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். சபை என்பது ஆண்பிள்ளையோ, அல்லது உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள் அல்ல. (வெளி 7; வெளி 12; வெளி 14)

6. லூக்கா 21:34-36 ஆகிய வசனங்களில் இயேசு கிறிஸ்து "இனி சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" என்று கூறியிருக்கிறார். மத் 24:4-26; லூக்கா 21:4-19, வெளி 6-19 ஆகிய வசனங்களிலும், அதிகாரங்களிலும் கூறப்பட்டிருக்கும் காரியங்களிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

7. தேவனுடைய கோபாக்கினையிலிருந்து பரிசுத்தவான்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்று 1தெச 5:1-11 ஆகிய வசனங்களில் நமக்கு வேறொரு வாக்குத்தத்தம் உள்ளது. (வெளி -6-19) தேவன் -நம்மைக் கோபாக்கினைக் கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், நம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும் படி அவர் நமக்காக மரித்தாரே ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்" 1தெச 5:9-11). தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமித்திருப்பார் என்றால் ஒருவரையொருவர் நம்மால் தேற்ற முடியாது. (1தெச 4:16-17; தீத்து 2:13)

8. 2தெச 2:6-8 ஆவது வசனத்தில் தானியேலின் எழுபதாவது வாரத்திற்கு முன்பும், அந்திக்கிறிஸ்து வெளிப் படுவதற்கு முன்பும் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று வாசிக்கிறோம். வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் இந்த வாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். ஆகையினால் வெளி 4:1 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெளிவாகிறது.

9. வெளி 1-3 ஆகிய அதிகாரங்களில் மனுக்குலத்தின் மீது தேவனுடைய மனப்பாங்கு கிருபையும் இரக்கமும் நிறைந்ததாய் உள்ளது. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் மனுக்குலத்தின் மீது தேவனுடைய மனப்பாங்கு நியாயத் தீர்ப்பு வருவிக்கக்கூடியதாக இருக்கிறது. தானியேலின் எழுபதாவது வாரத்தில் நாம் வாசிக்கும் முத்திரைகள், எக்காளங்கள், திரைகள் ஆகியவை - தேவனுடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகின்றன. சபை இவற்றின் மூலமாகச் செல்ல வில்லையென்றால், வெளி 4:1 ஆவது வசனத்தில் சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

10. வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இஸ்ரவேலை பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வசனத்திற்கு முன்பு வரையிலும் சபையைப் பற்றியே விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் பூமியில் சபை இருந்திருக்கும் என்றால் அந்தச் சபையைப் பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கும் ஆனால் இந்த அதிகாரங்களில் சபையைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை . வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன முதலாவது பகுதி வெளி 41 ஆவது வசனத்திற்கு முற்பட்ட பகுதியாகும். இந்த அதிகாரங்களிலும், வசனங்களிலும் சபை எடுத்துக் கொள்ளப் படுவதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளை வாசிக்கிறோம். இந்தப் புஸ்தகத்தின் இரண்டாவது பகுதி வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு வெளி 19 ஆவது அதிகாரம் வரையிலுள்ள பகுதியாகும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாகவும், சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்குப் பின்பாகவும் நடைபெறும் நிகழ்ச்சியை இந்த அதிகாரங்களும், வசனங்களும் விளக்குகின்றன.

வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இஸ்ரவேலைப் பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. மத்தேயு எழுதின கவிசேஷத்தில் பழைய ஏற்பாட்டைக் குறித்து 92 வசனங்கள் எபிரேய நிருபத்தில் 102 வசனங்களும் உள்ளன வெளிப்படுத்தின விசேஷத்திலோ 285 வசனங்கள் பழைய ஏற்பாட்டைக் குறிப்பிடுகிறது. ஆகையினால் வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இந்தப் புஸ்தகத்தின் யூத அம்சம் நிரூபணமாகிறது

2. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் "ஆட்டுக்குட்டி" என்னும் வார்த்தை 27 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் வெளி 1-3 ஆகிய அதிகாரங்களிலும் ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை ஒருதடவை கூடப் பயன்படுத்தப் படவில்லை . பவுலின் நிருபங்களில் சபைகளைக் குறிப்பதற்கு ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை. புதிய ஏற்பாட்டில் மொத்தம் 4 தடவைகள் மட்டுமே ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த நான்கு இடங்களிலும் இந்த வார்த்தை இஸ்ரவேலோடு தொடர்புபடுத்தியே பயன் படுத்தப்பட்டுள்ளது. (யோவான் 1:29,36; அப் 8:32; 1பேதுரு 1:19).

3. யூதா கோத்திரத்து சிங்கம் "தாவீதின் வேருமானவர்" ஆகிய வாக்கியங்கள் யூத அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. (வெளி 5:5)

4. வெளி 7:1-8; வெளி 14:1-5 ஆகிய வசனங்களில் காணப்படும் 144000 என்னும் எண்ணிக்கை யூத அம்சத்தை வெளிப் படுத்துகிறது. சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்படுவீர்கள்

5. முத்திரைகள், எக்காளங்கள், பொற்கலசங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் எகிப்தின் மீது வருவிக்கப்பட்ட வாதைகளை மறுபடியும் நினைவூட்டுகிறது. எகிப்தின்மீது அனுப்பப்பட்ட வாதைகள் புறஜாதியார் இஸ்ரவேலைத் துன்புறுத்தியதற்காக அனுப்பப் பட்டதாகும். முத்திரைகள், எக்காளங்கள், பொற்கலசங்கள் ஆகியவையும் இதே காரணத்திற்காகவே நடைபெறும் நிகழ்ச்சிகளாகும் புறஜாதியார்

இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்கி துன்புறுத்தியதற்காக அவர்கள் மீது ஆக்கினைத் தீர்ப்பு வரும் என்னும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை இவை நிறைவேற்றுகின்றன. ஏசா 24:21 ஏசா 26:20-21; ஏசா 29:6-8; எரே 30:6-9; எசே 38-39; தானி 12:1) இந்த த் தீர்க்கதரிசனங்களில் எதுவும் சபையைக் குறித்துக் கூறப்படவில்லை

6. வெளி 6-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் உபத்திரவக்காலம் இஸ்ரவேலுக்குரியது (எரே 30:6-9; தானி 12:1; மத் 24:15-22).

7. தானியேலின் - எழுபதாவது வாரம் இஸ்ரவேலுக்கும், எருசலேமுக்கும் மட்டுமே உரியது. (தானி 9:24 27).

8. தானியேலின் அறுபத்திதொன்பதாவது வாரத்திற்கும், எழுபதாவது வாரத்திற்கும் இடையில் சபையின் காலம் வருகிறது. ஆகையினால் தானியேலின் எழுபதாவது வாரத்தில் இஸ்ரவேலைக் குறித்த காரியங்களே நடைபெறுகின்றன. (தானி 9:24-27)

9. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் இரட்சிக்கப்பட்டிருக்கும் புறஜாதியார்கள் உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள் ஆவார்கள். அவர்கள் சபையார் அல்ல. (வெளி 6:9-11; வெளி 7.9-17; வெளி 15:2-4; வெளி 20:4-5). இந்த நிகழ்ச்சி வெளி 4-19 ஆகிய அதிகாரங்களின் யூத அம்சத்தை உறுதி பண்ணுகிறது

10. பலிபீடத்தைச் சுற்றிலும் நடைபெறும் தூதர்களுடைய ஊழியம் இஸ்ரவேலுக்கே உரியது. வெளி 8:2-5)

11. தீர்க்கதரிசிகளால் வாக்குப்பண்ணப் பட்டிருக்கிற தேவ ரகசியம் யூத அம்சமுடையது. (வெளி 10:7),

12. வெளி 11 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தேவாலயம், பலிபீடம், தேவாலய ஆராதனை, தேவாலயத்தின் பிரகாரம் பரிசுத்த நகரம் ஒலிவ மரங்கள், உடன்படிக்கைப் பெட்டி ஆகியவை யனைத்தும் யூத அம்சமுடையவையே

13. உலகத்தின் ராஜ்ஜியங்கள் கிறிஸ்துவுக்குரிய ராஜ்ஜியங்களாயின என்னும் சத்தியம் யூதருடைய

தீர்க்கதரிசிகள் கூறியவற்றின் நிறைவேற்றமாகும். (வெளி 11:15; ஏசா 9: தானி 7:13-14 சக 14:1-2; லூக்கா 1:32-33).

14. வெளி 12 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஸ்திரீ, ஆண்பினை ஆகியவை யூத அம்சமுடையவை

15. எழு -தலைகளையும், 10 கொம்புகளையும் உடைய வலுசர்ப்பம், புறஜாதியாரின் காலங்களில் இஸ்ரவேலைத் துன்புறுத்திய சாதிகளின் ஆளுகை ஆகியவை இவற்றின் யூதமார்க்கத்துத் தொடர்பை உறுதி பண்ணுகிறது. (வெளி 12). இந்த அடையாளங்கள் சபையுடன் தொடர்புடையதல்ல.

16. மிகாவேல் (வெளி 12:7) எப்பொழுதும் இஸ்ரவேலோடு தொடர்புடையவன் (தானி 10:13-21; தானி 12:1).

17. "மற்றவர்கள்" (வெளி2:17) என்னும் வார்த்தையும் கொஞ்சம் மீதி (ஏசா 19) என்னும் வார்த்தையும் யூத அம்சமுடையவை.

18. பாபிலோன் பற்றிய நிகழ்ச்சிகள் (வெளி 16:17-21: வெளி 18:1-24) யூதரோடு | தொடர்புடையவை. (ஏசா 13-14; எரே 50-51) சபைக்கும், பாபிலோனுக்கும் தொடர்பில்லை.

19. அர்மகெதோன், இரண்டாம் வருகை (வெளி 16:13-16; வெளி 19:11-21) ஆகிய வார்த்தைகள் யூதருடைய தொடர்பை உறுதி பண்ணுகிறது.

20. ஆயிரம் வருஷ அரசாட்சி புதிய பூமி ஆகியவை இஸ்ரவேலோடு தொடர்புபடுத்தி பலதடவை முன்னறிவிக்க பட்டிருக்கிறது. (வெளி 20-22; ஏசா 2 ஏசா 65; ஏசா 66)

மனுஷர் ஆவிக்குள்ளானதற்கு எடுத்துக் காட்டுக்கள்

1. ஏனோக்கு (ஆதி 5:24; சக 4:14 எபி 11:5; வெளி 11 )

2. எலியா (2இராஜா 2:11; சக 4:14; மல் 4:5-5; வெளி 11

3. இயேசு உயிர்த்தெழுந்த சரீரத்தில்) மாற்கு 16:19; லூக்கா 24:39.51; அப் 1)

4. பவுல் (2கொரி 12:1-8)

5. யோவான் (வெளி 4:1-5:14)

6. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் அநேகருடைய சரீரங்கள் (மத் 27:52-53; எபே 4:8-10)

7. உயிர்த்தெழுந்த சரீரம் கொடுக்கப்படாத இரட்சிக்கப்பட்ட எல்லா ஆத்துமாக்கள் ஆவிகளை (எபே 4:8-10; 2கொரி 5:8; பிலி 1:21-24; எபி 12:23)

சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறப்போகும் நிகழ்ச்சிகள்

1. முதலாம் முத்திரை அந்திக்கிறிஸ்துவின் எழுச்சி (வெளி 6:1)

2. இரண்டாம் முத்திரை - யுத்தம் வெளி 6:3-4)

3. மூன்றாம் முத்திரை - பஞ்சம் (வெளி 6.5-5)

4. நான்காம் முத்திரை - மரணமும், பாதாளமும் வெளி 6:7-8)

5. ஐந்தாம் முத்திரை - இரத்தச்சாட்சியாக மரித்தோருடைய ஆத்துமாக்கள் (வெளி 6:9-11)

6. ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபம் (வெளி 6:12-17)

7. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் முத்திரை போடப்பட்டவர்கள் வெளி 7:1-8)

8. மிகுந்த உபத்திரவத்தில் இரத்தச்சாட்சியாக மரித்தவர்களின் ஆராதனை. (வெளி 7-9-17)

9. ஏழாம் முத்திரை - பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று. (வெளி 8:10)

10. ஏழு தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. (வெளி 8:2)

11. ஆசாரிய தூதனுடைய ஆராதனை. வெளி 8:3-5)

12..ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்கு ஆயத்தப்படுத்தினார்கள். (வெளி 8:6)

13. முதலாம் எக்காளம் - இரத்தங்கலந்த கல்மழையும், அக்கினியும் உண்டாயிற்று.(வெளி 8.7

14. இரண்டாம் எக்காளம் - சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. (வெளி 8:8-9)

15. மூன்றாம் எக்காளம் - தண்ணீ ரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போல கசப்பாயிற்று (வெளி 8:10-11)

16. நான்காம் எக்காளம் - சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் மூன்றிலொரு பங்கு இருளடைந்தது. (வெளி 8:12)

17. ஒரு தூதன் ஐயோ ஐயோ, ஐயோ (ஆபத்துவரும் என்று சொன்னான். வெளி 8:13)

18. ஐந்தாம் எக்காளம் - முதலாம் ஐயோ - ஜனங்களைச் சேதப்படுத்துவதற்குப் பிசாசுகள் விடுவிக்கப்பட்டன (வெளி 9:1-12)

19. ஆறாம் எக்காளம் - இரண்டாம் ஐயோ - மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள் அவர்களுடைய இராணுவங்களின் தொகை 20 கோடியாய் இருந்தது. (வெளி 9:13-21)

20. தேவனுடைய ஆலயத்தையும், பரிசுத்த நகரத்தையும் அசிங்கப்படுத்துவது (வெளி 11:1-2)

21. பூமியில் இரண்டு சாட்சிகள் தோன்றுதல். (வெளி 11:3-12)

22. எருசலேமில் மகாப்பெரிய பூமியதிர்ச்சி. (வெளி 11:13)

23. ஏழாம் எக்காளம் - அறிவிப்புக்கள். (வெளி 11:15-18)

24. பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. (வெளி :19)

25. சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ வருத்தப்பட்டு அலறினாள். (வெளி 12:1-2)

26. வலுசர்ப்பம் ஆண்பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு எதிர்த்து நின்றது. (வெளி 12:3-4)

27. ஆண்பிள்ளை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது (வெளி 12:5)

28. ஸ்திரீயானவள் மூன்றரை வருஷங்களுக்கு (ஆயிரத்திருநூற்றறுபது நாள்) வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள். (வெளி 12:6)

29. வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. (வெளி 12:7-12}

30. வலுசர்ப்பம் ஸ்திரீயைத் துன்பப் படுத்தினது. (வெளி 12:13-16)

31. வலுசர்ப்பம் (சாத்தான் ஸ்திரீ யின் சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ண ப் போயிற்று. (வெளி 12:17)

32. சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வந்தது - அந்திக்கிறிஸ்துவிற்கு ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுக்கப் பட்டது.) (வெளி 13:1-10,18)

33. வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி வந்தது - கள்ளத்தீர்க்கதரிசி மிருகத்தை வணங்கும் ஆராதனையை ஆரம்பித்தான். வெளி 13:11-17)

34. 144000 யூதர்கள், ஆண்பிள்ளை ஆகியோர் தேவனுக்கு முன்பாக நின்றார்கள். (வெளி 4:1-5)

35. வேறொரு தூதன் நித்திய சுவிசேஷத்தை அறிவித்தான் (வெளி 14:6-7)

36. பாபிலோன் மகா நகரம் விழுந்தது என்று வேறொரு தூதன் அறிவித்தான். (வெளி 14:8)

37. மிருகத்தை வணங்குகிறவர்கள் அக்கினியினாலும், சுந்தகத்தினாலும் பாதிக்கப்படுவார்கள் என்று வேறொரு தூதன் அறிவித்தான். (வெளி 14:9-12)

38. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இரத்தசாட்சிகள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டவர்கள், (வெளி 14:13)

39. அறுவடை - அர்மகெதோன் (வெளி 14:14-16)

40. பழுத்த குலைகளின் அறுவடை அர்மகெதோன் (வெளி 14:17-20)

41. தேவனுடைய கோபாக்கினையினால் நிறைந்த ஏழு பொற்கலசங்கள் (வெளி 15:16-7)

42. உபத்திரவக்காலத்தில் இரத்தச் சாட்சிகளாக மரித்தவர்களுடைய ஆராதனை. (வெளி 15:2-4)

43. பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது. (வெளி 15:5-16:11)

44. முதலாம் கலசம் - மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண் உண்டாயிற்று (வெளி 16:2)

45. இரண்டாம் கலசம் - சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று (வெளி5:3)

46. மூன்றாம் கலசம் - ஆறுகளும், நீரூற்றுகளும் இரத்தம் (வெளி 16:4-7)

47. நான்காம் கலசம் - மிகுந்த உஷ்ணத்தினால் மனுஷர்கள் தகிக்கப் பட்டார்கள். (வெளி 16:8-9)

48. ஐந்தாம் கலசம் - இருள். (வெளி 16:10-11 |

49. ஆறாம் கலசம் - ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று (வெளி 16:12)

50. மூன்று அசுத்த ஆவிகள் - ஜாதிகளை அர்மகெதோன் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்த்தல். { வெளி 16:13-16)

51. ஏழாம் கலசம் - பூமியதிர்ச்சி - பாபிலோனும், மற்ற நகரங்களும் அழிந்தன. (வெளி 16:17-21; வெளி 18:1-24)

52. பூமியின் ராஜாக்கள் மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினார்கள். (வெளி 17:1-5)

53. மகா வேசி பரிசுத்தவான்களை இரத்தச்சாட்சிகளாக மரிக்கச் செய்தாள். (வெளி 17:6-7)

54. எட்டாவது ராஜ்யம் உண்டாயிற்று (வெளி 17:8-13)

55. ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம். (வெளி 17:141

56. மகாவேசியோடு யுத்தம், (வெளி 17:15-18)

57. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் (வெளி 19:1-10)

58. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. | வெளி 19:11-16)

59. ஒரு தூதன் பறவைகளை மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். (வெளி 19:17-18)

60, அர்மகெதோனில் யுத்தம். (வெளி 19:19-21)

61. சாத்தான் கட்டி வைக்கப்பட்டான். (வெளி 20:1-3)

62. முதலாம் உயிர்த்தெழுதல் நிறைவு பெறுகிறது - கிறிஸ்துவின் ஆயிரம் வருஷ அரசாட்சி ஆரம்பமாகிறது. (வெளி 20:4-5)

63. சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகிறான். (வெளி 20:7)

64. பூமியின் மி து நடைபெறும் கடைசிக் கலகம். (வெளி 20:8-9)

65. சாத்தான் நரகத்தில் தள்ளப்பட்டான் (வெளி 20:101)

66. இரண்டாம் உயிர்த்தெழுதல் மரித்துப்போன துன்மார்க்கருடைய நியாயத்தீர்ப்பு: (வெளி 20:11-15)

67. புதிய வானமும், புதிய பூமியும் (வெளி 21:1-22:5)

68. தேவனுடைய நகரம் - புதிய எருசலேம் பரலோகத்தை விட்டு இறங்கிவருகிறது (வெளி 21:29-23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.