அதிகாரம் 2
தோட்டத்தில் மனிதனும் மனுஷி சிருஷ்டிக்கப்படுதலும்
நாள் 7: தம்முடைய சிருஷ்டிப்பிலிருந்து தேவன் ஓய்ந்திருந்தார் (2:1-3)
1இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. 2தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். 3தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
1:31 வசனத்திலிருந்து 2:1-3 பிரிக்கப்படுவதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை, ஏனென்றால் சிருஷ்டிப்பின் விளக்கம் 2:3 வரை இடைவெளி இல்லாமல் தொடர்கிறது. இந்த பாகமானது அதிகாரம்-1 உடன் தேவன் சிருஷ்டிப்பின் துவக்கத்தில் செய்த எல்லாவற்றையும் ஆறாம் நாளிற்கு பின்பு அவர் நிறைவு செய்கிறார். சேர்த்திருக்க வேண்டும்.
வசனம் 1. NASB சொல்கிறது. வானங்களும், பூமியும் நிறைவு செய்யப்பட்டது மற்றும் அவைகளின் எல்லா சேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன, இது எபிரெய தொகுப்பின் நேர்மொழி பெயர்ப்பு ஆகும். ஆயினும், NIV வேதாகமத்தில் "அவைகளின் எல்லா சேனையும்," என்பதற்குப் பதிலாக, “அவைகளின் எல்லாப் பெரிய அணிகளும்" - ஆக உள்ளது. இந்த மொழிபெயர்ப்பு "சேனை" என்பதில் சிலர் உரிமை கோருவதுபோல், சூரியன், சந்திரன், மற்றும் "வானங்களில்" நட்சத்திரங்கள், மட்டுமல்லாது, "பூமியிலுள்ள" மனிதனும் மற்ற அனைத்து சிருஷ்டிகளும் ஆகும், அதிகாரம் 1-ல் கலந்தாலோசித்தது போல், தங்கள் வகைகளின்படி அவைகள் அணிகளாக இருந்தன.
பழைய ஏற்பாட்டில் "சேனை" (DxQX, isba'am, சேபாம்) என்ற வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளபடியால், இந்த வசனத்திலுள்ள எல்லாவற்றையும் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. முக்கியமாக, இது பல அம்ச தரங்களைக் கொண்டவைகள் மற்றும் நிறுவனங்களுடன் கூடிய ஒழுங்கான கட்டமைப்பான, ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. தன் எதிராளிகளுக்கு எதிராக அணி வகுத்த பூமியிலுள்ள இராணுவத்தை இது அர்த்தம் கொள்ளும் (21:22 நியா.4:2), அல்லது "பரலோக சேனை," அது தேவனுடைய தூதர்களின் இராணுவ அமைப்பு ஆகும் (1 இராஜா. 22:19). தேவன் இஸ்ரவேலுக்காக சண்டையிட்ட போது, அவர் பரலோகத்தின் சேனைகளைப் பயன்படுத்தினார், மற்றும் யோசுவாவிற்கு வெளிப்பட்ட கையில் உருவின பட்டயத்தோடு தோன்றிய தேவதூதனானவன் தன்னைக் "கர்த்தருடைய சேனையின்" அதிபதியாக அடையாளப்படுத்திக் கொண்டான் (7]7-Nax, tsfba Yahweh, யாவே: யோசுவா 5:14),
"சேனை" என்ற பதம் வேறொரு பயன்பாட்டில் பண்டைய கால கிழக்கத்திய நாடுகளில் தெய்வமாக வணங்கப்பட்டு வந்தன வானஜோதிகளைக் குறிக்கிறது (உபா. 4:19; 17:3; 2 இராஜா. 17:16; 21:3). 2:1லுள்ள கூற்று, மனிதனை சேர்க்கிறதோ இல்லையோ, பரலோகத்தின் சேனைகள் பயபக்திக்கான, பயப்பட வேண்டிய தெய்வங்களாக இருந்தன என்று எழுத்தாளர் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவா யிருக்கிறது. அவைகள் வெறுமனே கர்த்தருடைய சிருஷ்டிப்பின் ஒரு அங்கம், மற்றும் அவருடைய கட்டளைகளின்படி, வானங்களில் விசேஷ செயல்களைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தன.
வசனம் 2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளில் நிறைவேற்றினார் என்று வசனப்பகுதி சொல்கிறது. இது இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அதாவது ஏழாம் நாளிலும் தேவனுடைய சிருஷ்டிப்பு தொடர்ந்துள்ளது, பின்பு அந்த நாளின் ஒருவேளையில் அவர் எல்லாவற்றையும் செய்து முடித்து ஓய்ந்திருந்தார். இந்த பரிந்துரையானது வாக்கிய கோர்வைக்கு ஒத்துப்போகவில்லை, ஏனெனில் அகிலத்தையும் மற்றும் அதிலுள்ளவைகளையும் அதிகாரம் 1-ன் இறுதியில் தேவன் ஏற்கனவே சிருஷ்டித்து முடித்துவிட்டார். தமது சிருஷ்டிப்புகளை தேவன் பார்வையிட்ட போது "மிகவும் நன்றாயிருந்தது" என்று அறிவித்தார். இவ்வாறாக, ஆறாம் நாளின் முடிவில், ஒருவன் கூடுதல் சிருஷ்டிப்பை எதிர்பார்ப்பதில்லை, ஆனால், சிருஷ்டிகரின் வடிவமைப்பின்படி அகிலத்திலுள்ள எல்லா சிருஷ்டிப்பு களுக்குள்ளும், விருத்தியடையச் செய்தல் மற்றும் தொடர்ந்து நிலைத்திருக்கச்செய்தல்,1 போன்ற கட்டமைப்பை உண்டு பண்ணினதை எதிர்பார்ப்பார்.
அங்கே 2:2 “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை நிறைவேற்றி" என்னும் போது NIV வேதாகமம் ... வினைச் சொல்லை ... (7h?, kalah) இறந்த காலத்திற்கு இறந்த காலத்தில் சொல்கிறது: “தேவன் செய்து கொண்டிருந்த வேலையை அவர் செய்து முடித்துவிட்டார்." 2:1-ல் எழுத்தாளர் ஏற்கனவே வானங்களையும் பூமியையும் தேவன் சிருஷ்டித்து என்று கூறியிருந்தார். RSV மற்றும் NRSV மொழிபெயர்ப்பில் "ஏழாம் நாளில் தேவன் தமது கிரியையை செய்து முடித்தார்"; என்று கூறப்பட்டுள்ளது போல், ஏழாம் நாளின் ஒரு குறிப்பிட்ட வேளை வரை தேவன் தமது சிருஷ்டிப்பை முடிக்கவில்லை என்று நிச்சயமாகவே ஆசிரியர் தன் கூற்றை மாறுபடக்கூறவில்லை. பஞ்சாகமத்தின் வேறு இடங்களிலும் வினைச்சொல் இதே வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபோது (17:22; 49:33; யாத். 40:33), செயல்பாடு உறுதியாக நிறைவுற்றிருந்தது, மற்றும் சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே செய்துவிட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.2
தேவன் தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். "ஓய்ந்திருந்தார்" என்ற பதமானது, மனிதன் ஆறு நாள் "வேலை" பார்த்து சோர்வடைந்தது போன்று, தேவன் சோர்வடைந்தார் என்பது பொருந்தாது; மாறாக, ஏழாம் நாளில் தம்முடைய எல்லாவித சிருஷ்டிப்பின் வேலைகளையும் தேவன் "நிறுத்தினார்" அல்லது "விட்டு நீங்கினார்" என்று பொருள்படும். 2:2, 3-ல் உள்ள "ஓய்ந்திருந்தார்," (naw, shabath) என்ற எபிரெய வினைச்சொல்லிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, அதனுடைய பெயர் சொல் (ngu, shabbath) என்பது "சாபத்" என்று ஆங்கில வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தங்கள் வேலையிலிருந்து ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பது மூலம் தேவனை பின்பற்றும்படிக்கு எபிரெய எழுத்தாளர் இஸ்ரவேலரை நினைவுப் படுத்திக்கொண்டிருந்தார். உண்மையில், தேவனுடைய ஓய்ந்திருத்தல் என்பதை ஓய்வு நாளாக ஆசரிக்கும்படிக்கு பத்துக் கட்டளைகளில் ஒரு விதிமுறையாகவே கொடுக்கப்பட்டுள்ளது: "கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் ஆகையால் கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்" (யாத். 20:11).
பண்டைய மெசெபெத்தோமியாவின் இணைய தினம் ஒன்றிலிருந்து "ஏழாம் நாள்" இஸ்ரவேலர் ஆசரிக்கின்றனர் என்ற முடிவை அடைய எண்ணற்ற பண்டிதர்கள் தேடினர். பாபிலோனியர்கள், மாதத்தின் பதினைந்தாம் நாளை - பௌர்ணமி தினம் - sab/pattu என்று அழைத்தனர். மேலும் அவர்கள் அந்த நாளை "நல்ல சகுனம் தினமாக" கருதினர். ஆயினும், அக்காடியன் sab/pattu மற்றும் எபிரெய shabbath என்ற வார்த்தைகளின் மொழி அர்த்த தொடர்பையும் கூடுமானால் காண முடியும். ஏழாம் நாளிலோ அல்லது பதிநான்காம் நாளிலோ முந்தினது வராமல், மாதத்தின் நடு நாளில் (பதினைந்தாம் நாளில்) வந்தது. உண்மையில், இஸ்ரவேலர் ஒவ்வொரு ஓய்வு நாளையும் பரிசுத்தமாக ஆசரிப்பது போல் அல்லாமல், பாபிலோனியர்கள் மாதத்தின் ஏழு, பதிநான்கு, பத்தொன்பது, இருபத்து ஒன்று, மற்றும் இருபத்து எட்டாம் நாட்களை "தீமையின் நாட்களாக" கருதினர்.3
மேலும், 291/2 நாட்கள் கொண்ட சந்திர மாதத்திற்குள் ஏழு நாட்கள் கொண்ட வாரத்தைப் புகுத்த முடியாது, ஏனெனில் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஒரு மாதத்தை இரண்டு ஏழு முழு நாட்கள் கொண்ட காலமாக பிரிக்க முடியாது. மெசெபெத்தோமியாவுடன் சேர்த்து, வேறு சில இடங்களிலும் சாபத் துவங்கியிருக்கக் கூடும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருந்த போதிலும், இந்த அற்புதமான நாள் துவங்கியதற்கு, தேவன் தமது சிருஷ்டிப்பின் கிரியையிலிருந்து ஓய்ந்திருந்தார் என்பதைவிட, வேறு எந்த யோசனையும் ஆதாரம் வழங்கவில்லை.
வசனம் 3. தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார் என்ற கூற்று மூலம் சாபத் ஓய்வு நாளின் விசேஷ இயல்பு முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு நாட்களில் கர்த்தர் டைத்த எல்லாவற்றையும் தேவன் "மிகவும் நன்றாயிருந்தது" என்று படை அழைத்தார் (1:31), ஆனால் "சாபத்" ஓய்வு நாளை மட்டுமே அவர் "பரிசுத்தமாக்கினார்" ("பரிசுத்தமாக உருவாக்கினார்"; NIV). UIT (qadash) “காதாஷ்’ இங்கே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் என்ற பதமானது பரிசுத்தம் அல்லது புனிதமானதுடன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை குறிக்கிறது. இது பொதுவான அல்லது பரிசுத்த குலைச்சலை உண்டுபண்ணுவதிலிருந்து வேறு பிரிக்கப்பட்டது.4
தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையான செயல் முடிவுற்றதும் அவருடைய ஓய்வை சாபத் நினைவுப்படுத்துகிறது. எகிப்தில் ஓய்வில்லாமல் தொடர்ந்து கூலி வேலை செய்து அடிமைகளாக அனுபவித்த, இஸ்ரவேலருக்கு இது முக்கியமானதாக இருக்கும். ஆயினும், இம்மாதிரியான அடிமைத்தனத்திலிருந்து அவர்களைத் தேவன் விடுவித்தார். இப்போது அவர்கள் ஓய்வு எடுக்கவும், புதிப்பித்துக் கொள்ளவும், மற்றும் புதிய ஜனமாக (சிருஷ்டி) கர்த்தரை ஆராதிக்கக் கூடியவர்களாயிருந்தனர், அவர்களை அவர் தம் சேஷ்டபுத் திரராக்கியிருந்தார் (யாத். 4:22, 23). மோசே சிருஷ்டிப்பின் தெய்வீக செயலுடன் ஓய்வை பிணைத்தது மட்டுமல்லாது (யாத். 20:8-11), யாத்திராகமத்தில் இஸ்ரவேலரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் படிக்கு இறையியலுடன் இணைத்தார். இதுவே அவருடைய புத்தி மதியாகும்.
நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார் (உபா. 5:15).
"வானமும் மற்றும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு ..."
(2:4)
4தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
வசனம் 4. சிருஷ்டிப்பு தொகுப்பின் இறுதியில், ஆதியாகமத்தின் பத்துக் (hirin, toledoth) கூற்றுகளில் முதல் கூற்றிற்கு வந்துள்ளோம்: வானமும் பூமியையும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு. இவைகளே. Toledoth என்பது "தொகுப்பு," "சந்ததி," "வரலாறு" என்று மொழிபெயர்க்கப்படுகிறது அத்துடன் மக்கள் அல்லது தனி நபர்களின் பெயர்களை இணைத்து இம்மாதிரியான உணர்வு வெளிப்படுத்தப்படும் இந்த தருணத்தில், 1:1-2:3-ல் ஏற்கனவே சிருஷ்டிப்பு குறித்து கூறிமுடித்ததின் முடிவை toledoth அடையாளப்படுத்துகிறது என்று கூற முடியும். ஆயினும், புத்தகத்தில் அடிக்கடி பின்வருவனவற்றின் அறிமுகமாக இது காணப்படுகிறதால், இவ்வாறாக புரிந்துகொள்வதுமே சிறந்த வழியாகும். (பார்க்கவும் அறிமுகம், பக்கங்கள் 5-6).
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே,... என்று கூறும்போது, ஆதியாகமத்தின் ஆசிரியர் 2:4-25 ல் ஒரு வித்தியாசமான (அல்லது எதிரிடையான சிருஷ்டிப்பின் வரலாறைத் தருகிறார் என உணர்த்தக்கூடிய சுட்டிக்காட்டுதல் எதையும் வசனப்பகுதி கொடுப்பதில்லை அதற்கு எதிராக பொதுவாக இலக்கியம் சார்ந்த நடைமுறைப்படி, ஒரு நிகழ்ச்சியை (சிருஷ்டிப்பு) பரந்த காட்சியில் விவரிப்பதும் (1:1-2:3) பின்பு திரும்பிச் சென்று தான் கொடுக்க விரும்பிய முக்கியமான இறையியல் செய்தியை 2:4-25 விளக்கமாக விவரிக்கும் முறையையும் பயன்படுத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. 5
"தேவன்" என்ற சாதாரண பெயருக்குப் பதிலாக, "தேவனாகிய கர்த்தர்" (nn78 7}7)}, Yahweh Elohim) என்ற பெயர் (2:4-25) காணப்படுவதால் சிலர் பராமரிப்பது போல், வேறு ஆதாரம் அல்லது எழுத்தாளரை சுட்டிக்காட்டுவதில்லை. பழைய ஏற்பாட்டில் தேவன் என்பதற்கான சாதாரண பதம் 'Elohim ஆகும், ஆனால் Yahweh என்பது அவருடைய தனிப்பட்ட பெயர், விசேஷமாக இஸ்ரவேலரால் பயன்படுத்தப்பட்டது. ஆகையால், 2:4 முதல் ஆதியில் ஏதேன் தோட்டத்தில் முதலாம் மனுஷன் மற்றும் மனுஷியுடன் தேவன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருந்ததை விளக்கும் போது இயற்கையாகவே Yahweh Elohim என்ற தெய்வீக கூட்டுப்பெயரை - அவர் பயன்படுத்தினார். எழுத்தாளர் இந்தப் பதங்களை ஒருங்கிணைக்கையில், தேவனை முன்னிறுத்தும் போது, அவருக்கு இறையியல் நோக்கம் இருந்திருக்கும், அகிலத்தை சிருஷ்டித்தவர் மற்றும் இஸ்ரவேலின் தேவன் என்ற இரண்டையும், இச்சம்பவத்தில் அவ்வாறு அவர் வெளிப்படுத்தினார். யாத்திராகமம் 9:30-ல் இந்த கருத்து தெளிவாயிருக்கிறது. பார்வோனும் எகிப்தியர்களும் (Yahweh Elohim) "தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு" அங்கே வாதைகள் உச்சத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. "யாவே என்பவர் இஸ்ரவேலின் தேசிய தெய்வீக பெயர் மட்டுமல்ல, ஆனால் எல்லா சிருஷ்டிகளையும் கட்டுப்படுத்தும் சர்வ சுதந்திர தேவனாக இருக்கிறார்" என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.6
"பூமியையும் வானத்தையும் அவர் உண்டுபண்ணின நாளிலே" என்ற அவருடைய கூற்றில், இங்கே "நாள்" (€i, yom) என்பதன் அர்த்தம் குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது. ஆறு நாட்களில் சிருஷ்டிப்பு நிகழ்ந்தது என்று கூறும் 1:1-2:3 வேறுபடுகிறதா? இல்லை என்பதே பதில்.
Yom என்ற எபிரெய பதமானது வாக்கியங்களின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களை அது கொண்டுள்ளது. அதிகாரம் 1-ல். எண்களோடு இது இணைந்து வரும்போது (ஒன்றாம், இரண்டாம். மூன்றாம் அப்படியே முழுவதும்), 24 மணி நேர காலத்தை இது குறிக்கிறது (1:5, 8, 13, 19,23,31). பழைய ஏற்பாடு முழுவதும் எண்களுடனான yom-ன் கூட்டு இதே அர்த்தத்தில் தான் தோன்றுகிறது. கூடுதலாக, "சாயங்காலமும், விடியற்காலமுமாகி" என்ற கூற்றுடன் இணையும் போது, அந்த வசனங்களில் அது ஒரு நாளின் உண்மையான மணி நேரத்தை சுட்டிக்காட்டும் எபிரெய வழியாகும். சிருஷ்டிப்பின் ஆறு உண்மையான நாட்களைத் தொடர்ந்து தேவனுடைய ஓய்வாகிய ஏழாம் நாளின் அர்த்தத்தை, புத்தகத்தின் உண்மையான வாசகர்கள் புரிந்துகொண்டதையே, தங்கள் வாழ்க்கையின் அடித்தளமாக ஆறு நாட்கள் வேலை செய்து ஏழாம் நாளில் (சாபத்) ஓய்வு எடுக்கிறார்கள் (யாத்.20:8-11).
அதிகாரம் 1-ல் Jyom என்பதற்கு பகல் என்ற வேறொரு அர்த்தம் காணப்படுகிறது, அந்தப் பதமானது இருள் மற்றும் இரவு நேரத்திற்கு எதிராக உள்ளது (1:5, 14, 16, 18). உண்மையில், சரியான பகல் நேரத்தின் அளவு மாறுபடுகிறது. பூமத்தியரேகையை விட்டு விலகும்போதும், வருடத்தின் கால சீதோஷ்ண நிலையையும் பொறுத்தது. ஆகையால், இந்த வசனங்களில், பகல் கால நேரத்தையும் மற்றும் இருளின் கால நேரத்தையும் சேர்த்த, ஒரு நாளின் 24 மணி நேரத்தைவிட குறைந்த கால அளவையே இங்கு yom குறிக்கிறது (1:5, 8, 13, 19, 23, 31).
ஆதியாகமம் 2:4-ல் yom என்பது பொதுவான நேரத்தைக் குறிக்கிறது; அதிகாரம் 1-ல் உள்ள சிருஷ்டிப்பின் ஆறு நாட்களை சூழ்ந்தது ஆகும். எபிரேய வார்த்தை Dia (byom) இது NASB ல் "நாளிலே" என்று நேர் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது (பார்க்கவும் 2:17; 3:5; 5:1, 2). Yom என்பதை பொதுவான அர்த்தத்தில் NIV இப்படி விளக்குகிறது: "தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின போது."
2:4-ன் சிருஷ்டிப்பின் கூற்றில் யோம் என்பதை பொதுவான அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள சிலர் தயங்குகின்றனர், அப்படி ஏற்றுக் கொண்டால், சிருஷ்டிப்பின் முதல் மூன்று நாட்களை (1:1-13) 24 மணி நேரத்தைக் கொண்ட நாட்கள் அல்லாததாக எடுத்துக் கொள்ளக்கூடும் என்ற பயத்தால்தான்.8 படைப்பின் நாட்கள் பல நூறு கோடி வருடங்களுக்கு நீண்டுள்ளது என்று வாதிடும் பரிணாம வளர்ச்சிக்காரர்களுக்கு மடையைத் திறந்துவிட்ட சிந்தனையை உண்டு பண்ணும். நாம் அறிந்திருக்கிற பிரகாரம் உலகத்திற்கு வழங்கும்படிக்கு, இயற்கை தெரிந்தெடுப்பதுடன், குருட்டுத்தன சக்தி வேலை செய்யும்படிக்கு போதிய நேரத்தை இது வழங்குகிறது. ஆயினும், பரிணாம் கொள்கையை பல நூறு கோடி ஆண்டுகளுக்குள் மறைக்கும்படிக்கு, 3om-ஐ மொழிபெயர்க்க போதிய காலம் கொடுத்தல் என்பது, முன் நிர்ணயத்துடன் மொழிபெயர்த்த ஒரு சிருஷ்டிப்புக் கதையை பலவந்தமாக படித்ததும், மற்றும் அது அதற்கு வேற்றுமையாயிருக்கிறது.
இதற்கு தீர்வு என்பது "வாக்கியம் தானே பேசட்டும் என்பது தான்" வாக்கிய அமைப்புப்படி yom என்ற பதம் அர்த்தப்படுத்தப்பட வேண்டும். 2:4-ல் சிருஷ்டிப்பின் ஆறு நாட்களின் காலக் கட்டத்தையும் சேர்த்தே இது குறிப்பிடுகிறது. இந்த புரிந்துகொள்ளுதல் இந்த வாக்கியத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கை நுழைவதற்கான எந்த முகாந்திரத்திற்கும் வழியை வழங்குவதற்கு எந்த விதத்திலும் வழியே இல்லை. சிருஷ்டிப்பின் செயல்முறை போக்கில், தேவன் வார்த்தையை உச்சரித்த உடனே உலகம் தோன்றியது என்பதை எழுத்தாளர் உறுதிப்படுத்துகிறார். பின்பு அவர் தொடர்ந்து வார்த்தையை உச்சரிக்கையில், சமுத்திரங்கள், ஆகாயங்கள், மற்றும் பூமி ஜீவராசிகளால் நிறைந்தன, உச்சகட்டமாக மனிதனின் சிருஷ்டிப்பு இருந்தது. இந்த எல்லாவித உயிரினங்களுடன் கூடிய அற்புதமான உலகத்தை உருவாக்கும்படிக்கு, எதிர்பாராத சாராம்சத்தின் சேர்ப்பு, தவறுகள், மரபுமாற்றங்கள், விபத்தான முன்னேற்றம், சோதனையின் செயல் போக்கின் மூலம் சிருஷ்டிப்பின் செயல் செய்ய தேவனுக்கு பல நூறு கோடி ஆண்டுகள் அவசியப்படவில்லை. எபிரெயர் எழுத்தாளரின் வார்த்தைகளில், "விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள்
தோன்றப்படுகிறவைகளால் உண்டாக வில்லையென்றும் அறிந்திருக்கிறோம்" (எபி. 11:3; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது).
ஏதேன் தோட்டமும் மனிதனும் (2:5-7)
வில்லையென்றும் சேர்க்கப்பட்டது).
5நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின் மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின் மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. ®அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. 7தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
வசனம் 5. விசேஷவிதமாக, மனிதன் உருவாக்கப்பட்டபோது பூமியில் எந்த ஒரு தாவரங்களும், மற்றும் செடிகளும் தோன்றவில்லை என்ற யோசனையுடன், ஆதிகாரம் 1-ல் கொடுக்கப்பட்டுள்ளதிலிருந்து வித்தியாசமான (எதிரிடையான) சிருஷ்டிப்பின் தொகுப்பை வேறொரு எழுத்தாளரால் வழங்கப்பட்டுள்ளது என்று உரிமை பாராட்டப்படுகிறது. அதற்கு எதிர்விதமாக. மூன்று மற்றும் ஆறாம் நாட்களில் நிகழ்ந்தவற்றின் மேலும் அதிகமான தொகுப்பைக் கொடுக்கும்படிக்கு ஆதியாகமத்தின் எழுத்தாளர் பின்னிட்டார். ஆறாம் நாளில் தேவன் மனிதனை சிருஷ்டிக்கும் முன்பு (1:26-28), 1:11, 12-ன்படி மூன்றாம் நாளில் எல்லாவித கனிதரும் மரங்களையும் மற்றும் தாவரங்களையும் தேவன் சிருஷ்டித்தார். பின்பு 1:29 மனிதன் வாழ்வதற்காக எல்லாவித கனிதரும் மரங்கள் மற்றும் செடிகளை தேவன் அவனுக்குக் கொடுத்தார். என்று கூறுகிறது மற்றும் இது மனிதனை சிருஷ்டிக்கும் முன்பே உணவு வழங்கும் தாவரங்கள் முளைத்து கனிகொடுக்கத் துவங்கிவிட்டதை நாம் இயல்பாக கணிக்க முடிகிறது.
வசனம் 5-ல் படிப்பவர்களை கொஞ்சம் பின் கொண்டு செல்ல அதாவது மூன்றாம் நாளுக்கு முந்தைய காலமாகிய "பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது"9 (அல்லது பயனற்றதும், வெறுமையும் 10"; 1:2) என்ற காலத்துக்கு கொண்டுசெல்ல எழுத்தாளர் முற்பட்டார் என்று சிலர் கருதுதுகின்றனர். அது அப்படி இல்லையென்றாலும்கூட, மூன்றாம் நாளில் வெட்டாந்தரை தோன்றிய போது, பூமியில் இன்னமும் புதர்கள் இல்லாத நேரமும், மற்றும் தலை வாழ் செடி கொடிகள் இன்னமும் முளைக்காத குறிப்பிட்ட காலம் இருந்தது.
இங்கு இரண்டு விதமான செடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாவது வனாந்திர காட்டிலுள்ள புதர் (nu, siach) இது இங்கும் மற்றும் பழைய ஏற்பாட்டில் வேறு இரண்டு இடத்தில் மட்டுமே வந்துள்ளது. ஆதியாகமம் 21:15-ல் வனாந்திரத்திலுள்ள புதர் சியாக் -ஐ குறிக்கிறது. அங்கே ஆகார் தண்ணீரும் உணவும் இல்லாததால், தூதன் வந்து உணவும் தண்ணீரும் கொடுக்கும் வரை தன் குழந்தை இஸ்மவேலை விட்டு தூரமாய் சென்றுவிட்டாள். இறுதியாக இடம் பெற்றிருப்பது, வனாந்திரத்திலுள்ள புதருக்குள் (Siach) அனுப்பப்பட்ட மூடருடன் பஞ்சத்திலும், தேவையிலும் வெட்டாந்தரையில் கிடந்து கொண்டு வருத்தத்தில் உதவிக்காக கதறுதலுடன் தன் நிலையை ஒப்பிடும் யோபுவில் வருகிறது (யோபு 30:4, 7).
மற்ற செடிக்கான பதம் என்பது (209, 'eseb), இது சாப்பிடக் கூடியதா இல்லையா என்பதில் தான் இதன் வித்தியாசம் இருக்கிறது. Eseb என்பது சாப்பிடக்கூடிய மூலிகை செடிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது (2:5; KJV; NRSV) செடிகளுடன் தொடர்புடையவை கீரைகள், காய்கறிகள், மற்றும் புல்கள், அவைகள் மேல் விலங்குகள் மேய்ந்தன. 11 மனிதனுடைய சிருஷ்டிப்பிற்கு முன்பு தோன்றிராத தாவரவகைகளுக்கு விவசாயம் தேவையாயிருந்தது என்பதை மறைமுகமாக இது சுட்டிக்காட்டும். இந்த சூழ்நிலைக்கு எழுத்தாளர் கொடுத்த இரண்டு காரணங்கள்: தேவனாகிய கர்த்தர் பூமியின் மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை, நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. இந்தக் கூற்று, பூமியின் மேல் மழை இல்லாதிருந்ததைப் பற்றியதானது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏதேன் தோட்டம் அமைந்துள்ள தெற்கு மெசெபெத்தோமியா பகுதியை மாத்திரம் இது குறித்தால் ஒழிய ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த இடம் மழை பெறுவதில்லை.12
வசனம் 6. மழைக்குப் பதிலாக, பூமியிலிருந்து மூடுபனி (Tx, ed) எழும்பி, பூமியெல்லாம் நனைத்தது என்று வசனம் 6 சொல்கிறது, ஆதியாகமம் 2:6 மற்றும் யோபு 36:27 பழைய ஏற்பாட்டில் இந்த இரண்டு வசனங்கள் மட்டும் தான் இந்தப்பதத்தை பயன்படுத்துகிறது, இரு இடங்களிலும் NASB "பனி" யைக் (நீர்த்துளிகள்) குறிக்கிறது. சில பதிப்புகளில் பக்கவாட்டுக் குறிப்புகளில், சாத்தியப்படக்கூடிய அர்த்தங்களாக "பொழிவு" மற்றும் "பிரவாகம்" என்று கொடுக்கப்பட்டுள்ளது. எபிரெய வார்த்தை 'ed என்பது அக்காடியன் பதம் ediu என்பதிலிருந்து வந்தது, காலம் குறிப்பிடாத பண்டைய பாபிலோனிய ஐபிராத்து நதியின் வருடாந்திர வெள்ளத்தை இது குறிக்கிறது, 13 ஆகையால், NIV "நீரோடை" யைக் குறிக்கிறது (பார்க்க; NRSV). "வெள்ளம்" அல்லது "நீரோடை" போன்றவை டைகரிஸ், மற்றும் ஐபிராத்து நதிகளிலிருந்து மட்டும் வந்தது அல்ல, ஆனால் பூமிக்கடியில் ஊற்றுக்கள் கொப்பளித்து வந்து பூமிக்கு தண்ணீர் கொடுத்திருக்கும். விளக்கம் எவ்வாறாக இருந்தாலும் சரி. வெட்டாந்தரையில் தாவரங்களின் பற்றாக்குறைக்கு, மனிதன் இல்லாமையே காரணம் ஆகும்; அவனில்லாமல் நீர் பாய்ச்சி விளைவிப்பது என்பது குறைவான விளைச்சலையே கொடுத்திருக்கும்.
வசனம் 7. இந்த இடத்தில், வெளிப்படுத்தப்பட்ட எழுத்தாளர் மனிதனின் சிருஷ்டிப்பு தொகுப்பை இன்னும் அதிக விளக்கத்துடன் வழங்குகிறார், தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். "உருவாக்கி" (7s, yatsar) என்ற பதம் பழைய ஏற்பாட்டில் அநேக இடங்களில் காணப்படுகிறது. படைப்பிற்கு ஒத்த தன்மையை கூர்மையால் விவரிக்க மிகவும் ஏற்ற ஒன்றாகும் ஏனெனில் பின்வரும் பகுதியில் ஒரு குயவன் களிமண்ணினால் பாத்திரத்தை வடிவமைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது (எரே. 18:1-6). இந்தக் குயவன் தெய்வீr சிருஷ்டிகராகிய, யாவே என்பவருடன் ஒப்பிடப்படுகிறார், குயவன் களிமண்ணினால் உருவாக்குதல் என்பது கர்த்தரின் மனித சிருஷ்டிப்புடன் ஒப்பிடப்படுகிறது (அல்லது பின்பு இஸ்ரவேலை வடிவமைப்பது) 14 தெய்வீக குயவராகிய தேவன், தமது சொந்த ரூபத்தில் ஒரு சிருஷ்டியை வடிவமைக்க மிகவும் திறமையோடும் மற்றும் மிகவும் நெருங்கிய ஈடுபாடுடன் மனிதனை உருவாக்கினார் என்பதை இது சித்தரிக்கிறது.
தேவனாகிய கர்த்தர் "மனுஷனை" ப் (€78, adam) பூமியின் (TCT8. "damah) "மண்ணி” னாலே உருவாக்கி என்று சொல்லும் போது எபிரெய வாக்கியத்தில் வார்த்தை விளையாட்டு நிகழ்ந்துள்ளது. மனிதன் தேவனுடன் மட்டும் நெருங்கிய தொடர்பு கொண்டவன் அல்ல, மாறாக மண்ணுடனும் அவனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை இந்த வாக்கியம் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் 3-ல் உள்ளதைப் போலவே உ "மண்" (hpy, 'apar) என்ற வார்த்தை "பூமி" என்ற வார்த்தையுடன் ஒரு பொருள் கொண்ட பல சொல் என்பதாக இந்த வாக்கியத்தில் உள்ளது. 3:17ல் மனிதனின் பாவத்தினால் பூமியின் மேல் சாபம் வரும் போது, அவன் தப்பிக்க முடியவில்லை, மாறாக, தேவன் அவனை உருவாக்கிய, மண்ணிற்கே அவன் திரும்ப வேண்டும். "... நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" என்று தேவன் முடிக்கிறார் (3:19).
ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், என்று 2:7 சொல்லுகையில், தேவன் உருவாக்கிய, மண்ணின் துண்டைவிட மனிதன் மேலானவன் என்பதை இது முக்கியத்துவப்படுத்துகிறது. மனிதன் என்பவன் மின்னணு துடிப்புகள், சுரப்பிகள், இரசாயனங்கள் ஆகியவைகளின் எதிர்பாராத கலவை என்பதைவிட மிகவும் மேலானவன். தேவன் ஒருவரால் மட்டுமே அளிக்கக் கூடிய ஜீவனின் பரிசை தனக்குள் அவன் கொண்டுள்ளான். மனிதனின் "நாசியில்" "ஊதப்பட்ட" தெய்வீக ஆத்துமா என்பது "ஜீவாத்துமா [v2, n'shamah]" வாக அடையாளப்படுத்தப்படுகிறது. மற்றும் பாபிலோன் சிறைபிடிப்பின் போது எசேக்கியேலின் பிரசங்கம் இதற்கு நெருங்கிய இணையாகக் காணப்படுகிறது (எசே. 37:1-10). ஆதியாகமம் 2:7-ல் (nt shamah) பயன்படுத்தப்பட்டதை விட தீர்க்கதரிசி ஆத்துமா ( ruach, ருவாக்) என்பதற்கு பயன்படுத்திய வார்த்தை உண்மையாகவே வேறுபட்டது, என்றாலும் எண்ணற்ற பகுதிகளில் இவை இரண்டும் மாறிமாறி பயன்படுத்தப்பட்டது ஆதாரப்பூர்வமானது: "ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவி [ruach] யுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே [nshamah] அவர்களை உணவுள்ளவர்களாக்கும்" (யோபு 32:8; பார்க்கவும் ஆதியாகமம் 7:22; யோபு 27:3; 33:4; 34:14; ஏசாயா 57:16).
சிறைபிடிக்கப்பட்டவர்களில் நம்பிக்கை இல்லாத இஸ்ரவேல் மக்களிடம் பேசும்படிக்கு தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் தேவன் சொன்னார். அவர் அவர்களிடம் சொல்ல வேண்டியதாவது, "உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்" (எசே. 37:4). பின்பு பேசப்பட்ட வார்த்தை மூலம், கர்த்தர் "நான் உங்களுக்குள் ஆவியைப் [ruach] பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்" (எசே. 37:5) என்று கர்த்தர் உறுதிப்படுத்தினார். தீர்க்கதரிசியைப் பார்த்து தேவன் "நீ ஆவியை (ruach] நோக்கித் தீர்க்கதரிசனம் உரை ஆவியை [ruch] நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், 'ஆவியே கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது, என்று சொல் என்றார்" (எசே. 37:9). தேவன் நடத்தியது போல் எசேக்கியேல் செய்தான். அப்பொழுது ஆவி (ruach] அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, நின்றார்கள்" (எசே.37:10).
இந்தத் தொகுப்பில், இஸ்ரவேலின் கல்லறையாக பாபிலோன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்கள் உலர்ந்த உயிரற்றவர்களாய் எவ்வித நம்பிக்கையுமற்றவர்களாய் வறண்ட பள்ளத்தாக்கில் கிடக்கின்ற பிணங்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். எசேக்கியேல் அவர்களுக்கு நம்பிக்கையின் வார்த்தையைப் பேசினார், அது ஆவிக்குரிய உயிர்த்தெழுதலையும், மற்றும் சிறைபிடிக்கப்பட்ட தேசத்திற்கு திரும்பச் செல்வது சம்பந்தப்பட்டதாய் இருந்தது. அவர்கள் அந்த செய்தியை பெற்றுக்கொள்கையில், தேவனுடைய ஆவி (ruach) அவர்களுக்குள் நுழைந்தது, அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். எசேக்கியேல் 37:1-10-க்கும் ஆதியாகமம் 2:7-க்கும் இடையேயான இணை தெளிவானது. மேலேயுள்ள பக்கங்களில் "சுவாசம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள ruach என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து, ஆவி அல்லது காற்று என்றும் அர்த்தப்படுகிறது என்று புரிந்து கொள்ளப்படும்போது அது வலுவடைகிறது. சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலின் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலைக் குறித்த இந்தப் பகுதியின் முடிவுக்கு தேவனுடைய ஆவிக்கு (சுவாசம்) சம்மந்தமானதும் மற்றும் அவருடைய பேசப்பட்ட வார்த்தையும் ஆதாரமாயிருக்கிறது.
"என் ஆவியை [ruach, சுவாசம்] உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள், நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள், இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார்..."(எசே. 37:14; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது).
ஆதியாகமத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் தேவனுடைய பேசப்பட்ட வார்த்தைக்கும் ஆவிக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பும் மிகவும் தெளிவாக இருக்கிறது. 1:1-3-ல் ஆழத்தின் (ஜலம்) மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் (ruach, சுவாசம் அல்லது காற்று) ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் பேசிய போது, உயிரற்றதும், உருவமில்லாததும் வடிவம் பெற துவங்கின. அவர் தொடர்ந்து பேசுகையில், உயிர்கள் பலுகிப்பெருக ஆரம்பித்தன. இறுதியாக, சிருஷ்டிப்பின் உச்சமாக தேவன் மீண்டும் பேசி உரைத்தது, நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" (1:26). இதை நாம் 2:7 உடன் தொடர்புபடுத்துவோமானால், பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையானது (1:26) மனுஷன் ஜீவாத்துமாவாதற்காக மனுஷனின் நாசியில் ஊதின தேவனுடைய சுவாசத்தை (nshamah) உட்படுத்துகிறது. "ஊதினதின்" நெருக்கம் என்பது தனிப்பட்டது ஆகும், முகத்துடன் முகம் நெருங்கிய முத்தம் மற்றும் இது ஒரு கொடுத்தல், அதே நேரத்தில் உருவாக்குதல், அங்கே தன்னையே கொடுத்தலின் செயல்.15 அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அப்போஸ்தலர்களுக்குத் தோன்றியபோது இது இயேசுவால் கையாளப்பட்ட ஒரு செயலாகும். யோவான் 20:22 சொல்கிறது, "அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்." உயிர்த்த கர்த்தரின் சுவாசம் (ஆவி), புதுவாழ்வையும்,நம்பிக்கையையும் புதிய சமுதாயத்தின் (புதிய சிருஷ்டி) கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரம்-மையக்கரு ஆகப்போகிற சீஷர்களுக்குப் பகிர்ந்தளித்தது.
2:7 - லுள்ள சொல்லான, மனிதன் ஜீவனுள்ளவனானான் (70 Up), nepesh chayah) என்பதை உறுதி செய்தலானது மனிதன் ஜீவ ஆத்துமாவானான் என்ற மொழிபெயர்ப்பினால், அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கூற்றானது மனிதனின் அழிவற்ற அங்கமாகும், அது மரித்த பின்பும் வாழ்கிற அவனுடைய அழிவில்லாத பகுதியைச் சேர்ந்ததாகும், இது மற்றும் அது மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் nepesh chayyah என்பது மனிதனுக்கு மாத்திரமே உரிய ஒன்றல்ல என்பதே ஒரு பிரச்சனை. 1:20, 21-ல் மீனுக்கும் மற்ற எல்லா கடல் சிருஷ்டிப்புகளுக்கும், 1:24-ல் வெட்டாந்தரை விலங்குகள், 1:30-ல் அதேபோன்று மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் இது பயன்படுத்தப் பட்டுள்ளது. விலங்குகளுக்கு மாறுபட்டவனாக, மனிதன் அழிவில்லாத அங்கமாகிய "ஆத்துமாவை”16 கொண்டிருக்கிறான் என்று இந்தப் பகுதி சொல்லவில்லை. இது போன்ற போதனைகள் கிறிஸ்துவின் பூரணமான வெளிப்பாடுகளுக்குக் காத்திருந்தன. அவர் "ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்க மாக்கினார்" (2 தீமோ.1:10). அவர் தமது சீஷர்களுக்கு பிரத்தியேகமாக அறிவுறித்தியது என்னவென்றால் ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்" (மத். 10:28) ஆதியாகமம் 2:7 ஆத்துமாவின் அழியாமையைக் குறித்த பாடம் இல்லையென்றாலும்கூட நிச்சயமாக புத்தகம் அதையே போதிக்கிறது. மனிதனும் விலங்குகளும் "உயிருள்ள ஜீவன்கள்," மனிதன் மாத்திரமே தேவனுடைய முகத்தோடுமுகம் அவரோடு தொடர்புடைய ஒரே சிருஷ்டிப்பு ஏனெனில் மனிதன் மட்டுமே தேவனுடைய ரூபத்தில் உருவாக்கப்பட்டவன் (1:26,27).
தோட்டத்தில் மனிதனுடைய வாழ்க்கை (2:8-17)
அதிகாரம் 2 ஏதேன் தோட்டத்தின் விளக்கங்களோடு தொடர்கிறது. பூமியில் மனிதனுடைய முதல் வீட்டில் தேவையான எல்லாவற்றையும் தேவன் உருவாக்கினார் என்பதை முக்கியத்துவப்படுத்தும்படிக்கு, தோட்டத்தையும் அதேவேளையில் தண்ணீர் பாய்ச்சப்பட்ட, தாவரங் களுடன் செடி வகைகள் மற்றும் எல்லாவித மரங்களையும் எழுத்தாளர் விவரிக்கிறார்.
ஏதேன் தோட்டம் (2:8, 9)
8தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். 9தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
வசனம் 8. 2:7-60 விவாதிக்கப்பட்டது என்னவென்றால் தாவரங்களின் சிருஷ்டிப்புக்கு முன் மனிதனின் சிருஷ்டிப்பு இருந்தது, மற்றும் இந்த வாக்கியம் அதிகாரம் 1-லுள்ள சி ருஷ்டிப்பின் தொகுப்பிற்கு வேறுபாடாயிருக்கிறது. கூறப்பட்டுள்ள வரிசைக்கிரமமானது முந்திய அதிகாரத்திற்கு மாறுபட்டதாயிருப்பது உண்மையாக இருந்தாலும் 2:8,9 பூமியின்மேல் உள்ள முதல் தாவரங்களில் சிருஷ்டிப்பைக் குறிப்பதில்லை. மாறாக, இந்த வசனங்கள் மனிதனின் முதல் பூலோக வீட்டிற்கான இடத்தை ஆயத்தப்படுத்தும் தேவனின் விசேஷத்தைக் குறித்துப் பேசுகிறது. மண்ணிலிருந்து மனிதனை வடிவமைத்த ஒரு குயவன் போல் (2:7), மனிதனின் சிருஷ்டிப்புத் தேவன் தெளிவாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார், ஆகவே பூமியில் மனிதனுக்கு வீட்டை வழங்குவதில் மிகவும் அக்கரையுள்ளவர் ஒரு தோட்டத்தை நாட்டும் வல்லவராக விவரிக்கப்பட்டுள்ளார். ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அவர் நிறுவினபோது, மனிதனுக்காக பரிபூரணமான சுற்றுச்சூழலை வழங்கினார்.
"தோட்டம்" என்பதற்கான எபிரெய பதம் ( gan) என்பது சுற்றுச்சுவர் அல்லது வேலி உடன் சூழப்பட்ட விவசாயத்திற்கான ஒரு இடத்தைச் சுட்டிகாட்டுகிறது. இது பூக்கள், கனிகள், காய்கறிகள் என பல்வேறு வகைகள் வளரக்கூடிய இடமாக இருந்தது. 17 உண்மை என்னவென்றால் தேவன் இந்தத் தோட்டத்தை "கிழக்கு (ல்'; NIV; NRSV) நோக்கி" நாட்டினார் என்பது உண்மையாக படிப்பவரின் கோணத்தில், அது இஸ்ரவேல் தேசத்தின் கிழக்குப் பகுதியாகும். "ஏதேனில்" என்று கூறப்படுவதானது தேவன் தோட்டம் அமைத்த உண்மையான இடம் "எதேன்" என்று அழைக்கப்படுகிறது, அது மகா மெசெபெத்தோமிய பள்ளத்தாக்கில் உள்ளது.
துவக்கத்தில் கிழக்கத்திய படிப்புகளில் ஏதேன் (ITE, 'eden) என்ற எபிரேய வார்த்தை, "சமவெளி" அல்லது "தரிசுநிலம்" என்று அர்த்தம் கொள்ளும் சுமேரிய வார்த்தையிலிருந்து வந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆயினும், அண்மை காலத்திய செய்திக்கு குறிப்புகள் *செழிப்பு, மிகுதி, பெரும் மகிழ்ச்சி அல்லது மனதிற்கினியதுடன்" சம்பந்தப்பட்ட ஒரு மேற்கத்திய கலைப்படைப்பைச் சுட்டிக் காட்டுகின்றன.18 "சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி" என்று அர்த்தம் கொண்ட (11y, 'adan) என்ற எபிரேய மூலவார்த்தையுடன் LXX மொழிபெயர்ப்பாளர்கள் இணைத்தனர். முதல் மனிதன் வைக்கப்பட்ட இடமான ஏதேன் என்பது "மகிழ்ச்சியின் தோட்டம்" என்று புரிந்துகொள்ளப்பட்டது. தோட்டம் என்ற எபிரெய பதத்திற்கான இணையான கிரேக்கப் பதம் (mpdöcıco;, paradeisas) என்பதாகும். உச்சகட்டமாக அது ஆதியாகமத்திலுள்ள ஏதேன் தோட்டத்தை அப்படியே புதிய ஏற்பாட்டிலுள்ள பரலோக பரதீசுடன் சங்கேத இணைப்பிற்குள் நடத்தியது (லூக். 23:43; 2 கொரி. 12:4; வெளி. 2:7). 19
வசனம் 9. தோட்டத்தில் எல்லா வகையான மரங்களும் வளரச் செய்தது மூலம் மனிதனுக்கான எல்லா தேவைகளையும் போதிய அளவிற்கு தேவன் உண்டுபண்ணினார். பெரும்பான்மையானவை பார்ப்பதற்கு அழகானதும், சாப்பிடக் கூடியதுமாயிருந்தன, ஆனால் அவர் தோட்டத்தின் நடுவிலுள்ள இரண்டு மரங்களைக் குறித்து விசேஷமாக குறிப்பிட்டிருந்தார்; ஜீவவிருட்சம் (மரம்) மற்றும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் (மரம்). இரண்டாவதாக கூறப்பட்டுள்ள மரம் 3:3-லும் தோட்டத்தின் நடுவிலுள்ள
மரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மரம் "ஜீவவிருட்சம் (மரம்)" என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது, ஆதியாகமம் 2:9, மற்றும் 3:22, 24-ல் மட்டும் இது காணப்படுகிறது. அது ஒரு உண்மையான மரம், அதிலிருந்து மனிதன் கனிகளைப் பிடுங்கலாம் (3:22), என்றாலும்கூட, தேவனிடமிருந்து மாத்திரமே வரக்கூடிய ஒருபோதும் முடிவடையாத வாழ்வை இது காண்பிக்கிறதாகத் தோன்றுகிறது. ஆகையால், மனுஷனும், மனுஷியும் பாவம் செய்த போது, அவருக்கு எதிராளிகளாக வாழ்கிறபடியால், அவர்களுடைய சிருஷ்டிகரிடமிருந்து நித்திய ஜீவனை அனுபவிக்க முடியாமல் போனபடியால் அவர்கள் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் (3:24).
"ஜீவவிருட்சம் (மரம்)" என்ற வாக்கியம் நீதிமொழிகளில் எண்ணற்ற இடங்களில் காணப்படுகின்றன (நீதி. 3:18; 11:30; 13:12; 15:4); ஆனால் இந்த எல்லாப் பகுதிகளிலும், ஞானம், நீதியான வாழ்க்கை, நம்பிக்கை நிரப்பப்படுதல், மற்றும் தன் நாவினால் குணமாக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒருவரை இது பிரதி நிதித்துவப்படுத்துகிறது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால், ஒரு "ஜீவவிருட்சம் (மரம்)" என்பது உண்மையான "ஞானத்தோடு" "கர்த்தருக்குப் பயப்படுதலை" செயல்படுத்துகிறவனின் தனிப்பட்ட வாழ்வில் தேவனுடைய வாழ்க்கை ஒரு சங்கேதமாகக் காணப்படுகிறது (நீதி. 3:18; 9:10), "ஜீவவிருட்சத்தின் கனி" (ஞானம்) என்பது "நீதியின்" வாழ்க்கையில் செயல்படுத்தப்படுகிறது (நீதி. 11:30), அதாவது, அது சாந்தப்படுத்துதல், உயர்த்துதல், ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றுதல் (நம்பிக்கை) போன்ற வார்த்தைகள் மூலம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியும் (நீதி. 13:12; 15:4). புதிய ஏற்பாட்டில் "ஜீவவிருட்சம் (மரம்)" செழிப்பான வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறது (ஏதேன் தோற்றம்). அதாவது மீட்கப்பட்டவர்களுக்கு பரலோகத்தில் நித்தியத்திற்கும் தேவன் வழங்குவார் (வெளி. 2:7; 22:2, 14, 19).
"நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் (மரம்)" என்று இரண்டாவது மரம் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் அர்த்தம் என்ன? அநேக விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. முதல் ஜோடி பெற்ற ஞானம், பாலியல் ரீதியானது, காரணம் தடைசெய்யப்பட்ட கனியை சாப்பிட்டதன் விளைவாக, "அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து" (3:7) கொண்டனர் என்று ஒரு கண்ணோட்டம் கூறுகிறது. மனுஷனும் மனுஷியும் பாவம் செய்யும் முன்பு வெட்கப்படாத நிர்வாணிகளாயிருந்தனர்; அவர்களுடைய அத்துமீறலுக்கு பின்பு, அவர்கள் வெட்கப்பட்டனர். நன்மைதீமை அறியத்தக்க என்பது பாலியல் வேறுபாடுகளில் அவர்கள் கவனமுள்ளவர்களாயினர் என்று அர்த்தம் கொள்வதாக சிலருக்கு சுட்டிக்காட்டுவதாக காணப்படுகிறது. 20 ஆயினும், குறிப்பிட்ட உண்மைகள் ஒப்புக்கொள்ளத்தகாத
பார்வையை உருவாக்குகிறது. முதலாவதாக, பாலியல் விழிப்புணர்வின் ஞானத்தை ஆதாமும் ஏவாளும் பெற்றுள்ளனர் என்ற நிலையான பார்வையைக் கொண்டிருக்கும்படிக்கு, ஒருவர் பாலியல் குறித்து தேவன் மேல் குற்றம் சுமத்த வேண்டும். ஆதாம் பாவம் செய்த பின்பு "தேவனாகிய கர்த்தர்: இதோ மனுஷன் நன்மைதீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்" (3:22; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). பண்டைய கால உலகில் அவர்களுடைய அந்நிய தெய்வங்கள் பாலியல் செயல்களில் ஈடுபட்டன. மற்றும் தவறான வளங்கள் அந்நிய தெய்வங்களின் புண்ணிய ஸ்தலத்தில் தேவதாசிகளுடன் பாலுறவில் வணங்கி ஈடுபடுத்துகின்றன என்று பண்டையகால உலகம் பொதுவாக நம்புகிறது. இருந்த போதிலும், "தேவனாகிய கர்த்தர்" மனிதனைப் போன்று பாலியல் இயல்பை வெளிப்படுத்தக்கூடிய சரீரம் உடையவர் என்ற மொழிப்பெயர்ப்பானது அருவருப்பானதாகும்.21 இம்மாதிரியான எண்ணம் வேதாகமத்தில் முற்றிலும் இல்லை, தேவன் மற்றும் மனிதன் இருவரையும் தரம் தாழ்த்துவதாக இது உள்ளது.
இரண்டாவதாக, "நன்மைதீமை அறியத்தக்க அறிவு என்பது பாலியலைக் குறிக்கிறது என்று இந்த வாக்கியம் கருதினால், பாலியல் உயிரினமாக அவர் சிருஷ்டித்திருந்தால், பின்பு என் ஆணும் பெண்ணும் பாலியலில் ஈடுபட தேவன் தடைசெய்தார்? ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பு, "பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்" என்பதே தெய்வீக கட்டளையாகும் (1:28). இது பாலியல் அறிவு குறித்து உணர்த்துகிறது, என்னவென்றால், "இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (2:24), இது மனிதனை கண்டிக்கிறதாயிருக்கிறது. தடை செய்யப்பட்ட கனியை சாப்பிடுவதற்கு முன் ஆதாமும் ஏவாளும் பாலியல் உறவு கொண்டிருந்தார்கள் என்பதற்கு இவைகளெல்லாம் சாத்தியக் கூறுகளாக இருக்கின்றன. ஏனெனில் இதைத்தான் தேவன் கட்டளையிட்டிருந்தார்.22 இது நிச்சயமாக அவர் தடைசெய்திருந்தது அல்ல.
2.இந்த வாக்கியத்தின் வேறொரு பார்வை, "நன்மைதீமை அறியத்தக்க அறிவு," என்பது நிஜமாகவே சர்வ ஞானம் கொண்ட தேவனைப் போன்று அதிக அறிவை மனிதனும் மனுஷியும் கொண்டுள்ளனர் என்று அர்த்தம் கொள்கிறது. சர்ப்பத்தின் சோதனையான, “... நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் ..." (3:5) என்பது, பெரும்பான்மையாக மேலோங்கியுள்ளது போல் உள்ளது. அப்சலோமிடமிருந்து பிரிந்து போன தாவீதின் கதையில் இதுபோன்றதொரு விளக்கம் காணப்படுகிறது, தெக்கோவா தேசத்து பெண்ணை யோவாப் இராஜாவிடம் அனுப்பி, தன் சகோதரனை கொலை செய்திருந்தாலும்கூட, தன் மகன் எருசலேமிற்கு திரும்ப வர வேண்டும் என்று இராஜாவிடம் கெஞ்சுகிறான். விவேகமான பெண் தாவீதைப் புகழ்ந்து, நீங்கள் நன்மையையும் தீமையையும் கண்டறிவதில் திறமையான, தேவனுடைய தூதனைப் போன்று இருக்கிறீர்கள் என்று கூறினாள், அநேக வசனங்களுக்கு பின்பு, "தேசத்திலே நடக்கிறதை யெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப் போல் இருக்கிறது" என்றாள் (2 சாமு. 14:17, 20).
குறைந்தது இரண்டு காரணங்களுக்காக இந்த விவாதம் இன்னமும் தோற்கிறது. முதலாவது. பூமியைக் குறித்து எல்லா அறிவையும் அவன் கொண்டிருக்காத நிலையில், தாவீதின் அறிவைக் குறித்து தெக்கோவா பெண் அளவுக்கு அதிகமாக உயர்த்தி கூறியது தெளிவாகிறது. இரண்டாவதாக, வேதாகமத்தின்படி ஆதாமும், ஏவாளும் அகிலத்தின் அறிவை பெறவில்லை; உண்மையைக் கூற வேண்டுமென்றால், தேவன் சர்ப்பம், அல்லது வாழ்வைக் குறித்தே கூட, மிகவும் கொஞ்சமாகவே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு பாதியை மட்டும் அறிந்திருக்கிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுலினால் சொல்லக் கூடுமானால் (1 கொரி. 13:9), ஆதியிலுள்ள பூமியில் மனுக்குலத்தின் பயணம் குறித்து ஆதாம் மற்றும் ஏவாளைப் பற்றி எவ்வளவு அதிகம் சொல்லப்பட முடியும்!
3.நன்மை தீமையின் அறிவு குறித்த மூன்றாவது பார்வை என்பது நன்மை தீமையை பகுத்தறியக் கூடிய திறமையை எடுத்துக்காட்டுகிறது, அது இல்லாமல் ஒருவனுடைய செயல்களுக்கு அந்த தனிநபர் பொறுப்பு இல்லை. வனாந்திரத்தில், அவர்களுடைய கலகத்தின் காரணமாக, இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழைய முடியாது என்று தேவன் அவர்களிடம் சொன்னார், ஆனால் அவர்களுடைய "சிறுபிள்ளைகள்" "நன்மை தீமையின் அறிவு" இல்லாதவர்கள் (உபா. 1:39), ஒரு நாளில் அந்த நல்ல தேசத்திற்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொள்வார்கள். இஸ்ரவேலின் வரலாற்றின் பிற்பகுதியில் வயதான பர்சிலா என்பவர் மூலம் இதே போன்று ஒரு கூற்று உருவாக்கப்பட்டது. தனது ராஜரீக நீதிமன்றத்தில் அவனுக்கு ஆலோசகராகும்படி தாவீது இடமளித்த போது, "இல்லை" என்ற பதிலை எதிர்பார்த்து அவன் ஒரு கேள்வி கேட்டான்: "இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ?" (2 சாமு. 19:35). எண்பதாவது வயதில், நன்மைக்கும் கெட்டதற்கும் இடையேயான வேறுபிரிக்கும் புத்தியை இராஜாவுக்கு அளிப்பதற்கு தான் மிகவும் வயதானவன் என்று அவன் நினைத்தான். அவனுடைய மனதின் அமைப்பும் சரீர அமைப்பும் சீர் கெட்டிருந்தபடியால் அவன் இராஜாவின் அழைப்பை நிராகரித்தார்.23
ஆயினும், தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் சூழ்நிலைகள் மேலேயுள்ள உதாரணங்களுடன் பொருந்தக் கூடியவைகள் அல்ல. வனாந்திரத்தில் இஸ்ரவேலரின் கலகத்திற்கான பொறுப் பானவர்களில், கலகத்தில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும்சரி, கணக்குக் கொடுக்கும் வயதை அடையாத சிறு பிள்ளைகளை தேவன் பிடித்து வைக்கவில்லை. பர்சிலா விஷயத்தில், பிரச்சனைகளின் அழுத்தத்தின் மத்தியில் எழுந்து நின்று, இராஜாவுக்கு பலமான அறிவுரை கொடுக்கவும், மேலும் தெளிவான ஆலோசனை வழங்குவதும், வயதான ஒருவருக்கு மிகவும் கடினம் ஆகும். இந்த உதாரணங்களுக்கு மாறுபாடாக, நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து சாப்பிடுவதிலிருந்து தேவனுடைய தடையை புரிந்துகொள்ளுமளவிற்கு அவர்கள் மிகவும் சிறுவர்களுமல்ல, மிகவும் வயதானவர்களுமல்ல. தாங்கள் அதிலிருந்து சாப்பிட்டால், தாங்கள் மரித்து விடுவோம் என்ற எச்சரிக்கையை அவர்கள் புரிந்திருந்தனர், ஆகவே அவர்களுடைய கீழ்ப்படியாமைக்கு அவர்களே முழு பொறுப்பாவார்கள்.
நன்மைதீமை அறியத்தக்க மரத்தைக் குறித்து விசேஷமாக
உறுதியிட்டு கூற வேண்டுமென்றால், சர்ப்பத்தின் கூற்றாகிய, "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மைதீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் ..."(3:5) -என்பதை தொகுப்பில் சேர்க்க வேண்டும். சர்ப்பத்தின் கூற்றில் ஒரு ஆதாரப்பூர்வ சத்தியம் உள்ளது. வீழ்ச்சிக்குப் பின்பு, தேவன் கத்தினார், இதோ, மனுஷன் நன்மைதீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான் ..." (3:22). மனிதனின் சோதனை மற்றும் முதல் பாவம் என்ற வாக்கியத்தின் மையக்கருத்தில், மனிதன் தேவனைப் "போல்" ஆனான் என்பது, பாவம் மற்றும் தீமைபற்றிய மனிதனின் விழிப்புணர்வு என்ற அர்த்தத்தில் மாத்திரம் தான். "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்..." என்று ஞானி எழுதினார் (நீதி. 1:7). மனிதன் மெய்யான ஞானத்திலும் மற்றும் முழ வாழ்வையும் நடத்துவது என்பது அறிவில் சுய திருப்தியும் மற்றும் நிபுணத்துவமாயில்லாமல் தேவனில் விசுவாசமாயிருந்தால் மட்டுமே மனிதனின் உண்மையான தோற்றத்தை காட்டலாம், என்று இது பரிந்துரைக்கிறது.24
ஆதியாகமத்தின் தொகுப்பிற்கு நெருக்கமான இணையை எசேக்கியேல் 28:1-19 கொடுக்கிறது. உயர்வான உருவக மொழியில், தீரு இராஜா அவனுடைய இருதயம் பெருமையால் நிறைந்திருந்தால் தேவனுடைய தோட்டத்தை (ஏதேன்) விட்டு எவ்வாறு துரத்தப்பட்டார், என்பதை தீர்க்கதரிசி விவரிக்கிறார். தானியேலை விட அதிக ஞானம் தனக்கு இருப்பதாக அவன் நினைத்தான். தானே கடவுள் என்றான் (எசே. 28:1-6, 12-17). தீரு இராஜாவின் பெருமையும் அகங்காரமும், ஏதேன் தோட்டத்தில் மனிதனுடைய மனப்பான்மையைப் போன்று தேவனைவிட வேறு ஆதாரத்திலிருந்து ஞானத்தைப் பெற விரும்புவது, தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு அப்பாற்பட்டு சரி மற்றும் தவறை நிர்ணயித்தல், மற்றும் அறம் சார்ந்த சுய உரிமை மூலம் ஒருவன் தானே கடவுள் ஆகிறான். எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரும், காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவருமாகிய ஒரே தேவன் தான் மனித வாழ்க்கைக்கான உண்மையான நன்மை மற்றும் தீமை இன்னதென்று அறியும் திறன் கொண்டவர். இருந்த போதிலும், பலவீனமான மற்றும் வரையறைக்குட்பட்ட மனுக்குலத்திற்கு இந்த உரிமையை அபகரித்துக் கொள்ளும்படியான சோதனை எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
நான்கு ஆறுகள் (2:10-14)
10தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன்விளையும். 12அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. 13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
வசனம் 10.ஏதேனிலிருந்து பாய்ந்த ஒரு நதி மூலம் தோட்டமானது தண்ணீர் செழிப்பானது, இது ஒரு விஸ்தாரமான இடம், அது "ஏதேன்" என்று அழைக்கப்பட்டது (2:8-ன் விவர்ணத்தைக் காண்க). முழு தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி அது பாய்ந்தது, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று ஆறு என்பதற்கான எபிரெய வார்த்தை (nrux), ro 'shm) இது (ux7, ro'sh, "ரோஷ்") என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, இதனுடைய முதன்மை அர்த்தம் "தலைமை. *25 ஆயினும், இந்த வாக்கியங்களின் மையக்கருத்தில் இந்த பதத்தை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பது தெளிவாக இல்லை. "ஏதேனிலிருந்து பாய்கிற" ஆறு நான்கு "தலைமை தண்ணீர்களாக பிரிந்தது" என்று கூறுகிறது, ஆனால் NRSV மற்றும் NJPSV ஆகிய இரண்டும் ஏதேனில் இருந்த ஆறு "நான்கு கிளைகளாக பிரிந்தது" என்று நிலைப்படுத்துகிறது.
வசனம் 10-லுள்ள மொழியை புரிந்துகொள்வதில் கஷ்டம் இருப்பதை குறிக்கவும், 26 மனுக்குலத்தின் முதல் வீடாகவும், ஒரு ஏதேன் கற்பனை தேசமாக விவரித்த புராணக்கதையை எழுத்தாளர் கொடுத்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆயினும், "இதெக்கேல்" மற்றும் "ஐபிராத்து" ஆறுகள் பாயும் மொசெபெத்தோமியா மண்டலத்தில் ஏதேனை எழுத்தாளர் சுட்டிக் காட்டுவதனால், இந்தப் பார்வை உடனடியாக நிராகரிக்கப்படுகிறது (2:14).
மற்றவர்கள் அதன் மொழியை நேர் விளக்கமாக புரிந்துகொண்டனர், ஏதேன் தோட்டத்திற்கான இரண்டு இட அமைப்பின் சாத்தியக் கூறுகளை அடையாளம் கண்டுள்ளனர். ஒரு பக்கம். ro 'shum என்பது "தலைமைத் தண்ணீர்கள்" என்று அர்த்தம் கொண்டால், கிழக்குத் துருக்கி மலைகளை (வரலாற்றில் ஆர்மேனியா) சூழ்ந்த இடமாக இருக்கலாம், அங்கிருந்து தான் இதெக்கேல் மற்றும் ஐபிராத்து ஆறுகள் துவங்குகின்றன.27 மறுபக்கத்தில், ro 'shim என்பது "கிளைகள்" என்று அர்த்தம் கொண்டால், தோட்டம் தெற்கு ஈராக் அல்லது குவைத் சூழ்ந்த இடமாக இருக்கலாம், அதாவது சரியாக வடக்கு பெர்சிய வளைகுடா (அல்லது அதன் அடிவாரத்தில், காலப்போக்கில் தண்ணீர் மட்டம் உயரும் என்பதால்), பிந்தையப் பார்வையான, ஏதேன் தோட்டம் வளைகுடா அருகில் (அல்லது அடியில்) உள்ளது என்பதற்கான ஆதரவான அதிக ஆதாரம் காணப்படுகிறது.
வசனங்கள் 11, 12. ஆதியாகம வரலாற்றின் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் ஆற்றை, ஆதியாகமத்தில் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. அதன் பெயர் பைசோன், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் அவ்விடத்திலே பொன் விளையும். பிரச்சனை என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் "பைசோன்" இடம் பெறவில்லை, எபிரெயத்தில் இதனுடைய மூல வார்த்தையை பண்டிதர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதெக்கேல் மற்றும் ஐபிராத்து ஆறுகளுக்கு வெகு தொலைவில் இடம் பெற்றிருந்தாலும்கூட, இந்தியாவின் ஆறுகளான கங்கா அல்லது இந்து உடன் சிலர் அடையாளப்படுத்துகின்றனர். ஈரானிலுள்ள கரூன் ஆறு ஐபிராத்து ஆற்றுடன் சேர்ந்து பாய்கிறது, அல்லது அரேபியாவிலுள்ள ஒரு ஆறு,காரணம் ஆவிலா தேசம் மற்றும் அதன் பொன்னையும் குறிக்கிறது. தேசங்களின் பட்டியலில், ஆவிலா என்ற பெயர் ஒரு இனத்தைக் குறிக்கிறது அவர்கள் இறுதியாக ஆப்பிரிக்கா (10:6, 7) மற்றும் அரேபியா மண்டலங்களில் குடியமர்ந்திருந்தனர் (10:29; பார்க்கவும் 25:18).
ஆவிலா உடன் பொன், பிதோலாகும் கோமேதகக் கல்லும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள போதும், இவைகள் அனைத்தும் சவுதி அரேபியாவிலுள்ள செங்கடல் பகுதியில் காணப்படுகின்றன, அது ஒருவேளை அரேபியாவிலுள்ள ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டலாம். இன்றைக்கு அரேபியாவில் மிகவும் செல்வம் சிறந்த சுரங்கங்களில் ஒன்று, மதினா அருகிலுள்ள மாத்-அத்-தகாப் என்பது "தங்கத்தின் தொட்டில்" என பொருள்படும் இடத்தில் அமைந்துள்ளது, இந்தப் பகுதி பண்டைய காலத்தில் பரவலாக சுரங்கமாக இருந்தது. பைசோன் ஆற்றின் ஆதாரமானது அருகாமையில் தான் இடம் பெற்றுள்ளது. அரேபிய பாலைவனத்திலுள்ள மண் அமைப்பை செயற்கைகோள் படப்பிடிப்பின் மூலம் படம் எடுக்கப்பட்டபோது, பண்டையகால ஆற்றுப் படுகை வெளிப்பட்டுள்ளது, அது "வட கிழக்கின் சவுதி அரேபியா முழுவதும் சென்று ஹிஜாஸ் மலைகளிலிருந்து மதினா பக்கமாக சென்று குவைத்திலுள்ள பெர்சியா வளைகுடா வரைக்கும் அதாவது 'இதெக்கேல்' மற்றும் 'ஐபிராத்து' ஆறுகளின் வாய்த்துவாரம் வரை செல்கிறது."28 இந்த வறண்ட ஆற்றுப்படுகையானது பாதிமணல் மேடுகளால் மூடப்பட்டும் மேலும் பாதி வெளியேறி (வாடி-அல்-படின்) குவைத் ஆற்றில் குவிந்தது.
வசனம் 13. இரண்டாவது ஆறு கீகோன் ஆகும், அது குஷ் தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். இந்த ஆற்றின் இட அமைப்பும் மிகவும் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது. காரணம் பழைய ஏற்பாட்டில் கீகோன் -ஐ குறிக்கிற மற்ற குறிப்புகளெல்லாம் புதிய தண்ணீர் ஊற்றைக் குறிக்கிறது அதாவது தாவீதின் நகரத்திற்கு கீழிருந்து கொப்பளித்து கெதரோன் பள்ளத்தாக்கிற்கு பாயும். பழைய ஏற்பாட்டு காலத்தில் இது மட்டுமே எருசலேமின் புதிய குடி தண்ணீரின் ஆதாரமாக இருந்துள்ளது (1 இராஜா. 1:33, 38, 45: 2 நாளா. 32:30: 33:14). கீகோன் ஆறு குஷ் தேசம் முழுவதும் பாய்ந்திருந்த போதிலும், எருசலேமிலிருந்த நீர் ஊற்றுடன் அடையாளம் காண்பதற்கு சாத்தியமில்லை.
கீகோன் ஆற்றை இந்தியாவிலுள்ள ஆற்றுடன் அல்லது ஆப்பிரிக்காவிலுள்ள நைல் நதியுடன் சிலர் அடையாளப் படுத்துகின்றனர். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதே. கிழக்கு துருக்கி (வரலாற்றில் ஆர்மேனியா) பக்கம் இட அமைப்பைக் காண்கிறவர்கள், கீகோன் ஆற்றையும் அந்தப் பகுதிகளிலேயே அடையாளம் காண்கின்றனர். 2:13-ல் குறிப்பிடப்பட்டுள்ளது "குஷ் தேசம்" என்பதை உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. வழக்கமாக, பழைய ஏற்பாட்டில் "குஷ்" என்பது (uh), Kush), என்று விசேஷமாக தீர்க்கதரிசிகளில் ஆப்பிரிக்காவின் நைல் மேல் மண்டலத்திலுள்ள எத்தியோப்பியா அல்லது நுபியாவைக் குறிப்பிடுகின்றனர்.29 ஆயினும் காமின் குமாரர்களில் ஒருவர் பெயர் கூஷ், அவர் நிம்ரோத்தின் தகப்பன், அவர் தனது இராஜ்ஜியத்தை சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே உடன் துவங்கினான். அங்கிருந்து அவன் அசீரியா சென்று, நினிவேயையும் மற்றும் மற்ற அநேக பட்டணங்களையும் கட்டினான் (10:6-11).
ஆதியாகமத்தின் வம்ச வரலாறுகள். ஆப்பிரிக்கா பகுதியின் கீழ். கூஷ்ஷின் சந்ததிகள் பரவுவதற்கு முந்தைகால சூழ்நிலையை பிரதிபலிக்கிறது, அது சரியாக தெற்கு எகிப்து ஆகும் - ஒரு காலத்தில் கூஷ் (Kush) மொசெபெத்தோமியா பள்ளத்தாக்கிலுள்ள பெரிய நகரங்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. எபிரெய பதமான கூஷ் என்பது அக்காத்தியன் வார்த்தை காஷ்ஷூ உடன் சம்மாக கருதப்படுவதற்கான காரணம், மொசெபெத்தோமியாவின் வடக்கில் இடம் பெற்றுள்ள காசைட் மலைப் பிரதேசங்களை அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் ஊடே இதெக்கேல் ஆறு ஓடுகிறது. மேலும் இது தோன்றியதற்கான காரணம் காசைட்டின் முன்னோர் குஷ் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. அவர்கள் பாபிலோனை கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆண்டு வந்தனர்.30 கீகோன் ஆறு கூஷ் தேசம் (காசைட்ஸ்) முழுவதும் பாய்ந்தது, தொடர்ந்து மொசெபெத்தோமியா பள்ளத்தாக்கிற்குள் சென்று, கிழக்கிலிருந்து இதெக்கேல் ஆற்றுக்குள் பாய்கிறது. இம்மாதிரியான சாத்தியக் கூறுகள் சமாரிய பஞ்சாகமத்தில் அஸ்கப் உடன் கீகோன் மாற்றிற்கு பரிந்துரைக்கப்படுகிறது, அது கோஆப்ஸ் (கெர்கா-வாக அறியப்படுகிறது) ஆற்றைக் குறிக்கிறது. அது இதெக்கேல் ஆற்றின் கிழக்குப் பக்கமாக ஓடுகிறது.31
வசனம் 14. விளக்கத்திலுள்ள மீதமுள்ள ஆறுகள் நன்கு அறிந்தவைகளே. மூன்றாவது ஆறு இதெக்கேல் ஆகும். "இதெக்கேல்" என்பது Tiypic செப்துவஜிந்த்தில் காணப்படும் இது கிரேக்க பெயரின் மொழிமாற்றமாயிருக்கிறது, அது LXXல் காணப்படுகிறது. அங்கே "ஹிட்டெகேல்" (KJV) என்பது எபிரெய பெயரின் 7z, (Chiddeqel) என்பது மசோரெட்டு வாக்கியத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது (MT). இதெக்கேல் ஆறு நாட்டின் நடுவில் பாய்ந்து சென்ற போதிலும், இதெக்கேல் ஆறு கிழக்கு அசீரியா முழுவதும் பாய்ந்தது என்ற கூற்றை சிலர் கேள்வி கேட்டனர். ஒரு விளக்கம் என்னவென்றால் எபிரெய பெயர் அசீரியா (7nux, Ashshur) என்பது அஸ்ஷூர் என்றும் மொழிபெயர்க்க முடியும் (NEB; RFB; NIV; NJPSV; NLT). ஆகவே அந்தப் பெயர் தேசத்தைக் குறிக்கலாம் அல்லது தேசத்திற்கு இடப்பட்ட பெயர் நகரத்தையும் குறிக்கும். அஸ்ஷூர் நகரம் அசீரியாவின் பண்டைய தலைநகரமாயிருந்தது, அது இதெக்கேல் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்திருந்தது. ஆகையால், இதெக்கேல் ஆறு "அஸ்ஷூரின் கிழக்குப் பக்கமாக" பாய்ந்தது என்பது சரியான கூற்று ஆகும் (NIV).
நான்காவது ஆறு ஐபிராத்து ஆகும். ஐபிராத்து என்பது செப்துவஜிந்த்தில் காணப்படும் கிரேக்க வார்த்தையின் (Eiopátng) மொழிமாற்றமாகும், எபிரெயப் பெயர் (ne, Pérath) ஆகும். ஐபிராத்து பெயர் வேதாகமத்தில் எண்ணற்ற முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது மகாநதி என்றும் அழைக்கப்பட்டது (ஆதி. 15:18; உபா. 1:7; யோசுவா 1:4; வெளி. 9:14; 16:12), காரணம் தென்மேற்கு ஆசியாவில் அது மிகப் பெரிய நதியாகும். சில வேளைகளில் சாதாரணமாக "ஆறு" என்று அழைக்கப்பட்டது (யோசுவா 24:2, 3, 14, 15). ஐபிராத்து மேற்கிலும், இதெக்கேல் கிழக்கில் எல்கையாயிருந்தது, "ஆறுகளுக்கு நடுவிலிருந்த இடம்,"அல்லது "மெசெபெத்தோமியா" என்று அழைக்கப்படுகிறது.
தோட்டத்தில் மனிதனின் பங்கு (2:15-17)
15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
வசனம் 15. ஏதேன் தோட்டத்தில் எந்தவித புராண வித்தையுமில்லை. தோட்டத்திலிருந்த மரங்களும், செடிகளும் அவர்களை காப்பாற்ற முடியாது, மனிதனும் அவைகளை அதிசயவிதமாக காப்பாற்ற முடியாது. முறைப்படியாக ஓய்வெடுக்கும் இடமாகவோ அல்லது முடிவில்லாத வேலையற்ற இடமாகவோ தேவன் இந்த பரதீசை உருவாக்கவில்லை. பாபிலோனிய படைப்புத் தொகுப்பிலுள்ளபடி, அங்கே தெய்வங்களுடைய நோக்கத்தை முதன்மையாக செய்யும்படிக்கு மனிதன் படைக்கப்பட்டு, அவர்களுடைய பொறுப்புகளிலிருந்து விடுதலையாக அவர்கள் கடினமாக வேலை செய்ய வேண்டியதில்லாத இடமாகவும் இருக்க வேண்டியதில்லை.32 மாற்றாக, தேவன் மனிதனை சார்ந்து இல்லை ஆனால் ஏதேன் தோட்டம் அவனை சார்ந்து இருந்தது. தோட்டத்தை பராமரிக்கும் விதமாக அவனுக்குக் கொடுக்கப்பட்ட உக்கிராணத்துவ பொறுப்பிற்காக அவன் வேலை செய்ய வேண்டும். இது தோட்டத்திற்கு பயனளிக்கும் விதமாக மட்டுமல்ல, ஆனால் மனிதனுடைய சொந்த மனநிலை மற்றும் சரீரத்தின் நன்மைக்காகவும் ஆகும். ஆகவேத்தான், வீழ்ச்சிக்கு முன்பு, தோட்டத்தை பண்படுத்தவும் காக்கவும், தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து வைத்தார்.
"பண்படுத்து" (72), abad) என்பதன் அர்த்தம்
மண்ணை "பயிரிடத்தக்கதாக" "வேலை அல்லது சேவை" செய்தல் ஆகும் (2:5; 3:23; 4:2, 12). இது மத ரீதியாக தேவனை ஆராதிப்பதற்கும், வணங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது (யாத். 3:12; 4:23; 7:16; உபா. 6:13; 10:12; 11:13; 13:4). ஆசாரியப் பகுதிகளில், ஆசரிப்புக் கூடாரத்தில் லேவியர்களின் வேலையை வினைச்சொல்லாகவும், பெயர் சொல்லாகவும் மற்றும் பின்பு ஆலய ஆராதனைக்காகவும் இது விவரிக்கப்பட்டுள்ளது (யாத். 38:21; எண். 3:7, 8, 4:23, 24, 26; 18:6; 1 நாளா. 24:3, 19; 2 நாளா.8:14). அதே போன்று, "காக்கவும்" (7ew, shamar) என்ற வார்த்தை "பாதுகாத்தல்" என்றும் அர்த்தம் கொள்ளும். இந்த வார்த்தையை பொதுவாகவும் பயன்படுத்த முடியும், ஜீவ மரத்திற்கான வழியை காத்தல் (3:24), சகோதரனை ஆபத்திலிருந்தும் காத்தல் (4:9), அல்லது மாம்ச உண்ணிகளிடமிருந்து ஆட்டு மந்தையை காத்தல் (30:31).33 மேலும் பொதுவாக, தேவன் ஆபிரகாம் மற்றும் அவனுடைய சந்ததிகளுக்குக் கட்டளையிட்ட விருத்தசேதனம் போன்ற சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதையும் குறிக்கும் (17:9, 10).
கட்டளைகளையும்,
தமது கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு தேவன் இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார்; அதாவது, அவர்களுடைய வாழ்க்கை முறையானது எகிப்தியர் மற்றும் கானானியர்களைவிட நீதி நெறியிலும் மற்றும் அற நெறியிலும் மேலோங்கி இருக்க வேண்டியதாயிருந்தது (லேவி. 18:3-5). அனுமதியில்லா நபர்கள் வரம்பு மீறி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதிலிருந்து காக்க வேண்டியது லேவியர்களின் முக்கியமான சமயப் பொறுப்பாகும் (எண். 1:51-53). கூடுதலாக, அங்குள்ள பொருட்களையும் பாதுகாத்தலும் ஆகும் (எண்.3:8).
வசனம் 15-ல் வரும் பதம் முரண்பட்டதாயிருக்கிறது, காரணம் எபிரெயப் பதம் "வைத்தார்" (ū, mach) என்பதன் அர்த்தம் "ஓய்வு”34 - ஐ குறிக்கும், மற்றும் nuach-கின் என்பதன் வினைச்சொல் காரணத்தினால் செயல்படும் வடிவம் கொண்டது, அதன் நேர் அர்த்தம் வேலை செய்யும்படிக்கு அவனை தோட்டத்தில் வைத்தபோது (அவன்) "ஓய்வெடுக்கும்படி தேவன் செய்தார்." யாத்திராகமம் 20:10, 11-ல் காணப்படும் முரண்பாட்டிற்கு சமமான வகையாகும், ஓய்வு நாளில் இஸ்ரவேலர் எந்த ஒரு வேலையும் செய்ய தேவன் தடை செய்திருந்தார். மாறாக, ஆறு நாட்கள் சிருஷ்டிப்பிற்கு பிறகு ஏழாம் நாளில் "ஓய்வி" (nuach) லிருக்கிற தேவனுக்குப் போட்டியாயிருக்கிறார்கள் அவர்கள். தாம் செய்தது போல் மற்ற எவரும், ஓய்வு நாளன்று தங்கள் எல்லா வேலைகளையும் இஸ்ரவேலர்கள் நிறுத்த தேவன் நோக்கம் கொண்டிருக்கவில்லை. ஓய்வு நாளன்று ஒரு முடவனை சுகப்படுத்தியதற்காக இயேசுவைக் கண்டித்தனர், அப்போது அவர் "என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்" என்றார் (யோவான் 5:17). தமது சிருஷ்டிகள் தொடர்ந்து வாழ்வும், தமது ஜனங்களுடைய வாழ்வை ஆசீர்வதிக்கும்படிக்கும், அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும் படிக்கும், ஓய்வு நாளிலும் கூட தேவன் தொடர்ந்து கிரியை செய்து கொண்டிருக்கிறார். என்று இயேசு சொன்னது மூலம் தேவனுடைய எண்ணத்தை அவர் உறுதிப்படுத்துகிறார். ஆகையால், சுகப்படுத்தும் தமது நற்கிரியையை கிறிஸ்து தொடர்ந்து ஓய்வு நாளிலும் செய்து வந்தார். அது தேவனை மகிமைப்படுத்தும்.
இதே வகையான நியமம், மோசேயின் கட்டளையிலும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வு நாளில் பெரிய அளவில் அறுவடை செய்தல், பெரிய அளவில் பொருள் கொள்வது, விற்பது மற்றும் வாங்குவது மூலம் அதிக வருமானம் ஈட்டுதல் போன்ற வேலைகளிலிருந்து (முதன்மையாக தங்களுக்காக) தேவனுடைய பிள்ளைகள் விலகியிருக்க வேண்டும் (பார்க்கவும் யாத். 31:13-17; நெதே. 13:15-18; ஏசாயா 58:13, 14; ஆமோஸ் 8:4-6). ஆயினும், இயேசு பின்பு செயல்படுத்தியது போல், ஜனங்களுடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும் மற்றும் தேவனை மகிமைப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியவர்களாயிருந்தார்கள். வேலை என்பது மனிதனுக்கான தெய்வீக உத்தரவு மட்டுமல்ல, மனுக்குலத்திற்கு ஆசீர்வாதத்தை அளிக்கக்கூடிய, ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள செயல்பாடாக இருக்கிறது, ஆனால் மனுக்குலத்தைவிட விலங்குகள் மாறுபட்டவைகள் (சமாதானம், திருப்தியின் உணர்வுகள், மற்றும் வாழ்க்கையில் அர்த்தமுள்ள சிலவற்றை நிறைவேற்றுவது மூலம் சுக வாழ்வு) அவைகள் ஒருபோதும் உண்மையாக "ஓய்வெடுக்க" மாட்டாது. வசனங்கள் 16, 17. மனுக்குலத்திற்கு தேவனுடைய தாராள உணவளித்தல் குறித்து எழுத்தாளரின் விளக்கத்துடன் ஏதேன் தோட்டத்தின் வாழ்க்கை சம்பவம் தொடர்கிறது. அனுமதி மற்றும் தடை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளதுதான் கர்த்தருடைய கட்டளையாகும். 2:9-ல் எல்லா வகையான உணவுகளையும் வழங்கக் கூடிய மரங்கள் ஏதேன் தோட்டத்தில் இருந்தன என்றும், அவைகள் பார்வைக்கும் சாப்பிடுவதற்கும் நலமுமானவைகளும், குறிப்பாக "ஜீவ விருட்சம் (மரம்) இருந்தன என்று அந்தத் தொகுப்பு கூறுகிறது. தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியையும் மனிதன் சாப்பிடலாம் என்று தேவன் பொதுவாக அறிவுறித்தியிருந்தார். ஆயினும், இந்த இடத்தில், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிட வேண்டாம் என்று அவர் கூறினார். தோட்டத்தில் மனிதனுக்கு தாராளமான விடுதலை கொடுக்கப்பட்டிருந்தது. விடுதலை என்பது தடையில்லாதது என்று அர்த்தமல்லை. சிருஷ்டிகரை விட தான் ஒரு சிருஷ்டி என்றும் - அவன் வரையரைக்குட்பட்டவன் என்றும் - மனிதன் புரிந்துகொள்ள வேண்டும். இன்னமும், தேவன் மனிதனுக்கு விடுத்த வரையறை ஒன்று பெரிதல்ல, காரணம் நன்மை தீமை அறியத்தக்க மரம் என்ற ஒரு மரத்திலிருந்தது மட்டுமே புசிக்கக் கூடாது என்று தேவன் தடை விதித்திருந்தார்.
தேவன் மனிதனுடன் தனிப்பட்ட விதமாகப் பேசினார் என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. விலங்குகளைப் போல் அல்லாமல், ஒரு நபராக தேவனுடைய பேச்சைக் கேட்கும் பாக்கியம் மனிதன் கொண்டிருந்தான். தேவனுடைய ரூபத்தில் ய படைக்கப்பட்டவனும் மற்றும் சிருஷ்டிகருடன் தொடர்பு கொள்ளக்கூடியவனும் அவன் ஒருவன் மட்டுமே, ஆனால் தெய்வீக கட்டளைக்கு கீழ்ப்படிவதா அல்லது இல்லையா என்ற முடிவை எடுக்கக் கூடிய வாய்ப்பும் அவன் ஒருவன் மட்டுமே கொண்டுள்ளான். அந்த மொழியானது கட்டளை வடிவில் இருந்தது அவருடைய கட்டளை அர்த்தமுடையதாக தெரியவில்லை என்றாலும், பிரச்சனை என்னவாக இருந்தாலும் மனிதன் தேவனை நம்புவானா இல்லையா என்பதுதான் (பார்க்கவும் 3:6).
தடை என்பது நேராகவே இருந்தது: "புசிக்க வேண்டாம்." எபிரெய வாக்கியத்திலும் அதேபோன்ற கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எதிர்மறையுடன் (7s, lo ', "லோ") துவங்குகிறது, அது பின்பு பத்து கட்டளைகளிலும் காணப்படுகிறது (யாத். 20:1-17). "புசிக்க வேண்டாம்" என்பதற்கு மாறாக "புசிக்கக் கூடாது" என்று NIV-ல் உள்ளது.
கீழ்ப்படியாமையின் விளைவை (ki, "கி") நாளில் என்ற ஒரு சாதாரண வாக்கியத்தின் பிரிவு துவங்கி விவரிக்கிறது: "... அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்." இந்த தெய்வீக எச்சரிக்கையை வியாக்கினம் செய்வது கடினம் ஏனெனில் தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை புசித்த நாளில் மனிதன் மரிக்கவில்லை. ஒரு பரிந்துரைக்கப்பட்ட விளக்கம் என்னவென்றால், கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும் என்று வேதாகமம் கூறுகிறது (2 பேதுரு 3:8; காண்க சங். 90:4), தேவன் அர்த்தம் கொள்வது, என்னவென்றால் ஆயிரம் வருட வயதை அடைவதற்கு முன்பே மனிதன் மரித்துப் போவான் அப்படித்தான் மனிதனும் மரிக்கிறான். ஆயினும் இது அலங்கரிக்கப்பட்ட மொழியாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
இரண்டாவது பார்வை. இது முதலாவதுப் பார்வை போன்று தோன்றலாம். "நாள்" என்ற பதம், 24 மணி நேர காலக்கட்டத்தைவிட, பொதுவான உணர்வு மூலம் புரிந்துகொள்ள வேண்டும். 2:4-ல் சிருஷ்டிப்பின் ஆறு நாட்களைக் குறிக்கும் அதே வெளிப்பாடு தான், "நாளிலே" (0), byom) என்பதிலும் உள்ளது (2:4-ன் விவர்ணத்தை காண்க).ஆயினும், நூற்றுக்கணக்கான வருடங்களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது வழக்கத்திற்கு மாறாகக் காணப்படுகிறது.
செய்யப்பட்ட மரத்திலிருந்து
மூன்றாவது விளக்கம் என்பது மனிதனுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது அதாவது. தடை சாப்பிடும் நாளில், அவன் மரிக்கக்கூடியவனாக ஆவான். இந்த அணுகுமுறையானது வசனப்பகுதி அப்படிக் குறிப்பிடாதிருக்கும் போது மனிதனை அழியாதவனாக தேவன் சிருஷ்டித்தார் என்று ஊகிப்பதாக இருக்கும், அப்படிக் குறிப்பிடாதிருக்கும் போது மனிதன் தன் உயிரை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டான், மற்றும் அந்த அழியாத வாழ்வு ஜீவ விருட்சத்திலிருந்து (அவன்) சாப்பிடுவதைப் பொறுத்தே உள்ளது. அது இனியும் மனிதனுக்குக் கிடைக்காமல் போன பின்பு, அது தவிர்க்க முடியாத விளைவாக மரணம் இருந்தது. மேலும், 1 தீமோத்தேயு 6:16 ன்படி அழியாமை என்ற குணாதிசயம் தேவனுக்கு மட்டும் தான் என்று வேறுபடுத்திய பண்பாக இருக்கிறது.
நான்காவது வியாக்கியானம் என்னவென்றால் அவர்கள் சாப்பிடும் நாளிலே "மரணத்திற்கு தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்"35 அல்லது (NIV) ஒரு நாளில் "கண்டிப்பாக மரிப்பார்கள்." வேறு வார்த்தையில் கூறுவதென்றால், இது உடனடி மரணத்திற்கான அபாயமல்ல, ஆனால் தேவனுக்கு கீழ்ப்படியாமை என்பது "இறுதியில் மரணத்தை விளைவிக்கும் ஒரு எச்சரிப்பாக இருக்கிறது." 1,"36 ஆதாம் ஏவாளின் புரிந்துகொள்ளுதல் இவ்வாறு இல்லை ஏனெனில், "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று சர்ப்பம் பெண்ணிடம் சொன்னதன் மூலம் வேறுபாட்டை உண்டுபண்ணிவிட்டான்! "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (3:4, 5). அவர்கள் புசித்தநாளிலே மரிப்பதற்குப் பதிலாக, அந்த நாளிலே அவர்கள் கண்கள் திறந்தன, அவர்கள் நன்மை தீமையை அறிந்து கொண்டார்கள் (3:22). பயமுறுத்துதல் மற்றும் வாக்குத்தத்தம் இரண்டும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு இல்லாமல், அதே “நாளில்” நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐந்தாவது யோசனை என்னவென்றால், அவர்கள் தடை செய்யப்பட்ட கனியை சாப்பிட்ட நாளில் ஆதாமும் ஏவாளும் ஆவிக்குரிய ரீதியாக மரித்துவிட்டனர், ஏனெனில் தேவனைவிட்டு பிரிக்கப்பட்டனர். இதற்கு சில அவர்கள் சத்தியங்கள் இருந்தாலும், ஆதியாகமத்திலுள்ள வாக்கிய மையப்பொருளின் எதிர்பார்ப்பில் இது இல்லை. அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர்கள் ஆவிக்குரிய ரீதியாக தொடர்ந்து மரித்த நிலையில் இருந்தார்கள் என்று வாக்கியம் சொல்லவில்லை, ஜீவ விருட்சத்திலிருந்து (மரம்) பிரிக்கப்பட்டதன் அர்த்தம் அவர்கள் சரீர மரணத்திற்கு ஏதுவானவர்கள் (3:22, 24). ஆதாம் ஏவாள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைத் தொடர்ந்த பாவத்தின் பின் விளைவுகள் என்பது முதலாவது சரீரப் பிரகாரமாக இருந்தது; பெண்களுக்கு குழந்தைப் பிறப்பில் கூடுதல் வலி, மனிதன் தொடர்ந்து இடைவிடா கடின வேலையினிமித்தம் நிலத்தின் பலனை அடைதல், மற்றும் இறுதியாக இருவரும் சரீர மரணம் அடைதல். முதல் பாவம் குறித்து பவுல் மொழியாக்கம் செய்ததும் இந்த வழியில்தான்! "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும்
இதுவுமாயிற்று" (ரோமர் 5:12). இறுதியான சாத்தியக்கூறு. குறைந்த அளவு கஷ்டங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அது என்னவென்றால், தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட நாளிலே சரீர மரணம் வரும் என்று தேவன் மனிதனை எச்சரித்தார். தோட்டத்தில் இரண்டு விசேஷ மரங்கள் வளர்ந்திருந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது: முதலாவது, ஜீவ விருட்சம் (மரம்), இது ஆவிக்குரிய வாழ்வைக் கொடுக்கவில்லை, ஆனால் அதிலிருந்து மனிதன் எடுத்துக்கொள்ள அவனுக்குவழி இருக்கும்வரை மனிதனின் சரீர வாழ்வு நிலைத்திருக்கச் செய்தது. அதேபோன்று இரண்டாவது மரம், நன்மை தீமை அறியத்தக்க மரம், மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்வை அழிக்கவில்லை, ஏனெனில் மனந்திரும்புதலும் மற்றும் தேவனிடம் அறிக்கையிடுதலுமே அந்த புதுப்பித்தலைக் கொண்டுவரும். அது செய்தது என்ன, ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தை அடைய முடியாமல் இழந்துபோகச் செய்தது; அதன் விளைவாக, சரீர மரணம் அவர்கள் மேல்வந்தது மற்றும் முழு மனித சந்ததி மேலும் வரவும் காரணமாயிருந்தது.
தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட நாளிலே ஆதாம் மற்றும் ஏவாள் மேல் சரீர மரணம் வரவில்லை. என்பதால் பிரச்சனை தொடர்கிறது. அதற்கு எதிரிடையாக ஆதாம் மரிப்பதற்கு முன்பு பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். ஆனால் இறுதியாக மரணம் மேற்கொண்டது. தாம் சொன்னது போல் தேவன் அர்த்தம் கொள்ளவில்லை என்றே, அல்லது தம்முடைய எச்சரிக்கை கூற்றில் சொன்னது போல் தண்டனையை நிறைவேற்ற அவருக்கு விருப்பமில்லை என்றே நாம் எண்ணக்கூடாது. நியாயத்தீர்ப்பின் மத்தியில் கிருபையின் முதல் வேதாகம நிகழ்வை நாம் இங்கே காண்கிறோம் என்று மாத்திரம் அதன் அர்த்தப்படுகிறது அந்த நாளிலே மனிதன் மரிப்பதற்குத் தகுதியானவனும் இருந்தான், ஆனால் தேவன் தமது கிருபையினால், அவன் மரணத்தின் நிழலிலாகிலும் - தொடர்ந்து வாழட்டும் என்று விட்டுவிடுகிறார். தண்டனையை செயல்படுத்தும் தடையை தேவன் எப்போதும் கொடுப்பார் என்று நினைத்துக்கொண்டு மனிதன் பாவம் செய்ய முடியாது. மறுபக்கத்தில், இந்த சம்பவம் நம்பிக்கையை வழங்குகிறது. "பாவத்தின் சம்பளம் மரணம்" மற்றும் நாம் அனைவரும் மரணத்திற்கு ஏதுவானவர்கள் என்று நாம் அறிந்திருக்கும் வேளையில், நாம் தொடர்ந்து வாழ அனுமதிக்கிறார் ஏனெனில் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேதுரு 3:9).
விலங்குகளின் மத்தியிலிருந்து நல்ல சரியான
வாழ்க்கைத் துணை இல்லை (2:18-20)
18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
19தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. 20அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
வசனம் 18. தாம் முன்னமே அறிவித்தவற்றிற்கு முரண்பாடாக தம்முடைய சிருஷ்டிப்பைக் குறித்து நேர்மறை கருத்துக்களாக "நல்லது" மற்றும் "அது மிகவும் நன்றாயிருந்தது" என்று இருந்தன ஆனால் இந்தத் தருணத்தில், தேவன் உரைக்கிறார், மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 1:27-ல் மனிதனை சிருஷ்டிக்கும் முன் "மனுஷனை உண்டாக்குவோமாக" (1:26) என்ற தெய்வீக வாக்கியம் கொண்டு துவங்குகிறார், ஆகவே பெண்ணை உண்டாக்குவதற்கு முன்பு தேவன் கவனித்தது என்னவென்றால் மனிதன் தனிமையாய் இருப்பது நன்றாக இல்லை. ஆகையால், அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்க தேவன் தீர்மானித்தார். 1:27-ல் பெண்ணை உண்டாக்கியப் பின்பு தான் சிருஷ்டித்தவைகள் அனைத்தையும் சோதித்தறிகிறார், அங்கு தேவன் கொடுக்கிற தெய்வீக அறிவிப்பு என்னவென்றால் "அது மிகவும் நன்றாயிருந்தது" (1:31).
தேவனுடைய கூற்றான மனிதன் தனியாயிருப்பது நல்லதல்ல என்பது படிப்பவர்களுக்குத் துணை தேவையாயிருக்கிறது என்று எச்சரிக்கிறது. "எந்த ஒரு தனி மனிதனும் தீவு அல்ல," என்று இருப்பதால், அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்க தேவன் தீர்மானித்தார். "துணை" என்ற வார்த்தையை சிலர் தவறாக புரிந்துள்ளனர். அதாவது மரியாதைக் குறைவான பதமாக, பெண் ஆணைவிட தாழ்வானவள் என்று காண்பிக்கிறார்கள். தன் எஜமானிக்கு சகல வீட்டு வேலைகளையும் செய்து உதவிடும் வேலைக்கார பெண்ணிற்கு ஒப்பிடுமளவிற்கு அவர்களுக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் இருக்கலாம். மின்னணு தொழிலாளர், தச்சர், தண்ணீர் பகிர்மான அமைப்பாளர், போன்ற தொழில் திறமையாளர்களுக்கு வேலையில் உதவியாளராக தொழில் திறமை அனுபவமில்லாத ஒருவர் இருப்பது போன்றது என்று இந்த வாக்கியத்திற்கு வேறொரு ஒப்புமை முன் வைக்கப்படுகிறது. அந்த உதவியாளர் தொழில் நுட்பமல்லாத வேலைகளைச் செய்யும்படிக்கு கேட்டுக்கொள்ளப்படுவார், ஆனால் ஒரு திட்டத்தின் தொழில் நுட்ப வேலையில் அவர் பயிற்சியிலும், மற்றும் நம்பிக்கைக்கு தேவையான அனுபவத்திலும் குறைவுள்ளவராக இருப்பார்.
"துணை" என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பதம் (niy, ezer) இந்த யோசனைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. ஒரு காரியத்தை தனியாக செய்யமுடியாத நிலையில் ஒரு தனிநபரோ, குழுவோ, அல்லது தேசத்திற்கோ ஒருவர் உதவுதல் என்பதே அதன் அர்த்தம். "அதாவது ஒருவருடைய பலம் போதுமானதாக இல்லாத போது, பொதுவான செயல் அல்லது ஒருங்கிணைப்பின் கூட்டுச்செயல் ஆகும்” என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. 36 அடிக்கடி உதவி 38 பெறுபவரைவிட உதவி செய்பவர் பெரியவராக இருப்பார். ஒரு பலவீனமான தேசமாகிய யூதா பாபிலோனுடன் சண்டையிட உதவிக்காக எகிப்தை அழைத்தது போல (ஏசாயா 31:1-3). பழைய ஏற்பாட்டில் உதவி பெறுபவரைவிட, உதவி செய்பவர் பெரியவர் என்பதை விளக்கி ஏறக்குறைய நாற்பது ஆதாரங்கள் உள்ளன, அங்கே ஜனங்களின் "உதவி" யாளராக ('ezer) தேவன் சித்தரிக்கப்படுகிறார் (பார்க்கவும் யாத். 18:4; உபா. 33:26; 1 நாளா. 12:18; 2 நாளா. 26:7; சங். 10:14; 46:5; 54:4; 79:9; 119:173; TшT 41:10, 13, 14; 44:2; 49:8).39 தேவன் மனிதனுக்கு தாழ்வானவராக சிந்திப்பதற்கு வழியே இல்லை ஏனெனில் தேவையில் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களையும் மற்றும் தம்மை நம்புகிறவர்களையும் அவர் இரட்சிக்கவும், மீட்கவும், உதவவும் தாழ்வாக இறங்குகிறார்.
மனிதனின் உதவியாளராகிய பெண், அவனுக்குத்
தாழ்ந்தவளுமில்லை. உயர்ந்தவளுமில்லை,
மாறாக, அவள் அவனுடைய ஒரு இணையாகவும் மற்றும் வாழ்க்கையை சேர்ந்து உருவாக்குவதில் அவனுடன் சமமான பங்கு கொள்ளவேண்டும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வெவ்வேறு வகையான பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். மற்றும் வெவ்வேறு வகையான தாலந்துகளையும் குணங்களையும் திருமணத்திற்குள் கொண்டு வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்க்கையைக் கட்டும் போது, ஓவ்வொருவரும் செய்ய வேண்டியவைகள் உண்டு; அவர்களுடைய வித்தியாசமான பங்களிப்புகள் (நிரப்பி, பூர்த்தி செய்தல்) ஒருவருக்கொருவர் உதவியாயிருக்கும், மற்ற நபரிடம் இருக்கும் குறைவை பூர்த்தி செய்தும், பலவீனமான பகுதிகளை பலப்படுத்தவும் செய்யும். இதனுடைய வெளிக்கொணர்வு என்னவென்றால், குணாதிசயங்கள், மற்றும் திறமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது மூலம் ஒவ்வொரு நபரும் சிறந்தவராகின்றனர், இவ்வாறாக இருவரும் திருமண வாழ்க்கையில் பங்களிக்கின்றனர். ஆதியாகமத்தின் எழுத்தாளர் மனிதனுக்கு உதவியாயிருக்கப்போகிற பெண்ணின் சிருஷ்டிப்பைக் குறித்து மட்டுமே விவரிக்கிறார் என்றபோதிலும், ஒவ்வொரு கணவன்/மனைவி உறவிலும் இந்தக் கருத்து பொருந்துகிறதாயிருக்கிறது (மத். 19:3-6; எபே. 5:25-33; 1 பேதுரு 3:1-7).
மனிதனின் உதவியாயிருப்பதில் கூடுதலாக, பெண்ணின் அடுத்த நிலையாக கொடுக்கப்பட்டுள்ளது அவனுக்கு "ஏற்ற" (z), neged), அல்லது சொல்லர்த்தமாக அவனுக்கு "முன்பாக" உள்ளது. இந்தப் பதமானது முக்கியத்துவமான அல்லது "கவனத்தை கவர்கின்ற" என்பதுடன் தொடர்புபடுகின்றது; ஆனால் 2:18, 20-ல் அவள் மனிதனோடு "தொடர்பு கொள்கிறாள் என்பது பரிந்துரைக்கப்படுகிறது."40 எபிரெய மொழியில் கூட்டு முன்னிடைச் சொல் வாக்கியம் ஒன்று உண்டு அதன் நேர் அர்த்தம் என்பது பெண் என்பவள் "மனிதனுக்கு எதிரானவள் போன்று "41 வேறு வார்த்தையில், அவனைப் போன்று அப்படியே வேறொருவர் அவனுக்குத் தேவையில்லை, ஆனால் சில வழிகளில் அவனைப் போன்றும், மற்றும் சில வழிகளில் அவனுக்கு எதிர்மாறாகவும் காணப்படுகிறாள். அன்றாட வாழ்வின் வேலை உதவியிலும் மற்றும் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதிலும் மற்றும் அதைவிட மேலாகவும் அவனுக்கு ஒருவருடைய உதவி தேவைப்படுகிறது. அந்த பங்களிப்பில் இவைகளெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும், ஆவிக்குரிய, மனதளவில், சரீர அளவில் சமமாக எதிர் பாலின உதவி அவனுக்குத் தேவைப்படுகிறது, அதை நெருக்கமான இணையாகிய மனைவி ஒருவரால் மட்டுமே கொண்டுவர (கொடுக்க) முடியும்.42 மனிதன் வாழக்கூடிய பரிபூரண சூழ்நிலையை சிருஷ்டித்தது மட்டும் போதாது, அல்லது தனது சிருஷ்டிகருடன் ஐக்கியம் கொள்ளும்படிக்கு அவர் அவனை உண்டாக்கினார்; மற்ற மனிதர்களுடன், விசேஷமாக மனைவியுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ளும்படிக்கு மனிதனை ஒரு சமூக ஜீவியாக தேவன் உண்டாக்கினார். மனிதனின் தனிமை நல்லதல்ல என்று தேவன் கண்ட போது, "தன்னையே கொடுத்து, தன் அளவிற்கு மற்றவரை நேசிக்காத வரை அவனால் வாழ முடியாது." "43 என்று அவர் சொல்கிறார்.
வசனம் 19. அடுத்தபடியாக. எல்லா காட்டுவிலங்குகளும், வானத்துப் பறவைகளும் மற்றவையோடு சிருஷ்டிக்கப்பட்டது விவரிக்கப் பட்டிருக்கின்றன. இந்த வசனப்பகுதிகளின் வரிசை 1:20 25ன். வசனப் பகுதிக்கு முரண்படுகின்றது என சிலர் கருதுகின்றனர், மனிதர்கள் அங்கு உண்டாவதற்கு முன்னரே தேவன் இவைகளெல்லாவற்றையும் படைத்தார் என்று உள்ளது. இருப்பினும், முன்னதாக நாம் பார்த்தபடி 1-ம் அதிகாரம் வரிசைவாரியாகவும், 2-ம் அதிகாரம் தலையங்கவாரியாகவும், இறையியல் ரீதியாக உள்ளத் தகவல்கள், இது படைப்பில் தேவன் என்னச் செய்தார் என்றிராமல் இவைகளையெல்லாம் ஏன் எப்படிச் செய்தார் என வெளிப்படுத்துகிறது. இங்கு தேவன் தனிப்பட்ட முறையில் தமக்கும் மனிதருக்கும் இடையே உறவுக் கொள்ள விரும்புகிறதைப் பார்க்கிறோம். இது விலங்குகள் உலகில் சாத்தியம் அல்ல, ஏனெனில் அவைகளின் இயற்கையான இயல்பு அது (2:7-9, 15-17). இது போலவே ஆண் பெண் இடையே உள்ள உறவும் அப்படியே என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தினார். மனிதர்களுக்கும் விலங்குகளும் இடையே ஒருக்காலும் ஏற்படுத்த முடியாத நெருக்கத்திற்கும் அதிகமாக இது இருக்கும்படி தேவன் விரும்பினார் (2:18-25).
முதலாவதாக மனிதனின் சிருஷ்டிப்பிற்கும்
இந்த விவரம் விலங்குகளின் சிருஷ்டிப்பிற்கும் இடையேயான ஒற்றுமையைக் காட்டுகிறது. மனிதரையும் விலங்குகளையும் நிலத்தின் மண்ணிலிருந்து தேவன் உருவாக்கினார்; மற்றும் இரண்டும் "ஜீவாத்துமா" அல்லது "ஜீவஜந்து" என்று அழைக்கப்படுகிறன (2:7, 19). மனிதனுக்கு உண்மையான தகுந்த துணையின் அவசியத்தைத் தேவன் உணர்ந்தபோதிலும், அவனது தேவையை சந்திக்க அவர் சற்று சமயமெடுத்தார். அதற்குப் பதிலாக விலங்குகளையும், பறவைகளையும் அவைகளுக்கு அவர் என்ன பெயர் சூட்டுவானோ எனப் பார்ப்பதற்காக அவனிடம் கொண்டு வந்தார். ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று, இந்த நிலையிலேதான் மனிதன் தேவனின் திட்டத்தை நிறைவுச் செய்கிறான். 1:26, 28-ன் படி விலங்குகளின் மேல் ஆளுகைச் செய்யத் துவங்குகிறான். அதிகாமுள்ள ஒரு நிலையிலிருந்து அவைகளுக்குப் பெயர் சூட்டினான்.
வசனம் 20. நிகழ்வுகள் தொடருகிறது, தேவன் மண்ணினால் மனிதனையும், விலங்குகளையும் படைத்திருப்பினும், இரண்டுக்கும் இடையை பெரும் வேறுபாடு உள்ளது தெளிவாகிறது. இதில் மனிதன் தன்னுடையதை இனம் காண வேண்டும். விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டுகையில் அவைகளின் மத்தியில் அவன் தமக்கு தகுந்த துணை காணப்படுமா என்று கட்டாயம் அவன் தேடியிருக்க வேண்டும், இப்போது விலங்குகளால் சூழப்பட்டிருப்பினும் தனிமையை அவன் உணரத் துவங்கினான். அவன் தனிமையாய் இருத்தான் ஆனால் தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை, வாழ்வின் ஆழமான உணர்வு களைப் பகிர்ந்துகொள்ள சரியான துணையில்லாதவனாயிருந்தான்.
ஆணுக்காக பெண் படைக்கப்படுதல் (2:21-25)
21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
வசனம் 21. பெண்களின் படைப்புப் பற்றி பழைய அண்மை கிழக்கத்திய மரபுகளில் தனி வரலாற்று பதிவுகள் ஏதுமில்லை, விவிலிய ஆவணங்களில் மட்டுமே அது உள்ளது, அதுவும் அவள் ஆணுக்கு கீழானவர் என்ற கருத்தில்லை. 1:27ல் ஆணும் பெண்ணுமாக தேவன் அவர்களை சிருஷ்டித்தார், அவர்களை அவரது சாயலில் சிருஷ்டித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் இப்போது வசனப்பகுதி அவர் பயன்படுத்திய வழிமுறைகளையும், நிகழ்வுகளின் வரிசையையும் நமக்குச் சொல்லுகிறது. ஆசிரியர் மனிதனை முதலில் பூமியின் மண்ணினால் உருவாக்கினார் எனவும், பின் தேவன் மனிதனுக்கு அயர்ந்த நித்திரை வரச்செய்தார் என்றும் குறிப்பிட்டார், "அயர்ந்த நித்திரையை" என்ற வார்த்தைக்கு எபிரெயச் சொல் 72175), thardemah).44 சில வேளைகளில் தேவனால் இப்படிப்பட்ட அயர்ந்த நித்திரை வரவழைக்கப்பட்டது (1 சாமு. 26:12: ஏசாயா 29:10); சிலவேளைகளில் இறை வெளிப்பாடுகளுக்காகவும். இருந்தது (ஆதி. 15:12) அல்லது ஒரு இரவுக் காட்சிக்காகவும் வழங்கப்பட்டது (யோபு 4:13; 33:15). ஆனால் இங்கு மனித உடலில் அறுவை சிகிச்சைச் செய்ய, அவன் ஆழ்ந்து உறங்குகையில், கர்த்தர் அவனது விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, அதனை பெண்ணாக "வடிவமைத்தார்" (2:22).
"விலா எலும்பு" என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெயச் சொல் (b73, tsela'), இதற்குச் சரியானப் அர்த்தம் "பக்கம்" என்பதாகும். இது மலை, கட்டிடம், அறை, கோயில், அறைக்கலன்கள் போன்றவற்றின் பக்கம் என எண்ணற்றப் பொருள் கொள்ளலாம்.45 உண்மையில் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 2:21, 22ல் மட்டுமே "விலா எலும்பு" என ஒரே ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பான்மையான ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பின்பற்றப்பட்டு சந்தர்ப்பத்திற்கு மிகப் பொருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"அவர் ஒரு விலா எலும்பை எடுத்தார்" என்பதற்குப் பதிலாக tsela என்ற வார்த்தைக்கு NIV என்ற ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பில் "[தேவன்] மனிதனுடைய பக்கத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்தார்" என மாற்று வாசிப்பைக் கொடுக்கின்றது (முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). மனிதன் அறுவை சிகிச்சை உறக்கத்திலிருந்து எழுந்தப் பின்னர் கூறிய அறிக்கையிலிருந்து இந்த மொழிபெயர்ப்பின் பொருள் பொருத்தம் ஒத்துப்போகிறது. பெண்ணை அவனிடம் கொண்டு வந்தவுடன், அவன் உடனே வியந்து "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்"; என்றான் (2:23). எலும்பும் சதையும் அவனுடைய சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெண்ணாக வடிவமைக்கப்பட்டது என்று அர்த்தங்கொள்கிறது.
முன் நாட்களில் முதல் மனிதன் (ஆதாம்) ஒரு அர்த்தநாரியாக (ஆண்ரோகினியோஸ்) இருந்தார். அதாவது அவரது உடலில் ஆண் மற்றும் பெண்ணின் சரீர குணங்களும் தன்மையும் இருந்ததாகச் சில ரபிகள் கற்பித்தனர். இந்தக் கருத்தை அவர்கள் ஆதியாகமம் 5:1, 2லிருந்துப் பெற்றிருந்தனர் அது "தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் [pīx, 'adam, ஆதாம்] என்று பேரிட்டார்" என்று கூறுகிறது சமீபத்திய பத்தாண்டுகளில் பெண்ணிய சிந்தனையாளர்கள் ரபீகளின் சிந்தனையை சார்ந்து 2:21, 22ன்படி ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஆதியிலிருந்தே "ஆதாம்" ("மனிதன்") என்னும் பொதுப் பெயர் உள்ளவராய் இருந்ததாக உரிமைகோருகின்றனர்.
எப்படியிருப்பினும், வசனங்கள்
5:260
வரும் வழிமரபின் அட்டவணைக்கு அடிப்படை ஆதாரமான 1:27, 28ல் தெளிவாயிருக்கிறது. இந்த வசனங்களில் இரண்டு ஆள்தன்மை என்பது இரண்டு பால் தன்மைக் கொண்ட ஒரு ஆள் அல்ல, இரண்டு ஆள்கள். மேலும் "அவன்" (ஆண் பால்) என ஒருமையில் வராமல், ஆணும் பெண்ணுமாக "அவர்களை" என பன்மையில் வருகிறது. ஆதி மனிதன் இரு பாலுள்ளவனென எங்கும் குறிக்கப்படவில்லை.46 உண்மையில், 'adam என்ற எபிரெய வார்த்தை 1:26, 27 லும் 5:2 லும் "மானிடர்" எனப் பொதுப் பெயரைத் தாங்கியுள்ளது. இதில் ஆணும் பெண்ணும் அடங்குவர். 3:17 ல் "ஆதாம்" என்பது, ஆணின் தனிப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர் உவமையாக 3:20 ல் "ஏவாள்" என்ற பெண் பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
வசனம் 22. நிகழ்வைத் தொடர்ந்து விவரிக்கும் போது எப்படி, தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கினார் என்று கூறுகிறது. "உருவாக்கி" என்ற எபிரெய பதம் (F1p, banah), கட்டுதல் என எழுத்துப்படி பொருள்படும். மற்றும் இங்கு தேவனே தலைமை கட்டிட வினைஞராயிருந்துப் பெண்ணை உருவாக்குகிறார். மற்ற இடங்களில் தேவன் வேறு பலவற்றை கட்டினதாகக் காண்கின்றோம். விழுந்துபோன "தாவீதின் கூடாரம்" (ஆமோஸ் 9:11), "வீடு" (ஒரு குடும்பமும், பிள்ளைகளும்) (சங். 127:1, 3-5) மற்றும் "அவரது ஆம்" மற்றும் (சங்.78:69).47 ஆசிரியர் மனுஷனை ஆதி 1:26, 27 ல் (ஆண் பெண்) சிருஷ்டித்ததைப் பற்றி விவரிக்கையில் Nī) (bara', "படைத்தல்") மற்றும் 7 (asah, "உருவாக்குதல்") என்ற வினைச்சொல்களைப் பயன்படுத்தினார், இங்கு பெண்ணை மட்டுமே குறிக்கும்போது. அதற்காக தேவனைச் சித்தரிக்க ஒரு தலை சிறந்த "கட்டிட வினைஞராக" சித்தரிக்க ஒரு வார்த்தையைத் தெரிந்து கொண்டார். Banah என்ற வினைச்சொல்லின் பொருத்தமான விளக்கம் தயாரிப்பு தெய்வீக செயலின் பெண் - அது "அழகு, நிலைத்தன்மை, நீடித்தநிலை" கொண்ட ஓர் சிருஷ்டியாயிருந்தது.48
தேவன் (பெண்ணை) மனிதனிடம் கொண்டு வருகையில், அவர், மணப் பெண்ணை அவளது கணவராகப் போகிறவனிடம் வழிநடத்துகிற பெண்ணின் தந்தையாக அல்லது "இணை பொருத்துனராக," செயல்பட்டார். இது இயற்கையாகவே பழைய முற்பிதாக்களின் சமூக வழக்கத்திற்கு ஒத்ததாக இருந்தது. ஏனெனில் பெரும்பான்மையான திருமணங்கள் பெற்றோர்களால் ஒழுங்குச் செய்யப்பட்டவையாக இருந்தன. தேவனே ஆணையும் பெண்ணையும் படைத்ததால் ஆணுக்குத் தகுந்த துணையின் தேவை என்னவென அவர் தெரிந்திருந்தார். ஆனால் அவளை அவனிடம் அழைத்து வந்தப் போது, இந்த தெய்வீகக் கொடையானது எவ்வளவு அற்புதமானது என்று அவனே கண்டுகொள்ளும்படி அனுமதித்தார்.
வசனம் 23. மனிதன் தனக்குக் கிடைத்த தகுந்த துணையும் இணையுமானவளைக் கண்டபோது திடீரென வந்த சொல்லவியலாத மகிழ்ச்சியை அனுபவித்தான், அவனது மனவெழுச்சி ஈரடிச் செய்யுளாக அவன், "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்" என்று கூறியதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.49 "இப்பொழுது" என்பது NRSV என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் "கடைசியாக" என்றுள்ளது தேவன் மனிதனுக்கு எது சரியான தேவையென அறிந்து அதனை அருளினார். அவன் ஆவல் மிகுதியால் இது என்று மூன்று முறை பெண் பாலில் (nxi, zo 'th) கூறுகின்றார். இவள் ["இந்த ஒன்று] என் எலும்பில் எலும்பும். இவள் [ இந்த ஒன்று"] மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் ["இந்த ஒன்று”] மனுஷி என்னப்படுவாள் என்றான். மனிதன், இறுதியாக, தகுந்த "ஆன்மா இணையைக்" கண்டுபிடித்தான்.
பெண்ணைப்பற்றி ஆணின் அறிக்கையான "என் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமும்" என்றச் சொற்றொடர் நெருங்கிய உறவையும் சொந்தத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பொதுவான எபிரெய வார்த்தை (29:14; நியா. 9:1,2; 2 சாமு. 19:12, 13). இது சில சந்தர்ப்பங்களில், உறுதியான ராஜ பக்தியையும் வெளிப்படுத்தும் (2 சாமு. 5:1-3; 1 நாளா. 11:1).
ஆண் மனுஷன் வெளிப்படுத்தின மகிழ்ச்சியின் இறுதிப் பகுதி, ஒரு வார்த்தை விளையாட்டைக் கொண்டுள்ளது, இவள் மனுஷனில் (UX, ish) எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் (7ts, ishshah). எபிரெய மொழியில் இரண்டு வார்த்தைகளும் நிச்சயமற்ற சொல்லிணக்கத்திற்குரியவைகள். ஆனால் வார்த்தைகள் ஒன்றுபோல் தொனிப்பதால் சிலேடையாக செயல்படுகின்றன. விலங்குகளைப் பார்த்து அவைகளுக்குப் பெயர் சூட்டின பின்னர் ஆணாகிய தான் மற்ற உயிரினங்களை காட்டிலும் (மனுஷனாக) எவ்வளவு வித்தியாசமானவர் என உணரலானார். பின்னர் தேவன் பெண்ணை அவரிடம் கொண்டுவந்த போது முதல் முறையாக தம்மைப் போன்ற (மானிட) சுபாவத்துடன் கூடிய ஒரு உயிரினத்தின் முன் இருப்பதையும். ஆனால் தம்மைவிட பாலினத்தில் அவள் வித்தியாசமானவள் எனவும் உணர்ந்தார்.50 எனவே, பெண் (ishshah) எனப் பெயர் சூட்டினார் ஏனெனில் ஆணிலிருந்து (ish) எடுக்கப்பட்டார். இன்னொரு வகையில் சொல்வதாயின் தம்மைப்போல ஒருவரைக் கண்டார். ஆனால் தன்னிலும், பெண்ணிலும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார், எனவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட: 'ishshah மற்றும் ish என
பெண் ஆணிலிருந்து எடுக்கப்பட்டப்படியால், அவள் தனது வாழ்வுக்காக அவனையே சார்ந்து வாழவேண்டியிருந்தது, அவன் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயர் சூட்டினது மூலம் அவைகள் மீது தமக்கிருக்கும் அதிகாரத்தை வெளிப்படுத்தியது போல் இவளுக்கும் பெயர் சூட்டினதினால் இவள் மீதும் அவருக்கு அதிகாரம் இருப்பதை வெளிப்படுத்தினார் (2:19, 20). இருப்பினும், மனைவியின் மீது கணவனின் தலைமையும் அவளது கீழ்ப்படிதலென்பதும் அவளை மரியாதையில்லாமல் நடத்தக்கூடிய ஒருவகையான மேலதிகாரம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக, பவுல் புதிய ஏற்பாட்டில் விளக்கியதுபோல் (1 கொரி. 11:3, 8-12; எபே. 5:22-33) அவனுடைய மனைவியின் மேலான அதிகாரம்/தலைமைத்துவம், கிறிஸ்து சபையின் மேல் கொண்டிருந்ததைப் போலிருக்கவேண்டும் அன்புடன், அரவணைப்புடன் தியாகச் செயலுடன் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் அவளுக்காக எதையும் செய்ய தயாராயிருக்க வேண்டும் -இயேசு கிறிஸ்து சபைக்கு செய்தது போலவே அவளது நன்மைக்காக தம் உயிரைக்கூட அவன் பணியவைப்பவராக இருக்க வேணடும்.
வசனம் 24. இது ஆணின் பேச்சின் தொடர்ச்சியாக இல்லாமல் ஆசிரியரின் கருத்துரையாக உள்ளது. இதனை இயேசு, தேவன் கூறுவதாகக் கூறுகின்றார் (மத். 19:4, 5). தெய்வீக, வெளிப்பாடு பெற்ற வர்ணனையாளர் முதல் திருமணத்தில் தாம் கண்ட நியமத்தை ஒவ்வொரு திருமணத்திலும் கையாளுகிறார். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆண் தன் தாய் தந்தையரைப் பிரிவது குறித்த விளக்கம் வல்லுனர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஆதி முற்பிதாக்களின் சமுதாய வழக்கத்தின்படி பெண் தமது பெற்றோரின் இல்லத்தை விட்டு மணமகன் இல்லம் வந்து, தம் கணவருடன் இணைந்து அவருடைய பெற்றோருடனோ அல்லது அவர்களது இல்லத்திற்கு அண்மையிலோ புது வாழ்வு வாழத் தொடங்குவார். இந்த சட்டத்துக்கு விதிவிலக்குகள் உண்டு. மேல் மெசபொத்தோமியாவிலுள்ள ஆபானில் யாக்கோபு தன் மாமனார் லாபானின் இல்லத்தில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார் (29:1 31:38). மோசே, சீனாய் பாலை வெளியில் தன் மனைவி சிப்போராளின் தந்தை எத்திரோவுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டு நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார் (யாத். 2:15-3:1; அப். 7:29, 30).
இருப்பினும், இவ்வழக்கம் பொதுவான வழக்கமல்ல, இவ்வசனம் ஆண் தம் பெற்றாரை பிரிவது என்பது உடல் ரீதியாக என்பதைவிட; மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் குறிக்கக்கூடும். இங்கு ஒரு பழைய பழமொழி பொருத்தமாகலாம்: மகனுக்கு ஒரு மனைவி வரும் வரை மகன் மகனாக இருப்பான்; மகள் அவளது ஆயுளெல்லாம் மகளாகவே இருப்பாள். புது மணமகள் உணர்வு ரீதியாக புது கணவனைவிட தம் பெற்றோரிடம் நெருங்கியிருப்பாள், எனவே திருமணத்தில் ஆண் தம் பெற்றோரை விட்டுப் பிரிக்கின்றார், ஆனால் ஒரு வழியில் பெண் ஒரு நாளும் அப்படியல்ல.51 முற்பிதாக்களின் சமுதாயத்தில் மணமகள் தம் கணவனாரோடு இணைந்து அவரது குடும்பத்துடன் வாழத் தொடங்குகையில் கணவன் தாம் சார்ந்திருக்கும் தம் பெற்றோருடனான உறவை முறித்துக் கொள்வது அவசியமானது என்று ஆசிரியர் எண்ணுகிறார். புகுந்த வீட்டிற்கு வருகையில் மனைவி ஒரு அளவுக்கு ஏற்கனவே தம் பெற்றோரை விட்டு பிரிந்திருக்கிறார்; இவர்களிருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து தொடங்குகின்றவர்களாயிருந்தனர். புது வாழ்வைத்
வசனம் 24 பயன்படுத்தப்பட்டுள்ள "விட்டு" (aiy, 'azab) என்ற வினைச்சொல் சிலவற்றை கைவிடுதல் என்ற கூடுதலான குறிப்பையும் அடிக்கடி கொண்டுள்ளது. இந்த விதமாக பழைய ஏற்பாட்டில் சுமார் 200 முறைக்கும் அதிகமாக உபயோகப்படுத் தப்பட்டிருக்கின்றன. பொதுவாக உண்மை தேவனை விட்டுவிட்டு சிலை வணக்கத்திற்கு செல்வதைக் குறித்துச் சொல்லப் பட்டிருக்கின்றன ஆசிரியர் மணமானவர் ஆகையால் ஆதியாகமம் 2:24 இச்சூழலில் மேற்சொன்ன கருத்துப் பொருந்தாது. தம் பெற்றாரை கைவிட்டுவிட்டுச் செல்ல என ஊக்கப்படுத்து கிறதில்லை.
எபிரெய சொல்லுக்கு பொருத்தமான மொழிப்பெயர்ப்பு ஒருவேளை "விட்டுவிடு" என்பதாகும்; NASB வேதாகமம் பல இடங்களில், சிலை வணக்கத்திற்காக தேவனையும், அவரது கட்டளைகளையும் கைவிடுவதற்கு இந்த மொழி பெயர்ப்பைக் கொடுக்கிறது (உபா. 28:20; 29:25; நியா. 10:10; 1 இராஜா. 19:10, 14; எரே. 1:16; 2:13, 17, 19; 5:7; 16:11; 17:13; 19:4; 22:9). இருப்பினும் "விட்டு," என்பது "விட்டுவிடுதல்" என அர்த்தப்பட்டாலும், அப்படி இங்கு ஆசிரியர் தம் மனதில் கொன்டிருந்ததாக இருக்கமுடியாது. அதற்கு மாறாக, azab என்ற சொல்லை ஆணின் பெற்றோரைக் கைவிடுதல் சம்பந்தமான விதத்திலேயே என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் திருமணம் செய்யும்போது அவரது முக்கியத்துவம் மாறவேணடும் என்பதே கருத்தாக காணப்படுகிறது. ஒரு மனைவியை தெரிந்து கொள்ளுமுன், அவனுடைய பெற்றோருக்கு அவனுடைய முதன்மையான பொறுப்பு இருந்தது, ஆனால் திருமணத்திற்குப் பின் அவரது மனைவி முதன்மை இடத்தைப் பெறவேண்டும்.52
மேற்கத்திய சமூகத்தில் சில வேளைகளில் பெற்றோருக்கான கடமை மிக சிறிதளவே காணப்படலாம். எனவே ஆசிரியரின் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறாமலிருக்கலாம். இருப்பினும், பழமையான, மரபுச் சார்ந்த சமுதாயத்தில் தேவனை மதிப்பதற்கு அடுத்தப்படியாக பெற்றோர் மதிக்கப்படுவதால், விட்டுவிடுதல் பற்றிய குறிப்பு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கலாம்.53 இந்த அதிர்ச்சி தாயையும் தகப்பனையும் வெறுப்பதைப் பற்றி யேசு சொன்ன வார்த்தைகளுக்குச் சமமானதாக இருக்கலாம், அது உண்மையிலேயே நம் பெற்றோரை விட கர்த்தரை அதிகமாக அன்பு கூர வேண்டும் என்று (லூக். 14:26; மத். 10:37 பார்க்க). இதுப் போன்றே திருமணத்திலும் பொறுப்பு மாறுகின்றது என்பதால். இந்த வசனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமின்றி அதுவே உண்மையைாயிருக்கிறது. கணவர் இன்னும் தம் பெற்றோரை மதித்துப் போற்றும்போது (யாத். 20:12; உபா. 5:16),ஆனாலும் தம் மனைவிக்கு அவர்களைக் காட்டிலும் முதலிடம் தர வேண்டும்.
ஒருவர் தம் பெற்றோரை விட்டுப்போனபின், என்ற கூற்றுக்குப்பின், ஆசிரியர் தொடர்ந்து "தன் மனைவியோடே இசைந்திருப்பான் [77 dabag. 'டபாக்]" என்றார் இந்த எபிரெயச் சொல்லுக்கு "பற்றிக்கொண்டு" அல்லது "ஒட்டிக் கொண்டு" எனப் பொருள், இது பொதுவாக தேவனைப்பற்றிக் கொண்டு இருப்பது (உபா. 10:20; 11:22; 13:4; 30:20; யோசுவா 23:8), சில பொருட்களுடன் (உபா. 13:17), மற்றும் ஒரு நாட்டையும் (யோசுவா 23:12), ஒருவர் தம் துணையுடன் சேர்ந்திருப்பதன் அர்த்தத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆதியாகமம் 34:3 ஐப் போல படி ஒரு தனிப்பட்ட உறவுமுறைக்கும் கூட இது பயன்படுத்தப்பட்டது. இங்கே NASB யில் சீகேம் "தீனானால் அதிகமாக வசீகரிக்கப்பட்டிருந்தான்" எனக் கூறுகிறது. எபிரெயச் சொல் எழுத்துப்படி அவனது ஆன்மா அவளுடன் பிணைந்திருந்தது என்று கூறுகிறது. ரூத்தின் கதையில் dabaq பயன்படுத்தப்பட்டதற்கான இன்னொரு பொருத்தமான சித்தரிப்பு இருக்கிறது. நகோமி பெத்லகேமுக்குத் திரும்புகையில், அவரது இரண்டு மோவாபிய மருமக்களும் அழுதார்கள், அழுத ஓர்பாள் தன் தாய் வீடு திரும்பினாள். ஆனால், "ரூத்தோ நகோமியைப் பற்றிக் கொண்டு சார்ந்து [dabaq]," "உம்மை விட்டுப் திரும்பிப் போவதுக் குறித்து என்னோடே பேச வேண்டாம் (azab]" என்றாள் (ரூத் 1:14, 16).
"ஒரே மாம்சமாவதற்காக" "இசைந்து" என்ற கருத்தானது ஒரு கணவனும் அவரது மனைவியும் குடும்பத்தின் அனைத்து உறவுகளைக் காட்டிலும், மேலான நேர்மையான, ஆழமான, உயர்வான, அற்பணிப்பின் உறவைப் பகிர்ந்துக் கொள்வார்கள் என்று சுட்டிக் காட்டுகிறது.54 திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட ஒருவரின் செயலல்ல, இதற்குப் பதிலாக இது இரு தனிப்பட்டவர்களின் (ஆணும், பெண்ணும்). குடும்பத்தார்களின், நண்பர்களின், சமூகத்தின் முன்னிலையில் ஒரு புதிய குடும்பத்தை மிக நெருக்கமான முறையில் உருவாக்குவதாக அறிவிக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாகும்போது படைப்பாளரின் முதல்கட்டளையை நிறைவேற்றத் தகுதியுள்ளவர்களாகிறார்கள் அடைகிறது. "பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்" (1:28). "ஒரே மாம்சமாயிருப்பார்கள்" என்பதின் ஆரம்ப வலியுறுத்தல் பாலுறவு கொண்டு, இருவரும் இணைந்து குழந்தைகளைப் பெறுவதும் மட்டுமல்ல, இப்படிப்பட்ட உறவில் அது விலக்கப் பட்டதுமல்ல. மாறாக முதன்மையான நோக்கம் "புதிய தம்பதியினரின்" ஆவிக்குரிய, சமூக பிணைப்பு என்பதாக காணப்படுகிறது.55 ஒரே மாம்சமாகும் போது இது இரத்த சம்மந்தமான உறவின் பிணைப்பைக் காட்டிலும் அதிக பலமான நெருக்கப் பிணைப்பாகவும். மற்ற எந்த மானிட உறவும் வழங்க இயலாத ஒரு முழுமையான நிறைவை வழங்கும்.
அதிகாரம் முடிகையில்
வசனம் 25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப் படாதிருந்தார்கள் என்பதைக் கவனிக்கின்றோம். இது மூன்றாம் அதிகாரத்தின் நிகழ்வுகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கிறது. அங்கே ஆணும் பெண்ணும் தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை உண்டதால் ஆடையின்றியிருப்பதை உணர்ந்தனர். அந்த அனுபவத்திற்குப்பின் முதல் முறையாக அவர்கள் வெட்கப்பட்டனர். ஆரம்பத்தில் "ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை". எபிரெயத்தில் uin (bash) என்ற சொல், "வெட்கம்" என்ற சொல் உணர்த்துவதுபோல் பாவத்தினால் ஏற்படக்கூடிய தனிப்பட்ட குற்ற உணர்வு என்ற எண்ணத்தில் இதனைப் பார்க்க வேண்டியதில்லை. பழைய ஏற்பாட்டு வர்ணனையில், bosh என்ற சொல் "வெட்கம்" என சில சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகிறது. ஆனால் இது பாவமோ, குற்றமோ சம்மந்தப்படாத சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது; மாறாக, சஞ்சலம் "அல்லது" குழப்பமான "ஒரு உணர்வை அது சுட்டிக் காட்டுகிறது." (நியா. 3:25 ல், NASB வேதாகமம் bosh என்பதை "ஆவல்" என மொழிபெயர்த்துள்ளது.) உண்மையில் bosh "பாலுறவை மையப்படுத்திய வெட்கம்" அல்லாமல் ஒருவர் சகிக்கும் அல்லது அனுபவிக்கும் செயலற்ற குறிப்பிடும் ஏதோ ஒன்றை கொண்டிருப்பதாக அடிக்கடி காணப்படுகிறது.56 இது வலியுறுத்திச் சொல்லும் பொதுவான கருத்து யாதெனில், தனிப்பட்டவரோ, சமுதாயமோ தங்கள் செயல்களால் அச்செயல்களை காண்போர் முன்னிலையில் "அவமானப் படுத்தப்படும் போதோ," "அவமரியாதைச் செய்யப்படும் போதோ," "தாழ்த்தப்படும் போதோ," "மட்டந்தட்டப்படும் போதோ" ஒருவர் அடைவது "வெட்கம்" (ஏசாயா 1:29; 20:5; T. 2:36; 48:13) 57
அவர்கள் பாவம் செய்கிறவரைக்கும், ஆதாமும் ஏவாளும் நிறைவான ஓர் நிலையில் இருந்தனர். தங்களையும் தங்களது பாலியல் நிலையை முழுமையாகவும், களங்கமற்ற நிலையில் (சிறார்களைப் போல்) தங்களைப் பார்க்கப் பழகினார்கள். உடையில்லா நிலை அவர்களது நம்பிக்கையையும் திறந்த மனநிலையையும் காட்டின என்று வசனப்பகுதி உறுதிசெய்கிறது. பாவத்தினால் தங்களது களங்கமற்ற நிலையை இழக்கும்போது வெட்கத்தை அனுபவித்தார்கள், உடை உடுத்தவேண்டுமென்ற உந்துதலுக்கு வந்தனர் (3:7),58 அத்தி இலையினால் தங்களை மூடினார்கள். தங்கள் இடையை மூடி, தேவன் தங்களைத் தேடிவரும்போது மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
இன்றைக்கு சமுதாயத்தில் ஒரு ஆணும் ஒரு ஆரோக்கியமான, இயற்கையான முறையில் உடையற்ற நிலையை அனுபவிப்பதை ஆதியாகமம் 2:25 மேன்மைப்படுத்துகிறது என்று எவ்விதத்திலும் அர்த்தமில்லை. இதற்கு மாறாக என்னதான் எதிர்ப்பு இருந்தாலும், ஏதேனில் நிர்வாண நிலையிலும் வெட்கப்படாதிருந்த ஆதாமும் ஏவாளும் அனுபவித்த களங்கமற்ற குழந்தைகளின் நிலையை அடைய கடிகாரத்தின் முள்ளை பின்னோக்கி நகர்த்துவதுபோல் நகர்த்தி வெட்கமில்லாமல் இருக்க இயலாது. அதற்குப் பதிலாக மனிதனின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒருவருடைய பிறப்புறுப்புக்களை பொது இடங்களில் திறப்பது கண்ணியமற்றதாக வேதம் கூறுகிறது (யாத். 20:26, 28:42, 43). அதேபோல், ஒரே பாலினமேயாயினும் குடும்பத்தின் மற்ற நபர் ஒருவருடைய பிறப்புறுப்புகளை பார்ப்பதை மன்னிக்க இயலாது (9:20-27). முறைகெட்ட உறவின் சோதனையினால், எவ்விதத்திலும் ஒருவர் எதிர்ப் பாலரின் நிர்வாணத்தைத் திறப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. எபிரெய மொழி நடையாக பாலுறவு கொள்வதை நிர்வாணத்தை திறத்தல் என்று சில வேளைகளில் பயன்படுத்தப்பட்டது. லேவியராகமம் 18:6-17 ல் அடிக்கடி காணப்படும். இது ஒரு ஆண் தம் நெருங்கிய பெண் உறவினருடன் தடைசெய்யப்பட்ட பாலுறவு கொள்ளலாகாதென தடுக்கிறது. 59
நடைமுறைப்படுத்துதல்
ஓய்வுநாள் (2:1-3)
ஓய்வுநாள் (வாரத்தின் ஏழாம் நாள்) படைப்பாளரின் ஓய்வுநாளாயிருந்தது. அவர் களைப்படைத்திருக்கவில்லை (ஏசாயா 40:28). அல்லது இழந்ததை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருந்தது. அவர் "வானத்தையும் பூமியையும் அவைகளின் சர்வசேனையையும்" (2:1-3) அவர் தாம் செய்த படைப்பின் செயலனைத்தையும். ஏனெனில் அவர் தம் படைப்பின் வேலையை முடித்திருந்தார். இன்னொருவகையில் சொல்வதாயின் அவருடைய உலகைக்காக்கும் தம் பணியிலிருந்து ஒரு போதும் ஓய்வெடுக்கமாட்டார். அவர் மழையை அனுப்பி, விதையை முளைக்கச் செய்கிறார், தம் படைப்புகளனைத்திற்கும் உயிரையும், உயிர் மூச்சையும் வழங்குகிறார் (சங். 104:1-35, 139:13-16). ஓய்வு நாளிலும், தம் மக்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்க, அவர்கள் உடலில் உள்ள நோய்களை நீக்க, அவர்கள் வாழ்வை ஆசீர்வதிக்க அவர் எப்போதுமே செயலாற்றுகிறவராய் இருக்கிறார். ஒரு மனிதரை ஓய்வுநாளில் சுகப்படுத்தியதற்காக அவர் கடிந்து கொள்ளப்பட்ட போது, அவரளித்த பதில், "என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்" (யோவான் 5:17; காண்க 7:21-24; 9:4, 14; 17:4).
சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்ட போது, அந்த ஏழாம் நாள் ஓய்வை அனுசரித்தலானது தேவனுடைய "ஓய்வுக்குச்" சமமானதாய் இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் படைப்பின் முடிவில் ஓய்ந்திருந்தது போல, இஸ்ரவேலர்களும் தங்கள் வேலைகளிலிருந்து ஒய்ந்திருக்க வேண்டியவர்களாயிருந்தது (யாத்.20:8-11),
இஸ்ரவேலர்களின் ஏழாம் நாள் ஓய்வு என்பது ஒரு நாள் முழுவதும் செயலற்ற நாளாயிருக்கவில்லை, வாரத்தின் அன்றாடகப் பணிகளான, நிலத்தைப் பண்படுத்துதல்; பயிர் நடுதல்; தானியங்களை அறுவடை செய்தல்; பழங்களை அறுத்தல், காய்கறிகளை சேகரித்தல்; தேவைகளுக்குக் கடையில் பொருட்களை வாங்குதல், விற்குதல் போன்றவைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நாளாய் இருந்தது. அவர்கள் தங்கள் வேலைக்காரர்களையும், கால்நடைகளையும் மனிதாபிமான முறையில் நடத்தி அவைகளும் கூட ஓய்வில் பங்குகொள்ள வேண்டியவர் களாயிருந்தனர் (யாத்.20:8-11; 23:12; 34:21 ஐப் பார்க்கவும்). ஓய்வுநாள் மீறப்படும்போது தேவமனிதர்களால் கண்டிக்கப்பட்டனர் (யாத். 31:15; நெதே. 13:15-22; ஆமோஸ் 8:5).
இதற்கு எதிரிடையாக அன்றாடக வேலையிலிருந்து விடுப்படுவதற்கு எதிர்மறையான கருத்து (செய்யக்கூடாதிருந்த செயல்கள்). ஓய்வுநாள் கொண்டாட்டத்தின் நாள். ஆராதனையின் நாள், எல்லாவற்றையும் படைத்தவரும், இஸ்ரவேலரை மீட்பவரான தேவனைத் துதிக்கிற நாளாக இருக்க வேண்டியதாய் இருந்தது. வனாந்திரப் பயணத்தின் இறுதியில், இஸ்ரவேலரின் புது தலைமுறையினருக்கு மோசே சொன்னதாவது: "நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்" (உபா. 5:15).
வழக்கமான வாராந்தர ஓய்வுநாளுடன் கூடுதலாக, இஸ்ரவேலரின் எல்லா முக்கியமான பண்டிகை நாட்களும் இஸ்ரவேலர்களுக்கு. சிறப்பு ஓய்வுநாட்களாகவும் அதில் எந்த ஒரு சதாரணமான வேலையும், செய்யக்கூடாதபடியும் இருந்தது (லேவி. 23:5-8, 15-21, 34-39; எண். 28:25,26; 29:1, 12, 35). அதற்கு மாறாக, கூடாரப் பண்டிகையின் போது, இஸ்ரவேலர்கள் "வேலை" (T)y, abadd), 0 யாகிய ஆராதனையில் ஈடுபட வேண்டும் (ஒரு ஆராதனைக் கூட்டம்), ஆசரிப்புக் கூடாரத்தில் (பிற்காலத்தில் தேவாலயத்தில்) கொண்டாட்டம், துதி உணவைக் குடும்பமாக பகிர்ந்து கூட்டாமை கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். இந்தப் பண்டிகை இஸ்ரவேலர் தம் "ஆண் பெண் வேலைக்காரர்களையும்," லேவியரையும், அன்னியரையும் (3,ger, புறஜாதி அன்னியர்) அனாதைகளையும், கைம்பெண்களையும் அவர்களுடன் சேர்ந்து கர்த்தரை சேவிப்பதில் தங்களுடன் பங்கெடுக்க அழைக்கும் வாய்ப்பினைக் கொடுத்தது (உபா. 16:13-15). பண்டிகையின் போது குறைவுள்ளவர்களுடன் தம் உணவினைப் பகிர்வதின் வாயிலாக தேவ மக்கள் கடின சூழலில் உள்ளவர்களிடம் தம் அக்கறையை வெளிப்படுத்த இயலும். இதைப் போன்ற கட்டளை முதற்கனியின் பண்டிகையைக் குறித்தும் ("வாரங்களின் பண்டிகை," அல்லது "பெந்தெகொஸ்தே") கொடுக்கப்பட்டிருந்தது இதனை இஸ்ரவேலர் கானான் சென்றபின் அனுபவிப்பார்கள்.
கிறிஸ்தவருக்கு ஓய்வுநாள் வாரத்தின் ஏழாம் நாளோ (சனிக்கிழமையோ) அல்லது வாரத்தின் முதல் நாளோ (ஞாயிற்றுக் கிழமையோ )அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலின் நாளான வாரத்தின் முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவ ஆராதனைக்கு முக்கியத்துவம் பெற்றாலும் அப்படியல்ல. தேவ மக்கள் கிறிஸ்துவிலே தங்கள் விசுவாசத்தை இறுதிவரை காத்துக் கொண்டு கிறிஸ்தவ காலத்திலும் நித்தியத்திற்கும், ஓய்வை அனுபவிக்க இயலும் (எபி. 3:14). "ஓய்வு" (மன அமைதி, ஆவிக்குரிய ஆரோக்கியம் மற்றும் இரட்சிப்பில் நம்பிக்கை) என்ற கருத்தை எபிரேய ஆசிரியர் வலியுறுத்துகிறார். இயேசு கிறிஸ்துவே இந்த அமைதியை அருள்பவராவார். ஆனால் அவரது மக்களுள் சிலர் "ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்" (எபி. 3:12). கொண்டவர்களாகி, அதை இழக்கும் ஆபத்திலிருந்தனர். ஆசிரியர் பண்டைய இஸ்ரவேலர்களுக்கும் தம் மடலை வாசிக்கும் எபிரெய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு ஒப்புமையைச் செய்கின்றார். வனாந்தரத்தில் அவர்களின் அவிசுவாசத்தினாலும், தேவனுக்கு கீழ்ப்படியாததினாலும் தேவனது "இளைப்பாறுதலை" அவர்களால் அனுபவிக்க தவறிவிட்டதாகக் குறிப்பிடுகிறார் (எபி. 3:18, 19), அடுத்ததாக தம் வாசகர்களை ஊக்குவிக்கும்படி "விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்..." (எபி. 4:3) என்று கூறினார். இறுதியாக, அவர் மறுநம்பிக்கையளித்து "தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது" (எபி. 4:9) என்கிறார்.
எபிரெய நிருபத்தின் வசனப்பகுதி கிறிஸ்தவ வாழ்வின் "முன்னதாக," மற்றும் "இன்னும்" என்பவைகளை முன்னிருத்துகின்றன. தேவனுடைய மக்களாக, நாம் இந்த வாழ்கையிலேயே வரவிருக்கின்ற காலத்தின் ஆசீர்வாதங்களை (ஓய்வுநாள் இளைப்பாறுதல்) அனுபவிக்கத் தொடங்குகிறோம் (எபி. 6:4, 5) - ஆனால், அவைகளை நாம் விண்ணுலகம் செல்லும் வரை இதனை முழுமையானதாக அனுபவிக்க இயலாது. அது போலவே, கிறிஸ்தவர்கள் நித்திய வாழ்வை இங்குப் பெற்றுக்கொள்ளுகின்றோம் (யோவான் 3:36; 5:24: 6:47, 54), ஆனால், இறுதி தீர்ப்புக்குப்பின் மாத்திரமே முழுமையாக அனுபவிப்போம் (மத். 25:46), நாம் இப்போது நித்திய இராஜ்ஜியத்தின் குடிமக்களாக இருக்கிறோம் (கொலோசெயர் 1:12, 13). ஆனால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அந்த நித்திய இராஜ்ஜியத்தின் எல்லா செல்வங்களுக்குள்ளும், மகிழ்ச்சிக்குள்ளும் பிரவேசிப்போம் (மத். 25:31, 34).
ஒருவர் இயேசுவின் இந்தப் பிரதான அழைப்பை ஏற்றுக் கொள்ளும் போது அந்த இளைப்பாறுதல் தொடங்குகிறது, அவர்,
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் (மத். 11:28-30).
பல நூற்றாண்டுகளாக யூத சட்ட வல்லுனர்களால் இயற்றப்பட்ட சட்டதிட்டங்களும், முறைமைகளும், சடங்காச்சாரங்களும், ரபிகளால் யூதமக்கள் மீது சுமத்தப்பட்டதினால் சுமை சுமந்து சோர்திருந்த யூதர்களைப் பார்த்து கர்த்தர் சொல்லிக் கொண்டிருந்தார் (மத். 9:9-13; 12:1-8; 15:1-20; 23:1-12, 23, 24; Cursuri 7:49).
கிறிஸ்தவர்களின் ஓய்வுநாள் இஸ்ரவேலர்களினின்று வேறுபட்டது. வாரத்தில் ஒரு நாள் கடைப்பிடிக்கும் பரிசுத்த நாளல்ல அல்லது, ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கும் சிறப்பு காலமுமல்ல. ஓய்வு நாளைக் கைக்கொள்ள ஒவ்வொரு நாளும் நம் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர் 12:1).
ஜீவ மரமும், ஜீவ தண்ணீரும் (2:9,10)
வேதத்தில், ஜீவ விருட்சமும், ஜீவ தண்ணீரும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது? இவ் வினாவிற்கு பதிலளிக்க இவ்வுருவம் பழைய ஏற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் காண்போம்.
ஏதேன் தோட்டத்தில் (2:9, 10). உயிருள்ள படைப்பாளரான தேவன், ஏதேன் தோட்டத்தில், மனிதனின் சரீர சுக வாழ்வுக்காக தேவைகள் அனைத்தையும் வழங்கியுள்ளார்:
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று (2:9, 10).
முதல் ஆணும், பெண்ணும் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்த சூழலுக்கேற்ப மரத்திலிருந்து கிடைத்த காய் கனிகளையும், தாவரங்களையுமே தங்களது உணவுக்காக சார்ந்திருந்தனர். எல்லா மரஞ்செடி கொடிகள் பூமியின் பரதீசின் வழியாய் பாய்ந்து வந்த ஜீவத் தண்ணீரினால் போஷிக்கப்பட்டு, கனிகொடுக்கும்படி ஆக்கப்பட்டன. ஜீவ மரம், தோட்டத்திலிருந்த மற்ற மரங்களைப் போன்றே உண்மையான ஒரு மரமாக இருந்தபோதிலும் ஜீவத்தண்ணீரும் தோட்டத்திலிருந்த உண்மையான ஆறான அது நான்கு ஆறுகளாகப் பிரிந்துச் சென்றது. இவையனைத்தும் எல்லா வாழ்வின் உண்மை ஆதாரமாகியன தேவன் தம் படைப்புகளின் உடல் வளர்ச்சிக்கு வரங்களாக வழங்கியுள்ளார்.
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது மானிடர்கள் ஜீவ மரம் உட்பட பரதீசையும் இழந்தனர். ஒரு நாள் பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்குவார் என்ற (3:15) இறைவாக்கு உட்பட ஒரு சிலது மட்டுமே எஞ்ஜி இருந்தது. காலம் செல்லச்செல்ல இந்த வாக்குறுதி சாரா வழியாக ஆபிரகாமுடைய வழிமரபினருக்கு நேராக குறுகலாயிற்று (12:1-3; 17:15-19), அவருக்கு கானானை நிரந்தரமான சுதந்திரமாக அளிப்பதாக வாக்குறுதியளித்தார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டில் - ஆபிரகாம் முதல் தாவீது வரை. முதன் முறையாக ஏதேனாகிய பரதீசைப் போன்றதொரு மாயையான தோற்றம் ஆபிரகாம் லோத் ஆகியோர் கானானுக்கு வந்த வரலாறு வர்ணிக்கிறது. அவர்கள் செல்வந்தர்களாக ஆடு மாடு போன்ற கால்நடைகள் மிக அதிக அளவில் உடையவர்களாயிருந்தனர்; போதிய தண்ணீரும் மேய்ச்சலும் இல்லாத போது மேய்ப்பர்களுக்கிடையே பிரிவினை உண்டானது. அப்பிரிவினை மேய்ப்பர்கள் தம் கால்நடைகளுக்கு போதிய மேய்ச்சலும் தண்ணீரும் தேட வேண்டிய சூழலுக்கு அவர்களை இட்டுச் சென்றது. இவ்விரு மனிதர்களும் ஒத்து வாழ்வதாயிருந்தால் வாக்குறுதிபண்ணப்பட்ட நாட்டில் இருவேறு திக்கில் இருவரும் பிரிந்து செல்ல வேண்டும். இந்நிலையில் ஆபிரகாம் உயர்குணத்துடன் அவரது உறவினரான லோத்திடம் அவரும் அவர் பின்னடியார்களும் அந்நாட்டில் வாழும் இடத்தைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்கினார். மலையின் மையப்பகுதியை லோத்து தேர்வு செய் என்று பதிவு கூறுகிறது. "அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும் முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்து கொண்டு ." (13:10, 11) என வேதம் கூறுகிறது.
இங்கு வசனப்பகுதி ஜீவ மரத்தையும் அல்லது அதன் வழியே ஆறு பாய்வதைக் குறித்தும் எதுவும் கூறவில்லையெனினும், யோர்தான் பள்ளத்தாக்கு ஆதியிலிருந்த ஏதேன் பரதீசைப் "போல்" உள்ளதாக லோத்தின் உவமானம் சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக; யோர்தானிலிருந்தோ அல்லது அண்மையிலுள்ள ஓடைகளிலிருந்தோ அளவற்ற தண்ணீர் பெற்ற கனிதரும் மரங்களும் (மற்ற தாவரங்களும்) வளர்ந்தன என்ற கருத்து தெரிவிக்கின்றது. இருப்பினும், இப்படிப்பட்ட கணிப்பு லோத்துக்கு, அவர் தம் குடும்பத்தாருக்கும் ஏமாற்றமாக முடிந்தது; அப்பகுதியில் நடத்தப்பட்ட மிகக் கேவலமான கொடுஞ்செயல்கள், முடிவில் தேவனின் அழிவின் தீர்ப்பினை அப்பகுதியில் வாழ்ந்தோர் மீது கொணர்ந்தது (13:13; 19:1-29). ஆபிரகாம், மற்றும் லோத்தின் அநேக சந்ததிகளின் காலத்திற்குப்பின், மோசே வாக்குறுதியின் நாட்டினை விவரிக்கும் போது, "பள்ளத்தாக்கில் பாயும்" எராளமான தண்ணீருள்ள "நல்ல தேசம்,"அங்கு பல வகையான கனி மரங்கள் உள்ளன, என்றார். மேலும் பல பயிரினங்களும், உண்ணுதற்குறிய உணவுகளும் உள்ளன, எனவே மக்கள் "தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும்.... ஒன்றும் குறைவு படாததுமான ..." எனவும் குறிப்பிடுகின்றார் (உபா. 8:7-9; எண். 13:25 27 கண்க). மோசே கானானை தண்ணீரும், ஜீவ விருட்சங்களும் உள்ள உண்மையான ஏதேனுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
எப்படியிருப்பினும், வாக்குறுதி செய்யப்பட்ட ஆபிரகாமின் வித்து மற்றும், நாடு போன்றவை அந்நேர முதல் துயரம் நிறைந்ததாக இருக்கிறது. குல முதுவர் வாழ்ந்த பல நூற்றண்டுகளுக்குப் பின்னர், அவர் வழிமரபினர் இஸ்ரவேலர், இறுதியாக யோசுவாவின் தலைமையில் கானான் நாட்டிற்குள் நுழைந்தனர். தம் பகைவர் மீது பல வெற்றிகளைக் குவித்திருப்பினும், யோசுவாவின் மரணத்திற்குப் பின்னர், கர்த்தருக்கு உண்மையாக இல்லாமல், வழக்கப்படியே சிலை வழிப்பாடு செய்தனர்; இதனால் அவர்களின் அமைதியும், வளமும் மிகவும் அரிதானதாக இருந்தன (நியாயாபதிகள் 2:1-23). நியாயாபதிகளின் காலத்தில், இவர்களின் நாடு எதிரிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது; மற்றும் குலங்களிடையே ஏற்பட்ட பொறாமை உள் நாட்டுப் போர் போன்றவற்றால் இஸ்ரவேலர்கள் தங்களுக்கிடையே ஒருவரை ஒருவர் கொன்றனார்.
பொதுவான அமைதியின்மையும், போரும் சவுலின் ஆட்சியிலும், தாவீதின் ஆட்சியின் பெரும் பகுதியிலும், இறுதியாக அவரது அனைத்து பகைவர்களை அடக்குகிற வரைக்கும் நாட்டைச் சீர்குலைத்தது, பின்னர் தாவீதின் வாழ்வின் இறுதியில் அவரது மகன் அப்சலோம் வீணாக தமது தந்தையின் சிங்காசனத்தைக் கவர உள் நாட்டுக் கலகத்தைத் தூண்டினான் (2 சாமு. 15:13; 18:6, 7 காண்க). அவரது எஞ்ஜியிருந்த அறுநூறு போர் வீரர்களும், அரசவிசுவாசமுள்ள பெலிஸ்திய மெய்க்காப்பாளர்களும் இணைந்து கலகத்தைக் கட்டுப்படுத்தி அரசை பாதுகாத்தனர். அவரது மகன் அப்சலோமின் மரணமும், பெரும்பாலான இஸ்ரவேலரின் உயிரிழப்பும் ஏற்பட்டபடியினால்: வெற்றிக்கு பெரும் விலைக்கொடுக்க வேண்டியிருந்தது.
சாலொமோனும், "ஜீவ விருட்சமும்." சாலொமோன் ஆட்சிக்கு வந்ததும், போரினால் சோர்வுற்றிருந்த இஸ்ரவேலர்கள், தேவன், தங்களுக்கு அமைதியையும் வளத்தையும் அமைதியின் அரசரின் வழியாக வழங்கிட வேண்டுமென ஆசித்தனர்.61 இவரும் ஜெபத்தில் தேவனிடம் செல்வத்தையோ, நீண்ட வாழ்நாளையோ கேட்காமல் "ஞானத்தையும், உணர்வுமுள்ள இருதயத்தையும்" கேட்டமையினால் நன்றாகவே துவங்கினார். இவரது தேர்வை விரும்பி தேவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், உணர்வுள்ள இருதயத்தையும், செல்வத்தையும், நீண்ட வாழ்நாளையும் வழங்கினார் (1 இராஜா. 3:11 14).
சாலொமோனின் வாழ்வின் தொடக்கத்தில் பல ஞானக் கூற்றுகளை எழுதியிருக்கிறார், அவைகள் நீதிமொழிகளில் இவருக்கு உரியதாகக் குறிக்கப்பட்டுள்ளது (நீதி. 1:1; 10:1; 25:1 காண்க). பல பகுதிகளில், ஜீவ விருட்சம், ஜீவத் தண்ணீர் போன்ற ஏதேனின் கற்பனை ஒப்புமையை மக்கள் ஆசிக்கும் அமைதி, மகிழ்ச்சி, நீண்ட வாழ்நாள் போன்றவற்றுடன் ஒப்பிடுகிறார்.
உதாரணமாக, "ஞானத்தைக் கண்டடைகிற," "புத்தியை சம்பாதிக்கிற" மனிதர் பாக்கியவான்கள் (நீதி. 3:13), சாலொமோன், ஞானத்தை ஒரு பெண்ணுக்கு உருவம் கொடுத்துச் சொல்கிறார். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம். அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான் ..." (நீதி. 3:18; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). வெளிப்படையாகப் பார்க்கையில், ஞானம் பெற்ற அனைவரும் சாலொமோனைப் போல் செல்வத்தையும், நீண்ட வாழ்நாளையும், மதிப்பையும் பெற்றனர் எனக் கூறிட இயலாது. மேற்கண்ட கூற்றை வாக்குறுதியாகப் பல வேளைகளில் அப்படியே ஏற்க இயலாது, ஏனெனில் சில வேளைகளில் தீமையான செயல்களும் நல்லோர்க்கு நிகழும் (யோபு 1:1-2:10 காண்க). இதற்கு முரணாக, தேவனை நம்புகிறவர்களும், அவரது திருவுளத்தை நிறைவேற்ற தேடுபவர்களும் பொதுவாக அனுபவிக்கும் இந்த ஆசீர்வாதங்களாக இவை இருக்கின்றன.
கற்பனை வளம் பெற்ற வேறொரு பகுதி, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று, அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்" (நீதி. 13:12, 14; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). இது போன்ற மற்றுமொரு சொல் நீதி. 15:4ல் காணப்படுகிறது "ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும் (முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). "ஞானியின் போதனை" கனிகொடுக்கும் "ஜீவனுள்ள மரத்திற்கும்" நிறைந்த கனிக்கும். பொங்கிவந்து வறண்டதும், தாகம் நிறைந்ததும், பாவமும், தீமையும் உள்ள உலகில் வறண்ட ஆன்மாவுக்கு இளைப் பாறுதலையும், வாழ்வையும், சுகத்தையும், அருளும் "ஜீவஊற்றுக்கும்" ஒப்பிடப்பட்டுள்ளது. ஞானியின் வாக்கு பண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் சட்டப்பூர்வமாக ஆசிக்க வேண்டிய ஒன்று. தேவன் நீதிமான்களை ஆவியில் ஊக்கப்படுத்தி, கர்த்தரை உண்மையாகவே கனப்படுத்தும் அவர்கள் நீதியுள்ள வாழ்க்கை வாழ மறு உயிரூட்டி அருளும் அவர்கள் "ஜீவ விருட்சமும்" அல்லது "ஜீவஊற்று" போலிருக்கிறார்கள் (ஏசாயா 40:31 காண்க).
சாலொமோனின் வாழ்வில் காணும் மிகப் பெரிய சோக வரலாறு என்னவென்றால், உலகிலேயே ஞானமான மனிதன் மிகப்பெரிய முட்டாள் ஆனான் என்பதே. இவர் அரண்மனைகளை தனக்காகவும், தன் நூற்றுக்கணக்கான மனைவியருக்காகவும், வைப்பாட்டி யருக்காகவும் அன்னிய தெய்வ வழிப்பாடுகளுக்காக கோயில் களையும், கட்டிடங்களையும் கட்டி தன்னை மேம்படுத்த தேவன் அருளியச் செல்வத்தை அழித்தான். நீதியான வாழ்வும், தெய்வ பக்தியான வாழ்க்கை வாழ்வதற்கு மாறாக ஞானத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய்த் தெய்வங்களைத் தொழுதார் (1 இராஜா. 11:1-8). "பைத்தியத்தையும், மதியீனத்தையும் அறிகிறதற்கு," அவன் தன்னையே பிரயோகம் பண்ணினான் (பிர.1:17). அவர் "என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை" (Lil. 2:10) STOSTUDI ஒத்துக்கொண்டார். இந்த வாழ்க்கைமுறை அவருக்கு அவர் எதிர்ப்பார்த்த சுகத்திற்கும், நிறைவுக்கும் எதிராக, துக்கத்தையும், தொல்லையையும், அமைதியின்மையையும் கொண்டுவந்தது, செல்வம், அதிகாரம், சுகம் ஆகியவற்றை அவர் தேடியதின் முடிவுரையாகச் சொன்னார். "இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை .."(பிர. 2:11).62
எசேக்கியா அமைதியாகவும், உறுதியுடனும் பகைவனை எதிர்க்கொள்ளுதல், பற்பல வழிமரபினர்கள் வந்து, சென்றபின், எசேக்கியா இராஜாவின் காலத்தில் (கி.மு. 701) எருசலேமை அழிக்க அன்னிய படை ஒன்று யூதாவை முற்றுகையிட்டு, அச்சமூட்டிக் கொண்டிருந்தது. அசீரியாவிலிருந்து தன் பெரும் படையுடன் சனகெரிப் நாட்டிற்குள் வந்து, யூதாவில் நாற்பத்தி ஆறு நகரங்களை அழித்து, அரசரை "பறவையை கூட்டிற்குள் அடைப்பதுபோல்" தலைநகரில் அடைத்துப்போட்டான். 63 சனகெரிப், எருசலேமிலுள்ள எசேக்கியாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினான், அக்கடிதத்தில் தேவனை நிந்தித்தது மட்டுமல்லாது, உடனே தலைநகரை சரணடைய எச்சரித்திருந்தான்.
யூதாவின் அரசர், தமது நெருக்கத்தில், கர்த்தருக்கு முன் கடிதத்தை விரித்து, எருசலேம் மற்றும் தாவீதின் சிங்காசனம் போன்றவைகளின் தெய்வீக விடுதலைக்காகவும் ஜெபிக்கலானார். தேவன் துரிதமாக பதிலளித்தார்: “என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்." அன்று இரவிலேயே, "அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது. இதோ. அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்." தன் தலைநகரான நினிவேக்கு சனகெரிப் மிகவும் வெட்கத்துடன் திரும்பிப் போக மட்டுமே அவனால் முடிந்தது (ஏசாயா 37:35-37). அவன் அதன்பின் இருபது ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தாலும், நாம் அறிந்தபடி யூதாவுக்கு எதிராக அவன் ஒரு முறையாகிலும் தம் படைகளுடன் திரும்பவில்லை.
இது சங்கீதம் 46க்கு வரலாற்று பின்னணியாக இருக்கக்கூடும். அப்படியானால், உண்மையிலே தேவன் எப்படியெல்லாம் தம் மக்களுக்கு "அடைக்கலமும்," "கோட்டையுமாக" இருந்தார் என ஆசிரியர் மிக பலமாக சித்திர மொழியில் கூறுகின்றார் என்று புரிந்துகொள்ளமுடிகிறது (சங். 46:1, 7, 11). அவர் தாமே, "பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்"; வில்லை ஒழித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார் என கூறுகிறார் (சங். 46:9). சங்கீதங்களின் மையத்தில், ஆசிரியர், தோட்டத்தின் உருவகத்தைப் பயன்படுத்தி திடீரென நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில், நிகழ்வுகளின் மத்தியில் வந்த ஒரு மாற்றத்தை விளக்குகின்றார். அவர் கூறுகின்றார், "ஒரு நதியுண்டு. அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது" (சங். 46:4, 5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது).
எருசலேமில் எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு ஆறும் ஓடுவது கிடையாது, இஸ்ரவேலின் மத்தியிலுள்ள மலைநாட்டில் குன்றுகளின் மீது நகரம் கட்டப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் நகருக்கு "கீயோன் ஊற்று" மட்டுமே ஒரே ஒரு நல்ல தண்ணீர் ஆதாரமாக இருந்தது: இது நகரத்திற்கு வெளியே, கிதரோன் பள்ளத்தாக்கிலுள்ள ஓப்பால் மலையின் அடியில் இருந்தது. யூதாவின் மீது அசீரியர்கள் படை எடுப்பதை எதிர்பார்த்த எசேக்கியா, பொறியியலாளர்களைக் கொண்டு, ஓப்பால் மலையைக் குடைந்து; தென் மேற்காக அச்சிற்றூற்றிலிருந்து நகரத்தின் உள்ளே இருந்த சீலோவாம் குளத்திற்கு தண்ணீர் பாயும்படிச் செய்தார் (2 இராஜா. 20:20; 2 நாளா. 32:30).
இந்த ஊற்று, உயிர் கொடுக்கும் தண்ணீரை எருசலேமுக்குள் கொண்டுவந்தது. சங்கீதக்காரனும் தேவன் ஒரு "நதியைக்" கொண்டுவந்தார் அது அனைத்தையும் வளமுள்ளதாக்குகிறது எனப்பாட அகத்தூண்டுதலாக இருக்கக் கூடும், அனைத்து மானிட நம்பிக்கையும் போனபோது, அவர். மாத்திரமே சனகெரிப்பின் இராணுவத்தை முற்றுமாக அழித்து, அசீரியர்களின் முற்றுகையினால் அவதியுற்ற எருசலேம் மக்களுக்கு ஆரோக்கியமும், மீட்பின் ஜீவத் தண்ணீரையும், நம்பிக்கையையும், கொண்டு வந்தார். 64
எரேமியாவின் தேவனிடமிருந்து ஜீவத் தண்ணீர்" சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பின் மக்களின் அக்கிரமத்தையும். சிலை வழிபாட்டிற்கு எதிராக, தீர்க்கதரிசிகள் கூறும் போது ஜீவத்தண்ணீரை அடையாளப்படுத்தி குரல் எழுப்பினார். உதாரணமாக, எரேமியா, யாவேயின் சார்பாக நாட்டை இவ்வார்த்தைகளால் பழி சமத்தினார்: "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" (எரே. 2:13; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). இந்தக் கற்பனை வர்ணனையானது உணர்வு ரீதியானது, அறிவு சார்ந்தோர் எவரும் நேரமும் முயற்சியும் செலவளித்து, பூகோள ரீதியாக நிலையற்ற பகுதியில் தண்ணீர் தொட்டியை வெட்டமாட்டார். ஏனெனில் அது சீக்கிரம் வெடித்துவிடும், தண்ணீர் நிரப்பிவைக்க உதவாது என்பார், ஆனால், குறிப்பாக உண்மை யாதெனில் அவர் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க விரும்பினால் அவர் செய்ய வேண்டியதெல்லாம் அண்மையிலுள்ள பொங்கியெழும் ஆர்டீசீயன் ஊற்றிலிருந்த கொண்டு வரவேண்டும். ஆனால் எரேமியா தேவனையே உடல் ரீதியான, ஆவிக்குரிய ஊற்றாகவும், ஆதாரமாகவும் காண்கின்றார். உண்மை தேவனை விட்டுவிட்டு. பொய்யான தெய்வங்களைத் தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, அது வாழ்விற்கு மாற்றாக மரணத்தைத் தேர்வு செய்தது போன்றது.
எசேக்கியேல் - புதுப்பித்தலின் நம்பிக்கை. கடைசியாக ஒரு பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. வசனப்பகுதி உடன் ஏதேனின் தோட்டத்திலிருந்து அடையாள முறையைப் பெறுவது எசேக்கியேல் 47:1-12ல் காணப்படுகிறது. தீர்க்கதரிசி பாபிலோனில் சிறைப்பட்டோர் நடுவில் இருந்தார். வாக்குறுதியின் நாட்டிற்குள் திரும்ப செல்வோம் என்னும் நம்பிக்கை பலரிடத்திலில்லை, அவர்கள் பள்ளத்தாக்கில் காணப்படும் "உலர்ந்த எலும்புகள்" போலிருந்தார்கள்: உயிரிழந்து, வெளிரிப்போய் இருந்தனர் (எசே. 37:1-9). எசேக்கியேல் இந்த எலும்புகளுக்கு (நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலருக்கு பிரசங்கிக்க கேட்டுக் கொள்ளப்பட்டார்; மற்றும் இவருடைய பிரசங்கத்தினாலும், தேவ ஆவியினாலும் மக்கள் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை அனுபவிப்பார்கள், அவர்கள் ஒரு புது நம்பிக்கையும், நோக்கமும் கொண்டிருப்பார்கள். மீதியானவர்களுக்கு தேவனுடைய செய்தி நற்செய்தியாக இருந்தது, எனெனில் அவர்களை பாபிலோனிலிருந்து எழுப்பி இஸ்ரவேலுக்குள் வழி நடத்துவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார் (எசே. 37:10-14).
இருப்பினும் புதிய பிரச்சனைகள் எழுந்தன, தாய் நாட்டில் கிட்டத்தட்ட எல்லாமே அழிக்கப்பட்டிருந்தது, எருசலேமும், ஏனைய மதில் சூழ்ந்த நகரங்களும் அழிக்கப்பட்டிருந்தன. நாடு திரும்புவோர் அனைவரும் உழுதல், நடுதல், தங்களுக்குள்ள வீடுகளை கட்டுதல் போன்ற எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும். அவர்களுடைய வருகையை எதிர்க்கும் புறஜாதி பகைவர் நடுவில் எவ்வாறு வாழப்போகிறார்கள் அவர்களின் விளை நிலம் மீண்டும் பலன் தரவும், அவர்களின் கால்நடைகளுக்கு புல் முளைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? இதுவும் இது போன்ற மற்ற வினாக்களும் மக்கள் மனங்களில் ஓடியிருக்கும், எனவே தேவன் தீர்க்கதரிசிக்கு மற்றுமோர் தரிசனத்தை அருளினார்: எருசலேம் நகரத்தின் சிறந்த காட்சியும், ஆலயமும் மற்றும் நிலப்பரப்பும், அடையாள மொழியில் விவரிக்கப்பட்டிருந்தன.
எசேக்கியேல் 47-60 அடையாளத்துவம் தேவனுடைய ஆலயத்திலிருந்து வெளியே தண்ணீர் பாய்வதைக் குறிக்கிறதாய் இருக்கின்றது. முதலில் அது சொட்டுச்சொட்டாகச் சொட்டுகிறது. பின்னர் அதுவே ஓடையாகி, அதன்பின் ஒருவரும் கடக்க இயலாத பெரும் நதியாகிறது. நதி அராபாவை நோக்கிப் பாய்வதை தீர்க்கதரிசி கண்டார் (சவக்கடலின் தென் மேற்காக பாலை வெளிக்கு). அது கடலில் கலக்குகையில் அத்தண்ணீர் மீன்கள் நிறைந்த நல்ல நீரானது: நதி சென்ற இடமெல்லாம் காய்கனிகள் விளைந்து செழித்தன. அதன் கரைகளில் உணவுக்கான எல்லாவிதமான கனி மரங்கள் வளர்ந்தன. இதனைக் குறித்து எசேக்கியேல் கூறுகிறார். "அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்" (எசே. 47:12; வெளி. 22:1, 2 காண்க).
இங்கே அடையாளம் ஏதேன் தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்டு, ஜீவனைக் கொடுக்கும் ஆறு ஆலயத்திலிருந்து பாய்கிறதாக விவரிக்கப்பட்டிருக்கிறது.65 அங்கே தேவன் கேரூபீன்களின் நடுவில் தொடக்கத்தில் வாசமாயிருந்தார் (2 சாமு. 6:2). தம் மக்களுக்கு ஒரு நாளும் முடிந்து போகாமல் உணவு வழங்கவும், சுகம் வழங்கவும். அங்கு கனி மரங்கள்66 வளர்ந்தன.
உண்மையில், பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் மீதியானவர்கள் நாடு திரும்பும்போது, அவர்கள் இந்த வாக்குறுதியின் சில பகுதி நிறைவேற்றங்களை மட்டுமே அனுபவித்தார்கள். விசுவாச அறிக்கை மற்றும் ஆராதனை பாடல்களில், திரும்பிவந்தோர் தங்களது மிக மோசமான நிலையை சித்தரிக்கையில் தங்களை "அடிமைகள்" என்றனர்; மற்றும் பலதெய்வ வணக்க முதலாளிகள் தங்களது அநேக விளைச்சல்களையும், கால்நடைகளையும் எடுத்துச் சென்றதாக சாதித்தனர் (நெதே. 9:36, 37). தங்களது துக்கமான நிலைக்கான பதிலைக் கண்டடைய அவர்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.
யூதர்கள் அவர்களுடைய இந்த நிலைமைக்கான முக்கிய காரணம், தேவனுடைய வாக்குத்தத்தம் நிபந்தனையைக் கொண்டிருந்தது என புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் நிறைவேற்றம் அவர்களின் மனந்திரும்புதல் பாவ அறிக்கை செய்தல் மற்றும் மோசேயின் உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது.
இந்த படிப்பின் மீதியில் புதிய ஏற்பாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி
ஜீவ விருட்சத்தையும் ஜீவத்தண்ணீரையும் காண்போம். இயேசு கிறிஸ்து, ஜீவத்தண்ணீர் அருள்பவர். இயேசு பெத்லகேமில் பிறந்த போது, அவர்களது எல்லா பகைவர்களையும் கொடூர ஏரோதை யூதேயா சிம்மாசனத்திலிருந்து விலக்கி, புறதெய்வ வணக்க ரோமர்களை தங்கள் நாட்டைவிட்டே விரட்டியடிக்கக்கூடிய தாவீதின் மேசியா வருவார் என யூதர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இஸ்ரவேலரின் மேசியா நம்பிக்கையானது பாலஸ்தீனாவில், பரதீசு, ஜீவ விருட்சமும், ஜீவத் தண்ணீரும் கொண்ட ஒரு புதிய பரதீசு சில தீர்க்கதரிசன அறிவிப்புகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.67 மக்கள் பலர் தாங்கள் காத்துவந்த நம்பிக்கைக்கும், இயேசுவின் தேவனுடைய ராஜ்ய தரிசனத்திற்கும் இடையிலான வித்தியாசங்களினால் காண இயலாமல் குழப்பமடைந்திருந்தார்கள்.
இயேசு தம் அருட்பணியினைத் தொடங்குகையில், "காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15) என அறிவித்தார். தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழையத் தேவையான தகுதிகள் பல யூத மதத் தலைவர்களைக் கவர்ந்தது. யோவான் ஸ்நானகனைப் போன்று (மத். 3:1-12; மாற்கு 1:1-5; லூக். 3:2-9; 7:29, 30). இயேசு அவர்களிடம் ஆவிக்குரிய மறு பிறப்பு வேண்டுமென எதிர்பார்த்தார், அதாவது மனமாற்றம். அவர் நிக்கொதேமுவிடம் உரையாடும் போது வலியுறுத்திக் கூறுகிறார், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3:5).
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் எருசலேமில் கொண்டாடப்படும் கூடாரப் பண்டிகையின் போது இயேசு தம்மைக் குறித்து கோரி அடையாளங்கள் தடுமாறச் செய்பவைகளாயிருந்தன. அந்நிகழ்வின் போது பிரதான ஆசாரியன் யூத வழக்கத்தின்படி மக்களை சீலோவாம் குளத்திற்கு நகர்வலமாக அழைத்துச் சென்று, குளத்திலிருந்து தண்ணீரைக் கோரி அதனை தேவாலயத்திற்குக் கொண்டு வருவார், ஊர்வலத்தில் நகரத்தின் வழியே செல்லும்போது, மக்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரை கோரி வருவதைக் குறித்துப் பாடல்கள் பாடுவார்கள், "நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்" (ஏசாயா 12:3), மற்றும் "உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்" (சங்.36:8), அவர்கள் தேவனை "ஜீவ ஊற்றாக" துதித்தார்கள் (சங்.36:9).
குளிர்கால (பனிக்கால) பயிர்களை நடவு செய்ய உதவும் மழைக்காக ஜெபிக்கும்போது அவர்கள் எகிப்திய துதிபாடலையும் பாடினார்கள் (சங். 113-118). அதில் அவர்கள் தேவன், "கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றின" (சங். 114:8) வனாந்தரத்தை நினைவுகூர்ந்தார்கள். அவர்கள் நிறைவியல் (இறுதி காலத்தில்) மேசியாவின் நதிகளின் தண்ணீருக்கு ஏங்கினார்கள் (எசே. 47:1-9; சக. 13:1; 14:8, 16, 17) மற்றும், "கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்" (சங். 118:25) என்று கெஞ்சினார்கள். சடங்கின் முக்கியமான நேரத்தில், பீடத்தை ஏழு முறை சுற்றி வந்த பின், பீடத்தின் அடியில் பிரதான ஆசாரியன் தண்ணீரை ஊற்றுவார்.68 இப்படிப்பட்டச் சூழலில் இயேசு நின்று கீழ்கண்ட அதிர்ச்சியூட்டும் அறிக்கையைச் செய்ததாகக் காணப்படுகிறது:
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து,
பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடி யினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை (யோவான் 7:37-39).
யோவான் நற்செய்தி நூலில் இது இயேசுவின் மிகப் பெரிய உரிமைக்கோரலாகும். தேவனிடம் தங்களுக்கு "ஜீவத் தண்ணீரை" அருளவும், "வளமையை" அனுப்பவும், தங்களை "மீட்க"வும் வேண்டுமென பாடியும், மக்கள் ஜெபித்துக் கொண்டும் இருந்தார்கள். இயேசு தம்மை தெய்வீகமும், குமாரனாகிய தேவனாக இருப்பதாகவும் தாமே அந்தத் தண்ணீர், ஆசீர், மீட்பு ஆகியவைகளின் ஆதாரம் எனவும் இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் உரிமைக் கொண்டாடினார். "ஜீவத் தண்ணீர் ஊற்று" (எரே. 2:13) என பழைய ஏற்பாட்டில் தேவன் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார், அவர் படைப்பவர், ஆவியை அருளுபவர், வாழ்வருளி, தம் மக்களை ஆசீர்வதித்து மீட்கிறார். இயேசுவும் தேவனின் இந்தப் பண்புகள் முழுமையும் கொண்டிருப்பதாக தனி உரிமை கோரினார். கிறிஸ்துவை விசுவாசிப்பதும் (நம்புவதும்) அவருக்கு கீழ்ப்படிவதும் நித்திய வாழ்வை அனுபவிப்பதாகும் (யோவான் 3:36; 5:39, 40; 11:25-27; 14:6; 17:3).
கிறிஸ்தவர்களும் அவர்களின் வாழ்வளிக்கும். செய்தியும். இப்படியான உண்மைகள்தான் இயேசுவின் பாவ பரிகார மரணம் அவருடைய உயித்தெழுதல், மற்றும் தேவனின் வலப்பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது. உள்பட அப்போஸ்தலர்கள் எங்கும் சென்று பிரசங்கித்த சுவிசேஷத்தில் (நற்செய்தியில்) உண்டாக்கினது. செய்தி மிகவும் பலமாக இருந்தமையால், கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரமாகிய சபை என்ற ஒரு புதிய ஆவிக்குரிய ஒன்றை உளதாய் கொண்டு வந்தது. இது இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்று மனந்திரும்புதலுடன் ஞானஸ்நானம் பெற்றவர்களைக் கொண்டதாக இருக்கிறது, சபையில் சேர்க்கப்பட்ட புதிதாக மனமாற்றப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள், அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டனர் (அப். 2:16-42).
ஆயிரக்கணக்கான யூதர்கள் புதுப்பிறப்பு பெற்று, சிறகுமுளைத்த சபையின் பகுதியானபோது கிறிஸ்தவம் பிறந்த உடனேயே எதிர்ப்புகளும், நேரடியான உபத்திரவமும், எருசலேமில் துவங்கின (அப். 4:1-8:3). கிறிஸ்தவர்கள் இயேசுவை கிறிஸ்து (மேசியா) என உரிமை கோரினமையால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த கொடூரமான எதிர்வினை ஏற்பட்டது, இந்த ஆதிகால விசுவாசிகள் எங்கும் சென்று வசனத்தைப் பிரசங்கித்தபோது உபத்திரவப்படுத்தப்பட்டனர் (அப். 8:4 காண்க). அதிகாரப்பூர்வமான ரோம உபத்திரவம் ரோம் எரிந்த (நீரோ, இந்தப் பழியை கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினார்) கி.பி. 64 வரை தொடங்கவில்லை. இது விரிவாகப்பரவி டோமிட்டியனின் நாட்களில், முதலாம் நூற்றாண்டின் இறுதி நாட்களில் அது அதிகரித்தது. ஆகவே, சபையானது பிழைப்பதற்காக பெரும் போராட்டம் போராட வேண்டியிருந்தது. பல வேளைகளில் கிறிஸ்தவர்கள் தம் விசுவாசத்தை மறுதலிக்கவும், பேரரசருக்கு தூபம் காட்டி, அவரை கடவுளாக தொழவும் மறுத்தாலோ கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டியிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் நதி மற்றும் ஜீவ விருட்சம் பற்றிய காட்சி. வயது முதிர்ந்த அப்போஸ்தலனாகிய யோவான், இவரே மற்ற அப்போஸ்தலர்களை காட்டிலும் கடைசியாக வாழ்ந்த அப்போஸ்தலராக இருந்திருக்கலாம், பத்முதீவிற்கு நாடுக் கடத்தப்பட்டார் மற்றும் அங்கு கர்த்தரிடமிருந்து தரிசனங்களைப் பெற்றார். இவை உபத்திரவப்பட்டுக் கொண்டிருக்கும் தேவ மக்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொண்டுவர நோக்கங்கொண்டிருந்தன. இந்தத் தரிசனங்கள் புதிய ஏற்பாட்டின் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நூலைப் படிப்பவர்களுக்கு சிறப்பு ஆசீர் வாக்களிக்கப்பட்டுள்ளது இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிற வைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்" (வெளிப் படுத்தின விசேஷம் 1:3).
இத்தரிசனங்களில், பழைய ஏற்பாட்டு காலத்தில், யூதர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கும், கிறிஸதவர்களுக்கு முதல் நூற்றாண்டில் சபைக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதற்கும் இடையேயான ஓர் ஒப்புமை ஆய்வை யோவான் கண்டார். பாபிலோனிய இராணுவம் பண்டைய கிழக்கத்திய பகுதியில் பரவி, யூதாவை அழித்து, தாவீதின் வம்சத்தில் இருந்த இறுதி அரசரையும் சிறையாக்கினது. போல ரோமாபுரி (புதிய பாபிலோன், சாத்தானின் கருவியாக) அன்றைக்கு அறியப்பட்ட உலகையெல்லாம் வென்றிருந்தது, அவர்கள் இப்போது இரத்த சாட்சிகளுடைய இரத்தத்தைக் குடித்துள்ளனர் (வெளி, 17:5, 6), சபையை அழிக்க ஆர்வங்கொண்டு தாவீதுடைய பெரிய இராஜாவான இயேசு கிறிஸ்துவின் உரிமை கோருதல்களை மதிப்பற்றதாக்க முயற்சிக்கிறார்கள் (வெளி. 12:5, 17).
அந்த கடுமையான உபத்திரவத்தின் காலத்தில், கர்த்தர் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட வாழ்நாளையோ, இப்பூமிக்குரிய ஆசீர் வாதத்தையோ வாக்களிக்கவில்லை. அவர்களை உபத்திரவங்களுக்கும், மரணத்திற்கும் விலக்கி பாதுகாப்பதாகவோ வாக்களிக்கவில்லை. எழுத்துப்பூர்வமான பூமிக்குரிய ஜீவ விருட்ச வாழ்க்கையோ நன்கு நீர்பாச்சப்பட்ட ஏதேனாகிய பரதீசைப்பற்றிய முன் எதிர்பார்ப்போ இருக்கவில்லை. எருசலேமையோ அல்லது அதன் ஆலயத்தையோ, இவை இரண்டுமே கி.பி. 70ல் ரோமர்களால் அழிக்கப்பட்டப்போது பாதிக்கப்பட்டபின் மகிமையுடன் மறுசீரமைப்புச் செய்வதோ அவர்களின் எதிர்பார்ப்பில் இல்லை. மேலும், மங்கிப்போன கனவாகிய பாலஸ்தீனா வில் எழுத்துப்பூர்வமான தாவீதின் சிங்காசனத்தையோ, அரசையோ திரும்ப நிலைநாட்டுவதுமல்ல. கிறிஸ்தவர்கள் தேவனின் விரிவான, உயரிய நிலையான ஆசீர்வாதத்தைக் காணும்படி ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் இவ்வுலகு சார்ந்த செல்வம், மகிழ்ச்சி இவைகளுக்கு மேலாக உயர்ந்து நின்று, நித்திய சிங்காசனத்தில் தேவன் என்றென்றும் ஆளுவதை கூர்ந்து பார்க்க எதிர்பார்க்கப்படுகின்றனர். நம்முடைய பாவங்களுக்காக மரித்த பலி ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் மீது கண்களை பதிய வைக்க வேண்டும், இவர் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, விண்ணுலகம் ஏறி இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் இப்போது ஆளுகை செய்துக் கொண்டிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டின் வாக்குறுதி பண்ணப்பட்ட நாடு பூமியில் ஒரு இம்மைக்குரிய நிலையில்லா இடமேயல்ல; அது இப்போதுள்ள விண்ணும் மண்ணும் ஒழிந்துப் போகும் மட்டும் (வெளி 21) விண்ணுலகில் பாதுகாப்பாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள புதிய எருசலேம் (எபி. 11:10, 16; 1 பேதுரு 1:3-5; 2 பேதுரு 3:9-13). விசுவாசிகளுக்கான இந்த இனைப்பாலும் இடம் புதிய, நித்திய ஏதேன் தோட்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான பரதீசைப்பற்றி உருவக மொழியில் ஜெயங்கொள்கிறவனுக்கு, "ஜீவ விருட்சத்தின் கனி" வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது; அது, "பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும்" அதன் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்" (வெளி. 2:7; 22:2, 14).
"ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி" ஜீவனின் ஆதாரமூலமான "தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறது" (வெளி. 22:1). ஆவியும், மணவாட்டியும் விடும் அழைப்புக்குப் பதிலளிக்கும் வரண்ட, தாகமான ஆத்துமாவுக்கு "ஜீவத்தண்ணீர்" கொடுக்கப்படும் (வெளி 22:17).
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற
சிங்காசனம் அதிலிருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள் (வெளி. 22:3-5).
இந்த அடையாளங்களும், மற்றவைகளும் "மரணபரியந்தம்
உண்மையாயிருக்கும்," கிறிஸ்துவுக்குள்ளானவர்களுக்கு தேவன் ஆயத்தம் செய்துள்ள ஆய்ந்திட இயலாத செல்வங்களான நித்திய வாழ்வினைக் குறிக்கிறது (வெளி.2:10).
இறுதிக் குறிப்புகள்
fVictor P Hamilton, The Book of Genexis: Chapters I-17, The New International Commentary on the Old Testament (Grand Rapids, Mich Wm B. Eerdmans Publishing Co.. 1990), 142.≈Gordon J, Wenham, Genesis !-}5, Word Biblical Commentary, vol | (Waco, Tex.: Word Books. 1987), 35. Victor P. Hamilton, “naw," in TWOT, 2:902-3 Thomas E, McComiskey, "," in TWOT, 2.786 5John T. Willis, Genesis. The Living Word Commentary (Austin, Tex. Sweet Publishing Co., 1979), 98, #Wcnham, 57. 7Yom என்ற தலைப்பின் கீழ் பதிவான தனித்தனிப் பதிவுகள் Ludwig Koehler and Walter Baumgartnet, The Hebrew and Aramaic Lexicon of the Old Testament, study ed., trans. and ed. M. E. J. Richardson (Boston Brill, 2001), 1399–401 8முதல் மூன்று நாட்கள் நீண்டிருந்தன என விவாதிக்கலாம்.. பகலிரவை ஆளும் சூரிய, சந்திரன் படைக்கப்படுமுன்னே (1:16, 18). எப்படியிருப்பினும் வசனப்பகுதி படைப்பின் நாட்கள் வித்தியாசமான கால அளவுகள் எனக் கூறவில்லை. "Derek Kidner, Genesis: An Introduction and Commentary. The Tyndale Old Testament Commentaries (Downers Grove, III : Inter-Varsity Press, 1967), 39, "இந்த வாக்கியம் NASB யில் ஒரு ஓரத்தில் குறிப்பு பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது.
Ronald B. Allen, “zuy, in TWOT, 2,700, 12Robert L. Alden, "“& " in TFOT, 117, 12lhid, 14B. Otzen, "3" in Theological Dictionary of the Old Testament, trans. David E. Green, ed. G Johannes Botterweck and Helmer Ringgren (Grand Rapids, Mich. Wm. B. Eerdmans Publishing Co., 1990), 6:259, 262, 15Ki&dner, 60. 16பழைய ஏற்பாட்டில், வாழ்வு, சாவு அதுபோல் மனிதனின் ஆவி, ஆத்துமா என்பவைப் பற்றி ஏராளமான புரியாத புதிர்கள் உள்ளது. இத் தலைப்புகள் பற்றி முழு உண்மையும் இயேசு கிறிஸ்து மூலமாய் தொடர்ந்து ஜீவிக்கிரது, என அவர் மூலமாகவே உறுதியாக அறிகிறோம், கீழ்காணும் வேத வாக்கியங்கள் இந்தத் தலைப்புப் பற்றிய வெளிச்சத்தைத் தருகிறது மத். 10:28: லூக். 16:19-31; 20:37, 38, 23:43, யோவான் 11:25, 26: அப். 2:30, 31; 2 கொரி. 4:16-5:8; பிலி. 1:21-23; 1 பேதுரு 1:3; வெளி. 6:9-11, 17James E, Smith, “3,” in TFOT, 1168–69. BHoward N. Wallace, “Eden, Garden of,” in The Anchor Bible Dictionary, ed David Noel Freedman (New York: Doubleday, 1992), 2:281. Carl Schultz, "17" in TWOT, 2.646 29E, A. Speiser, Genesis, The Anchor Bible, vol. 1 (Garden City, N.Y Douhleday & Co., 1964), 26,
21Hamilton, The Book of Genesis: Chapters 1-17, 163-64 Willis, 106. Ibid., 107, 24Bruce Vawter, On Genesis: A New Reading (Garden City, NY: Doubleday & Co., 1977), 73. 28William White, "wx7,h in TWOT, 2.825 2®ரோசிம் அதன் சூழலில் சரியானப் பொருளைக் கண்டிபிடித்ததற்கு அப்பால், நான்கு ஆறுகள் பாய்ந்த திசைகள், புவியியல் சார்ந்த ஆசிரியரின் கருத்து அவர் வர்ணனை கேள்வியாகிறது. இது நோவாவின் பேழை தங்கின “ஆாராத் மலைத் தொடர்" பொதுவாக இருந்த இடம் (ஆதி. 8:4). 28Johm II, Walton, Victor H Matthews, and Mark W. Chavalas, The IVP Bible Background Commentary: Old Testament (Downers Grove, Ill. InterVarsity Press, 2000), 31, see James A. Sauer, "The River Runs Dry." Biblical Archaeology Review 22, no. 4 (July-August 1996): 52-57, 64, 28KJV Kush எத்தியோப்பியவாக சித்தரிக்கின்றது 2:13 ல். 3üSpeiser, 66, 72.
Hamilton, The Book of Gemesis: Chapters 1-17, 170. The Creation Epic 6.8, 34-37. John E. Hartley," in TWOT, 2.939 34Leonard J. Coppes, "pu," in TWOT, 2:562 Speiser, 17 Ronald Youngblood, Notes on Genesis, in The NIV Study Bible, ed. Kenneth Barker (Grand Rapids Mich. Zondervan Publishing House, 1985), 9 7John Donne, “Meditation XVIL," in The Complete Poetry and Selected Prose of John Donne & the Complete Poetry of William Blake, ed. Robert Silliman Hillyer, John Hayward, and Geoffrey Langdon Keynes (New York. Modern Library. Random House, 1941), 332, 8U. Bergmann, "nty," in Theological Lexicon of the Old Testamem, trans. Mark E. Biddie, ed. Emst Jenni and Claus Westermann (Peabody, Mass : Hendrickson Publishers, 1997), 2:872 9"உதவி" என்ற வினைச் சொல் (TTy, azar) எத்தனை முறை வருகிறது என்ற எண்ணிக்கையும் இதில் அடங்கும். "Leonard ), Coppes, "Tza, in TWOT, 2:550.
anWenham, 68 #[bid. Kidner, 65, 44William White, "npT]R." in TWOT, 2:833-34 $John E. Hartley, "." in TWOT, 2:768. Kenneth A. Mathews, Genesis 1-11.26. The New American Commentary, vol. 1A (Nashville: Broadman & Holman Publishers, 1996), 216-17 "Siegfried Wagner, "n" in Theological Dictionary of the Old Testament, trans. John T. Willis, ed. G Johannes Botterweck and Helmer Ringgren (Grand Rapids, Mich: Wm. B. Eerdmans Publishing Co., 1975), 2:166-68, 173 sHamilton, The Book of Genesis: Chapters 1-17, 179 #இது மனிதனுடைய பதிவுச் செய்யப்பட்ட முதல் உரை. 2:19, 20 ல் உயிரினங்களுக்குப் பெயர்ச் சூட்டினார். ஆனால் அவைகளை எவ்வாறு அழைத்தார் என பதிவு செய்யப்படவில்லை. toN P. Bratsiotis, “ux," in theological Dictionary of the Old Testament, trans, John T. Willis, ed. G. Johannes Botterweck and Helmer Ringgren (Grand Rapids, Mich,, Wm B. Eerdmans Publishing Co.. 1974), 1:223–26,
Hamilton, The Book of Genesis: Chapters !-17, 180 2Wenham, 70-71 8John E Hartley, Genesis, New International Biblical Commentary (Peabody. Mass, Hendrickson Publishers. 2000), 63 5"உடன்படிக்கை" (nīa, briti) என்ற சொல் ஆதியாகமம் 2:22-24ல் பயன் படுத்தப்படவில்லை என்றாலும், பிற்காலத்தில் brith திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தும் உடன்படிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது (நீதி. 2:17; மல். 2:14) திருமண உடன்படிக்கை தேவன் (கணவர்) மற்றும் இஸ்ரவேல் (மணப்பெண்)க்கும் சம்மந்தப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் பயணத்தில் இந்த "திருமணம்" நடந்தது (எரே. 31:32; எசே. 16:8). ôHartley, Gemesis, 64 Horst Secbass, “:12," in Theological Dictionary of the Old Testament, 2:52 vlbid., 2:52–60, ®Bruce K Waltke, Genesis: A Commentary (Grand Rapids, Mich: Zondervan Publishers, 2001), 90. டீலேவியராகமம் 18:6-17 ல் என்எஸ்எபி. நிர்வாணத்தைத் "பிறந்த மேனியை திறந்து" என எழுத்துப்படியான மொழிபெயர்ப்பை தருகிறது; வேறு மொழிபெயர்ப்புகளில் இச் சொற்றொடர் "பால் உறவு கொள்ளுதல்" என்று பொருள்படும்படியாகவோ. அல்லது இதற்கு ஒத்த ஒன்றாகவோ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (NIV; NLT; NCV; TEV; CEV; NJB; NEB; REB). உபாகமம் 16:13-15-த்தில் இது காணப்படாவிடினும், ஏனையப் பாடங்களில் இது தொழுகையுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது (யாத். 3:12; 4:23; 7:16; 10:26 காண்க).
81இந்த ஆவல் அருளப்பட்டதாகத் தெரிகிறது. சாலொமோன் என்பதற்கு "அமைதி" என்பதே வேறு பொருளாகும். (David F Payne, “Solomon," in The International Standard Bible Encyclopedia, rev. ed.. ed. Geoffrey W. Bromiley (Grand Rapids, Mich: Wm. B. Eerdmans Publishing Co., 1988], 4:566) ஏபிரசங்கியில் மேலே உள்ளதுபோல் வியாக்கியானம் எண்ணற்ற முறை திரும்பத் திரும்ப வந்துள்ளது. பிரசங்கி 12:13, 14 தெரிவிப்பது போல் சாலொமோன் தன் வீணடித்த வாழ்வு, நெறிகெட்ட வாழ்வு, சிலை வழிபாடு, போன்ற வழக்கங்களிலிருந்து மனம்மாறியிருக்கலாமென நம்புகிறோம். ஆனால் அவர் தம் மகன் ரெகோபெயாம் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களுக்கு மிக துக்கத்திற்குரிய ஒரு வழிமரபு சுதந்திரத்தை விட்டுச் சென்றுள்ளார். 3A Leo Oppenheim, trans., “The Annals of Sennacherib," in Ancient Near Eastern Texts Relating to the Old Testament, 3d ed., ed. James B. Pritchard (Princeton, N.J: Primceton University Press, 1969), 228. 2 இராஜாக்கள் 18, 19 மற்றும், ஏசாயா 36; 37 ஆகிய வேதப் பகுதிகளில் உள்ளவைகளை கவனிக்கவும். 64யோவேல் 3:18 ல் இது போன்று ஒரு குறிப்பு வருகிறது, "... ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்." கயோவேல் 3:18, மற்றும் சகரியா 14:8 வசனங்கள் ஒரே ஒரு அடிப்படை சிந்தனையை உள்ளடக்கியுள்ளது: இறைமக்களின் அழிவுக்கும், சிறையிருப்புக்கும் பின்னர், ஒருமுறைகூட தேவன் எருசலேமை ஆசீர்வதிப்பார். வாழ்வளிக்கும் தண்ணீர் தேவனுடைய வீட்டிலிருந்து (அல்லது நகரிலிருந்து) வழிந்தோடி தேசத்தை வளமாக்கும். 86இது ஏதேனிலிருந்த ஒற்றை "ஜீவ விருட்சம் (மரம்)" அல்ல, மூல மரத்தினின்று இந்த மரங்கள் வேறுபட்டதல்ல. ஏனெனில், அவையும் தேவன் வாழ்வுக்கும், சுகத்திற்கும் ஆதாரம் தேவன் என்று அடையாளப்படுத்தின. அவர் மட்டுமே அவர்களுக்கு நீண்ட வாழ்நாளையும் வாக்குறுதி செய்யப்பட்ட நாட்டில் உயர்தரமான வாழ்வையும் உடல்ரீதியான, ஆவிக்குரிய ஆரோக்கியத்தை வழங்குவார், ""இப்படிப்பட்ட சித்திரங்கள் பன்னிரண்டுக் முற்பிதாக்களின் ஏற்பாடு என்ற தள்ளுபடி எழுத்துக்களில் காணலாம். ஒரு பகுதி “கர்த்தரைப் பற்றிய அறிவு கடலின் நீரைப் பூமியில் ஊற்றினதுப் போலிருக்கும்" எனவும், மற்றும் ஒரு குறிப்பிட்ட சில இராஜாக்களும்,ஆசாரியனும் "பரதீசில் வாசல்களைத் திறக்கும்" ஒரு பகுதியினர் எதிர்பார்த்தனர். ஆவர் ஆதாம் முதல் அச்சுறுத்திய வாளை அகற்றிடுவார். "மற்றும் பரிசுத்தவான்களுக்கு ஜீவ மரத்தின் கனியை உண்ணக் கொடுப்பார்" (லேவியர் ஏற்பாடு 18:5, 10), பாபிலோனிய தால்மத்தில், பண்டிகையின் போது யூதர்கள் கைக்கொள்ளும் சடங்குகள் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. சுக்கா 48a-48b மற்றும் மிஸ்னா சுக்கா 3.8-4.9. லேவியராகமம் 23:34-43 தேவனின் பண்டிகைக்கான சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினபோது" மற்றும் "அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினபோது" என்பது அது கொண்டாடப்பட்டகாலம் (லேவி. 23:43).
