யோம் கிப்பூர் வகுப்பு 2 new
லேவியர்களின் மூன்று குடும்பங்கள் செய்த அன்றாடப் பணிகள்
1. வனாந்தரக் காலம் (ஆசரிப்புக் கூடாரப் பணிகள்)
கோகாத்தியர் (Kohathites):
- சுமந்து சென்ற பொருட்கள்:
- ஆசரிப்புக் கூடாரத்தின் திரைகள்-
- மூடுதிரைகள்-
- வாசலின் தொங்குதிரைகள்-
- பிராகாரத்தின் தொங்குதிரைகள் மற்றும் அதற்கான கயிறுகள்.
- பணியின் தன்மை:
- இவர்கள் தங்கள் பொருட்களைச் சுமந்து செல்ல மாட்டு வண்டிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
- தென் திசைக் காவல்:
- கூடாரத்தின் தெற்குப் பகுதியைக் காவல் காக்கும் அன்றாடப் பொறுப்பு (எண்ணாகமம் 3:29).
- பரிசுத்த பாத்திரங்களைப் பராமரித்தல்:
- ஆசாரியர்கள் (ஆரோனின் சந்ததியினர்)
- குத்துவிளக்கை ஏற்றுவது-
- தூபங்காட்டுவது போன்றவற்றைச் செய்யும் போது- அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
- யூத பாரம்பரியத்தின்படி-
- பாத்திரங்களைத் துடைத்துச் சுத்தமாக வைத்திருப்பது இவர்களின் வேலை.
- சமூகத்தப்பம் தயாரித்தல் (Showbread):
- ஒவ்வொரு ஓய்வுநாளிலும் சமூகத்தப்ப மேஜையில் வைக்கப்படும் 12 அப்பங்களைத் தயாரித்துச் சுடும் வேலை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (1 நாளாகமம் 9:32).
- இதற்கான மாவை அரைத்து- பிசைந்து தயார் செய்யும் அன்றாட வேலைகளை இவர்கள் செய்தனர்.
கெர்சோனியர் (Gershonites):
- சுமந்து சென்ற பொருட்கள்:
- உடன்படிக்கைப் பெட்டி-
- குத்துவிளக்கு-
- சமூகத்தப்ப மேஜை-
- தூபபீடம்-
- தகனபலிபீடம்
- பரிசுத்த ஸ்தலத்தின் பாத்திரங்கள்.
- பணியின் தன்மை:
- இந்தப் பரிசுத்த பொருட்களை வண்டிகளில் ஏற்றக்கூடாது;
- ஆசாரியர்கள் அவற்றை மூடிய பின்பு-
- கோகாத் புத்திரர்கள் அவற்றைத் தங்கள் தோள்களில்தான் சுமந்து செல்ல வேண்டும்
- மேற்றிசைக் காவல்:
- கூடாரத்தின் பின்புறமான மேற்குத் திசையைக் காவல் காக்கும் பொறுப்பு இவர்களுடையது (எண்ணாகமம் 3:23).
- திரைகள் மற்றும் துணிகளைப் பராமரித்தல்:
- ஆசரிப்புக் கூடாரத்தின் மேலூறைகள்-
- தொங்குதிரைகள் காற்றில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்தல்.
- சுத்தம் செய்தல்:
- பிராகாரத்தின் துணிகளில் படியும் வனாந்தரத்து தூசிகளைத் தட்டிப் பராமரிப்பது
- கிழிசல்கள் ஏற்பட்டால் தையல் வேலைகளைச் செய்வது இவர்களின் அன்றாடச் செயலாக இருந்தது.
மெராரியர் (Merarites):
- சுமந்து சென்ற பொருட்கள்:
- கூடாரத்தின் பலகைகள்-
- தாழ்ப்பாள்கள்-
- தூண்கள்-
- பாதங்கள் (Sockets)-
- பிராகாரத்தின் தூண்கள்-
- அவற்றின் முளைகள் மற்றும் கயிறுகள்.
- பணியின் தன்மை:
- இந்தப் பொருட்கள் மிகவும் கனமாக இருந்ததால்-
- இவற்றைச் சுமந்து செல்ல இவர்களுக்கும் மாட்டு வண்டிகள் வழங்கப்பட்டன.
- வட திசைக் காவல்:
- கூடாரத்தின் வடக்குப் பகுதியைக் காவல் காக்கும் பொறுப்பு இவர்களுடையது (எண்ணாகமம் 3:35).
- கட்டமைப்புப் பராமரிப்பு:
- கூடாரத்தின் பலகைகள்-
- தூண்கள்-
- வெள்ளிப் பாதங்கள் சரியாகப் பொருந்தியிருக்கிறதா எனத் தினமும் சோதிப்பது இவர்களின் வேலை.
- முளைகள் மற்றும் கயிறுகள்:
- பலத்த காற்று அடிக்கும் போது-
- கூடாரம் சரிந்து விடாமல் இருக்க-
- முளைகளை (Tent pegs) ஆழமாக அடித்து-
- கயிறுகளை இழுத்துக் கட்டும் தச்சு மற்றும் கட்டமைப்பு வேலைகளை இவர்கள் தினமும் செய்தனர்.
2. தேவாலயக் காலம்
கோகாத்தியர் (Kohathites):
- பிரதான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள்:
- தாவீதால் நியமிக்கப்பட்ட பிரதான பாடகரான ஏமான் (Heman) கோகாத் குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:33).
- வாசல் காப்பாளர்கள் (கோராகியர்):
- கோகாத்தின் சந்ததியான கோராகின் புத்திரர்கள்
- தேவாலயத்தின் பிரதான வாசல்களைக் காக்கும் காவல் அதிகாரிகளாகச் செயல்பட்டனர் (1 நாளாகமம் 26:1).
- தல்மூத் (Mishnah Middot) படி-
- இவர்கள் இரவில் தேவாலயத்தைச் சுற்றி
- 21 இடங்களில் காவல் காத்து-
- எரியும் பந்தங்களுடன் ரோந்து சென்றனர்.
- அப்பம் மற்றும் பலிப்பொருட்கள் தயாரிப்பு:
- காலையிலும் மாலையிலும் செலுத்தப்படும்
- போஜனபலிக்குத் (Meal offering) தேவையான
- மாவை எண்ணெயில் பிசைந்து தயாரிப்பதும்-
- ஓய்வுநாள் அப்பத்தைச் சுடுவதும் இவர்களுடைய அன்றாடப் பணியாகத் தொடர்ந்தது.
கெர்சோனியர் (Gershonites):
- பொக்கிஷங்களைக் காப்பவர்கள்:
- தேவாலயத்தின் பொக்கிஷங்கள்
- காணிக்கையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களின் கிடங்குகளை (Treasuries) நிர்வகிக்கும் பொறுப்பு (1 நாளாகமம் 26:21-22).
- நிதி மற்றும் கணக்கு வழக்குகள்:
- தேவாலயப் பராமரிப்பிற்காக வரும் காணிக்கைகளைப் பெற்று-
- அதைத் தேவாலய வேலைகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் கணக்காளர்களாகவும் இவர்கள் செயல்பட்டனர்.
- பாடகர்கள்:
- ஆசாப் (Asaph) என்ற பிரதான பாடகர் கெர்சோன் குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:39).
- இவர்கள் கோகாத்தியரோடு இணைந்து தேவாலய ஆராதனைகளில் வாத்தியங்களை வாசித்துப் பாடினர்.
மெராரியர் (Merarites):
- பாடகர்கள்:
- ஏத்தான் (Ethan - யெதுத்தூன்) என்ற பாடகர் மெராரி குடும்பத்தைச் சேர்ந்தவர் (1 நாளாகமம் 6:44).
- இவர்களும் தேவாலய ஆராதனைகளில் தினமும் இசைப் பணியாற்றினர்.
- பொருட்களின் கிடங்குப் பராமரிப்பு:
- வனாந்தரத்தில் கட்டமைப்புகளைப் பார்த்துக் கொண்டதைப் போலவே-
- தேவாலயக் காலத்திலும் கட்டமைப்புப் பொருட்கள்-
- இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள்
- தேவாலயத்தின் பராமரிப்புப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் இருந்தது.
- வெளிப் பிராகாரக் காவல்:
- தேவாலயத்தின் வெளிப் பிராகாரங்கள்
- கட்டமைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை இவர்கள் அன்றாடம் காவல் காத்தனர் (1 நாளாகமம் 26:10).
ஆசாரியர்கள் யார்?
ஆசாரியர்கள்:
- ஆரோன் வம்சம்
- யாத்திராகமம் 28:1
ஆகவே:
➡ எல்லா ஆசாரியர்களும் லேவியர்கள்
➡ ஆனால் எல்லா லேவியர்களும் ஆசாரியர்கள் அல்ல
ஆலயத்தில் இருந்த 24 குழு அமைப்புகள்
- ஆசாரியர்கள் 24 குழுக்கள் நாளாகமம் 24:7–18
- இசை லேவியர்கள் 24 குழுக்கள் 1 நாளாகமம் 25:9–31
- வாசற்காவலர்கள் 24 குழுக்கள் 1 நாளாகமம் 26
லேவியர்களின் பணிகள்
- ஆலய காவல் 1 நாளா 23:5
- இசை / துதி 1 நாளா 25:1
- ஆலய வேலை 1 நாளா 23:28
- கதவுக்காப்பு 1 நாளா 26:1
லேவியர்களின் சேவை பிரிவு
- ஆலய வேலை 24-000 பேர் 1 நாளா 23:4
- அதிகாரிகள் / நியாயாதிபதிகள் 6-000 பேர் 1 நாளா 23:4
- வாசற்காவலர்கள் 4-000 பேர் 1 நாளா 23:5
- இசை / துதி 4-000 பேர் 1 நாளா 23:5
- மொத்தம்: ➡ 38-000 லேவியர்கள்
24 ஆசாரியக் குழுக்கள் (1 நாளாகமம் 24:7–18)
1- யோயாரீப்- Jehoiarib- 1 நாளா 24:7
2- எதாயா- Jedaiah- 1 நாளா 24:7
3- ஹாரீம்- Harim- 1 நாளா 24:8
4- சேயோரீம்- Seorim- 1 நாளா 24:8
5- மால்கியா- Malchijah- 1 நாளா 24:9
6- மியாமீன்- Mijamin- 1 நாளா 24:9
7- ஹக்கோஸ்- Hakkoz- 1 நாளா 24:10
8- அபியா- Abijah- 1 நாளா 24:10
9- யேசுவா- Jeshua- 1 நாளா 24:11
10- செக்கனியா- Shecaniah- 1 நாளா 24:11
11- எலியாசீப்- Eliashib- 1 நாளா 24:12
12- யாக்கீம்- Jakim- 1 நாளா 24:12
13- உப்பா- Huppah- 1 நாளா 24:13
14- யெசேபேப்- Jeshebeab- 1 நாளா 24:13
15- பில்கா- Bilgah- 1 நாளா 24:14
16- இம்மேர்- Immer- 1 நாளா 24:14
17- ஹேசீர்- Hezir- 1 நாளா 24:15
18- ஹப்பிச்சேஸ்- Happizzez- 1 நாளா 24:15
19- பெத்தாஹியா- Pethahiah- 1 நாளா 24:16
20- யெகெஸ்கேல்- Jehezekel- 1 நாளா 24:16
21- யாக்கீன்- Jachin- 1 நாளா 24:17
22- காமூல்- Gamul- 1 நாளா 24:17
23- தெலாயா- Delaiah- 1 நாளா 24:18
24- மாசியா- Maaziah- 1 நாளா 24:18
யூத ஆலயத்தில் ஒரு நாள் சேவை – முழு படிநிலை
ஆசாரியர்கள் எழுதல் மற்றும் சுத்திகரிப்பு
நேரம்:
➡ அதிகாலை (சூரிய உதயத்திற்கு முன்) நடைமுறை
- ஆசாரியர்கள் Mikveh (சுத்திகரிப்பு குளியல்) செய்வார்கள்
- பரிசுத்த உடைகளை அணிவார்கள்
- யாத்திராகமம் 28:40–43
பலிபீடத்தின் சாம்பலை அகற்றுதல் நடைமுறை
- முந்தைய நாள் பலிகளின் சாம்பல் அகற்றப்பட்டது
- புதிய மரக்கட்டைகள் வைக்கப்பட்டது
- லேவியராகமம் 6:10–13
காலை Tamid பலி தயாரிப்பு நடைமுறை
- குற்றமற்ற ஆட்டுக்குட்டி ஆய்வு செய்யப்பட்டது
- பலிக்குத் தயாராக்கப்பட்டது
- எண்கள் 28:3–4
காலை தகனபலி (Morning Tamid)
நேரம்
➡ காலை மூன்றாம் மணி (சுமார் 9 AM) நடைமுறை
- ஆட்டுக்குட்டி அறுக்கப்பட்டது
- இரத்தம் பலிபீம்யில் தெளிக்கப்பட்டது
- மிருகம் பலிபீம்யில் எரிக்கப்பட்டது
தானியபலி மற்றும் பானபலி பொருட்கள்
- நல்ல மாவு
- ஒலிவ் எண்ணெய்
- திராட்சரசம்
- எண்கள் 28:5–7
தூப பலி நடைமுறை
- பொற்கால பலிபீம்யில் தூபம் புகைக்கப்பட்டது
- மக்கள் வெளியில் ஜெபித்தார்கள்
- யாத்திராகமம் 30:7
- லூக்கா 1:10
வேதாகம வாசிப்பு மற்றும் ஆசீர்வாதம் நடைமுறை
- வேதாகம வசனங்கள் வாசிக்கப்பட்டது
- ஆரோனின் ஆசீர்வாதம் கூறப்பட்டது
- எண்கள் 6:24–26
மாலை Tamid பலி
நேரம் ஒன்பதாம் மணி (3 PM)
- எண்கள் 28:4
மாலை தூப பலி
- யாத்திராகமம் 30:8
இரவு காவல் நடைமுறை
- பலிபீடத்தின் தீ தொடர்ந்து எரிந்தது
- லேவியர்கள் காவல் பார்த்தனர்
- லேவியராகமம் 6:13
ஒரு நாள் ஆலய சேவை – முழு Timeline நேரம்- நிகழ்வு
- அதிகாலை - ஆசாரியர் சுத்திகரிப்பு
- காலை - பலிபீம் சுத்தம்
- காலை 9 - காலை Tamid பலி
- காலை - தானியபலி + பானபலி
- காலை - தூப பலி
- காலை - வேதாகம வாசிப்பு
- மாலை 3 - மாலை Tamid பலி
- மாலை - தூப பலி
- இரவு - ஆலய காவல்
ஆலயத்தில் ஒரு நாளில் வேலை செய்த ஆசாரியர்களின் எண்ணிக்கை
- தாவீது காலத்தில் ஆசாரியர்கள் 24 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
- 1 நாளாகமம் 24:1–19
- ஒவ்வொரு குழுவும் ஒரு வாரம் ஆலயத்தில் சேவை செய்தது.
ஒரு குழுவில் இருந்த ஆசாரியர்கள் (மிஷ்னா + யூத வரலாறு):
- ஒரு ஆசாரியக் குழுவில் சுமார்
- 700 – 900 ஆசாரியர்கள்
- ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் வேலை செய்யவில்லை.
ஒரு நாளில் சேவை செய்த ஆசாரியர்கள்
மிஷ்னா (Tamid) படி தினசரி சேவைகளுக்கு சுமார்:
- 50 – 60 ஆசாரியர்கள்
- அவர்கள் பல்வேறு பணிகளில் இருந்தனர்.
ஒரு நாள் ஆலய சேவை – ஆசாரியர்களின் பணிகள்
- பலிபீம்யை சுத்தம் செய்தல் - 5–10
- காலை Tamid பலி - 13
- தூப பலி - 1
- விளக்குகளை ஏற்றுதல் - 2
- தகன பலி ஏற்பாடு - 10+
- மற்ற பலிகள் - 10–20
- மொத்தம் சுமார் 50–60 ஆசாரியர்கள்
லேவியர்கள் (Levites) ஆசாரியர்களுடன் சேர்ந்து:
- பாடகர்கள்
- இசைக்கலைஞர்கள்
- காவலர்கள்
- இவர்களும் சேவை செய்தனர்.
- சுமார் 150–200 லேவியர்கள்
மொத்த ஆலய பணியாளர்கள் (ஒரு நாள்)
- ஆசாரியர்கள் - 50–60
- லேவியர்கள் - 150–200
- காவலர்கள் - 20–30
- மொத்தம்: 200 – 300 பேர்
- ஒரு நாளில் ஆலயத்தில் சேவை செய்தனர்.
யோம் கிப்பூர் – 15 படிநிலை (Mishnah Yoma Study)
- அதிகாலை – பிரதான ஆசாரியர் தயாராகுதல்
- இரவு முழுவதும் தோரா வாசிக்கப்பட்டது
- அதிகாலையில் எழுந்தார்
- ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்
- முதல் சுத்திகரிப்பு குளியல் (Mikveh)
- பிரதான ஆசாரியர் முதல் முறையாக குளித்தார்
- மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
- தினசரி காலை Tamid பலி
- வழக்கமான காலை தகனபலி முதலில் நடந்தது
- இது யோம் கிப்பூர் ஆரம்பம் அல்ல;
- தினசரி சேவை எண்கள் 28
- பிரதான ஆசாரியரின் முதல் பாவ ஒப்புக்கொள்ளல் (Confession)
- மீண்டும் தண்ணீரில் மூழ்கித் தன்னைச் சுத்திகரித்தார்
- பொன் வஸ்திரங்களைக் களைந்துவிட்டு
- சாதாரண வெள்ளைச் சணல் வஸ்திரங்களை அணிந்துகொள்வார்.
- காளையின் மேல் கைகளை வைத்தார்
- தனது பாவங்களையும் குடும்பத்தின் பாவங்களையும் ஒப்புக்கொண்டார்
- லேவி 16:6
- இரண்டு ஆடுகளுக்கான சீட்டு
- இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களை நிறுத்தி
- ஒரு பொற்பெட்டியிலிருந்து இரண்டு சீட்டுகளை எடுப்பார்
- வலது கையில் - “கர்த்தருக்காக”
- இடது கையில் - “போக்காடு ”
- போக்காட்டின் தலையில் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டுவார்
- வாசாலிலும் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டுவார்
- கர்த்தருக்கான ஆட்டையும் காளையையும் பலியிடுவதற்காக நிறுத்திவைப்பார்.
- இரண்டாவது பாவ ஒப்புக்கொள்ளல்
- மீண்டும் காளையின் மேல் கைகளை வைத்தார்
- ஆசாரியர்களுக்காக பாவ ஒப்புக்கொண்டார்
- தூபம் கொண்டு Holy of Holies-க்கு செல்லுதல்
- பலிபீடத்திலிருந்து நெருப்பைத் தூபகலசத்தில் எடுப்பார்
- மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்
- தூபவர்க்கத்தைப் போட்டுப் புகையினால் கிருபாசனத்தை மறைப்பார்.
- லேவி 16:12–13
- காளையின் இரத்தத்தை தெளித்தல்
- காளையை பலியிடுவார்
- Mercy Seat முன் 8 முறை இரத்தம் தெளித்தார்
- லேவி 16:14
- ஆட்டுக்குட்டி பலி (மக்களுக்காக)
- கர்த்தருக்கான ஆடு பலியாக்கப்பட்டது
- லேவி 16:15
- ஆட்டின் இரத்தம் Holy of Holies-ல் தெளித்தல்
- மீண்டும் Holy of Holies-ல் இரத்தம் தெளித்தார்
- ஆலயத்தை சுத்திகரித்தல்
- ஆலயம்
- பலிபீடம்
- பரிசுத்த ஸ்தலம்
- இவை எல்லாம் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டது.
- Scapegoat மேல் பாவ ஒப்புக்கொள்ளல்
- உயிருள்ள போக்காட்டின் தலையில்
- பிரதான ஆசாரியன் தன் இரு கைகளையும் வைத்தார்
- இஸ்ரவேலரின் சகல பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டு
- அதின் மேல் சுமத்துவார்.
- அந்த ஆடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டது
- நியமிக்கப்பட்ட ஒருவன் அந்தப் போக்காட்டைப் பாளையத்திற்கு வெளியே வனாந்தரத்திற்குக் கொண்டு செல்வான்
- செங்குத்தான பாறையிலிருந்து (Zuk) கீழே தள்ளிவிடுவான்.
- லேவி 16:21–22
- தினசரி மாலை தகனபலிகள்
- மூன்றாம் முறை குளித்தார்
- மீண்டும் மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
- இரண்டு ஆட்டுக்கிடாய்கள் தகனபலியாக்கப்பட்டது
- லேவி 16:24
- நான்காம் குளியல் – மீண்டும் சாதாரண ஆடை மாற்றுதல்
- மீண்டும் ஆடை மாற்றம்
- Mikveh நான்காம் முறை குளியல்
- மீண்டும் வெள்ளை ஆடை
- Holy of Holies உள்ளே விட்ட பொருட்களை எடுத்தார்.
- லேவியராகமம் 16 , எண்கள் 29 வாசித்தார்.
- நாள் முடிவு மற்றும் மக்களுக்கு ஆசீர்வாதம்
- மீண்டும் ஐந்தாம் முறை குளியல்
- மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்தார்
- சூரியன் மறைந்தவுடன் யோம் கிப்பூர் உபவாசம் நிறைவடையும்;
- எக்காளம் (Shofar) முழங்கப்பட்டுப் பண்டிகை முடிவுக்கு வரும்.
- மக்கள் அவரை மகிழ்ச்சியோடு அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்;
- வீடுகளில் ஆனந்தமாக உணவருந்துவார்கள்.
- வேத ஆதாரம்: பிரசங்கி 9:7
- யூத மரபு சொல்வது:
- மக்கள் பிரதான ஆசாரியரை வீட்டிற்கு விழாவாக அழைத்துச் சென்றனர்.
யோம் கிப்பூர் vs இயேசுவின் சிலுவை 25 தீர்க்கதரிசன ஒப்பீடுகள்
- பிரதான ஆசாரியர் - இயேசு நித்திய பிரதான ஆசாரியர் - எபி 4:14
- பரிசுத்த ஆடை - இயேசுவின் நீதித்தன்மை - எபி 7:26
- காளை பாவநிவாரண பலி - இயேசு பாவ பலி - எபி 9:12
- இரண்டு ஆடுகள் - இயேசு பலியும் பாவத்தை எடுத்துச் செல்லும் ஆட்டும் - ஏசா 53:6
- இரத்தம் பரிகாரம் - கிறிஸ்துவின் இரத்தம் மீட்பு - எபி 9:22
- Holy of Holies நுழைவு - இயேசு பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்தார் - எபி 9:24
- வருடத்தில் ஒருமுறை - கிறிஸ்து ஒருமுறை என்றென்றைக்கும் - எபி 10:12
- தூபம் - கிறிஸ்துவின் ஜெபமும் மத்தியஸ்தமும் - ரோமா 8:34
- பாவ ஒப்புக்கொள்ளல் - மனித பாவத்தை சுமந்தார் - ஏசா 53:5
- Scapegoat - பாவத்தை அகற்றினார் - யோவா 1:29
- பாவம் வனாந்தரத்திற்கு - பாவம் முழுமையாக அகற்றப்பட்டது - மீகா 7:19
- இரத்தம் Mercy Seat - கிறிஸ்து கிருபா ஆசனம் - ரோமா 3:25
- ஆலயம் சுத்திகரிப்பு - மனசாட்சி சுத்திகரிப்பு - எபி 9:14
- பலிபீடம் சுத்தம் - விசுவாசிகள் பரிசுத்தம் - எபி 10:10
- ஆசாரியர் நடுவுரையாளர் - கிறிஸ்து ஒரே மத்தியஸ்தர் - 1 திமோ 2:5
- மக்கள் வெளியே காத்தனர் - இயேசு வெளியே துன்பப்பட்டார் - எபி 13:12
- பாவம் மாற்றப்பட்டது - பாவம் கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டது - 2 கொரி 5:21
- தகனபலிகள் - முழு அர்ப்பணிப்பு - எபே 5:2
- இரத்த தெளித்தல் - கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிப்பு - 1 யோவா 1:7
- மக்களுக்கு பரிகாரம் - உலகத்திற்கு மீட்பு - 1 யோவா 2:2
- ஆசாரியர் உயிருடன் வெளியே வருதல் - இயேசு உயிர்த்தெழுதல் - எபி 7:25
- மக்களுக்கு ஆசீர்வாதம் - கிறிஸ்துவின் ஆசீர்வாதம் - எபே 1:3
- பாவம் மறைக்கப்பட்டது - பாவம் நீக்கப்பட்டது - எபி 10:17
- தற்காலிக பரிகாரம் - நித்திய பரிகாரம் - எபி 9:12
- நிழல் - கிறிஸ்து உண்மை - எபி 10:1
பலியில் ஆசாரியனுக்கு காளை ஜனங்களுக்கு ஆடு ஏன் இந்த வித்தியாசம்
1. பாவத்தின் அளவீடும் பொறுப்பும் (Degree of Responsibility)
- பிரதான ஆசாரியனின் பாவம் (காளையின் பலி):
- பிரதான ஆசாரியன் ஒட்டுமொத்த இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய பிரதிநிதியாக (Spiritual Representative) இருக்கிறான்.
- அவன் பாவம் செய்தால், அது முழு சபையையும் குற்றவாளியாக்கும் (லேவியராகமம் 4:3).
- அவனுடைய பொறுப்பு அதிகம் என்பதால்,
- அவனுடைய பாவம் மிகக் கடுமையானதாகக் கருதப்பட்டது.
- எனவே, விலங்குகளிலேயே மிகப் பெரியதும், அதிக விலையுள்ளதுமான இளங்காளை அவனுடைய பாவ நிவாரணத்திற்காகத் தேவைப்பட்டது.
- மக்களின் பாவம் (வெள்ளாட்டுக் கடாவின் பலி):
- ஒரு தனிமனிதனோ அல்லது சாதாரண மக்களோ செய்யும் பாவம்,
- பிரதான ஆசாரியன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தேசத்தைப் பாதிப்பதில்லை.
- எனவே, அவர்களுக்குக் காளையை விடச் சற்று மதிப்பு குறைவான வெள்ளாட்டுக் கடா போதுமானதாகக் கருதப்பட்டது (லேவியராகமம் 4:23, 27).
மூன்றுவித பலி ஏன் ?
ஆரோன் மற்றும் அவனது குடும்பத்திற்கான பலி (ஆழமான இரகசியங்கள்)
- ஆரோன் பிரதான ஆசாரியனாக, தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருந்தாலும்,
- அவனும் பாவம் செய்யும் இயல்புடைய ஒரு சாதாரண மனிதனே லேவியராகமம் 16:6)
- தேவனுடைய சமூகத்தில் மக்களின் பாவங்களுக்காகப் பரிந்துபேசச் செல்லும் ஒரு மத்தியஸ்தன்,
- முதலில் தன் சொந்தப் பாவங்களிலிருந்து முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும் எபிரெயர் 5:3
- தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அவன் செலுத்தும் காளையின் பலி,
- தேவனுக்கு முன்பாக அவனுடைய சுயநீதி தகுதியற்றது என்பதையும்,
- அவன் தேவனுடைய கிருபையையே சார்ந்திருக்கிறான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. (லேவியராகமம் 16:11)
- இது புதிய ஏற்பாட்டுப் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நேர்மாறான ஒரு நிழலாட்டமாகும்;
- இயேசு பாவமில்லாதவராக இருந்ததால், தமக்காகப் பலி செலுத்த வேண்டிய அவசியமிருக்கவில்லை. (எபிரெயர் 7:27)
இஸ்ரவேலுடைய எல்லா மக்களுக்கான பலி (ஆழமான இரகசியங்கள்)
- இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்த ஜாதியாக இருந்தாலும்,
- அவர்கள் அன்றாடம் செய்யும் மீறுதல்களும் பாவங்களும் தேவனுக்கும் அவர்களுக்குமான உறவைத் துண்டிக்கின்றன. (லேவியராகமம் 16:15)
- பரிசுத்தமுள்ள தேவன் அவர்கள் நடுவில் தொடர்ந்து வாசம் செய்ய வேண்டுமென்றால்,
- ஒட்டுமொத்த சபையாரின் அறியாமைப் பாவங்களும்,
- அக்கிரமங்களும் இரத்தத்தினால் மூடப்பட (Atonement) வேண்டும். (லேவியராகமம் 16:30)
- இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் (பலியாடு மற்றும் போக்காடு) மூலமாக,
- மக்களின் பாவங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதும்,
- பாவங்கள் அவர்களை விட்டு நிரந்தரமாக அகற்றப்படுவதும் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படுகிறது. (லேவியராகமம் 16:21-22)
- பழைய உடன்படிக்கையின் இந்தச் சடங்கு,
- முழு உலகத்தின் பாவங்களுக்காகவும் கல்வாரியில் இயேசு கிறிஸ்து செலுத்திய ஒரே பலியின் பிரம்மாண்டமான இரகசியத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. (1 யோவான் 2:2)
ஆசாரிப்புக் கூடாரத்தின் பரிசுத்தத்திற்கான பலி (ஆழமான இரகசியங்கள்)
- ஆசாரிப்புக் கூடாரம் உயிரற்ற ஒரு பொருளாக இருந்தாலும்,
- பாவம் செய்யும் மனிதர்கள் நடுவில் அது இருப்பதால் மக்களின் தீட்டுகளினால் அதுவும் அசுத்தமடைகிறது. (லேவியராகமம் 16:16)
- பரிசுத்தமுள்ள தேவன் அசுத்தமான ஒரு இடத்தில் வாசம் செய்யமாட்டார்;
- எனவே தேவன் தங்கியிருக்கும் அந்த ஸ்தலமும் இரத்தத்தினால் பிராயச்சித்தம் செய்யப்பட்டுச் சுத்திகரிக்கப்பட வேண்டும். (லேவியராகமம் 16:19)
- மக்களின் மீறுதல்கள் பரலோகத்தின் சாயலாகிய ஆசாரிப்புக் கூடாரத்தின் தூய்மையைப் பாதிக்கிறது என்பதை இந்தச் சடங்கு ஆழமாக உணர்த்துகிறது. (லேவியராகமம் 16:20)
- இதன் மாபெரும் இரகசியம்:
- பரலோகத்திலுள்ள மெய்யான பரிசுத்த ஸ்தலமும்,
- புதிய உடன்படிக்கையின் தேவாலயமாகிய நாமும் (விசுவாசிகள்)
- மிருகங்களின் இரத்தத்தால் அல்ல,
- கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மட்டுமே சுத்திகரிக்கப்பட முடியும். (எபிரெயர் 9:21-23)
இந்த மூன்று பலிகளும் ஒன்றன்பின் ஒன்றாக, மிகத் துல்லியமான வரிசைக்கிரமத்தில் செலுத்தப்பட வேண்டும்; வரிசை மாறினாலோ, தேவனுடைய கட்டளை மீறப்பட்டாலோ பிரதான ஆசாரியன் மரிக்க நேரிடும். லேவியராகமம் 16:2)
வரிசைக்கிரமம் மற்றும் மரண அபாயத்தின் ஆழமான இரகசியங்கள்
- தேவன் மகா பரிசுத்தராயிருப்பதால்,
- பாவம் நிறைந்த மனிதன் தன்னுடைய விருப்பத்தின்படியோ
- தனக்குத் தோன்றிய வரிசையிலோ
- தேவனுடைய சந்நிதிக்குள் நுழைய முடியாது. (லேவியராகமம் 16:2)
- பிரதான ஆசாரியன் இஸ்ரவேல் மக்களுக்காகப் பரிந்துபேசும் ஒரு மத்தியஸ்தனாகச் செயல்படுவதற்கு முன்பாக,
- அவன் தன்னுடைய சொந்தப் பாவங்களிலிருந்து முற்றிலுமாகச் சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும். (எபிரெயர் 5:3)
- ஆசாரியன் முதலில் தனக்காகக் காளையைப் பலியிடாமல்,
- மக்களின் பாவங்களுக்காக வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தைக் கொண்டு சென்றால்,
- அவன் தன் சொந்தப் பாவத்தோடேயே தேவ சமூகத்தில் நிற்பான்;
- இதனால் அவன் உடனடியாக மரிக்க நேரிடும். (லேவியராகமம் 16:11)
- இரத்தத்தைத் தெளிப்பதற்கு முன்பாகவே,
- தூபகலசத்தின் புகையினால் கிருபாசனத்தை மறைக்க வேண்டும்;
- இந்த வரிசை மாறினால் தேவனுடைய மகிமையைக் கண்டு ஆசாரியன் சாக நேரிடும். (லேவியராகமம் 16:13)
கட்டளை மீறப்பட்டால் மரணம் சம்பவிப்பதற்கான காரணங்கள்
- கிருபாசனத்தின் மேல் கேருபீன்களின் நடுவே வாசம் செய்யும் தேவனுடைய பிரசன்னம் பட்சிக்கிற அக்கினியாகும்;
- பாவ நிவர்த்தி இல்லாமல் அங்கு செல்வது மரணத்தைக் கொண்டுவரும். (24:17)
- ஒரு மனிதன் முகமுகமாகத் தேவனைக் கண்டு உயிரோடிருக்க முடியாது (யாத் 33:20)
- இந்தத் துல்லியமான சட்டங்கள் பிரதான ஆசாரியனைக் கொல்வதற்காக அல்ல,
- மாறாகப் பரிசுத்த தேவனுடைய சமூகத்தில் அவன் சாகாதபடிக்கு அவனைக் காக்கும் கவசமாகவே கொடுக்கப்பட்டன. (லேவியராகமம் 8:35)
