யோம் கிப்பூர் வகுப்பு 1

யோம் கிப்பூர்

ஏழாவது மாதத்தின் பண்டிகைகள் (லேவியராகமம் 23)

  • எபிரெய நாட்காட்டியின்படி ஏழாவது மாதம் முழுவதும் பண்டிகை காலமாகவே கருதப்படுகிறது.
  • இது "கர்த்தரின் பண்டிகை" என்று லேவியராகமம் 23:1-2 கூறுகிறது.
  • ஏழாம் மாதம் 1-ஆம் தேதி:
    • ரோஸ் அஷானா (எக்காள பண்டிகை) - ஒரு நாள் மட்டும்.
  • ஏழாம் மாதம் 10-ஆம் தேதி:
    • பாவ நிவாரண பலி நாள் (யோம் கிப்பூர்) - ஒரு நாள் மட்டும்.
  • ஏழாம் மாதம் 15 முதல் 22 வரை:
    • கூடாரப் பண்டிகை நாட்கள்.
  • இந்த பாவ நிவாரண பலி பண்டிகையானது இஸ்ரவேலர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக (option) அல்லாமல்,
  • கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.

பாவ நிவாரண பலி பண்டிகையின் பின்னணி (லேவியராகமம் 8 & 10)

பரிசுத்த அழைப்பு:

  • இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து மீட்கப்பட்டு,
  • சீனாய் மலையடியில் ஆசாரிப்புக் கூடாரத்தைக் (Tabernacle) கட்டி முடித்த பிறகு,
  • தேவன் மோசேயிடம் ஆரோனையும் அவனுடைய குமாரர்களையும் ஆசாரிய ஊழியத்துக்காகப் பிரதிஷ்டை (Ordination) செய்யும்படி கட்டளையிட்டார்.

ஏழு நாட்கள்:

  • இந்தச் சுத்திகரிப்பு மற்றும் பிரதிஷ்டை ஆராதனை
  • தொடர்ந்து ஏழு நாட்கள் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் நடைபெற்றது.
  • பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகள் தொடங்கின (லேவியராகமம் 8:33).

எட்டாவது நாளின் மகிமை:

  • எட்டாவது நாளில் அவர்கள் முதல் முறையாகப் பலிகளைச் செலுத்தியபோது,
  • கர்த்தருடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன்பாக வெளிப்பட்டது.
  • இதைக் கண்ட மக்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டார்கள்.
  • கர்த்தருடைய மகிமை ஜனங்கள் அனைவருக்கும் முன்பாக வெளிப்பட்டது (லேவியராகமம் 9:23).
  • கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு,
  • பலிபீடத்தின் மீதிருந்த தகனபலியையும் கொழுப்பையும் பட்சித்தது;
  • ஜனங்கள் முகங்குப்புற விழுந்து கர்த்தரைத் தொழுதுகொண்டார்கள் (லேவியராகமம் 9:24).

இறையியல் முக்கியத்துவம்:

  • தேவன் தம்முடைய மக்களுடன் வாசம் செய்ய விரும்புகிறார் என்பதையும்,
  • ஆனால் அவரை அணுகுவதற்குப் பரிசுத்தமும்,
  • சரியான மத்தியஸ்தர்களும் (ஆசாரியர்கள்) தேவை என்பதையும்
  • இந்தப் பிரதிஷ்டை நிகழ்வு உணர்த்தியது.

நாதாப், அபியூ செய்த மீறுதல் (லேவியராகமம் 10)

  • ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும்
  • கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியைத் (Strange Fire) தங்கள் தூபகலசங்களில் இட்டு,
  • கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள் (லேவியராகமம் 10:1).
  • கர்த்தர் சொல்லாத ஒரு காரியத்தை,
  • கர்த்தர் சொல்லாத ஒரு நேரத்தில்,
  • கர்த்தர் சொல்லாத ஒரு முறையில்
  • அவர்கள் செய்ததே இந்த "அந்நிய அக்கினி" ஆகும் (லேவியராகமம் 10:1).
  • இதன் விளைவாக, கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு,
  • அவர்கள் இருவரையும் பட்சித்தது;
  • அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் மரித்தார்கள் (லேவியராகமம் 10:2).
  • தம்மண்டையில் சேருகிறவர்களால் தாம் பரிசுத்தம் பண்ணப்பட வேண்டும் என்பதையும்,
  • தேவனுடைய சந்நிதிக்குள் விருப்பம்போல நுழைய முடியாது என்பதையும்
  • இந்தச் சம்பவம் உணர்த்தியது (லேவியராகமம் 10:3).

எது அந்நிய அக்கினி?:

  • அவர்கள் தூபங்காட்டப் பயன்படுத்திய நெருப்பு,
  • கர்த்தரால் பற்றவைக்கப்பட்ட பலிபீடத்திலிருந்து (Brazen Altar) எடுக்கப்படாமல்,
  • வேறு ஏதோ ஒரு சாதாரண இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.
  • அவர்கள் கர்த்தர் சொல்லாத நேரத்தில்,
  • சொல்லாத முறையைப் பயன்படுத்தியிருக்கலாம்.
  • மதுபானம் அருந்திவிட்டு,
  • நிதானமில்லாமல் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்திருக்கலாம்
  • (இதற்குப் பிறகுதான் ஆசாரியர்கள் மது அருந்தக் கூடாது என்ற கட்டளை லேவியராகமம் 10:9-ல் வருகிறது).

நாதாப் மற்றும் அபியூ மரணத்தின் இறையியல் பாடங்கள்

பரிசுத்தத்தின் அளவு:

  • தேவன் மிக மிகச் சிறிய பாவத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதை இது காட்டுகிறது.
  • "தம்மண்டையில் சேருகிறவர்களால் தாம் பரிசுத்தம் பண்ணப்பட வேண்டும்" (லேவி 10:3) என்பதே தேவனுடைய நிபந்தனை.

வழிபாட்டில் சுய விருப்பம் கூடாது:

  • தேவனை நம்முடைய விருப்பப்படி ஆராதிக்க முடியாது;
  • அவர் சொல்லியிருக்கிறபடிதான் ஆராதிக்க வேண்டும்.
  • 'அந்நிய அக்கினி' என்பது தேவனுடைய வார்த்தைக்கு முரணான சுயமான வழிபாட்டு முறைகளைக் குறிக்கிறது.

தலைவர்களுக்கான எச்சரிக்கை:

  • நாதாப் மற்றும் அபியூ சாதாரண மக்கள் அல்ல;
  • அவர்கள் தேசத்தின் மிக உயரிய ஆன்மீகத் தலைவர்கள்.
  • பொறுப்பு அதிகரிக்கும்போது, தண்டனையும் கடுமையாகவே இருக்கும்.

பாவ நிவாரண பலி பண்டிகை உருவான காரணம் (லேவியராகமம் 16)

எச்சரிக்கை: (லேவியராகமம் 16:1-3).

  • மோசேயின் மூலமாகத் தேவன் ஆரோனை எச்சரிக்கிறார்:
  • "உன் குமாரர்கள் செத்ததுபோல நீயும் சாகாதபடிக்கு,
  • நீ எப்போது வேண்டுமானாலும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் (கிருபாசனத்திற்கு முன்பாக) வரக்கூடாது." (லேவியராகமம் 16:2).

புதிய சட்டம் (System Reboot): (லேவியராகமம் 16:32-34).

  • ஒரு வருட முழுவதும் இஸ்ரவேல் மக்களின் பாவங்கள், மீறுதல்கள் மற்றும் தீட்டுகளினால் ஆசாரிப்புக் கூடாரம் அசுத்தமடைகிறது.
  • வருஷத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய வேண்டும் என்ற சட்டம் இந்த நிகழ்விற்குப் பின்னரே உருவாக்கப்பட்டது
  • நாதாப், அபியூ போலச் சாகாதபடிக்கு,
  • பிரதான ஆசாரியன் தன்னைத் தண்ணீரினால் கழுவி,
  • பரிசுத்த வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
  • பலியின் இரத்தத்தோடும் தூபவர்க்கத்தோடும் மட்டுமே உள்ளே பிரவேசிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது (லேவியராகமம் 16:3-4).

மீட்பு:

  • தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் திருப்திப்படுத்தவும்,
  • மக்களின் பாவங்களை முழுமையாக மன்னித்து அவர்களை தேவனோடு ஒப்புரவாக்கவும் (Atonement)
  • இந்த யோம் கிப்பூர் பண்டிகை கட்டளையிடப்பட்டது.

பாவ நிவாரண பலி பண்டிகையின் (யோம் கிப்பூர்) நோக்கங்கள்

ஆசாரிப்புக் கூடாரத்தை (பரிசுத்த ஸ்தலத்தை) சுத்திகரித்தல்:

  • இஸ்ரவேல் புத்திரருடைய
    • தீட்டுகளினாலும்,
    • மீறுதல்களினாலும்,
    • பாவங்களினாலும்
  • அசுத்தமான பரிசுத்த ஸ்தலத்திற்காகவும்,
  • ஆசாரிப்புக் கூடாரத்திற்காகவும்
  • பிராயச்சித்தம் செய்து அதைச் சுத்திகரிப்பதே இதன் முதல் நோக்கமாகும். (லேவியராகமம் 16:16)

ஆசாரியர்களை சுத்திகரித்தல்:

  • பிரதான ஆசாரியன்
  • முதலில் தன்னுக்காகவும்
  • தன் வீட்டாருக்காகவும்
  • பாவநிவாரண பலியைச் செலுத்தி,
  • தேவனுக்கு ஊழியம் செய்யும் ஆசாரியர்களைச் சுத்திகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். லேவியராகமம் 16:6)

மக்களின் ஒட்டுமொத்த பாவங்களை நீக்குதல்:

  • இஸ்ரவேல் சபையார்
  • அறியாமல் செய்த சகல பாவங்களுக்கும்,
  • அக்கிரமங்களுக்கும் ஒரே நாளில் பிராயச்சித்தம் செய்து,
  • கர்த்தருடைய சந்நிதியில் அவர்களைச் சுத்திகரிப்பதே பிரதான நோக்கமாகும். (லேவி 16:30)

தேவ கோபாக்கினையைச் சாந்தப்படுத்துதல் (Propitiation):

  • மக்களின் பாவங்களுக்காகக்
  • கிருபாசனத்தின் மேல் இரத்தம் தெளிக்கப்படுவதன் மூலம்,
  • நியாயப்பிரமாணத்தின்படியான தேவனுடைய கோபாக்கினை தணிக்கப்பட்டு,
  • தேவனோடு சமாதானம் உருவாக்கப்படுகிறது. (லேவி 16:14-15)

ஆத்துமாவை ஒடுக்குதல் மற்றும் மனந்திரும்புதல்:

  • மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு,
  • உபவாசம் இருந்து,
  • தங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கி,
  • முழுமையான மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் நாளாக இது கொடுக்கப்பட்டது. (லேவி 23:27-29)

பாவங்களை முழுமையாக அகற்றுதல் (Expiation):

  • போக்காட்டின் தலையின்மேல் பாவங்களைச் சுமத்தி வனாந்தரத்திற்கு அனுப்புவதன் மூலம், மக்களின் பாவங்கள் அவர்கள் நடுவிலிருந்து முற்றிலுமாக அகற்றப்படுவதைக் குறிப்பதே இதன் நோக்கமாகும். (லேவி 16:21-22)

வருஷாந்தர நினைவுகூருதல்:

  • மிருகங்களின் இரத்தம் பாவங்களை நிரந்தரமாக நீக்க முடியாதபடியால்,
  • வருஷந்தோறும் மக்கள் தங்கள் பாவங்களை நினைவுகூர்ந்து தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டது. (எபிரெயர் 10:3)

பின்னணி விவரங்கள் (Background / Historical Details)

பெயர்க்காரணம்:

  • 'யோம் கிப்பூர்' (Yom Kippur) என்ற எபிரெய வார்த்தையில்
  • 'கிப்பூர்' (Kippur / Kaphar) என்பதற்கு 'மூடுவது' (To Cover) அல்லது 'பிராயச்சித்தம் செய்வது' என்று பொருள்.
  • பாவங்கள் இரத்தத்தினால் மூடப்படுவதையே இது குறிக்கிறது. (லேவி 23:28)

ஆசாரியனின் தாழ்மை வஸ்திரம்:

  • இந்த நாளில் பிரதான ஆசாரியன் தன்னுடைய மகிமையான பொன் வஸ்திரங்களைக் களைந்துவிட்டு,
  • தாழ்மையின் அடையாளமாகச் சாதாரண வெள்ளை சணல் வஸ்திரங்களை மட்டுமே அணிந்து தேவ சந்நிதியில் நிற்பார். (லேவ 16:4)

புதிய ஏற்பாட்டு நிறைவேற்றம்:

  • நிழலாக இருந்த இந்த நோக்கங்கள் அனைத்தையும்,
  • இயேசு கிறிஸ்து மெய்யான பிரதான ஆசாரியனாகவும்
  • குற்றமற்ற பலியாகவும் மாறி,
  • ஒரே தரம் தம்முடைய இரத்தத்தைச் சிந்தி நிரந்தரமாக நிறைவேற்றினார். (எபிரெயர் 9:11-12)

யோம் கிப்பூர் ஆயத்த நாள் (9-ஆம் தேதி பகல்)

  • பிரதான ஆசாரியன் யோம் கிப்பூர் நாளுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவே தன் வீட்டை விட்டுப் பிரிந்து, தேவாலய வளாகத்தில் உள்ள ஒரு அறையில் (Palhedrin) தங்கித் தன்னை ஆயத்தப்படுத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 8:33
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (மிஷ்னா யோமா 1:1)
  • பண்டிகை தொடங்குவதற்கு முன்பாக, ஒன்பதாம் தேதி பகலில் யூத மக்கள் அனைவரும் தங்களை ஆயத்தப்படுத்திக் கட்டாயமாக நன்றாக உணவருந்துவார்கள்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 23:32
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 81b)

பண்டிகையின் தொடக்கம் (யோம் கிப்பூர் இரவு)

  • சூரியன் மறைந்தவுடன் முழுமையான உபவாசம் தொடங்கும்;
  • உணவு உண்ணுதல்,
  • தண்ணீர் குடித்தல்,
  • எண்ணெய் பூசுதல்,
  • தோல் காலணிகள் அணிதல்
  • தாம்பத்திய உறவு
  • ஆகியவை முற்றிலுமாகக் கைவிடப்படும்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:29, லேவியராகமம் 23:27
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 8:1)
  • ஆலயத்தில் பிரதான ஆசாரியன் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வேதவசனங்களை (குறிப்பாக யோபு, எஸ்றா, நாளாகமம்) சத்தமாக வாசித்துத் தன்னை ஆவிக்குரிய நிலையில் ஆயத்தப்படுத்துவார்.
  • வேத ஆதாரம்: சங்கீதம் 119:148
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 1:6-7)

யோம் கிப்பூர் காலை (ஆலயத்தின் ஆரம்ப சடங்குகள்)

  • பிரதான ஆசாரியன் முதல் முறையாகத் தண்ணீரில் முழுமையாக மூழ்கித் தன்னைச் சுத்திகரித்து (Mikvah),
  • மகிமையான பொன் வஸ்திரங்களை அணிந்து காலை நேரத்துத் தகன பலியைச் செலுத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:4
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:1-2)
  • மீண்டும் தண்ணீரில் மூழ்கித் தன்னைச் சுத்திகரித்து,
  • பொன் வஸ்திரங்களைக் களைந்துவிட்டு, சாதாரண வெள்ளைச் சணல் வஸ்திரங்களை அணிந்துகொள்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:4
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:6)
  • தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பலியிடப்படவிருக்கும் காளையின் தலையின் மேல் தன் கைகளை வைத்து முதல் பாவ அறிக்கை செய்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:6
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 3:8)

இரண்டு ஆடுகள் மற்றும் சீட்டுப் போடுதல்

  • இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களை நிறுத்தி, ஒரு பொற்பெட்டியிலிருந்து இரண்டு சீட்டுகளை எடுத்து "கர்த்தருக்காக" மற்றும் "அசாசேலுக்காக" (போக்காடு) எனப் பிரிப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:7-8
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 4:1)
  • போக்காட்டின் தலையில் சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டி, கர்த்தருக்கான ஆட்டையும் காளையையும் பலியிடுவதற்காக நிறுத்திவைப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:9-10
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 4:2)

மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தல்

  • பலிபீடத்திலிருந்து நெருப்பைத் தூபகலசத்தில் எடுத்துக்கொண்டு,
  • மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,
  • தூபவர்க்கத்தைப் போட்டுப் புகையினால் கிருபாசனத்தை மறைப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:12-13
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:1)
  • காளையைக் கொன்று அதன் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேல் ஒரு முறையும்,
  • கிருபாசனத்திற்கு முன்பாக ஏழு முறையும் தெளிப்பார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:14
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:3)
  • கர்த்தருக்கான ஆட்டைக் கொன்று,
  • அதன் இரத்தத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு சென்று முன்போலவே தெளித்து இஸ்ரவேலரின் பாவங்களுக்காகப் பிராயச்சித்தம் செய்வார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:15
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 5:4)

போக்காடு மற்றும் வனாந்தரப் பயணம்

  • உயிருள்ள போக்காட்டின் தலையில் பிரதான ஆசாரியன் தன் இரு கைகளையும் வைத்து,
  • இஸ்ரவேலரின் சகல பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டு, அதின் மேல் சுமத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:21
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 6:2)
  • நியமிக்கப்பட்ட ஒருவன் அந்தப் போக்காட்டைப் பாளையத்திற்கு வெளியே வனாந்தரத்திற்குக் கொண்டு சென்று,
  • செங்குத்தான பாறையிலிருந்து (Zuk) கீழே தள்ளிவிடுவான்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:22
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 6:6)

பண்டிகையின் முடிவு

  • பிரதான ஆசாரியன் மீண்டும் தண்ணீரில் மூழ்கி,
  • வெள்ளை வஸ்திரங்களைக் களைந்துவிட்டு,
  • மீண்டும் பொன் வஸ்திரங்களை அணிந்து
  • மற்ற தகன பலிகளைச் செலுத்துவார்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 16:23-24
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 7:3)
  • சூரியன் மறைந்தவுடன் யோம் கிப்பூர் உபவாசம் நிறைவடையும்;
  • எக்காளம் (Shofar) முழங்கப்பட்டுப் பண்டிகை முடிவுக்கு வரும்.
  • வேத ஆதாரம்: லேவியராகமம் 25:9
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (ரோஷ் ஹஷானா 33b)
  • பிரதான ஆசாரியன் எவ்வித மரணமுமின்றித் தேவ சமூகத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்ததைக் கொண்டாடும் விதமாக,
  • மக்கள் அவரை மகிழ்ச்சியோடு அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்;
  • வீடுகளில் ஆனந்தமாக உணவருந்துவார்கள்.
  • வேத ஆதாரம்: பிரசங்கி 9:7
  • யூத நூல் ஆதாரம்: தல்மூட் (யோமா 7:4)

பின்னணி விவரங்கள் (Background Details)

  • இந்த ஒரே நாளில் பிரதான ஆசாரியன் ஐந்து முறை முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி (Immersion) தன்னைச் சுத்திகரித்துக்கொள்வார்;
  • பத்து முறை தன் கைகளையும் கால்களையும் கழுவுவார்.
  • (ஆதாரம்: தல்மூட் யோமா 3:3)
  • பிரதான ஆசாரியன் தன் பாவ அறிக்கை ஜெபத்தின் போது, வழக்கமாகக் கூறக் கூடாத தேவனுடைய பரிசுத்த நாமமான "யெகோவா" (YHVH) என்ற நாமத்தை முப்பரிமாணத்தில் உச்சரிப்பார்;
  • அதைக் கேட்கும் மக்கள் பயபக்தியோடு தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்.
  • (ஆதாரம்: தல்மூட் யோமா 6:2)
  • போக்காடு வனாந்தரத்தில் மடிந்தவுடன்,
  • தேவாலயத்தின் கதவில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறக் கயிறு வெண்மையாக மாறும்;
  • இது தேவன் பாவங்களை மன்னித்துவிட்டார் என்பதற்கான அடையாளமாக மக்களால் பார்க்கப்பட்டது.
    • (ஆதாரம்: தல்மூட் யோமா 39b)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.