வேதாகமத்தின் ஆசிரியர் எழுதியவர்கள்
வேதாகமம் முழுவதற்கும் ஆசிரியராக பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டார். தெரிந்துகொள்ளப்பட்ட சுமார் 40 பரிசுத்தவான்களுக்கு ஏவுதல் தந்து தாம் தாம் கூறுகின்றவற்றை அவர்கள் எழுதும்படி செய்தவர் ஆவியானவரே.
வேதாகமம் எழுதப்பட்ட காலம்
வேதாகமத்தின் பழமையான எழுத்தாளரான மோசே கி.மு. 16,17ஆம் நூற்றாண்டுகளின்போது எழுதினார். பழைய ஏற்பாட்டின் இறுதி நூல்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டுகளில் எழுதபட்டவைகள். புதிய ஏற்பாட்டு நூல்களில் முதலாவதாக எழுதப்படதாக கருதப்படும் 1 தேசலனிகெயர் நிருபம் பவுலால் கி.பி.50 இல் எழுதப்பட்டது என கருதுகின்றனர். வேதாகமத்தின் நூல்களில் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் கி.பி. 90 இல் இருந்து கி.பி.105 ற்குள் எழுதபட்டது என கருதுகின்றனர்.
தள்ளுபடி ஆகமங்கள் (THE APOCRYPHAL BOOKS) ஒரு பார்வை
அப்போக்ரைபா என்றால் "மறைக்கப்பட்டது" அல்லது "மூடப்பட்டது" என்று
பொருளாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்:-
1) 1 எஸ்ரா
2) 2 எஸ்ரா
3) தோபித்
4) யூடித்
5) எஸ்தரின் ஒய்வு
6) சாலொமோனின் ஞானங்கள்
7) பிரசங்கிகள்
8) பாரூக்
9) மூன்று எபிரெய குழந்தைகளின் பாடல்கள்
10) சூசன்னாவின் வரலாறு
11) பாகாலும் வலுசர்பமும்
12) மனாசாவின் ஜெபம்
13) 1 மக்கபேயர்
14) 2 மக்கபேயர்
15) எரேமியாவின் கடிதம்.
1546ல் டிரென்ட் ஆலோசனை கூட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சபை இந்த
புத்தகங்களை ஏற்றுக் கொண்டாலும் புரட்டாஸ்தாந்து சபைகள் இவை பரிசுத்த
ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டவை அல்ல என நிராகரித்து1546ல் டிரென்ட்
ஆலோசனை கூட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சபை இந்த புத்தகங்களை ஏற்றுக்
கொண்டாலும் புரட்டாஸ்தாந்து சபைகள் இவை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால்
எழுதப்பட்டவை அல்ல என நிராகரித்து விட்டனர்.
ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும் திறமைகளும் இருந்தாலும்
இவைகள் கீழ்காணும் காரணங்களால் தள்ளப்படுகின்றன.
* தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை
தெரிவிக்கவில்லை. சிலர் இதனை மறுக்கின்றனர் (எ.கா. 1மக் 4:46; 2மக்
2:23,15,38)
* அநேக கிரேக்க மொழிபெயர்பில் இவைகள் இடம்பெற்றாலும் எபிரெய பதிப்பில்
இவைகள் இடம்பெறவில்லை.
* கி.பி.90ல் ஜெனிவாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் யூதர்கள் இவைகளை
ஏற்றுக் கொள்ளவில்லை.
* இவைகளில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற
கட்டுகதைகளும் காணப்படுகின்றன.
* வேதம் கூறும் தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை
இவைகள் உபதேசிக்கின்றன. (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற
காரியங்களை நியாயப்படுத்துகின்றன)
* இயேசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு
குறிப்பும் எடுத்து கொள்ளவில்லை. ஆனால் மற்றவைகளிலிருந்து நூறு கணக்கில்
குறிப்பிடுகின்றனர்.
* ஆதிகால சபைபிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் கிரிஸ்,
தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றோர் இவைகளை ஏற்று கொள்ளவில்லை.
* முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேதம் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில்
இவைகள் அங்கிகரிக்கப்படவில்லை
* லூதரும் சீர்திருத்தவாதிகளும் இவைகளை நிராகரித்தனர்
* சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி
ஆகமங்களை நிராகரித்தனர்.
நமது வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் இருப்பவருடன்
1) 1 எஸ்ரா
2) 2 எஸ்ரா
3) தோபித்
4) யூடித்
5) எஸ்தரின் ஒய்வு
6) சாலொமோனின் ஞானங்கள்
7) பிரசங்கிகள்
8) பாரூக்
9) மூன்று எபிரெய குழந்தைகளின் பாடல்கள்
10) சூசன்னாவின் வரலாறு
11) பாகாலும் வலுசர்பமும்
12) மனாசாவின் ஜெபம்
13) 1 மக்கபேயர்
14) 2 மக்கபேயர்
15) எரேமியாவின் கடிதம்.
என்ற நூல்களும் அக்கால மக்களிடம் இருந்தது. இந்நூல்களை ஆராய்ந்த யூத மதத் தலைவர்கள் மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக ஏற்கவில்லை.
தாங்கள் ஏற்றுக் கொண்ட நூல்களின் தொகுப்பை யூதர்கள் வேதாகமும் என்று அழைக்கின்றனர். யூதர்களின் வேதாகமமும் நமது கையில் இருக்கும் பழைய ஏற்பாடும் ஒன்றே. புத்தகங்களின் வரிசையில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன. யூதர்களாலும் ஆதி கிறிஸ்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத இந்த தள்ளுபடி ஆகமங்க ளை கி பி பதினாறாம் நூற்றாண்டில் தங்கள் வேதாகம பதிப்பில் ரோமன் கத்தோலிக்க சபையினர் இணைத்து கொண்டனர்.
புதிய ஏற்பாட்டு புத்தகங்கள்
புதிய ஏற்பாடு காலத்தில் அனேகர் கிறிஸ்துவை குறித்து எழுதினர் (லூக்கா 1:2). தனித்தனியான சிறு நூல்களாகவும் கடிதங்கள்ளாகவும் அனேக நூல்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றுள் எவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆதி திருச்சபை தலைவர்களும் பல சங்க தலைவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். இறுதியாக கிபி நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரியவில் சபை தலைவராயிருந்த அத்தனேசியஸ் என்பவரின் பரிந்துரையின்படி நமது புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களையும் ஏற்றுக்கொண்டனர்.
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மொழிகள்
பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபிரேய மொழியில் எழுதப்பட்டது. அதிலுள்ள எஸ்றா 4:8-6:18; 7:12-26; எரேமிய 10:11; தானியேல் 2:4-7:28 என்ற பகுதிகள் மட்டும் அரமேயு மொழியில் எழுதப்பட்டது. இப்பகுதிகளை எழுதினவர்கள் பாபிலோனிய அரசு உலகின் பேரரசாக இருந்தபோது எழுதினார். பாபிலோனில் பயன்படுத்தப்பட்ட அரமேய மொழியில் எழுதினார். அக்கால யூதர்களுகலில் அநேகருக்கு எபிரேயு மொழியும் அரமேயுமொழி யும் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
பரிசுத்த வேதாகமத்தை எழுத பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
விலங்குகளில் தோள்களை நன்கு எழுதுவதற்கு ஏற்ப சிறப்பான முறையில் பதப்படுத்தப்பட்டு அதில் எழுதுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட சிறப்பான மையைப் பயன்படுத்தி எழுதினார். இவற்றை தோள் சுருள்கள் என்பர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தோல் சுருல்கள் இன்றும் பத்திரமாக பாதுகாக்கப்படு வருகின்றன. கேரளாவில் காலிகட் என்ற இடத்தில் உள்ள யூத ஜெப ஆலயத்திலும் இத்தகைய சுருள்கள் இன்றும் இருக்கின்றன.
எகிப்து நாட்டில் சனலில்லிருந்து தட்டையான *பாபினாஸ்* என்னும் எழுது பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் எழுதும் வழக்கம் ஏற்பட்டது. இக்காலத்தில் *பேப்பர்* என்று அழைக்கபடும *காகிதம்* இவ்வகையைச் சார்ந்தத ஆகும்.
……..தொடரும்..,....
ஆக்கியோன்:
போதகர்: சார்லஸ் M. சதீஷ்குமார்.
