அதிகாரம் 1
1 அதிகாரம்
முன்னுரை
இந்த உலகத்தில் ஏராளமான புஸ்தகங்கள் இருந்தாலும், பரிசுத்த வேதாகமமே, அந்தப் புஸ்தகங்கள் எல்லாவற்றிற்கும் பிரதான புஸ்தகமாக விளங்குகிறது. இதை புஸ்தங்களுக்கெல்லாம் சிறப்பான புஸ்தகம் என்று சொல்லலாம்.
வேதாகமம் ""பரிசுத்த வேதாகமம்'' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தப் புஸ்தகத்தை பரிசுத்தவான்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதியிருக்கிறார்கள்.
பரிசுத்தவேதாகமத்தில் தேவனுடைய பிரமாணமும், இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷமும் நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்திலுள்ள புஸ்தகங்கள் பல்வேறு இடங்களிலும், பல்வேறு காலங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.
""அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்'' (2பேது 1:19).
இந்தப் பூமியிலே எந்த தேசத்தில் பரிசுத்த வேதாகமம் இல்லையோ,அந்த தேசம் இருண்ட தேசமாகவே இருக்கும்.
பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்பாடு என்னும் வார்த்தைக்கு உடன்படிக்கை என்று பொருள். பரிசுத்த வேதாகமத்தில் மனுஷனைக் குறித்த தேவனுடைய சித்தம் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
""உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்'' (வெளி 13:8).
பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு என்றும், புதிய ஏற்பாடு என்றும் இரண்டாகப் பகுக்கப்பட்டபோதிலும், பழைய ஏற்பாட்டை பழைய புஸ்தகம் என்று ஒதுக்கி வைத்துவிடமுடியாது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை பூரணப்படுத்துகிறது.
பழைய ஏற்பாட்டிலுள்ள முதல் ஐந்து ஆகமங்கள் ""பஞ்சாகமம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆகமங்களின் ஆசிரியர் மோசே. பஞ்சாகமத்தின் முதலாவது ஆகமம் ""ஆதியாகமம்'' ஆகும்.
மோசே ஆதியாகமத்தை எப்பொழுது எழுதினார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் மீதியான் தேசத்தில் இருந்தபோது இந்த ஆகமத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். எகிப்து தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தின் பாடுகளை அனுபவித்துக்கொண்டிருந்த அவர்களுக்கு ஆறுதலையும், ஆலோசனையையும் கொடுக்கும் வண்ணமாக மோசே ஆதியாகமத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது, மோசே ஆதியாகமத்தை எழுதினார் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். மோசே சீனாய் மலையில் கர்த்தரோடு இருந்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை பூரணமாகப் பெற்றுக்கொண்ட பின்பு, அவர் ஆதியாமத்தை எழுதினார் என்பது இவர்களுடைய கருத்து.
ஆதியாகமம் என்னும் பெயருக்கு ""ஆரம்பம்'' என்று பொருள். எல்லா ஆரம்பங்களின் சரித்திரமும் இந்த ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது, உலகத்திலே பாவமும் மரணமும் பிரவேசித்தது. தேசங்கள் எழும்பினது, கர்த்தருடைய சபை ஸ்தாபிக்கப்பட்டது ஆகியவற்றின் ஆரம்பமெல்லாம் ஆதியாகமம் புஸ்தகத்தில் சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்ட சம்பவம் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. மனுபுத்திரரில் அநேகர் ""என்னை சிருஷ்டித்தவர் எங்கே இருக்கிறார்'' என்னும் கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தத்துவ ஞானிகளால் சரியான பதிலை சொல்ல முடியாது.
இந்தப் பிரபஞ்சம் தானாக உண்டாயிற்று என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். ஒரு அணுவைப் பிளந்ததின் மூலமாக இந்த உலகம் உண்டாயிற்று என்றும் சிலர் சொல்லுகிறார்கள். உலகஞானத்தினால் தேவனை அறிய முடியாது.
பரிசுத்த வேதாகமத்தில், தேவனுடைய இரகசியங்களெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. காலங்களின் ஆரம்பம், உலகத்தின் ஆரம்பம், ஜீவராசிகளின் ஆரம்பம் எல்லாமே ஆதியாகமம் புஸ்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
சர்வவல்லமையுள்ள தேவன் அநாதி காலமாக இருந்தவர், இருக்கிறவர், இருக்கப்போகிறவர். தேவனுடைய காலத்தையும், அவருடைய ஞானத்தையும், வல்லமையையும் நம்மால் ஆராய்ந்து பார்க்க முடியாது. அவர் சர்வஞானமும், சர்வவல்லமையுமுள்ளவர். காலங்கள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே தேவன் இருந்தார்.
வானமும் பூமியும் எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது என்னும் விவரம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (ஆதி 1:1,2). ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
தேவன் ஒவ்வொரு நாளிலிலும் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகளை செய்கிறார். அதன் விவரம் இந்த அதிகாரத்தில் வரிசையாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது (ஆதி 1:3#30).
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்க்கிறார். அது மிகவும் நன்றாயிருக்கிறது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று (ஆதி 1:31).
ஆதியிலே தேவன்
ஆதி 1:1,2
ஆதி 1:1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதி 1:2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
பரிசுத்த வேதாகமத்தின் முதலாவது வசனத்தில் ""ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பூமியினாது ஒரு பெரிய வீட்டைப்போல இருக்கிறது. ஒரு வீட்டில் மேல்தளமும் கீழ்த்தளமும் இருப்பதுபோல, இந்தப் பிரபஞ்சத்திலும் மேல்தளமும் கீழ்த்தளமும் இருக்கிறது.
ஒரு வீட்டில் ஏராளமான அறைகள் இருக்கும். அதுபோலவே கர்த்தர் சிருஷ்டித்திருக்கிற இந்தப் பூமியில் பல பகுதிகள் உள்ளன. அவை எல்லாமே பிரமாண்டமாயிருக்கிறது. இந்தப் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன காரியங்கள் இருக்கவேண்டுமென்று, தேவன் சித்தங்கொண்டிருக்கிறாரோ, அவையெல்லாம் இந்தப் பூமியிலே பரிபூரணமாய் நிரம்பியிருக்கிறது.
நாம் வானத்தை அண்ணார்ந்து பார்க்கும்போது அது பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. வானத்திலே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவையெல்லாம் பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது.
கர்த்தர் இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான காரியங்களை சிருஷ்டித்திருக்கிறார். அவையெல்லாம் விதவிதமாகயிருக்கிறது. தேவன் சிருஷ்டித்தது எல்லாமே ஒன்றுபோலில்லை. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமிருக்கிறது.
தேவனுடைய சிருஷ்டிப்பு மிகவும் அழகாயிருக்கிறது. வானமும் பூமியும் நம்முடைய கண்களுக்கு விருந்து கொடுக்கிறது. நாம் வானத்தை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும், நம்முடைய கண்களுக்கு சலிப்பு ஏற்படாது. வானத்தையும் பூமியையும் அழகாக சிருஷ்டிக்கவேண்டும் என்பது கர்த்தருடைய திட்டம்.
தேவனுடைய சிருஷ்டிப்பு எல்லாமே நேர்த்தியாயும் கிரமமாயும் இருக்கிறது. தேவனுடைய சிருஷ்டிப்பில் ஒரு குறைவுமில்லை. சகலமும் நேர்த்தியாயிருக்கிறது. தேவன் ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக சிருஷ்டித்திருக்கிறார்.
தேவனுடைய சிருஷ்டிப்பில் மிகுந்த வல்லமையுள்ளது. தேவனுடைய சிருஷ்டிப்பு எல்லாமே ஜீவனில்லாத ஜடப்பொருள்கள் அல்ல. பூமி பிரமாண்டாகயிருந்தாலும், தேவன் அதை இயங்கக்கூடிய விதமாக சிருஷ்டித்திருக்கிறார்.
தேவனுடைய சிருஷ்டிப்பு எல்லாமே ஒழுங்கும் கிரமமுமாகயிருக்கிறது. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. அவற்றின் இயக்கங்கள் எல்லாமே நேர்த்தியாயிருக்கிறது.
தேவனுடைய சிருஷ்டிப்பு எல்லாமே நம்மால் ஆராய்ந்து முடியாத அதிசயமாயிருக்கிறது. இயற்கையின் விதிகளில் இன்னும் ஏராளமானவற்றை மனுபுத்திரரால் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. மனுஷனால் தீர்த்து வைக்க முடியாத இரகசியங்கள் இன்னும் ஏராளமாயிருக்கிறது.
நாம் வானத்தையும் பூமியையும் பார்க்கும்போது, தேவனுடைய நித்திய வல்லமையை புரிந்துகொள்ளலாம். இவை தானாக உண்டாகவில்லை என்றும், தேவனே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் நாம் அறிந்துகொள்ளலாம்.
விசுவாசிகளாகிய நாம் நம்முடைய மனக்கண்களால் எப்போதும் வானத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். இந்தப் பூமியானது நம்முடைய காலடியில் இருக்கவேண்டும்.
தேவனே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர். எபிரெய பாஷையில் தேவன் என்னும் பெயருக்கு ""எலோகிம்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ""எல்'' என்னும் வார்த்தைக்கு ""வல்லமையுள்ள தேவன்'' என்று பொருள். எலோகிம் என்னும் பெயர் சிருஷ்டிகராகிய தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகிறது. சர்வவல்லமையுள்ள தேவனால் மாத்திரமே வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்க முடியும்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். இந்த வாக்கியத்தில் ""சிருஷ்டித்தார்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""பாரா'' என்பதாகும். இந்த வார்த்தைக்கு ""ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து ஒன்றை உண்டாக்குவது'' என்று பொருள். சர்வவல்லமையுள்ள தேவனால் மாத்திரமே, ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து இந்த வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்க முடியும். சர்வவல்லமையைவிட குறைவான வல்லமையினால், ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து எதையும் உண்டாக்க முடியாது.
""எலோகிம்'' என்னும் பெயர் பன்மைப்பொருளை கொடுக்கிறது. இந்த வார்த்தைக்கு ""தேவர்கள்'' என்று அர்த்தம் சொல்லலாம். ஆனால் தேவன் ஒருவரே. தேவத்துவத்தில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவருடைய ஆள்தத்துவமும் சேர்ந்திருக்கிறது. ஆகையினால் எலோகிம் என்னும் பெயர் பன்மைப்பொருளைக் கொடுத்தாலும், தேவன் ஒருவரே என்பதும், அவர் திரித்துவராக இருக்கிறார் என்பதும் நமக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் திரித்துவத்தைப்பற்றிய சத்தியம் விரிவாக விவரிக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டிலோ திரித்துவத்தின் சத்தியம் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் முதலாம் வசனத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்திற்கு, தேவனால் அல்லாமல், ஒன்றும் சிருஷ்டிக்கப்படவில்லை என்று பொருள்.
""சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை'' (யோவா 1:3).
""அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை'' (யோவா 1:10).
""இயேசுகிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது'' (எபே 3:11).
""ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது'' (கொலோ 1:16).
""இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்'' (எபி 1:2).
தேவன் ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் இந்தப் பூமியை சிருஷ்டிப்பதற்கு முன்பாக, இந்தப் பூமியை உண்டாக்குவதற்கு தேவையான பொருட்கள் எதுவும் இல்லை. தேவன் அப்படிப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்தி, இந்தப் பூமியை சிருஷ்டிக்கவில்லை. நாம் எதையாவது உண்டுபண்ண வேண்டுமென்றால், ஏதாவது ஒரு பொருள் இருந்தால்தான், அந்தப் பொருளிலிருந்து மற்றொரு பொருளை உண்டுபண்ண முடியும்.
தேவனோ சர்வவல்லமையுள்ளவராயிருக்கிறார். அவர் ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து இந்தப் பூமியை சிருஷ்டித்தார். தேவன் இயற்கையின் பிரமாணத்திற்குட்பட்டவரல்ல. இயற்கையின் பிரமாணம் தேவனுடைய வார்த்தைக்குட்பட்டது. இந்தப் பூமி தானாய் உண்டாயிற்று என்று சொல்லுவது, தேவனுடைய மகிமையை அவமதிக்கும் வார்த்தையாகும். தேவன் சர்வஞானமுள்ளவர். வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட விதத்தைப்பற்றிப் பேசும்போது, நாம் தேவனுடைய சர்வஞானத்தையும், சர்வவல்லமையையும் மகிமைப்படுத்தவேண்டும்.
தேவன் வானத்தையும் பூமியையும் எப்போது சிருஷ்டித்தார் என்றும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் ஆதியிலே இவற்றை சிருஷ்டித்தார். ஆதியிலே என்பது, காலங்களின் ஆரம்பமாகும். தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டிப்பதற்கு முன்பாக காலங்கள் இல்லை. அவர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கும்போதுதான் காலங்கள் ஆரம்பமாயிற்று. அப்போதுதான் கடிகாரம் ஓட ஆரம்பிக்கிறது.
தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த பின்புதான், நாம் நேரங்களைக் கணக்கிடுகிறோம். காலங்கள் ஆரம்பமாவதற்கு முன்பாக, நித்திய தேவன் மாத்திரமே இருந்தார். அவர் அநாதி தேவன். அவர் அநாதி காலத்திலும் இருக்கிறவர். இந்த வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக, தேவனைத் தவிர வேறு ஒருவரும் அல்லது வேறு எதுவும் இல்லை.
தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அவரே ஆரம்பமாயும் முடிவாயும் இருக்கிறார். நித்திய தேவனே ஆதியும் அந்தமாயும், அல்பாவும் ஓமெகாவாகவும் இருக்கிறார். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று சொல்லும்போது, ""ஆதியிலே வார்த்தை இருந்தது'' (யோவா 1:1) என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும்.
தேவனை நம்பாத நாஸ்திகர்கள் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த பூமி தானாய் உண்டாயிற்று என்பது நாஸ்திகரின் கொள்கை. தேவன் இந்தப் பூமியை சிருஷ்டித்தார் என்பதை நாஸ்திகர்கள் நம்புவதில்லை. பூமியானது தானாய் உண்டாயிற்று என்று சொல்லுவது மதியீனம்.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவன் சர்வவல்லமையும், சர்வஅதிகாரமும், சர்வஆளுகையுமுள்ளவர். அவர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்திருக்கிறார். நம்முடைய தேவனால் எல்லாம் கூடும். அப்பேற்பட்ட சர்வவல்லமையுள்ள தேவன், நம்முடைய தேவனாயிருப்பது நம்முடைய பாக்கியம். அவருடைய உதவியும், கிருபையும், கருணையும் நமக்கு போதுமானது.
""எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தி-ருந்து எனக்கு ஒத்தாசை வரும்'' (சங் 121:1,2).
""நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது'' (சங் 124:8).
எல்லாம் தேவனால் உண்டாயிற்று. ஆகையினால் சகலமும் தேவனுக்கே உரியது. ""பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது'' (ஆதி 1:2).
பூமியானது ஒழுங்கின்மையாயிருக்கிறது. இது ""ஆழம்'' என்றும் அழைக்கப்படுகிறது. தேவன் சிருஷ்டித்த பூமி மிகவும் பிரமாண்டமானது. அந்த பூமி ஜலத்தோடு சேர்ந்திருந்தது. பின்பு தேவன் பூமியையும் ஜலத்தையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
தேவன் சிருஷ்டித்த பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருக்கிறது. இது குறித்து வேதபண்டிதர்கள் வெவ்வேறு விளக்கங்களை சொல்லுகிறார்கள். தேவன் ஆதியிலே பூமியை சிருஷ்டித்தபோதே, அதை அவரால் ஒழுங்காகவும், நிறைவாகவும் சிருஷ்டித்திருக்க முடியும். ஆனால் தேவனுடைய தெய்வீக பராமரிப்பின் பிரகாரம், அவருடைய கிரியைகள் ஒவ்வொன்றாய் நடைபெறுகிறது. இது தேவனுடைய கிருபை.
தேவன் சிருஷ்டித்த பூமியானது ஒழுங்கின்மையாயிருக்கிறது. இந்தப் பூமியிலே பார்த்து பரவசமடைவதற்கு ஒன்றுமே இல்லை. இந்தப் பூமி வெறுமையாயிருக்கிறது. ஒழுங்கின்மை, வெறுமை ஆகிய வார்த்தைகள், ""தோகு'', ""பாகு'' என்னும் எபிரெய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பாகும்.
""இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை'' (ஏசா 34:10).
நம்முடைய இருதயத்தில் பரலோகத்தைப்பற்றிய நினைவுகள் நிரம்பியிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சமானது, பரலோகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒழுங்கின்மையானதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும்.
ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த பூமியிலே பார்த்து சந்தோஷப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் பூமியைப் பார்ப்பதற்கு தேவன் இன்னும் வெளிச்சத்தை உண்டாக்கவில்லை. ஆழத்தின்மேல் இருள் இருக்கிறது.
ஒழுங்கின்மை என்பது குணப்படாத ஆத்துமாவுக்கு அடையாளம். இரட்சிக்கப்படாத ஆத்துமா ஒழுங்கின்மையாயிருக்கும். அந்த ஆத்துமா தேவனுடைய ஆவியானவரால் புதுப்பிக்கப்படாத ஆத்துமா. இரட்சிக்கப்படாத ஆத்துமா வெறுமையாயிருக்கும். துன்மார்க்கருடைய ஆத்துமாவில் நன்மையான காரியங்கள் எதுவும் இருக்காது. அது நன்மையில்லாமல் வெறுமையாயிருக்கும்.
பாவிகளுடைய ஆத்துமாவில் தேவனும் வாசம்பண்ணமாட்டார். ஆகையினால் அந்த ஆத்துமா தேவனில்லாமல் வெறுமையாயிருக்கும். தேவனுடைய கிருபை மனுஷருடைய ஆத்துமாவில் கிரியை செய்யவில்லையென்றால், அந்த ஆத்துமா இருள் நிரம்பியதாகவே இருக்கும். தேவனால் மாத்திரமே இருளை நீக்கி அங்கே வெளிச்சத்தை உண்டாக்க முடியும்.
ஆழத்தின்மேல் இருள் இருந்தபோது, தேவஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். அவர் கிரியை செய்யும்போது, அவரை யாராலும் தடுக்கவும் முடியாது, தடைபண்ணவும் முடியாது.
""கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார். பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்'' (சங் 33:6)
""தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று'' (யோபு 26:13).
தேவஆவியானவர் கிரியை செய்யும்போது, புதிய சிருஷ்டி உண்டாகிறது. தேவஆவியானவர் ஆழத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருக்கிறார். தேவனே எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருக்கிறவர். அவரே ஜீவஊற்றாகவும், ஊற்றின் கண்ணாகவும் இருக்கிறவர்.
தேவன் உயிர்ப்பிக்கவில்லையென்றால், மரித்துப்போனவை மரித்ததாகவே இருக்கும். அது ஒருபோதும் உயிர்ப்பிக்கப்படாது. தேவன் மரித்தோரையும் உயிரோடு எழுப்புகிறவர். மரித்துப்போன அனுபவங்களையும் புதுப்பிக்கிறவர்.
நம்முடைய காரியங்கள் மரித்துப் போனதாகயிருந்தாலும், சர்வவல்லமையுள்ள தேவனால் அதை உயிர்ப்பிக்க முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு. தேவஆவியனாவர் அசைவாடும்போது, நம்முடைய ஆத்துமா புதுப்பிக்கப்படும். அது மறுபடியும் புத்துயிர் பெறும். நமக்குள் புதிய ஜீவன் உண்டாகும்.
முதலாம் நாள்
ஆதி 1:3#5
ஆதி 1:3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
ஆதி 1:4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
ஆதி 1:5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்றுபேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
தேவன் முதலாம் நாளில் செய்த கிரியைகளைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் ஏராளமான காரியங்களை சிருஷ்டித்தாலும், பிரத்தியட்சமாய்ப் பார்க்கக்கூடிய வண்ணமாக தேவன் முதலாவதாக சிருஷ்டித்த காரியம் வெளிச்சமாகும். வெளிச்சம் இருந்தால்தான் தேவனுடைய கிரியைகளையும், அந்தக் கிரியைகளில் தேவனுடைய மகிமை வெளிப்படுவதையும் நம்மால் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால்தான், அந்த வெளிச்சத்தில் நம்முடைய கிரியைகளையும் நம்மால் செய்ய முடியும்.
வெளிச்சம் மிகவும் அழகானது. அது இந்த லோகத்திற்கு ஆசீர்வாதமானது. புதிய சிருஷ்டிப்பில் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவுக்கு முதலாவதாக வெளிச்சத்தைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆத்துமாவிலே வெளிச்சத்தையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் கொடுக்கிறார். இதன் மூலமாக நாம் தேவனுடைய சித்தத்தையும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பையும் அறிந்துகொள்கிறோம். பாவத்திலிருக்கிறவர்கள் இருளிலிருக்கிறார்கள். தேவனுடைய கிருபையினால் இந்தப் பூமியில் வெளிச்சம் உண்டாயிற்று.
தேவன் தம்முடைய வார்த்தையின் வல்லமையினால் வெளிச்சத்தை உண்டாக்கினார். ""தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் உண்டாகவேண்டும் என்று தேவன் சித்தங்கொண்டார். தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கட்டளையிட்டார். உடனே வெளிச்சமுண்டாயிற்று.
தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது. அது காலதாமதமில்லாமல் உடனே நிறைவேறுகிறது. கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கிறார். அவர் நித்திய வார்த்தையாகயிருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக வெளிச்சம் உண்டாகிறது.
""உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி'' (யோவா 1:9). ""நான் உலகத்தி-ருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்'' (யோவா 9:5).
தேவனுடைய வெளிச்சம் பரிசுத்தமாக்கப்பட்ட ஆத்துமாவிலே பிரகாசிக்கிறது. இந்த வெளிச்சம் தேவனுடைய வல்லமையினால் நம்முடைய ஆத்துமாவிலே பிரவேசிக்கிறது. இந்த வெளிச்சத்தின் மூலமாக தேவனுடைய மகிமையைப்பற்றிய அறிவையும் ஞானத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். தேவனுடைய மகிமையைப்பற்றிய அறிவு இயேசுகிறிஸ்துவின் மகிமைப்பிரகாசத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
""இருளி-ருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்'' (2கொரி 4:6).
தேவன் முதலாவதாக வெளிச்சம் உண்டாகவேண்டும் என்று சித்தங்கொண்டார். அதன் பின்பு அவர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் காண்கிறார். வெளிச்சம் நல்லதாக இருக்கும்போது, அந்த வெளிச்சத்திற்கு ஆதாரமாக இருக்கிற தேவன் மிகவும் நல்லவராகயிருப்பார். நாம் தேவனிடத்திலிருந்தே வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாக பிரித்தார். அந்த வெளிச்சத்திற்கும் இருளுக்கும் காலஇடைவெளியையும் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்கு பகல் என்று பேரிட்டார். இருளுக்கு இரவு என்று பேரிட்டார். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் மாறி மாறி, தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது.
தேவன் வெளிச்சத்தை உண்டாக்குவதற்கு முன்பாக ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினபோது, இருளானது கலைந்துபோயிற்று. ஆனாலும் அந்த இருள் காணாமல் போய்விடவில்லை. தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்து, அந்த இருளை ஒன்றாய்ச் சேர்த்து, அந்த இருளுக்கு இரவு என்று பேரிட்டார்.
இருளுக்கும் ஒரு பிரயோஜனமுண்டு. பகல் வேளையில் வெளிச்சம் இருப்பதினால், நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு அந்த வெளிச்சம் பிரயோஜனமாயிருக்கிறது. இரவு வேளையிலே வெளிச்சமில்லாமல் இருளாயிருப்பதினால், நாம் நன்றாய் உறங்கி ஓய்வெடுப்பதற்கு அது பிரயோஜனமாயிருக்கிறது.
தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்து, அவற்றிற்கு வெவ்வேறு பெயர்களை கொடுத்தார். தேவன் வெளிச்சத்திற்கு பகல் என்று பேரிட்டார். இரவுக்கு இருள் என்று பேரிட்டார். தேவனே பகலுக்கும் வெளிச்சத்திற்கும் ஆண்டவராயிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பகலும் இரவும் மாறி மாறி, தொடர்ச்சியாக வருவதைப் பார்க்கும்போது, அது தேவனுடைய கிரியை என்பதை நாம் நினைவுகூரவேண்டும். ஒவ்வொரு நாளும் பகல் பொழுது வரும்பொழுது நாம் வேலை செய்யவேண்டும். இரவுவேளையிலே நாம் ஓய்வெடுக்கவேண்டும்.
தேவன் முதலாம் நாளில் செய்த கிரியைகள் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் வெளிச்சத்தை உண்டாக்கி, வெளிச்சம் நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. இந்த முதலாம் நாளானது, இந்தப் பிரபஞ்சத்தின் முதலாம் நாள் மாத்திரமல்ல, இது வாரத்தின் முதலாம் நாள் ஆகும்.
தேவன் புதிய உலகத்தை முதலாம் நாளிலே சிருஷ்டித்தார். இந்த முதலாம் நாள் வாரத்தின் முதலாம் நாளாயிருக்கிறது. இயேசுகிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்தார். முதலாம் நாள் காலையிலே, உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக, கிறிஸ்துவானவர் உயிரோடு எழும்பினார். இயேசுகிறிஸ்துவானவர் அருணோதயம்போல எழும்பி, இந்த உலகத்தில் தம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிறார்.
இரண்டாம் நாள்
ஆதி 1:6#8
ஆதி 1:6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதி 1:7. தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதி 1:8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்றுபேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
தேவன் இரண்டாம் நாளிலே ஆகாயவிரிவை உண்டாக்கினார். இதுவும் தேவனுடைய கட்டளையினால் உண்டாயிற்று. தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்று சொன்னார். ஆகாயவிரிவு என்பது, விரிக்கப்பட்ட ஒரு படுக்கையைப்போல இருக்கிறது. ஒரு திரைச்சீலையை விரிக்கும்போது அது எவ்வாறு பரவி விரிந்திருக்குமோ, அதுபோல ஆகாயவிரிவும் பரவி விரிந்திருக்கிறது.
ஆகாயவிரிவு என்பது ஒரு தடுப்பு சுவர் போன்றதல்ல. அது ஒரு இடைவெளியாயிருக்கிறது.
""அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்'' (யோபு 26:7).
""வார்க்கப்பட்ட கண்ணாடியைப் போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?'' (யோபு 37:18).
""ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்'' (சங் 104:2,3).
""அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்'' (ஆமோ 9:6).
தேவன் ஜலத்தின் மத்தியிலே ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்று சொன்னபோது, அவருடைய வார்த்தையை வேறு யாரோ நிறைவேற்றினார் என்று வியாக்கியானம் பண்ணமுடியாது. ""தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணினார்'' (ஆதி 1:7) என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தேவன் ஒருவராகவே தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்.
தேவன் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கிறாரோ, அதை அவரே நமக்கு செய்கிறார். தேவன் ஒன்றை செய்யவில்லையென்றால், அது செய்யாததாக இருக்கும். நம்மிடத்தில் விசுவாசம், பரிசுத்தம், அன்பு ஆகியவை காணப்படவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நம்முடைய சுயவல்லமையினால், நம்மால் விசுவாசத்தையோ, பரிசுத்தத்தையோ, அன்பையோ வெளிப்படுத்த முடியாது. தேவன் தாமே தம்முடைய கிருபையின் வல்லமையினால், நமக்குள்ளே விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும், அன்பையும் வைக்கிறார். இவை தேவனுடைய வார்த்தையினால் நமக்குள்ளே உண்டாகிறது.
தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவை உண்டாக்கி, அது ஜலத்தினின்று ஜலத்தை பிரிக்கக்கடவது என்று சொன்னார். தேவனுடைய வார்த்தையினால் ஜலமானது பிரிகிறது. பிரிக்கப்பட்ட ஜலத்தில் ஒரு பகுதி மேகங்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது. ஜலத்தின் மற்றொரு பகுதி சமுத்திரத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
தேவன் ஜலத்தின் மத்தியிலே ஆகாயவிரிவு உண்டுபண்ணினார். அதன் பின்பு ஜலத்தைப் பிரித்தார். ஜலமானது ஆகாயவிரிவுக்கு கீழேயும் இருக்கிறது. அது ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கிறது. இந்தப் பூமிக்குத் தேவையான தண்ணீர் ஆகாயவிரிவுக்கு மேலே சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார் (ஆதி 1:7). தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். இந்த வானமே மனுஷர் பிரத்தியட்சமாய்ப் பார்க்கக்கூடிய வானம்.
இந்த வானத்திற்கு மேலே தேவனுடைய வாசஸ்தலமாகிய பரிசுத்த நகரம் இருக்கிறது. அது பரலோகம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வானத்தில் தேவனுடைய சிங்காசனம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
""அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாய-ன்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது'' (எசே 1:26).
நம்முடைய தேவனாகிய கர்த்தரைப்பற்றித் தியானிக்கும்போது, அவர் நமக்கு பரலோக பிதாவாக இருக்கிறார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும். வானம் அதிகமான உயரத்திலிருக்கிறது. வானத்தின் உயரத்தை நம்மால் அளக்க முடியாது. பரலோக தேவன் வானத்திலிருக்கிறார். நமக்கும் தேவனுக்கும் நடுவே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இதையெல்லாம் நினைவுகூரும்போது, இதை உண்டாக்கின தேவனுடைய மகிமையையும், மகத்துவத்தையும், வல்லமையையும் நினைவுகூர்ந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் நன்றியோடு துதிக்கவேண்டும்.
வானம் பிரகாசமாகயிருக்கிறது. அது சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. பரிசுத்தமான வானத்தைப் பார்க்கும்போது, நாம் தேவனுடைய மகிமையையும், மகத்துவத்தையும், பரிபூரணமான பரிசுத்தத்தையும் நினைவுகூரவேண்டும்.
வானம் பரவி விரிந்திருக்கிறது. பூமியைச் சுற்றிலும் வானம் இருக்கிறது. வானத்தின் தாக்கம் பூமியின்மீது எப்போதும் இருக்கும். தேவனுடைய தெய்வீக பராமரிப்பு இந்த முழுஉலகத்திற்கும் கிடைக்கும் என்பதற்கு இது அடையாளம்.
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்றுபேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று (ஆதி 1:8).
மூன்றாம் நாள்
ஆதி 1:9#13
ஆதி 1:9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதி 1:10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதி 1:11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதி 1:12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதி 1:13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
தேவன் இதுவரையிலும் பூமிக்கு மேலே இருக்கிற ஆகாயவிரிவிலே, தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகளை நடத்தினார். தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினார். அவர் ஆகாயவிரிவை உண்டாக்கினார். தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்.
இதன் பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற பூமியிலே தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகளை செய்கிறார். பூமியானது மனுபுத்திரரின் வாசஸ்தலம். மனுபுத்திரருக்கு தேவையான பராமரிப்பின் காரியங்கள் பூமியிலே இருக்கிறது. மனுபுத்திரர் பூமியிலே வாசம்பண்ணுவதற்கு வாசஸ்தலங்கள் வேண்டும். அவர்கள் புசிப்பதற்கு போஜனம் வேண்டும்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். அவர் இந்தப் பூமியை மனுஷர் வாழும் ஸ்தலமாக திட்டமிட்டு சிருஷ்டித்தார். தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். தேவன் வெட்டாந்தரைக்கு பூமி என்று பேரிட்டார்.
தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலத்தை ஓரிடத்தில் சேர்த்தபோது, வெட்டாந்தரை காணப்படுகிறது. தேவன் ஏற்கெனவே ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரித்தது. ஜலமானது ஆகாயவிரிவுக்கு மேலேயும் கீழேயும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது.
ஆகாயவிரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்தை தேவன் ஓரிடத்தில் சேரப்பண்ணுகிறார். அப்போது அங்கே வெட்டாந்தரை காணப்படுகிறது. வானத்தின் கீழே இருக்கிற ஜலமெல்லாம் ஓரிடத்தில் சேருகிறது. அவ்வாறு சேர்ந்த ஜலத்திற்கு தேவன் சமுத்திரம் என்று பேரிட்டார்.
பரிசுத்த வேதாகமத்தில் தண்ணீரும் சமுத்திரமும் மனுஷருடைய துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது.
""உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது'' (சங் 42:7).
""ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது'' (சங் 69:2).
""நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னை தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக'' (சங் 69:14,15).
எல்லா மனுஷருக்கும் துன்பங்களும், வேதனைகளும் நெருக்கங்களும் வருவதுபோலவே, கர்த்தருடைய ஜனங்களுக்கும் வருகிறது. ஆனாலும் துன்பங்களுக்கு மத்தியிலும் நமக்கு கர்த்தர் மூலமாக ஆதரவு கிடைத்திருக்கிறது.
சேர்ந்த ஜலம் சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சமுத்திரம் பெரிதாகயிருந்தாலும் அது வானத்தின் கீழே தான் இருக்கிறது. பரலோகத்திலே சமுத்திரம் இல்லை. தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலத்தை ஓரிடத்தில் சேர்த்திருக்கிறார். அந்த ஜலம் தேவன் நியமித்திருக்கிற இடத்தில் மாத்திரமே இருக்கும். தேவன் சமுத்திரத்திற்கு ஒரு எல்லையை நியமித்திருக்கிறார். சமுத்திரம் தன் எல்லையைத் தாண்டி வெளியே வராது.
வானத்தின் கீழே இருக்கிற ஜலத்தை தேவன் ஓரிடத்தில் சேர்த்தபோது, வெட்டாந்தரை காணப்படுகிறது. தேவன் வெட்டாந்தரைக்கு பூமி என்று பேரிடுகிறார். வெட்டாந்தரை ஜலத்திலிருந்து தோன்றியிருக்கிறது. பூமியானது மனுபுத்திரருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெட்டாந்தரை காணப்படுவதற்கு முன்பாகவே பூமி இருந்தது. ஆனால் அந்தப் பூமி பிரயோஜனமற்றதாயிருந்தது. வெட்டாந்தரை ஜலத்திற்குள்ளே மூழ்கியிருந்தது. மனுஷரில் அநேகர் தேவனுடைய வரங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அந்த வரங்கள் ஜலத்திற்குள்ளே இருக்கும் வெட்டாந்தரைப்போல, யாருக்கும் பிரயோஜனமில்லாததாயிருக்கிறது. அவை பூமிக்குள் புதைக்கப்பட்ட வரங்களாயிருக்கிறது.
வெட்டாந்தரை வெளியே காணப்பட்ட போதுதான் அது மனுஷருக்கு பிரயோஜனமாயிருக்கும். அதுபோலவே நம்முடைய வரங்களும் வெளியே காணப்படவேண்டும். அதை நாம் தேவனுடைய நாமமகிமைக்காகவும் அவருடைய பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்.
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று (ஆதி 1:11).
மனுஷன் பூமியிலே ஜீவனோடிருக்கவேண்டுமென்றால் அவனுக்கு ஆகாரம் வேண்டும். கர்த்தர் மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே, அவனுக்கு தேவையான ஆகாரத்தை சிருஷ்டிக்கிறார். மனுஷனுக்குத் தேவையான ஆகாரமெல்லாம் இந்தப் பூமியிலிருந்தே கிடைக்கிறது. தேவன் முளைப்பிக்கக்கடவது என்று சொன்னபோது, அது அப்படியே ஆயிற்று.
பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது (ஆதி 1:12).
மனுபுத்திரர் இந்தப் பூமியிலே ஜீவிக்கும்போது, அவர்களுக்குத் தேவையான ஆகாரம் இந்தப் பூமியிலிருந்தே கிடைக்கிறது. பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது. கர்த்தரே இந்தப் பூமிக்கு சொந்தக்காரர். அவர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரம், தம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, இந்தப் பூமியை பயன்படுத்துகிறார்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். அப்போது பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. இப்போதோ கர்த்தர் ஒரு வார்த்தை சொன்னபோது, இந்தப் பூமியானது கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரம் கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும், தானியங்களையும் முளைப்பிக்கிறது. வெறுமையாயிருந்த பூமி இப்போது கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் நிரம்பியிருக்கிறது.
பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், விருட்சங்களையும் முளைப்பிக்கிறது. இவை தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும். இதன் மூலமாக மனுஷருக்குத் தேவையான போஜனங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியையை தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறார். இதன் மூலமாக இந்தப் பூமியிலுள்ள செடிகளும், தாவரங்களும், விருட்சங்களும் தொடர்ந்து முளைத்துக்கொண்டேயிருக்கிறது. அவை இன்னும் தானியங்களையும், பழங்களையும் முளைப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியையில் ஒருபோதும் சோர்ந்துபோகிறவரல்ல. தேவன் நன்மை செய்ய சோர்ந்துபோகாதவர்.
மனுஷரை போஷிப்பதற்கு தேவன் புல்லையும் பூண்டுகளையும், செடிகளையும், விருட்சங்களையும் பயன்படுத்துகிறார். இவையெல்லாம் இருந்தால்தான், தேவனால் மனுஷனை போஷிக்க முடியும் என்னும் கட்டுப்பாடு எதுவும் தேவனுக்கு இல்லை. தேவன் இயற்கையின் பிரமாணத்திற்கு கட்டுப்பட்டவரல்ல. மனுஷனை போஷிப்பதற்கு, தேவன் இவற்றை உண்டாக்கியிருந்தாலும், இவை இல்லமாலேயே தேவனால் மனுஷனை போஷிக்க முடியும்.
மனுஷர் தங்களுடைய போஜனங்களை பயன்படுத்துவதற்கு முன்பாகவே, தேவன் அவர்களுக்கு போஜனங்களைப் படைத்திருக்கிறார். நமக்குத் தேவையானவற்றை நாம் பயன்படுத்துவதற்கு முன்பாகவே, தேவன் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார். தேவன் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகவும், தெய்வீக பராமரிப்பின் பிரகாரமாகவும், தம்முடைய சர்வஞானத்தினாலும், சிருஷ்டிப்பின் வல்லமையினாலும் அவற்றை ஏற்கெனவே சிருஷ்டித்திருக்கிறார்.
தேவன் மனுஷரையும் மிருகங்களையும் சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே, அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுக்கும் புல்லையும், பூண்டுகளையும், கனிதரும் விருட்சங்களையும் சிருஷ்டித்திருக்கிறார். தேவன் மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே, அவனுக்கு தேவைப்படுவதை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். நாம் இந்தப் பூமியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். இந்தப் பூமியின் நன்மைகளை பயன்படுத்துகிறோம். நாம் இதற்காக, நம்முடைய சிருஷ்டிகராகிய தேவனை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கவேண்டும். அவரை நாம் கனம்பண்ணவேண்டும்.
நாலாம் நாள்
ஆதி 1:14#19
ஆதி 1:14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
ஆதி 1:15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதி 1:16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
ஆதி 1:17. அவைகள் பூமியன்மேல் பிரகாசிக்கவும்,
ஆதி 1:18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்த்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதி 1:19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
தேவன் நாலாம் நாளிலே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை சிருஷ்டிக்கிறார். இவையெல்லாம் வானத்திலே மிகவும் அழகாயிருக்கிறது. இவை அழகு மாத்திரமல்ல, பூமியிலிருக்கிறவர்களுக்கு இவை மிகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று (ஆதி 1:14,15).
தேவன் முதலாம் நாளில் ""வெளிச்சம் உண்டாகக்கடவது'' (ஆதி 1:3) என்றார். அப்பொழுது வெளிச்சம் உண்டாயிற்று. இப்போது தேவன் ""ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது'' (ஆதி 1:14) என்று சொல்லுகிறார். அது அப்படியே ஆயிற்று.
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னபோது வெளிச்சமுண்டாயிற்று. ஆனால் அந்த வெளிச்சத்தில் தெளிவு இல்லை. பூமியானது ஒழுங்கின்மையாயிருந்ததுபோல, அந்த வெளிச்சமும் ஒழுங்கின்மையாயிருந்தது. அது வானமெங்கும் சிதறிப்போயிருந்தது.
தேவன் ஏற்கெனவே வெளிச்சத்தை உண்டாக்கி, இப்போது அந்த வெளிச்சத்தை ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கிறார். வெளிச்சத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறார். இந்த வெளிச்சம் மகிமையான வெளிச்சமாகவும், பிரயோஜனமான வெளிச்சமாகவும் இருக்கிறது. அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கும் வண்ணமாகவும் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய கிரியைகள் எல்லாமே ஒழுங்கும் கிரமமுமாகயிருக்கும். அவர் ஒழுங்கின் தேவன். அவர் கிரமத்தின் தேவன். தேவனிடத்தில் குழப்பமில்லை. அவர் குழப்பத்தை உண்டுபண்ணுகிறவருமல்ல. வெளிச்சத்தை உண்டாக்கின தேவன், அதை ஒழுங்கும் கிரமமுமாக உண்டாக்குகிறார். ஜோதிகளின் பிதாவாகயிருக்கிறவர், ஒழுங்கின் பிதாவாகவும், கிரமத்தின் பிதாவாகவும் இருக்கிறார்.
தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். அவர் வெளிச்சத்திற்கு பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பேரிட்டார். இரவுக்கும் பகலுக்கும் நேரத்தில் வித்தியாசம் இருக்கவேண்டும். காலங்களிலும் மாற்றம் இருக்கவேண்டும். இந்தப் பூமியிலே கோடைகாலம், குளிர்காலம், வசந்தகாலம், மழைகாலம் என்று காலங்கள் மாறி மாறி வரவேண்டும்.
""ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு'' (பிர 3:1).
தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக, வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களை உண்டாக்கினார். தேவன் அவைகளை அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக உண்டாக்கினார். விவசாயம் பண்ணுகிறவர்கள் மழைகாலத்தை எதிர்பார்த்து உழவு உழுகிறார்கள். பூமியில் வாசம்பண்ணுகிற மனுபுத்திரர் எல்லோரும், காலங்களை நிதானித்து அறிந்து, தங்களுடைய வேலைகளை செய்கிறார்கள்.
""அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்'' (மத் 16:2).
தேவன் ஆகாயவிரிவிலே உண்டாக்கியிருக்கிற சுடர்கள் பூமியின்மேல் பிரகாசிக்கிறது. அவை பூமிக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. இந்த வெளிச்சத்திலே நாம் நடக்கலாம். நம்முடைய வேலைகளை செய்யலாம்.
""இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பக-லே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்'' (யோவா 11:9).
""பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது'' (யோவா 9:4).
ஆகாயவிரிவிலே இருக்கிற சுடர்கள், பூமியில் வாசம்பண்ணுகிற நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. இவை நம்முடைய பிரயோஜனத்திற்காகவும், நம்முடைய சந்தோஷத்திற்காகவும் வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஆகாயவிரிவிலே இருக்கிற சுடர்கள் தங்களுடைய கடமையை மறப்பதுமில்லை. தவறுவதுமில்லை. அவை தங்களுக்கு நியமிக்கப்பட்ட காலங்களில், தங்களுடைய கடமைகளை தவறாமல் நிறைவேற்றும்.
விசுவாசிகளாகிய நாம் இந்தப் பூமியிலே தேவனுக்கு ஊழியம் செய்கிற சுடர்களாயிருக்கிறோம். நாம் தேவனுக்காக எழுந்து பிரகாசிக்கவேண்டும். பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுக்கவேண்டும். தேவனுடைய வெளிச்சத்தின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிற நாம், நமது கடமைகளை மறந்துவிடக்கூடாது. வெளிச்சம் இருக்கும்போதே கர்த்தருடைய ஊழியத்தை செய்யவேண்டும்.
தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியன்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்த்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார் (ஆதி 1:16#18).
ஆகாயவிரிவிலே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய சுடர்கள் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் தேவனே உண்டாக்கினார். நம்முடைய பிரயோஜனத்திற்காக தேவன் இந்த சுடர்களை உண்டாக்கியிருப்பதினால், நாம் அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும்.
தேவன் பகலை ஆள பெரிய சுடரை உண்டாக்கினார். தேவன் இந்தச் சுடரை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். எல்லா சுடர்களிலும் சூரியனே பெரிய சுடராயிருக்கிறது.
""வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை'' (சங் 19:1#3).
""ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையி-ருந்து புறப்படுகிற மணவாளனைப்போ-ருந்து, பராக்கிரமசா-யைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையி-ருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை'' (சங் 19:4#6).
தேவன் இரவை ஆள சிறிய சுடரை உண்டாக்கினார். பெரிய சுடரும் சிறிய சுடரும் மகத்தான சுடர்கள். தேவன் இந்த சிறிய சுடரையும் வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார். இவ்விரண்டு சுடர்களும் மகத்தான சுடர்களாகயிருந்தாலும், இவை தங்களுடைய கடமைகளை ஒழுங்காய் நிறைவேற்றுகிறது. இவை இரண்டுமே பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.
இவ்விரண்டு சுடர்களைப்போலவே, விசுவாசிகளாகிய நாமும் கர்த்தருக்கு பிரியமுள்ளவர்களாகவும், பிரயோஜனமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமக்கு கொடுத்திருக்கிற வரங்களை, அவருடைய நாமமகிமைக்காக பயன்படுத்தவேண்டும். நாம் மனுபுத்திரருக்கு பிரயோஜனமுள்ளவர்களாயிருக்கவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியப்பொறுப்புக்களை, பெருமையில்லாமல், மனத்தாழ்மையோடும், உண்மையோடும் நிறைவேற்றவேண்டும்.
தேவன் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினார். அவர் ஏராளமான நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவையெல்லாம் வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கிறது. நாம் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படலாம். அவற்றின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால் புறஜாதியாரைப்போல நட்சத்திரங்களை ஜோசியம் பார்ப்பதற்கும், குறிசொல்லுவதற்கும் பயன்படுத்தக்கூடாது.
ஆகாயவிரிவிலுள்ள சுடர்கள் நம்மை தேவனிடத்தில் வழிநடத்தவேண்டும். அவை நம்மை தேவனுக்கு பரிசுத்தவான்களாக்க வேண்டும். ஆகாயவிரிவிலுள்ள சுடர்கள் எல்லாமே தேவனுடைய கட்டளையின் பிரகாரமாக இயங்குகிறது.
""இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத்துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது'' (சங் 136:9).
விசுவாசிகளாகிய நாமும் இந்தப் பூமியில் ஆளுகை செய்யவேண்டுமென்றால், சந்திரனைப்போல நாமும் வெளிச்சத்தைக் கொடுக்கவேண்டும். வானத்திலுள்ள சுடர்களைப்போல நாமும் மனுஷருக்கு நன்மை செய்யவேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்கவேண்டுமென்றால், நம்முடைய வெளிச்சத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். நாம் மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ள ஜீவியம் ஜீவிக்கவேண்டும்.
புறஜாதியார் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தங்களுடைய தெய்வங்கள் என்று நம்பி, அவற்றை ஆராதிக்கிறார்கள். ஆனால் தேவனே இவையெல்லாவற்றையும் உண்டாக்கினார். இவை மனுஷருடைய பிரயோஜனத்திற்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. வானத்திலுள்ள சுடர்களை ஆராதனை செய்வது, அவற்றை உண்டாக்கின தேவனுக்கு விரோதமாக செய்கிற பாவம். நாம் சிருஷ்டிகரை கனம்பண்ணவேண்டும். சிருஷ்டிகளை கனம்பண்ணக்கூடாது.
சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினவரை நாம் துதிக்கவேண்டும். தேவன் உண்டாக்கின அந்த சுடர்களை துதிக்கக்கூடாது. நாம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் பண்ணி, அவருக்கு நன்றிபலிகளை ஏறெடுத்து, அவரை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கவேண்டும்.
ஐந்தாம் நாள்
ஆதி 1:20#23
ஆதி 1:20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
ஆதி 1:21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதி 1:22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
ஆதி 1:23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
ஐந்தாம் நாள் வரையிலும் ஜீவஜந்துக்கள் எதுவும் சிருஷ்டிக்கப்படவில்லை. தேவன் ஐந்தாம் நாளிலே சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவித பட்சிகளையும் சிருஷ்டித்தார்.
தேவன், நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார் (ஆதி 1:20).
நீர்வாழும் ஜந்துக்களும், ஆகாயத்து பட்சிகளும் ஜலத்திலிருந்து உண்டாக்கப்படுகிறது. ""ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கப்படவது'' என்று சொன்னார். தேவனே தம்முடைய கட்டளையை நிறைவேற்றுகிறார். தேவன் சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சகலவித பட்சிகளையும் சிருஷ்டிக்கிறார்.
மிருகங்களைப்போலவே, பட்சிகளிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. அவை எண்ணிலடங்காதது. அவற்றின் சுபாவங்களெல்லாம் விநோதமானவை. சிறகுள்ள பட்சிகள் என்று சொல்லும்போது, சிறிய பூச்சியிலிருந்து பெரிய பறவை வரையிலும் இந்த இனத்தில் அடங்கும். இவையெல்லாவற்றையும் தேவன் ஐந்தாம் நாளிலே சிருஷ்டித்தார்.
தேவனுடைய சிருஷ்டிப்பு அற்புதமானது. ஒவ்வொரு சிருஷ்டிப்பிலும் தேவனுடைய ஞானமும் வல்லமையும் வெளிப்படுகிறது. ஒரு சிறிய எறும்பாகயிருந்தாலும் அல்லது பெரிய யானையாகயிருந்தாலும், இவற்றில் தேவனுடைய ஞானத்தையும் வல்லமையையும் நாம் பார்க்கலாம்.
தேவன் தம்முடைய அனந்த ஞானத்தினால், ஒவ்வொரு ஜீவஜந்துக்களின் அவயவங்களையும் ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்திருக்கிறார். அவற்றை இசைவாக இணைத்திருக்கிறார். ஒவ்வொரு ஜீவஜந்தும் அளவிலும், உருவத்திலும், வடிவத்திலும், சுபாவத்திலும் வித்தியாசமானது. ஒவ்வொரு ஜீவஜந்திலும் ஜீவன் இருக்கிறது. இந்த ஜீவனை ஆராய்ந்து பார்ப்பதே நமக்கு ஆச்சரியமாயிருக்கும். ஜீவன் ஒவ்வொரு ஜந்துக்கும் உணர்வைக் கொடுக்கிறது. அதற்கு அசைவைக் கொடுக்கிறது. ஜீவஜந்துக்கள் ஜடமாயிராமல், இயங்குகிறது.
மிருகங்கள், பறவைகள், மீன்கள், மனுஷர்கள் ஆகியவையெல்லாம் தானாகவே உண்டாயிற்று என்று நாஸ்திகர்கள் சொல்லுகிறார்கள். தேவனே அவற்றை உண்டாக்கினவர். தேவன் அவற்றை உண்டாக்கவில்லையென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு ஜீவஜந்துகூடயிருக்காது.
நம்மை உண்டாக்கின சிருஷ்டிகருடைய அனந்த ஞானத்தையும், சிருஷ்டிப்பின் வல்லமையையும் நினைவுகூர்ந்து, நாம் அவரை நன்றியோடு துதிக்கவேண்டும்.
""கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு'' (சங் 104:24,25).
தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார் (ஆதி 1:21,22).
தேவன் ஒவ்வொரு ஜீவஜந்தையும் சிருஷ்டித்து, அதை பலுகிப்பெருகுமாறு ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரம் ஒவ்வொரு ஜீவஜந்தும் பலுகிப்பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புகிறது. அவை பூமியில் பெருகுகிறது.
ஆறாம் நாள் # மிருகம்
ஆதி 1:24,25
ஆதி 1:24. பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதி 1:25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
தேவன் ஆறாம் நாளிலே நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் சிருஷ்டிக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தையை சொல்லுகிறார். ""பூமியானது மிருகங்களை பிறப்பிக்கக்கடவது'' என்று தேவன் சொல்லுகிறார். தேவனே தாம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுகிறார். தேவன் பூமியிலுள்ள மிருகங்களை உண்டாக்குகிறார்.
தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார் (ஆதி 1:24).
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் (ஆதி 1:25).
தேவன் சொல்லவும் செய்கிறார். அவர் உண்டாக்கவும் செய்கிறார். மிருகங்களின் சுபாவங்களெல்லாம் வித்தியாசமாயிருக்கிறது. அவற்றின் போஜனபழக்க வழக்கங்களும் வேறுபட்டிருக்கிறது. ஒரு சில மிருகங்கள் புல் பூண்டு, இலைகள், தழைகள் ஆகியவற்றை மேய்கிறது. வேறு சில மிருகங்களோ மாம்சத்தைப் புசிக்கிறது. சில மிருகங்கள் பலமுள்ளதாகவும், கொடூர குணமுள்ளதாகவும் இருக்கிறது. வேறு சில மிருகங்களோ அமைதியான சுபாவமுள்ளதாயிருக்கிறது.
நாம் சில மிருகங்களை பழக்கி, அவற்றை நமக்கு பிரயோஜனமான வழிகளில் பயன்படுத்துகிறோம். ஒரு சில மிருகங்களை பழக்க முடியாது. அவை மனுஷருக்கு எந்த வழியிலும் பிரயோஜனமாயிருக்காது. ஆனாலும் தேவன் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக ஜாதி ஜாதியான நாட்டுமிருகங்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் உண்டாக்கினார்.
ஆறாம் நாள் # மனுஷன்
ஆதி 1:26#28
ஆதி 1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும், ஆளக்கடவர்கள் என்றார்.
ஆதி 1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்த்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதி 1:28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்-, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
தேவன் ஆறாம் நாளிலே இரண்டுவிதமான கிரியைகளை செய்கிறார். அவர் முதலாவதாக மிருகங்களை உண்டாக்குகிறார். அதன் பின்பு தேவன் மனுஷனை சிருஷ்டிக்கிறார். தேவன் எல்லா ஜீவஜந்துகளையும் உண்டாக்கி முடித்த பின்பு, மனுஷனை கடைசியாக உண்டாக்குகிறார். தேவன் மனுஷனை முதலாவது உண்டாக்கியிருந்தால், தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியைகளில் மனுஷனும் உதவி செய்தான் என்று சிலர் தப்பிதமாக வியாக்கியானம் பண்ணுவார்கள்.
தேவன் மனுஷனை, எல்லா ஜீவஜந்துகளையும் உண்டாக்கின பின்பு, கடைசியாக சிருஷ்டித்தது மனுஷனுக்கு மேன்மை. தேவன் மனுஷனுக்கு விசேஷித்த கிருபையையும் சிலாக்கியத்தையும் காண்பித்து, அவனை கடைசியாக சிருஷ்டித்திருக்கிறார்.
தேவனுடைய சிருஷ்டிக்கும் கிரியையில் ஒழுங்கும் கிரமமும் இருக்கிறது. தேவன் முதலாவதாக சாதாரண காரியங்களை சிருஷ்டிக்கிறார். அதன் பின்பு அவர் கொஞ்சம் கொஞ்சமாக விசேஷித்த காரியங்களை சிருஷ்டிக்கிறார். தேவனுடைய சிருஷ்டிப்பில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. தேவன் ஆரம்பத்தில் சிருஷ்டித்தது. ஒழுங்கின்மையாயும், வெறுமையாயும் இருந்தது. அவர் அதன் பின்பு சிருஷ்டித்தது ஒழுங்குள்ளதாயும், நிறைவானதாயும் இருக்கிறது. அது நல்லதாயும் இருக்கிறது.
தேவன் மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பதாகவே, அவனுக்கு தேவையானது எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடிக்கிறார். மனுஷனுக்கு தங்கும் வாசஸ்தலத்தை உண்டாக்கியிருக்கிறார். மனுஷன் இந்தப் பூமியில் சிருஷ்டிக்கப்படும்போது, அவனுக்கு தேவையானவையெல்லாம் ஏற்கெனே சிருஷ்டித்து முடிக்கப்பட்டிருக்கிறது. தேவன் இந்தப் பூமியிலே மனுஷனை, தம்முடைய கிருபையினால் வரவேற்கிறார். மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டபோது, அவன் தேவனுடைய சிருஷ்டிப்புகளை பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறான். தேவனுடைய சிருஷ்டிப்பு மனுஷனுக்கு ஆச்சரியமாயும், ஆறுதலாயும் இருக்கிறது.
மனுஷனுடைய சிருஷ்டிப்பு மிகவும் விசேஷித்ததாயிருக்கிறது. இதில் தேவனுடைய தெய்வீக ஞானமும் அவருடைய வல்லமையும் அதிகமாய் வெளிப்படுகிறது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தாலும், மனுஷனை விசேஷித்த விதமாகவும், தம்முடைய விசேஷித்த ஞானத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டித்திருக்கிறார்.
தேவன் இதற்கு முன்பு வெளிச்சத்தை உண்டாக்கியபோது, ""வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே சொன்னார். அவர் ஆகாயவிரிவை உண்டாக்கியபோது, ""ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே சொன்னார்.
ஆனால் இப்போது தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, ""நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக'' (ஆதி 1:26) என்று சொல்லுகிறார். தேவன் வெளிச்சத்தையும், ஆகாயவிரிவையும் உண்டாக்கியபோது, தம்முடைய கட்டளையின் வார்த்தையை வெளிப்படுத்தினார். மனுஷனை உண்டாக்கும்போதோ, தேவன் கட்டளையின் வார்த்தைக்கு பதிலாக, ஆலோசனையின் வார்த்தையை சொல்லுகிறார். ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று தேவன் சொல்லுகிறார்.
தேவன் மனுஷனுக்காகவே மற்ற எல்லா சிருஷ்டிகளையும் சிருஷ்டித்திருக்கிறார். ஆகையினால் மனுஷனை உண்டாக்கும்போது, தேவன் விசேஷித்த கவனம் செலுத்தி, அவனை தம்முடைய சொந்த கரங்களினால் உண்டாக்குகிறார்.
தேவன் வெளிச்சத்தையும், ஆகாயவிரிவையும் உண்டாக்கியபோது, அவர் அதிகாரமுள்ளவராகப் பேசினார். ஆனால் இப்போதோ, அவர் மனுஷனை உண்டாக்குகிறபோது, அன்பும், கரிசனையுமுள்ளவராகப் பேசுகிறார். மனுஷனுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் ஏற்கெனவே உண்டாக்கியிருக்கிறார். இப்போது மனுஷனை உண்டாக்குவதற்கான ஏற்ற வேளை வந்திருக்கிறது. ஆகையினால் தேவன், ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று சொல்லுகிறார்.
மனுஷனுக்கும், தேவனுடைய மற்ற சிருஷ்டிகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. தேவன் இதுவரையிலும் சிருஷ்டித்த சர்வசிருஷ்டிகளிலிருந்தும், மனுஷன் வேறுபட்டவனாயிருக்கிறான். மனுஷனுக்குள்ளே மாம்சமும் ஆவியும் கலந்திருக்கிறது. தேவன் மனுஷனுக்குள்ளே வானத்தையும் பூமியையும் ஒன்றாய்ச் சேர்த்து வைக்கிறார். மனுஷன் பூமிக்குரியவன் வானத்திற்குமுரியவன்.
ஆகையினால் மனுஷனை விசேஷித்த விதமாக சிருஷ்டிக்கவேண்டும் என்பது தேவனுடைய தெய்வீக சித்தமாயிற்று. மனுஷனை சிருஷ்டிக்கும் வேலையை தேவன் தாமே பொறுப்பேற்றுக்கொள்கிறார். ஆனாலும் தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, திரித்துவத்தின் மற்ற நபர்களையும் கலந்து ஆலோசித்து, மனுஷனை சிருஷ்டிப்பதுபோல இருக்கிறது. ஆகையினால் தேவன், ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று பன்மைப் பொருளில் சொல்லுகிறார்.
மனுஷனை உண்டாக்கும்போது, திரித்துவத்தின் மூன்று நபர்களான, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று பேருமே கலந்து ஆலோசித்துக்கொள்கிறார்கள். அவர்கள் மூன்று பேரும் தங்களுடைய ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். அதன் பிரகாரமாக மனுஷன் உண்டாக்கப்படுகிறான்.
மனுஷன் தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின் படியேயும் உண்டாக்கப்படுகிறான். மனுஷனிடத்தில் தேவனுடைய சாயலும், அவருடைய ரூபமும் கலந்திருக்கிறது. ஆனாலும் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் அனந்தமான இடைவெளி இருக்கிறது. கிறிஸ்துவானவர் தேவனுடைய சாயலை வெளிப்படுத்துகிறார். குமாரனாகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய பிதாவின் சாயலை பிரதிபலிக்கிறார்.
தேவனுடைய சாயலும் ரூபமும் மனுஷனிடத்தில் காணப்படுவது, மனுஷனுடைய மேன்மை. இது மனுஷனுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். இது மனுக்குலத்திற்கு ஒரு பாக்கியம். மனுஷன் தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டாலும், தேவனுடைய பூரண சாயலும், அவருடைய பூரண ரூபமும் மனுஷனிடத்தில் வெளிப்படவில்லை. ஒரு கண்ணாடியில் நிழலைப் பார்ப்பதுபோல, மனுஷனிடத்தில் தேவனுடைய ரூபமும் சாயலும் காணப்படுகிறது.
பண்டை காலத்து நாணயங்களில், ராஜாவின் ரூபம் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்திலுள்ளது மெய்யான ராஜா அல்ல. அது ராஜாவின் ரூபம். அதுபோலவே மனுஷனிடத்தில் காணப்படுவது தேவனுடைய பூரணமான ரூபமோ, பூரணமான சாயலோ அல்ல.
மனுஷன் தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபமாகவும் உண்டாக்கப்பட்டான் என்று சொல்லும்போது, அதில் மூன்றுவிதமான காரியங்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன :
1. மனுஷன் தன்னுடைய சரீர அமைப்பில், தேவனுடைய ரூபத்தைப்போலவோ அவருடைய சாயலைப்போலவே இல்லை. ஏனென்றால் தேவனுக்கு சரீரம் இல்லை. தேவன் அரூபமானவர்.
மனுஷனுடைய ஆத்துமா தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின்படியேயும் இருக்கிறது. தேவன் தாமே மனுஷனுடைய சரீரத்தில் இந்த மேன்மையை வைத்திருக்கிறார். வார்த்தை மாம்சமாயிற்று. தேவகுமாரன் மனுஷசாயலானார். விசுவாசிகளாகிய நாம் உயிர்த்தெழும்போது, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான மகிமையான சாயலைப் பெற்றுக்கொள்வோம்.
மனுஷனுடைய ஆத்துமாவே தேவனுடைய சாயலைப் பெற்றிருக்கிறது. ஆத்துமாவில் மூன்று பகுதிகள் உள்ளன. அவையாவன : 1. புரிந்து கொள்ளும் அறிவு. 2. சித்தம் 3. செயல்படும் வல்லமை. நாம் இம்மூன்றின் மூலமாக மாத்திரமே, தேவனை அறிந்துகொள்ள முடியும்.
2. தேவன் மனுஷனை தம்முடைய ஸ்தானத்திலும், தம்முடைய அதிகாரத்திலும் உண்டாக்கியிருக்கிறார். மனுஷன் சகல பிராணிகளையும் ஆளவேண்டும் என்பதற்காக, தேவன் மனுஷனை தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கியிருக்கிறார்.
""பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப்பிராணிகளையும், ஆளக்கடவர்கள் என்றார்'' (ஆதி 1:26).
தேவனே சர்வசிருஷ்டிகளையும் சிருஷ்டித்தவர். ஆகையினால் அவருக்கு எல்லா சிருஷ்டிகளையும் ஆளுகை செய்கிற அதிகாரமுள்ளது. தேவன் தம்முடைய சார்பாக சகல பிராணிகளையும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார். மனுஷன் தேவனுடைய பிரதிநிதியாக சகல பிராணிகளையும் ஆளுகை செய்கிறான்.
3. மனுஷன் பரிசுத்தத்தில் தேவசாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டிருக்கிறான். மனுஷனுடைய அறிவு, நீதி, மெய்யான பரிசுத்தம் ஆகியவற்றில் தேவனுடைய சாயல் வெளிப்படுகிறது.
""உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்'' (எபே 4:23,24).
""தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே'' (கொலோ 3:10).
நம்முடைய முதல் பெற்றோர் தேவசாயலாகவும், தேவனுடைய ரூபத்தின் படியேயும் உண்டாக்கப்பட்டார்கள். ஆகையினால் அவர்கள் பரிசுத்தமாயும், சந்தோஷமாயும் இருந்தார்கள்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்த்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி 1:27).
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்-, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:28).
தேவன், ""நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று சொன்னார். தேவன் அவ்வாறு சொன்னவுடனே, ""அவர் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்''. தாம் தீர்மானித்ததை தேவன் உடனே நிறைவேற்றினார்.
மனுஷனுக்கு சொல்லுவதும் செய்வதும் இரண்டு வெவ்வேறு காரியங்கள். ஆனால் தேவனுக்கோ சொல்லுவதும் செய்வதும் ஒரே காரியம். அவர் சொல்லுகிறதை செய்கிறவர். செய்கிறதை சொல்லுகிறவர்.
தேவன் மற்ற ஜீவஜந்துக்களை சிருஷ்டித்தபோது அவற்றை ஜோடி ஜோடிகளாக சிருஷ்டித்தார். தேவன் அவற்றை திரளான எண்ணிக்கையில் சிருஷ்டித்தார். ஆனால் தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, ஒருவனை மாத்திரமே சிருஷ்டிக்கிறார்.
இயேசுகிறிஸ்து திருமண விவாகரத்துக்கு விரோதமாக உபதேசம்பண்ணும்போது, இந்த சத்தியத்தை சொல்லுகிறார்.
""அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?'' (மத் 19:4,5).
நம்முடைய முதலாவது தகப்பனாகிய ஆதாமுக்கு, ஏவாள் என்பவள் மாத்திரம் ஒரே மனைவியாகயிருந்தாள். ஆதாம் தன்னுடைய மனைவியாகிய ஏவாளை தள்ளி வைத்துவிட்டால், ஆதாம் மறுபடியும் விவாகம்பண்ணுவதற்கு, இந்தப் பூமியிலே ஏவாளைத் தவிர வேறு ஸ்திரீ யாருமில்லை. ஆகையினால் புருஷனும் மனைவியும், தங்களுடைய சுயஇஷ்டம்போல, தாங்கள் விரும்பிய பிரகாரம், தங்களுடைய திருமண உறவை முறித்துக்கொள்ளக்கூடாது.
தேவன் ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக சிருஷ்டித்தார். இந்த சத்தியத்தை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா தேசத்தாரும் அறிந்திருக்கவேண்டும். திருமண உறவின் மூலமாக, புருஷனும் மனைவியும், ஒரே இரத்தமாக சேருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே சந்ததியை சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள். கணவனும் மனைவியும் தங்களுடைய திருமண பந்தத்தின் பரிசுத்ததை நினைவுகூர்ந்து, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, ""நீங்கள் பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்'' என்று சொன்னார். தேவன் முதலாம் மனுஷனுக்கு சொன்ன கட்டளை, இந்தப் பூமியிலுள்ள மனுபுத்திரர் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிற பொதுவான கட்டளையாகும்.
""மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்'' (அப் 17:26).
நாம் இந்தப் பூமியில் வாசம்பண்ணினாலும், இங்கே பரதேசிகளைப்போல சஞ்சரிக்கிறோம். நமக்கு நிலையான நகரம் இங்கு இல்லை. பரலோகமே நமக்கு நித்திய வாசஸ்தலம். நாம் இந்தப் பூமியில் இருக்கும் காலம் வரையிலும், இங்கே பலுகிப்பெருகி, பூமியை நிரப்பவேண்டும். இதுவே நம்மைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
தேவன் மனுஷருக்கு சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். சமுத்திரத்தின் மச்சங்கள், ஆகாயத்து பறவைகள், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்கள் ஆகியவையெல்லாமே மனுஷனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் இந்த ஜீவஜந்துக்களை பராமரிக்கவில்லை. ஆனாலும் அவற்றை ஆண்டுகொள்ளும் அதிகாரத்தை கர்த்தர் மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார்.
தேவன் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின் படியேயும் மனுஷனை சிருஷ்டித்து, அவனுக்கு சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்து, அவனை மேன்மைப்படுத்தியிருக்கிறார். மனுஷன் தன்னுடைய பாதுகாப்புக்காகவும், தன்னுடைய ஜீவாதாரத்திற்காகவும் சகல ஜந்துக்களையும் ஆளுகை செய்யவேண்டும். அவற்றை தன்னுடைய பிரயோஜனத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆறாம் நாள் # ஆகாரம்
ஆதி 1:29,30
ஆதி 1:29. பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்கு கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
ஆதி 1:30. பூமியிலுள்ள சகல மிருக ஜீவன்களுக்கும் , ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும், பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாக கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் ஆறாம் நாளிலே மூன்று கிரியைகளை செய்கிறார். அவர் முதலாம் கிரியையாக மிருகங்களை சிருஷ்டிக்கிறார். இரண்டாம் கிரியையாக, தேவன் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் மனுஷனை சிருஷ்டிக்கிறார். மூன்றாம் கிரியையாக தாம் சிருஷ்டித்த மனுஷனுக்கும், மற்ற ஜீவஜந்துக்களுக்கும் ஆகாரத்தைக் கொடுக்கிறார்.
""மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது'' (சங் 136:25).
தேவன் மனுஷனுக்கு ஆகாரம் கொடுக்கிறார். பூண்டுகளும், கனிகளும் மனுஷனுக்கு ஆகாரமாய்க் கொடுக்கப்படுகிறது. தேவன் மனுஷனுக்கு கொடுக்கும் ஆகாரத்தைத் தியானித்துப் பார்க்கும்போது, நம்முடைய மனதில் தாழ்மை ஏற்படவேண்டும். தேவன் நம்மை இந்த மண்ணிலிருந்து உண்டாக்கியிருக்கிறார். இந்த மண்ணிலிருந்து விளைகிற பூண்டுகளும், கனிகளும் நமக்கு ஆகாரமாயிற்று.
தேவனே நமக்கு ஆகாரத்தைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய தெய்வீக பராமரிப்பை நினைவுகூர்ந்து, அவருக்கு நன்றியுள்ளவர்களாய் ஜீவிக்கவேண்டும். தேவன் நம்முடைய சரீரத்திற்கும் ஆண்டவராயிருக்கிறார். நாம் தேவனிடத்திலிருந்தே நம்முடைய ஜீவனுக்குத் தேவையான எல்லா ஆதரவுகளையும், ஆறுதல்களையும் பெற்றுக்கொள்கிறோம்.
தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்கிறார். தேவைகள் மாத்திரமல்ல, நமக்குத் தேவைப்படுவதைவிட அதிகமாகக் கொடுத்து, அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். தேவன் நமக்கு திரளான போஜனத்தையும், சுவையான போஜனத்தையும், நேர்த்தியான போஜனத்தையும், விதவிதமான போஜனத்தையும் கொடுக்கிறார்.
தேவன் நமக்கு எதைக் கொடுக்கிறாரோ அதிலே நாம் திருப்தியுள்ளவர்களாயிருக்கவேண்டும். தேவன் நம்முடைய ஜீவாதாரத்திற்கு தேவையான போஜனத்தைக் கொடுக்கும்போது, அதிலே திருப்தியடையாமல், தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கக்கூடாது.
இஸ்ரவேல் ஜனத்தார் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணியபோது, தங்கள் போஜனத்தினிமித்தமாக கர்த்தரிடத்தில் முறுமுறுத்தார்கள். அவர்கள் தங்களுடைய ஆசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
""தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்'' (சங் 78:18).
""பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வா-பரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது'' (தானி 1:15).
தேவன்: ""இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்கு கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது'' (ஆதி 1:29) என்று சொன்னார்.
தேவன் மனுஷனுக்கு ஆகாரம் கொடுப்பதுபோல மிருகஜீவன்களுக்கும் ஆகாரம் கொடுக்கிறார். தேவன் பூமியிலுள்ள சகல மிருக ஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும், பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாக கொடுத்தேன் என்றார் (ஆதி 1:30).
தேவன் மிருகஜீவன்களுக்கு மாத்திரமல்ல, ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார். சாதுவான சாதாரண மிருகங்களுக்கும், கொடியகுணமுள்ள மிருகங்களுக்கும் தேவன் ஆகாரம் கொடுக்கிறார். தேவன் ஒவ்வொரு ஜீவஜந்துக்கும் தேவையான ஆகாரத்தைக் கொடுத்து, எல்லா ஜீவராசிகளையும் பராமரிக்கிறார். பறவைகளை போஷிக்கிற தேவன், அதன் குஞ்சுகளை போஷியாமல், அவற்றை பட்டினியாக தவிக்க விட்டுவிடமாட்டார்.
அது மிகவும் நன்றாய் இருந்தது
ஆதி 1:31
ஆதி 1:31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாய் இருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியை நிறைவுபெறுகிறது. தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்க்கிறார். தம்முடைய கிரியைகளை ஆராய்ந்து பார்ப்பது தேவனுடைய தெய்வீக சுபாவம். தேவனாகிய கர்த்தர், இன்றும் தம்முடைய கிரியைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனுடைய கைகளின் கிரியைகள் எல்லாமே, அவருடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது.
தேவன் சர்வஞானமும், சர்வவல்லமையுமுள்ளவர். இவ்விரண்டு சுபாவங்களை வெவ்வேறாக பிரிக்க முடியாது. தேவன் ஒவ்வொன்றையும் தம்முடைய ஞானத்தினாலும், வல்லமையினாலும் சிருஷ்டித்தார். தேவனுடைய ஒவ்வொரு சிருஷ்டியிலும், அவருடைய ஞானமும் வல்லமையும் வெளிப்படுகிறது.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தது, நமக்கு ஒரு முன்உதாரணமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமும் நம்முடைய கிரியைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும், நம்முடைய அன்றாட வேலைகளை முடித்த பின்பு, இரவிலே நித்திரை செய்யப்போவதற்கு முன்பாக, அந்த நாளில் நாம் செய்த வேலைகளை சிறிது நேரம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்த பின்பு, ""அது மிகவும் நன்றாயிருந்தது'' என்று சொல்லுகிறார். அவர் தாம் உண்டாக்கினவற்றை பார்க்காமலேயே, ""அது நன்றாயிருந்தது'' என்று சொல்லவில்லை. இதுவும் நமக்கு ஒரு நல்ல முன்உதாரணமாகும். ஒரு காரியத்தை நம்முடைய செவிகளால் கேட்பதற்கு முன்பாகவே, அவசரப்பட்டு பிரதியுத்தரம் சொல்லக்கூடாது.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, அது நன்றாயிருந்தது என்று சொல்லுகிறார். தேவனே எல்லாவற்றையும் உண்டாக்கினவர். அவரே சர்வசிருஷ்டிகர். தேவனுடைய சிருஷ்டிப்புக்களெல்லாம் அவருடைய மனதிற்கு உகந்ததாகயிருக்கிறது. தேவன் ஒவ்வொன்றையும் எப்படி உண்டாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாரோ, அப்படியே அவற்றை உண்டாக்கியிருக்கிறார்.
தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகள் எல்லாவற்றையும் முடித்த பின்பு, ""அது நன்றாயிருந்தது'' என்று சொல்லுகிறார். தேவன் அவற்றை என்ன நோக்கத்திற்காக உண்டாக்கினாரோ, அந்த நோக்கத்திற்கு அவையெல்லாம் நன்றாயிருக்கிறது.
தேவனுடைய சிருஷ்டிகளெல்லாம் மனுஷனுக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்க வேண்டும். இதற்காகவே தேவன் அவற்றை உண்டாக்கியிருக்கிறார். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும், தம்முடைய நாமமகிமைக்காகவும், மனுஷனுடைய பிரயோஜனத்திற்காகவும் உண்டாக்கியிருக்கிறார். தேவன் உண்டாக்கினவற்றின் மூலமாக அவருடைய நாமம் மகிமைப்படுகிறது. ஆகையினால் அது நன்றாயிருந்தது என்று தேவன் சொல்லுகிறார்.
தேவன் ""அது நன்றாயிருந்தது'' என்று சாதாரணமாகச் சொல்லாமல், ""அது மிகவும் நன்றாயிருந்தது'' என்று விசேஷமாகச் சொல்லுகிறார். தேவன் ஒவ்வொரு நாளும் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியையை செய்து முடித்த பின்பு, தாம் உண்டாக்கினது நல்லது என்று தேவன் கண்டார். இரண்டாம் நாளில், சிருஷ்டிப்பின் கிரியையை முடித்த பின்பு, தேவன் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தவில்லை.
ஆறாம் நாளிலோ, தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து, ""அது மிகவும் நன்றாயிருந்தது'' என்று சொல்லுகிறார். தேவன் இப்போது மனுஷனை சிருஷ்டித்திருக்கிறார். தேவன் அவனை தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்திருக்கிறார்.
தேவனுடைய சிருஷ்டிப்புகளில் மனுஷன் மிகவும் விசேஷமானவன். மனுஷன் மூலமாக தேவனுடைய மகிமை பிரத்தியட்சமாய் வெளிப்படுகிறது. மனுஷன் தன்னுடைய வாயினால் தன்னை உண்டாக்கின தேவனை துதிப்பான்.
தேவன் சிருஷ்டித்த ஒவ்வொன்றும் நன்றாயிருக்கிறது. அவையெல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கும்போது, அது மிகவும் நன்றாயிருக்கிறது. தேவனுடைய கிரியைகளில் அவருடைய மகிமையும், நன்மையும், அழகும், இசைவும், ஒற்றுமையும் வெளிப்படுகிறது. தேவன் தம்முடைய சிருஷ்டிப்பில், தம்முடைய தெய்வீக கிருபையையும், தெய்வீக பராமரிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஒழுங்கின்மையும் வெறுமையும் நன்றாயிராது. ஆரம்பத்தில் அது நன்றாயில்லாவிட்டாலும், தேவன் ஒழுங்கின்மையை ஒழுங்குபடுத்துகிறார். வெறுமையாயிருப்பதை தம்முடைய சிருஷ்டிப்புக்களினால் நிரப்புகிறார். அப்போது அது மிகவும் நன்றாயிருக்கிறது.
நாம் எதையும் அவசரப்பட்டு நியாயந்தீர்க்கக்கூடாது. ஏற்ற காலம் வரும் வரையிலும் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். காலம் நிறைவேறும்போது தேவனுடைய மகிமை நமக்கு வெளிப்படுத்தப்படும்.
ஆறாம் நாளில் தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியை நிறைவுபெறுகிறது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. இவ்வாறாக தேவன் ஆறு நாட்களில் இந்த உலகத்தை உண்டாக்கியிருக்கிறார். தேவன் இந்த உலகத்தை ஏன் ஒரே வார்த்தையில் திடீரென்று உண்டாக்கவில்லை என்று நாம் விவாதம்பண்ணக்கூடாது.
தேவன் முதலாம் நாளில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சமுண்டாயிற்று. அதுபோல தேவன் ""உலகம் உண்டாகக்கடவது'' என்று ஏன் சொல்லவில்லை என்று தேவையில்லாமல் விவாதம்பண்ணக்கூடாது. தேவன் அவ்வாறு சொல்லியிருந்தால், இந்த உலகம் அவருடைய வார்த்தையின் பிரகாரமாக, அதே வேளையில் உண்டாகியிருக்கும். கண்ணிமைப்பொழுதில் கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்.
""இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்'' (1கொரி 15:51).
தேவன் நம்முடைய விருப்பத்தின் பிரகாரம், நம்முடைய திட்டத்தின் பிரகாரம் இந்த உலகத்தை உண்டாக்கவில்லை. அவர் தம்முடைய திட்டத்தின் பிரகாரம், தம்முடைய வழியில், தம்முடைய காலத்தில் இந்த உலகத்தை உண்டாக்கினார்.
இவ்விதமாக வானமும் பூமியும் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டு தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் (ஆதி 2:1,2).
