சிலுவையின் வரலாறு பாகம் 1
I. சிலுவையின் துவக்கம்:
a. சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் -பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது.
b. சிலுவை என்ற இந்தச் சொல் 'லத்தின்' மொழியின் சொல்லான "க்ரக்ஸ் (crux)" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை "குருக்ஸ் என்றும், "குரூஸ்" என்றும், அழைப்பார்கள்.
C. வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் பாக்கஸ் தீரு தேசத்தாரின் "தம்முஸ்', கல்தேயரின் "பெல்", ஸ்காண்டினேவியரின் 'ஓடின்" போன்ற விக்கிரகங் -களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.
d. சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் "ஸ்டாரஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். "ஸ்டாரஸ்" என்ற வார்த்தையானது செங்குத்தானக் கம்பம் அல்லது கழுமரம் என்பதைக் குறிக்கிறதாகும்.
e. தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை கழு மரம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.
II. சிலுவையும் ரோமர்களும்:
a. ரோமானியர்கள் இந்த சிலுவையின் தண்டணை முறையை பிற நாட்டுக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்க்காக கி.மு முதல் நூற்றாண்டு முதலே பயன்படுத்தி -யுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றது.
b. செல்வாக்குள்ள சிலரைத் தவிர, தண்டனைப்பெற்ற குற்றவாளிகள் அணைவரையும், நிர்வாணமாகவே ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொள்ளுவார்கள்.
c. ரோம அரசாங்கத்தினர் பல்வேறு அளவுகளில் சிலுவைகளைச் செய்து, பொருள் கிடங்கில் வைத்திருப்பார்கள்.
d. ரோமர்களில் யார் எவ்வளவு பெரிய துரோகியாக இருந்தாலும், சிலுவையில் கொல்லப்பட மாட்டார்கள். அடிமைகளும், அந்நியர்களும் மட்டுமே சிலுவையில் கொள்ளப்படுவார்கள்.
e. இந்தியாவில் தூக்குதண்டனையைப் போன்று, பார சீகர்களும், மேதியர்களும், சீரியர்களும், மரணத் தண்டணையை நிறைவேற்ற சிலுவையையேப் பயன்படுத்தினர்.
f. கி.மு 27ல் ரோம ராயனாக அகுஸ்து சீஷர்" என்பவரும் யூதேயாவை உள்ளடக்கின சீரிய ஆளுனராக "குரேனியுவும் இருந்த நாட்களில் தான், யூதேயாவிளுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்து வளர்ந்தார் (லூக் 2:1,2) இயேசுவின் புரட்சிகரமான வாரத்தைகளும், வல்லமை மிக்க செயல்களும் ரோம ஆளுனர்களை பயம் கொள்ள வைத்தது. அதனால்தான், இயேசுவை சிலுவையில் அறைந்து, கொள்ள வேண்டுமென்று யூதாஸ்காரியோத் மூலம் பலிதீர்க்கும் காரியத்தை ஆரம்பித்தார்கள்.
III. சிலுவையின் நிலை: கொலோ 2:15
a. சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.
b. ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும்.
1. நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்
2. சற்று கீழே இறக்கி இணைத்தல்
3. சரியாக நடுவில் இணைத்தல்
4. நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்
C. சில சிலுவைகளில் கை மற்றும் காள்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.
d. சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.
e. இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.
f. ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.
g. சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.
h. சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊறுக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.
i. சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து அழையும் (ஆதி 40:19).
j. பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அதில் இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்னர் தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.
k. கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது;
1. கல்லெறிந்து கொள்ளப்பட்டனர் (யோசு 7:25,26).
2. உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர் (சங் 106:18; வெளி 17:16).
3. மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். (எஸ்த 2:23; ஆதி 40:19).
l. கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உல்லின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணி அடித்திருப் -பார்கள்.
இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வலைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.
m. எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த சவுக்கி -னால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.
n. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.
o. இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற் -க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.
p. சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர் -களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
q. சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரை -கிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்,
IV. வரலாற்றுக் குறிப்புகள்
1. சிலுவையின் குன்று (Hill of Crosses):
வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ளது சிலுவையின் குன்று. இது கிறிஸ்தவ யாத்ரீகர்கள் செல்லும் இடமாகும். 1831ம் ஆண்டு, இங்கு முதல் முதல் ஒரு சிலுவை வைக்கப்பட்டது.
பின்பு, அதுவே பாரம்பரிய பழக்கமாக மாறிப்போய் இப்போது ஏறாளமான சிலுவைகள் அங்கு பெருகிப் போயுள்ளான. 1990 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 55,000க்கும் அதிகமான சிலுவைகள் காணப்பட்டன. அதுவே கடந்த 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,00,000 அதிகமான சிலுவைகள் அந்த குன்றின் மீது நடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
2. தமிழ்நாட்டில் ஓர் சிலுவைச்சேரி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓர் கிராமம் தான் சிலுவைச்சேரி. இந்த ஊரில் அய்யனார் கோவிலும், மாரியம்மன் கோவிலும் பிரபல்யமானது. அப்படிப்பட்ட பிரபல்யத்திற்கு மத்தியில் அந்த ஊரின் பெயர் சிலுவையை சுமந்து கொண்டு இருப்பதால் இது ஓர் கிறிஸ்தவர்களின் ஊர் என்றே அணைவராலும் கருதப்படுகின்றது..
3. சிலுவைப் போர்கள்
இலத்தின் திருச்சபையின் அனுசரணையுடன் இடம் பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடர்தான் சிலுவைப்போர் ஆகும்.
1. இஸ்லாமியரிடமிருந்து எருசலேமை மீட்பது
2. பாகனிய நெறிகளை ஒடுக்குதல்
3. மத நிந்தனையை இல்லாததாக்குதல்
4. ரோமன் கத்தோலிக்க குழுக்களுக்கான போட்டி நிலை -மைக்கு தீர்வுக்காணுதல்
என்பவைகள்தான் சிலுவைப் போரின் முக்கியக் காரணமாக இருந்தது.
1095 முதல் 1272 வரையும் ஏறத்தால ஒன்பது சிலுவைப் போர்கள் நடைபெற்றுள்ளன.
4. எசுப்பானிய நாட்டின் தலைநகரான மத்ரித் என்ற பட்டணத்தில் உலகின் உயரமான சிலுவை அமைந்துள்ளது.
5. பாகிஸ்தான் சிலுவை
பாகிஸ்தான் நாட்டின், கராச்சி பட்டணத்தில் கோரா கப்ரிஸ்தான் என்ற கல்லறைக்கருகில், ஆசியாவிலேயே பெரிய சிலுவையை பர்வேஸ் ஹென்றி கில் என்ற வியாபாரி கடந்த 2015ம் ஆண்டில் கட்டினார். இந்த சிலுவையானது 140 அடி (42.7 மீட்டர்) அளவு உயரம் கொண்டதாகும்.
என்ன கட்டுகிறோம் என்பதை முதலில் அவர் யாருக்கும் சொல்ல -வில்லை, ஓரளவு கட்டியப் பின்னர்தான் சிலுவை என்று தெரியவந்தது. அதனால், தொழிளாலர்கள் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
ஆனாலும் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேளை செய்து கட்டிமுடிட்த்தனர். யாராவது இந்த சிலுவையைத் தாக்கலாம் என்று நிணைத்ததால், குண்டு துழைக்காத வகையில் இந்த சிலுவை கட்டப்பட்டுள்ளது.
V. கருத்துக்களும் கேள்வியும்
கருத்து 1
a) "X" - CRUX DECUSSATA
b) "T" CRUX COMMISSA
c] “+" -- CRUX IMMISSA -CRUX SIMPLEX
இதில் எந்த வகை சிலுவையில் இயேசு அறையப்பட்டார் என்ற கேள்வியோடு கூடிய பெரிய விவாதம் அறிஞர்கள் மத்தில் இன்றும் உண்டு. ஆனாலும் "+ CRUX IMMISSA" வடிவிலான சிலுவையாகத்தான் இருந்திருக்கும் என்றும் பலரும் நம்புகின்றார்கள்.
காரணம்: இயேசுவின் தலையின் மீது ஓர் பலகை மாட்டப்பட்டதாக வேதம் சொல்கின்றது (மத் 27:37). அதற்கு ஏற்ற இடவசதி இதில்தான் இருந்திருக்கும் என்று நம்புகின்றனர்.
கருத்து 2:
குரூஸிஃபிகேஷன் இன் ஆன்ழகியுட்டி புஸ்தகம்:
இயேசுவை ஒற்றை நேர் மரத்துண்டில்தான் சிலுவையில் அறைந்தனர். அதனால் அதனை சிலுவை என்று சொல்ல முடியாது என்று இந்த புஸ்தகம் விவரிக்கிறது.
கருத்து 3
இயேசு இறந்து சுமார் 300 வருஷங்களுக்குப் பிறகு, ரோம பேரரசனான கான்ஸ்டன்டைன், சிலுவையை தன்னுடைய ராணுவப் படைகளின் சின்னமாக பயன்படுத்தினார். காலப்போக்கில் அதுவே சின்னமாக மாறிப்போனது.
கருத்து - 4:
எழுத்தாளரும், தொல்லியலாளருமான அடால்ப் நப்பாலேயன் டிரான் என்பவரின் கருத்து:
கிறிஸ்துவுக்குச் சமமாய் இல்லையென்றாலும், அவரைப்
-போலவே சிலுவையும் வழிபாட்டிற்குறிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சொல்லப்போனால் மரத்தினால் செய்யப்பட்ட இந்த புனிதச் சின்னம் ஏறக்குறைய கடவுளுக்குச் சமமாகவே சில இடங்களில் பூஜிக்கப்படுகின்றது.
VI. சிலுவையும் காடியும் :
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நன்க்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப் -பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காழ கொடுக் கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.
1. மாற் 15:23 சிலுவையில் அறைவதற்க்கு முன்:
முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதனை ஏற்க்கவில்லை.
2.லூக் 23:36 சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:
முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்ற -வுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக் -கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது (மாற் 15:33).
3. யோவா 19:29,30 மாற் 15:36 சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:
முக்கிய குறிப்பு: சங் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, பஞ்சில் தோய்த்து, ஈசோப் -புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தப்பின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்தும் இது நிகழ்ந்தது.
VII. ஒரே நாளில் நிறைவேறிய சிலுவைக்கான தீர்க்கதரிசனங்கள்:
- சங் 41:9 காட்டிக்கொடுக்கப்படுவார் மத் 10:4; 26:49,50
- சக 11:12,13 முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார் மத் 26:15
- சக 11:13 அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும் மத் 27:5
- சக 11:13 அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர் மத் 27:7
- சக 13:7 சீடர்களால் கைவிடப்படுவார் மாற் 14:50
- சங் 35:11 பொய்க் குற்றம் சாட்டப்படுவார் மத் 26:59,60
- ஏசா 53:7 குற்றம் சாட்டப்படும்போது காயப்படுத்தப்படுவார்
- மௌனமாக இருப்பார் மத் 27:12
- ஏசா 53:5 காயப்படுத்தப்படுவார் யோவா 20:25
- ஏசா 50:6 அடிக்கப்படுவார். துப்பப்படுவார் மத் 26:67
- மீகா 5:1 கன்னத்தில் அடிக்கப்படுவார் மாற் 14:65
- சங் 22:7,8 பரியாசம் பண்ணப்படுவார் மத் 27:31
- சங் 109:24,25 மிகவும் தள்ளாடுவார் யோவா 19:17; லூக் 23
- சங் 22:16; சக 12:10 கரங்கள் துளைக்கப்படும் லூக் 23:33
- ஏசா 53:12 அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார் அக்கிரமக்காரருக்காகவும் வேண்டுதல் செய்வார் மத் 27:38 லூக் 23:34
- ஏசா 53:3 சொந்த மக்களால் கைவிடப்படுவார் யோவா 7:5,48
- சங் 69:4 காரணமின்றி பகைக்கப்படுவார் யோவா 15:25
- சங் 38:11 நண்பர் தூரமாவர் லூக் 23:49
- சங் 109:25 மக்கள் தலைகளைத் துலுக்குவர் மத் 27:39
- சங் 22:17 அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர் லூக் 23:35
- சங் 22:15 உடைக்காக சீட்டிடுவர் யோவா 19:23,24
- சங் 69:21 தாகமாயிருப்பார் யோவா 19:28
- சங் 69:21 காடியைக் குடிக்கக் கொடுப்பர் மத் 27:34
- சங் 22:1 அவரது கதறல் கேட்கப்படவில்லை மத் 27:46
- சங் 31:5 பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார் லூக் 23:46
- சங் 34:20 எலும்புகள் முறிக்கப்படாது யோவா 19:33
- சங் 22:14 இருதயம் உடைந்தவராவார் யோவா 19:34
- சக 12:10 குத்தப்படுவார் யோவா 19:34
- ஆமோ 8:9 அந்தகாரம் தோன்றும் மத் 27:45
- ஏசா 53:9 ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார் மத் 27:57-60
VIII. சிலுவையும் சில அடையாளங்களும்:
a. ரோமன் கத்தோலிக்கச் சபையினர் தாங்கள் கிறிஸ்தவ பக்தியுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதற்க்காக தந்தை, மகன், தூய ஆவியானவர் என்றுச் சொல்லி கண், மார்பு, தோல்பட்டைகளைத் தொட்டு சிலுவையின் அடையாளத்தைப் போட்டுக் கொள்வார்கள்.
இதில் தந்தை என்றால் பிதாவையும், மகன் என்றால் இயேசுவையும், தூய ஆவி என்றால் பரிசுத்த ஆவியானவர் என்றும் அர்த்தமாகும். அது போல, கண் என்றால் ஆவியையும், மார்பு என்றால் ஆத்துமாவையும், தோல்பட்டை என்றால் சரீரத்தையும் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். இது அவர்களுக்கென்று, அவர்களே உருவாக்கிக் கொண்ட அடையாளமாகும்
b. நாம் படிக்கும் கல்வி பாடத்தில் கூட பலவிதங்களிலும் சிலுவையோ அல்லது சிலுவையின் அடையாளமோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
1. ரோமன் இலக்கம் 10 என்பது “ X " ஆகும்.
2. இலத்தின் அகர வரிசையில் " X " என்ற எழுத்தும் "t" என்ற எழுத்தும் சிலுவையைக் குறிக்கும்.
3. ஹன் என்ற எழுத்தில் 10 என்பது “ † ” ஆகும்.
4. கூட்டல் அடையாளத்திற்கு " + " ஆகும்.
5. பெருக்கல் அடையாளத்திற்கு “ X ” ஆகும்.
6. பிழை என்பதை குறிக்கவும் "X" ஆகும்.
இப்படி அனுதின வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் சிலுவை நம்மோடுகூட கலந்து நிற்கிறது.
C. சங்கீத புஸ்தகத்தில் வரும் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையையும், சிலுவையின் பாடுகளையும் குறிப்பிடும் ஓர் சங்கீதமாக உள்ளது. 6,14,15,18 ஆகிய வசனங்களே இதற்கு ஆதாரம். ஆதலால் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையின் அடையாளமாகும்.
d. ஏசாயாவின் புஸ்தகம் 53ம் அதிகாரமும் இயேசுவின் சிலுவையை படம்பிடித்து காண்பிப்பதைபோல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக 9 மற்றும் 10 ஆகிய வசனங்கள் இயேசு சிலுவையில் சந்தித்த, சகித்த தூன்பங்களை தெளிவாக விவரிக்கின்றது. இதன் மூலம் தீர்க்கதரி சனங்களும், தீர்க்கதரிசிகளும் சிலுவையைத் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டுகினறது. ஆதலால், ஏசாயா 53ம் அதிகாரமும் ஓர் ஆடையாளம் தான்.
e. சிரேனே என்ற ஊரைச் சேர்ந்தவனும், அலெக்சந்தர் மற்றும் சூப் என்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் மீது, போர்வீர்கள் அந்த பாரமான சிலுவையை வைத்தார்கள் (லூக் 23:26]. தேசாதிபதியின் அரண்மணையின் வெளியில் இருந்து, ஏறத்தால கபாலஸ்தலம் என்ற இடம் வரைக்கும் இந்த சீமோன் சிலுவையைச் சுமந்திருக்கலாம் (மாற் 15:16,21). ஆதலால், இயேசுவின் சிலுவையின் அடையாளங்களில், தவிர்க்க முடியாத அடையாளமாக சீமோன் மாறிவிட்டான்.
f. கிறிஸ்தவக் கொடி :
வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ள சீர்திருத்த திருச்சபைகளின் மூலம் இந்த கொடி உருவாக்கப்பட்டது. இந்த கொடியின் பின்புறம் வெள்ளை நிறமும், இடப்புறத்தில் நீள நிறமும், அதன் உள்ளே சிகப்பு நிறமும் காணப்படும்வன்னம் வரையப்பட்டுள்ளது. இதில் சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தையும், நீளநிறம் ஞானஸ்நானத்தையும் மற்றும் விசுவாசத்தையும், வெள்ளை நிறம் இயேசுவின் பரிசுத்தத்தையும் காட்டுவதாக உள்ளது.
சிலுவையும் வாரநாட்களும் :
சிறலுவையில் மரித்த இயேசுவின் கடைசி ஒரு வாரமாகிய ஞாயறு முதல் சனி வரை என்ன நடந்தது என்பதை மருத்துவராகிய லூக்கா தனது சுவிசேலு நூல் 19ம் அதிகாரம் முதல் 24ம் அதிகாரம் வரையினான வேதப்பகுதியில் மிக விபரமாக கூறியுள்ளார். அதனை கிழமையின் வரிசைபடி நியாணிப்பது மிக நல்லது.
1. ஞாயிறு எருசஸேம் பலனி (லூக் 19:25–44)
2. திங்கள்: தேலாலயம் தூய்மையாக்குதல் (லூக்: 19:45-48)
3. செவ்வாய்: பொதுமக்கள் நடுவில் (லூக். 20:1-21)
i) அவரது அதிகாரத்தை கேள்வி கேட்டல் (ஹக் 20:1-8)
ii) அவரது அதிகாரம் உவமையின் மூலம் வெளிப்படுத்தப்படல் (லூக். 20:11-18)
iii) அதிகாரத்தைக் கொடுத்தல் (லூக். 20:18-40)
iv) அதிகாரம் நிரும்பவும் உரைக்கப்படுதல் (லூக். 20:41 - 21:4)
v) மறைபொருளில் உரையாடஸ் (லூக். 21:8-38)
4. புதன் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க ஆயத்தம் (லூக் 22:1-5)
5. வியாழன்: பஸ்காவும் இயேசுவின் கைதும் (லூக்., 22:7-53)
1) கர்த்தரின் பத்தி (இராபோஜனம்) (லூக். 22:7-30)
II) கெத்செமேனே தோட்டம் செல்லுதல் (லூக். 22:39-46)
III) இயேசு கைது செய்யப்படுதஸ் (லூக். 22:47-53)
6. வெள்ளி: விசாரணையும் சிலுவையிலறைதலும் (லூக் 22:54 - 23:55)
I) பேதுருவின் மறுப்பு லூக். 22:54-62)
ii) அடிக்கப்படும் கிறிஸ்து (லூக். 22:63-63)
III) ஆலோசனைச் சங்கம் முன் கிறிஸ்து (லூக். 22:66-71)
iv) ஆளுநர் பிலாத்துவின் முன் கிறிஸ்து லூக் 23:1-8)
v) ஏரோது ராஜாவின் முன் கிறிஸ்து (லூக். 220-12}
vi) ஆளுநர் முன் மீண்டும் கிறிஸ்து (லூக்- 23:13-20)
vii) சிலுவையில் கிறிஸ்து அறையப்படுதல் (லூக். 23:25-49)
vili) கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுதல் (லூக். 23:50-59)
7. சனி: கல்லறையில் கிறிஸ்து இலேசு (லூக். 23:06)
8. உயிர்த்த இயேசு மணிதருக்குக் தரிசனமாகுதல் (லூல். 24:1-53)
1) மரணாத்தை வென்ற கிறிஸ்து (லூக். 24:1-12}
ii) தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய கிறிஸ்து (லூக் 24:13-35)
II) உவிர்த்த உடலில் உணவு உண்ட கிறிஸ்து [லூக். 24:36-43)
iv) சபையில் தலைவர் (லூக் 24:44-48]
v) மரிசுத்த ஆவியானவரை அருளுபவர் (ஜாக். 24:40)
vi) பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
கிறிஸ்து (லூக் 2450-53)
சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:
அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள்.
1. அன்னா, காய்பா, ஆகியோர் முன், சனகெரிப் சங்கம் முன்,
2. சட்ட சம்பந்தமான விசாரணைக்காக பிலாத்து, ஏரோது, மீண்டும் பிலாத்து ஆகியோர் முன்.
அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24)
இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருத -ப்பட்ட 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல -ப்படுகிறார். அங்கும் விசாரனை நடக்கிறது (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)
அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். அரசதுரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பிட்டார் பிலாத்து (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).
அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.
பிலாத்து இயேசுவை கலிலேயன் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.
மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார். (மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)
நியாயமற்ற விசாரணைகள்:
கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.
1. குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம் (யோவா 11:50; மாற் 14:1; 14:55)
2. பொய்சாட்சிகளை ஏற்படுத்தினர் (மத் 26:61)
3. குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை (லூக் 22:67-71)
4. ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு (மத் 26:63-66)
5. பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்பிட்டது அநியாயம் (மத் 26:63-66)
6. ஆலோசனைச் சங்கம் கூடிய இடம் பிராத ஆசாரியனின் வீடு. முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடிதான் தீர்ப்பிட வேண்டும் (லூக் 22:54).
அவர் குற்றமற்றவரே:
1. குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன் (மத் 27: 4)
- யூதாசு,
2. நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம் (மத் 27:19) - பிலாத்துவின் மனைவி
3. இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை (லூக் 23:4) - பிலாத்து
4. பாவமறியாதவர் (2கொரி 5:21) - - பவுல்
5. அவர் பாவஞ் செய்யவில்லை (1பேது 2:22) - பேதுரு
6. அவரிடத்தில் பாவமில்லை (1யோவா 3:5) - யோவான்
சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் :
கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக கொள்ளக்கூடிய காரியான்று. கிறிஸ்து மனிதனாக அவதரித்தயோது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார். என வேதவசனங்களில் காணலாம்.
ஆவி
மாற் 2:8
மாற் 8:12
லூக் 10:21
லூக் 23:46
ஆத்துமா
மாற் 14:34
யோவா 12:27
ஏசா 53:10
சங் 16:10
சங் 69:1
சங் 22:20
சரீரம்
எபி 10:5
மத் 1:20
லூக் 2:7,51,51
லூக் 4:2
யோவா 4:6,8
1பேதுரு 2:24
நமக்காக அவர் பலியானபோது:
1) மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் - (10பது 4:1: 3:18)
2) ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான நுக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் - (மாற் 14:34: 9
3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆளியை ஒப்புக்கொடுத்தார் - (யோவா 13:21, லூக் 23:46)
எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.
இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:
1. யூதாஸின் அறிமுகம்
முழு பெயர் : யோவா6:71 சீமோனின் குமாரணகிய டபூதாஸ் காரியோத்து.
யூதாஸ் (எல்) கொண்டாடபடுகின்ற (அ) துதி
அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன்
ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்
எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ளது கீரியோத்.
வித்தியாசம்:- மற்ற 11 சீசர்களும் கலேயாவைச் சேர்ந்தவர்கள்
இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்
II.யூதாஸின் மற்ற பெயர்கள்:
1. யோவா 12:4 சீசனாகிய யூதாஸ்
2.மத் 26:14 பன்னிரண்டு பேரில் ஒருவன்
3. மத் 10.4 காட்டிக் கொடுத்த டபூதாஸ்
4.அப் 1:16 எதிரிகளுக்கு வழிகாட்டி
5.யோவா 17:12 கேட்டின் மகன்
6. யோவா 12:6 திருடன்
7. லூக் 6:16 துரோகி
III. யூதாஸின் நற்குணங்கள்:
1. யோவா 18:2 இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன்.
2. சங் 41:9 பிராண சிநேகிதன்.
3. சங் 43:9 நம்பிக்கைக்குறியவன்.
4. மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,
5. மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.
பாவ அறிக்கை செய்யவில்லை.
IV. யூதாஸின் பொறுப்புகள்:
1.யோவா 12:6 பணப்பையை சுமப்பவன்
2.யோவா 13:29 பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன்
3.யோவா 13:29 ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது
4.யோவா 12:5 தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.
V. யூதாஸின் சுபாவங்கள்:
1. யோவா 12:3,4 இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்
2. யோவா 13:30 இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.
3. மாற் 14:45 முத்தம் செய்யும் குணம் இருந்தது.
4.யோவா 13:18 எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.
5. மத் 27:4 குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.
6. மத் 27:4 பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.
7. மாற் 14:11 பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.
8. மத் 27:5 சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.
VI. யூதாஸின் பின் விளைவுகள்:
1. மாற் 3:19 சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.
2. மத் 27:4 அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.
3. யோவா13:2 பிசாசினால் தூண்டப்பட்டான்.
4. லூக் 22:3 சாத்தான் டபூதாசுக்குள் புகுந்தான்.
5. யோவா 6:70 பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான்.
6.அப் 1:24 ஊழியத்தை இழந்துபோனான்.
VII. யூதாசின் முடிவு:
1. சங் 109:8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)
2. மத்27:5 நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்
3. அப் 1:18 தலைகீழாக விழுந்தான்
4. அப் 1:18 யூதாசின் வயிறு வெடித்தது
5.அப் 1:18 குடல்களெல்லாம் சரிந்துப் போனது
6. அப் 1:20 அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது
சிலுவையின் ஏழு வார்த்தைகள்:
முதலாம் வார்த்தை துணுக்குகள்:
1. பெயர் வித்தியாசங்கள்:
- ஆங்கிலம் - குட்பிரைடே (Good Friday) - நள்ள வெள்ளி
- தமிழ் புனிதவெள்ளி - புனித்தைக் குறிக்கும் வெள்ளி
- மளையாளம் - துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி
2. இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர்
வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.
3. கெத்சமெனே
எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்
வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்:
- மத் 5:44 துன்ப படுத்தினோருக்காக ஜெபித்தார்
- 1கொரி 4:13 தூசிப்போருக்காக வேணடிக் கொண்டார்
- லூக் 23:34 அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்
இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:
1. பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:
1.லூக் 23:43:
2. 2கொரி 12:3;
3. வெளி 2:7
2. பரதீசு என்றால் பேரின்ப வீடு என்பதாகும்
3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் பாரடைசோல் எனப்படும்
4. பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்
5. பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்
6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட
பரதீசில் இருப்பார்கள்.
7. லூக் 16:23 ஆபிரகாமின்மடி 2கொரி 12:2 மூன்றாம் வானம் - இவைகளும் கூட பரதீசை குறிக்கும்
வார்த்தை: லூக் 23:43 நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:
2கொரி 12:2,3 பரதீசியில்
- 1. மனுஷர்பாஷை இருக்காது
- 2. மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது
- 3. பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது
வெளி 2:7
- 1. தேவ சப்தம் கேட்போர் போவார்கள்
- 2. ஜெயங்கொள்போர் போவார்கள்
- 3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு
மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:
- 1. இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்
- 2. மரியாள் யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்
- 3.யோவா 18:4,5,6 இயேசுவை பிடிக்கவந்தோர் ஏறத்தாழ 500
- 4. இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்
வார்த்தை: யோவா 19:26,27 அதோ உன் மகன்; அதோ உன் தாய்
1. மகன் யார்?
- யோவா 13:23 இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்
- யோவா 21:7 இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்
- யோவா 21:20,23 மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்
- 1தீமோ 5:2 தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்
2. தாயைப்பற்றி:
- யோவா 2:5 இயேசுவின் சொல்படி செய்கிறவள்
- லூக் 1:28 தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப் பட்டவள்
- லூக் 2:7 சத்திரத்தில் தங்கினாள் [தாழ்மை]
- அப் 1:13 சீசர்களுடன் இருந்தாள் [ஐக்கியம்)
- அப் 1:14 ஜெபத்தில் தரித்திருப்பவள்
நான்காம் வார்த்தை துணுக்குகள்:
- 1. யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள்
- 2. இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே
- கையில் ஆணி அரைந்துள்ளனர்
- 3. சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு பொனிசியா
- 4. சிலுவை என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.
வார்த்தை: மத் 27:46 என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?
- a. சங் 22:1 தீர்க்கதரிசனம் நிறைவேறினது
- b. ஏசா 53:10 இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்
- C. ஏசா 54:7 இமைப்பொழுது இயேசு கை விடப்பட்டார்
- d. புல 1:12 துக்கம் தாங்காமல் ஜெபித்தார்
- e.எபி 5:7 சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்
- f. மத் 27:46 மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் கை விட்டீர் என்று கதறினார்
ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:
- 1. மத் 27:45 சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்
- 2. இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்
- 3. மாற் 16:1 சலோமே என்பவள் இயேசுயின் சித்தி
வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:
1. காடி என்றால் என்ன?
- எண் 6:3 திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி
- மத் 27:34 காடியில் கசப்பு கலந்திருக்கும்
2. இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது:
- i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை
- ii) லூக் 23:36 சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது
- iii) லூக் 23:37 இயேசுவை ஏளனம் செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது
ஆறாம் வார்த்தை துணுக்குகள்:
- பிலாத்துவின் அரண்மணையின் பெயர் அதோனியோ
- ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்
- கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் ஸ்தேபானால்
வார்த்தை: யோவா 19:30 எல்லாம் முடிந்தது
- அப் 20:24 உயிரைப் பெரிதாக நிணைக்காதவர்
- யோவா 17:4 பிதா நியமித்த வேளையை முடித்தார்
- 2தீமோ 4:5,7 ஓட்டம் முடிந்தது
ஏழாவது வார்த்தை துணுக்குகள்:
- 1. இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது
- 2. லூக் 23:47 நூற்றுக்கதிபதி லாங்கீஸ் இரட்சிக்கப்பட்டான்
- 3. யோவா 19:39,40 நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.
வார்த்தை: லூக் 23:45 பிதாவே என் ஆவியைத் தருகிறேன்:
- அப் 1:18 யூதாஸ் ஆவியை தூக்கு கயருக்கு தந்தான்
- யோசு 7:25 ஆகான் ஆவியை கல்லுக்குத் தந்தான்
- 1சாமு 31:4 சவுல் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்
- லூக் 23:46 இயேசுவோ பிதாவின் கையில் ஆவியை தந்தார்
இயேசுவின் ஏழுவித இரத்தம்
இயேசு மரணத்திற்கு முன்பும் இரத்தம் சிந்தினார்,மரிக்கும் போதும் இரத்தம் சிந்தினார். இயேசு இரத்தம் சிந்தினார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எந்த எந்த இடங்களில், எப்படியெல்லாம் இரத்தம் சிந்தினார், எப்போது சிந்தினார், எத்தனை முறை இரத்தம் சிந்தினார் என்று அநேகர் அரிவதில்லை. அந்த விபரங்களை பொறுமையோடும், ஆழ்ந்தும் கவனிப்போம்.
1. ஜெபிக்கும்போது சிந்தின இரத்தம்:
லூக் 22:44 இரத்தம் வரும்வரை ஜெபித்தார்
இடம்:
மாற் 14:32 கெத்செமனே தோட்டம்
வா.ம்:
லூக் 22:44 ஊக்கமும், தேவபாரமும் வரும்
பலன்:
மத் 26:41 ஜெப ஆவியைத் தரும்
2. சிரசில் சிந்தின இரத்தம்:
யோவா 19:2 முள்முடியை சிரசில் வைத்து அடித்தனர்
இடம்:
மத் 27:27 தேசாதிபதியின் அரண்மனை
வா.ம்:
ஏசா 59:17 சிரசு (எ) இரட்சிப்பு ஆதி 49:26 சிரசு (எ) ஆசீர்வாதம்
பலன்:
ஏசா 51:11 மகிழ்ச்சி தலையின் மேல் இருக்கும்
3. கன்னத்தில் வடிந்த இரத்தம்:
கேள்வி:
எத்தனை பேர் அறைந்தனர்?
மத் 26:67 சிலர் (ஒன்றுக்கும் அதிகமானோர்] அறைந்தனர்
கேள்வி:
அறைந்தது யார்?
மாற் 14:65 வேலைக்காரர்கள்
வா.ம்:
உன் 1:10; 5:13 கன்னம் (எ) பூ போன்றது (அ) அழகானது
பலன்:
உன் 2:14 உங்கள் முகம் அழகாகும்
4. தாடையில் வடிந்த இரத்தம்:
ஏசா 50:6 தாடை மயிரைப் பிடுங்கினார்கள்
உ.ம்:
சங் 3:7 சத்துருக்களைத்தான் தாடையில் அடிப்பார்கள்
வா.ம்:
நியா 15:15,16 சிம்சோன் தாடை எலும்பினால் ஜெயித்தான்
சங் 133:2 தாடையின் இரத்தம் அபிஷேகத்தைத் தரும்
5. முதுகில் வடிந்த இரத்தம்:
ஏசா 50:6 முதுகில் அடித்தார்கள்
யோவா 19:1 வாரினால் (சாட்டையால்) அடித்தார்கள்
இடம்:
யோவா 19:1 பிலாத்துவின் அரண்மனை
வா.ம்:
ஏசா 38:17 பாவத்தை முதுகுக்குப் பின் எறிந்தார்
பலன்:
மாற் 2:12 முதுகின் இரத்தம் படுக்கையை மாற்றும்
6. கை, கால்களில் வடிந்த இரத்தம்:
யோவா 20:20,25 கை, கால்களில் ஆணியின் காயம் இருந்தது
இடம்:
யோவா 19:17 கொல்கொதா மலை (அ) கபால ஸ்தலம்
வ.ம்:
கொல்கொதா (எ) அந்த மலை மண்டை ஓடு வடிவத்தில் இருந்தது.
கபாலஸ்தலம் (எ) மண்டை ஒடுகள் நிறைந்து இருந்த இடம்
வா.ம்:
கொலோ 2:14,15 அதிகாரங்களை வெற்றி சிறந்தார்
பலன்:
ஏசா 35:3 உங்கள் கைகளை, முழங்கால்களைப் பலப்படுத்தும்
7. விலாவில் வடிந்த இரத்தம்:
யோவா 19:34 விலாவில் இரத்தம் வடிந்தது
இடம்:
யோவா 19:17 கபால ஸ்தலம் (மண்டை ஓடுகள் நிறைந்த இடம்]
வா.ம்:
ஆதி 2:21,22 விலாவைக் கொண்டு மனுஷியை உண்டாக்கினார்
அப் 12:7 பேதுருவை தட்டி எழுப்பினார்
பலன்:
சங் 107:14 கட்டுகளை அறுப்பது
பஸ்கா என்றால் என்ன? :
இஸ்ரவேலர் ஆசாரித்து வந்த மூன்று விசேஷித்த பண்டிகைகளில் பஸ்காவும் ஒன்று. இது நிசான் (பங்குனி-சித்திரை)மாதம் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை கொண்டாடப்பட்டு வந்தது.
பஸ்கா என்பது அடிக்கப்படும் ஆட்டுகுட்டியையே குறிக்கிறது. நிசான் மாதம் 10-ம் தேதி ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து எடுப்பான். 13-ம் தேதி சாயந்திரம் வீடுகளிலிருந்து புளித்தமா அகற்றப்படவேண்டும். 14-ம் மேதி சாயங்காலத்திற்குமுன், எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். பகற் சாப்பாட்டின் பின் சாப்பிடவும் மாட்டார்கள். இந்த பண்டிகை நினைவு கூருதலாக மாத்திரமல்ல, முன்னடையாளமாகவுமிருந்தது, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே
(1கொரி 5:7).
இன்னும் வேறு அடையாளங்களையும் கவனிக்கலாம்.
1) பஸ்கா பாவத்தின் அழமைத்தனத்திலிருந்து விடுதலையாகுதல்.
2) இயேசுவின் இரத்தத்தில் வைக்கிற விசுவாசத்தினித்தம் பாவத் -தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து தப்பிக்கொள்ளுகிறோம்.
3) இரத்தம் கதவு நிலையில் தெளித்தல், நம்முடைய விசுவாசத் -தின் அறிக்கையைக்காட்டுகிறது.
4) பஸ்காவைச் சாப்பிடுவது போல, நாமும் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால்தான் ஜீவனைப் பெற லாம்.
5) கசப்பான கீரைகளோடு சாப்பிடவேண்டும். இது நாம் அடையவேண்டிய மனஸ்தாபத்தையும், செய்யவேண்டிய அறிக்கையும் குறிக்கிறது.
6) இஸ்ரவேலர் பிரயாணத்துக்கு ஆயத்தமாகிச் சாப்பிட்டது போல, நாமும் தேவ ஊழியத்துக்கும், மோட்ச பிரயாணத்துக்கும் ஆயத் -தமாக வேண்டும்.
சீசர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தனர்;
1. துணுக்குகள்:
a. யோவா 18:39 பஸ்கா என்றால் என்ன?
பஸ்கா (எல்) பலி (அ) விடுதலை (அ) உடன்படிக்கை
b. நெகே 2:1 பஸ்காவின் மாதம் எது?
நிசான் மாதம் [எல்) பங்குனி - சித்திரை (எல்) ஏப்ரல்-மே
c, யாத் 12:26,27 பஸ்கா எதாற்கு அடையாளம்?
எகிப்திலிருந்து பறப்பட்டதற்கு அடையாளம்.
d. ஆட்குட்டி என்ற வார்த்தை வெளிப்படுதலில் மட்டும் 28 முறை வருகிறது
II. பஸ்காவின் உணவுகள் எவை?
a. பழைய ஏற்பாட்டில்:
யாத் 12:8
1, மாம்சம்,
2.புளிப்பில்லா அப்பம்,
3.கசப்பான கீரை
b. புதிய ஏற்பாட்டில்:
மத் 26:26-28
1. அப்பம்,
2. ஸ்தோத்திரபாட்டு,
3. இரத்தம்
III. பஸ்காவை சாப்பிட நிபந்தணைகள்: யாத் 12:11
a. காலை வரை மீதம் வைக்கக் கூடாது
b. இடுப்பில் கட்சை கட்டிகொள்ள வேண்டும்
c. காலில் செருப்பு போட வேண்டும்
d. கையில் தடியை பிடித்துக்கொள்ள வேண்டும்
e. தீவிரமாய் (சீக்கிரமாய்) சாப்பிட வேண்டும்
IV. பஸ்கா பொருட்களின் விளக்கம்:
a. யாத் 12:7 இரத்தம் (எல்) எபி 12:22 பாவமன்னிப்புகாக தெளிக்கனும்
b. யாத் 12:8 புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8 தூய்மை - உண்மை
C. யாத் 12:8 கசப்பான கீரை (எல்)
எபே 4:31 பாவத்துக்காக மனஸ்தாபம்
d. யாத் 12:11 அரைக்கட்சை (எல்) அப் 12:15 உறுதி (சாதனை)
e. யாத் 12:11 காலில் செறுப்பு (எல்) மாற் 6:9 ஆயத்தம்
f. யாத் 12:11 கையில் தடி (எல்) சங் 23:4 பாதுகாப்பு (அ) தேவ வார்த்தை
V. பஸ்காவை ஆசரித்தவர்கள் யார் யார்?
a. யோசு 5:10,11 இஸ்ரவேலர் ஆசரித்தனர்
b.2இரா 23:23,22 யோசியா இராஜா ஆசரித்தான்
C. 2நாள் 30:1,17 எசேக்கியா இராஜா ஆசரித்தான்
d. எஸ்றா 6:19 சிறையிலிருந்து வந்தவர்கள் ஆசரித்தனர்
e.லூக் 2:41-43 இயேசுவும் - பெற்றோரும் ஆசரித்தனர்
f. மத் 26:17-19 இயேசுவும் சீசர்களும் ஆசரித்தனர் -
VI. செய்தி:
a. யாத் 12:5 ஆட்டுக்குட்டி (எல்) 1கொரி 5:7 கிறிஸ்துவே பாவம் சுமக்கும் ஆட்டுகுட்டி [பஸ்கா)
b. யாத் 12:8 புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8,9 துர்குணம், பொல்லாப்பு, விபச்சாரம்
C. யாத் 12:8 கசப்பான கீரை (எல்) எபே 4:31,32
1. கசப்பு,
2. கோபம்,
3, மூர்க்கம்,
4. கூக்குரல்,
5. தூஷணம்.
சிலுவையின் வரலாறு பாகம்-6
சிலுவையும் கள்ளர்கள் :
இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், ஆழ்ந்து சிந்தித்து தியானப்போம்.
வலதுபுறத்துக் கள்ளன்:
வலதுபுறத்துக் கள்ளனின் பெயர் - திஸ்மாஸ்
1. லூக் 23:40 ஆக்கினையை அறிந்தவன்
செப் 3:15 ஆக்கினையை அகற்றுவார்
2. லூக் 23:40 தேவனுக்குப் பயப்படுகிறவன்
அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்
3. லூக் 23:41 தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன்
வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது
4.லூக் 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்)
மத் 3:11 என்னிலும் வல்லமையுள்ளவர்
5. லூக் 23:41 கடிந்துக்கொண்டான் (எச்சரித்தான்)
யோவா 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே
6. லூக் 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)
மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது.
இடதுபுறத்துக் கள்ளன்:
இடதுபுறத்துக் கள்ளனின் பெயர் - ஹெஸ்பாஸ்
1. லூக் 23:39 இயேசுவை நீ என்றான் [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)
மத் 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்
2. லூக் 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)
மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்
3. லூக் 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்)
மத் 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)
4. லூக் 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்)
அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்
5. லூக் 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்)
மத் 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்
சிலுவையைச் சூழ்ந்த அதிசயங்கள்:
1. ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. [மத் 27:45 மாற் 15:33; லூக் 23:44,45)
2. தேவலாயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. (மத் 27:51; மாற் 15:38; லூக் 24:45).
3. பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
(மத் 27:51)
4. கல்லறைகளும் திறந்தன. (மத். 27:52)
5. நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன. (மத் 27: 52)
6. சிலுவைக்கள்ளரில் ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். (லூக் 23:42,43)
7. நூற்றுக்கதிபதி சம்பவித்ததைக் கண்டு; மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான். (லூக் 23:47, மாற் 15:39 மத் 27:54)
இயேசு கிறிஸ்துவை யூதர்கள் கொல்ல பத்துக் காரணங்கள்:
1. தம்மை இராஜா என்று சொன்னதினால். (மத் 2:2,3,16;
யோவா 18:33-40; 19:12-22)
2. சத்தியத்தைச் சொன்னதினால். (லூக் 4:21-30; யோவா 8:40,45,46]
3. ஓய்வு நாளில் வியாதியஸ்தரைச் சுகமாக்கினதினால்.
(மத் 12:9-14; மாற் 3:1-6; யோவா 5:16; 9:16)
4. பொறாமையினால். (மத் 26:3,4; 27:18; மாற் 14:1 15:9,10; லூக் 22:2; யோவா 11:48)
5. தேவனுடைய குமாரன் என்று சொன்னதினால். [மத் 26:63-66; மாற் 14:61-64)
6. தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக. (யோவா 12:38-40 18:31,32; 19:11,28,36,37; அப் 2:22:36; 3:18]
7. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்னதினால். [யோவா 5:18; 10:24-30; 19:7)
8. அவரை விசுவாசியாதபடியினால். (யோவா 5:38-47; 6:36; 9:39-41; 12:36-38)
9. ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று செகன்னதினால். (யோவா 8:51-59; 10:33 மத் 22:41-56)
10.தங்கள் சுயகவுரவமாகிய அந்தஸ்து அழித்துப்போடப்படும் என்று பயந்து. [யோவா 11:46-53; 12:10,11,19)
இயேசுவை நிந்தித்து, பரியாசம்பண்ணி தாஷித்த ஏழுபேர்:
1. போர்ச்சேவகர்கள். மத் 27:27-31
2. வழிப்போக்கர். மத் 27:39,40
3. பிரதான ஆசாரியர். மத் 27:41
4. வேதபாரகர். மத் 27:41,42
5. மூப்பர்கள். மத் 27:41-43
6. வலது பக்கத்துக் கள்ளன். மத் 27:44
7. இடது பக்கத்துக் கள்ளன். மத் 27:44
இயேசு கிறிஸ்து மற்றவர்களால் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்கள்:
1. யூதர்கள் செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். (லூக் 4:29)
2. முதலாவது அன்னா என்பவனிடத்தில் கொண்டு போனார்கள். யோவா 18:13
3. பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.(மத் 26:57; மாற் 14:53; லூக் 22:54; யோவா 18:24)
4. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்க விரோதமாக ஆலோசணைபண்ணி, அவரைக் கட்டி தேசாதிபதியாகிய பொந்தியு
பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (மத் 27:1,2 லூக் 23:1)
5. பிலாத்துவினால் இயேசு ஏரோதினிடத்தில் அனுப்பப்பட்டார். (லூக் 23:7-11)
6. போர்ச்சேவகர் மறுபடியும் பிலாத்துவினிடத்தில் கொண்டுபோனார்கள். (லூக் 23:11-25)
7. போர்ச்சேவகர் கூட்டத்தில் கொண்டுபோகப்பட்டார். (மாற் 15:16,19)
8. போர்ச்சேவகர் அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். (மத் 27:31, மாற் 15:20; லூக் 23:26,32; யோவா 19:16)
இயேசு கிறிஸ்துவைக் குறித்து பத்து குற்றச்சாட்டுகள்:
1. பிரதான ஆசாரியன்: இவன் தேவ தூஷணம் சொன் னான். (மத் 26:64,65; மாற் 14:62-64; லூக் 22:69-71)
2. வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக் கொண்டிருக் -கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மாற் 3:22)
3. பரிசேயர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல் -செபூவினாலே பிசாசுகளைத் துரத்துகிறான். (மத் 12:24; லூக் 11:15)
4. பரிசேயர்: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறார். மத் 9:11
5. நியாய சாஸ்திரிகள்: போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன். (லூக் 7:30-34; மத் 11:19)
6. ஜனங்கள்: நீ பிசாசு பிடித்தவன். யோவா 7:20
7. அவருடைய இனத்தார்: அவர் மதிமயங்கியிருக்கிறார். மாற் 3:20,21
8. ஆலோசனை சங்கத்தாராகிய கூட்டத்தார்: இவன் தன்னைக்
கிறிஸ்து என்னப்பட்ட இராஜாவென்றும், இராயனுக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம். (லூக் 23:1,2)
9. பரிசேயரில் சிலர் அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளா -ததினால், அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல. (யோவா 9:16)
10. யூதர்கள்: இவன் தன்னை இராஜாவென்று சொன்னான், ஆகவே இவன் இராயனுக்கு விரோதி. (யோவா 19:21)
A) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (பாகம்-2):
1. நன்மையானவைகளைப் பேசுகிறது. (எபி 12:24,25) 2. தூரமானவர்களைச் சமீபமாக்குகிறது. (எபே 2:13-20)
3. பாவமன்னிப்பாகிய மீட்பை அளிக்கிறது. (கொலோ 1:12-15; எபே 1:7; 1பேது 1:19)
4. சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது.
(1யோவா 1:7)
5. பாவங்களற நம்மைக் கழுவுகிறது. (வெளி 1:6)
6. ஜனத்தைப் பரிசுத்தம் செய்கிறது. (எபி 13:12; 10:10,14)
7. மனச்சாட்சியைச் செத்த கிரியைகளற சுத்திகரிக்கிறது. (எபி 9:14)
8. தேவனோடு ஒப்புரவாக்குகிறது. (கொலோ 1:20)
9. இயேசுவோடு நிலைத்திருக்கச் செய்கிறது. (யோவா 6:56)
10. பிசாசின்மேல் ஜெயத்தைத் தருகிறது. (வெளி 12:11)
11. சமாதானத்தை அளிக்கிறது. (கொலோ 1:20)
12. தைரியத்தை உண்டுபண்ணுகிறது. (எபி 10:19,20)
13. பாவிகள்மேல் தெளிக்கப்படுகிறது. (எபி 12:24; 1பேது 1:2 யாத் 24:7,8; லேவி 14:4-7,49,50)
14. நித்திய மீட்பை உண்டாக்குகிறது. (எபி 9:12)
15. நித்திய ஜீவனைக் கொடுக்கிறது. (யோவா 6:54)
16. நித்திய உடன்படிக்கை செய்கிறது. (எபி 13:20: 10:29)
17. பாவிகளை நீதிமான்களாக்குகிறது. (ரோம 5:8,9)
18. நம்மைக் குணமாக்குகிறது [1பேது 2:24)
19. அங்கிகளைத் தோய்த்து வெளுக்கிறது. (வெளி 7:14)
20. சபையைச் சம்பாதிக்கிறது. (அப் 20:28)
21. நம்மை இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்குகிறது. (வெளி 1:6; 5:9,10)
B) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் :-
1. தேவ இரத்தம். அப். 20:28
2. மாசற்ற இரத்தம், 1பேது 1:19
3. விலையேறப்பெற்ற இரத்தம். 1பேது 1:19
4. குற்றமில்லாத இரத்தம். மத் 27:4
5. புது உடன்படிக்கையின் இரத்தம். [மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20]
6. தெளிக்கப்படும் இரத்தம். எபி 12:24; 1பேது 1:2
7. பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம். (1யோவா 1:7;வெளி 1:6)
கர்த்தருடைய இராப்போஜனம்:
கர்த்தருடைய இராப்போஜனத்தில் விசுவாசிகள் தேவனுடைய பிள்ளைகள் பங்குபெறுவதால் அடையும் ஏழுவிதமான நன்மைகள்.
1.யோவா 6:54,53 இராப்போஜனத்தைப் புசித்து, பானபண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டாகிறது.
2. யோவா 6:54 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் கடைசி நாளில் எழுப்பப்படுவான்.
3. யோவா 6:56 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன்,
கிறிஸ்துவிலும் கிறிஸ்து அவனிலும் நிலைத்திருப்பார்கள்.
4.யோவா 6:55 இராப்போஜனம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மெய் -யான போஜனமும் மெய்யான பானமுமாயிருக்கிறது.
5. யோவா 6:57,58 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிற -வன் என்றென்றைக்கும் பிழைப்பான்.
6.1கொரி 10:16,17 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவர் -கள் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறார்கள்.
7. 1கொரி 11:24-26; லூக் 22:19,20 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் இயேசு கிறிஸ்துவை நினைகூருகிறான்.
சிலுவையும் மனிதர்களும்:
இயேசுவின் பாடுகளும், சிலுவையும் நெருங்கி வர வர அவரைச் சூழ்ந்துக் கொண்டவர்கள் ஏறாளம். அவர்களில் சாதாரணமானவர்களிலி -ருந்து, அசாதாரனமானவர்கள் வரை அவருடைய பாடுகளைச் சுற்றி ஏறத்தாழ 125க்கும் அதிகமானோர் காணப்பட்டணர். அப்படிப்பட்டவர்கள் யார் என்பதை, ஆண்கள், பெண்கள், அதிகார வர்க்கத்தினர், பொதுவானவர்கள் என்று தனித்தனியாக பிரித்தும், கவனித்தும், தியானித்தும் பார்த்தால், பிரயோஜனமாயிருக்கும். வாருங்கள் வாசிப்போம்...
A.சிலுவையோடு தொடர்புடைய ஆண்கள்:
1. மத் 27:2 பொந்தியு பிலாத்து
லூக் 3:1 பொந்தியு பிலாத்து (எல்) யூதேயாவுக்கு தேசாதிபதி
2. மத் 27:10 எரோமியா
2நாளா 35:25 எரேமியா (எல்) புலம்பல் பாடுகிறவன்
3. மத் 27:1G பரபாஸ்
மத் 27:16 பரபாஸ் (எல்) பேர்போன ஒருவன்
4. மத் 27:32 சிரேனே ஊரானாகிய சீமோன்
அப் 2:10 சிரேனே (எல்) பம்பிலியா, எகிப்து தேசத்தான்
5. மத் 27:38 வலது புறத்துக் கள்ளன்
மாற் 14:62 வலதுபுறம் [எல்) சர்வல்லவரின் வலதுபாரிசம்
6. மத் 27:38 இடது புறத்துக் கள்ளன்
ஆதி 14:15 இடதுபுறம் (எல்) முறியடித்துத் துரத்தப்படுதல்
7. மத் 27:49 எலியா
1இரா 17:1 எலியா (எல்) கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன்
8. மத் 27:57 இயேசுவுக்கு சீஷனாகிய யோசேப்பு
மத் 27:57 இயேசுவுக்கு சீஷன் (எல்)
பேர்கொண்ட மனுஷன்
9. மத் 26:3 பிரதான ஆசாரியனாகிய காய்பா
யோவா 11:49 காய்பா (எல்) அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியன்
10. மத் 26:33 பேதுரு
2பேது 1:1 பேதுரு (எல்) இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்
11. மத் 26:37 செபெதேயுவின் குமாரர்
மாற் 3:17 செபெதேயுவின் குமாரர் (எல்) இடி முழக்கத்தின் மக்கள்
12. மத் 26:39 என் பிதா
யோவா 15:1 என் பிதா (எல்) திராட்சத்தோட்டக்காரர்
13. மாற் 14:3 குஸ்டரோகியாயிருந்த சீமோன்
2இரா 5:1 குஷ்டரோகியாயிருந்தவன் (என்) எண்ணிக்கையுள்ளவன்
14. மாற் 15:21 அலெக்சந்தர்
அப் 19:33 அலெக்சந்தர் (எல்) உத்ரவு சொல்ல மனதுள்ளவன்
15. மாற் 15:21 ரூப்
மாற் 15:21 ரூப் (எல்) சீமோனுக்குக் குமாரன்
16. 1கொரி 1:13 பவுலா சிலுவையிலறையப் பாட்டான்?
எபே 3:1 பவுல் (எல்) கட்டுண்டவன்
B. சிலுவையோடு தொடர்புடைய பெண்கள்:
1. மத் 27:19 பிலாத்துவின் மனைவி
2சாமு 12:3 மனைவி (எல்) மடியிலே படுத்து, மகளை போல இருப்பவள்
2. மத் 27:55 கலிலேயாவிலிருந்து வந்திருந்த அநேக ஸ்திரீகள்
லூக் 23:49 கலிலேயாவிலிருந்து (எல்) அவருக்குப் பின்சென்று வருபவர்கள்
3. மத் 27:56 மகதலேனா மரியாள்
யோவா 20:18 மகதலேனா மரியாள் (எல்) கர்த்தரைக் கண்டவள்
4. மத் 27:56 யாக்கோபுக்கும், யோசேபுக்கும் தாயாகிய மரியாள்
அப் 1:14 தாயாகிய மரியாள் (எல்) ஒரு மனப்பட்டு தரித்திருப்பவள்
5. மத் 27:56 செபதேயுவின் குமாரருடையத்தாய்
மத் 20:20 குமாரருடையத்தாய் (எல்) பணிந்துக்கொண்டு விண்ணப்பம் பண்ணுகிறவள்
6. மத் 26:6,7 பெத்தானியாவின் ஒரு ஸ்திரீ
லூக் 19:29 பெத்தானியா (எல்) மலையின் அருகான ஊர்
7. மத் 26:69 வேலைக்காரி ஒருத்தி
யோபு 19:15 வேலைக்காரி (எல்)
அந்நியனாக எண்ணுகிறவன்
8. மத் 26:71 மண்டப வாசளிலிருந்த வேறொருத்தி
அப் 3:11 மண்டபம் (எல்) ஜனங்கள் ஒருவரும் இடம்
9. மாற் 14:66 பிரதான ஆசாரியனுடைய வேளைக்காரிகளில் ஒருத்தி
ரூத் 2:13 வேலைக்காரிகளில் ஒருத்தி (எல்) ஒருத்திக்கும்
சமானமாயிராதவள்
10. மாற் 14:69 வேளைக்காரி
எரே 34:11 வேலைக்காரி (எல்) அடிமைப்படுத்தி கொள்ளப்பட்டவள்
11. மாற் 15:40 சில ஸ்திரீகள்
லூக் 24:22 சில ஸ்திரீகள் (எல்) கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்
12. மாற் 15:40 சலோமே
மாற் 15:40 சலோமே (எல்) அவருக்கு ஊழியம் செய்பவள்
13. மாற் 15:41 வேறே அநேக ஸ்திரீகள்
அப் 17:12 அநேக ஸ்திரீகள் (எல்) கனம் பொருந்திய ஸ்திரீகள்
14. லூக் 23:27 புலம்பி அழுகிற ஸ்திரீகள்
லூக் 23:27 அழுகிற ஸ்திரீகள் (எல்) அவருக்குப் பின் சென்றவர்கள்
15. லூக் 23:28 எருசலேமின் குமாரத்திகள்
உன் 3:10 எருசேமின் குமாரத்திகள் (எல்) நேசம் என்றும் சமுக்காளம் உடையவர்கள்
16. லூக் 23:49 கலிலேயாவிலிருந்து வந்த ஸ்திரீகள்
அப் 16:13 வந்த ஸ்திரீகள் (எல்) கூடி வருகிறவர்கள்
17. யோவா 18:17 வாசல் காக்கிற வேலைக்காரி
யோவா 10:3 வாசலைக் காக்கிற (எல்) வாசலைத் திறக்கிறவள்
18. யோவா 19:25 கிலெயோப்பா மரியாள்
யோவா 19:25 கிலெயோப்பா மரியாள் (எல்) சிலுவையினருகே நிற்ப்பவள்
C. சிலுவையோடு தொடர்புடைய அதிகாரவர்க்கத்தினர்:
1. மத் 27:1 பிரதான ஆசாரியர்
வி.ம்: அப் 26:12 பிரதான ஆசாரியர் (எல்) அதிகாரமும், உத்தரவும் பிறப்பிப்பவர்கள்.
2. மத் 27:1 ஜனத்தின் மூப்பர்கள்
வி.ம்: மத் 21:23 ஜனத்தின் மூப்பர் (எல்) அதிகாரத்தை குறித்து கேள்வி கேட்பவர்கள்
3. மத் 27:27 தேசாதிபதியின் போர்ச்சேவகர்
வி.ம்: லூக் 23:36 போர்ச்சேவகர் (எல்) கசப்பை கொடுப்பவர்கள்
4. மத் 27:41 வேதபாரகர்கள்
வி.ம்: மாற் 9:14 வேதபாரகர் (எல்) தர்க்கம் செய்பவர்கள்
5. மத் 27:54 நூற்றுக்கு அதிபதி
வி.ம்: மாற் 15:44,45 நூற்றுக்கு அதிபதி (எல்) செய்தியை உறுதிபடுத்துகிறவன்
6. மத் 27:65 காவல் சேவகர்
வி.ம்: மத் 28:11 காவல் சேவகர் (எல்) நடந்தயாவற்றையும் அறிவிப்பவர்கள்
7. மத் 25:58 சேவகர்
வி.ம்: 2நாளா 17:13 சேவகர் (எல்) பராக்கிரமசாலிகள்
8, மத் 26:59 சங்கத்தார் யாவரும்
வி.ம்: மத் 26:59 விரோதமாய் பொய்சாட்சி சொல்பவர்கள்
9. மாற் 14:53 ஆசாரியர்
வி.ம்: யாத் 19:22 ஆசாரியர் (எல்) கர்த்தரின்
சமுகத்தில் வருகிறவர்கள்
10. மாற் 14:55 ஆலோசனைச் சங்கத்தார்
வி.ம்: அப் 23:20 ஆலோசனை சங்கத்தார் (எல்) அதிகத் திட்டமாக விசாரிப்பவர்கள்
11. மாற் 15:16 போர்ச்சேவகருடைய கூட்டம் முழுவதும்
வி.ம்: லூக் 3:14 போர்ச்சேவகரின் கூட்டம் (எல்) இடுக்கண் செய்பவர்கள்
12. லூக் 22:4 சேனைத்தலைவர்கள்
வி.ம்: லூக் 22:52 பட்டயத்தையும், தடியையும் எடுப்பவர்கள்
13. லூக் 22:31 சாத்தான்
வி.ம்: மாற் 3:26 சாத்தான் (எல்) தனக்குத்தானே பரிந்திருப்பவன்
14. லூக் 22:43 வானத்திலிருந்து தோன்றியத் தூதன்
வி.ம்: லூக் 22:43 வானத்திலிருந்து தோன்றிய தூதன் (எல்) பலப்படுத்துகிறவன்
15. லூக் 22:52 தேவாலயத்துச் சேனைத்தலைவர்கள்
வி.ம்: லூக் 22:52 தேவாலயத்துச் சேனை (எல்) கள்ளனைப் பிடிப்பவர்கள்
16. லூக் 23:7 ஏரோது
வி.ம்: அப் 12:1 ஏரோது (எல்) துன்ப படுத்துகிறவன்
17. லூக் 23:13 அதிகாரிகள்
வி.ம்: அப் 16:36 அதிகாரிகள் (எல்) கட்டளையை அனுப்பிகிறவர்கள்
18. யோவா 18:12 ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவன்
வி.ம்: எண் 31:14 ஆயரம் பேருக்குத் தலைவன் (எல்) சேனாதபதி
19. யோவா 16:12 யூதருடைய ஊழியக்காரர்
வி.ம்: லூக் 17:10 ஊழியக்காரர் (எல்) கடமையை மாத்திரம் செய்பவர்கள்
20. யோவா 18:13 அந்த வருஷத்து பிரதான ஆசாரியனாகிய அன்னா
வி.ம்: அப் 4:6 அன்னா (எல்) பிரதான ஆசாரியன்
21. யோவா 19:12 இராயன்
வி.ம்: அப் 25:10 இராயன் [எல்) நியாயாசனத்தில் இருப்பவர்
22. யோவா 19:21 யூதருடைய பிரதான ஆசாரியர்
வி.ம்: மாற் 14:61 பிரதான ஆசாரியன் (எல்) கேள்விகேப்பவன்
23. யோவா 19:39 இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு
வி.ம்: யோவா 3:1 நிக்கொதேமு [எல்) யூதர்களுக்குள்ளே அதிகாரி
24. மத் 23:34 ஞானிகள்
வி.ம்: தானி 4:18 ஞானிகள் (எல்) அர்த்தத்தைத் தெறிவிப்பவர்கள்
25. மத் 28:5 தூதன்
வி.ம்: அப் 8:26 தூதன் (எல்) ஆலோசனை சொல்பவன்
26. மத் 10:21, 22 மிகுந்த ஆஸ்தியுள்ள ஒருவன்
வி.ம்: மாற் 10:22,23 மிகுந்த ஆஸ்தி (எல்) ஐசுவரியம்
27. அப் 2:24 தேவன்
வி.ம்: யாத் 34:6 தேவன் (எல்) சத்தியமுள்ளவர்
28. 1கொரி 1:23 கிரேக்கர்கள்
வி.ம்: 1கொரி 1:22 கிரேக்கர்கள் (எல்) ஞானத்தைக் தேடுகிறவர்கள்
29. 1கொரி 2:8 இப்பிரபஞ்சத்துப் பிரபு
வி.ம்: 1கொரி 1:20 இப்பிரபஞ்சத்துப் பிரபு (எல்) தர்க்க சாஸ்திரி
D. சிலுவையோடு தொடர்புடைய பொதுவானவர்கள்:
1. மத் 27:20 ஜனங்கள்
வி.ம்: மத் 8:18 ஜனங்கள் (எல்) சூழ்ந்துக்கொள்கிறவர்கள்
2. மத் 27:22 எல்லாரும்
வி.ம்: லூக் 20:38 எல்லாரும் (எல்) பிழைத்திருக்கிறவர்கள்
3. மத் 27:35 தீர்க்கதரிசி
வி.ம்: தானி 9:2 தீர்க்கதரிசி (எல்) பாழ்க்கடிப்புகளையும், நிறைவேறுவதையும் சொல்பவர்கள்
4. மத் 27:39 வழியாய் நடந்துப் போனவர்கள்
வி.ம்: 2சாமு 15:18 நடந்து போனவர்கள் (எல்) கால்
நடையாய் நடப்பவர்கள்
5. மத் 27:47 அங்கே நின்றவர்களில் சிலர்
வி.ம்: லூக் 22:49 நினறவர்களில் (எல்) நடக்கப்போகிறதைக் காண்பவர்கள்
6. மத் 27:48 அவர்களில் ஒருவன்
வி.ம்: மத் 26:73 அவர்களில் ஒருவன் (எல்) அங்கே
நின்றவர்களில் ஒருவன்
7. மத் 27:49 மற்றவர்கள்
வி.ம்: 1கொரி 14:29 மற்றவர்கள் (எல்) நிதானிக்கிறவர்கள்
8. மத் 27:52 அநேக பரிசுத்தவான்கள்
வி.ம்: 1தெச 3:13 பரிசுத்தவான்கள் (எல்) தேவனுக்கு
முன்பாக பிழையற்றவர்கள்
9. மத் 27:54 இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தவர்கள்
வி.ம்: மாற் 13:34 காவல் (எல்) விழித்திருந்து காப்பது
10. மத் 27:62 பரிசேயர்
வி.ம்: மாற் 10:2 பரிசேயர் (எல்) சோதித்துப்பார்க்கிறவர்கள்
11. மத் 27:64 அவனுடைய சீஷர்கள்
வி.ம்: மத் 28:13 அவனுடைய சீஷர்கள் (எல்) கலவாய்க் கொண்டு போகிறவர்கள்
12. மத் 28:4 காவளாலர்
வி.ம்: 2இரா 11:11 காவலாளர் (எல்) ஆயுதம் பிடித்து நிற்ப்பவர்கள்
13. மத் 26:8 அவருடைய சீஷர்கள்
வி.ம்: யோவா 4:3 அவருடைய சீஷர்கள் (எல்) ஞானஸ்நானம் கொடுப்பவர்கள்
14. மத் 26:9 தரித்திரர்
வி.ம்: நீதி 13:7 தரித்திரர் (எல்) ஒன்றுமில்லாதவர்கள்
15. மத் 26:45 பாவிகள்
வி.ம்: யூதா 1:15 பாவிகள் (எல்) கடின வார்த்தைகளைப் பேசுபவர்கள்
16. மத் 26:46 திரளான ஜனங்கள்
வி.ம்: வெளி 19:6 திரளான ஜனங்கள் (எல்) ஆரவாரம் / இரைச்சல் / முழக்கம்
17. மத் 25:51 இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன்
வி.ம்: மத் 26:71 இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் (எல்) கூடவே இருப்பவர்கள்
18.மத் 25:51 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன்
வி.ம்: லூக் 22:50 ஆசாரியனுடைய வேலைக்காரன் (எல்)
காது வெட்டுபட்டவன்
19. மத் 26:57 இயேசுவைப் பிடித்தவர்கள்
வி.ம்: லூக் 22:53 பிடித்தவர்கள் (எல்) பரியாசக்காரர்கள்
20. மத் 26:60 பொய்சாட்சி சொன்ன அநேகர்
வி.ம்: உபா 19:16 பொய்சாட்சி (எல்) ஒருவன் மேல் ஒரு
குற்றத்தை சுமத்துவது
21. மத் 26:61 பொய் சாட்சி சொன்ன இரண்டு பேர்
வி.ம்: உபா 32:30 இரண்டு பேர் (எல்) 10,000
பேரைத் துரத்துதல்
22. மத் 26:67 கன்னத்தில் அறைந்த சிலர்
வி.ம்: 2நாளா 18:23 கன்னத்தில் அறைதல் (எல்)
ஏளனம் செய்தல்
23. மத் 26:73 அங்கே நின்றவர்கள்
வி.ம்: மத் 26:73 அங்கே நின்றவர்கள் (எல்) காட்டி கொடுப்பவர்கள்
24. மாற் 14:13 தண்ணீர் குடம் சுமந்து வருகிற ஒரு மனுஷன்
வி.ம்: யோவா 2:6 தண்ணீர் குடம் (எல்) சுத்திகரிக்கும் முறை
25. மாற் 14:14 அந்த வீட்டெஜமான்
வி.ம்: மத் 13:27 விட்டெஜமான் (எல்) ஆண்டவன்
26. மாற் 14:50 துப்பட்டியைப் போர்த்தின வாலிபன்
வி.ம்: மத் 27:59 துப்பட்டி (எல்) துய்யதான மெல்லிய துணி
27. மாற் 14:57 பொய் சாட்சிக்கு எழுந்த சிலர்
வி.ம்: நீதி 6:19 பொய்ச்சாட்சி (எல்) அபத்தம் பேசுதல்
28. மாற் 14:65 அவர்மேல் துப்பின சிலர்
வி.ம்: மாற் 15:19 துப்பின (எல்) கோலால் அடித்தல்
29. மாற் 14:65 கன்னத்தில் அறைந்த சிலர்
வி.ம்: புல 3:30 கன்னத்தில் அறைதல் (எல்) நிந்தையால்
நிறைந்திருப்பது
30. மாற் 15:6 காவல் பண்ணப்பட்டவர்கள்
வி.ம்: அப் 23:35 காவல் (எல்) காரியத்தைத்
திட்டமாய் கேட்பது
31. மாற் 15:36 காடியை தோய்த்துக் கொடுத்த ஒருவன்
வி.ம்: மத் 27:34 காழ (எல்) கசப்பு
32. லூக் 22:47 கூட்டமாய் வந்த ஜனங்கள்
வி.ம்: 2நாளா 24:24 கூட்டமாய் வந்த ஜனங்கள் (எல்)
கர்த்தரை விட்டு விட்டவர்கள்
33. லூக் 22:49 சூழநின்றவர்கள்
வி.ம்: வெளி 7:11 சூழநின்றவர்கள் (எல்) தூதர்கள்
34. லூக் 22:50 அவர்களில் ஒருவன்
வி.ம்: மத் 26:73 அவர்களில் ஒருவன் (எல்) பேச்சால் வெளிப்படுத்துகிறவன்
35. லூக் 22:63 இயேசுவைப் பிடித்துக் கொண்ட மனுஷர்
வி.ம்: யோவா 19:16 பிடித்துக்கொண்டவன் (எல்)
ஒப்புக்கொடுப்பவன்
36. லூக் 23:1 அவர்களுடையக் கூட்டத்தார்
வி.ம்: அப் 4:32 கூட்டத்தார் (எல்) ஒரே இருதயம் / ஒரே மனம்
37. லூக் 23:27 திரள் கூட்டமான ஜனங்கள்
வி.ம்: ஏசா 5:14 திரள் கூட்டம் (எல்) களிகூறுதல்
38. லூக் 23:48 கூடி வந்திருந்த ஜனங்களெல்லாரும்
வி.ம்: 1இராஜா 1:40 ஜனங்ளெல்லாரும் (எல்)
பிறகாலே போகிறவர்கள்
39. லூக் 23:49 அவருக்கு அறிமுகமானவர்கள்
வி.ம்: சங் 88:18 அறிமுகமானவர்கள் (எல்) சிநேகிதன் / தோழன்
40. யோவா 18:3 அனுப்பப்பட்ட ஊழியக்காரர்
வி.ம்: யோவா 13:16 அனுப்பப்பட்டவன் (எல்) பெரியவனல்ல
41. யோவா 18:18 ஊழியக்காரர்
வி.ம்: சங் 102:14 ஊழியக்காரர் (எல்) பரிதபிக்கிறவர்கள்
42. யோவா 19:22 சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்
வி.ம்: யோவா 18:34 சேவகரில் ஒருவன் (எல்) குத்துகிறவன்
43. யோவா 18:36 என் ஊழிக்காரர்
வி.ம்: ஏசா 65:14 ஊழியக்காரர் (எல்) கெம்பீரிப்பவர்கள்
44. மத் 27 49 மற்றவர்கள்
வி.ம்: ரோம 11:7 மற்றவர்கள் (எல்) கடினபட்டவர்கள்
45. மத் 10:38 சிலுவையை எடுத்துக் கொண்டுப் பின்பற்றாதவன்
வி.ம்: லூக் 9:49 பின்பற்றாதவன் (எல்) தடுக்கப்பட
வேண்டியவன்
46. மத் 20:19 புறஜாதியார்
வி.ம்: நெகே 5:9 புறஜாதியார் (எல்) பகைஞர்
47. மத் 27:35 வஸ்திரங்கள் சீட்டுப் போட்டவர்கள்
வி.ம்: மாற் 15:24 சீட்டு போடுதல் [எல்) பங்கை
எடுத்துக்கொள்ளுதல்
48. மாற் 16:6,5 வென்னையங்கி தரித்த வாலிபன்
வி.ம்: நியா 17:11 வாலிபன் (எல்) குமாரரில் ஒருவன்
49. லூக் 14:27 சிலுவையை எடுத்துக் கொண்டு பின் செல்லாதவன்
வி.ம்: யோவா 10:5 பின்செல்லாதவன் (எல்) விட்டோடிப்போகிறவன்
50. லூக் 24:7 பாவிகளான மனுஷர்
வி.ம்: ரோம 5:19 பாவிகளான மனுஷர் (எல்)
கீழ்ப்படியாமையுள்ளவர்க
51. அப் 2:23 அக்கிரமக்காரர்கள்
வி.ம்: சங் 94:4 அக்கிரமக்காரர்கள் (எல்)
கடினமாய் பேசுகிறவர்கள்
52. அப் 2:36 இஸ்ரவேல் குடும்பத்தார்
53. அப் 4:10 இஸரவேல் ஜனங்களெல்லாரும்
54. ரோம 6:6 நம்முடைய பழைய மனுஷன்
55. 1கொரி 1:18 கெட்டுப்போகிறவர்கள்
56. கலா 3:1 புத்தியில்லாதக் கலாத்தியர்
57. கலா 5:24 கிறிஸ்துவினுடையவர்கள்
58. கலா 6:12 நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள்
59.பிலிலீ 3:18 வேறுவிதமாய் நடக்கிற பகைஞர்
60. எபி 6:6 மறுதலீத்துப் போனவர்கள்
61. வெளி 11:8,3 என்னுடைய இரண்டு சாட்சிகள்
குருத்தோலை ஞாயறு
இயேசுவின் பவனி:
பஸ்கா பண்டிகையின் ஏழு நாட்களுக்கு முன்பு இயேசு மீண்டும் எருசலேம் நகருக்குள் வந்தார். அது நிசான் மாதத்தின் 9ம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகும். தீர்க்கதரிசியாகிய சகரியா -வைக் கொண்டு சக. 9:9 ல் சொல்லப்பட்டுள்ள
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." என்கிற வசனங்கள் நிறைவேறும்படியாக இவைகள் நடந்தது.
நகரத்தை நெருங்குகையில் அவரைச் சுற்றிக் கூடி வந்தி -ருந்த மக்களில் பெரும்பாலானோர் தங்களின் மேல்அங்கிகளை -யும், துப்பட்டிகளையும், மற்றும் பல வஸ்திரங்களையும் வழியில் விரித்தார்கள். இன்னும் சிலரோ ஒளிவ மரக்கிளைகளை வெட்டி அவைகளை தரையில் பரப்பினார்கள். மற்றும் பலரோ ஒலிவமரத் -தின் நீண்ட இலைகளை கையில் பிடித்துக்கொண்டு
"கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்றுக் கூறி ஆர்பரித்தார்கள்.
சில வாரங்களுக்கு முன்புதான், இறந்த லாசருவை உயிரோடு எழுப்பியதை அவர்கள் கண்டிருந்தனர். அதை ஒருவருக்கொருவர் அந்நாட்களில் பேசிக்கொண்டும் இருந்தனர். அதனால் இயேசு நகருக்குள் நுழைந்ததும் நகரமே விழாக்கோலம் பூண்டது போல ஆனது. நகரம் முழுவதும் இயேசுவை வரவேற்கும் பேரணியால் நிறைந்தது.
முன்பு மதவாதிகளின் கூலிகளாக இயேசுவின் மீது கல்லெரி -ந்து கொல்லத் துரத்தியவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றவர் -களாக கைகளில் ஒலிவமரக் கிளைகளை ஏந்தி இயேசுவை வர -வேற்கிறார்கள். அன்று கல்லெறிந்த கைகள் இன்று ஒலிவ கிளைகளை ஏந்தி செல்கின்றன. “இதோ, உலகமே அவனுக்குப் பின் சென்று போயிற்றே" (மத் 21:10) என்று மதவாதிகளும், பிரி -விணை வாதிகளும் புலம்பிக்கொண்டிருந்தனர்.
கர்த்தர் ஏறிய கழுதை:--
இந்நிகழ்ச்சி சகரியா தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இருந்தது. (சக 9:9)
கிறிஸ்துவின் அரச பவனிக்காக மனுஷரில் ஒருவனும் ஒருக் -காலும் ஏறியிராத கழுதைக்குட்டி கட்டப்பட்டிருந்தது. அதனை கிறிஸ்து தூரத்தில் கண்டார். அதனை ஆண்டாண்டு காலங்களுக் -கு முன்பு சகரியாவின் கண்களும் தரிசனத்தில் கண்டிருந்தன.
கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிறவரும், அனைத்தையும் திட்டமும் ஒழுங்குமாக செய்கிறவ -ருமாவார்.
அவரது திட்டத்தில் எவரும் விதிவிலக்கல்ல. அவரது கிருபை எவரையும் புறம்பே தள்ளவுமில்லை. அவருக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நிகழ்ந்து விடுவதுமில்லை. பாவத்தால் அலங் -கோலமான உலகத்தில் வாழ்கிற நாம் அவருக்குள் அடைக்கலம் புகும்போது அனுபவிக்கும் பராமரிப்பு எவ்வளவு அதிகம்? அவர் நம்மை மறந்து விடுகிற தெய்வமல்ல. அவரது கரங்களில் அர்ப் -பணிக்கும் போது அரசனின் திட்ட வழியில் நாமும் ஒரு கருவி -யாகிறோம்.
அந்தகார உலகில் அதன் மகிமை புரியாது. ஆனால் ஒளியின் உலகில் நம் விழிகள் வியப்பில் விரியாமல் போவதில்லை. அவ ருக்காக நாம் வைத்த ஒரு சுவடுகூட அங்கு மறக்கப்பட்டிருக்காது.
இயேசு கிறிஸ்து - யார்?
அவர் ஒரு சத்தியம் தேடியோ, தத்துவ சிந்தனையாளரோ அல்ல.
கிரேக்க நாட்டில் சீனோ டெமோகிரீட்டஸ், பித்தாகோரஸ், சாக்ரடீஸ், பிளோட்டோ, அரிஸ்டாடில் போன்றோரும் இந்தியாவில் யக்ஞவல்கியன், உத்தாலக ஆருணி, புத்தர், போன்றோரும் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகியோரும் சிறந்த தத்துவ ஞானிகளாகப் பாராட்டப்படுகின்றனர்.
சத்தியத்தைத் தேடி அலைந்த சித்தர்களும் முனிவர்களும் எத் தனையோபேர் நம் தேசத்தின் சந்தியெங்கும் காணப்பட்டனர். இவர் -கள் தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம் போன்றவை பற்றி பலப்பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒருவரைப் போல தமது சிந்தனைக் கருத்துகளை வெளியிட்டவரல்ல இயேசுகிறிஸ்து.
தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம், சொர்க்கம், நரகம், நியாயத்தீப்பு, பாவம், சாத்தான், தூதர்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், போன்றவை பற்றி தெளிவாகவும், அழுத் -தமாகவும், அதிகாரமுடனும் கூறியவர் இயேசுகிறிஸ்து. அவரது அபிப்பிராயமற்ற அதிகாரமான சொற்களைக் கேட்டு மக்கள் மலைத்தனர் (லூக். 4:36). அவருக்கு அனைத்தும் தெரிந்திருந் -ததால் சிந்தனையின் தத்துவங்கள் கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமலிருந்தது (யோவா 1:1,2; 3:11-13; 2:25; 5:24, 30,36; 16:30).
மேலும் சத்தியத்தை அவர் தேடவில்லை. சத்தியம் என்றால் என்ன என்று அவரே பதிலளித்தார். அவரது வார்த்தை சத்தியம் (யோவா 17:17). அவரே சத்தியம் (யோவா 14:6). ஆதலால் அப்ப-டிபட்ட இயேசுவை ஓசன்னா பாட்டுப்பாடி ஊர்வலமாக அழைத் -துச் செல்வது தவறே கிடையாது.
அவரை தமக்குமுன் நிறுத்திக்கொண்டு ஆன்மீக கண்குருட -னான பிலாத்து கேட்டான் சத்தியமாவது என்ன? நாமும் ஆன்மீகக் குருடர்களா...
குருத்தோலை ஏந்திய மக்கள்:
பண்டிகைக்காக கூடிவரும் மக்கள், கூடாரப்பண்டிகையின்போது ஏழுநாட்கள் ஈச்சமர குருத்தோலைகளை ஏந்தியபடி பலிபீடத்தைச் சுற்றி வந்து ஓசன்னா என்பர். எட்டாவது நாள் ஏழுமுறை சுற்றி -வந்து ஓசன்னா என்பர். அதனை பெரிய ஓசன்னா என அழைப் -பர். ஓசன்னா என்றால் இப்போதே இரட்சியும் என்பது பொருள்.
இயேசு கிறிஸ்துவைக் கண்டவுடன் ஈச்சமர குருத்தோலை -களை ஏந்தி கழுதையின்மேல் ஆடைகளை விரித்து ஓசன்னா பாடிய மக்கள் அவரை மேசியா என அறிக்கையிட்டனர். அது வெற்றி பெற்று வரும் ஓர் அரசனுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு சற்றும் குறைந்தது அல்ல. அப்போது அவர்கள் ரோம சாம்ராஜ் -யத்தின் ஆளுகையிலிருந்து வரும் சரீர மீட்பைப் பற்றி எண்ணி -னார்களே தவிர, ஆன்மீக விடுதலையைப் பற்றி எண்ணிப்பார்க் -கவில்லை.
வாய் நிறைய ஓசான்னா பாடி ஆர்ப்பரித்தவர்கள் ஐந்து நாட் -கள் முடிந்தவுடன் வாய்கிழியக் கத்தினர். அவனைச் சிலுவையி -லறையும். ஓசன்னா பாடி அழைத்துச் சென்றவரை அபிஷேகம் செய்து அரியணை ஏற்ற வேண்டியதல்லவா கடமை. இவர்களோ சிலுவையிலறைந்து கொலை செய்யத் துணிந்தனர். தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இவை நிகழ்ந்ததாயினும் தற்கால சடங்காச்சா -ரங்கள் நம் சிந்தனையை இழுக்கின்றன.
இன்றும் ஆண்டுதோறும் அனேகர் ஓசன்னா பாடுகின்றனர். அறியாமல், அர்த்தமின்றி... அதுவும் அவரை அறையத்தானே... தங்கள் இதய அரியணையில் அவரை அரசராக்கியவர்கள் பாக்கி -யவான்கள்...
குருத்தோலையின் பிரசங்கக் குறிப்புகள்:
1.யோவா 12:13 குருத்தோலை என்றால் என்ன?
லேவி 23:40 ஓலை (எல்) பேரீச்ச இலைகள்
எண் 33:9 பேரீச்சை இலை (எல்) மாரா மறக்கப்பட்ட இடம்
வா.ம்: யாத் 15:23,25 இஸ்ரவேலரின் கசப்பு மாறிப்போனது.
2. மாற் 11:9 ஓசன்னா என்றால் என்ன?
- மத் 21:9 கர்த்தருடைய நாமம்
- யோவா 12:13 இஸ்ரவேலின் ராஜா
- மாற் 11:10 பிதாவாகிய தாவீதின் இராஜ்யம்
- மத் 21:15 ஆர்பரிப்பு
வா.ம்: யோசு 6:20 இஸ்ரவேலர் ஆர்பரித்தனர் எரிகோ மதில் விழுந்தது.
3. மாற் 11:8 வஸ்திரங்கள் என்றால் என்ன?
- வெளி 16:15 வஸ்திரம் (எல்) ஜீவியத்தைக் காத்துக்கொள்வது
உ.ம்: ஆதி 39:12 போத்திபாரின் மனைவி வஸ்திரத்தினல் பாவியானாள்.
வா.ம்: ஆதி 49:11 யோசேப்பு தன் வஸ்திரத்தை இரத்தத்தில் தோய்த்தான்.
மாற் 11:8 வஸ்திரங்களை விரித்து என்றால் என்ன?
2இரா 9:13 யெகூவை வஸ்திரங்களை விரித்து இராஜாவாக்கினார்கள்.
வி.ம்: மாற் 15:18 இயேசுவும் யூதருடைய ராஜாவாக உயர்த்தப்பட்டார்.
4. மத் 21:8 மரக்கிளைகள் என்றால் என்ன?
நெகே 8:15 ஐந்து வித கிளைகள்:
1. ஆதி 8:11 ஒலிவ மரத்தின் இலை (எல்) நற்செய்தி
2. ரோம 11:24 காட்டு ஒலிவகிளை (எல்) சுபாவங்கள்
3. சக 1:11 மிரிருது செடியின் கிளை (எல்) அமைதலும் அமரிக்கையும்
4. லேவி 23:40 பேரீச்ச மரக்கிளை (எல்) மகிழ்ச்சி
5. எசே 19:11 அடர்ந்த மரக்கிளை (எல்) செங்கோல் (அ) அதிகாரம்
5. யோவா 12:14 கழுதைக்குட்டி என்றால் என்ன?
1. ஆதி 32:15 பிரித்தெடுக்கப்பட்டது
2. மத் 21:4 சாந்த குணம்
கழுதையின் இரண்டு தன்மைகள்:
1. மத் 21:4 இயேசுவை ஏற்றிக்கொண்டு வந்தது.
2. யோவா 12:15 இயேசுவை ஏற்றிக்கொண்டு போனது
வி.ம்: வந்தது (எல்) இயேசு மனுஷகுமாரனாக பூமிக்கு வந்ததையும், போனது (எல்) பின் நாட்களில் மணவாட்டி சபையை எடுத்துக் கொண்டுப்போவதையும் குறிக்கும்.
நாடுகளும்-க்ஷ குருத்தோலையும்:--
கிறிஸ்தவம் பரவியிருக்கும் அணைத்து நாடுகளிலும் குருத். -தோலை ஞாயறு அனுஷ்டிக்கப் படுகின்றது. ஆனால், நாட்டுக்கு நாடு சில மாறுதல்களையும் காணமுடிகின்றது. குருத்தோலை ஞாயிறை கொண்டாடுகின்ற சில நாடுகளைப்பற்றி பார்போம்.
1.யோர்தான் மற்றும் இஸ்ரல் நாடுகள்:
யோர்தான் மற்றும் இஸ்ரவேல் நாடுகளில் ரோஜா பூக்களால் செய்யப்பட்ட சிலுவையை சுமந்து கொண்டு குருத்தோலைகளைப் பிடித்து ஓசன்னா என்ற முடிக்கத்தோடு செல்வார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபை, மரபு வழித்திருச்சபை, கீழைச்சபை, ஆங்கிலிக்கன் சபைகளைளச் சார்ந்த மக்கள் இதை முக்கிய நிகழ்வாகவே கருதி செய்கின்றனர்.
அத்துடன், குருத்தோலையினால் செய்யப்பட்ட திருநீரில் அமுக்கி, அந்நீரை சபை குருவானவர் மக்கள் மீது தெளிப்பதும், தங்கள் அங்கிகளை சிலுவை வடிவில் மடிப்பது போன்ற சில பாரம்பரியமான பழக்கங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
2.லாத்வியா நாடு:
இந்நாட்டு மக்கள் ஈச்சமரத்தின் ஓலை குருத்துக்களுக்கு
பதிலாக "வில்லோ" (WILLOW) மரத்தின் கிளைகளை உயர்திப் பிடித்து இவ்விலாவைக் கொண்டாடுகின்றனர்
3.மால்ட்டா நாடு:
மால்ட்டா நாட்டின் கிறிஸ்தவர்கள் ஒலிவ கிளைகளையும்,
பனைமரத்தின் குருத்துக்களையும் பவனியில் பிடித்துச் செல் -வார்கள். ஒலிவ மரக்கிளை என்பது இயேசு நமத்துகாக துயரு -ற்றார் என்றும், பளைமரக் குருத்துக்கள் தாங்கள் எப்போதும் நிலைத்திருப்போம் என்ற விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்க் -காக இப்படிச் செய்கின்றனர்.
4.ஓலாந்து நாடு;
இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்தோலைகளோடு கூட, அப்பத்தையும் சிலுவையின் வடிவில் செய்து கொண்டு போவார் -கள். அது போலவே சேவல் வடிவத்திலும் செய்வார்கள். பேதுரு இயேசுவை மருதலித்தான் என்பதை நினைவு கூறும்வண்ணம் இப்படிச் செய்கின்றனர்.
இதில் சேவல் என்பது, பவனியில் செல்பவர்களின் பழைய ஜீவியத்தையும், அப்பம் என்பது தங்களையே மீண்டும் ஒருவிசை இயேசுவுக்காக ஒப்புகொடுப்பதாகவும் கருதுகின்றனர்.
5.போலந்து நாடு:
போலந்து நாட்டினர் ஒவ்வொறு குருத்தோலை ஞாயறு அன்றும் செயற்கையான குருத்தோலைகளை செய்து தூக்கிக் கொண்டு வருவது இவர்களின் பழக்கம். அதில் பெரிய குருத்தோலைக்கு பரிசுகள் வழங்குவதும் உண்டு. அதன்படி கடந்த 2008ல் செய்யப் -பட்ட செயற்கை குருத்தோலை ஏறத்தால 33:39 மீட்டர் நீளம் உடையதாக இருந்துள்ளது.
6.உருமேனிய / பல்கேரியா நாடுகள்:
இந்நாடுகளில், குருத்தோலை ஞாயறு என்பதை மலர் ஞாயறு என்று கொண்டாடப்படுகின்றது. ரோஜா, லில்லி, மார்க்கரெட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களை சிலருக்கு சிறப்பு பெயராக சூட்டி, அவர்களை அலங்கரித்து முக்கியப்படுத்தி அழைத்து வருவார்கள்.
இயேசு எருசலேமுக்குள் நுலைந்ததை அந்நாட்களில் வாழ்ந்த யூதர்கள் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் விதமாக இவர்கள் பூக்களின் பெயர்களை சூட்டி மகிழ் -கின்றனர்.
7.இந்தியா நாடு:
இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில், தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். அதின் ஓலை -களை தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள் வார்கள். இன்னும் சிலரோ, புறா, குருவி, கிலுக்கு, மணி கூண்டு போன்று விதவிதமான முறையில் ஓலைகளை கீரி பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக சிறுவர்கள் இதில் உற்ச்சா கத்தோடு கலந்துக் கொள்வது உண்டு.
கேரளாவிலோ, ஆலயத்தின் பரிசுத்தப்பகுதியைத் தெரிந்தெ -டுத்து அப்பகுதியில் செவ்வந்தாப் பூ போன்ற பலதரப்பட்ட பூக் -களை தரையில் தூவுவார்கள். இன்னும் சில இடங்களில், குருத்தோலை பவனி செல்லும்போது, வழியில் துணிமணி -களை விரிக்கும் பழக்கமும் உள்ளது.
சிலுவையின் 40 உவமைப் பெயர்கள்:
1.வெளி 11:8 ஞானார்த்தமான சிலுவை
2. 1பேது 2:24 பாவங்களை சுமந்த சிலுவை
3. எபி 12:2 இயேசு சகித்த சிலுவை
4. கொலோ 2:15 இயேசு வெற்றி சிறந்த சிலுவை
5.கொலோ 1:20 இயேசு இரத்தம் சிந்தின சிலுவை
6. பிலி 3:18 பகைஞரின் சிலுவை
7. பிலி 2:8 தம்மைத்தாமே தாழ்த்தின சிலுவை
8. எபே 2:16 பகையை கொன்ற சிலுவை
9. கலா 5:24 ஆசை, இச்சைகளை அறைந்த சிலுவை
10.2கொரி 13:4 பலவீனத்தின் சிலுவை
11. 1கொரி 2:8 மகிமையின் கர்த்தரின் சிலுவை
12. 1கொரி 1:17 வீணாய் போகாத சிலுவை
13. அப் 2:23 ஆணியடித்த சிலுவை
14. யோவா 19:19 மேல் விலாசம் எழுதப்பட்ட சிலுவை
15. யோவா 19:17 கொல்கொதா சிலுவை
16. லூக் 23:33 கபாலஸ்தலம் சிலுவை
17. யோவா 19:15 ராஜாவின் சிலுவை
18. லூக் 24:20 மரண ஆக்கினைக்குரிய சிலுவை
19. லூக் 23:39 இகழப்பட்ட சிலுவை
20. லூக் 23:21 கூக்குரலின் சிலுவை
21. லூக் 14:27 சுமந்து செல்லும் சிலுவை
22. மாற் 15:32 நிந்தனையின் சிலுவை
23. மாற் 15:30 தூஷணத்தின் சிலுவை
24. மாற் 15:26 யூதருடைய ராஜாவின் சிலுவை
25. மாற் 15:25 மூன்றாம் மணி சிலுவை
26. மாற் 15:20 பரியாசத்தின் சிலுவை
27. மாற் 15:14 கூக்குரலின் சிலுவை
28. மாற் 8:34 தன்னைத்தான் வெறுத்த சிலுவை
29. மத் 27:42 இஸ்ரவேலின் ராஜாவின் சிலுவை
30. மத் 27:40 தேவனுடைய குமாரனின் சிலுவை
31. மத் 27:32 பலவந்தம் பண்ணப்பட்ட சிலுவை
32. மத் 27:22 கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவின் சிலுவை
33. மத் 26:2 மனுஷக்குமாரனின் சிலுவை
34. மத்23:34 தீர்க்கதரிசிகளின் சிலுவை
35. மத் 23:34 ஞானிகளின் சிலுவை
36. மத் 23:34 வேதபாரகரின் சிலுவை
37. மத் 20:19 வாரினால் அடிக்கப்பட்ட சிலுவை
38. மத் 16:24 சீஷர்களின் சிலுவை
39. மத் 10:38 பின்பற்றாதவனின் சிலுவை
40. கலா 3:1 புத்தியில்லாத கலாத்தியரின் சிலுவை
சிலுவையோடு தொடர்புடைய 40 பேர்? :
1. மத் 16:24 சீஷர்களுக்குரிய சிலுவை
2. ஏசா 53:12 ஏசாயா தீர்க்கதரிசிக்குரிய சிலுவை
3. மத் 10:37,38 தகப்பனையும், தாயையும் அதிகமாய்
நேசிக்காதவனின் சிலுவை
4.வெளி 11:8,7,3 கடைசிகால இரண்டு சாட்சிகளின் சிலுவை
5. மத் 23:34 ஞானிகளுக்குரிய சிலுவை
6.பிலி 3:18 வேறுவிதமாய் நடக்கிறவர்களின் சிலுவை
7. மத் 20:19 புறஜாதியாரின் சிலுவை
8. 1கொரி 1:23 கிரேக்கருக்குரிய சிலு
9.யோவா 19:17 இயேசு சுமந்த சிலுவை
10. அப் 2:23 அக்கிரமக்காரர்களின் சிலுவை
11. எபி 6:6 அவமானப்படுத்துகிறவர்களின் சிலுவை
12. 1கொரி 1:23 யூதர்களுக்குரிய சிலுவை
13. மத் 27:41,42 பிரதான ஆசாரியர்களின் சிலுவை
14. கலா 6:12 நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்களின் சிலுவை
15. மத் 27:23 தேசாதிபதியின் சிலுவை
16. 1கொரி 2:8 இப்பிரபஞ்சத்து பிரபுக்கள் ஒருவனுடைய சிலுவை
17. மத் 27:32 சிரேனே ஊர் சீமோனின் சிலுவை
18. மத் 27:41,42 மூப்பர்களுக்குரிய சிலுவை
19. அப் 2:36 இஸ்ரவேல் குடும்பத்தாருக்குரிய சிலுவை
20. 1பேது 2:24 நீதிக்கு பிழைத்திருக்கிறவர்களின் சிலுவை
21. மத் 27:26 பரபாசுக்குரிய சிலுவை
22. எபே 2:16,17 தூரமும், சமீபமுமானவர்களின் சிலுவை
23. மத் 28:2,5 கர்த்தருடைய தூதனுக்குரிய சிலுவை
24. கலா 5:24 கிறிஸ்துவினுடையவர்களுக்குரிய சிலுவை
25. மத் 23:34 தீர்க்கதரிசிகளுக்குரிய சிலுவை
26. கலா 3:1 புத்தியல்லாத கலாத்தியருக்குரிய சிலுவை
27. அப் 4:9,10 சொஸ்தமானவருக்குரிய சிலுவை
28. மாற் 16:5,6 வெள்ளையங்கி
தரித்த வாலிபனின் சிலுவை
29. மாற் 15:27 இடதுபுறத்துக் கள்ளனின் சிலுவை
30. ரோம 6:6 பழைய மனுஷனுக்குரிய சிலுவை
31. ரோம 8:34 ஜனங்களுக்குரிய சிலுவை
32. கலா 2:20 அப்போஸ்தலனாகிய பவுலுக்குரிய சிலுவை
33. மாற் 15:27 வலதுபுறத்து கள்ளனுக்குரிய சிலுவை
34. மாற் 10:21,22 மிகுந்த ஆஸ்தியுள்ளவனுக்குரிய சிலுவை
35, மத் 27:39,40 வழியே
நடந்து போகிறவர்களின் சிலுவை
36. மாற் 15:15 பிலாத்து இயேசுவை ஒப்புக்கொடுத்த சிலுவை
37. யோவா 19:25 மூன்று மரியாள்களுக்குரிய சிலுவை
38. மாற் 15:16,20 போர்ச்சேவகர்களுக்குரிய சிலுவை
39.யோவா 18:13,14 காய்பாவின் மாமனாராகிய அன்னாவின்
சிலுவை
40. யோவா 11:49,50
பிரதான ஆசாரியனாகிய காய்பா
சொன்ன மரணத்தின் சிலுவை
சிலுவையும்-ஈட்டியும் :
A. முன் குறிப்புகள்:--
ஈட்டி, இயேசுவைக் கொலை செய்யப் பயன்படுத்தின ஆயுதங் -களில் கடைசி ஆயுதமாகும். இயேசு சிலுவையில் மரித்துவிட்டா -ரா, இல்லையா என்பதை உறுதிச் செய்ததும் இந்த ஈட்டிதான். மனிதர்களின் பற்களுக்கு இணையாகவும் ஈட்டி விவரிக்கப்பட்டுள் -ளது(சங் 57:4). அந்த அளவுக்கு அந்த காலத்து மனிதர்களின் வார்த்தைகள் மிகக் கூர்மையாகக் காணப்பட்டது. புதிய ஏற்பாட்டில் ஈட்டியைக் குறித்து அதிகமாய் எதுவும் சொல்லப்படாமல், இரண்டு இடங்களில் மட்டும் ஈட்டியைக் குறித்த சம்பவம் வருகின்றது. (யோவா 19:34; அப் 23:23). வேதாகமத்தில் முதன் முதலில் ஈட்டியைப் பயன்படுத்தினது இரண்டு பேரை குத்தி கொலை செய் -வதற்க்காகத்தான். வேதத்திலுள்ள பழைய ஏற்பாட்டு ஆகமங்க -ளில் எண்ணாகமம் முதல் ஆபகூக் வரையிலான 18 புஸ்தகங் -களிலும், புதிய ஏற்பாட்டில் யோவான் மற்றும் அப்போஸ்தல நட -படிகளிலுமாக ஏறத்தால 20 புஸ்தகங்களில் ஈட்டியைக் குறித்து பல விதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
"ஆகிலும், போர்ச்சேவகர்கரில் ஒருவன் ஈட்டியினாலே அவரு -டைய விலாவில் குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.(யோவா 19:34)"
ஆம், இயேசுவைத் தொட்ட பொருட்களில் ஈட்டி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஈட்டி என்றால் உருவ குத்துதல் என்று அர்த்தமாகும் (ஆபகூக் 3:14). இயேசு சிலுவையின் மேல் தொங்கி கொண்டிருக்கையில், கீழே இருந்து இயேசுவை ஈட்டி -யினாலே உருவக் குத்தினான். அதனால் இயேசுவின் சரீரத்திலி ருந்து முதலாவது இரத்தமும் இரண்டாவது தண்ணீரும் புறப்பட் -டது.
இரத்தம் என்பது ஜீவனையும், தண்ணீர் என்பது ஆரோக்கிய -த்தையும் குறிக்கும். ஆம், இயேசு நமக்காக ஜீவனை மட்டும் கொடுக்காமல், தன்னுடைய ஆரோக்கியத்தையும் கொடுத்துள்ளார். பழைய ஏற்பாட்டில் யோசுவா ஈட்டியை நீட்டினபடியினால் ஆயி பட்டணத்தை ஜெயித்தான். புதிய ஏற்பாட்டில் ஓர் வீரன் ஈட்டியை
நீட்டினபடியினால் இயேசுவின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதே சமயம் ஈட்டி என்பது நம்முடைய வாயிலுள்ள பற்களுக் -கு ஒப்பிட்டும் சொல்லப்பட்டுள்ளது [சங்57:4). இயேசு நமக்காக போன்ற ஈட்டிக்கொப்பான வார்த்தைகளை நிறுத்தி, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் வார்த்தைகளை மட்டும் பேசினால், மீண்டும் இயேசுவை நாம் சிலுவையில் அறையாது இருப்போம்.
உங்கள் கையில் இருக்கும் ஈட்டி உங்கள் எதிரிகளைதான் பயமுறுத்த வேண்டுமேயொழிய, உங்கள் ஈட்டி உங்களையே பயமுறுத்தக் கூடாது என்பதை முதலாவது தெரிந்து கொள்ளுங்கள்.
சவுல் இராஜா தாவிதை கொல்வதற்காக ஏறத்தாழ மூன்று
முறை ஈட்டியை எறிந்தான். ஆனாலும் தாவீது அந்த ஈட்டியின்
ஆபத்திலிருந்து தப்பினான். அதுபோல, உங்களுக்கு விரோதமாக
வருகின்றஎந்தவிதமான ஈட்டியானாலும் உங்களைத் தாக்காது.
காரணம், இயேசு உங்களுக்காக ஈட்டியினால் குத்தப்பட்டு விட்டார். "என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டி -யையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்” (சங் 35:3).
ஈட்டியைக் குறித்து பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற இரண்டு பகுதியிலிருந்தும் வாசிப்போம், தியானிப்போம். கிருபையைப் பெறு -வோம், நல்ல ஈட்டியாக மாறுவோம்.
B.புள்ளி விபரங்கள்:--
1. இயேசுவைக் குத்தின ஈட்டியின் நீளம் 8 அடி ஆகும். இயே -சுவின் 3-க்கும் 4-க்கும் இடைப்பட்ட விலா எழும்பு பகுதியில் ஈட்டியால் குத்தப்பட்டார்.
2. இயேசுவை ஈட்டியால் குத்தின போர்வீரனின் பெயர் "லொங்கினியஸ்" ஈட்ரயின் முன் அலகு பகுதி 2 அங்குலம் உடையதாக இருந்தது.
3. ஈட்டி (எ) போர்வீரர்களின் மூன்றாம் கை என்று பொருள்.
4. ஆரம்ப காலத்தின் ஈட்டிகள் மரக்கழியினால் செய்யப்பட்ட -தாயிருந்தது.
5. ஈட்டிக்கு சாமரம், வளரி, எறியீட்டி, சூலம், சூலாயுதம், குத்தீட்டி, ஓரி, வேல், கதாயுதம், தோமரம் என்கிற 10 வித பெயர்களும் உண்டு.
6. கோலியாத் பயன்படுத்தின ஈட்டியின் முன் அலகு மட்டும் ஆறு சேக்கல் அதாவது 7 கிலோ 700 கிராம்.
7. சில ஈட்டிகளின் பின்பகுதியும் கூர்மையாக இருக்கும் 2சாமு 2:23. அதனால்தான் அப்னேர், ஆசகேலை ஈட்டியின் பின்புறத்தினால் குத்திக் கொன்றான்.
8. யூத ஈட்டிகளை தரையில் குத்தி நிறுத்தினால் மட்டும்தான் நிற்கும். ஆனால், எகிப்திய ஈட்டிகள் தரையை காயப்படுத்தாமல் சமதள தரையிலும் நிற்க கூடியவை.
9. ஈட்டிகளுக்கு JAVELIN (ஜாவ்லின்), SPEAR (ஸ்பையர்), LANCE (லான்ஸ்), DART (டார்ட்), HKANITH [ஹானித்) RO'MAHH (ரோமாஹ்), KIDDHON (கித்தோன்), MS'SSA (மாஸா), SHE'LAHH (சேலா), LOG'KHE (லோக்) என்கிற 10 ஆங்கில பெயர்களும் உண்டு.
10. வேல் என்பதும் ஈட்டிதான். ஆனால் அம்பைவிட பெரியது, ஈட்டியை விட சிறியது.
11. இயேசுவை ஈட்டியால் குத்தின போர்ச்சேவகன் ஏற்கனவே ஒரு கண்ணின் பார்வையை இழந்து, ஒற்றைக் கண்ணணாக இருந்ததாகவும், இயேசுவை ஈட்டியால் குத்தினபோது தெரித்த ஒரு சொட்டு இரத்தம் அவன் கண்ணில் பட்டதால் அவன் பார்வை -யடைந்ததாகவும் ஒரு பின் செய்தி உண்டு.
C. உவமையாய் சொல்லப்பட்டுள்ள சில ஈட்டிகள்:
1. எண் 25:8 உருவபோகும்படி குத்தும் ஈட்டி
2. 1சாமு 17:47 இரட்சிக்க மாட்டாத ஈட்டி
3.1நாளா 20:5 படைமரம் போன்ற ஈட்டி
4. 11நாளா 14:8 யூதாவின் ஈட்டி
5. நெகே 4:21 பிடித்திருந்த ஈட்டி
6. சங் 57:4 பற்களுக்கு ஒப்பான ஈட்டி
D. ஈட்டியைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள
சில குறிப்புகள்:
a. எண் 25:7 ஈட்டியை முதன்முதலில் பயன்படுத்தினது ஆரோனின் பேரனாகிய பினெகாஸ்
b. 2சாமு 21:16 வேதத்திலேயே மிக அதிக கனமுள்ள ஈட்டியை வைத்திருந்தவன் இஸ்பிபெனோப் என்பவன். அவனுடைய ஈட்டியின் எடை முழுவதும் வெண்கலத்தினாலான 300 சேக்கல் நிறை.
C. 1சாமு 17:7 கோலியாத் பயன்படுத்தின ஈட்டியின் நீளம் 7.9 மீட்டர் [26அடி). அவனுடைய ஈட்டியின் அலகு (நுனி) பகுதியின் எடை மட்டும் 7கிலோ 700கிராம் ஆகும்.
d. 2சாமு 23:18 நொளா 11:11
ஒரு ஈட்டியின் மூலம் ஒரு மனுஷன் ஒரே நேரத்தில் 300பேரை மடங்கடித்த சரித்திரமும் உண்டு.
e.1சாமு 19:9 பழைய ஏற்பாட்டில் ஈட்டியை அதிகமாக பயன்படுத் -தினது சவுல் ராஜாதான்.
காரணம்: அவன் வீட்டில் அமர்ந்திருக்கும் போது கூட கையில் ஈட்டியைப் பிடித்திருப்பான் (1சாமு 19:9).
f. எண் 25:8 வேதாகமத்தில் ஈட்டியை முதன் முதலில் கொலை செய்வதற்க்காகத்தான் பயன்படுத்தப்பட்டது.
g. 1சாமு 26:8 2சாமு 2:23
ஈட்டியினால், மனுஷனை ஒருமுறைக் குத்தினால், மறுபக்கம் புறப்பட்டு தரையில் போய்த் தட்டும்.
h. 1சாமு 17:45 ஈட்டியின் துணை ஆயுதங்கள் இரண்டு. ஒன்று:பட்டயம், இரண்டு: கேடகம்.
i.ஆப 3:11 ஈட்டியை சூரியனுக்கும், சந்திரனுக்கும் இணையாக கருதினார்கள்.
j.1சாமு 17:47 கர்த்தர் ஈட்டியைக் கொண்டு இரட்ச்சிக்கிறவர்
அல்ல.
E. நன்மை செய்த ஈட்டிகள்:--
a. யோசு 8:18,26 யோசுவாவின் நீட்டப்பட்ட ஈட்டி, ஆயி பட்டணத்தை இஸ்ரவேலருக்குத் தந்தது.
b.1நாளா 11:11 "யாஷோபியாமின்" ஈட்டி 300 பேரை கொன்றுப் போட்டு தாவிதுக்கு வீரத்துவத்தைக் காண்பித்தது
C.ஆபகூ 3:11 ஆபகூக் தீர்க்கதரிசி சொன்ன ஈட்டி, மின்ன -லின் பிரகாசத்தைப் போல கர்த்தருக்காக நடந்தது.
d.நாகூ 3:3,1 நாகூம் தீர்க்கதரிசி சொன்ன ஈட்டி வஞ்சகத்தி -னாலும், கொடுமையினாலும் நிறைந்தவர்களுக்கு முன்பாக மின்னி அவர்களை நடுங்க வைத்தது.
e . எண் 25:7,8 உருவக்குத்தின பினெகாஸின் ஈட்டி இஸ்ரவேல் புத்திரரின் வாதையை நிறுத்திப் போட்டது.
f.1சாமு 19:10 தாவீதை கொல்லும்படி சவுல் எரிந்த ஈட்டி, சுவரிலே போய்ப்பட்டு, தாவீதைத் தப்புவிக்கப் பண்ணினது
g. 1சாமு 26:12,7 கர்த்தர் அயர்ந்த நித்திரை வரப்பண்ணின -தால், சவுலின் ஈட்டி தரையிலே குத்தப்பட்டு, தாவிதும், அபிசாயும் தப்புவிக்கப்பட்டனர்.
இயேசுவும் வஸ்திரங்களும் :
A. குறிப்புகள்:
மற்ற எல்லா பொருட்களையும் விட வஸ்திரம் என்பது விசேஷ -மானது என்றுதான் சொல்ல வேண்டும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் மட்டும் ஏறத்தால 56-க்கும் அதிகமான முறை வஸ்திரம் என்று வருவதை காணலாம். வஸ்திரம் என்றால் இயேசுவின் இரத்தம் என்று அர்த் -தமாகும். “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந் -தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே” (வெளி19:13). நாமும் இயேசுவின் இரத்தம் என்னும் வஸ்திரத்தால் மூடப்படும் போது, தேவனுடைய நாமமும், தேவனுடைய வார்த்தை -யும் நம்மை பாதுகாக்கக் கூடியதாக மாறும்.
"உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிற -தென்ன?” (ஏசா63:2). இயேசுவின் சரீரத்தை பல விதமான வஸ்திரங்கள் தொட்டது. அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக்குரியவைகளாய் காணப்படுகின்றது. குறிப்பாக சிகப்பு வஸ்திரம் அவருடைய பாடுகளையும், மினுக்கான வஸ்திரம் அவ -ருக்கு உண்டான ஏளனத்தையும் (அவமானத்தையும்) குறிக்கும். வஸ்திரங்களை குறித்த செய்தியை வாசிக்கின்ற எனக்கன்பான சகோதரரே, சகோதரிகளே, நீங்கள் உடுத்தும் வஸ்திரங்ககள் எப்படிப்பட்டவைகளாகக இருக்கிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அடக்கமானதாக, முழு உடலையும் மூடக்கூடியதாக, நேர்த்தியாய் தைக்கப்பட்டதாக உள்ளதா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். இயேசு உடுத்தின வஸ்திரங்ககள் என்றுமே யாருக்குமே இடறலாக இருந்ததில்லை. மாறாக அவரு -டைய வஸ்திரத்திலிருந்து வல்லமை புறப்பட்டது [மாற்5:30). தெய்வீக சுகத்தை கொண்டு வந்தது. நீங்கள் மாத்திரம் சாட்சி -யாக வாழ்ந்தால் போதாது. உங்கள் வஸ்திரமும் சாட்சியாக மாறனும். அதுதான் தேவனுக்கு பிரியமானது.
B. துணுக்குகள்:
1.யோவா 19:23 நான்கு போர்ச்சேவகர்கள் இயேசுவின் வஸ் -திரத்தை சீட்டு போட்டு எடுத்துக் கொண்டார்கள். இயேசு கடைசி -யாக தன்னுடைய வீட்டை விட்டு கிளம்பும்போது அவருடைய தாயார் செய்து கொடுத்த வஸ்திரம் அது.
2. சங் 22:16,17,18 ஆண்டவருடைய வஸ்திரங்கள் எப்படி சீட்டுப் போடப்படும் என்பதை தாவீது தீர்க்கதரிசனமாக சொல்யிருந்தான்.
3."மெஸாலா" என்னும் பெயரையுடைய நூற்றுக்கு அதிபதிக்கு அந்த வஸ்திரம் கிடைத்தது. ஆனால், அவனோ பட்டயத்தினாலே அந்த வஸ்திரத்தைக் கீறிப்போட்டான். இந்த நூற்றுக்கு அதிபதி -யிடம் டெமெட்ராஸ் என்னும் ஓர் அடிமை இருந்தான். அவன் தான் கிழிக்கப்பட்ட இயேசுவின் வஸ்திரத்தைக் கொண்டுபோய் ஒளித்து வைத்தான்.
4. கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தை மூடின வஸ் -திரமனது 14அடி 3அங்குல நீளமும், 3அடி 7அங்குலம் அகலமும் கொண்ட மெல்லிய வெண் வஸ்திரமுமாய் இருந்தது.
5. இயேசுவின் பாடுகளிலும், அவருடைய மரணத்திலும் கடைசி வரையும் அவரை தொட்டுக் கொண்டிருந்த பொருள் வஸ்திரம்தான். வஸ்திரங்கள் என்னும் பலவித உடைகளைக் குறித்துச் வேதத்தில் சொல்லியிருந்தாலும், மத்தேயு, மாற்கு லூக்கா, யோவான் என்னும் நான்கு விசேஷங்களில் 37 அதிகாரங்கள் மூலம் ஏறத் -தால 66 முறை வஸ்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள -தை கவனிக்க வேண்டியதாகும். இவைகளில் நான்கு வகை வஸ்திரங்கள் அவருடைய கடைசி கட்ட நேரத்தில் பயன்படுத்தப்பட் -டுள்ளது. அவைகளை குறித்து கவனிப்போம். வஸ்திரம் என்றால் பழமையாய் போகுதல் என்ற அர்த்தம் உண்டு (எபி 1:11). வஸ்திரம் பழமையாய்ப் போனாலும் நம்முடைய இரட்சிப்பும் மனந்திரும்புதலும் பழமையாகப் போய்விடக் கூடாது.
6. வஸ்திரம் என்பது பொதுவான பெயராகும். அது குறிப்பிட்ட எந்த ஒரு உடையையும் விவரிக்காது. இயேசுவின் சரீரத்தை சீலைகள், மினுக்கான வஸ்திரம், துய்யதான துப்பட்டி, சிவப்பான மேல் அங்கி,கண்களை கட்டிய துணி, உடை போன்றவைகளும் இயேசுவின் மீது காணப்பட்டது. அவைகளைக் குறித்து ஒவ்வொன் -றாக பின்வரும் பகுதிகளில் விபரமாய்க் காணப் போகின்றோம்.
C. இயேசுவின் பாடுகளுக்கு இணையாக 5 வகையான வஸ்திரங்ள் சொல்லப்பட்டுள்ளது.
1. மத் 27:35 என் வஸ்திரம்
2. மத் 27:31 அவருடைய வஸ்திரம்
3. லூக் 23:11 மினுக்கான வஸ்திரம்
4. மத் 27:28 கழற்றப்பட்ட வஸ்திரம்
5. மத் 27:35 சீட்டு போடப்பட்ட வஸ்திரம்
வஸ்திரம் என்றால் என்ன?
யோவே 2:13 வஸ்திரம் (எல்) இருதயம், ஜீவியம். இருதயத்தில் மனம் திரும்ப வேண்டும்.
விளைவு:
யோவே 2:13 ஆறு நன்மைகள் கிடைக்கும்.
1. இரக்கம் கிடைக்கும்.
2. மனஉருக்கம் கிடைக்கும்.
3. நீடியசாந்தம் கிடைக்கும்.
4. மிகுந்த கிருபை கிடைக்கும்.
5. கிறிஸ்துவின் மனஸ்தாபம் கிடைக்கும்.
யோவே 2:14
6. ஆசிர்வாதமும் கிடைக்கும்.
D. உவமையின் வஸ்திரங்கள் சில:
1) மத் 17:2 வெளிச்சமான வஸ்திரம்
2) மத் 27:28 இயேசு கழற்றின வஸ்திரம்
3) மத் 27:35 சீட்டு போடப்பட்ட வஸ்திரம்
4) லூக் 19:36 - வழியிலே விரித்த வஸ்திரம்
5) லூக் 23:11 - மினுக்கான வஸ்திரம்
6) யோவா 13:12 இயேசு தரித்துக் கொண்ட வஸ்திரம்
E. மாற் 11:7 கழுதை குட்டியின் மீது போட்ட வஸ்திரங்கள்:--
வி.ம்: ஆதி 49:11 கழுதை குட்டியின் மீது போட்ட வஸ்திரம் (எல்) இரத்தத்தையும் குறிக்கும்
உ.ம்: எண் 28:7 திராட்சரசம் (எல்) பானபலி
மு.கு: 2தீமோ 4:6 கழுதைகுட்டியின் மீது ஜனங்கள் வஸ்திரங்-களைப் போட்டதினால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது என்ற தீர்க்கதரிசனம் இதன் மூலம் நிறைவேறினது
F. மத் 21:8 வழியிலே விரித்த வஸ்திரங்கள்:
வி.ம்: மத் 21:9,10,11 இயேசுவை வரவேற்கும் விதமாக ஜனங்கள்
வஸ்திரங்களை வழியில் விரித்ததினால் ஏறத்தால 6 காரியங்கள் அங்கு சம்பவித்தது
a) இயேசுவுக்கு முன்னும் பின்னும் திரள் ஜனங்கள் நடக்க ஆரம்பித்தனர்
b) ஓசன்னா என்கிற ஆராதனை இயேசுவுக்கு உண்டானது
c) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கப்பட்டது
d) அனைவருக்குள்ளும் ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது
e. எருசலேம் பட்டணத்தார் ஆச்சரியப்பட்டனர்
f) இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசி என்கிற சாட்சி கொடுக்கப்பட்டது
மு.கு: லூக் 1:79 உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்று யோவான்ஸ்நானக -னைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் இயேசு வின் வாழ்க்கையிலும் நிறைவேறினது
G. மத் 27:31 அவருக்கு உடுத்தப்பட்ட வஸ்திரங்கள்:
வி.ம்: ஏசா 52:1 இயேசுவுக்கு உடுத்தப்பட்ட வஸ்திரம் (எல்) விருத்த -சேதனமில்லாதவர்களோடும், அசுத்தமானவர்களோடும் அவர் இருக்கப் போவதில்லை என்பதைக் காட்டுகின்றது.
மு.கு: எசே 42:14 மத் 27:31 அவர் ஏற்கனவே உடுத்தியிருந்த அங்கியை கழற்றிவிட்டு, வேறேவஸ்திரம் உடுத்துவிக்கப்பட் -டதால், வேறேவஸ்திரங்களை உடுத்திக் கொண்டு ஜனங்களின் பிரகாரத்திலே போவார்கள் என்ற தீர்க்கதரிசன வசனம் இதன் மூலம்
நிறைவேறினது
H. மத் 27:35, யோவா 19:23 பங்கிட்டு, சீட்டுப்போட்ட வஸதிரங்கள்:
இயேசுவின் பாடுகளுக்கு அடையாளமான அவருடைய வஸ்தி -ரங்களை முதலாவது நான்காக பங்கிட்டார்கள் (யோவா 19:23). இரண்டாவது, அந்த வஸ்திரங்களின் பேரில் சீட்டுப் போட்டார்கள். ஆதலால், பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் ஆகியவைகளைக் குறித்து தனித்தனியாக பார்ப்போம்.
வி.ம்: 1. ஏசா 9:3 பங்கிடுதல் (எல்) மகிழ்ச்சி (அ) களிகூறுதல் இயேசுவின் வஸ்திரங்களை பங்கிட்டதால் மூன்று தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின:
a. பிரச 11:2 "பங்கிட்டுக் கொடு, பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது” என்ற வசனத்தின்படி, தனக்கு யூதர்களால் ஆபத்து வந்தபோது, தன்னுடைய வஸ்திரங்களை பங்கிட அவர் விட்டுக் கொடுத்தார்
b.சங் 22:18 மத் 27:35
சங்கீதக்காரனைக் கொண்டு தீர்க்கதரிசனத் -தின் மூலம் சொல்லப்பட்ட "என் வஸ்திரங்க -ளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு” என்ற வார்த்தையை தேவன் நிேைவற்றினார்
C. ஏசா 53:12 பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாக பங்கிடுவார் என்றதீர்க்கதரிசன வார்த்தையின்படி, சிலுவை யைச் சுற்றியிருந்த அநேக பலவான்களும், வீரர்களும் கிறிஸ்துவின் வசமாகத் திரும்பினர்
வி.ம் 2. எண் 34:13 நீதி 18:18
சீட்டுப்போடுதல் (எ) சுதந்தரித்துக்
கொள்ளுதல் (அ) விரோதங்களை ஒழிப்பது (அ)சிக்கறுப்பது
இயேசுவின் வஸ்திரங்களின் பேரில் ஏன் சீட்டுப் போட்டார்கள்?
1. யோவா 19:24 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக சீட்டுப்
போட்டார்கள்
2. மாற் 15:24 தன் பங்கை எடுக்கும்படிக்குச் சீட்டுப் போட்டார்கள்
3. மத் 27:35 தீர்க்கதரிசனம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
அதனால் சீட்டுப் போட்டார்கள்
4. யோவா 19:24 யாருக்கு வருமோ என்று அறிந்து கொள்வதற்க்காக சீட்டுப் போட்டார்கள்
5. லூக் 23:34 தாங்கள் செய்வது இன்னதென்று அறியாததினால் சீட்டுப் போட்டார்கள்
மு.கு யார் யார் சீட்டுப் போட்டிருப்பார்கள்?
1நாளா 25:8 சிறியவனும், பெரியவனும், ஆசானும், மாணாக்கணும் ஒருவேளை சீட்டுப் போட்டிருப்பார்கள்
ii. மினுக்கான வஸ்திரம்:
“அப்பொழுது ஏரோது தன் போர்ச் சேவகரோடு கூட அவரை நிந்தித்துப் பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்தில் அனுப்பினான்” (லூக் 23:11).
வாழ்க்கையில் சில நேரம் எதிர்பார்க்காத வினோதங்கள் நடப் -பதுண்டு. சில சமயம் அந்த விநோதங்களை நம்மால் தடுக்கக் கூட முடியாது. அப்படிப்பட்ட சம்பவம்தான் இயேசுவின் வாழ்க்கை யிலும் நடந்தது. எப்போதுமே நீளமான அங்கியும், வெண்ணுடை -யும் மட்டுமே அணிந்து வந்த இயேசுவுக்கு ஏரோது என்கிற இராஜா மினுக்கான வஸ்திரத்தை உடுத்துவித்தான்.
மினுக்கான வஸ்திரம் என்பது இரண்டு காரியங்களுக்கு அடையாளமாய் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று: நிந்தனை, இரண்டு: பரியாசம் இவை இரண்டுமே இயேசுவுக்கு நேரிட்டது (லூக் 23:11). இவை இரண்டுமே ஏரோது என்கின்றஇராஜாவினால் இயேசுவுக்கு நேரிட்டது. ஏரோது என்றால் வீரியம் என்று அர்த்தமாகும். அதே போல மற்றவர்களை நிந்திக்கிறதிலும் ஏளனம் பண்ணுகிறதிலும் அவன் வீரியம் மிகுந்தவனாக காணப்பட்டுள்ளான்
இயேசுவுக்கு உடுத்துவித்த வஸ்திரங்களில் மினுக்கான வஸ்திர -மும் ஒன்றாகும். மினுக்கான வஸ்திரம் என்றால் பொன் மோதிரத்-திற்கு ஒப்பானது (யாக் 2:2) என்றும் நிந்தனை என்றும் அர்த்தமா -கும் (லூக் 23:11). ஆம் பொது ஜனங்களும், யூதர்களும் இயேசுவை பொன் மோதிரத்தைப் போலப் பார்த்தார்கள். ஆனால், அதிகாரிகளும், பிரதான ஆசாரியர்களும், ராஜாக்களும் நிந்தனைக் -குரியவராக பார்த்தார்கள். ஆனபடியால் அவர் பொன் மோதிரத்தை அணிந்து கொள்ளவும் இல்லை. மினுக்கான வஸ்திரத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
a) லூக் 23:11 ஏரோது ராஜா மினுக்கான வஸ்திரத்தை உடுத்திவித்து
இயேசுவை நிந்தித்தான் லூக் 23:8,12 ஆனால், இயேசுவோ ஏரோதுவுக்கு
அவரைக்குறித்த அநேக காரியங்களை கேட்கும்படி செய்தார்
b) அவர் செய்த அடையாளங்களைக் குறித்த விருப்பத்தை ஏரோதுக்கு ஏற்படுத்தினார்
c) எரோதுவின் ஆசையின்படி தன்னையே அவனுக்கு வெளிப்படுத்தினார்
d) அவனை சந்தோஷப்படச் செய்தார்
e) பகைவர்களாயிருந்த பிலாத்துவையும், ஏரோதுவையும் சிநேககிதர்களாகமாற்றினார்
மு.கு: இப்படியெல்லாம் நன்மை செய்த இயேசுவுக்கு மினுக்கான வஸ்திரத்தை உடுத்தி விட்டபடியினால், உன் மினுக்கினால் உன் ஞானத்த்ை கெடுத்தாய் (எசே 28:17) என்கிறதுர்ச் சாட்சிக்கு ஏரோது ராஜா ஆளானான்.
மினுக்குதல் என்றால் மேட்டிமை என்று வேதம் எச்சரிக்கின் -றது (எசே 28:17). மேட்டிமை வேண்டாம் என்பதற்காகத்தான் இயேசு பரியாசத்தை ஏற்றுக் கொண்டார். நாமும் இயேசுவைப் போலவே மேட்டிமையை வெறுப்போம். தாழ்மையாய் வாழுவோம். கிறிஸ்து இயேசுவை உயர்த்தி காண்பிப்போம். உலகமும் உலகத்தில் உள்ளவைகளும் மினுக்கான வஸ்திரங்களாய் மாறட்டும். நாமும், நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் வெண் வஸ்திரங்களாக மாறுவோம். உலகையே பிரகாசிக்கச் செய்வோம்.
சில பொதுவான மினுமினுப்புகள்:
1] எசே 28:7 ஞானத்தினால் மினுக்குதல்
2) எசே28:17 அழகினால் மினுக்குதல்
3) லூக் 23:11 பரியாசம் என்னும் மினுக்குதல்
4) யாக் 2:2 மினுக்கும் பொன் மோதிரம்
5) யாக் 2:2 மினுக்கும் வஸ்திரம்
6) யாக் 2:3 மினுக்கும் பெரிய மனுஷன்
7) நீதி 23:31 பளபளப்பாய்த் தோன்றும் மதுபானம்
iii. அங்கிகள்:
"சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியை
பின்னி அவருக்கு சூட்டி (மாற்15:17)”
இயேசு உடுத்தியிருந்த வஸ்திரங்களில் இது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று சொன்னால் மிகையாகாது. அங்கி, இயேசுவின் சரீரம் முழுவதையும் தொட்டுக் கொண்டு இருந்தது. மேல் தொடங்கி கீழ்வரைக்கும் ஒரே துணியினால் நெய்யப்பட்டதாகவும் இருந்துள் -ளது (யோவா19:23). அங்கி என்றால் உபத்திரவம் என்றும், இரத்த சாட்சி என்றும் பொருளாகும் [வெளி7:14;6:11). “சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக் கொண்டான் (சங்109:18)" என்றும் வேதம் சொல்கின்றது. அப்படியானால், அங்கி என்பது சாபத்தையும் குறிக்கும்.
இயேசுவின் சரீரத்தைத் தொட்ட பொருட்களில் அங்கியும் ஒன்று. இயேசுவின் பாடுகளின் போது பயன்படுத்தப்பட்ட அங்கியைக் குறித்து இரண்டு விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கியை எப்படி தைக்க வேண்டும் என்று முதன்முதலில் தையல் கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே கர்த்தர்தான் (யாத் 39:22-27). ஆதியில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த அங்கியானது, பிற்காலத்தில் அவருடைய மரணத்தை மகிமைப்படுத் -துவதாக மாறினது. அங்கி என்றால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை என்று அர்த்தமாகும் (எசே 9:3). அப்படிப்பட்ட மகிமை பொருந்திய அங்கியைக் குறித்து தியானிப்போம்.
இயேசுவைக்குறித்து பார்க்கும் போது மூன்று வித அங்கிகளை கவனிக்க முடியும்.
1) மேல் அங்கி (மத்27:31). இது மிகுந்த உபத்திரவத்தை குறிக்கும்.
2) சிவப்பான அங்கி (யோவா19:2). இது இரத்த சாட்சியாக மரிப்பதைக் குறிக்கும்.
3) தையல் இல்லாத அங்கி [யோவா1923). இது சாபத்தைக் குறிக்கும். இவைகளைக் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
a. மாற் 15:20 சிவப்பான அங்கி:--
வி.ம்: மாற் 15:20 சிவப்பான அங்கி (எ) பரியாசம் இயேசு எட்டு விதங்களில் பரியாசம் பண்ணப்பட்டார்.
a) லூக் 22:63 அடித்து பரியாசம் பண்ணினார்கள்
b) மாற் 10:34 துப்பி பரியாசம் பண்ணினார்கள்
c) மத் 27:29 ராஜா என்று சொல்லி பரியாசம் பண்ணினார்கள்
d) லூக் 23:11 நிந்தித்துப் பரியாசம் பண்ணினார்கள்
e) மாற் 15:31 இரட்சிக்கத் திராணியில்லாதவன் என்று பரியாசம் பண்ணினார்கள்
f) மத் 27:29 வாழ்க என்று சொல்லி பரியாசம் பண்ணினார்கள்
g) மாற் 15:20 வெளியே கொண்டுபோய் பரியாசம் பண்ணினார்கள்
h) மத் 27:31 அவருடைய அங்கியை கழற்றி பரியாசம் பண்ணினார்கள்
b. யோவா 19:23 தையல் இல்லாததும், நெய்யப்பட்டதுமான அங்கி
வி.ம்: வேதத்திலுள்ள மற்ற ஆடைகள் அனைத்தும் சித்திரத் தையலாடை என்ற பெயரில் தையல் உள்ளதாகவே காணப்படு -கிறது. இயேசுவின் அங்கி மட்டும்தான் தையல் இல்லாத ஆடை -யாகக் காணப்பட்டது. காரணம்: இயேசுவின் சரீரத்தின் எழும்புக -ளில் ஒன்றும் முறிக்கப்படாமல் எப்படி பாதுகாக்கப்பட்டதோ (யோவா 19:36), அதேபோல அவருடைய அங்கியும் தையல் இல்லாததாய் பிதாவாகிய தேவன் பாதுகாத்தார்.
யோவா 19:23 நெய்யப்பட்டது:
நெய்யப்பட்டது (எ) கிழியாதபடிக்கு உறுதியானது என்று அர்த்தம் (யாத் 28:32). ஆம், இயேசுவைக் குற்றம்சாட்டின பிரதான ஆசாரி -யனின் வஸ்திரம் கிழிந்தது (மத் 26:65). தேவாலயத்தின் திரைச் -சீலை கிழிந்தது (மத் 27:51). சீஷர்கள் மீன் பிடித்த வலைகூட கிழிந்து போனது (லூக் 6:5). ஆனால் இயேசுவின் அங்கியோ கிழியவே இல்லை,
C. இயேசுவின் பாடுகளில் மூன்று வகையான அங்கிகளைப் பார்க்கலாம்:
1. மத் 27:31 மேல் அங்கி
2.யோவா 19:2 சிவப்பான அங்கி
3. யோவா 19:23 தையல் இல்லாத அங்கி
அங்கி என்றால் என்ன?
வெளி 6:11 அங்கி (எல்) இரத்தசாட்சி வெளி 7:14 மிகுந்த உபத்திரவம்
விளைவு:
நான்கு விலையேறப்பெற்ற ஆசீர்வாதம் கிடைக்கும்.
வெளி 7:9
1.வெள்ளை அங்கி கிடைக்கும்.
2. குருத்தோலை கிடைக்கும்.
3. சிங்காசனம் கிடைக்கும்.
4. ஆட்டுக்குட்டியானவரே கிடைப்பார்.
1. மாற் 12:38 உபதேசம் என்னும் அங்கி
2. மாற் 15:20 பரியாசம் என்னும் சிவப்பு அங்கி
3. லூக் 20:46 முதன்மையை விரும்பும் நீண்ட அங்கி
4. யோவா 19:2 பாடுகள் என்னும் சிவப்பான அங்கி
5. யோவா 19:23 தையல் இல்லாத நெய்யப்பட்ட அங்கி
6.அப் 9:39 மரணம் என்னும் தொற்காளின் அங்கி
7. வெளி 6:11 இரத்தசாட்சி என்னும் வெள்ளை அங்கி
8. வெளி 7:9 பரலோகத்தில் காணப்படும் வெள்ளை அங்கி
9. வெளி 7:14 இரத்தத்தினால் தோய்க்கப்பட்ட அங்கி
iii. துய்யுதான துப்பட்டி: "யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி” (மத் 27:59).
தூய்மை என்றும், சுத்தம் என்றும் நாம் பேசுகின்றோம். ஆனால், பல நேரத்தில் நம்மிடத்தில் சுத்தம் என்பது சுத்தமாக இல்லாமல் போய் விடுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மனுஷகுமாரனாய் வாழ்ந்த இயேசு சுத்தமுள்ளவ -ராய் வாழ்ந்துள்ளார். எங்கும் பரிசுத்தமாய் நடமாடியுள்ளார். ஆனபடியினால்தான், அவருடைய மரண அடக்கத்தில் (தூய்மை யான) துப்பட்டியை பயன்படுத்தியுள்ளனர். துய்யாதானத் துப்பட்டி என்பதற்கு மெல்லிய துப்பட்டி என்றும் பொருள் உண்டு.(மாற் 15:46)
a. துப்பட்டி என்றால் என்ன?
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலபீடத்தையும், பலிபீடத்துக்கான பொருட்களையும் மூடி வைப்பதற்க்காக துப்பட்டி பயன்படுத்தப்பட்டுள் -ளது. ஆனபடியினால்தான் இயேசுவும் தன்னையே ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்ததினால் அவருடைய உடலையும் துப்பட்டியினால் மூடினார்கள். இந்த சம்பவம் எதேச்சகரமாக (முன்கூட்டியே தீர்மானித்து] நடந்தது கிடையாது. நம்மை பலிபீடமாக மாற்றிக் கொண்டு, துய்யதான துப்பட்டியைப் போல தூய்மையாக நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
துப்பட்டி என்பது எச்சரிப்பையும் காட்டுவதாக உள்ளது. இயேசு சிலுவையை சுமந்து கொண்டு கொல்கொதா என்று சொல்லப்படும் மண்டை ஓடு என்று அர்த்தம் கொள்ளும் இடத்திற்கு போகும் போது ஒரு வாலிபன் துப்பட்டியால் தன்னை மூடிக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றான். அவனை அழைத்து கொஞ்ச தூரம் சிலுவையை சுமக்கச் சொன்னதும், தன் சரீரத்தை முடியிருந்த துப்பட்டியை போட்டு விட்டு நிர்வாணமாக ஓடிப் போனான் [மாற்14:51,52). இது ஓர் எச்சரிப்பின் செய்தியாகும்.
எல்லாரும் சிலுவையை சுமக்க முடியாது, எல்லாரும் பலிபீடமாக மாறமுடியாது. எல்லாராலும் இயேசுவைப் பின்பற்றவும் முடியாது. துய்யதான துப்பட்டி என்கிற பரிசுத்தம் யாரிடம் அதிகமாக உள்ளதோ அவர்களால் மட்டும்தான் முடியும். எனக்கு அன்பான சகோதரர் -களே, சகோதரிகளே நீங்கள் பரிசுத்தமாய் இருக்கின்றீர்களா? உங்கள் உள் உறுப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள், யாவும் பரிசுத்தமாக உள்ளதா என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இல்லாவிட்டால் கர்த்தர் உங்களை பரிசுத்தமாக மாற்ற வல்லவராக இருக்கிறார்.
ஒடிப் போகின்றவர்கள் உலகத்தை ஜெயிக்க முடியாது. இயேசு -வுக்குள், இயேசுவுக்காக, சத்திய வசனத்தைக் கொண்டு நிலைத்து நிற்பவர்கள் தான் உலகத்தையும், சாத்தானையும் ஜெயிக்க முடியும்.
துப்பட்டியை வைத்திருந்த இரண்டு பேரை பாருங்கள் (மாற்14:51,52; 15:46). ஒருவன் வாலிபன், மற்றொருவன் யோசேப்பு. வாலிபன் துப்பட்டியை போட்டு விட்டு ஓடிப்போனான். அதனால் அவன் நிர்வாணி என்கிற அவமானச் சின்னமாய் மாறினான். ஆனால் யோசேப்பு துய்யதான மெல்லிய துப்பட்டியோடு இயேசு -வின் சரீரத்துக்காக ஆயத்தமாய் இருந்தான். அதனால், அவன் பெயர் வேதத்தில் இடம் பிடித்தது. நீதிமான் என்கிற உயர்ந்த பட்டத் -தையும் பெற்றுக் கொண்டான்.
இதை வாசிக்கும் எனக்கன்பானவர்களே, நீங்கள் வாலிபனை சார்ந்தவர்களாக இருக்கின்றீர்களா? அல்லது யோசேப்பு என்னும் நீதிமானாக மாறவிரும்புகின்றீர்களா என்பதை சிந்தித்து தீர்மானம் பண்ணுங்கள்.
சாதாரண துப்பட்டி மெல்லிய துப்பட்டியாக மாறட்டும், மெல்லிய துப்பட்டி துய்யதான துப்பட்டியாகட்டும். மெல்லிய துப்பட்டியும், துய்யதான துப்பட்டியும் பலிபீடமாக மாறட்டும். கிறிஸ்து இயேசுவுக் -காக உங்களையே பலியாக ஒப்புக் கொடுங்கள். கிறிஸ்துவும் உங்களை ஏற்றுக் கொள்ளுவார்.
இயேசுவின் பாடுகளின் போது இரண்டுவித துப்பட்டி பயன்படுத் -தப்பட்டது. அந்த துப்பட்டிகள் இரண்டுக்கும் இரண்டு வித பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலிபீடத்திற் -கும், ஆசரிப்பு கூடாரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட துப்பட்டி, பின் நாட்களில் இயேசுவின் மரணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. துப்பட் -ழயில் கிடைத்த தரிசனம்தான் பேதுருவை புறஜாதியாருக்கும் பிரசங்கிக்கும் அப்போஸ்தலனாக மாற்றினது (அப் 11:5). துப்பட்டி என்றால் போத்துக் கொள்ளுதல் என்று அர்த்தமாகும். நாமும் துப்பட்டியாய் மாறுவோம். இயேசுவின் ஊழியத்தைச் செய்வோம்.
b. மத் 27:59 துய்யதான துப்பட்டி:--
வி.ம்: எபே 5:27 துய்யதான என்றால்
a) கறைதரை இல்லாதது
b) பரிசுத்தமானது
c) பிழையற்றது
d) மகிமைக்கு ஒப்பானது
e) சபைக்கு இணையானது
f) ஒப்புக் கொடுக்கப்பட்டது
C. மாற் 15:46 மெல்லிய துப்பட்டி:
வி.ம்: லூக் 7:25 மெல்லிய என்றால்
a) அலங்கார வஸ்திரம்
b) செல்வமான வாழ்க்கை
c) அரசனுக்கு ஒப்பானது
d) அரண்மனைக்கு இணையானது
உ.ம்: வெளி 19:14 பரலோக சேனைகள் மெல்லிய வஸ்திரம் தரித்து இயேசுவைப் பின்பற்றினார்கள்
d. இயேசுவுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பட்டி நான்கு விதங்களில் சொல்லப்பட்டுள்ளது:
1. மத் 27:59 துய்யதான துப்பட்டி.
2. லூக் 23:53 மெல்லிய துப்பட்டி.
3. மாற் 15:46 வாங்கிக் கொண்டு வந்தது.
4. மாற் 15:46 இயேசுவைச் சுற்றியது.
e. துப்பட்டி என்றால் என்ன?
எண் 4:13 துப்பட்டி (எல்) பலிபீடம்.
1நாளா 22:1 பலிபீடம் (எல்) கர்த்தருடைய ஆலயம். 1கொரி 3:17 நீங்களே அந்த ஆலயம்
ஆலயத்தின் வாக்குத்தத்தம்:
யோவே 3:28 ஆலயத்திலிருந்து ஒரு ஊற்று உண்டாகி
உங்களை நிரப்பும்.
f. வித்தியாச வித்தியாசமான துப்பட்டிகள்:
1] எண் 4:6 நீளமான துப்பட்டி
2) எண் 4:8 சிவப்பு துப்பட்டி
3) எண் 4:9 இளநீள துப்பட்டி
4) எண் 4:13 இரத்தாம்பர துப்பட்டி
5) நியா 14:12 விடுகதை என்னும் துப்பட்டி
6) மத் 27:59 துய்யதான துப்பட்டி
7) மாற் 14:51,52 நிர்வாணம் என்னும் துப்பட்டி
8) மாற் 15:46 மெல்லிய துப்பட்டி
9) அப் 10:11 தரிசனம் என்னும் துப்பட்டி
iv. சீலைகள்
a. குறிப்புகள்:
“அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைக் கந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்" (யோவா19:40).
சீலை என்றதும் இது பெண்கள் பயன்படுத்தும் வஸ்திரமல்லவா பிறகு எப்படி இது இயேசுவின் சரீரத்தை தொட்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இந் நாட்களில்தான் சீலையை பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர். பழைய ஏற்பாட்டு காலத்தில் முக்கியத் தலைவர்களும், பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கூட சீலை -யைதான் கட்டிக் கொண்டார்கள் (Iநாளா 15:27). அதாவது முக்கி -யமான ஆண்கள் முக்கியமான நிகழ்ச்சியின் போது சீலையை பயன்படுத்தியுள்ளனர்.
அந்த காலத்திலேயே நிறைய வேலைப்பாடுகள் நிறைந்த சீலை -களை தயாரித்துள்ளனர். இளநீளம், இரத்தாம்பரம், சிவப்பு நூல், பஞ்சு நூல் (வெள்ளை நிறம்) ஆகிய நான்கு நிறம் கலந்த அழகான சீலைகளை வடிவமைத்துள்ளனர் (யாத் 36:35). கேருபீன்களின் உருவமும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது, விசித்திரமான வேலைப் -பாடுகளும் செய்யப்பட்டிருந்தது (யாத்26:31). இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. அதாவது இந்நாட்களில் தரி நெய்கிறவர்கள் என்று ஒரு கூட்டத்தாரை நாம் சொல்வது போல, சீலைகளை நெய்வதற்க்காகவே ஒரு வம்சம் தனியே உருவாக்கப்பட்டு வாழ்ந்து வந்தது (Iநாளா4:21). இவர்கள் மெல்லிய சீலைகளை நெய்வதில் மிகத் திறமையானவர்கள்.
சீலை என்பது வேதத்தில் மூன்று விதத்தில் சொல்லப்பட்டுள் -ளது.
a) சீலை,
b) சேலை,
c) புடவை.
a) சீலை: தேவனுக்கும், பலிபீடத்துக்கும், கிருபாசனத் -துக்கும் பயன்படுத்தப்பட்டது [யாத் 30:6).
b) சேலை: தண்டனையால் மரித்தவர்களுக்கு மட்டும் பயனபடுத்தக் கூடியது (அப் 5:6).
c) புடவை: தலைவர்கள், பாடகர்கள், இசைக் கலை -ஞர்கள் பயன்படுத்தினார்கள் (IIநாளா 5:12).
இந்நாட்களில், சுடிதார் என்ற வஸ்திரத்தை எடுத்துச் கொண் -டால், அதில் பல விதங்கள் இருப்பதைப் போல, அந்நாட்களில் உருவாக்கப்பட்ட சீலைகளிலும் பலவிதங்கள் காணப்பட்டன.
உடுப்பு போன்ற சீலை, மெல்லிய புடவைக்கு ஒப்பான சீலை, பட்டுப் -புடவை போன்ற சீலை, சித்திர தையல் வேலைப்பாடுகள் நிறைந்த சிலை போன்ற பலவிதங்களில் கிடைத்துள்ளன. இவைகளைத் தவிர செத்துப் போனவர்களின் பிரேதங்களை சுற்றி வைப்பதற்க் -காகவே சீலைகள் தயாரிக்கப்பட்டன (யோவா 11:44). அதற்கு பிரேதச் சீலை என்று பெயர்.
பழைய ஏற்பாட்டு சீலைக்கும், புதிய ஏற்பாட்டு சீலைக்கும் ஆவிக்குரிய வித்தியாசமுண்டு. பழைய ஏற்பாட்டு சீலை, கிருபாச -னத்தையும், புதிய ஏற்பாட்டு சீலை மரணத்தையும் குறிக்கும்.
இயேசு நமக்காக மரித்து சீலைகளினால் சுற்றப்பட்டபடியினால் நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டை நெருங்கும் சிலாக்கியத் -தைப் பெற்றுக் கொண்டோம்.
இயேசுவின் பாடு மரணத்தின் போது ஏறத்தால மூன்று வித -மான சீலைகள் பயன்படுத்தியுள்ளனர். சீலை என்றால் முதலாவது: மறைவைக் குறிக்கும் (எண் 4:5) இரண்டாவது: காரிருளையும் குறிக்கும் (ஏசா 50:3). ஆம், சீலையால் சுற்றி இயேசுவின் சரீரம் மறைக்கவும்பட்டது. மரணம் என்ற காரிருளும் அவருக்கு வந்தது. சீலை என்ற வார்த்தை சேலை என்றும் புடவை என்றும் சொல்லப்பட்டுள்ளது (யோபு 16:15, அப் 5:6, 1சாமு 21:9). ஆனால் சீலையை இயேசுவுக்கும், சேலையை மனிதர்களுக்கும், புடவையை ஆயுதங்களைச் சுற்றி வைப்ப -தற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
இப்படி சிலையைக் குறித்து ஏராளம், ஏராளமான ஆதாரங்க -ளும், அருமையான உதாரணங்களும் காணப்பட்டாலும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளோடு சம்பந்தப்பட்ட சிலைகள் மூன்று வகைப் -படும். அந்த மூன்று வகை சீலைகளும் நமக்கு நிறைய பாடங்க -ளையும், இயேசுவின் பாடுகளைக் குறித்த விளக்கங்களையும் கற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் போய், வாசித்து அறிந்து, தெரிந்து கொள்வோம்.
b. இடுப்பில் கட்டிய சீலை:--
"பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்க -ளைக் கழுவவும். தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்” (யோவா 13:5).
இயேசுவின் வாழ்க்கையில் பாடுகள் என்பது இங்குதான் ஆரம்பிக்கிறது. அதாவது, பஸ்கா பண்டிகைக்கு முன்பு, இராப் -போஜனம் கொடுப்பதற்கு முன்னதாக, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து சீஷர்களின் கால்களைக் கழுவிதான் இடுப்பில் கட்டியி -ருந்த சீலையினால் அவர்களின் கால்களைத் துடைத்தார். அப்படியானால், சீலையை அவர் தொட்டார் என்பது நன்கு புலப்படுகின்றது.
இந்த சீலை சுத்திகரிப்புக்கும், கழுவப்படுவதற்கும் இணையாக சொல்லப்பட்டுள்ளது. இயேசு சொன்னார்: நான் உன்னைக் கழு -வாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார் (யோவா 13:8).ஆம், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்தவ வாழ்க்கைக் -காக நாம் கழுவப்பட வேண்டும். IIகொரி 7:1 சொல்வதைப் போல நம்முடைய மாம்சத்திலும் ஆவியிலும் உள்ளதான அசுசி நீங்க நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும். சீலையைக் கொண்டு சீஷர்களின் கால்களை துடைத்து சுத்தப்படுத்தினார். அதுபோல நாமும் சுத்தமாக்கப்படுவது மிக முக்கியமான ஒன்றாகும்.
c. யோவா 13:4 இயேசு இடுப்பில் கட்டியிருந்த சீலை:
யோவா 13:5 இடுப்பில் கட்டியிருந்த சீலை (எல்) சுத்திகரிப்பை குறிக்கும்
வி.ம்: யோவா 13:7 அது இன்னதென்று நாம் அறியாத சுத்திகரிப்பு
d. உடலைக் கட்டிய சீலை:
"அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்” (யோவா 19:40)
முதலாவது; இயேசுவின் சரீரத்தை சுற்றிலும் கட்டின இந்த சீலை கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களின் கட்டுப்பா -டான வாழ்க்கையைக் காண்பிக்கின்றது. மேற்கண்ட வசனத்தில் அடக்கம் பண்ணும் முறை என்று வாசிக்கிறோம். அடக்கம் என் -றால் செத்தவர்களை பிரேத குழியில் புதைப்பதைக் குறிக்குவில் -லை. “என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கை யாயிருக்கிறது" (மத் 26:12). ஆம், அடக்கம் அல்ல செய்கை. இதுபோலதான் நம்முடைய மூலையில் இருந்து எழும்பும் தவறான எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகளை அடக்கம் பண்ணப் -பட வேண்டும். இவைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் அடக்கம் பண்ணுகிறவர்கள்தான் மெய்யான கிறிஸ்தவன், கிறிஸ்தவள்.
இரண்டாவதாக: அந்த சீலையில் சுகந்தவர்க்கங்களை பயன்படுத்தினார்கள் என்று பார்க்கின்றோம். சுகந்த வர்க்கம் என்றால் தூபம் என்று பொருள் (IIநாளா2:4). தூபம் என்றால் துதி. துதியை காலையிலும், மாலையிலும், விசேஷித்த நாட்களிலும் செலுத்த வேண்டும் என்று அதே வசனம் சொல்கின்றது. ஆம், தூபம் என்னும் துதியின் சீலையினால் நாம் கட்டப்படும்போது நம் வாழ்க்கை பாதுகாக்கப்பட்ட, கட்டுப்பாடுள்ள வாழ்க்கையாக மாறும்.
சீலையைக் கொண்டு இயேசுவின் சரீரத்தை நான்கு இடங்களில் கட்டினார்கள். அதாவது கைகள், கால்கள், தலை, மற்றும் உடல். இதே போல நம்முடைய உடலிலும் நாம் கட்டுபாடாய் பாதுகாத்துக் கொள்ள கூடிய நான்கு பகுதியுண்டு. கண், செவி, நாவு, வாய் இந்த நான்கையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண் -டால் எந்த சோதனையையும் உங்களால் ஜெயிக்க முடியும்.
கண்களால் இயேசுவை மட்டும் பாருங்கள். செவியால் இயேசுவின் சத்தத்தை மட்டும் கேளுங்கள். நாவை துதிக்க மட்டும் பயன்படுத்துங்கள். வாயை சுவிசேஷம் சொல்ல மட்டும் உபயோகி -யுங்கள். இப்படி செய்தால் உங்களுக்காக இயேசு சீலையினால் கட்டபட்டது வீண் போகாது.
e. யோவா 19:40 இயேசுளின் உடலை சுற்றியிருந்த சீலை:
வி.ம்: புல 1:14 சுற்றிக்கட்டினது என்பது
a) பூட்டப்பட்டதற்குச் சமம்
b) கழுத்தை சுற்றிக் கொண்டதற்கு சமம்
c) பெலன் விழுந்து போனதற்குச் சமம்
d) ஒடுக்குகிறவர்களின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டதற்குச் சமம்
உ.ம்: யோவா 11:44 சீலையினால் சுற்றிக் கட்டுதல் (எ) மரித்து போனதற்குச் சமம்
f. தேவாலய சீலை:
"அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது" (மாற் 15:38).
சீலைகளில் தேவாலயத்தின் திரைச் சீலையும் முக்கிய பங்காற்றுகின்றது. இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல்
இந்த மூன்றோடும் திரைச்சீலை சம்பந்தப்பட்டுள்ளது. “இளநீல -நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், பஞ்சு நூல்" என்னும் நான்கு வகையான நூல்களைக் கொண்டு திரைச்சீலை உருவாக்கப்பட்டிருந்தது (யாத் 26:31). இந்த திரைச்சிலையின் மைய பகுதியில் கேருபின்களும் வரையப்பட்டிருந்தது. தேவால -யத்தின் ஒவ்வொரு சீலையும் உச்சி முதல் அடிபாகம் வரை அளந்து பார்த்தால் 60 அடி உயரமாயிருக்கும்.
கொல்கொதா மலையில் மகா சத்தமாய் கூப்பிட்டு இயேசு . ஜீவனை விட்டதும், தேவாலயத்தின் திரைசீலை கிழிந்தது. தேவா -லயத்தின் திரைச்சீலை ஒன்றுதான். ஆனால், அது இரண்டு விதங்களில் கிழிந்ததாக வேதம் சொல்கின்றது. ஒன்று: மேல் தொடங்கி கீழ்வரைக்கும் கிழிந்தது (மத்27:51). இரண்டாவது: நடு -வில் கிழிந்தது (லூக் 23:45). ஒரே திரைச்சீலை இரண்டு விதங்களில் கிழிந்தது எதைக் காட்டுகின்றது தெரியுமா? பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆராதனை ஸ்தலத்திற்குள் நுழையும் முன், பரிசுத்த ஸ்தலத்தில் ஒரு திரைச்சீலையும், மகா பரிசுத்த ஸ்தலத் -தில் ஒரு திரைச்சீலையும் இருக்கும். இந்த இரண்டுக்காகத்தான் இயேசுவின் மரண நேரத்தில் தேவாலயத்தின் திரைச்சீலை இரண் -டு விதங்களில் கிழிந்தது.
தேவாலய திரைச்சீலை இரண்டு விதங்களில் கிழிந்ததால், இன்னும் இரண்டு பாக்கியம் உண்டானது. ஒன்று: யூதர்களுக்கும், புறஜாதியார்களுக்கும் இருந்த வேற்றுமை ஒழிந்தது. கிறிஸ்துவுக் -குள் அனைவரும் ஒன்றுதான் என்கிறபெரிய வெளிப்பாடு கிடைத் -தது. இரண்டாவது: நாம் யாவரும் கிருபாசணத்தண்டை நெருங் -கும் சிலாக்கியத்தைப் பெற்றுக் கொண்டோம். இதனால், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இயேசுவிடம் நெருங்க முடியும்.
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாலையும் ஒன்றாக்கி பகையாக நின்றபிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து பகையை சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புர -வாக்கினார் (எபே 2:14,16) என்றதீர்க்கதரிசனமான வசனமும் நிறைவேற ஆரம்பித்தது.
இப்படியாக சீலையை குறித்த தேவ வெளிப்பாடுகளும், விளக்கங்களும் ஏராளமாக இருந்தாலும், ஏரேமியா என்கிறதீர்க் -கதரிசியை காப்பாற்றினதே. இந்த சீலைதான் என்று வேதம் சொல்கின்றது (ஏரே 38:11). அப்படியானால் இந்த செய்தியை பொறுமையோடும், கவனமாகவும் படிக்கின்றஉங்களை தேவன் தம்முடைய சீலை என்னும் கிருபையை அனுப்பி காப்பாற்றுவார். சத்தியத்துக்காக, சத்தியத்துக்குள்ளாக சகல கட்டுப்பாடோடும் வாழ உதவி செய்வார்.
மு.கு: 1தீமோ 5:10 கால்களை கழுவி சீலையினால் துடைப்பது:
a) உபத்திரவத்தில் உதவி செய்வதற்கு சமம்
b) நற்கிரியைகளை செய்வதற்கு சமம்
c) ஜாக்கிரதையாய் இருப்பதற்கு சமம்
d) நற்சாட்சி பெற்றதற்கு சமம்
g.யோவா 20:7 இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை:
உ.ம்: யோவா 20:7முன்பு தலையில்
சுற்றியிருந்த சீலை,பின்பு சுருட்டி
வைக்கப்பட்டிருந்தது
வி.ம்: 1சாமு 21:9 சுருட்டி வைக்கப்படுதல் (எ) பாதுகாக்கப்படுதல் ஆகும்
எ.கா: லூக் 4:20 முன்பு புஸ்தகத்தை இயேசு சுருட்டினார். இப்போது அவருடைய சீலை சுற்றப்பட்டிருக்கிறது
யோவா 13:5 தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக் -கவும் தொடங்கினார்.
h. சீலை என்றால் என்ன?
யோவா 11:44 பிரேதத்தைக் கட்டக்கூடியதுதான் சீலை
அப்படியானால் சீலை என்பது மரணத்தைக் குறிக்கின்றது)
இயேசுவின் நாட்களில் சீலை மூன்று முறை தொடர்புடையதாய் வருகிறதை நம்மால் காணமுடியும்.
1. லூக் 19:20-26 பத்து இராத்தல் வாங்கினவன். அதை சீலையில் கட்டி வைத்திருந்தான். [இது சோம்பேறித்தனம்)
2. யோவா 13:4,5 இயேசு சீலையினால் சீஷர்களின்
கால்களை துடைத்தார்.
(இது தாழ்மை)
3. யோவா 19:40
இயேசுவை கல்லறையில் வைக்கும்போது
மு.வ: யோவா 11:44 இயேசு அவர்களைக் நோக்கி; இவனைக்
(இது பரிசுத்த மரணத்தைக் குறிக்கும்) கட்டவிழ்த்து விடுங்கள் என்றார்.
i. நிழலாட்டமாய் சொல்லப்பட்டுள்ள சில சீலைகள்:
1. யாத் 26:31 விசித்திர வேலையாள் செய்யப்பட்ட சீலை
2. யாத் 26:33 தொங்கவிட்ட சீலை
3. யாத் 36:35 பிரிவை உண்டாக்கும் சீலை
4. ஏசா 50:3 கேருபீன்களுள்ள சீலை
5. மத் 27:51 தேவாலயத்தின் சீலை
6.மாற் 15:38 கிழிந்துபோன சீலை
7. லூக் 19:20 ராத்தல் வைத்திருந்த சிலை
8. யோவா 11:44 பிரேத சீலை
9. யோவா 13:4 அரையில் (இடுப்பில்) கட்டிய சீலை
10.யோவா 13:5 கால்களைத் துடைத்த சீலை
11. யோவா 19:40 சுகந்தவர்க்கங்களுடன் இருந்த சீலை
12. யோவா 20:7 சுருட்டி வைத்திருந்த சீலை
சிலுவையில் மரித்தவர்கள்
சிலுவையில் மரித்தவர் இயேசு மட்டும் தான் என்று சொல்கிற -வர்கள் உண்டு. இரண்டு கள்ளர்களையும் சேர்த்து மூன்று பேர் சிலுவிைல் மரித்தார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் ஒன்பது விதமான மனிதர்கள் சிலுவையில் அறையுண்டு மரித்துள்ளனர். இதையும் வேதம்தான் சொல்கின்றது.
ஒன்று: தீர்க்கதரிசிகள்:
மத் 23:34 தீர்க்கதரிசிகளை சிலுவையில் அறைந்தனர். அத -னால் உண்டான விளைவு என்ன தெரியுமா? யாரெல்லாம் தீர்க் -கதரிசிகளை சிலுவையில் அறைந்தார்களோ அவர்களின் வீடுகள் அனைத்தும பாழாய் போயின (மத்23:31,38). இதை சுத்தமான மொழியில சொல்ல வேண்டுமானால், அவர்களின் வீடுகள் அனைத்தும் நாசமாய் போனது என்பதாகும். தீர்க்கதரி -சிகளிடம் கவனமாய் இருங்கள்.
இரண்டு: ஞானிகள்:
மத் 23:34 ஞானிகளை சிலுவையில் அறைந்தனர். ஞானி -களை சிலுவைக்கு ஏன் தேவன் ஒப்புக் கொடுத்தார் என்று எண்ணலாம். அதற்கும் உண்மையானக் காரணம் உண்டு. ஞானி -களின் ஞானத்தை பைத்தியமாக்கவும், தர்க்க சாஸ்திரங்களை அழிக்கவும், அவர்களை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தார் (Iகொரி1:19,20). அந்நாட்களில் வாழ்ந்த ஞானிகளில் சிலர் தங்களுடைய ஞானத்தினால் தேவனுடைய வல்லமையை மறைக்கவும் முயற்ச்சித்தனர். அதனால், அவர்களை தேவனே தண்டனைக்கு ஒப்புக் கொடுத்தார்.
மூன்று: வேதபாரகர்கள்:
மத்23:34 வேதபாரகர்களை (வேத பண்டிதர்களை) சிலுவையில் அறைந்தனர். காரணம் என்ன தெரியுமா? வேதபாரகர்கள் மோசேயின் ஆசனத்தில் உட்காரப் பார்த்தார்கள் (மத்23:2ற்ர்7). வேதபாரகர்களும், வேத பண்டிதர்களும் பல நேரங்களில் தவறானதைத்தான் செய்தார்கள். மோசேயின் ஆசனத்தில் போய் உட்காரலாமா? கூடாது. காரணம் மோசே பரிசுத்தவான், நீதிமான், தேவனோடு கூட சஞ்சரித்தவன். பண்டிதர்கள் மனை -வியை தள்ளி விடவும், அழகான பெண்களை தெரிந்ததெடுக் -கவும் ஆலோசனை கொடுத்தனர் (எஸ்1:14,15). இப்படி பல வரலாற்று தவறுகளை செய்தபடியினால் அவர்களை சிலுவை -யில் அறைய தேவன் ஒப்புக் கொடுத்தார். இந்த சம்பவத்தை இன்னொரு முறையிலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது: வேதபாரகர்களை சிலுவையில் அறைந்ததால், மரித்த வேதபார -கர்கள் மோசேயின் ஆசனத்தில் போய் உட்கார்ந்தனர்.
நான்கு: வலது புறத்துக் கள்ளன்:
மத்27:38 வலது புறத்துக் கள்ளனை சிலுவையில் அறைந்தனர்.
அதனால் அவனுக்கு இரண்டு பெரிய பலன்கள் கிடைத்தன (மத்25:34).
1) பிதாவின் ஆசீர்வாதம் கிடைத்தது.
2) ராஜ்யத்தையும் சுதந்தரித்து கொண்டான்.
இந்த இரண்டு ஆசீர்வாதங்களும் வலது புறத்தில் உள்ளவர்களுக்கான பிரத்தியேக ஆசீர்வாதங்கள்.
ஐந்து: இடது புறத்துக் கள்ளன்:
மத் 27:38 இடது புறக் கள்ளன் சிலுவையில் அறையப்பட்டான். சிலுவையில் அறையப்பட்ட இந்த இடது புறத்துக் கள்ளன் முக்கி -யமான மூன்று வார்த்தைகளை இயேசுவுக்கு எதிராகச் சொன் னான் (லூக்23:39).
1) நீ கிறிஸ்துவானால்
2) இரட்ச்சித்துக் கொள்
3) இகழ்ந்தான்.
அவன் சொன்ன மூன்று வார்த்தைக்கு தக்கபடி மூன்று தண்டனை அவனுக்குக் கிடைத்தது (மத்25:41).
1) சாபம்
2) பிசாசு
3) நித்திய அக்கினி.
எவ்வளவு பெரிய தண்ட -னை பார்த்தீர்களா?
வலதுபுறத்து, இடதுபுறத்து கள்ளன்கள் இரண்டு பேரையும் சிலுவையில் அறையவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் கைகளையும், கால்களையும் சிலுவையோடு சேர்த்துக் கட்டினார் -கள் என்றும் சில வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு பேரும் பெரிய குற்றவாளிகள் ஒன்றும் கிடையாது. வெறும் திருடர்கள்தான். அதனால்தான் வேதத்தில் கூட கள்ளன் என்று சொல்லப்பட்டுள்ளதாக விவரிக்கின்றனர். எது எப்படியோ! இரண்டு பேரும் இரண்டு பக்ககத்தில் சிலுவையில் அறையப்பட்ட -னர் (மாற்15:27) என்று தான் வேதம் சொல்கிறது. வேதம் சொல்வதுதான் நமக்கு முக்கியம்.
ஆறு: இயேசு:
மத்27:35 இயேசுவை சிலுவையில் அறைந்தனர். இயேசுவின் சிலுவை கீழ் பகுதியைத் தவிர மற்ற மூன்று பகுதியும் மூன்று திசைகளை நோக்கி இருந்தது. அதே போல மாலை மூன்று மணி வரைதான் இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந் -தார். கன்னிமரியாள், கிலெயொப்பா மரியாள், மகதலேனா மரியாள் ஆகிய மூன்று மரியாள்கள் சிலுவைக்கு அருகில் நின் -றிருந்தனர். சேவகன், நூற்றுக்கு அதிபதி, அன்பின் யோவான் என்னும் மூன்று ஆண்கள் சிலுவை அருகே இருந்தார்கள். இயேசுவுக்கு காடி மூன்று முறைகொடுக்கப்பட்டது. இயேசு சிலு -வையில் சொன்ன மிக மிக முக்கியமானது வார்த்தைகள் மூன்று அடங்கியது: பிதாவே, இவர்களை மன்னியும். இயற்கை -யில் மூன்று சம்பவம் நடந்தது. பூமி அதிர்ந்தது. கன்மலைக -ளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது.
இவைகள் அனைத்தும் மூன்று மூன்றாக நிகழ என்ன காரணம் தெரியுமா? உங்களுடைய கடந்தகாலம், நிகழ்காலம். வருங்காலம் என்னும் முக்கால பாவங்களையும் மன்னிக்கத்தான்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபடியினால் மிக முக்கியமான மூன்று மாற்றங்கள் நம்முடைய சரீரத்தில் நடைபெறுகின்றது [IIகொரி13:4).
1) நம்முடைய பெலவீனங்கள் மறைகிறது
2) நமக்கும் கிறிஸ்து -வின் வல்லமை விளங்குகிறது
3) நாம் ஆவியில் பிழைத்தும் இருக்கின்றோம்.
இப்படிப்பட்ட வித்தியாசமான கிருபையுள்ள மாற் -றங்களை சிலுவையின் மூலம் நமக்கு தந்த தேவனை நாம் துதிக்க வேண்டும்.
ஏழு: பவுல்:
கலா 2:20 கிறிஸ்துவுடனே கூட பவுல் சிலுவையில் அறையப் -பட்டார். அதனால் அவருக்கு உண்டான விளைவு என்னத் தெரியுமா? மாம்சம், ஆசை, இச்சை மூன்றையும் முற்றிலுமாக ஜெயித்தார் (கலா5:24,25). அதனால் ஆவியினால் பிழைத்து, ஆவியனால் நடக்கிற மகா உன்னதமான நிலைமைக்கு உயர்த்தப் -பட்டார். உயிரோடு இருக்கும் போதே தன்னை இயேசுவோடு கூட சிலுவையில் அறைந்துக் கொண்டேன் என்று பவுல் சொல்கின்ற -வார்த்தையைப் பாருங்கள். நான் அநுதினமும் சாகிறேன்.
அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் சொல்லு -கிறேன் (கொரி15:31). இதை போல தைரியமாக, பகிரங்கமாக உங்களால் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ரோம 6:6 பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட்டான் கலா 5:24 "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக் -கிறார்கள்."
எட்டு: பழைய மனுஷன்:
ரோம 6:6 நம்முடைய பழைய மனுஷனும் சிலுவையில் அறை -யப்பட்டான். ஏன்? இரண்டு காரணங்களுக்காக பழைய மனுஷ -ன் சிலுவையிலறையப்பட்டான்.
ஒன்று: நாம் பாவத்தில் ஊழியம் செய்யாத படிக்கு (ரோம 6:6). பிலிப்புவினால் இரட்சிப்புக்குள் நடத்தப்பட்டு, பிலிப்பு செய்த ஊழி -யங்களை கவணித்துக் கொண்டிருந்த சீமோன் [அப் 8:13,9). பின் நாட்களில் அவன் பணத்தினால் பேதுருவையும், தேவ -னுடைய வல்லமையையும் ஏமாற்றப் பாத்தான் (அப் 8:20-23). இப்படிப்பட்ட பாவத்தோடு நாம் ஊழியம் செய்யாதபடிக்கு சிலுவை -யில் அறையப்பட வேண்டும்.
இரண்டு: பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக (ரோம 6:6]. பாவசரீரம் என்றால், மாம்சீகத்தின் பாவங்களாகும் (கொலோ 2:11). சிம்சோன் தன்னுடைய பாவசரீர இச்சைகளை விடாதபடியினால் அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டது. விலங்கி -டப்பட்டான். மாவு அறைக்கும் அடிமையாக மாறினான் (நியா 16:21].சிம்சோனைப் போல நாமும் ஆகிவிடாதபடிக்கு நம்முடைய பாவ சரீரங்களை சிலுவையில் அறைய ஒப்புக் -கொடுத்தால், கிறிஸ்து இயேசுவோடு கூட நித்தியகாலமாக நிலைத்திருப்பாம்.
ஒன்பது: கிறிஸ்துவினுடையவர்கள்:
கலா 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் என்றால் மாம்சம், ஆசை இச்சை மூன்றையும் சிலுவையில் அறைந்தவர்கள்தான் கிறிஸ்துவினுடையவர்கள்.
யோசேப்பு தன் சரீரத்தை அறைந்தது போல் வாழ்ந்தான். அதனால் அவனால், மாம்சீக பாவத்தை செய்ய முடியவில்லை (ஆதி 39:10). அதனால் அவன் தேசம் முழுவதற்கும் உயர்த்தப் -பட்டான் (ஆதி 41:41,42).
பார்வோனும் அவன் சேனையும், தங்கள் ஆசையை அடக்கத் தெரியாமல், மோசேயையும், இஸரவேல் ஜனங்களையும் கொல் -லும் ஆசையோடு பின் தொடர்ந்து விரட்டினான் (யாத் 15:9,10). அவர்களின் ஆசையே அவர்களை சமுத்திரத்தில் தள்ளி கொண் -றுப்போட்டது. ஆதலால் நாம் ஆசையை வெறுப்போம். கிறிஸ்து -வை நேசிப்போம்.
இஸ்ரவேல் ஜனங்கள் இச்சையுள்ளவர்களாகி, பூண்டுக்காகவும் கீரைக்காகவும் முறுமுறுத்தனர் (எண் 11:4,5). ஆதலால், அவர்க -ளின் இச்சையே, அவர்களை குறைந்து போகப்பண்ணினது. ஆதலால், நாம் நம்முடைய மாம்சம், ஆசை, இச்சைகளை சிலு -வையில் அறைவோம். நாமும் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற உயிருள்ள சாட்சியை பெறுவோம்.
