19 அதிகாரம்
சோதோம் அழிந்துபோகிறது. லோத்து சோதோமின் அழிவிலிருந்து தப்பிக்கிறார். சோதோம் கொமோரோவின் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்திலே பெரிதாயிருக்கிறது. அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருக்கிறது. அதைப் பார்த்து அறிவதற்காக கர்த்தர் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார்.
கர்த்தருடைய தூதர் இரண்டுபேரும் சோதோமுக்கு வருகிறார்கள். லோத்து நீதிமானாகயிருக்கிறார் (ஆதி 19:1#3). சோதோம் பட்டணத்திலே லோத்தைப்போன்ற நீதிமான் வேறு ஒருவருமில்லை.
சோதோமின் மனுஷர் துன்மார்க்கராயிருக்கிறார்கள். அவர்களுடைய பாவத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது (ஆதி 19:4#11).
கர்த்தருடைய தூதர்கள் சோதோமை அழிக்கப்போகிறார்கள். லோத்தும், அவருடைய குடும்பத்தாரும் சோதோமின் அழிவுக்கு தப்பிக்க வேண்டும் என்று அந்தப் புருஷர் விரும்புகிறார்கள். அவர்கள் லோத்தையும், அவருடைய குடும்பத்தாரையும் கையைப்பிடித்து சோதோம் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய்விடுகிறார்கள் (ஆதி 19:12#23).
கர்த்தருடைய நீதியினால் சோதோம் அழிந்துபோகிறது. லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆகிறாள் (ஆதி 19:24#26). சோதோம் கொமோரோ அழிந்துபோனதை ஆபிரகாம் பார்க்கிறார் (ஆதி 19:27#29).
லோத்தும், அவருடைய இரண்டு குமாரத்திகளும் பாவம் செய்கிறார்கள் (ஆதி 19:30#38).
லோத்தும் இரண்டு தூதரும்
ஆதி 19:1#3
ஆதி 19:1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாச-லே உட்கார்ந்திருந்தான். அவர்களை கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரை மட்டும் குனிந்து:
ஆதி 19:2. ஆண்டவன்மார்களே அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களை கழுவி, இராத்தங்கி காலையில் எழுந்து பிரயாணப்பட்டு போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
ஆதி 19:3. அவன் அவர்களை மிகவும் வருத்தி கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்கு திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களை சுட்டு. அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
சோதோம் பட்டணத்திலே லோத்து மாத்திரமே நீதிமானாயிருக்கிறார். பரலோகத்திலிருந்து சோதோமுக்கு வந்திருக்கிற இரண்டு தூதரும், நீதிமானாகிய லோத்தை அடையாளம் காண்கிறார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்.
சோதோம் பட்டணத்தில் ஏராளமான மனுஷர் இருந்தாலும் லோத்துக்கும் அவர்களுக்கும் ஏராளமான வித்தியாசமுள்ளது. சோதோமின் ஜனங்கள் எல்லோரும் மகாபாவிகளாயிருக்கிறார்கள். லோத்தோ கர்த்தருக்கு பயந்த நீதிமானாயிருக்கிறார். லோத்து சோதோமின் மனுஷரைப்போல துன்மார்க்கம் பண்ணவில்லை.
சாயங்கால வேளையிலே லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அவர் விருந்தினரை உபசரிக்கிற நல்ல சுபாவமுள்ளவர். கர்த்தருடைய தூதர்கள் இரண்டுபேரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வருகிறார்கள்; லோத்து அவர்களை கண்டு, எழுந்து எதிர்கொண்டு தரை மட்டும் குனிந்து: ""ஆண்டவன்மார்களே அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களை கழுவி, இராத்தங்கி காலையில் எழுந்து பிரயாணப்பட்டு போகலாம்'' என்று சொல்லுகிறார் (ஆதி 19:1,2).
லோத்து சமபூமியை தெரிந்தெடுத்தார். (ஆதி 13:10-13) அதன் பின்பு லோத்தைப் பற்றி இந்த வசனத்தில்தான் கூறப்பட்டிருக்கிறது. சோதோமின் வாசல் என்பது கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பொதுவான இடம். பிரதானிகள் இந்த இடத்தில்தான் நியாயம் விசாரிப்பார்கள். சோதோம் பட்டணத்திற்கு இரண்டு தூதரும் வருவதை லோத்து பார்க்கிறார். விருந்தினரை உபசரிக்கும் பண்பின் பிரகாரம் லோத்து அவர்களுடைய தேவையைச் சந்திக்க விரும்புகிறார்.
லோத்து அந்நியரை உபசரிக்கும் சுபாவமுள்ளவர். அவர் இரண்டு தூதரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார். லோத்து தன்னுடைய வீட்டிலே அவர்களுக்கு தங்குவதற்கு இடங்கொடுப்பார். அவர்களுக்கு புசிக்க போஜனம் கொடுப்பார். லோத்து அந்நியரை உண்மையாய் உபசரிக்கிறார் என்பதற்கு, அவருடைய வார்த்தைகளே அடையாளமாயிருக்கிறது.
ஆனால் இரண்டு தூதர்களும் லோத்தை நோக்கி, "" அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம்'' என்று சொல்லி, லோத்தின் அழைப்பை ஏற்க மறுக்கிறார்கள். லோத்தோ அவர்களை மிகவும் வருத்தி கேட்டுக்கொள்கிறார்; அப்பொழுது அவர்கள் அவரிடத்திற்கு திரும்பி, அவர் வீட்டிலே பிரவேசிக்கிறார்கள். லோத்து புளிப்பில்லா அப்பங்களை சுட்டு. அவர்களுக்கு விருந்துபண்ணுகிறார். அவர்கள் புசிக்கிறாôர்கள் (ஆதி 19:3).
அந்தப் புருஷர்கள், ""வீதியிலே இராத்தங்குவோம்'' என்று சொல்லுகிறார்கள். கிழக்கு தேசங்களில் கோடைகாலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இரவு வேளையில் வீட்டிற்குள் தங்குவதும் கடினமாக இருக்கும். இதனால் இரவின் குளிர்ச்சியில் ஜனங்கள் வீட்டிற்கு வெளியே வீதியில் தங்க விரும்புவார்கள்.
லோத்து அவர்களுக்கு விருந்துபண்ணுகிறார். ஏற்கெனவே அவர்கள் ஆபிரகாம் கொடுத்த போஜனத்தைப் புசித்தார்கள். இப்போது அவர்கள் இரண்டாம் முறையாகப் புசிக்கிறார்கள் (ஆதி 18:8).
லோத்து இரண்டு தூதரையும் அன்பாய் உபசரிக்கிறார். நற்குணமுள்ளவர்கள் உதாரத்துவ குணமுள்ளவர்களாயிருப்பார்கள். லோத்து இரண்டு தூதருக்கும் புளிப்பில்லாத அப்பங்களை சுட்டு விருந்துபண்ணியதுபோல, நாமும் நம்முடைய விருந்தினர்களை கனம்பண்ணி உபசரிக்கவேண்டும். விருந்தினர்களுக்கு ஒரு குறையும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
சோதோம் பட்டணத்து மனுஷர்
ஆதி 19:4#11
ஆதி 19:4. அவர்கள் படுக்கும்முன்னே சோதோம் பட்டணத்து மனிதராகிய வா-பர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
ஆதி 19:5. லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.
ஆதி 19:6. அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
ஆதி 19:7. சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
ஆதி 19:8. இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழ-லே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
ஆதி 19:9. அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்- லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
ஆதி 19:10. அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
ஆதி 19:11. தெருவாச--ருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம்பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
கர்த்தருடைய சமுகத்திலே சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருக்கிறது. தம்மிடத்தில் வந்து எட்டின அந்தக் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ, இல்லையோ என்று பார்த்து அறிவதற்காக, கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். மெய்யாகவே சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருக்கிறது அவைகளின் பாவம் மிகவும் கொடியதாயிருக்கிறது.
சோதோம் பட்டணத்திலிருக்கிற மனுஷர் எல்லோருமே துன்மார்க்கராயிருக்கிறார்கள். அந்தப் பட்டணத்து மனுஷராகிய வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் பாவிகளாயிருக்கிறார்கள்.
""சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகாபாவிகளுமாய் இருந்தார்கள்'' (ஆதி 13:13).
சோதோமின் மனுஷர் ஆண்புணர்ச்சிக்காரராயிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய பிரதான பாவம். இது இயற்கையான சுபாவத்திற்கு விரோதமான காமவிகாரப்பாவம். சோதோமியரின் ஆண்புணர்ச்சியைக் குறிப்பதற்கு, ஆங்கிலத்தில் ""சோடோமி'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பட்டணத்து மனுஷரின் பெயரே, ஆண்புணர்ச்சி என்றும் பாவத்திற்கு பெயராயிற்று.
சோதோமின் மனுஷர் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். அவர்கள் பாவத்தை விரும்பி அதை ஆசையாய்ச் செய்கிறார்கள். தங்கள் பாவத்திற்கு மனந்திரும்பவேண்டும் என்னும் விருப்பம் அவர்களுடைய மனதில் இல்லை. பாவத்தை ஆசையாய்ச் செய்கிறவர்கள், தங்கள் பாவத்திற்கு ஒரு போதும் மனந்திரும்பமாட்டார்கள். அவர்களுடைய பாவமே அவர்களுடைய அழிவுக்கு காரணமாயிருக்கும்.
துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்களின் இருதயம் கடினமாயிருக்கும். அவர்களுடைய கைகளும் பாவம் செய்ய தீவிரிக்கும்.
""அவர்கள் அவருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (எரே 6:15).
சோதோம் பட்டணத்திற்கு வந்த இரண்டு புருஷருக்கும் லோத்து தன்னுடைய வீட்டிலே விருந்து பண்ணுகிறார். அவர்கள் அங்கே புசிக்கிறார்கள். தன்னுடைய விருந்தினர்கள் இருவரும், தன்னுடைய வீட்டிலேயே படுத்து இளைப்பாறுவதற்கு லோத்து ஆயத்தம்பண்ணுகிறார்.
அவர்கள் படுக்கும்முன்னே சோதோம் பட்டணத்து மனிதராகிய வா-பர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொள்கிறார்கள் (ஆதி 19:4).
கிழக்கு தேசத்து பட்டணங்களில் ஒவ்வொரு இனத்தாரும் வசிப்பதற்கு தனித்தனியான வீதிகள் இருக்கும். அவர்கள் ஜாதிகள் அடிப்படையிலோ அல்லது தொழில் அடிப்படையிலோ பிரிந்து ஜீவிப்பார்கள். நான்கு திசைகள் என்பது நான்கு குடியிருப்பு பகுதிகள் என்று பொருள்படும். (ஏசா 47:15; ஏசா 56:11; எரே 37:21).
சோதோமின் பட்டணத்து மனுஷர் லோத்தைக் கூப்பிட்டு: ""இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா'' (ஆதி 19:5) என்று சொல்லுகிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்புணர்ச்சி தடைபண்ணப்பட்டிருக்கிறது. (யாத் 22:19; லேவி 18:22; லேவி 20:13; உபா 23:17; 1கொரி 6:9-10; 1தீமோ 1:10; ஏசா 1:9; ஏசா 3:9; நியா 19:22; நியா 20:13; ரோமர் 1:18-32).
தன்னுடைய வீட்டை சூழ்ந்துகொண்ட மனுஷருக்கு, லோத்து மென்மையான பிரதியுத்தரம் சொல்லுகிறார். தன் வீட்டில் வந்து விருந்தினராக தங்கியிருக்கிற இரண்டு புருஷருக்காகவும் லோத்து பரிந்து பேசுகிறார். ஆனால் லோத்தின் வீட்டை சூழ்ந்துகொண்ட சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள் எல்லோரும், ஆண்புணர்ச்சிக்காரராயும், துன்மார்க்கராயும், துணிகரமாய்ப் பாவம் செய்ய ஆர்வமுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.
சோதோம் பட்டணத்து மனுஷர் லோத்தின் வீட்டை சூழ்ந்துகொண்டபோது, லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய் பேசுகிறார் (ஆதி 19:6).
லோத்து, சோதோம் பட்டணத்து மனுஷரை நோக்கி, ""சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழ-லே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம்'' (ஆதி 19:7,8) என்று சொல்லுகிறார்.
சோதோம் பட்டணத்து மனுஷரின் காமவெறியை தணிப்பதற்கு லோத்து அவர்களோடு பேசிப் பார்க்கிறார். சமாதான வார்தைகளை சொல்லிப் பார்க்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் ஆண்புணர்ச்சிக்காரராயிருக்கிறார்கள். லோத்தின் வீட்டில் வந்திருக்கிற இரண்டு மனுஷரையும் அறியும்படிக்கு, அவர்களை தங்களிடத்தில் கொண்டுவரவேண்டுமென்று சோதோம் பட்டணத்து மனுஷர் பிடிவாதமாக சொல்லுகிறார்கள்.
சோதோம் பட்டணத்து மனுஷரை அமைதிப்படுத்துவதற்காக, லோத்து ஒரு பாவமான யோசனையையும் சொல்லுகிறார். புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் லோத்துக்கு இருக்கிறார்கள். லோத்து அவர்கள் இருவரையும் சோதோம் பட்டணத்து மனுஷரிடம் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். லோத்து இவ்வாறு பேசுவதே மிகப்பெரிய பாவம். ஆனாலும் தன்னுடைய கூரையின் நிழலில் வந்த இரண்டு புருஷருக்கும் ஒரு தீங்கும் நேரிடக்கூடாது என்று லோத்து விரும்புகிறார்.
விருந்தினரைப் பாதுகாக்க வேண்டியது விருந்து உபசரிப்பவர்களுடைய கடமை. ஆனால் லோத்து இவ்வாறு கூறுவது சோதோம் ஜனத்தார் செய்யும் பாவத்தைவிட பெரிய பாவமாகும்.
சோதோம் பட்டணத்து மனுஷர் லோத்தின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கிற இரண்டு மனுஷருக்கு தீங்கு செய்ய கூடிவந்திருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய விருந்தினருக்கு தீங்கு செய்வதைவிட, தன்னுடைய இரண்டு குமாரத்திகளுக்கும் தீங்கு செய்யட்டும் என்று லோத்து நினைக்கிறார்.
சோதோம் பட்டணத்து மனுஷர் செய்யப்போகிற இரண்டு தீங்குகளில், அவர்கள் தன்னுடைய குமாரத்திகளுக்கு செய்யப்போகிற தீங்கு லோத்துக்கு சிறிய தீங்காக தெரிகிறது. லோத்து தீங்கை சிறிய தீங்கு, பெரிய தீங்கு என்று வேறுபிரித்தாலும், பாவத்தை சிறிய பாவம், பெரிய பாவம் என்று வேறுபிரிக்க முடியாது. பாவம் பாவமாகவே இருக்கும். பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்திலே பெரிய மரணம், சிறிய மரணம் என்று வித்தியாசமில்லை.
லோத்து தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிற இரண்டு புருஷருக்கும் தீங்கு வரக்கூடாது என்று நினைத்து, தன்னுடைய குமாரத்திகளுக்கு தீங்கு வர அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். நன்மை வரும் என்று நினைத்து நாம் பாவம் செய்யக்கூடாது.
லோத்து தன்னுடைய இரண்டு குமாரத்திகளையும், சோதோம் பட்டணத்து மனுஷரிடத்தில் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் அந்த மனுஷரோ லோத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
சோதோம் பட்டணத்து மனுஷர் லோத்தைப் பார்த்து, ""அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம்'' (ஆதி 19:9) என்று சொல்லுகிறார்கள். அவர்கள் லோத்தை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டுகிறார்கள்.
இரண்டு தூதர்களை வெளியே அனுப்பாவிட்டால், அவர்கள் லோத்திடம் ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவதாக எச்சரிக்கிறார்கள்.
சோதோம் பட்டணத்து மனுஷர் திரளான எண்ணிக்கையில் லோத்தின் வீட்டை சூழ்ந்துகொள்கிறார்கள். லோத்தோ தனிமனிதனாக, தன்னுடைய வீட்டின் கதவைப் பூட்டி அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் லோத்தின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். லோத்தால் தனக்கு முன்னால் நிற்கிற திரளான துன்மார்க்கருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கவும் முடியவில்லை.
லோத்து தன் வீட்டில் தங்கியிருக்கிற தேவதூதருக்காக சோதோம் பட்டணத்து மனுஷரிடம் பரிந்துபேசுகிறார். ஆனாலும் லோத்தால் அந்த இரண்டு புருஷரையும் சோதோமின் மனுஷருடைய கைகளுக்கு தப்புவிக்கமுடியவில்லை. லோத்தால் தன்னைக்கூட அவர்களுடைய கைகளுக்கு தப்புவிக்க முடியவில்லை. அவர்கள் லோத்தை மிகவும் நெருக்குகிறார்கள். அவருடைய வீட்டின் கதவை உடைக்க கிட்டி நெருங்கி வருகிறார்கள். இப்போது லோத்துக்கு தெய்வீக உதவி தேவைப்படுகிறது.
லோத்தின் வீட்டிற்குள்ளே இருக்கிற தேவதூதர்கள் இருவரும், வீட்டிற்கு வெளியே நடைபெறுகிற சம்பவங்களை கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற துன்மார்க்கமான வார்த்தைகளையும் தூதர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது லோத்தின் வீட்டிற்குள்ளே இருக்கிற அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டுகிறார்கள் (ஆதி 19:10).
தூதர்கள் ஆவியாக இருக்கிறார்கள். (சங் 104:4, எபி 1:13-14) அவர்களுக்கு ஆவிக்குரிய சரீரம் உண்டு. ஆகையினால் அவர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி லோத்தை வீட்டுக்குள் இழுத்துக் கொள்கிறார்கள். தேவனும் ஆவியாக இருக்கிறார். அவருக்கும் ஆவிக்குரிய சரீரம் உண்டு. (யோவான் 4:24).
தேவதூதர்கள் இருவரும் தெருவாச--ருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணுகிறார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போகிறார்கள் (ஆதி 19:11).
லோத்து தன்னுடைய வீட்டிலே தேவதூதருக்கு விருந்துபண்ணுகிறார். அவர்கள் தங்குவதற்கு இடங்கொடுக்கிறார். இப்போது லோத்து ஆபத்திலிருக்கிறார். லோத்தின் வீட்டில் தங்கியிருக்கிற தேவதூதர்கள் இரண்டுபேரும், லோத்தை சோதோம் பட்டணத்து மனுஷருடைய கைகளுக்கு தப்புவிக்கிறார்கள். அவர்கள் லோத்தை வீட்டிற்குள்ளே இழுத்து கதவைப் பூட்டி விடுகிறார்கள்.
லோத்து இப்போது தன்னுடைய வீட்டிற்குள்ளே இருக்கிறார். அவருடைய வீட்டின் கதவு தேவதூதரால் பூட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு லோத்து, தன்னுடைய வீட்டிலிருக்கிற விருந்தினரை உள்ளே வைத்து, தன்னுடைய வீட்டின் கதவைப் பூட்டி வெளியே போனார். ஆனால் லோத்தால் தன்னையோ, தன்னுடைய வீட்டிலுள்ளவர்களையோ பாதுகாக்க முடியவில்லை. இப்போது தேவதூதர்கள் லோத்துடைய வீட்டின் கதவைப் பூட்டுகிறார்கள். அவருடைய வீட்டிற்குள்ளே வெளியே கூட்டமாய் நிற்கிற சோதோம் பட்டணத்து மனுஷர் யாரும் பிரவேசிக்க முடியவில்லை.
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை மரணத்தினால் பாதுகாக்கிறார். பரிசுத்தவான்கள் இந்த உலகத்தில் வேதனைகளையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கும்போது, கர்த்தர் தம்முடைய தெய்வீக கரத்தை நீட்டி, தம்முடைய பரிசுத்தவான்களை மரணத்திற்குள்ளாக அழைத்து வந்து, மரணவாசலின் கதவைப் பூட்டி விடுகிறார். பரிசுத்தவான்கள் மரித்த பின்பு, அவர்களை எந்த சத்துருவாலும் சரீரப்பிரகாரமாக துன்பப்படுத்தவோ, உபத்திரவப்படுத்தவோ முடியாது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மரித்த பின்பு, தீங்குகளுக்கு விலகி பாதுகாப்பாயிருப்பார்கள்.
லோத்தின் வீட்டை சூழ்ந்துகொண்டு வெளியே நிற்கிற சோதோம் பட்டணத்து மனுஷர் எல்லோரும் ஆண்புணர்ச்சிக்காரராயிருக்கிறார்கள். அவர்களில் வாலிபர்களும் இருக்கிறார்கள். கிழவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய காமவிகார பாவத்திற்காக, கர்த்தருடைய தூதர்கள் அவர்களைத் தண்டிக்கிறார்கள். அவர்களுக்கு குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணுகிறார்கள். அப்போது தெருவாசலிலிருக்கிற சிறியோரும் பெரியோருமாகிய மனுஷருக்கு குருட்டாட்டம் பிடிக்கிறது. அவர்களால் லோத்துடைய வீட்டின் வாசலை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அதைத் தேடி தேடி அலுத்துப்போகிறார்கள்.
சோதோம் பட்டணத்து மனுஷருக்கு குருட்டாட்டம் பிடித்தாலும், அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. லோத்துடைய வீட்டின் கதவை தேடிக் கண்டுபிடித்து, அதை உடைத்துப்போட்டு, அவருடைய வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவருடைய வீட்டில் தங்கியிருக்கிற இரண்டு புருஷரையும் அறியவேண்டுமென்று பாவவைராக்கியத்தோடிருக்கிறார்கள்.
சோதோம் பட்டணத்து மனுஷர் அலுத்துப்போகும் வரையிலும், லோத்துடைய வீட்டின் வாசலைத் தேடுகிறார்கள். அவர்களுடைய கண்களுக்கு குருட்டாட்டம் பிடித்திருந்தாலும், அவர்கள் தேடுவதை விட்டுவிடவில்லை.
சோதோம் பட்டணத்து மனுஷர் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். இக்காலத்திலும் பாவிகளில் அநேகர் துணிகரமாய்ப் பாவம் செய்து, தங்கள் பாவத்திற்கு மனந்திரும்ப மறுக்கிறார்கள். இவர்கள்மீது எப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பு வந்தாலும், இவர்கள் தங்கள் பாவங்களை விட்டு விலகி வரமாட்டார்கள். இவர்கள் தொடர்ந்து துணிகரமாகப் பாவம் செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தண்டனையும் அனுபவிப்பார்கள். பாவமும் செய்வார்கள். தாங்கள் அலுத்துப்போகும் மட்டும் பாவம் செய்வார்கள்.
சோதோம் மனுஷருடைய சரீரப்பிரகாரமான கண்களில் மாத்திரமே குருட்டாட்டம் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்களுடைய சிந்தையிலோ குருட்டாட்டம் பிடிக்கவில்லை. அவர்கள் காமவிகார வெறியோடிருக்கிறார்கள். கர்த்தர் அவர்களுடைய சரீரங்களை தண்டிப்பதுபோல, சிந்தையையும் தண்டித்தால், அவர்கள் தங்களுடைய தப்பிதங்களை உணருவார்கள்.
எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள், கர்த்தருடைய வல்லமையான கிரியைகளைப் பார்த்து, ""இது தேவனுடைய விரல்'' என்று சொன்னார்கள். கர்த்தருடைய வல்லமைக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினார்கள். பாவிகளும் கர்த்தருடைய வல்லமையை உணரும்போது, அவர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி, கர்த்தரை உயர்த்துவார்கள்.
லோத்தின் வீட்டார்
ஆதி 19:12#14
ஆதி 19:12. பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்தி-ருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ.
ஆதி 19:13. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள.
ஆதி 19:14. அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி; நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
லோத்தின் வீட்டில் தங்கியிருக்கிற இரண்டு புருஷரும், லோத்தையும் அவருடைய வீட்டாரையும் தப்புவிப்பதற்கு ஆயத்தம்பண்ணுகிறார்கள். அவர்கள் லோத்தைப் பார்த்து, ""நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்'' (ஆதி 19:13) என்று சொல்லுகிறார்கள்.
""இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்?'' என்று தூதர்கள் லோத்திடம் கேட்கிறார்கள். தூதர்களின் ஞானம் வரையறைக்குட்பட்டது. தூதர்களுக்கு அனந்த ஞானம் இருந்திருந்தால், லோத்துக்கு குமாரர்கள் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
தேவதூதர்கள் கேட்டதுபோன்று, லோத்திற்கு குமாரர்கள் இருப்பதாக வேதவசனத்தில் குறிப்பு எதுவும் இல்லை. ஒருவேளை குமாரர்கள் இருந்திருந்தால், அவர்கள் சோதோமிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணியிருப்பார்கள். சோதோம் பட்டணத்தின் மற்ற புருஷரைப்போலவே அவர்களும் ஆண்புணர்ச்சிக்காரர்களாக இருந்திருப்பார்கள். லோத்தின் மருமக்கள் சோதோமிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறார்கள். (ஆதி 19:14).
லோத்துடைய மகள்களுக்கும் இவர்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. திருமண நிச்சயம் மட்டுமே நடைபெற்றிருக்கிறது. தன்னுடைய குமாரத்திகள் புருஷரை அறியாத ஸ்திரீகள் என்று லோத்து அவர்களைப் பற்றிக் கூறுகிறார். (ஆதி 19:8)
ஆண்புணர்ச்சிக்காரர்கள் ஸ்திரீகளைத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் ஸ்திரீகளோடு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்கள். ரோமர் 1:27 ஆவது வசனத்தில் கூறியிருக்கிற பிரகாரம் ""அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைவார்கள்''.
லோத்திற்குக் குமாரர்கள் இல்லை. இரண்டு குமாரத்திகள் மட்டுமே இருக்கிறார்கள் (ஆதி 19:30-31,36, 29:26).
சோதோமை அழிப்பதற்காகவே கர்த்தர் இவ்விரண்டு புருஷரையும் அனுப்பியிருக்கிறார். சோதோம் பட்டணத்தாருடைய கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது. கர்த்தர் லோத்தின் மேல் இரக்கம் வைத்திருக்கிறார் (ஆதி 19:16). ஆபிரகாம் சோதோம் பட்டணத்தாருக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபம்பண்ணினார். கர்த்தர் ஆபிரகாமின் ஜெபத்தைக் கேட்டு, லோத்தின்மேல் இரக்கம் வைத்திருக்கிறார்.
லோத்தின் வீட்டில் தங்கியிருக்கிற இரண்டு புருஷரும், லோத்தை நோக்கி, ""இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்தி-ருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ'' (ஆதி 19:12) என்று சொல்லுகிறார்கள்.
லோத்து தன்னுடைய வீட்டாரை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போனால், அவர்களும் அழிவுக்கு தப்பிப்பார்கள். இந்த புருஷர் இருவரும் சோதோம் பட்டணத்தை அழிக்கப்போகிறார்கள்.
கர்த்தருடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கிருபையினால் இரட்சிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுடைய இரட்சிப்புக்கு உதவி செய்யவேண்டும். அதிலும் விசேஷமாக, இரட்சிக்கப்பட்டவர்கள், தங்களுடைய சொந்த குடும்பத்தாரை இரட்சிப்பின் பாதையிலே வழிநடத்தவேண்டும். சோதோம் பட்டணம் அழியும் போது, லோத்து மாத்திரம் அழிவுக்கு தப்பித்தால் போதாது. அவரோடுகூட அவருடைய குடும்பத்தாரும் அழிவுக்கு தப்பிக்கவேண்டும்.
லோத்தின் வீட்டில் தங்கியிருக்கிற இரண்டு புருஷரும், லோத்துக்கு அதிகமான சலுகைகளையும், சிலாக்கியங்களையும் காண்பிக்கிறார்கள், ""இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள், இருந்தால் அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ'' என்று இரண்டு புருஷரும் லோத்திடம் சொல்லுகிறார்கள்.
லோத்தின் உற்றார் உறவினர் ஒருவேளை நீதிமான்களாகயிருக்கலாம். அல்லது நீதியில்லாதவர்களாகயிருக்கலாம். அவர்களுடைய சுபாவம் எப்படிப்பட்டதாகயிருந்தாலும் அவர்களும் இந்த அழிவுக்கு தப்பிக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பமாயிருக்கிறது.
ஒரு சில துன்மார்க்கர் இந்த உலகத்தில் நீதிமான்களுக்கு சொந்தக்காரராயிருப்பார்கள். கர்த்தர் அந்த நீதிமான்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுடைய ஆசீர்வாதம், அவர்களுக்கு சொந்தக்காராயிருக்கிற துன்மார்க்கருக்கும் கடந்து வரும். நாம் பரிசுத்தவான்களோடும், பக்தியுள்ளவர்களோடும் ஐக்கியமாயிருக்கும் போது, நமக்கும் நன்மை உண்டாகும்.
லோத்து தன் வீட்டில் தங்கியிருக்கிற புருஷரின் வார்த்தைக்கு உடனே கீழ்ப்படிகிறார். லோத்தின் வீட்டிலே அவருடைய மனைவியும், குமாரத்திகளும், தன்னுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற மருமக்கள்மாரும் இருக்கிறார்கள்.
லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசுகிறார். லோத்து அவர்களை நோக்கி, ""நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்'' (ஆதி 19:14) என்று சொல்லுகிறார். ஆனால் லோத்துடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு, லோத்து பேசுவது பரியாசம்பண்ணுகிறதாகக் காணப்படுகிறது.
லோத்தின் எச்சரிப்பிற்கு அவருடைய மருமக்கள்மார்கள் செவிகொடுக்கவில்லை. லோத்தைப் பரியாசம் பண்ணுகிறார்கள். கடைசி நாளில், இயேசுகிறிஸ்து வருவார் என்னும் உபதேசத்தையும் இப்படித்தான் பரியாசக்காரர்கள் பரியாசம் பண்ணுவார்கள். (2பேதுரு 3:3-4) வருவேன் என்று சொன்னவர் நிச்சயமாக வருவார்.
லோத்து தன்னுடைய மருமக்கள்மாரை எச்சரிக்கிறார். லோத்து அவர்களை நோக்கி, ""நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்'' என்று சொல்லுகிறார். ஆனால் அவர்களோ லோத்துடைய எச்சரிப்பின் வார்த்தைகளை அசட்டைபண்ணுகிறார்கள்.
லோத்து இரவு முழுவதும், தன்னுடைய வீட்டிற்கு வெளியிலே கூடியிருந்து சோதோம் பட்டணத்து மனுஷரோடு பேசிக்கொண்டிருந்தார். லோத்து அவர்களோடு பேசினதை, அவருடைய மருமக்கள்மாரும் கேட்டிருப்பார்கள். லோத்துக்கு தெளிந்த புத்தியில்லை என்று அவருடைய மருமக்கள்மார் நினைத்திருக்கலாம். ஆகையினால் லோத்துடைய பேச்சுக்கள், அவருடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு, பரியாச வார்த்தைகளாக தெரிகிறது.
லோத்தின் மருமக்கள்மார் சோதோம் பட்டணத்து மனுஷரைப்போலவே இருக்கிறார்கள். அவர்கள் சோதோமியரின் பாவத்திற்கு பங்காளிகளாகயிருக்கிறார்கள். பாவத்திலே மூழ்கிப்போனவர்களுக்கு, பாவத்தைவிட்டு விடுதலைபெறவேண்டும் என்னும் ஆர்வம் இருக்காது. அவர்கள் எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கமாட்டார்கள். தங்களை எச்சரிக்கிறவர்களை பரியாசம் பண்ணுவார்கள். எச்சரிப்பின் வார்த்தைகளை அசட்டைபண்ணுவார்கள்.
பாவிகள் மனந்திரும்பினாலும், மனந்திரும்பாவிட்டாலும், பாவம் தன்னுடைய வேலையை செய்யும். பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் பெருகும்போது, பாவிகள் தங்கள் பாவத்திலே மூழ்கி அழிந்துபோவார்கள்.
உன் ஜீவன் தப்ப ஓடிப்போ
ஆதி 19:15#23
ஆதி 19:15. கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்-, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
ஆதி 19:16. அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
ஆதி 19:17. அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
ஆதி 19:18. அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
ஆதி 19:19. உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரியதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
ஆதி 19:20. அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
ஆதி 19:21. அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்.
ஆதி 19:22. தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்: நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
ஆதி 19:23. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்து.
கர்த்தர் லோத்தை சோதோமின் அழிவுக்கு தப்புவிக்கப்பண்ணுகிறார்.
""அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'' (எசே 14:14).
கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: ""பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ'' என்று சொல்-, அவர்கள் லோத்தைத் துரிதப்படுத்துகிறார்கள் (ஆதி 19:15).
லோத்தின் குமாரத்திகளில் திருமணமானவர்கள், விசுவாசமில்லாத தங்கள் கணவன்மாரோடு மரித்துப்போகிறார்கள். லோத்தோடு கூடயிருக்கிற இரண்டு குமாரத்திகளோ, சோதோம் பட்டணத்தின் அழிவுக்கு, லோத்தோடுகூட தப்பிக்கிறார்கள்.
கர்த்தருடைய தூதர்கள் லோத்தை வீட்டைவிட்டு வெளியேறுமாறு துரிதப்படுத்துகிறார்கள். ஆனால் லோத்தோ உடனே புறப்பட்டுப்போகாமல் தாமதப்படுத்துகிறார். சோதோம் பட்டணத்தின்மீது அழிவு நெருங்கி வந்திருக்கிறது. இது காலதாமதம்பண்ணுகிற நேரமல்ல. சம்பாஷணை பண்ணுவதற்கும் போதிய அவகாசமில்லை.
லோத்து தன் வீட்டைவிட்டு உடனே புறப்பட்டுப்போகவேண்டும். சோதோம் பட்டணம் அழியும்போது, லோத்து அந்தப் பட்டணத்தோடுகூட அழிந்துபோவது கர்த்தருக்கு சித்தமில்லை.
லோத்து தன் வீட்டைவிட்டு உடனே வெளியேறிப்போகாமல், தாமதித்துக் கொண்டிருக்கும்போது, கர்த்தர் லோத்தின்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் லோத்தின் கையையும், அவருடைய மனைவியின் கையையும், அவருடைய இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விடுகிறார்கள் (ஆதி 19:16).
லோத்து தாமதித்துக்கொண்டிருக்கிறார். விசுவாசத்திற்கும், கண்களின் இச்சைக்கும் போராட்டம் வருகிறது. தூதருடைய கட்டளைக்கு லோத்து கீழ்ப்படிய விரும்புகிறார். ஆனாலும் தாமதம் பண்ணுகிறார். தூதர்கள் லோத்தின் கையையும், அவருடைய வீட்டாரின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விடுகிறார்கள்.
பட்டணத்திற்கு வெளியே உள்ள அந்த ஊருக்கு சோவார் (ஆதி 19:22) என்று பெயர். இதன் பழைய பெயர் பேலா (ஆதி 14:2,8) என்பதாகும். லோத்து திரளான ஆஸ்தியோடு ஆபிரகாமை விட்டுப் பிரிந்து சோதோமுக்குப் போனார். இப்பொழுது ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு சோதோமை விட்டு திரும்பி வருகிறார்.
லோத்தை சோதோமின் அழிவுக்கு தப்புவிக்கப் பண்ணவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் தடைபடாது. கர்த்தருடைய தூதர்கள் லோத்தையும், அவருடைய வீட்டாரையும், கையைப் பிடித்து, பலவந்தமாய் வீட்டைவிட்டு வெளியே கொண்டு வருகிறார்கள். தேவதூதர்கள் லோத்தையும், அவருடைய வீட்டாரையும் பயத்தோடே இரட்சிக்கிறார்கள்.
லோத்து இன்னும் கொஞ்சநேரம் தாமதித்துக்கொண்டிருந்தால், சோதோம் பட்டணம் அழியும்போது, லோத்தும் அதோடு சேர்ந்து அழிந்துபோவாரோ என்னும் பயம் கர்த்தருடைய தூதருக்கு உண்டாயிற்று. ஆகையினால் அவர்கள் லோத்தின் கையையும், அவருடைய குடும்பத்தாரின் கையையும் பிடித்து, சோதோம் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய்விடுகிறார்கள்.
""அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியி-ருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்'' (யூதா 22, 23).
லோத்து நீதிமானாகயிருந்தாலும், அவர் கர்த்தருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலுமே இரட்சிக்கப்படுகிறார். நீதிமான்கள் தங்களுடைய சொந்த நீதியினால் இரட்சிக்கப்படுவதில்லை. நாம் எல்லோருமே கர்த்தருடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறோம்.
கர்த்தருடைய தூதர்கள் லோத்தையும், அவருடைய வீட்டாரையும் சோதோம் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய்விடுகிறார்கள். அதன் பின்பு கர்த்தர் லோத்தை நோக்கி, ""உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ'' (ஆதி 19:17) என்று சொல்லுகிறார்.
லோத்து சோதோம் பட்டணத்தை பின்னிட்டுப் பார்க்கக்கூடாது. அவர் இந்த சமபூமியில் எங்கும் நிற்கவும் கூடாது. லோத்து அழிந்துபோகக்கூடாது என்றால் அவர் மலைக்கு ஓடிப்போகவேண்டும். அந்த மலையே லோத்துக்கு அடைக்கலஸ்தலம். கர்த்தர் நியமித்த அந்த ஸ்தலத்தை விட்டுவிட்டு, லோத்து வேறு எந்த ஸ்தலத்திற்கும் போய்விடக்கூடாது.
நாம் பாவத்தில் விழுந்துகிடக்கும்போது, கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். நாம் செய்யவேண்டிய காரியங்களை கர்த்தர் நமக்கு கட்டளையாக சொல்லுகிறார். நாம் பாவத்திற்கு தப்பிக்கவேண்டுமென்றால் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும்.
பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறவர்கள் மறுபடியும் தங்கள் பாவத்திற்கு திரும்பிப்போய்விடக்கூடாது. சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறவர்கள், மறுபடியும் சாத்தானுக்கு அடிமைகளாகிவிடக்கூடாது. லோத்து சோதோமிலிருந்து தப்பி வந்திருக்கிறார். அவர் மறுபடியும் சோதோமுக்கு போய்விடக்கூடாது.
கர்த்தர் லோத்தைப் பார்த்து, ""இந்த சமபூமியில் எங்கும் நில்லாதே'' என்று சொல்லுகிறார். சமபூமி என்பது இந்தப் பிரபஞ்சத்தையும், இந்தப் பிரபஞ்சத்தின் ஆசாபாசங்களையும் குறிக்கும். இரட்சிக்கப்பட்டவர்கள் இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிக்கக்கூடாது. உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பாவம்.
கர்த்தர் லோத்தைப் பார்த்து, ""நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ'' என்று சொல்லுகிறார். மலை என்பது கிறிஸ்துவையும், பரலோகத்தையும் குறிக்கிறது. நாம் கிறிஸ்துவை நோக்கி முன்னேறிப்போக வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதே நம்முடைய இலக்கு. இந்த உலகம் நாம் சிறிதுகாலம் பரதேசியாய் தங்கியிருக்கிற ஸ்தலம்.
கர்த்தர் லோத்தைப் பாதுகாப்பதற்கு, மலையை நியமித்திருக்கிறார். லோத்து அந்த மலைக்கு ஓடிப்போகவேண்டும். அப்போதுதான் லோத்தால் அழிவுக்கு தப்பிக்க முடியும். ஆனால் லோத்தோ அந்த மலைக்கு போக விரும்பவில்லை. அவர் கர்த்தரிடத்தில், ""அப்படியல்ல ஆண்டவரே, மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது'' (ஆதி 19:18,19) என்று சொல்லுகிறார்.
லோத்து கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறார். லோத்து கர்த்தரை நோக்கி, ""அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரியதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்'' (ஆதி 19:18,19) என்று சொல்லுகிறார்.
லோத்து கிட்ட இருக்கிற சோவார் என்னும் சின்ன ஊரில் தங்குகிறார். அவரால் மலைக்கு ஓடிப்போக முடியவில்லை. ஆனாலும் சோவாருக்கும், சோதோமைப் போன்று அழிவு வந்துவிடுமோ என்று பயந்து, லோத்து இறுதியில் சோவாரை விட்டு மலை பிரதேசத்திற்குத் தப்பித்துப் போய்விடுகிறார். (ஆதி 19:30).
லோத்து சமபூமியிலிருக்கிற ஒரு ஊரில் தங்க விரும்புகிறார். அவருக்கு மலைக்குப்போக விருப்பமில்லை. அந்த ஊருக்கு பேலா (ஆதி 14:2) என்று பேர். அந்த ஊருக்கு சோவார் என்னும் மறுபெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பேலா பெரிய ஊர் அல்ல. அது ஒரு சின்ன ஊர். ஆனாலும் கர்த்தர் சொன்ன மலையைவிட, இந்த ஊர் லோத்துக்கு அருகாமையிலிருக்கிறது. கர்த்தர் தனக்கு நியமித்த இலக்கை நோக்கிப் போகாமல், லோத்து தனக்கு அருகாமையிலிருக்கிற ஸ்தலத்திற்கு போகவிரும்புகிறார்.
லோத்து கர்த்தரை நோக்கி, ""அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே'' (ஆதி 19:20) என்று சொல்லுகிறார்.
நாம் கர்த்தருடைய சித்தத்திற்கும், திட்டத்திற்கும் கீழ்ப்படியவேண்டும். லோத்து கர்த்தர் நியமித்த மலைக்குப்போகாமல், தான் தெரிந்துகொண்ட ஊருக்குப்போக விரும்புகிறார். கர்த்தர் தெரிந்துகொண்ட மலையைவிட, தான் தெரிந்துகொண்ட ஊரே, தனக்கு பாதுகாப்பாயிருக்கும் என்று லோத்து நினைக்கிறார்.
தான் கர்த்தர் சொன்ன மலைக்கு ஓடிப்போனால், தீங்கு தன்னைத் தொடரும் என்றும், தான் அங்கே மரித்துப்போகப்போவதாகவும் லோத்து பயப்படுகிறார். கர்த்தர் சொன்ன மலையில்தான் லோத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை கர்த்தர் சொன்ன மலைக்கு போவதற்கு பதிலாக, லோத்து தெரிந்தெடுத்த ஊருக்குப்போவது, இப்போது எளிதாகயிருக்கலாம். மலைக்குப்போவது லோத்துக்கு கடினமானதாகயிருக்கலாம்.
நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற பாதை கடினமானதாகயிருந்தாலும், அந்தப் பாதையே நமக்கு பாதுகாப்பானது. அதுவே நமக்கு ஆசீர்வாதமானது.
கர்த்தர் சொன்ன மலை தூரத்திலிருக்கிறது. லோத்து தெரிந்துகொண்ட ஊர் அவருக்கு கிட்ட இருக்கிறது. அது சின்னதாயும் இருக்கிறது. ஆகையினால் அந்த ஊருக்கு சோவார் என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று. இந்தப் பெயருக்கு ""சின்னஊர்'' என்று பொருள்.
கர்த்தர் லோத்தோடு வழக்காடவில்லை. லோத்து எங்கே ஓடினாலும் அவர் சோதோமைவிட்டு சீக்கிரமாகவும், தீவிரமாகவும் ஓடவேண்டும். சோதோம் சீக்கிரத்தில் அழியப்போகிறது. லோத்து அதிகமாகப் பேசுவதற்கோ, அதிகமாக யோசிப்பதற்கோ இப்போது காலஅவகாசமில்லை. சகலமும் துரிதமாயும் தீவிரமாயும் நடைபெறவேண்டும்.
லோத்து தனக்கு அருகாமையிலிருக்கிற சின்ன ஊருக்கு ஓடிப்போகவேண்டுமென்று கர்த்தரிடத்தில் கேட்கிறார். அப்போது கர்த்தர் லோத்தை நோக்கி, ""நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்: நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது'' (ஆதி 19:21,22) என்று சொல்லுகிறார்.
""நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது'' என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவனுடைய கிரியையை மனுஷன் தாமதப்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மனுஷனால் தேவனுடைய கிரியையைத் தடைபண்ண முடியாது. என்றாலும் தேவன் இரக்கமுள்ளவராக இருக்கின்றபடியினால், அவர் தமது நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக தமது இரக்கத்தை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் தமது நியாயத்தீர்ப்பை தாமதப்படுத்துகிறார்.
லோத்து தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாவிட்டாலும், கர்த்தர் அவருடைய மனதின் விருப்பத்தை அங்கீகரிக்கிறார். லோத்து கேட்டுக்கொண்ட பிரகாரம், கர்த்தர் அந்த ஊரை கவிழ்த்துப்போடவில்லை. கர்த்தர் இந்த விஷயத்திலும் லோத்துக்கு அநுக்கிரகம் பண்ணுகிறார். அந்த ஊருக்கு போகவேண்டுமென்று லோத்து தீர்மானம்பண்ணுகிறார். கர்த்தர் லோத்தின் தீர்மானத்தை அங்கீகரித்து, ""தீவிரமாய் அங்கே ஓடி தப்பித்துக்கொள்'' என்று கட்டளையிடுகிறார்.
லோத்து தப்பிக்கவேண்டுமென்றால் சோதோமைவிட்டு தீவிரமாய் ஓடிப்போகவேண்டும். சோதோமிலிருந்து கொண்டு, அழிவுக்கு தப்பிப்பது என்பது இயலாத காரியம். நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால், பாவத்தைவிட்டு வெளியேறி வரவேண்டும். பாவத்திலிருந்துகொண்டே, பாவத்திலிருந்து விடுதலை பெறுவது என்பது இயலாத காரியம்.
கர்த்தருடைய தூதர் லோத்தையும் அவருடைய மனைவியையும், அவருடைய இரண்டு குமாரத்திகளையும், வீட்டைவிட்டு வெளியேறுமாறு துரிதப்படுத்தியபோது, கிழக்கு வெளுக்கும் வேளையாயிருந்தது. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதிக்கிறது (ஆதி 19:23).
நீதிமான்கள் ஒரு ஸ்தலத்திற்கு வரும்போது, அவர்கள் தங்களோடுகூட அங்கே வெளிச்சத்தையும் கொண்டுவருவார்கள். நீதிமான்கள் இருக்கும் ஊரிலே, நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்து பிரகாசமாக உதிப்பார். அந்த ஊரிலே கிறிஸ்துவானவரின் பரிசுத்தமான பிரசன்னம் பிரசாகமாகயிருக்கும். கிறிஸ்துவே அவர்களுக்கு வெளிச்சமாயிருப்பார்.
சோதோமும் கொமோராவும் அழிந்தது
ஆதி 19:24,25
ஆதி 19:24. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்தி-ருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
ஆதி 19:25. அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
லோத்து சோவாருக்குள் போனபொழுது, கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழித்துப்போடுகிறார். ஒரு பட்டணத்திற்கு தீங்கு வருவதற்கு முன்பாகவே, அந்தப் பட்டணத்திலுள்ள நல்லவர்களெல்லாம் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் அழிவுக்கு தப்பிக்கிறார்கள்.
லோத்து சோவாருக்குள் வரும்போது, பூமியின்மேல் சூரியன் உதிக்கிறது. வானம் தெளிவாகவும், வெளிச்சம் பிரகாசமாகவும் இருக்கிறது. சூரியன் உதிப்பது நன்மைக்கு அடையாளம். கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும் வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களை அழித்துப்போடுகிறார். அந்தப் பட்டணங்களோடே, அந்த சமபூமி அனைத்தையும், அந்தப் பட்டணங்களில் எல்லா குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போடுகிறார்.
கர்த்தருடைய ஆக்கினைத்தீர்ப்பு சோதோம் கொமோரா ஆகிய பட்டணங்களின்மீது விநோதமாக வந்திருக்கிறது. இதற்கு முன்பு எந்தப் பட்டணத்தின் மீதும் இப்படிப்பட்ட அழிவு வந்ததில்லை.
""மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்'' (யோபு 31:3).
சோதோமும் கொமோராவும் இயற்கையாகவே நீர் வளம் மிகுந்த பட்டணங்கள். அந்த சமபூமியில் ஏராளமான கனிவிருட்சங்கள் முளைத்திருந்தது. ஆனால் இப்போதோ அந்த சமபூமி அனைத்தும், அந்தப் பூமியின் மேலுள்ள பயிர்களும், கனிவிருட்சங்களும் மொத்தமாக அழிந்துபோகிறது.
சோதோம் கொமோராவிலுள்ள செழிப்பான சமபூமி, இப்போது சவக்கடல் அல்லது உப்புக்கடல் என்று அழைக்கப்படுகிறது.
""அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கட-ல் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்'' (எண் 34:12).
உப்புக்கடல் முப்பது மைல் நீளமும், பத்து மைல் அகலமுமுள்ளது. இந்தக் கடலிலே ஜீவராசிகள் எதுவும் உயிரோடில்லை. உப்புக்கடலின் தண்ணீர் கனமாகவும், கடினமாகவும் இருக்கும். புயல்காற்றும் உப்புக்கடலை சேதப்படுத்துவதில்லை. உப்புக்கடலின் தண்ணீர் அடர்த்தியாகயிருப்பதினால், இதில் பொருட்கள் எளிதாக மூழ்குவதுமில்லை. இந்தக் கடலின் நெடியும் துர்நாற்றமாயிருக்கும். யோர்தான் நதி உப்புக்கடலில் கலக்கிறது.
சோதோம் கொமோரா ஆகிய பட்டணங்களின் மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். அவர்களுடைய பாவங்களுக்கு தண்டனையாகவே, அந்தப் பட்டணங்களின் சமபூமி உப்புக்கடலாயிற்று. அந்நிய மாம்சத்தை பின்பற்றிப்போகிறவர்கள், அந்நிய அக்கினியினால் அழிக்கப்படுவார்கள்.
""அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்'' (யூதா 7).
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு தேசத்தின் அழிவைப்பற்றிச் சொல்லும்போது, அதை சோதோம் கொமோராவின் அழிவோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுவது வழக்கமாயிருக்கிறது.
""கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மாவையும் செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும், அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்'' (உபா 29:23,24).
""ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்'' (ஏசா 13:19).
""சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை'' (எரே 49:18).
""ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்செறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவே-ன் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்'' (செப் 2:9).
லோத்து சோவாருக்குள் வரும்போது கர்த்தர் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்துப் போடுகிறார். லோத்தின் பரிந்துபேசும் ஜெபத்தின் மூலமாக சோவார் தப்புகிறது. (ஆதி 19:18-22). ஆபிரகாமும் சோதோமிற்காகத் தேவனிடத்தில் பரிந்து பேசியிருக்கிறார். (ஆதி 18:23-33) கர்த்தர் சோவாரை அழிக்காமல் விட்டு விட்டதற்கு இவர்களுடைய பரிந்து பேசும் ஜெபம் முக்கியமான காரணமாக இருக்கலாம்.
சோவார் பல வருஷங்கள் அழிக்கப்படாமல் இருந்தது. இதற்கு ஜெபம் மட்டும் காரணமல்ல. மற்ற பட்டணங்களைப் போல சோவார் நியாயத் தீர்ப்பிற்கு ஆயத்தமாக இல்லை. (உபா 34:3; ஏசா 15:5; எரே 48:34).
""கர்த்தராலே வானத்தி-ருந்து'' என்று இந்த வசனத்தில் (ஆதி 19:24) இரண்டு கர்த்தர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கர்த்தர் பூமியிலிருக்கிறார். வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்கினியையும் வருஷிக்கப் பண்ணுகிறார். மற்றொரு கர்த்தர் வானத்தில் இருக்கிறார். அவராலே கந்தகமும், அக்கினியும் வருகிறது (ஆதி 19:24).
வேதத்தில் பல இடங்களில் கர்த்தருடைய தூதன் என்னும் வாக்கியம் கர்த்தரையும், தேவனையும் குறிக்கிறது. (ஆதி 16:7-11; ஆதி 22:1-16; யாத் 14:19-31; எண் 22:22-35; நியா 2:1-4; நியா 6:11-24; நியா 13:2-25; சக 1:9-19; சக 3:1-6; சக 12:8; அப் 7:30-38). ஒரு யெகோவா இன்னொரு யெகோவாவைத் தமது தூதராக அனுப்புகிறார். (யாத் 6:3) இந்தச் சத்தியம் திரித்துவத்தை விளக்குகிறது.
லோத்தின் மனைவி
ஆதி 19:26
ஆதி 19:26. அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
நம்முடைய அறிவுரைக்காகவும், புத்திமதிக்காகவும் லோத்தின் மனைவியைப்பற்றி இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் லோத்தின் மனைவியைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
""லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்'' (லூக் 17:32).
துன்மார்க்கர் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளுக்கு விலகவேண்டும் என்பதற்கு சோதோம் அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது. நீதிமான்கள் தங்களுடைய நீதியின் பாதையிலிருந்து விலகிப்போய்விடக்கூடாது என்பதற்கு எச்சரிப்பாக, லோத்தின் மனைவி அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறாள்.
""சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப் பழியையோ உன் கையிலே கேட்பேன்'' (எசே 3:18).
""நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும்விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்'' (எசே 3:19).
""அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்'' (எசே 3:20).
லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்தாள். இதுவே அவள் செய்த பாவம். கர்த்தருடைய தூதர்கள் லோத்தையும், அவருடைய மனைவியையும், அவருடைய குமாரத்திகளையும் சோதோம் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய்விட்ட பின்பு, ""உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே'' என்று சொன்னார் (ஆதி 19:17). லோத்தின் மனைவியோ இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பின்னிட்டுப் பார்த்தாள்.
லோத்தின் மனைவி ஒருவேளை சோதோமிலுள்ள தன்னுடைய வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும் அதிகமாய் நேசித்திருக்கலாம். அவற்றிற்கு என்ன ஆயிற்றோ என்பதை பார்க்கும் ஆவலில், அவள் பின்னிட்டு திரும்பிப் பார்த்திருக்கலாம். லோத்தின் மனைவிக்கு ஜீவன் தப்பிக்க ஆசையாயிருக்கிறது. அதே வேளையில், தன் ஜீவனோடு, சோதோமிலுள்ள தன் வீடும், வீட்டிலுள்ள உடமைகளும் தப்பிக்கவேண்டுமென்றும் ஆசைப்படுகிறாள்.
இக்காலத்திலும் சிலர் இயேசுகிறிஸ்துவையும், இந்த உலகத்தையும் நேசிக்கிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கும் இந்த உலகத்திற்கும் ஊழியம் செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இது இயலாத காரியம். உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள், தங்களை வெறுத்து, தங்கள் சிலுவையை சுமக்கவேண்டும்.
லோத்தின் மனைவி பின்னிட்டுத் திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனதை, இயேசுகிறிஸ்துவும் தம்முடைய உபதேசத்தில் எடுத்துக்காட்டாக சொல்லுகிறார்.
""மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்த நாளிலே வீட்டின்மே-ருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வய--ருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்'' (லூக் 17:30#32).
லோத்தின் மனைவி வேடிக்கை பார்ப்பதற்காக சோதோமை பின்னிட்டுப் பார்க்கவில்லை. அவள் சோதோமுக்கு திரும்பிப்போக ஆசைப்படுகிறாள். அவளுடைய சரீரம் சோதோமைவிட்டு வெளியே இருந்தாலும், அவளுடைய மனது சோதோமுக்குள்ளேயே இருக்கிறது.
இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், தங்கள் முழுஇருதயத்தோடும், முழுமனதோடும் அவரைப் பின்பற்றவேண்டும். கர்த்தரை பின்பற்றுகிறவர்கள், அவரையும், அவருடைய வார்த்தைகளையும் விட்டு விலகிப்போய்விடக்கூடாது.
இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், இந்த உலகத்தையும், தங்கள் மாம்சத்தையும் விட்டு விலகி வந்திருக்கிறார்கள். விசுவாசிகள் இந்தப் பூமியை நோக்கிப் பார்க்காமல், பரலோகத்தை நோக்கிப் பார்க்கிறார்கள். நாம் இந்தப் பூமியில் சிறிதுகாலம், பரதேசிகளாக தங்கியிருக்கிறோம். நாம் உலகப்பிரகாரமான காரியங்களை வெறுத்து, கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம். நாம் ஏற்கெனவே வெறுத்தவைகளை மறுபடியும் விரும்புவது நமக்கு ஆபத்தாயிருக்கும்.
லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்து பாவம் செய்கிறாள். அவளுடைய பாவத்திற்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அவள் சோதோமின் அழிவுக்கு தப்பித்தாள். கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் அவள்மீது இருந்ததினால்தான், தேவதூதர்கள் அவளுடைய கையையும் பிடித்து, அவளை சோதோம் பட்டணத்திற்கு வெளியே கொண்டு வந்து விட்டார்கள். கர்த்தருடைய இரக்கத்தினாலேயே லோத்தின் மனைவி சோதோமின் அழிவுக்கு தப்பினாள். ஆனாலும் அவள் கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் அசட்டைபண்ணி, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், சோதோமை பின்னிட்டுப் பார்த்தாள்.
பாவத்தைவிட்டு விலகி வந்தவர்கள், மறுபடியுமாக அந்தப் பாவத்திற்கு திரும்பிப் போகக்கூடாது. அது அவர்களுடைய ஜீவனுக்கு மிகவும் ஆபத்தாயிருக்கும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், நாம் எப்போதுமே கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும். இதுவே விசுவாசிகளின் ஆவிக்குரிய பிரயாணம்.
""சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்'' (பிலி 3:13,14).
லோத்தின் மனைவி தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. அவள் உலகத்தின்மீது ஆசை வைத்திருந்தாள். அதனால் அழிந்துபோனாள். (ஆதி 19:17; லூக்கா 17:32; நீதி 14:14; எபி 10:38).
ஆபிரகாம்
ஆதி 19:27#29
ஆதி 19:27. விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
ஆதி 19:28. சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
ஆதி 19:29. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவி-ருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்.
கர்த்தர் சோதோம் கொமோரா ஆகிய பட்டணங்களை அக்கினியினால் அழித்துப்போடுகிறார். இந்தப் பட்டணங்கள் அழிக்கப்படும் சம்பவத்தைப்பற்றிச் சொல்லும்போது, ஆபிரகாமின் பக்தியைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்க்கிறார் (ஆதி 19:27,28).
ஆபிரகாம் இதற்கு முன்பு கர்த்தரிடத்திலே அந்தப் பட்டணங்களுக்காக பரிந்துபேசி ஜெபம்பண்ணினார். கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு என்ன பதில் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் ஆபிரகாமின் மனதில் உண்டாயிற்று.
கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்கும் விண்ணப்பத்திற்கும் செவிகொடுக்கிறவர். அவர் செவிகொடுப்பது மாத்திரமல்ல, நம்முடைய ஜெபத்திற்கு பதிலும் கொடுக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தரிடத்திலிருந்து பதிலைப் பெற்றுக்கொள்வோம் என்னும் நம்பிக்கையோடும், தீர்மானத்தோடும் ஜெபம்பண்ணவேண்டும்.
""கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்'' (சங் 5:3).
ஆபிரகாம் சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்க்கிறார்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று (ஆதி 19:28).
கர்த்தர் ஆபிரகாமின்மீது அன்பாயிருக்கிறார். அவரை நினைவுகூருகிறார். ஆபிரகாம் இதற்கு முன்பு, தன்னுடைய குமாரன் இஸ்மவேலுக்காக கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினார். கர்த்தர் ஆபிரகாமின் ஜெபத்தை கேட்டருளி, இஸ்மவேலை ஈசாக்கின் நிமித்தமாக ஆசீர்வதித்தார்.
ஆபிரகாம் இப்போது சோதோமுக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபம்பண்ணினார். கர்த்தர் லோத்துக்காக, ஆபிரகாமின் ஜெபத்தைக் கேட்டருளுகிறார். கர்த்தர் ஆபிரகாமை நினைத்து, லோத்தை அந்த அழிவின் நடுவி-ருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிடுகிறார். கர்த்தர் தம்முடைய நீதியினால் லோத்து குடியிருந்த பட்டணங்களை கவிழ்த்துப்போட்டாலும், அவர் ஆபிரகாமை நினைத்து, லோத்தை அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிடுகிறார்.
நாம் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் மெய்யாகவே நமக்கு சமாதானமான பிரதியுத்தரம் கொடுப்பார். நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தர் தமக்கு சித்தமான வேளையிலே, தமக்கு சித்தமான வழியிலே பதில் கொடுப்பார். ஒருவேளை கர்த்தருடைய பதிலைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படலாம். கர்த்தர் சிறிதுகாலம் நம்மை மறந்துவிட்டாரோ என்னும் எண்ணங்கூட நமக்குள்ளே ஏற்படலாம். ஆனாலும் கர்த்தர் நம்மை ஒருபோதும் மறக்கமாட்டார். தமக்கு ஏற்ற வேளையிலே, கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்.
கர்த்தர் சோதோம் கொமோராவினுடைய சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, அவர் ஆபிரகாமை நினைவுகூருகிறார். நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கும்போது, கர்த்தருடைய நீதியான பாதைகளை நாம் காத்துக்கொள்ளும்போது, கர்த்தர் துன்மார்க்கரை அழித்தாலும், அந்த வேளையிலும் அவர் தமது கிருபையினால் நம்மை நினைவுகூருவார்.
லோத்தின் இரண்டு குமாரத்திகள்
ஆதி 19:30#38
ஆதி 19:30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
ஆதி 19:31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
ஆதி 19:32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
ஆதி 19:33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப்பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
ஆதி 19:35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
ஆதி 19:37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று,அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
ஆதி 19:38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
லோத்தும், அவருடைய இரண்டு குமாரத்திகளும் அழிவுக்கு தப்பிக்கிறார்கள். லோத்தின் மனைவியோ திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள். கர்த்தர் லோத்தை மலைக்கு ஓடிப்போகச் சொன்னார். ஆனால் லோத்தோ சோவார் என்னப்பட்ட ஊருக்குப்போகிறார். கர்த்தரும் அதற்கு அனுமதி கொடுக்கிறார்.
லோத்து சோவாரிலே குடியிருக்கிறார். அங்கே எவ்வளவு காலம் குடியிருந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் சோவாரிலே குடியிருக்க பயப்படுகிறார். ஒருவேளை சோவாரின் ஜனங்களும் சோதோமின் ஜனங்களைப்போல துன்மார்க்கராக இருந்திருக்கலாம். சோவாரில் குடியிருப்பது தனக்கு ஆபத்தானது என்று லோத்து நினைத்திருக்கலாம்.
கர்த்தர் லோத்தை சோவாருக்கு போகச்சொல்லவில்லை. அவர் லோத்தை மலைக்குப்போகச் சொன்னார். சோவாருக்கு போகவேண்டும் என்பது லோத்தின் சொந்த தீர்மானம். லோத்து கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. அவர் சோவாருக்கு போகவேண்டுமென்று விரும்பியதினால், கர்த்தர் இந்தக் காரியத்தில் அவருக்கு அநுக்கிரகம்பண்ணினார்.
கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படியாமல், நம்முடைய சொந்த சித்தத்திற்கும், விருப்பத்திற்கும் கீழ்ப்படியும்போது, நமக்கும் இதுபோல பிரச்சனைகள் வரும். நம்முடைய தீர்மானமும் கர்த்தருடைய தீர்மானமும் வித்தியாசமாயிருக்கும்போது, நம்முடைய தீர்மானத்தில் ஆசீர்வாதம் இருக்காது.
லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவரும் அவரோடேகூட அவருடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணுகிறார்கள்; அங்கே லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருக்கிறார்கள் (ஆதி 19:30).
லோத்து கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் சோவாருக்கு போனாலும், அங்கே அவரால் குடியிருக்க முடியவில்லை. அவர் பயந்துபோய் கர்த்தர் சொன்ன மலைக்கு வந்து வாசம்பண்ணுகிறார். இப்போது லோத்தின் மனதிலே நிம்மதியும் ஆறுதலும் இருக்கிறது. கர்த்தர் சொன்ன மலையிலே தான் வாசம்பண்ணுவதை நினைத்து லோத்து சந்தோஷப்படுகிறார்.
லோத்து ஆபிரகாமோடு இருந்தபோது, மேய்ச்சல் நிலம் போதவில்லை என்று சொல்லி அவரோடு வாக்குவாதம்பண்ணினார். தேசம் விஸ்தாரமாயிருந்தது. ஆனால் அந்த தேசத்தில் தனக்கும், தன்னுடைய ஆடுமாடுகளுக்கும் போதுமான இடம் இல்லை என்று லோத்து ஆபிரகாமோடு விவாதம்பண்ணினார்.
இப்போதோ லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும், அந்த மலையிலுள்ள ஒரு கெபியிலே குடியிருக்கிறார்கள். இந்தக் கெபியில் லோத்துக்கு திரும்பி படுப்பதற்குகூட போதுமான இடவசதி இருக்காது. இந்தக் கெபியில் லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும் தனியாகயிருக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை காட்டு மிருகங்களுக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கலாம்.
லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும், மலையிலுள்ள ஒரு கெபியில் குடியிருக்கும்போது, அவர்கள் மிகப்பெரிய பாவம் செய்கிறார்கள். இது லோத்தின் ஜீவியத்தில் நடைபெற்ற சோகசம்பவம்.
லோத்தின் குமாரத்திகள், தங்கள் தகப்பனாரோடு பாவம் செய்கிறார்கள். மூத்தவள் இளையவளைப் பார்த்து: ""நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா'' (ஆதி 19:31,32) என்று சொல்லுகிறாள்.
லோத்தின் குமாரத்திகள் தனியாகயிருக்கிறார்கள். லோத்துக்கு ஆண்பிள்ளைகள் பிறக்கவில்லை. லோத்தின் குமாரத்திகளுக்கு புருஷன்மார் இல்லை. ஆகையினால் அவர்களுக்கு புத்திர சந்தானம் உண்டாவதற்கும் வாய்ப்பு இல்லை. லோத்தின் குமாரத்திகளுக்கு, வேறு புருஷர்கள் மூலமாக புத்திர சந்தானம் ஏற்பட்டால், அவர்களுக்கு தங்கள் தகப்பனால் சந்ததி உண்டாகாது. அந்த சந்ததி மற்ற மனுஷருடைய சந்ததியாயிருக்கும்.
இந்தப் பிரதேசத்தில் லோத்தின் இனத்தார் யாருமில்லை. லோத்தின் குமாரத்திகள் சோவாரின் புருஷரைத் திருமணம் செய்துகொள்ள பயப்படுகிறார்கள். சோதோமைப் போல சோவாரும் அழிக்கப்படுமோ என்று நினைக்கிறார்கள்.
லோத்தின் குமாரத்திகள் லோத்திற்கு மதுவைக் குடிக்கக் கொடுக்கிறார்கள். சோதோமில் மது அருந்தி வெறித்திருந்தவர்கள் ஏராளமான பேரை இவர்கள் பார்த்திருப்பார்கள்.
லோத்தின் குமாரத்திகளோ தங்களுடைய தகப்பனால் தங்களுக்கு சந்ததி உண்டாக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக லோத்தின் இரண்டு குமாரத்திகளும் துன்மார்க்கமான திட்டம் போடுகிறார்கள். அவர்களுடைய திட்டம் கர்த்தருடைய பிரமாணத்திற்கும், இயற்கையின் பிரமாணத்திற்கும் முரணாக இருக்கிறது.
லோத்து மதுவைக் குடிக்கிற குடிகாரனாயிருக்கிறார். குடித்து வெறித்திருக்கிறவர்களுக்கு சுயநினைவும், சுயபுத்தியும் இருக்காது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதும், தங்களுக்கு என்ன செய்யப்படுகிறது என்பதும் அவர்களுக்கு தெரியாது. லோத்தின் குமாரத்திகள் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, லோத்தின் குடிவெறியை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
லோத்தின் குமாரத்திகள் இரண்டுபேரும் அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுக்கிறார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனிக்கிறாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் லோத்து உணராதிருக்கிறார் (ஆதி 19:33).
லோத்தின் குமாரத்திகள் சோதோமின் பாவத்திற்கு நடுவில் வளர்ந்தவர்கள். இதனால் அவர்கள் தங்கள் சொந்த தகப்பனையே வஞ்சிக்கிறார்கள்.
நெருங்கின உறவினர் மத்தியிலே சரீர உறவு ஏற்படுத்திக்கொண்டவர்களைப்பற்றி பரிசுத்தவேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு :
1. லோத்தும், அவனுடைய இரண்டு குமாரத்திகளும் (ஆதி 19:31-36)
2. ஆபிரகாமும், சாராளும் (ஆதி 20:12-13)
3. நாகோரும், மில்காளும் (ஆதி 11:29)
4. ரூபனும், பில்க்காளும் (1கொரி 5)
5. யூதாவும், தாமாரும் (ஆதி 38:16-18; 1நாளா 2:4)
6. அம்ராமும், யோகெபேத்தும் (யாத் 6:20)
7. அம்னோனும், தாமாரும் (2சாமு 13:14)
8. அப்சலோமும், தாவீதின் மனைவிமார்களும் (2சாமு 16:21)
9. ஏரோது (மத் 14:3-4; மாற்கு 6:17-18; லூக்கா 3:19)
10. கொரிந்தியரில் ஒருவன். (1கொரி 5)
மோசேயின் பிரமாணத்தில் நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்து கொள்வது தடைபண்ணப்படுகிறது. (லேவி 18:6-18; லேவி 20:11-21; உபா 22:30; உபா 27:20-23) ஆயினும் ஆபிரகாம் # ஏவாள், நாகோர் # மில்காள் ஆகியோரின் திருமணம் இக்காலத்தில் மன்னிக்கப்பட்டு அங்கிகரிக்கப்படுகிறது. (அப் 17:30).
லோத்து ஒரு நீதிமான். கர்த்தர் அவரை சோதோமின் அழிவுக்கு தப்பிக்க வைத்தார். ஆனால் அவரோ இப்போது கர்த்தரைவிட்டு விலகிப்போயிருக்கிறார். லோத்து கர்த்தருடைய சிநேகத்தையும், அவருடைய ஐக்கியத்தையும் விரும்பாமல், மதுவை சிநேகிக்கிறார். அவர் மதுபானத்தோடு ஐக்கியமாயிருக்கிறார்.
நாம் எவ்வளவு பெரிய நீதிமான்களாகயிருந்தாலும், நாம் கர்த்தரோடு கூடயிருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு. நாம் கர்த்தரைவிட்டு விலகிப்போய்விட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லை. ஆகையினால் தங்களை நிற்கிறவர்களாக எண்ணுகிறவர்கள், விழாதிருக்கும்படி எச்சரிப்பாயிருக்க வேண்டும். லோத்து இப்போது தன்னுடைய மூத்த குமாரத்தியோடு பாவம் செய்கிறார். ஆனால் தான் பாவம் செய்ததை லோத்து உணராதிருக்கிறார்.
லோத்து சோதோமிலிருந்த வரையிலும் கர்த்தரோடு ஐக்கியமாயிருந்தார். அவர் நீதிமானாயிருந்தார். அவர் கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய உத்தமத்தையும், உண்மையையும் காத்துக்கொண்டார். லோத்து இப்போது மலையிலே குடியிருக்கிறார். இங்கு ஏராளமான ஜனங்கள் இல்லை. லோத்து தனிமையிலிருக்கிறார். அவரோடுகூட அவருடைய இரண்டு குமாரத்திகள் மாத்திரமே இருக்கிறார்கள்.
இந்த மலையில் சோதோமின் குடிகளைப்போல துன்மார்க்கர் யாரும் இல்லாததினால், தனக்கு சோதனை வராது என்று நினைத்து லோத்து இறுமாப்பாயிருக்கிறார். ஆனால் அவர் குடித்து வெறித்து சோதனையில் விழுந்துவிடுகிறார். சாத்தான் யாரை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல சுற்றி அலைந்துகொண்டிருக்கிறான். நாம் சாதாரணமான மலையிலிருந்தாலும், பரிசுத்த பர்வதத்திலிருந்தாலும், சாத்தான் நம்மை சோதிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் நாம் விழிப்போடும், எச்சரிப்போடும் இருக்கவேண்டும்.
லோத்து ஒருவேளை மதுவைக் குடிக்காமல், தெளிந்த புத்தியோடு இருந்திருந்தால், தன்னுடைய குமாரத்திகளோடு பாவம் செய்திருக்கமாட்டார். ஆனால் அவரோ மதுவைக் குடித்து, தன் புத்தியை இழந்துவிட்டார். மதுபானம் அருந்துவது, குடித்து வெறித்திருப்பது கர்த்தருக்கு விரோதமான பாவம். இந்தப் பாவம் இன்னும் அநேக பாவங்களுக்கு வாசல்களை விரிவாய்த் திறந்துகொடுக்கும். லோத்து மதுவைக் குடித்து, அதைத் தொடர்ந்து, மிகவும் மோசமான பாவங்களை செய்கிறார்.
மறுநாளிலே மூத்தவள் இளையவளைப்பார்த்து, ""நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி'' (ஆதி 19:34) என்று சொல்லுகிறாள்.
அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு அவர்கள் மதுவைக் குடிக்கக் கொடுக்கிறார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், தன்னுடைய தகப்பனோடே சயனிக்கிறாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் லோத்து உணராதிருக்கிறார் (ஆதி 19:35).
இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியாகிறார்கள் (ஆதி 19:36).
மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று,அவனுக்கு மோவாப் என்று பேரிடுகிறாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிடுகிறாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன் (ஆதி 19:37,38).
மோவாபும் பென்னம்மியும் இரண்டு தேசத்தாருக்கு தகப்பன்மாராயிருக்கிறார்கள். இவர்கள் இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே வாசம்பண்ணுகிறார்கள். இவ்விரண்டு ஜாதியாரும் லோத்தின் புத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
""அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமாக்கினார்கள்'' (சங் 83:8).
இந்த சம்பவத்திற்கு பின்பு பரிசுத்த வேதாகமத்தில் லோத்தைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. லோத்து குடித்து வெறித்து பாவம் செய்தார். தான் செய்த பாவத்தையும் அவர் உணராதிருந்தார். குடிக்கிறவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். அவர்களும் மற்றவர்களால் மறக்கப்படுவார்கள்.
