தேவ சித்தத்திற்காக என்ன செய்ய வேண்டும்
1) தேவ சித்தத்திற்காக ஜெபம் பண்ண வேண்டும் - மத் 6:10
2) தேவ சித்தத்தை அறிக்கை செய்ய வேண்டும் - யாக் 4:13-15
3) தேவ சித்தத்தை பகுத்தறிய வேண்டும் - ரோ 12:2
4) தேவ சித்தத்தால் நிரம்பி இருக்க வேண்டும் - கொலோ 1:9
5) தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் - 2 தெச 1:12
தேவ சித்தம் செய்வதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) தேவன் செவி கொடுப்பார் (ஜெபம் கேட்கப்படும்) - யோ 9:31
2) தேவ சித்தம் செய்கிறவன் இயேசுவுக்கு சகோதரன், சகோதரி, தாய் - மாற்கு 3:35
3) உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறனோ என்று அறிந்து கொள்வான் - யோ 7:17
4) என்றைக்கும் நிலைத்திருப்பான் - 1 யோ 2:17
5) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான் - மத் 7:21
தேவ சித்தம் யார் அறிய முடியாது
1) பாவம் இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது - 1 பேது 4:1,2
2) மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, உலகத்தின் இச்சை இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது - 1 யோ 2:15-17
3) வேத வசனத்தின்படி ஜீவிக்காதவன் - மத் 7:21-26
4) புத்தியினமாக நடப்பவர்கள் - எபேசு 5:16,17
